Page 237 of 400 FirstFirst ... 137187227235236237238239247287337 ... LastLast
Results 2,361 to 2,370 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2361
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    புதுமை இயக்குனர் ஸ்ரீதர்.



    இன்று அவரின் 6 வது நினைவு நாள்.



    சிவாஜியுடன், எதிர்பாராதது,அமரதீபம்,உத்தமபுத்திரன்,புனர்ஜென்மம், சித்தூர் ராணி பத்மினி,கலாட்டா கல்யாணம் படங்களில் எழுத்தாளராகவும், விடிவெள்ளி,ஊட்டி வரை உறவு,நெஞ்சிருக்கும் வரை,சிவந்தமண் ,வைரநெஞ்சம்,மோகன புன்னகை முதலிய படங்களில் இயக்குனராகவும் ,கடைசி வரை உயரிய நண்பராகவும் தொடர்ந்தவர்.



    மறைவதற்கு சில நாட்கள் முன்பு,தன்னை சந்தித்த அமீர் என்ற இயக்குனரிடம்,தனக்கு மிக பிடித்த நடிகராக நடிகர்திலகத்தை குறித்துள்ளார்.



    புதுமை இயக்குனர் , தமிழ் கதைகளுக்கு புதிய தளத்தை வடிவமைத்து,இயக்குனர் என்ற பதத்திற்கே புது அர்த்தம் தந்தவர்.காமிரா வழியாக கதை சொன்னவர்.



    சிவாஜிக்கு இவர் கொடுத்த அமர தீபம்,உத்தமபுத்திரன்,ஊட்டி வரை உறவு,சிவந்த மண் போன்ற காவியங்கள் என்றென்றும் நெஞ்சில் நிலைத்திருக்கும்.



    இவருடைய மூன்று மிக சிறந்த படங்கள் காதலிக்க நேரமில்லை,சுமைதாங்கி,நெஞ்சில் ஊர் ஆலயம். 70 களில் மிக மோசமான படங்களால் தன் தரத்தை தாழ்த்தி கொண்டாலும் ,இளைய தலைமுறையினரிடம் இணைந்து இவரளித்த இளமை ,ஊஞ்சலாடுகிறது.அழகே உன்னை ஆராதிக்கிறேன் ஆகியவை முத்திரை.



    எது எப்படி இருப்பினும் இவருக்கு அமைந்த அளவு பாடல்கள், எந்த இயக்குனருக்கும் அமைந்ததில்லை என்பது சத்தியம்.



    சிவாஜியை ,இவர் ஒரு பீம்சிங்,பந்துலு,ஏ.பீ.என்,ஏ.சி.டி,மாதவன் ,பாரதிராஜா அளவு பயன் படுத்தி, காவியங்களை அளிக்காதது எனக்கு வருத்தமே. ஆனாலும் பாலசந்தர் அளவு ஏமாற்றமில்லை.
    Great Analysis !!!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2362
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    [quote]இன்று ஸ்ரீதர் நினைவு தினம். அவரை நினைவு கோரும் விதமாக,அவரால் உளவியல் ரீதியில் படைப்பு பெற்று ,மிக சுருக்கமான,கூர்மையான ,ஈர்ப்பான ,இயல்பான வசனங்களால், சிவாஜியின் மேதைமை மேலும் மெருகேற்றி, அமரத்துவம் பெற்று ,அனைத்து தரப்பினராலும் ,இன்றளவும் பாராட்ட பெற்று, எல்லோர் நெஞ்சிலும் நிலைக்கும்

    உத்தம புத்திரன்.[/SIZE]


    உத்தம புத்திரன்-1958

    எதிர்மறையான கதாபாத்திரங்கள், திரையுலகம் தோன்றிய போதே கூடவே தோன்றி விட்டது. எக்க சக்க வில்லன் பாத்திரங்கள். (ஒரு ஹீரோவிற்கே நான்கைந்து உண்டு). ஆனால் எவ்வளவு பாத்திரங்கள் மனதில் நிலைத்து வென்றுள்ளன? பிறக்கும் போதே (திரையுலகில்) கதாநாயகனாகவே பிறந்த ஒரு நாயகன், எதிர்மறை (கெட்டவன் ) கதாபாத்திரத்தை ஏற்று இன்றளவும் அதை ஒரு cult status என்று சொல்லும் அளவில் வைத்திருப்பது (நடிகர்திலகம், கமல்,ரஜினி உள்ளிட்டு இந்த பாத்திரத்தை சிலாகிக்காத திரையுலக பிரபலங்களே இல்லை), அந்த மேதையின் நடிப்பு திறன் என்று ஒரே வார்த்தையில் அடக்க, கங்கையை கமண்டலத்தில் அடைத்த அகத்தியனே உயிரோடு வந்தாலும் முடியாது. அந்த மகா பாத்திரத்தின் இமாலய வெற்றிக்கு ஒரே காரணம் அது உளவியல் பூர்வமாக படைப்பு பெற்று (நன்றி ஸ்ரீதர்), chekhov பாணியில் உளவியல் பூர்வமாக நடிகர்திலகத்தால் அணுக பட்டு, ஒவ்வொரு அணுவிலும் அதனை உள்வாங்கி அந்த மேதை புரிந்த விந்தையே அந்த விக்ரமன் என்னும் பாத்திரம்.(உத்தம புத்திரன்.)

    முதலில் விக்ரமனை மிக மிக நுண்ணியமாக ஆராய்வோம். அவன் எப்படி பட்டவன்?சிறு வயதிலேயே தந்தையை இழந்து, பாதுகாப்பு என்ற போர்வையில் அன்னையின் நிழலில் இருந்தே அகற்ற பட்டவன்.சிறு வயதில் இருந்தே சுய சிந்தை மழுங்கடிக்க பட்டு,ராஜ வாழ்வு என்ற நிழலில் மது,மாது என்பதை அடிப்படை ஆக்கியே வளர்க்க பட்டவன்.அவனுக்கு ராஜ வாழ்வு என்ற ஒரே குறிக்கோள் மற்றவர் பற்றிய சிந்தனையின்றி அவனுடைய சுயநலம் சார்ந்த ego ஊட்டி, மாமா என்ற ஒரே நண்பன்,ஒரே வழிகாட்டி, ஒரே ஆசிரியர்,ஒரே சேவகன் என்ற முறையில் சுயநல கயவன் மாமாவின் தீ வழிதான் ஒரே வழி. தான், தன் ஆசை, தன் வாழ்வு ,தன் அகந்தை என்ற ஒரே வட்டம். ஆனால் மன்னனுக்குரிய சில பண்புகள் (சவால் ஏற்கும் வீரம், போர் பயிற்சி) பெற்றவன். ஆனால் பிற மாண்புகள் எதுவுமே இல்லாத மூர்க்கன். தன்னை தானே ஆசை படும் narcist . மற்றோரை துன்புறுத்தி மகிழும் vicarious sadist .

    இதை உள்வாங்கிய நடிகர்திலகத்தின் நடிப்பை நன்றாக விவரமாக chekhov பள்ளியின் துணை கொண்டு ஆராய்வோம்.

    முதல் முழு தேவை not to imitate but to interpret . சும்மா பொத்தாம் பொதுவான வில்லன் தன்மையில் நடிக்காமல்,கதாபாத்திரத்தின் பின்னணி,தேவை, மனநிலை,வெளியீட்டு தன்மை, சமய சந்தர்ப்பந்திற்கு தகுந்த உள் -வெளி ,அக-புற வெளியீடுகள் என்று நுண்ணியமாக ஆராய்ந்து,தன் வய படுத்தி, தன் திறமையால் perfect execution என்று சொல்லத்தக்க சாதனையை நிகழ்த்தினார் அந்த ஒப்புயர்வில்லா ஒரே மேதை.

    இனி இந்த பாத்திரத்திற்கு ஏற்ற உடல் மொழியை நடிகர்திலகம் தேர்ந்தெடுத்திருக்கும் அதிசயத்தை பார்ப்போம். அதிக மனோதத்துவ கவனிப்பு,அவதானம் கொண்ட,கற்பனை வளம் மிகுந்த , அந்த பாத்திரத்தின் தேவை என்ன,ஆசை என்ன, முதல் நோக்கம் என்ன,அதற்கு தேவையான sensitivity ,atmosphere ,quality ,sensation எல்லாம் கொண்டு,strong but not tense , hand and arm movement radiated into the entire body movement with definite &Archetypal என்னும் அம்சங்களை விவரிக்க போகிறேன்.

    நடை- விக்ரமன் ஒரு வளர்ச்சி பெற்ற அடம் பிடிக்கும் பிடிவாத குழந்தை(impulsive ).இன்றே,இப்போவே ரகம். அந்த நடையில் ஒரு ராஜாவின் திமிர் மட்டுமல்ல, உதைத்து உதைத்து நடப்பதில், ஒரு அடம்,எதிரில் வருவதை உதைத்து தள்ளும் பிடிவாதம்,நடையில் ஒரு definite அழுத்தம் வேறு கொடுப்பார்.மிக மிக வேகமான ஒரு குழந்தையின் energy level கொடுப்பார்.

    கை அசைவுகள்- மிக மிக restless ஆன ஒரு jerky வேகம். நடையோடு ஒத்திசைவு கொண்டு தன் நோக்கம்,ஆசை இவைகளை வெளிப்படுத்திய வண்ணமே இருக்கும்.ஆசை ,காமம் இவற்றில் அடைய வேண்டியவற்றில் ஒரு பரபரப்பு, இரையை அடையும் ஒரு புலியின் பசி கொண்ட ஒரு வேகம், தனக்கு பிடிக்காதவற்றை உடனே நிறுத்த விரும்பும் braking sudden stop movement , கால்கள் மிதிக்க கைகள் முன்னுக்கு சுழன்று வரும் ஒரு impulsive அவசரம், எதுவுமே பொருட்டில்லை விடு என்ற விரல்களின் அலட்சிய உதாசீனம்,டென்ஷன் மிகுந்த தருணங்களில் இலக்கில்லாமல் சுழலும் வேகம் ,முடிவெடுக்க முடியாத போது தவிக்கும் உதவி தேடும் விழைவு என்று கை அசைவுகளில் இந்த பாத்திரத்திற்கே ஒரு புது பரிமாணம் கிடைக்க செய்வார்.

    கண்கள்
    - விக்ரமனின் இலக்கில்லாமல் அலை பாயும் கண்கள், காம வேட்கை,அகந்தை, அலட்சியம்,யாருக்காவது கெடுதல் நினைக்கும் போது ஒரு sadism நிறைந்த spark ,ஆபத்து வரும் போது நிலையாத தவிப்பு, முடிவெடுக்க நேரும் தருணங்களில் ஒரு குழப்பம் ,கிடைத்தது நிறைவேறும் போது ஒரு குழந்தைத்தனமான சந்தோஷ மின்னல், கிடைக்காத போது temper tantrum பாய்ச்சும் கண்கள்.

    உடல் மொழி
    - ஒரு stiff ஆன உடல் மொழி ,இவன் வளையவே விரும்பாத மூர்க்கன் என்பது போல். ஒரு வட்டமிடும் கழுகு போல,இரை கிடைத்தால் பாய தயார் என்பது போன்ற முன்னோக்கியே அலையும் வேகம்,நிதானமில்லா ஒரு அலைச்சல்,ஒரு குழந்தையின் வன்மம் நிறைந்த energy மிகுந்த திரும்பல், attention seeking but rest less உடல் மொழி.

    குரல்
    - நடிகர்திலகத்தின் குரல் வளம், அது புரியும் மாயம் ,tonal difference , modulation ஊரறிந்த உலகறிந்த ஒன்று. ஆனால் இந்த படத்தில், ஸ்ரீதரின் மிக குறைந்த sharp வசனங்களை அவர் கையாண்டது ,அதற்கு பிறகு அவரே செய்யாதது. ஒரு mid -pitch tonal modulation கொண்டு, எள்ளல், அகந்தை, குழப்பம்,impulsive braking conclusion ,ஒரு குழந்தை தனமான குதூகலம்,energy என்று உடல் மொழியுடன் இணைந்த அற்புதமான ரசவாதம்.

    இதை வைத்து, அவர் அந்த கதாபாத்திரத்தை வார்த்த அழகு ..........

    விக்ரமனுக்கு படத்தில் சமவயது நண்பனே கிடையாது. அவன் வாழ்க்கையில் அன்னை ,தந்தை என்ற figure heads மன அளவில் கூட கிடையாது. சொன்ன படி சகலமும் மாமாதான்.

    அதனால் மாமாவுடன் விக்ரமனின் interractions மிக மிக கவனிப்பை பெற வேண்டிய ஒன்று.

    தன் பெண் நண்பிகளுடன் உல்லாசமாக வலம் வரும் மகுடாபிஷேக காட்சியில் சுயவிரும்பி(narcist ) விக்ரமன் தன் அழகை பற்றி கேட்பது கூட மாமாவிடமே. பிறகு கிளி பிள்ளை போல், சுயமாக எதுவும் பேசாமல், மறந்து விட்டேன் என கூறி, stuck ஆகி மாமா சொன்னதை (மிக முக்கிய அறிவிப்பு), போகிற போக்கில் தண்ணி குடித்தேன் என்பது போல அறிவிக்கும் பாணியில், சுய அறிவை மழுங்கடித்து வளர்க்க பட்ட குழந்தை ,ஆசிரியர் கூறியதை மனனம் செய்து போகிற போக்கில் ஒப்பிக்கும் பாணி. எனக்கு மாமா தேவை என்றதும் ஆமோதிக்காத கூட்டத்தை அதட்டும் போதே, குழந்தைக்கு மாமா ஒன்றுதான் உலகம் என்று அழுத்தம் கிடைத்து விடும்.

    தன் விருப்பத்தை மாமாவிடம் சொல்லும் போது , ஒரு நண்பனிடம் பேசும் அன்னியோன்யம் , தாயின் எதிரிலேயே ஒரு பெண்ணை(மந்திரியின் பெண்) கயமை நோக்கோடு கண்ணியமில்லாமல் பார்த்து, மாமா பெண் பிடித்து விட்டது என்று தாயிடம் சொன்னதும்,ஒரு அவசர விழைவு கலந்த ஆமோதிப்பு, கண்ணியமற்ற முறையில் மாமாவிடம் தோழன் ஸ்தானத்தில் ஒரு ஆபாச கமெண்ட் என்று யூகிக்கும் அளவில் ஒரு கிசுகிசுப்பு. முடிவெடுக்க திணறும் அத்தனை தருணங்களிலும் மாமாவிடம், சாவி நின்ற பொம்மை போல ஆலோசனை கேட்கும் எடுப்பார் கை பிள்ளை தனம்.(ஏதாவது சொல்லுங்கள் ரீதியில்).அதில் தனக்கு ஆபத்து வரும் ரீதியில் வந்தால் மட்டும் முழித்து கொண்டு யோசனயை நிராகரிக்கும் குழந்தை தனம் கொண்ட சுய நலம்.

    ஆனால் denial என்றோ, கேட்டது கிடைக்காத போதோ இந்த குழந்தை மாமாவையோ நிர்தாட்ஷன்யத்துடன் குத்தி குதறி திட்டும் ஜோர்.(நீங்கள் மீண்டும் கோட்டை விடாமலிருக்க. நானென்ன முட்டாளா. ஆமாம்.) களித்து,சிரித்து, சகலமுமான மாமாவை பணயமாக வைத்து பார்த்திபன் சவால் விடும் பொது, அப்படியும் செய்து பார்க்கலாமா என்று sadism கலந்த குரூரத்துடன் , குழந்தைத்தனமான குறு குறு ப்புடன் கேட்கும் விதம்.

    ஆனால் , பிடிபடும் நேரம் வரும் போது சுயநலத்துடன் (தண்ட- உன்னை என்ன செய்கிறேன் பார், பேத- மாமாதான் எல்லாம், தான- இந்த நாட்டை தருகிறேன், சாம- என்னை மன்னித்து விடு) குழந்தை கொஞ்ச நேரம் சுயநல அரசன் பாணியில் முயலும். ஆனால் மாமாவை போட்டு கொடுத்து தான் தப்பிக்கவும் தயங்காது.

    மாமாவிடம் நிஜமான கரிசனமோ ,மரியாதையோ இன்றி, விளையாட்டு தோழனாக,விபரீத மந்திரியாக,சொன்னதை நிறைவேற்றும் சேவகனாக என்றுதான் உறவே.

    இது மாதிரி ஒரு அற்புத மனோதத்துவ ரீதியான நடிப்பு வெளியீட்டை ,நானறிந்த எந்த உலக படத்திலும் கண்டதில்லை.

    விக்ரமன் அன்னையுடன் interract பண்ணும் காட்சிகள் நான்கே நான்குதான் ஆனாலும் , திரையுலகு நிலைத்திருக்கும் வரை ,நிலைத்திருக்க கூடிய காட்சிகள்.

    விக்ரமன் ஆட்சி முறை கண்டு கொதித்து போய் தாய் நல்லுரை (advise ) கூற வரும் காட்சியில், பாதி களியாட்டத்தில்,சீ, என்ன இது இடையூறு என்ற கோபத்துடன் ,பாதியில் மிட்டாய் பறிக்க பட்ட குழந்தையை போன்று காலை உதைத்து வேண்டா வெறுப்பாக ஊஞ்சலில் cool ஆக அமர்ந்து, ஒரு வார்த்தை பேசாமல் ,செவிடன் காதில் ஊதிய சங்கு என்பது போல்,indifference காட்டும் பாராமுகம். ஆனாலும் ,அன்னை சொல்லும் படி தவறு செய்கிறோமோ என்ற அவ்வப்போது குழந்தை குறிப்புடன் ஓர கண்ணால் ஒரு 20% குற்றவுணர்வுடன் பார்ப்பது என்று இந்த காட்சியில் ஒரு வார்த்தை கூட பேசாமல் விக்ரமன்-அன்னை உறவு நிலை பூரண பட்டு விடும். chekhov உயிரோடு இருந்திருந்தால் ,இந்த மேதையின் காலில் விழுந்து வணங்கி இருப்பான்.

    இரண்டாவது காட்சி, அமுதாவை அரண் மனைக்கு அழைத்து வந்து அறிமுக படுத்தும் காட்சி.தாய் (அதுவும் மகாராணி) அருகில் இருக்கும் விஷயமே விக்ரமனுக்கு பொருட்டில்லை.(தாய் என்ற image அவன் psyche இலேயே கிடையாது). ஒரு கண்ணியமற்ற காம பார்வை ,இரையை விழுங்கும் வெறியோடு, சம்மதத்தை கூட இங்கிதமின்றி கண்ணடித்து வெளியீடு.

    கடைசியில், சிறையில் பார்த்திபனுடன் தாயை பார்த்து விட்டு, துளி கூட ஈரமின்றி மாமாவின் கைது செய்யும் திட்டத்திற்கு மருந்திற்கு கூட மறுப்பு தெரிவிக்க மாட்டார்.ஆனால் தற்கொலை செய்ய முயலும் தாயை ,ஒரு நொடி தடுக்க பார்க்கும் கணம்,விக்ரமன் மனித தன்மை துளியே துளி எட்டி பார்த்தாலும், அடுத்த நொடி அசல் விக்ரமனாகி விடும்.பார்த்திபனை விடுதலை செய்ய மறுப்பதோடு, மரண தண்டனையை மாற்ற மன்றாடும் தாயின் குரலுக்கு செவி சாய்ப்பது போல் ,அதை விட கொடூர சித்திர வதையை தண்டனையாக்கி, இதை தடுத்தால் தாயென்றும் பார்க்க மாட்டேன் என்று சொல்லும் கொடூர தனம். mercurial swings என்று சொல்ல படும் உடல்,கை-கால் இயங்கு முறையில், அலையும் மனம்- கொடூரம்-சுயநலம்-சந்தேகம்-sadism -நிச்சயமற்ற தன்மை என்று தமிழில் வந்த காட்சிகளிலேயே நடிப்பாற்றலில் உச்சம் தொட்ட ஒன்று.

    இனி , காம விழைவு கொள்ளும் அமுதாவிடம் தொடர்பு காட்சிகள்.....(மாமாவின் அரசியல் ரீதியான வற்புரூத்தலினால்தான் மணக்கவே ஒப்புதல்).

    குதிரையில் தன்னை விக்ரமன் என்று எண்ணி mixed reaction இல் பார்க்கும் அமுதாவை ஏற இறங்க பார்த்து , மற்றோரை நிறுத்த சொல்லி ஆணையிடும் முறை. தாயின் முன் அமுதாவை பார்க்கும் பண்பற்ற முறை,மாமாவிடம் vulgar comments ஏற்கெனெவே பார்த்து விட்டோம்.

    அமுதாவிடம் பார்த்திபனாக நடிக்கும் விக்ரமன்(நடிக்க முயலுவதாக காட்டியிருப்பார் மேதை), அலை பாயும் கண்களுடன், tone down பண்ணினாலும், இயல்பை முற்றும் துறக்காமல் react பண்ணுவார். இது எந்த ரெட்டை வேடம் போட்ட ஆள் மாறாட்டம் பண்ணும் நடிகனும் செய்யாத சாதனை. பின்னால் பார்த்திபனும் விக்ரமனாக நடிக்கும் போது ,சாந்த பார்வை ,மித நடையுடன் கொஞ்சமே மற்றோருக்கு சந்தேகம் எழாதிருக்க tonal difference (சற்றே குறைபாடுள்ள) மட்டும் காட்டுவார். இந்த மேதை 1958இல் சாதித்த போது ,இதை கவனித்து சொல்ல சரியான விமரிசகர்கள் கூட இங்கில்லை.

    ஆனால் பார்த்திபன் பிடிபட்டதும், பரிந்து பேசும் அமுதாவை அடங்கு என்ற ரீதியில் முறைத்து ,மாமா இவளை மன்னித்து விடுவோம் என்றதும் ,அமுதா எதிர்த்து பேசும் போது ,காமம்-கோபம்-குரோதம் கொப்பளிக்க எனக்கு தேவை என்று சொல்லும் ஒரு நிமிட பார்வை...

    ஆனாலும் ,இந்த வளர்ந்த குழந்தைக்கு தன்னிடம் அமுதா நிஜமாகவே மயங்கி விட்டாள் என்று அசட்டு தனமான self -confidence உடன் தொடரும் இடத்தில்,சாவியை சுண்டி பார்க்கும் மூன்று முறையும் ,reaction காட்டும் முறையில் படி படியாய் reflex தேய்வதை எவ்வளவு அழகாக காட்டுவார்?இந்த அழகில் சுழன்றாடும் அமுதாவிற்கு தள்ளாட்டத்துடன் சுழன்றாடி சாயும் காட்சி...

    பார்த்திபனுடன் ,தன்னை போல ஒருவன் அரண்மனைக்குள் ஊடுருவி, அமுதாவை பார்க்க வருகிறான், தன்னை ஒரு முறை அவமான படுத்தி தப்பித்தவன் , என்ற முறையில் பிடி பட்டதும் ,சுற்றி வந்து கொடூர கோபத்துடன்,பிடிபட்டு விட்டாயே என்ற நக்கலுடன் curiosity யும் காட்டுவார்.(மேதை என்றால் சும்மாவா?). என்னை போலிருப்பது என்று குற்றம் சுமத்தி ,பார்த்திபன் பதில் சொன்னதும் ,மாமா இவன் மீது வேறு ஏதாவது குற்றம் சுமத்துங்கள் என்று அப்பாவித்தனமான இயலாமையுடன் desperation தொனிக்க கேட்பது..

    சிறை காட்சியில், பார்த்திபன் சகோதரன் என்று தெரிந்ததும் ஒரு நிமிட தடுமாற்றம் ....புரியா உணர்வு...blank feelings ... என்று ஒரு கண நேர expression .....

    இப்போது சொல்லுங்கள் ,நான் ஏன் இன்னும் விக்ரமனிடம் விரும்பியே ஆயுள் சிறை பட்டிருக்கிறேன் என்று?[Quote]



    உத்தமபுத்திரன்

    இந்த திரைபடத்தில் வேறு யார் நடித்திருந்தாலும் இந்தளவிற்கு ஒரு ஈர்ப்பு உருவாகி இருக்குமா என்பது சந்தேகமே.

    இரு வேடம் என்று வரும்போது, உருவ ஒற்றுமை தவிர மற்ற எல்லாமே மாற்றி நடித்தால் ஒழிய அந்த இருவேடம் மக்களிடையே சென்றடையாது.

    உத்தம புத்திரன் படத்தில் மாறுபாடு காட்டுவது - உடல்மொழி மற்றும் அந்த புருவ அமைப்பு...! இவ்வளவுதான் !

    OAK தேவர், MN நம்பியார் போன்ற பெயர் பெற்ற வில்லன்கள் இருந்தும்..விக்ரமன் தான் சிறந்த வில்லன் என்று பெயர் தட்டி செல்லும் அளவுக்கு ஒரு தாக்கம் !

    உத்தமபுத்திரன் - அந்த குதிரை சவாரி காட்சி ஒன்று போதும்.

    STOOL மீது அமர்ந்து பரிதாபமாக தலையை தலையை ஆட்டும் நாயகர்களுக்கு(என்னமோ இவர்கள் இப்படி செய்வதால் originalaaga குதிரை ஓட்டுவது போல இருக்கிறது என்ற நினைப்பில்) மத்தியில்,

    பத்மினியை காப்பாற்றும் காட்சியாகட்டும், அல்லது CLIMAX காட்சி ...புயல் போல குதிரை சவாரி செய்யும் காட்சியாகட்டும்.....இனி ஒரு நாயகர் பிறக்கவேண்டும் இவரை போல DOOP இல்லாமல் தானே குதிரை சவாரி செய்ய !

    கோபால் சார் கூறுவது போல கூடு விட்டு கூடு பாய்வது போல...அல்லது வீடு விட்டு வீடு பாய்வது போல அவ்வளவு லாவகம் - நடிகர் திலகம் நடிப்பில். இத்தனைக்கும் உத்தமபுத்திரன் 40 படங்களுக்குள் வந்த படம்.

    ஒரு படத்தை அக்கு வேறு ஆணி வேறு என்று அலசும் பாணி கோபால் சிறை தவிர வேறு யாரும் செவ்வன செய்ய முடியவே முடியாது !

    அப்படி முயற்சி செய்து எழுதினாலும் கோபால் போல எழுத முயற்சிக்கிறார் என்ற பெயரே அனைவருக்கும் நிலைக்கும் என்பது திண்ணம்.

    அந்தளவிற்கு ஒரு படம், அதன் நாயக நாயகி மட்டுமல்லாது அனைவரது நடிப்பாற்றல்களையும், நடிப்பின் முறைகளையும் ஒரு வட்டத்துக்குள் கொண்டுவந்துவிடும் திறம்....ஒரு தேர்ந்த எழுத்தாளர் மட்டுமல்ல...ஒரு சிறந்த CRITIC ஆககூட இருந்தால் மட்டும் அல்ல...பல விஷயங்களை படித்து உணர்ந்தவரால் மட்டுமே அது சாத்தியம் !

    என்ன ...அவ்வப்போது உங்களை "உங்களை போல உண்டா" என்று ஒரு குழந்தையை கையாள்வதை போல கையாளவேண்டும். இல்லையென்றால் அனைவர் மீதும் உரிமையுடன் கோபபடுவீர்கள், கிண்டலடிப்பீர்கள், ஆதிக்கம் செலுத்துவீர்கள். அப்படிதானே கோபால் சார் ? பரவா இல்லை. சரஸ்வதி சபதம் படத்தில் விஜய கூறுவதை சற்றே மாற்றி " கற்றறிந்த புலவர். அந்த திமிர் உங்களுக்கு சற்று இருக்கதான் செய்யும் ! இதை கூட ஒரு மரியாதை நிமித்தமாக தான் பதிவிடுகிறேன்...ஒரு குற்றமாக அல்ல !

    கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பது ஒரு புறம் இருந்தாலும், ஒரு வெள்ளை வெளேர் உடையில் ஒரு துளி சேறு தெறித்தால் என்ன நிலையோ அதுபோல ஆகிவிடுகிறது !

    எனது அண்ணனிடம் பேசினேன் நேற்று...உங்களை மிகவும் விசாரித்ததாக கூறும்படி உரைத்தார் தீப ஒளி வாழ்த்துக்களை தெரிவித்தார் !

    அருமையான பதிவு சார் ! உங்கள் எழுத்துக்கு என் வணக்கங்கள் !

    RKS

  4. #2363
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தன்னை புலியாக நினைத்தவர்கள்

    COCONUT SRINIVASAN



    MKM - can this 3 letter ever in anyway equate another 3 Letters that spinned MAGIC ? NEVER !!!!

    Last edited by RavikiranSurya; 20th October 2014 at 04:42 PM.

  5. #2364
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    இளமைஇனிமைபுதுமை இயக்குனர் ஸ்ரீதர் நினைவலைகள்: A Director with a Cloud o'9 feel on NT's association!
    தேனினும் இனிய இசையுடன் கூடிய கவர்ச்சிகரமான கோணங்களில் பாடல் காட்சிகளை செதுக்கியவர்! கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் உள்ள நூலிழை இடைவெளியை நன்கு உணர்ந்து இளமைத் துள்ளல்களை ரசிக்கும் வண்ணம் தந்த தொழில்நுட்ப இயக்குனர்!! ஊட்டி வரை உறவு திரைப்படத்தில் 'தேடினேன் வந்தது.....' பாடல் காட்சி நடிகர்திலகத்தின் நடையுடைபாவனைகளை விஜயாவின் கவர்ச்சிகரமான நடன அசைவுகளை செவிக்கினிய இசையமைப்பில் என்றென்றும் ரசிக்க வைக்கும். 'பூமாலையில் ஓர் மல்லிகை' பாடல் காட்சியமைப்பும் அவ்வண்ணமே! 'சிவந்த மண்' திரைப்படத்தில் ரீங்காரமிடும் 'முத்தமிடும் நேரமிப்போ' மற்றும் 'சொல்லவோ....' பாடல்களும் பிரமாதமான காமிரா கோணங்களில் கவர்ச்சி எல்லை மீறாத ரசிப்புக்குரிய கண்களுக்கும் செவிக்கும் விருந்தான காட்சியமைப்புக்களே! 'வைர நெஞ்சம்' படத்தில் பிரமிக்கவைக்கும் புதுமையான கோணத்தில் ' நீராடும் நேரம்....' பாடல் அமைந்திருந்தது. மனமகிழ் புதுமைகளைப் புகுத்திட்ட இளமைஇனிமைபுதுமை இயக்குனருக்கு எம் போற்றுதல்கள்!










    Last edited by sivajisenthil; 20th October 2014 at 10:44 PM.

  6. Thanks Russelldwp thanked for this post
    Likes Russellmai liked this post
  7. #2365
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    23-10-2014 - இரவு 7 மணிக்கு, sunlife தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்புத் திரைப்படம் - தில்லானா மோகனாம்பாள்
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  8. Thanks Russelldwp, eehaiupehazij thanked for this post
  9. #2366
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இனி அம்புலி மாமா பழைய ஆவணங்கள் தேடி ,எங்கும் போக வேண்டாம்.ஒரு திரி அம்புலிமாமா என்று பெயர்மாற்றம் செய்ய பட போகிறது என்பதை இதன் மூலம் சகலமானவர்களுக்கும் தெரிவித்து கொள்கிறோம். உருப்படியான முதல் பதிவு ஆரம்பித்து விட்டது.

    பரோட்டா சூரி சொன்னது ,பதிவெல்லாம் அழி. இதிலிருந்தே ஆரம்பிக்கலாம். ஒண்ணு ......



    Last edited by Gopal.s; 20th October 2014 at 06:54 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #2367
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Uttamaputiran analysis superb a class movie of all times for all generations
    kudos to gopal and rks for detailed coverage.
    Greetings/

  11. #2368
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    ஆய்வுத்திலகம் கோபால் சார் தங்களின் உத்தமபுத்திரன் ஆய்வு மிகப்ரமாதம். இதை முழுவதும் படித்து விட்டு
    எனது நண்பரும் தலைவரின் தீவிர ரசிகருமான தில்லை நகர் பாஸ்கர் அவர்கள் என்னிடம் தொலைபேசியில்
    பாராட்டியதை சுருக்கமாக விவரிக்கிறேன்.

    இரு வேடங்கள் எனக்கூறி கரி பூசி வித்யாசம் காண்பிக்கும் திரையுலகில் தன் நிகரில்லா நடிப்பாலும் உயரிய
    ஸ்டைலாலும் காந்த்விழிப்பார்வையாலும் மிகப்பெரிய வித்யாசத்தை காட்டி மக்களின் மனதில் நிரந்தர முதல்வராய்
    பவனி வந்து கொண்டிருக்கும் நடிப்புச்சுரங்கத்தை விக்ரமனாய் வாழ்ந்து காட்டியதை எவ்வளவு அழகாக வருணித்துள்ளிர்கள்
    எனவும் தங்களின் இத்தகைய திறமைக்கு நடிகர் திலகத்தின் படத்திற்கு வசனம் எழுதியிருந்தீர்களேயானால் கண்டிப்பாக
    ஒரு கௌரவம் அளவுக்கு பேசப்பட்டிருக்கும் என புகழ்ந்து தள்ளிவிட்டார்.

    திறமையின் சிகரம் சிவாஜி என்றால் அவருடைய ரசிகராம் கோபால் சாரும் அவருடைய எழுத்தும் சந்தன மலர்களால்
    பொன்னேட்டில் பதிக்கப்பட வேண்டியவை என்றால் அது மிகையாகாது.

    நன்றி கோபால் சார்

  12. #2369
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by SPCHOWTHRYRAM View Post
    ஆய்வுத்திலகம் கோபால் சார் தங்களின் உத்தமபுத்திரன் ஆய்வு மிகப்ரமாதம். இதை முழுவதும் படித்து விட்டு
    எனது நண்பரும் தலைவரின் தீவிர ரசிகருமான தில்லை நகர் பாஸ்கர் அவர்கள் என்னிடம் தொலைபேசியில்
    பாராட்டியதை சுருக்கமாக விவரிக்கிறேன்.

    இரு வேடங்கள் எனக்கூறி கரி பூசி வித்யாசம் காண்பிக்கும் திரையுலகில் தன் நிகரில்லா நடிப்பாலும் உயரிய
    ஸ்டைலாலும் காந்த்விழிப்பார்வையாலும் மிகப்பெரிய வித்யாசத்தை காட்டி மக்களின் மனதில் நிரந்தர முதல்வராய்
    பவனி வந்து கொண்டிருக்கும் நடிப்புச்சுரங்கத்தை விக்ரமனாய் வாழ்ந்து காட்டியதை எவ்வளவு அழகாக வருணித்துள்ளிர்கள்
    எனவும் தங்களின் இத்தகைய திறமைக்கு நடிகர் திலகத்தின் படத்திற்கு வசனம் எழுதியிருந்தீர்களேயானால் கண்டிப்பாக
    ஒரு கௌரவம் அளவுக்கு பேசப்பட்டிருக்கும் என புகழ்ந்து தள்ளிவிட்டார்.

    திறமையின் சிகரம் சிவாஜி என்றால் அவருடைய ரசிகராம் கோபால் சாரும் அவருடைய எழுத்தும் சந்தன மலர்களால்
    பொன்னேட்டில் பதிக்கப்பட வேண்டியவை என்றால் அது மிகையாகாது.

    நன்றி கோபால் சார்
    சௌத்ரி தம்பி...நல்ல இருக்கீங்களா...........

  13. #2370
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    இங்கே என்ன நடக்குதுண்ணே புரியல்ல . எது உள்குத்து , எது நிஜம் , எது வஞ்சப்புகழ்ச்சி -ன்னு புரியணும்ன்னா இங்கே நடக்கும் திரை மறைவு அரசியலில் ஆர்வமும் அதன் பின்னணியும் தெரிந்திருக்கவும் வேண்டும் . அதற்கு நேரமும் ஆர்வமும் இல்லாதவர்கள் இங்கே வந்தால் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் திரும்பி நடப்பதை தவிர வேறு வழியில்லை .

    தேனொழுகும் வார்த்தைகள் , அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அசாத்தியமான வன்மங்கள் ..என்ன அருமையான நடிப்பு .

    என்னவோ போடா மாதவா !

  14. Likes KCSHEKAR, eehaiupehazij liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •