Page 348 of 400 FirstFirst ... 248298338346347348349350358398 ... LastLast
Results 3,471 to 3,480 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #3471
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like

  2. Thanks eehaiupehazij thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3472
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகம் பிரபு பிறந்தநாளை முன்னிட்டு 28.12.2014 அன்று மதுரையில் சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை & சரவணா ஆஸ்பத்திரி இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
    காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் முக்கிய அம்சமாக நோயாளிகளுக்கு இலவசமாக மாத்திரைகள், டானிக்குகள், இருமல் மருந்துகள், சத்து டானிக்குகள் வழங்கப்பட்டது. 401 நோயாளிகள் வந்திருந்து தங்களது நோய்களுக்கு மருந்து, மாத்திரைகள் வாங்கி சென்றனர்.இதில் விசேசம் என்னவென்றால் ஏற்கனவே பல இடங்களில் மருத்துவ முகாம் நடத்திய பொழுது அதிகபட்சமாக 350 நோயாளிகள் தான் வந்துள்ளனர். அனால் நமது தலைவர் பெயரில் நடத்திய முகாமில் 401 பேர் வந்திருந்து எதிலும் நமது தலைவருக்கு தான் முதலிடம் என்பதை நிருபித்து உள்ளோம். வந்திருந்தவர்கள் அனைவரும் நமது தலைவர் சிவாஜி அவர்களை நினைவுகூர்ந்து மனதார வாழ்த்திவிட்டு சென்றனர்.
    எந்தவித அரசியல் பலமும் இல்லை அவர் பெயரை சொல்லி சம்பாதிக்கவும் இல்லை, அனால் அவர் மறைந்து 15 வருடம் ஆகியும் அவர் பெயரில் பல நல்லகாரியங்களை செய்துவரும் தலைவரின் அன்பு இதயங்களை என்று வந்தவர்கள் அதிசயத்து போனார்கள். நிகழ்ச்சியில் பேசிய திரு.டாக்டர்.சரவணன் அவர்கள் தான் ஒரு சிவாஜி ரசிகர் எனவும், சங்கிலி திரைப்படத்தை நான்கு காட்சிகள் தொடர்ந்து பார்த்ததை நினைவுகூர்ந்து எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காத ஒருவன் இருக்கின்றான் என்றால் அவன் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் சிவாஜி ரசிகனாகத்தான் இருப்பான் என்று பேசினார்.
    இம்முகாமிற்கு தனது பள்ளியில் இடத்தையும் தந்து எல்லாவகையிலும் உதவி புரிந்த திரு.ஈஸ்வரமூர்த்தி அவர்கள், திரு.சந்திரசேகர் அவர்கள், முகாமிற்காக உழைத்த அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெகதீஸ்பாண்டியன், செந்தில்குமார், பி.செந்தில்குமார், முத்துகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, நவீன், நடராஜன் மற்றும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
    அறக்கட்டளையை சேர்ந்த திரு.நாஞ்சில் இன்பா அவர்கள் சென்னையில் இருந்து வந்திருந்து முகாமிற்கு சிறப்பு சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இம்முகாமை திரு.ரமேஷ்பாபு, திரு.சுந்தராஜன், திரு.சோமசுந்தரம் மூவரும் இணைந்து ஏற்ப்பாடு செய்திருந்தனர்.
    முக்கியமாக நமது தலைவரின் அருந்தவப்புதல்வர் திரு.தளபதி ராம்குமார் அவர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்.

    முகாம் நிழற்படங்கள்.








  5. #3473
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகம் பிரபு பிறந்தநாளை முன்னிட்டு 28.12.2014 அன்று மதுரையில் சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை & சரவணா ஆஸ்பத்திரி இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.



















    எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

  6. #3474
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil
    Dear Sir

    Wishes for a Happy New Year 2015

    senthil
    Thank you very much. I too wish you, your family & friends the same!!!
    .........-`҉҉´-
    -`҉҉´..)/.-`҉҉´-
    ....¨´“˜~.)/¸.~“˜¨
    ........¨´“˜~.“˜

  7. #3475
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு 2015 வாழ்த்துகள்!!!
    .........-`҉҉´-
    -`҉҉´..)/.-`҉҉´-
    ....¨´“˜~.)/¸.~“˜¨
    ........¨´“˜~.“˜

  8. #3476
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    அன்பு நண்பர் சுந்தர்ராஜன் அவர்களுக்கு
    இளைய திலகம் திரு பிரபு அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் நடைபெற்ற மருத்துவ சேவை முகாம் பற்றி வெளியிட்டு இருந்தீர்கள். மிக்க மகிழ்ச்சி.டாக்டர் சரவணன் அவர்கள் திரு வைகோ அவர்களின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தற்போதைய மதுரை மாவட்ட செயலாளர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார் . பணம் எதிர்பாராது மிகவும் சேவை மனப்பான்மை உள்ளவர். இரண்டு மூன்று முறை சந்தித்து உரையாடி உள்ளேன் . எங்கள் நிறுவனத்தின் மூலமாக ஒரு இலவச மருத்துவ முகாம் ஒன்று மதுரையில் நடைபெற்ற போது அதற்கு வருகை தந்து இருந்தார். 5 நிமிடங்கள் பேசினால் அதில் அடிகடி சிவாஜி பற்றியோ அல்லது வைகோ பற்றியோ ஏதாவது நல்லதொரு தகவலை வெளிபடுத்துவார் . மிக நல்லதொரு மனித புனிதரை குறிப்பிட்டதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
    gkrishna

  9. #3477
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan – Definition of Style 14

    ராஜ ராஜேஸ்வரம்



    Larger than life என்பது சராசரி மனிதனை விட மேற் தரத்தில் உள்ள (பணம்,பதவி,நோக்கம்,புகழ்,தலைமை,போராட்ட குணம் ,இறை நிலை ) மக்களை பேசும் வலுவான நோக்கம் கொண்ட ,அதீத உணர்ச்சிகள்,போராட்ட நிலை உள்ளதாகவே அமையும். மேற்தர மனிதர்களின் பிரச்சினையும் அதற்குரிய பிரம்மாண்டம் கொண்டே அமைவது தவிர்க்க இயலாதது. இன்றைய காலத்தில் ஒரு NRI குழந்தை,ஒரு அரசாங்க மேற்பணியானர்,தலைவர்,அமைச்சர், புகழ் பெற்ற மருத்துவர் இவர்களை பார்த்தாலே இவர்களின் பொது நடத்தை விந்தையாகவே தெரியும். முற்காலங்களில் அரசர், பிரபுக்கள் ,மதகுருமார்கள் இவர்கள் சராசரி மனிதர்களிலிருந்து வேறு பட்ட உடை, தலை அலங்காரம் (கொம்பா முளைச்சிருக்கு.இல்லை கிரீடம் )நடை,பேச்சு தோரணை, பெரிய பொறுப்பு அதற்குரிய பெரும் பிரச்சினைகள் என்று வேறு பட்டே வாழ்ந்தவர்களை ,நிறைய இக்கால மேதாவிகள் சொல்வது போல் soft contemporary முறையில் நடிப்பது அபத்தத்திலும் அபத்தம்.

    --- Gopal under the title இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-33 in Sivaji Ganesan School of Acting Thread Post No.13.
    Posted on 26.05.2013.


    Larger than Life எனப்படும் சராசரியை விடப் பெரிதான அல்லது மேலான பாத்திரங்கள் சினிமாவில் சித்தரிக்கும் தேவை புராண இதிகாச மற்றும் வரலாற்று நாயகர்களுக்கு அல்லது Fantasy வகைப் பாத்திரங்களுக்கும் ஏற்படும். இதை தமிழ் சினிமாவில் ஒரு வசதியாகவே பயன்படுத்தி வந்துள்ளனர் படைப்பாளிகள். குறிப்பாக இந்த வசதி அந்த நாயகர்களின் வீரதீரத்தை வெளிப்படுத்த மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. This larger than life character was conveniently used as an excuse and / or interpreted to project a character to the extent of the imagination of the creator, the reason being they are time immemorial.
    இது பல்லாண்டுகளாக வந்துள்ளதால் உதாரணங்கள் சொல்லி மாளாது.
    ஆனால் உண்மையில் இந்த பாத்திரங்கள் அல்லது இந்த இதிகாச புராண சரித்திர நாயகர்கள் வரலாற்றில் பார்த்தோமானால் அவர்களுடைய வீரம் ஒரு குறிப்பிட்ட தேவைக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்ப்ட்டுள்ளதே யன்றி, இதை விட மேலான அவர்களின் மற்ற திறமைகள் குறிப்பாக நிர்வாகத்திறன்கள் திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்டது மிக மிகக் குறைவு. இந்த வகையில் இப்படிப்பட்ட நாயகர்களை சரியான முறையில் சித்தரித்த படங்கள், பாத்திரங்கள் என்றால் அதில் பெரும்பாலானவை நடிகர் திலகத்தின் நடிப்பில் வெளிவந்தவையாகத் தான் இருக்கும். மிகவும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜ ராஜ சோழன் போன்றவற்றைச் சொல்லலாம். வீர தீர நாயகர்களின் கதை என்றாலே கத்திச் சண்டை, குதிரைச் சண்டை போர்க்களங்கள் என்ற இலக்கணங்களைத் தாண்டி ஒரு நாயகனின் அனைத்துப் பரிமாணங்களையும் சித்தரித்தவை நடிகர் திலகம் ஏற்று நடித்த கதாபாத்திரங்களே.

    இந்த வகையில் இந்த LARGER THAN LIFE பாத்திரங்கள் என பொதுவாக அறியப்படுகின்ற பாத்திரங்களை LARGER TO LIFEஆக மாற்றிய பெருமை நடிகர் திலகத்திற்கே உண்டு.

    என்னைப் பொறுத்த வரையில் இதற்கு மிகச்சிறந்த உதாரணம் ராஜ ராஜ சோழன் என்பேன்.
    ராஜ ராஜ சோழன் என்ற மன்னனின் ராஜ தந்திரத்தை மிக அழகாக சித்தரித்த படம் ராஜ ராஜ சோழன். அந்த மன்னனின் குடும்பத்தையும் யதார்த்த வாழ்வியலோடு இணைத்து சித்தரித்த படம் ராஜ ராஜ சோழன்.
    படம் முழுதும் கொடி கட்டிப் பறக்கும் இயல்பான நடிப்பில் நடிகர் திலகத்தின் சித்தரிப்பில் ராஜ ராஜ சோழன் வாழ்ந்து காட்டியிருக்கிறார். அத்தனையும் அணு அணுவாக எழுத வேண்டும் என்றாலும் உதாரணத்திற்காக இந்தக் காட்சி இங்கே எடுத்துக் கொள்ளப் படுகிறது.

    இந்தக் காட்சியில் ராஜ ராஜ சோழன் என்கின்ற மன்னனின் குணாதிசயங்களையும் திறமையையும் ராஜதந்திரத்தையும் இயக்குநர் அழகாக சித்தரித்திருப்பதோடு, அதற்கான நடிகர் திலகத்தின் பங்கையும் அருமையாக பயன்படுத்தியிருக்கிறார். இக்காட்சியில் படத்தொகுப்பாளரின் பங்கு குறிப்பிடத்தக்கது.

    அரசியல் கைதிகளைத் தன் பிறந்த நாளில் விடுதலை செய்யும் கொள்கை முடிவின் பயனாக விமலாதித்தன் விடுதலையாகிறான். ராஜ ராஜ சோழனின் அரசவையில் அவரைப் புகழந்து பாடுகிறான். மன்னர் மகிழ்ந்து பரிசளிப்பதாகச் சொல்ல, பரிசாக அவர் மகள் குந்தவையைக் கேட்கிறான் விமலாதித்தன். அவையிலுள்ளோர் சினமுற மன்னன் அவர்களை சமாதானப் படுத்தி தன் மகளை அவனுக்கே மணமுடிக்க சம்மதிக்கிறான். இந்த சமயத்தில் ராஜ தந்திரியாரின் அரசியல் அலங்கோலத்தை மன்ன்ன் எவ்வளவு சமயோசிதமாக அம்பலப்படுத்துகிறான் என்பதை தன்னுடைய திறமையான திரைக்கதை மூலம் சித்தரித்திருக்கிறார் இயக்குநர் ஏ.பி.என். அவர்கள். சத்யாசிரிய மன்ன்னின் ஒற்றனைக் கையில் போட்டுக்கொண்டு சோழ நாட்டை ராஜ ராஜனிடமிருந்து கைப்பற்ற ராஜதந்திரி போடும் திட்டம், அந்த திட்டத்தை அந்த ஒற்றன் மூலமாகவே மன்ன்ன் தெரிந்து கொள்ளும் தந்திரம், என ஒரு மன்னனின் நிர்வாகத்திறமையை மிகச் சிறப்பாக்க கூறியுள்ளார். இதற்கு முழு முதற் காரணமும் நடிகர் திலகமே. இந்தப் பாத்திரத்தில் வேறு யாரையும் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

    விமலாதித்தன் புகழும் வரிகளில் குலசேகரன் வாழ்கவே என்ற வரியின் போது மீசையை முறுக்குவது, அதைத் தொடர்ந்து கர்வமிக்க புன்னகை, ஒவ்வொரு வரியையும் ரசித்து மகிழ்வது, அதிலும் ஒரு காரணத்தை இயக்குநர் புகுத்தியிருக்கிறார் என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது, பின்னால் தன்னிடம் பெரிதாக எதையோ எதிர்பார்க்கிறான் விமலாதித்தன் என்பதை உணராவிட்டாலும் தன்னால் சிறை பிடிக்கப்பட்டவன் தன்னைப் புகழ்கிறான் எனும் போது ஒரு அகந்தை கலந்த சந்தோஷமும் தத்ரூபமாக நடிகர் திலகத்தின் புன்னகையில் வெளிப்படுகிறது.
    பாடலைப் பாராட்டி பரிசென்ன வேண்டும் கேள் எனும் போது அவன் பதிலுக்கு அவருடைய மகளைப் பரிசாக்க் கேட்கிறான். இந்த இடத்தில் Exaggeration, Dramatisation என எதுவுமின்றி திடுக்கிட்டு அதிர்ச்சியடையும் உணர்வை நடிகர் திலகம் வெளிப்படுத்தியிருப்பது ... He can never be forecast, his acting can never be guessed என்பதையே உணர்த்துகிறது. எதிர்பாராத வகை Reaction ஐ அந்தப் பாத்திரத்திற்கேற்றவாறு வழங்குவதன் மூலம் எவருக்கும் எட்டாத உயரத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார் நடிகர் திலகம். இதற்கு அந்த ராஜ ராஜ சோழன் என்ற மன்ன்னின் will power தான் காரணம் என்பது அந்தப் பாத்திரப் படைப்பின் மூலம் புலனாகிறது.

    பகைவனுக்குப் பரிசாகக் கொடுத்தான் தன் மகளை எனக் கூறி தன் மகளை ஏற்றுக் கொள் எனக் கூறும் போது அவருடைய கரங்கள் பெருமையைப் பறை சாற்றும் போது, தன் அவயவங்களும் உணர்வை பிரதிபலிக்க்க் கூடிய ஜீவனுள்ளவை என்பதை ஆணித்தரமாக கூறுகிறார் நடிகர் திலகம்.

    இதற்குப் பின்னர் இன்னும் வீறு கொண்டு தொடர்கிறது நடிகர் திலகத்தின் நடிப்புச் சாம்ராஜ்ஜியம். திடீரென்று எப்படி வருவான் என்பதை இரண்டு முறை கூறும் போது இரு வேறு விதமாக உச்சரிப்பது, காற்று வாக்கில் செய்தி வந்த்து என்று சொல்லும் போது விரல்களின் வழியாக தன் குத்தலை வெளிப்படுத்துவது,
    அது மட்டுமா, பாலதேவரே, கதை முடிந்து விட்டது, இனி உங்கள் நாடகம் இந்த சோழ நாட்டில் நடக்காது என்று கூறும் போது அந்த விரல்கள் கீழே திரும்பி அந்த மண்ணைச் சுட்டிக்காட்டும் பாங்கு, இடுப்பிலிருந்து அந்த ஓலையை எடுக்கும் பாங்கு, அதை விரித்துக் காட்டும் லாவகம், ஒவ்வொரு விநாடியும் நடிகர் திலகம் என்ற நடிப்புத் தொல்காப்பியனை உலகத்தில் பறை சாற்றி தமிழனின் பெருமையை உரக்கக் கூவும்
    பார்த்தீர்களா, ... எங்கள் சோழ நாட்டில் பெண்கள் கூட ஒற்று வேலை பார்த்து குற்றவாளிகளைக் கண்டு பிடித்து விடுவார்கள் என்று கூறி கர்ஜிப்பாரே... ஆஹா.... கேட்டுக் கொண்டே இருக்கலாமய்யா...
    குறிப்பாக நடிகர் திலகத்திற்கென்றே எழுதப்பட்ட உண்மையான உரையாடலான, “ சக்கரவர்த்திகளே, என்னுடைய ராஜ தந்திரத்தை உங்களுடைய ராஜதர்மம் வென்று விட்டது“ என்ற வரிகள் இன்று மிகச்சிறப்பாக பொருந்துவது திரையரங்குகளில் பலத்த கரகோஷத்தை எழுப்பும் என்பது திண்ணம்.
    இதற்கடுத்த உரையாடல் இன்னும் சிறப்பு. விமலாதித்தன், சக்கரவர்த்தியாரே, இப்படி நீங்கள் எல்லோரையும் பெருந்தன்மையோடு மன்னித்து விடுவதால் தான் எல்லோரும் சுலபமாக நமக்கு பகையாளிகளாகி விடுகிறார்கள் என்று கூறும் போது இன்றைய காலகட்டத்தில் திரையரங்கமே கரகோஷத்தில் இரண்டாகிவிடும்.
    இதற்கு அந்த மன்ன்ன் பதிலிருக்கிறதே... ஆஹா.. என்ன தீர்க்கதரிசனமான வார்த்தைகள்.. “ வெகு சுலபத்தில் பகைவர்களாக ஆகிவிடுபவர்கள் வெகு சீக்கிரம் அழிந்து விடுவார்கள்“... இந்த வரிகளின் போது நடிகர் திலகத்தின் ஸ்டைல்...
    தலைவா.. உன்னை இன்னும் எத்தனை ஜென்ம்மெடுத்தாலும் யாராலும் நெருங்க்க் கூட முடியாது என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கிறது.
    ராஜ ராஜ சோழன் கலப்பு மணத்தையும் ஆதரித்தான் என்று உங்கள் நாடகத்தில் ஒரு வரி எழுதி விடுங்கள் என்று நாடகாசிரியையிடம் மன்ன்ன் சொல்லும் போது மீசையை முறுக்கும் ஆளுமை...
    இவ்வளவு நேரம் ராஜராஜ சோழன் என்ற மன்ன்னைப் பார்த்த கண்கள் இதைத் தொடர்ந்து பார்ப்பது அந்த மன்ன்னுக்குள் இருந்த ஓர் தந்தையை. அவரா இவர் என்கின்ற அளவிற்கு ஒரு தந்தையை நம் கண்முன்னே நிறுத்தியிருப்பார் நடிகர் திலகம். மகளிடம் உணர்ச்சி வசப்பட்டு வசனங்கள் பேசாமல், சோகத்தோடு பார்த்து விட்டு எச்சிலை முழுங்கும் போது பாசத்தை வெளிப்படுத்தும் பாங்கு..
    It proves Sivaji Ganesan is the Definition of Style.



    பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத பரவசமூட்டும் காட்சி... தரவேற்றியவருக்கும் யூட்யூப் இணையதளத்திற்கும் உளமார்ந்த நன்றி.
    Last edited by RAGHAVENDRA; 2nd January 2015 at 09:14 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #3478
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இளையதிலகம் பிரபு பிறந்தநாளை முன்னிட்டு 28.12.2014 அன்று மதுரையில் சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை & சரவணா ஆஸ்பத்திரி இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
    காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் முக்கிய அம்சமாக நோயாளிகளுக்கு இலவசமாக மாத்திரைகள், டானிக்குகள், இருமல் மருந்துகள், சத்து டானிக்குகள் வழங்கப்பட்டது. 401 நோயாளிகள் வந்திருந்து தங்களது நோய்களுக்கு மருந்து, மாத்திரைகள் வாங்கி சென்றனர்.இதில் விசேசம் என்னவென்றால் ஏற்கனவே பல இடங்களில் மருத்துவ முகாம் நடத்திய பொழுது அதிகபட்சமாக 350 நோயாளிகள் தான் வந்துள்ளனர். அனால் நமது தலைவர் பெயரில் நடத்திய முகாமில் 401 பேர் வந்திருந்து எதிலும் நமது தலைவருக்கு தான் முதலிடம் என்பதை நிருபித்து உள்ளோம். வந்திருந்தவர்கள் அனைவரும் நமது தலைவர் சிவாஜி அவர்களை நினைவுகூர்ந்து மனதார வாழ்த்திவிட்டு சென்றனர்.


    எந்தவித அரசியல் பலமும் இல்லை அவர் பெயரை சொல்லி சம்பாதிக்கவும் இல்லை, அனால் அவர் மறைந்து 15 வருடம் ஆகியும் அவர் பெயரில் பல நல்லகாரியங்களை செய்துவரும் தலைவரின் அன்பு இதயங்களை என்று வந்தவர்கள் அதிசயத்து போனார்கள்.



    எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காத ஒருவன் இருக்கின்றான் என்றால் அவன் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் சிவாஜி ரசிகனாகத்தான் இருப்பான் என்று பேசினார்.
    எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காத ஒருவன் இருக்கின்றான் என்றால் அவன் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் சிவாஜி ரசிகனாகத்தான் இருப்பான் என்று பேசினார்.

    நிஜமான வார்த்தை



    நடிகர் திலகத்தின் பெயரில்
    மனிதநேயமிக்க பொது சேவை செய்ததுடன்

    அது பற்றிய தகவல்களையும் புகைப்படங்களையும்
    பதிவிட்டமைக்கு நன்றி சுந்தரராஜன் சார்

    புகைப்படங்களில் கவனித்த விடயம்

    வெளியேமட்டும் சிவாஜி பேனர்கள்


    சிவாஜி சீடி சிவாஜி சார்பு புத்தகங்கள்
    கொடிகள் என்று எதுவும் விற்பனைக்கு இல்லை

    உங்கள் பெருந்தன்மை புரிகிறது

    அண்ணனிடம் உள்ள பொன்மனம்
    அவர் ரசிகர்களிடமும் இருப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை

  11. Likes kalnayak liked this post
  12. #3479
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Scene Stealer Sivaaji Ganesan ரசிக நெஞ்சங்களை திருடும் உள்ளங்கவர் நடிப்புக் கள்வன் நடிகர்திலகமே

    புதிய நெடுந்தொடர் பகுதி 1


    எந்தவொரு காட்சியமைப்பிலும் மனதை திருடி இதயங்களில் நிறைபவர் நடிகர்திலகமே என்பது நியூட்டனின் புவி ஈர்ப்பு விசைக்கும் ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாட்டுக்கும் ஒப்பான நிரூபிக்கப்பட்ட திரைப்புதிராகும்.

    தான் சக நடிகர்களுடன் பங்கேற்கும் காட்சி சிறப்புற அவர்களுக்கு முழு சுதந்திரமளித்து ஆக்கபூர்வமாக ஊக்குவித்து இறுதியில் தனது நுட்பமான மின்னலடிக்கும் பாவங்களாலும் உடல்மொழியாலும் எளிதாக அவர்களை வென்று மக்கள் மனதில் அக்காட்சியும் நடிப்பும் பசுமரத்தாணி போல பதிந்து நிலைபெற வேண்டும் என்பதே என்றும் அவர் உள்ளக்கிடக்கை. பாசமலரில் ஜெமினியுடன், திருவிளையாடலில் தருமி நாகேஷுடன், பாவமன்னிப்பு, பாலும் பழமும்,பலே பாண்டியாவில் ராதாவுடன்....உத்தமபுத்திரன், தெய்வமகனில் தன்னுடனேயே.....எண்ணற்ற காலத்தை வென்று நின்று இன்றும் என்றும் நிலைத்திட்ட கல்வெட்டுக் காட்சிகளை அசைபோடுவதே அலாதி சுகம்தானே!

    மொத்தம் 50 இதயத் திருட்டு / கல்வெட்டுக் காட்சிகள் வடிவமைத்துள்ளேன். சகபதிவர்கள்/ பார்வையாளர்கள் கருத்தினைப் பொறுத்து குறைப்பது சாத்தியமே!
    Last edited by sivajisenthil; 3rd January 2015 at 11:17 AM.

  13. Likes kalnayak liked this post
  14. #3480
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Scene Stealer Sivaaji Ganesan

    ரசிக நெஞ்சங்களை திருடும் உள்ளங்கவர் நடிப்புக் கள்வன் நடிகர்திலகமே

    புதிய நெடுந்தொடர் பகுதி 1 பாசமலர்
    எந்தவொரு காட்சியமைப்பிலும் மனதை திருடி இதயங்களில் நிறைபவர் நடிகர்திலகமே என்பது நியூட்டனின் புவி ஈர்ப்பு விசைக்கும் (g = 9.81 m/sq.sec) ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாட்டுக்கும் (E = m*(C^2)) ஒப்பான நிரூபிக்கப்பட்ட திரைப்புதிராகும்.
    தான் சக நடிகர்களுடன் பங்கேற்கும் காட்சி சிறப்புற அவர்களுக்கு முழு சுதந்திரமளித்து ஆக்கபூர்வமாக ஊக்குவித்து இறுதியில் தனது நுட்பமான மின்னலடிக்கும் பாவங்களாலும் உடல்மொழியாலும் எளிதாக அவர்களை வென்று மக்கள் மனதில் அக்காட்சியும் நடிப்பும் பசுமரத்தாணி போல பதிந்து நிலைபெற வேண்டும் என்பதே என்றும் அவர் உள்ளக்கிடக்கை. ....எண்ணற்ற காலத்தை வென்று நின்று இன்றும் என்றும் நிலைத்திட்ட கல்வெட்டுக் காட்சிகளை அசைபோடுவதே அலாதி சுகம்தானே!
    காட்சியைக் கொள்ளையடிப்பது என்பது உடன் நடிக்கும் கலைஞரும் தன்வழியில் திறமை வாய்ந்தவர் எனும்போது சிறிது கடினமான வேலையே !


    இதய திருட்டு 1 கல்வெட்டு 1
    பாசமலர் : ஈடுகொடுக்கும் காதல்மன்னரை வெல்லும் நடிகர்திலகத்தின் நடிப்பு மின்னலால் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக் காட்சி !
    பாசமலரில் ஜெமினியுடன் வார்த்தைகளால் மோதும் காட்சிகளில் ஜெமினியின் தனிப்பட்ட நடிப்புத்திறமையை அனைவரும் ரசிக்கவிட்டு பொறுமையாக தன்னுள் பொங்கும் கோபத்தை பென்சில் சீவுவதில் வடிகாலாக்கி இறுதியில் அமைதியாக அவரை வென்று!(...now...you get out!!) அக்காட்சியை தனதாக்கிக் கொண்ட காட்சிக் கள்வரை நாம் இதயச் சிறையில் பிடித்து வைப்போமே !



    இதய திருட்டு 1 கல்வெட்டு 2
    என்னதான் பாசத்தை ஊட்டி வளர்த்த தங்கையாயினும் ஒருநாள் திருமண பந்தத்தால் தன்னை விட்டுப் போய்த்தானே ஆகவேண்டும் என்னும் உண்மை நெஞ்சில்
    உறைக்கும்போது கண்கள் பொங்கி வெளியேற்றும் கண்ணீர் வெள்ளத்தை கைத்துப்பாக்கியால் அணைகட்டி தடுத்திட இயலுமா ? மனதை திருடி இதயங்களுக்கே விலங்கிடும் விந்தையான (நடிக) வேந்தனே! நடிப்பிலக்கணமே! உன் அருமை ஆஸ்கார் சிந்தனையில் ஏறிடுமா......அவர்கள் உள்ளமும் உன்னால் திருடப்பட முடியுமென்றால்!!!?



    இதய திருட்டு 1 கல்வெட்டு 3
    ஜெமினியுடன் அடிதடியில் சாவித்திரி ஜெமினி பக்கம் சாயும்போதும் இறுதியில் கீழே விழுந்து மௌனமாக தனது அதிர்ச்சியை முகபாவங்களில் வெளிக் கொணரும்போதும் தளர்ந்த நடையில் தனது மனதில் பட்ட காயத்தின் வலியை நமது மனங்களில் இறக்கும்போதும் இதயத்தை திருடிவிட்டாரே !



    The end of Part 1 of Scene Stealer Sivaaji Ganesan!!

    But....NT continues to steal our hearts in his Life Time Pinnacle of Acting Achievement in Dheiva Magan!! This time NT Vs himself Vs himself!!!
    Last edited by sivajisenthil; 6th January 2015 at 08:15 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •