Page 155 of 400 FirstFirst ... 55105145153154155156157165205255 ... LastLast
Results 1,541 to 1,550 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #1541
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    செப்டம்பர் 12 ... நடிகர் திலகத்தின் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த உன்னத் திரைக்காவியம் 1964ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்து 12.09.2014 அன்று ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்கின்றது. இதை நினைவு கூறும் அன்றைய விளம்பர நிழற்படம்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks kalnayak thanked for this post
    Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1542
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஸ்டைலின் உச்சம் நடிகர் திலகம் ... அதற்கான பல சான்றுகளில் ஒன்று...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes Russellmai liked this post
  6. #1543
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Oh. what a movie. Only NT can do this character. No other actor have the guts to do this role because NT Never acts in Real Life.

    Whereas those who never acts in reel life will do the the opposite. Waiting for 14.09.14.


    Regards

  7. Likes Subramaniam Ramajayam liked this post
  8. #1544
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post


    செப்டம்பர் 12 ... நடிகர் திலகத்தின் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த உன்னத் திரைக்காவியம் 1964ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்து 12.09.2014 அன்று ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்கின்றது. இதை நினைவு கூறும் அன்றைய விளம்பர நிழற்படம்

    most memorable day in my life At the age of 14 we had the pleasure of watching the movie first day evening show at srikrishna mint area
    amidist lot of allaparai whistles every scene of NT appearances.
    great days thanks to my mom and her friend circles for taking me to the film. oh 50 years gone still this PUDIYAPARAVAI remains
    PUDIYA PARAVAI. THAT'S THE MAGIC OF NT.

  9. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, kalnayak liked this post
  10. #1545
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    இதுதாண்டா போலீஸ்!-ராஜசேகர்! குணசேகர்! சந்திரசேகர்!

    அன்றைய நாட்களில் இந்த பராசக்தி சகோதரர்களுடன் எனக்கு ஏற்பட்ட அந்த சினிமா அனுபவம் மிக இனிமையானது!
    என் இதயம் கவர்ந்த ஏ.வி.கிரியேஷன்ஸ் ராஜசேகர் சகோதரர்கள் எங்கிருந்தாலும் வாழ்க!

    'பராசக்தி' சகோதரர்கள்

    சகோதரர்கள் ராஜசேகர், குணசேகர், சந்திரசேகர் ஆகியோரது தந்தை வரதராஜூலு நாயுடு. இவர் வடசென்னை பகுதியில் காவல்துறை உதவி ஆணையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    இவர்களின் பூர்வீகம் தீப்பெட்டிகள் தயாரிப்புத் தொழிற்சாலைகளுக்குப் பெயர் பெற்ற கோவில்பட்டி - ஒரு காலத்தில் வடக்கே ஆந்திரா நெல்லூரில் இருந்து குடிபெயர்ந்து தென் தமிழகத்தில் குடியமர்ந்த கம்மவார் நாயுடு இனத்தைச் சேர்ந்தவர்கள். வீட்டில் தெலுங்கு மொழி! வெளியில் தமிழ் மொழி!

    மேற்படி வரதராஜுலு நாயுடு முன்பு தேனியில் இன்ஸ்பெக்டராக இருந்தபொழுது திருமணம் புரிந்து கொள்வதற்கு ஏற்ற தனது இனத்தைச் சேர்ந்த நாயுடு குடும்பத்துப் பெண்ணைத்தேடி இறுதியில் ஆண்டாள் என்ற அசல் தெலுங்கு நாயுடுப் பெண்ணைத் தேர்ந்தெடுத்து திருமணம் புரிந்து கொண்டு, இந்த மேற்கண்ட


    மூன்று பிள்ளைகள் அல்லாமல் ஒரு பெண்ணையும் ஈன்றெடுத்தனர்.

    தந்தை மட்டும்தான் தன் இனத்துப் பெண்ணாகப் பார்த்துத் திருமணம் புரிந்து கொண்டாரே தவிர, அவரது பிள்ளைச் செல்வங்கள் மூவரும் பிற்காலத்தில் அவரவர் விருப்பத்திற்கிணங்க காதல் கலப்புத் திருமணம் செய்து கொண்டனர்.

    மூத்தவர் ராஜசேகர் தன்னுடன் சினிமாவில் ஹீரோயினாக நடித்த ஜீவிதாவையும், அடுத்த குணசேகர் இரட்டை இசை அமைப்பாளர்களான சங்கர் - கணேஷில் என் அன்புத் தம்பி கணேசனின் பெண் தேவியையும், மூன்றாவது மகன் சந்திரசேகர் என்ற செல்வா அ.தி.மு.க. ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த புலவர் இந்திரகுமாரியின் மகளையும் மணந்து கொண்டனர்.

    இம்மூன்று சகோதரர்களும் பிறந்த காலகட்டத்தின் முன்னோ அல்லது பின்னோ நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த முதல் படமான பராசக்தி படம் வெளிவந்திருக்கவேண்டும். அதில் இவர்களைப்போன்றே 3 சகோதரர்கள். மூத்தவர் நீதிபதியாக நடித்த எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் பெயர் சந்திரசேகர். அவருக்கு அடுத்த தம்பியாக நடித்த சிவாஜியின் பெயர் குணசேகர்! இளைய தம்பியாக நடித்த எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பெயர் ராஜசேகர்! ஆகவே இந்த 3 கதாபாத்திரங்களின் பெயர்களைத்தான் நாயுடு தன் மூன்று பிள்ளைச் செல்வங்களுக்கும் சூட்டி மகிழ்ந்தார்!

    (சினிமாவின் மறுபக்கம் - ஆரூர்தாஸ்)

  11. Thanks eehaiupehazij thanked for this post
    Likes KCSHEKAR, eehaiupehazij liked this post
  12. #1546
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    புதிய பறவை- 1964--12/09/1964.

    தமிழ் நாட்டின் எந்த தமிழறிந்த குடிமகனை கேட்டாலும், அவர்கள் எவர் ரசிகர்களாக இருந்தாலும் ,மறக்க முடியாத படங்களில் ஒன்றாக குறிப்பிடும் படம் புதிய பறவை.புதுமையான கதையமைப்பு, அற்புதமான நடிப்பு, மறக்க முடியாத பாடல்கள்,கேமரா, இயக்கம்,richness ,sophistication in making & great production value கொண்ட ahead of times வகை படம்.என்னிடம் யார் கேட்டாலும் எனக்கு பிடித்ததாக நான் சொல்லும் மூவர் கோபால்(pudhiya paravai),விஜய்(Deiva magan). மற்றும் விக்ரமன்(uthama puthiran).

    அந்த படத்தை ரசித்த நிறைய பேர் கோபால் பாத்திரத்தை முழுதும் புரிந்து கொண்டார்களா என்பது சந்தேகமே. chekhov school நடிப்பில் என்னை கவர்ந்த Anthony Hopkins(laurence olivier சிஷ்யன்) ,Jack Nicholson ,Oleg yankovskiy இவர்கள் எல்லோரையும் தாண்டி சென்றவர் நமது நடிகர்திலகம். அவர்கள் எல்லோரையும் காலத்தாலும் முந்தியவர். கோபால் பாத்திரம் முழுக்க முழுக்க மனோதத்துவ பின்னணி கொண்ட மிக சிக்கலான பாத்திரம்.

    கோபால் ஒரு வெளிநாட்டில் வாழும், பணக்கார conservative &cozy என்ற சொல்ல படும் ஒரு அம்மா பிள்ளை. அம்மாவின் மீது obsessive fixation கொண்டவன்.அம்மாவை அகாலமாக இழந்து இலக்கின்றி அலையும் போது impulsive ஆக ஒரு தவறான பெண்ணை தன் அம்மாவின் இழப்பிற்கு ஈடு செய்வாள் என்ற நம்பிக்கையில் தேர்ந்தெடுத்து, குடும்பத்தின் அமைதியே குலையும் அளவு கொண்டு சென்று, தன்னை உயிருக்குயிராய் நேசிக்கும் தந்தையையும் இழந்தவன். ஆனாலும் ,தானாக ஓடி போகும் சீர்கெட்ட மனைவியையும் கெஞ்சி திரும்ப அழைக்கும் பூஞ்சை மனம் கொண்ட கோழை.(குடும்ப கெளரவம் என்ற பெயரில்).மனைவி தானடித்த ஓரடியில் இறந்து விட , சட்டத்தில் இருந்து தப்பிக்க rail track இல் உடலை போட்டு, தற் கொலை என்று நம்ப வைத்து, குற்ற உணர்ச்சியுடன், சிறிது விடுபட்ட உணர்வுடன் ஊர் திரும்புபவன்.

    தொடரும் தனிமை நிறைந்த boredom என்று சொல்ல படும் வாழ்க்கையில், neurotic -emotional distress என்று சொல்ல படும் வகையில்(தூக்கம் இழந்து தவிப்பவன்),tremor என்ற hysterical conversion மனநோயால் அவதியுருபவன்.இந்த வாழ்க்கையின் தவிப்பில்,லதா என்ற தேவதையால் சிறிது ஆசுவாசம் அடைந்து அவளை மணக்க இருக்கும் தருணம், பழைய மனைவி என்று சொல்லி அவள் உருவத்தில் உள்ள ஒருத்தி வாழ்க்கையில் புயலென நுழைய தொடரும் grief &misfortune அவன் அமைதியை மேலும் குலைத்து, depression நோக்கி தள்ளி விடுகிறது.ஆனாலும் வந்தவளை விரட்டி, லதாவை அடையலாம் என்ற நம்பிக்கை, அது குலையும் தருணம் ஏற்படும் ஏமாற்றம் கலந்த அதிர்ச்சி என்று hope &despair என்று வாழ்வு மாறி மாறி ஊசலாட, spurt of violence ,hallucination தலை தூக்க, இனி தப்பிக்க வழியில்லை என்ற stalemate நிலையில், தன்னை மறந்து உண்மையை back to the wall resolution ஆக ஒப்பு கொண்டு, குற்றத்திற்காக பிடி படுகிறான்.

    எதிர்காலத்தில் யாருமே வெளிச்சமில்லாமல் ,பிறரின் தொடர்ந்த தலையீடு(ஆத்மார்த்தமாக இன்றி அனாவசிய),குறுக்கீடு இல்லாமல்,வாழவே வழியில்லாத நிலை மீடியா மற்றும் பல வகை electronic gadgets இனால் உருவாக்க படுவதை,allegory என்ற முறையில் சொன்ன படம் trumam show என்ற jim carrey யின் படம்.இதில் truman தவிர ஏனையோர் அனைவரும் நடிப்பவர்கள். கிட்டத்தட்ட இது போன்ற நிலைதான் நம் நாயகன் கோபாலிற்கு. அவனை தவிர சுற்றியிருப்போர் அனைவரும் நடிப்பவர்கள். கோபால் வாழ்க்கை, அவன் காணும் பிரச்சினைகள் எல்லாமே மற்றவர்களால் கட்டமைக்க படுபவை. கோபால் படும் அவதி மட்டுமே நிஜம். படத்திலேயே வருவது போல் பரிதாபத்துக்குரிய வாழ்க்கை.

    இதில் கோபால் ஒரு தனியன். fixations ,obsessions ,உடைய பணக்கார sophisticated person with ceremonial politeness . Impulsive , breaks down at the first opportunity when confronted with adversity .

    இந்த மாதிரி ஒரு பாத்திரத்தை நடிகர்திலகம் மட்டுமே அதன் நிஜமான உள்வாங்கலோடு , தன் அபார திறமையால் உள்வாங்கியதை மிக மிக துல்லியமாக வெளிபடுத்துவார்.இந்த படத்தில் ஒரு இயக்குனரின் அபார பங்களிப்பு அவர் பாத்திரத்தை இமயத்துக்கே உயர்த்தி விடும்.

    இந்த படத்திற்காக நடிகர்திலகம் தேர்ந்தெடுத்த உடல் மொழி, ஒரு introverted ceremonial politeness கொண்டது. புகை வண்டியை காணும் போது ஒரு tremor (வலிப்பு அல்ல)என்ற mild hysterical action . பொதுவாக ஒரு சோர்வு ததும்பும் meloncholic look . சந்தோஷத்தை அளவாகவே வெளியிடுவார். Anxiety வரும் போது தடுமாறி உடைந்து போவார். depression என்ற அளவிற்கு தள்ள படும் போது விரக்தி கலந்த frustration .(உலகமே மூழ்கி விட்டது போல் ).நம்பிக்கை குலைவு ஏற்படும் போது அழிக்க நினைக்கும் (bout of nihilism )தன்னை மறந்த வெறி, வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ள படும் போது ஒரு பிரமை கலந்த monologue (தான் மட்டும் உண்மை. சுற்றியிருப்பதெல்லாம் பொருட்டில்லை என்ற பாவம் ), குழந்தை போல் தன் கருத்தை மட்டும் அழுத்தி சொல்லும் தன்முனைவு,சின்ன சின்ன தற்காலிக நம்பிக்கைகளை மலை போல் நம்பி குதூகலிக்கும் ,நம்ப ஆசைபடும் விழைவு என்று flawless character sketch .

    மற்ற தொழிலாளர்களுடன் சாதாரணமாக நடந்து கொள்ளும் கோபால், ராஜு தாத்தாவிடம் வாஞ்சையுடன் நடந்து கொள்ளும் முறையிலேயே , கோபாலின் fixation tendencies establish ஆக தொடங்கும். பிறகு தோட்டத்தை தனியாக பார்வையிடுவது, தனியாக picnic சூழ்நிலையில் படித்து கொண்டிருப்பது என்று தனிமை ,boredom சொல்ல பட்டு விடும். தூங்காமல் முழித்திருக்கும் இரவில் வரும் லதாவுடன், இதமான உரையாடலில் தன் ஏக்கம் கலந்த தனிமை, தூக்கமில்லா இரவுகளை குறிப்பிடும் அந்த husky ஆன குரல், ஏக்கமும் சோர்வும் சோர்வும் தோய்ந்த விழிகள், லதாவிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து வெளியிட முடியாமல், குறியீடாக பாட்டு என்று ஒற்றை வார்த்தையில், தன் அமைதிக்கு லதாவால் துணை நிற்க முடியும் என்று உணர்த்தும் கண்ணியமான இதம்.அந்த உன்னை ஒன்று கேட்பேன் இரவு காட்சி தமிழ் பட உலகின் அழகுணர்ச்சிக்கு ஒரு மைல் கல் காட்சி.

    பார்த்த ஞாபகம் பாடலில், எதோ ஒன்றை தொலைத்து பறி கொடுத்த ஏக்கத்துடன், நிலைத்த சூன்ய பார்வை, அவ்வப்போது பாட்டில் சூழலில் அடையும் பரவசம், இதையெல்லாம் மீறாமல் நம்மை இன்றளவும் கவரும் அந்த sophisticated புகை பிடிக்கும் ஸ்டைல்(நாக்கில் இருந்து சின்ன புகையிலை தூளை விரலால் துடைக்கும் லாவகம்,wine glass ஏந்தும் தோரணை. பாடகி சித்ராவிடம் உடனே காட்டும் impulsive ஈடுபாடு.கல்யாண காட்சி உடனே வரும் போதும் பழகிய உணர்வு தெரியும் அந்த ஒரே பாடல் காட்சியில் .

    அந்த ரயில்வே கேட் காத்திருப்பு காட்சியில், tremor என்றவொரு, வலிப்பு -அதிர்ச்சி இடைப்பட்ட நிலையை அவ்வளவு தத்ரூபமாக எந்த நடிகனும் காட்டியதில்லை.

    நிச்சய தார்த்தம் அன்று வந்து சேரும் தன் மனைவி போன்ற உருவம் கொண்ட, மனைவியாக சித்தப்பா என்றவொருவனுடன் வந்து நிற்கும் காட்சியில்... முதலில் அதிர்வு என்ற நிலையில் தொடங்கி denial mode க்குள் செல்வார். இருக்காது,இருக்க முடியாது என்று. பிறகு சிறிதே seriousness உணர்ந்து, தன் police நண்பன் துணையுடன் மிரட்ட தலை படுவார். ஆனால் நடக்காது என்றவுடன் புலம்பும் ,குழம்பும் நிலை.(என்ன,என்ன,என்னை கேட்டால் எனக்கு என்ன)death certificate தேடி எடுத்து(அப்படியே போட்டது போட்டபடி விரையும் ஆர்வம் கலந்த வேகம்), அதை ரங்கன் தூளாக்கியதும், போலீஸ் நண்பனுடன் சிறு அதிகார தொனியிலேயே கடைசி பலவீன முயற்சியை அதிகாரமாய் தொடுப்பதும், வழியில்லை என்று அடங்குவதும்-இந்த காட்சி ஒரு roller -coaster ride .

    தொடரும் காட்சிகள், இந்திய பட உலகம் இது வர பார்க்க இயலா புதுமை கலந்த marvel ...நடிப்பின் உச்ச பட்ச சாத்தியங்கள்.


    அதற்கு பிறகு வரும் பதினோரு காட்சிகள் அதற்கு முன்னும் பின்னும் இந்திய திரையுலகமே கண்டிராத miracle .நான் குறிப்பிட்ட படி emotional roller coaster ride . நடிகர்திலகம் போன்ற நடிகர் ஒருவரால் மட்டுமே முடித்து காட்ட முடிந்த அதிசயம். விறு விறுப்பு,பரபரப்பு, sentiments ,Technical excellence ,புதுமை எதற்கும் பஞ்சம் வைக்கா விட்டாலும் நடிப்பு என்ற விஸ்வரூப தரிசன ஜோதியில் மற்றதெல்லாம் கரைந்து போகும் ,அதியற்புத உன்னதம் தொடும் psychedelic ecstasy பார்வையாளர்களுக்கு.

    லதாவையும், அவள் தந்தையையும் ரங்கனின் insult மீறி, வீட்டில் இருக்க வைக்க கெஞ்சி கூத்தாடும் காட்சியில், அவர்களுக்கு நம்பிக்கை விதைக்க பாடு படுகிறார் என்ற அளவில் மட்டுமே (தன் சந்தேக கணங்களை ,அவநம்பிக்கையை மறைத்து. அப்படி மறைப்பதை நொடிக்கு நொடி மாறும் முகபாவங்களில் நமக்குணர்த்தி )நடிப்பார்.அவர்களை convince பண்ண தன் anxiety மறைப்பாரே தவிர, மறையவில்லை என்பதை அந்த இறைஞ்சும் பாணியே உணர்த்தி விடும்.

    விரலை சொடுக்கி யோசித்து எனக்கு தெரிஞ்சா உன்னிடம் ஏன் வருகிறேன் என்ற இயலாமை கலந்த ஆயாசம்.dining காட்சியில், சித்ரா அடிக்கும் பால் பேணி sixer இல், முதல் நம்பிக்கை தெறித்தோடும் போது , அடுத்து வேறு வழியின்றி அவர்களை பணம் கொடுத்து விரட்ட முயலும் காட்சி. எல்லா பணத்தையும் நான் எடுத்து கிட்டா நீங்க என்ன பண்ணுவீங்க என்பதற்கு பிச்சை எடுப்பேண்டா ,என்று லதாவுடன் தனக்கிருக்கும் அபார காதலை வெளியிடும் முறை, யாரோட சாவு எனக்கு சந்தோசம் தருதோ அவ இருக்கான்னு சொல்லி ஏண்டா சித்ரவதை செய்யறே என்று கெஞ்சி அதற்கும் இணங்காத போது சீ,போ என்று வீ சும் வெறுப்பில் breaking பாயிண்ட் desperation தெரிய ஆரம்பிக்கும்.

    அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் அப்படியே எல்லாம் மூழ்கி விட்ட விரக்தியில், எல்லா கேள்விகளுக்கும் indifference ஆக ஆமாம் என்று பதிலில் (கண்ணை அழுத்தி தடவி)என்னவேண்டுமானாலும் நடக்கட்டும் என்ற விரக்தி தெரிய ஆரம்பிக்கும். அவனை போக சொல்லு என்ற அருவருப்பு தெரியும் வெறுப்பின் கொதிப்பில், மனசுக்குள் துப்பாக்கி எடுக்கும் கோபம் புலப்படும்.

    அடுத்த கல்லை அவிழ்க்கும் காட்சியில் தனக்கு தெரிந்த லதாவின் காதலையே re -assure செய்து கொள்ளும் விதமாக, பொய் ஆச்சர்யம் காட்டி, தான் breakdown ஆக ஆரம்பித்து விட்டதை மறைத்து லதாவிற்கு நம்பிக்கை ஊட்ட முயலும் பொது, தானே நம்பாததை மற்றவருக்காக சொல்வதை இந்த மேதை உணர்த்தும் குறிப்பு, குரலும்,பாவங்களும், உடல் மொழியும் புரியும் ரசவாதம்.


    லதாவின் அவநம்பிக்கை நிறைந்த சோகத்தால் வெறி கொண்டு, ரங்கனையும் சித்ராவையும் சுட வரும் போது ,மற்றவர்கள் தடுத்தவுடன் விரக்தி, கோபம் கொண்டு, தன்னிச்சையாக பார்த்த ஞாபகம் இசைப்பார் பியானோவில்.இந்த காட்சியில் பாடல் முழுதும் meloncholic serenity with puzzled look உடன்,நிலைகுத்திய விழிகளுடன், முடிவில் சித்ரா அந்த பாடல் எப்படி தெரியும் என்பதற்கு பதில் கூறியவுடன் ஏமாற்றத்துடன் திரும்பும் லதாவை பார்த்து திரும்ப violent ஆகி சித்ரா கழுத்தை பிடித்து வெறி பிடித்து கத்தி கொண்டு தோட்டத்திற்கு செல்லும் இடம்......

    அங்கு தோட்டத்தில் லதாவுடன் ,நம்பிக்கை இழந்து அவரை போக சொல்லி விட்டு, அப்படியாவது பழைய நாட்களை அசை போட்டு வாழ்ந்து விட நினைக்கும் கோபால்,பதட்டத்துடன் சிகரெட் பற்ற வைப்பதிலேயே depressed hope less state வெளிப்பட்டு விடும்.போலீஸ் நண்பன் வரும் போது detached silent agony யில் கொடுக்கும் indifferent உடல் மொழி மற்றும் கை அசைவுகள் ....(அவசியமில்லை). நண்பன் கைரேகை எடுக்க சொன்னதும் அவன் குற்றவாளிகள் தப்பி விடும் சாத்யகூற்றை சொன்னதும் போய்தான் தொலயுட்டுமே என்ற அங்கலாய்ப்பு.

    சித்ராவை வலையில் சிக்க வைக்க கடுகடுவென்ற பாவனையில் இருந்து போலீஸ் நண்பன் voice over க்கு தக்க படி gradual ஆக forced pleasantness கொண்டு வருவது. ரங்கன் வருவதை பார்த்து லதாவிடம் மனமில்லாமல் கடுமையாய் பேசி அனுப்பி விட்டு ரங்கன் ரேகை இருக்கும் பால் கிண்ணத்தை உடைத்தவுடன், அதை பார்த்து கோபம் நிறைத்த help less ness கையை கொண்டே காட்டுவார்.

    இந்த படத்தின் முக்கியமான மூன்று சிறப்புகள் - முதல் முதல் sur realistic முறையில் எடுக்க பட்ட எங்கே நிம்மதி பாடல். படம் முழுதும் voice over என்ற முறையில் நடிகர்திலகத்தின் உணர்ச்சி மிகு nerration உடன் perfect ஆக sink ஆகும் அவரின் நடிப்பு.ஆச்சர்ய பட வைக்கும்.கையை பயன் படுத்தி அவர் அதீத மனநிலையை வெளிபடுத்தும் இடங்கள். ஒன்றை ஏற்கெனெவே பார்த்தோம். எங்கே நிம்மதி பாட்டில் எனது கைகள் மீட்டும் போது வரிகளில் புறங் கைகளால் action காட்டி கண்களால் follow thru பண்ணும் போது கைகளே அந்நியமான உணர்வை கொடுப்பார். சித்ரா அவர் அடித்த அடியில் இறந்து விட்டதும் இந்த கைதானே அவளை அடித்தது என்று தண்டிப்பது போல் .....

    climax காட்சி இந்திய படங்களில் வந்ததிலேயே சிறந்த காட்சிகளில் ஒன்று.

    stylised நடிப்பில், மனோதத்துவ முறையில் உச்சம் தொடுவார். அப்படியே ஒவ்வொரு நொடியும் மனதில் தைக்கும். பிரமை பிடித்த மாதிரி உட்கார்ந்து சொல்லும் எதுவும் காதில் ஏறாத மனநிலையில் ராஜு வந்ததை கேள்வி பட்டதும் அவர் துன்பமெல்லாம் நீங்கி விட்டதான நினைப்பில் காட்டும் அதீத stress relieved happiness ... இந்த காட்சி முழுவதும் hope -despair ஊசலாட் டமே. ராஜூவை கட்டி தேம்பி விட்டு, ஆட்டி வைக்கிராண்டா என்ற ஆத்திரத்தை கொட்டி ரங்கனை சித்ராவை பரபரப்பாய் வெற்றி களிப்பு விடுதலை உணர்வில் அழைக்கும் தோரணை ,சித்ரா வந்ததும் பேயை பார்த்த மாதிரி பின் வாங்கும் அவசரம்.ராஜு அவளை தங்கை என்றும், ரங்கனை சித்தப்பா என்றும் ஒப்பு கொண்டவுடன்,தன்னையே நம்ப முடியாமல் மீண்டும் கெஞ்சி விட்டு, மச்சத்தையும் பார்த்தவுடன் விரக்தியில் வீழும் இடம்... நண்பன் கைரேகையுடன் வந்ததும்,ஒவ்வொருவரிடமும் களிப்புடன் ரேகை...ரேகை என்று பிரச்சினையே முடிவு பெற்றது போல் கொண்டாட்ட மனநிலை சென்று, ரேகையும் ஒரே மாதிரி என்று சொன்னதும்,நம்பலியா,நீயும் நம்பலியா என்று லதாவிடம் புலம்பி கொண்டே confess பண்ணும் காட்சி.... நான் அசைவே இல்லாமல் லயித்து ஒன்றிய அதிசயம்.

    confess பண்ணி முடித்ததும், அந்த train உடலை சிதைத்ததை விவரித்து விட்டு அதிர்ச்சி கலந்த பய உணர்வுடன் அலறி, ஒண்ணு மட்டும் உறுதி என்று சொல்லி விட்டு மூக்கை கைகுட்டையால் சிந்தும் improvisation (humanising the celluloid image ).குழந்தை போல் தன் conclusion சொல்லி விட்டு, பந்தாவாக எழுந்து வந்து எல்லோரிடமும் இல்லை என்ற பதிலை கேட்டு பெற்று ,லதா தன்னை கைது செய்ய சொன்னதும்,நம்பவோ,ஜீரணிக்கவோ முடியாமல் உண்மை உணர்ந்து என்ன அழகான நடிப்பு என்று சித்ராவிடம் சொல்லி(அப்போது கூட லதா நடிக்கவில்லை என்ற நம்பிக்கை)
    அதை வைச்சா என்னை வீழ்த்திட்டே, அத்தனையும் நடிப்பா என்று குழந்தையின் ஏமாற்றம் நிறைந்த தேம்பலுடன் கேட்டு, லதா தன்னை உண்மையாய் நேசிப்பதை அறிந்து கொள்ளும் நெகிழ்வு..(தாடையை தடவி)

    இப்போது சொல்லுங்கள். இந்த மாதிரி ஒரு அதிசயம் உலகத்தில் உண்டா?கண்டதுண்டா?

    Artaud acting techniques.

    Artaud's thinking placed heavy emphasis on invoking deep routed feelings through acting. He believed the theatre was about action and the element of surprise. His theatre of cruelty approach, of which he is better associated with, takes acting to the subconscious level. Using painful memories and strong feelings to invoke strong emotion. Antonin Artaud thought less of words and more of profound impact. Where as Brecht wanted the audience to go out and change society Artaud wanted them shaken to their soul and to look within and make Changes within themselves.

    இந்த முறையில் சராசரியாக நாம் வாழ்க்கையில் காட்டும் முகபாவங்கள், வெளியீட்டு முறைகள் நிராகரிக்க பட்டு , நடிகர்கள் முகத்தை ரப்பர் போல இஷ்டத்துக்கு வளைத்து, கண் மூக்கு வாய் எல்லாவற்றையும் மிக கொடூரமாக உபயோக படுத்தி, வலிதரும் எண்ணங்களை,மிக மிக வலிமையுள்ள நினைவெழுச்சிகள்,மிகை உணர்ச்சிகளை ,நடிப்பை உள்மன போராட்ட நிலைக்கு எடுத்து சென்று , பார்ப்பவரின் ஆத்மாவை உலுக்கி எடுக்க வலியுறுத்தினார். இந்த முறை நடிப்புக்கு இந்தியாவில் ஒரு நடிகரும் தகுதி பெற முடியவே முடியாது ,நம் ஒரே உலக மேதையை தவிர.

    நடிகர்திலகம் மட்டுமே மற்றவர்களால் இஷ்டப்படி இயக்கி கொள்ள முடியாத involuntary muscles என்பதையும் அவர் இயக்கி கொள்ளும் திறமை பெற்றிருந்ததால்(ஒரு டாக்டர் குறிப்பிட்டதாய் ஞாபகம்) அவரால் மற்றவர்களை விட அதிகமாக முகபாவங்களை காட்டி (அமெரிக்க நடிப்பு பள்ளி ஒன்றில் இது நிரூபிக்க பட்டது)இந்த வகை நடிப்பிலும் தேர்ந்து விளங்கினார்.

    எதற்கு எங்கெங்கோ போவானேன்?புதிய பறவை climax காட்சி ஒன்று போதுமே! அதை chekhov பாணியில் ஆன stylised நடிப்பு என்றுதானே பார்த்தோம்?ஆனால் அதில் முழு காட்சியிலும் Astraud cruelty முறை பயன் படுத்த பட்டு அந்த காட்சி நம் ஆத்மாவில் ஊடுருவி நம் sub -conscious level உணர்விலும் ஊடுருவும் அதிசயத்தை நிகழ்த்தி Focus reach என்ற Acting Miracle நிகழ்ந்தது.

    பிரமை பிடித்து உட்கார்ந்திருக்கும் நடிகர்திலகம் சித்ராவின் அண்ணன் pilot ராஜு வந்து விட்டதை படி படியாய் உள்வாங்கி அப்படியே பிரமை நீங்கி ,stress relieve ஆகி, ecstatic உணர்வை நம்பிக்கையின் உச்சத்திற்கே செல்வதை காட்டும் அந்த expression .

    அதே மாதிரி confession முடித்து விட்டு train இல் சித்ரா உடல் சிதையும் காட்சியை மனக்கண்ணால் பார்த்து அலறும் போது கொடுக்கும் expression .
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  13. Thanks kalnayak thanked for this post
  14. #1547
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    PUDHIYA PARAVAI : the ace movie of NT / Golden Jubilee commemorations

    வளரும் பயிர் முளையிலேயே தெரியும் ....இது பராசக்தி வெளிவந்தவுடனேயே இனி தமிழ் திரையுலகின் நடிப்புப் பிதாமகர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்
    ஒருவரே என்பது எழுதப்பட்டுவிட்டது அதன்பிறகு அவர் தனது வெற்றிப்படிகளில் கவனமாக அடியெடுத்து வைத்து ஒவ்வொரு படத்திலும் தன் நடிப்பை மெருகேற்றிக்கொண்டே வந்த காலகட்டம். நடிப்பின் இலக்கணம் படிப்படியாக வரையறுக்கப்பட்ட து. மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளை தன் நவரச நடிப்புப்பரிமாணங்களில் ஒப்பாரும்மிக்காருமின்றி நடிகர்திலகமாக கொடிகட்டிப் பறந்த வசந்தகாலம். எதற்கெடுத்தாலும் ஆங்கில நடிகர்களுடனேயே
    ஒப்பீடு செய்து பழக்கப்பட்ட அறிவுஜீவி ரசிகர்கள் பிரமிப்பின் உச்சத்துக்கே சென்று நடிகர்திலகத்தை உலகநடிகர்களின் நடிப்புக்கே அளவுகோலாக கொண்டாடத் தொடங்கிய திரை வரலாற்றின் துவக்கம். நின்றால் நடந்தால் உறங்கினால்.....பேசினால் பாடினால் சிரித்தால் அழுதால்......சிவாஜிகணேசன் மக்கள் மனங்களை ஆக்கிரமித்தார். புதிய பறவை அவரது திரைச்சாதனைகளின் மிச்சசொச்சமில்லாத உச்சம் என்றால் மிகையாகாது. நடிப்புத்தரத்தில் அதற்கு முன்னும் அதற்கு பின்னும் இப்படியொரு மக்கள் மனங்களில் கல்வெட்டுக்காவியத்தை நடிகப்பேரரசராலேயே தர இயலவில்லையே.

    It is a different experience with NT who made a riveting performance of a character that is haunted by its nostalgia with his dead wife, in a complicated and perplex characterization that was simplified by his inimitable approach to the role,... never ever can be thought of by any other actor of this world present, past or in future too!

    Last edited by sivajisenthil; 12th September 2014 at 05:21 PM.

  15. Thanks kalnayak thanked for this post
  16. #1548
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    செத்த பிறகுதானே சிலை வைக்கும் பழக்கம் உண்டு?
    முன்பு அப்படி இருந்ததாக தெரியவில்லை .. நேரு , காமராஜர் , பெரியார் , கலைஞர்(திக சார்பில் வைக்கப்பட்டு எம்.ஜி.ஆரின் மறைவன்று தகர்க்கப்பட்டது) போன்றோருக்கு அவர்கள் உயிரோடு இருக்கும் போதே சிலைவைக்கப்பட்டதாக நினைக்கிறேன்.

  17. #1549
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe View Post
    முன்பு அப்படி இருந்ததாக தெரியவில்லை .. நேரு , காமராஜர் , பெரியார் , கலைஞர்(திக சார்பில் வைக்கப்பட்டு எம்.ஜி.ஆரின் மறைவன்று தகர்க்கப்பட்டது) போன்றோருக்கு அவர்கள் உயிரோடு இருக்கும் போதே சிலைவைக்கப்பட்டதாக நினைக்கிறேன்.
    1961 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி, சென்னை, மவுண்ட் ரோடில் (தற்போதைய அண்ணா சாலையில்) பெருந்தலைவர் காமராஜர் சிலையை, அப்போதைய பிரதமர் நேரு திறந்து வைத்திருக்கிறார்.

    அப்போது அவர் பேசுகையில் -
    "மதிப்புக்குரிய என் சகாவான காமராஜரின் சிலையை நான் திறந்து வைக்க வேண்டும் என்று சி.சுப்பிரமணியம் என்னிடம் வந்து, சென்னை மாநகராட்சி சார்பில் அழைத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதில் எனக்கு சங்கடம் ஏற்பட்டது. காமராஜருக்கு உருவச்சிலை வைக்கும் இந்த விழாவில் நான் கலந்து கொள்ள விரும்பியபோதிலும், "உயிரோடு இருக்கும் தலைவர்களுக்கு உருவச்சிலை வைக்கக்கூடாது" என்று நான் கூறி வந்திருப்பதால், எனக்குச் சங்கடம் ஏற்பட்டது.

    இது விஷயத்தில் எனக்கு பெரிய மனப் போராட்டமே நடந்தது. கடைசியாக, இந்த விழாவில் கலந்து கொள்வது என்று தீர்மானித்து, விழாவுக்கு வந்து விட்டேன். நாட்டில் உள்ள பல்வேறு தலைவர்களுக்கும், காமராஜருக்கும் வித்தியாசம் இருக்கிறது. அவரது தலைமை தனிச்சிறப்பு பெற்றதாகும். காமராஜர், மக்களிடையே இருந்து, மக்களின் தலைவராகத் தோன்றி, மக்களுக்காகப் பணிபுரிந்து வருகிறார்.

    மற்றவர்களுக்கு முன்மாதிரியான தலைவராகவும் திகழ்கிறார். சாதாரணத் தொண்டராகப் பொது வாழ்க்கையைத் துவக்கி, தமது உழைப்பால் உயர்ந்த அவருக்கு உருவச்சிலை எழுப்பியது மிகவும் பொருத்தமானதே. எனவே, இந்த விழாவில் கலந்து கொண்டது பற்றி மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நீண்ட காலம் வாழ்ந்து, நாட்டுக்குத் தொண்டு புரிய விரும்புகிறேன்." - என்று கூறினார்.

    இதிலிருந்து உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக்கூடாது என்று சர்ச்சை அப்போதே இருந்திருக்கிறது. ஆனாலும், அவ்வாறு சிலைகள் திறக்கப்பட்டிருக்கின்றன (கலைஞர் சிலை வரை) என்பதுதான் உண்மை.
    Last edited by KCSHEKAR; 12th September 2014 at 05:36 PM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  18. #1550
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    நன்றி :: நண்பர் டாக்டர் எம்கேஆர்சாந்தாராம்:
    அவரின் கைவண்ணத்தில் வந்த கட்டுரை :


    தமிழில் வெளிவந்த இரண்டாவது ஈஸ்ட்மன் வண்ணப் படம், ’புதிய பறவை!’

    ’சிவாஜி பிலிம்ஸ்’ இன் முதல் வண்ணப்படம் ’ புதிய பறவை’ !

    இந்த படம் எடுத்தவிதம், முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இருந்ததை அனைவரும் அறிவர் !


    முற்றிலும் மாறுபட்ட கதை,
    புதுமையான படப்பிடிப்பு !
    புதுமையான காமரா கோணங்கள்,
    சிவாஜி கணேசனின் மாறுபட்ட நடிப்பு,
    வித்தியாசமான இசையுடன் பாடல்கள் !
    படத்தை இன்று பார்த்தாலும் தோன்றும் புதுமை !

    ஆகியவைகள் நிறைந்த :ஸ்பன்ஸ் திரில்லர் ‘ படம் !



    பட வெற்றிக்கு வித்திட்டவர்கள்!

    இயக்குனர் தாதா மிராசி -----( ‘ புதிய பறவை’ படத்தில் கோபால் இன்

    ( சிவாஜி கணேசன்) அப்பாவாக ஒரே காட்சியில்

    இவர் நடித்தார் ! )




    புதுமையான இயக்குனர். இவர் இயக்கிய நடிகர் திலகத்தின் , கண்ணதாசனின் ’இரத்தத் திலகம்’ படத்தை இயக்கிய , நடிகர் திலகத்திற்கு மிகவும்

    பிடித்ததால், தன் சொந்த படத்தை இயக்க அனுமதித்தார் !

    தாதா மிராசி கதை சொல்லும் முறையைப் பார்த்துதான், இயக்குனர் ஸ்ரீதர், ’காதலிக்க நேரமில்லை’ படத்தில் நாகேஷ், ‘தன் தந்தை’ டி எஸ் பாலய்யா வுக்கு

    கதை சொல்வதைத்தான் இங்கே எழுதியுள்ளேன் !

    தாதா மிராசி கதை சொல்லும் விதம் அலாதி !


    படத் தயாரிப்பாளர் ,

    கதாநாயகர் ,

    இசை அமைப்பாளர்

    பாடலாசிரியர்

    இவர்களை மத்தியில் இவர் கதை சொல்வதைப் பார்த்தால் ரொம்ப

    தமாஷாக இருக்குமாம் ! கதை சொல்லும் போது :

    இவர் :

    அழுவார் , சிரிப்பார் , கண்ணீர் சிந்துவார் , தேம்பித் தேம்பி அழவும்

    செய்வார் , கோபப் படுவார் , காட்சியின் சூழ்நிலைக் கேற்ப அவரே

    இசை ( ! ) அமைத்து கொள்வார் ! தரையில் உருண்டு புரளாத குறைதான் !

    மொத்தத்தில் இவர் கதை சொல்வதைக் கேட்டால் ஒரு திரைப் படத்தை

    " ஒ..சி " யில் பார்த்த திருப்தி இருக்கும் !

    இவர் கதை சொல்லும் தமாஷ் ஐ நேரில் பார்த்த இயக்குனர்

    ஸ்ரீதர் , வசனகர்த்தா கோபு ஆகிய இருவரும் :

    நாம் ஏன் இந்த தாதா மிராசி கதை சொல்லும் பாணியை

    " காப்பி " அடித்து ஒரு நகைச்சுவை காட்சியை உருவாக்கக் கூடாது ? "

    என்று எண்ணி உருவானததுதான் :

    " காதலிக்க நேரமில்லை "

    படத்தில் :

    நாகேஷ் - டி. எஸ் . பாலய்யா கதை சொல்லும் காட்சி !



    " புதிய பறவை " படத்தில் நடித்தது தவிர , தாதா மிராசி ,

    " நவராத்திரி " படத்தின் இந்தி பதிப்பான :

    " நயா தின் நயி ராத் " படத்திலும் ( சஞ்சீவ் குமார் நடித்தது . )

    நடித்துள்ளார் என்பது உபரி தகவல் !


    Image


    அவர் பின்பு சென்னை உயர் நீதி மன்றத்தில் வக்கில் தொழிலை மீண்டும்

    ஆரம்பித்தகா கேள்வி ! ஆனால் அவர் சிறந்து விளங்கினாரா இல்லையா

    என்பது தெரியவில்லை !


    " புதிய பறவை " படத்தில் :

    சிவாஜியுடன் அவர் நடித்த பகுதி : " வீடியோ "

    http://www.mediafire.com/?8vlfjp35181v134



    பிறப்பால் மராத்தியர் ஆன இவருக்கு,

    தமிழ் அவ்வளவாக பேச வராது, அப்படி வந்தாலும்

    சீராக வராது, எனவே :


    படப்பிடிப்பில் , இயக்குனருடன் எப்போவோமே கூடவே

    இருக்க சொல்லி , இந்த படத்தின்

    வசனகர்த்தா ஆரூர்தாஸ் -ஐ பணித்தார் , நடிகர் திலகம் !



    " புதிய பறவை " பற்றிய சுயையான செய்திகள் !

    1 . என்ன காரணமோ தெரியவில்லை , சிவாஜிக்கு படத்தை இயக்கும் ஆசை

    வந்தது ! அப்போது " பலி கடா " ஆனது : தாத மிராசி ! அந்த கால

    " தினத் தந்தி " யில் கடைசி பக்க முழுப் பக்க விளம்பரம் மிக்க " பிரஸ்டிஜ் "

    ஆன விஷயம் ! இதற்கு செலவு அந்த காலத்திலேயே சுமார் ரூ. 35 ,000 !

    " புதிய பறவை " விளம்பரமும் அப்போது " தினத் தந்தி " யில் முழுப்பக்கம்

    விளம்பரம் வந்தது !

    எப்படி ?


    "' " புதிய பறவை "

    வசனம் : ஆரூர்தாஸ்

    பாடல்கள் : கண்ணதாசன்

    இசை : விஸ்வநாதன் - ராம மூர்த்தி

    இயக்கம் : தாதா மிராசி

    இயக்கம் மேற்ப்பார்வை :

    சிவாஜி கணேசன் ! ""


    எப்படி இருந்திருக்கும் தாதா மிராசிக்கு ?


    ரொம்ப " டென்ஷன் " ஆனார் தாதா !

    சிவாஜி தலை இட்டால் " டைரக்ஷன் " - என்கிற பயம்தான் !


    நிலைமை இப்படி இருக்க இந்த விளம்பரத்தைப் பார்த்தார்

    எம்** ! " துறு துறு " என்று இருந்தது அவருக்கு ! தன் பங்குக்கு ஒரு

    வேலை செய்தார் ! அப்போது " தா**பூ " படம் எடுக்கப் பட இருந்தது !

    அந்த படத்திற்கு அதே " தினத் தந்தி " யில் முழுப் பக்கம் விளம்பரம்

    வந்தது !

    எப்படி ?

    "*** நடிக்கும்"

    " தா** பூ "

    வசனம் : ஆரூர்தாஸ்

    பாடல்கள் : கண்ணதாசன்

    இசை : கே.வி. மகாதேவன்

    டைரக்ஷன் : ராமதாஸ்


    " டைரக்ஷன் மேற்ப்பாவை : :

    ***! "



    இந்த விளம்பரத்தைப் பார்த்தது, சிவாஜி என்ன நினைத்தாரோ

    தெரியயவில்லை ! சிவாஜி டைரக்ஷன் மேற்ப்பார்வையை விட்டு விட்டார்


    பெரு மூச்சு விட்டார் தாதா மிராசி !

    சிவாஜி " ஜகா " வாங்கியவுடன் , ***ஆரும் தா**பூ

    படத்திலிருந்து விலகி விட்டார் !


    அப்போது அந்த படத்தின் இயக்குனர் ராமதாஸ் அவர்களும்

    பெரு மூச்சு விட்டார் !


    2. " புதிய பறவை " படம் சூபர் ஆனவுடன் அந்த படத்தைப் பார்க்க

    வேண்டும் என்று எம்ஜிஆர் ஆசைப் பட்டாராம் ! அந்த காலத்தில் தனி

    தியேடர்கள் , டி விடி போன்றவைகள் இல்லை ! எனவே " ஒரிஜினல் பிரதி "

    கொண்டு வந்து போட்டுப் பார்த்தால் தான் உண்டு ! இதனால் எம்ஜிஆர் , தன்

    " புதிய பறவை " ஆசையை தேவர் அவர்களிடம் சொல்ல , தேவரும் தனக்குத்

    தெரிந்த பட வினியோகஸ்தர் ஒருவரிடம் சொல்லி அந்த படத்தை வரவழைத்து

    வாகினி ஸ்டுடியோ வில் இரவோடு இரவாக ரகசியம் ஆக பார்த்தாராம்

    எம் ஜி ஆர் !


    இது தாதா மிராஸியின் இயக்கத்திற்கு கிடைத்த பரிசு !




    " புதிய பறவை " படத்திற்கு மெல்லிசை

    மன்னர்கள் இசை அமைத்த விதம் அலாதி !

    மெல்லிசை மன்னர் ( எம். எஸ். வி ) சொல்கிறார் :


    " இந்த " புதிய பறவை " படப் பாடல்கள் வித்தியாசமானவை !

    காதல் பாட்டுக்களே இல்லை - இந்த படத்தில் ! ஆனால் காதலைப் பற்றி ,

    இல்லை மறைவு காயாக " விரக தாபத் " துடன் பாடுவதாக இருக்க வேண்டும் !

    எடுத்துக்காட்டாக , " சிட்டுக்குருவு முத்தம் கொடுத்து " பாடல் ஒரு காதல்

    பாட்டு இல்லை ! இருந்தாலும் அந்த பாடலைப் பாடும் நாயகி , தன காதலை

    அல்லது காதலனை நினைத்துதான் பாடுகின்றாள் !

    இப்படித்தான் அமைந்தது " பார்த்த நாபகம் இல்லையோ " பாடல் !"


    என்கிறார் மெல்லிசை மன்னர் !


    " ஆஹா , மெல்ல நட" பாடலின் பெரும்பான் மையான பங்கு மெல்லிசை

    மன்னர் டி.கே. ராமமூர்த்தியை ச சேரும் என்று சொல்லக் கேள்வி !

    அந்த " பங்குஸ் " இசைக் கருவியை அவர்தான் வாசித்தாக கேள்வி !

    உறுதியாகத் தெரியவில்லை ! " எங்கே நிம்மதி " பாடலை அவர்கள்

    உருவான விதம் சுவையானது ! அந்த படத்திற்கான பாடல் வரிகள்

    முதலில் சரியாக கண்ணதாசனால் எழுத முடியவில்லையாம் !

    ஆனால் பாடலை முடித்து விட்டு படப்பிடிப்புக்கு கொடுக்க வேண்டும் !

    கண்ணதாசனோ நேரம் எடுத்துக்கொள்கிறார் !

    " இவர் எப்போ எழுதி எப்போ இசை அமைப்பது ? " என்கிற " டென்ஷனில் "


    " எங்கே நிம்மதி ?

    எனக்கு எங்கே நிம்மதி ? "


    என்று புலம்பினாராம் , மெல்லிசை மன்னர் !

    உடனே கண்ணதாசன் _

    " அட ! இதோ இதையே நான் பாடலின் ஆரம்ப வரி களாக எடுத்துக்

    கொள்கிறேன் ! "என்று சொல்லி எழுதப் பட்ட பாடலாம் !

    வசனகர்த்தா : ஆரூர்தாஸ்
    நடிகர் திலகம், இந்த படத்தை தயாரிக்க திட்டம் போட்ட

    காலத்தில் ( 1964 ) , ஆரூர்தாஸ் செம

    பிஸி !


    அவரால் இந்த ‘புதிய பறவை’ படத்திற்கு வசனம் எழுத

    போதிய நேரம் இல்லாததால் முதலில் இந்த படத்திற்கு

    வசனம் எழுத மறுத்துவிட்டாராம் !


    அப்படி , ஆரூர்தாஸ் வசனம் எழுத

    மறுத்ததிற்கு என்ன காரணம் ?


    ’ புதிய பறவை’ யின் கதை , நிறைய

    காட்சிகளைக் கொண்டது !

    அதிக காட்சிகளைக் கொண்ட படத்திற்கு வசனம்

    எழுத எப்படியும் 2 படங்களுக்கு வசனம் எழுதும் கால

    அவகாசம் பிடிக்கும் !

    மிகவும் ‘பிஸி’ யாக ஆரூர்தாஸ் இதற்கு உடன்படவில்லை!



    ” டேய் , ஆரூரான் ! நீதான் டா இந்த படத்திற்கு

    கதை வசனம் எழுதணும் !

    உட்கார்ந்து எழுதுடா !”





    எப்போதும் ‘ வாடா - போடா ‘ என்று ஆரூர்தாஸ்

    ஐ அழைக்கும் ஒரே நடிகர் : சிவாஜி கணேசன் !


    ஏன் ?


    சிவாஜி, ஆரூர்தாஸ் ஐ :

    2 வருடங்கள், 11 மாதம், 9 நாதள் மூத்தவர் !
    எனவே, ஆரூர்தாஸ் , காலையில் :

    ஏ வி எம் இன் “ பக்த பிரகலதா” படத்திற்கு காலையில்

    வசனம் எழுதி.......

    இரவில் : “ புதிய பறவை “ படத்திற்கு கதை வசனம் எழுதினாராம் !


    ஏன் ?


    இரவில்தான் ‘ராயபேட்டை ‘கபே அமின் ‘ - ‘காகா ‘ ஓட்டலில்

    இடியாப்பம் , பாயா கிடைக்குமாமே !

    ஆமா, நானும் ‘ பைலட்’ தியேடரில் படம் பார்த்துவிட்டு

    அங்கே போய் ‘இடியாப- பாயா’ வதம் பண்ணுவேன்!



    சரி, “காகா ஓட்டல் ‘ என்றால் ?

    ‘மலையாள முஸ்லிம்’ மக்களை ‘கா கா’ ( சித்தப்பா)

    என்று ‘செல்லமாக’ அழைப்பார்கள், அவர்கள்

    நடத்தும் ஓட்டல், அத்தான் !



    வசனங்களை படித்துப் பார்த்த நடிகர் திலகம்

    ஆரூர்தாஸை பாராட்டியது , தனி கதை !

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
    இவரைப் பற்றி நான் என்ன சொல்வது !

    அப்படியா !

    திரு வீயாரைக் கூப்பிட்டு எழுதச் சொல்லலாமா!

    அதுவும் சரிதான் !


    ’கோபால்’ என்கிற ஆண்டி ஹீரோ

    வேடத்தில் அற்புதமாக நடித்திருந்தார், சிவாஜி கணேசன் !


    இறுதிக் காட்சியில் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு....

    தன் கைகுட்டையால் மூக்கை சிந்தும்

    காட்சி ஒன்றே போதும் !


    தான் ஓர் அப்பாவி என்று நிரூபிக்க அவர் படும்

    பாட்டை தன் நடிப்பால் காட்டும் போது......


    “ அய்யய்யோ ! நம்ம நடிகர் திலகத்தை விட்டு விடுங்களேன்!

    அவர் அப்படி செய்திருக்கவே முடியாது !”



    என்று ஒருவர் தியேடரில் வாதாடினார்!


    அவர் யார் ?


    வேறு யார் ?


    எம்கேஆர்சாந்தாராம் !


    படத்தை அரங்கத்தில் பார்க்கும்

    ஒவ்வொருவருக்கும் என் நினைப்புதான் !



    அந்த அளவுக்கு நடிகர் திலகம் அற்புதமாக நடித்திருந்தார் !

    சரோஜாதேவி
    படத்தின் அழகி இவர் !

    படம் சலிப்பைத் தட்டாமல் வைப்பதில் இவரின் பங்கு

    அபாரமானது !


    வித விதமான , கலர் கலராக புடைவைகள் !


    வித விதமான மேக் அப் அழகு !


    சிவாஜிக்கும் சரோஜாதேவிக்கும்

    துணிமணிகள் லண்டனில் இருந்து

    தைத்து வரவழைக்கப்பட்டவை !

    செளகார் ஜானகி

    இவரின் நட்ப்பும் அபாரமானது !

    ஆனால், எனக்கென்னவோ , அந்த காலத்தில் இவரை

    விட்டால் வேறு நடிகை இருந்திருந்தால் , படம்

    இன்னும் நன்றாகவே இருந்திருக்கும் என்பது என்

    கருத்து !


    ஒரு வேளை......


    ’நாட்டியப் பேரொளி’

    பத்மினி யைப் போட்டிருந்தால் ?



    மிகவும் நன்றாக இருந்திருக்கும் என்பது

    என் கருத்து !
    Last edited by sss; 12th September 2014 at 06:01 PM.

  19. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Subramaniam Ramajayam liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •