Page 353 of 400 FirstFirst ... 253303343351352353354355363 ... LastLast
Results 3,521 to 3,530 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #3521
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan - Definition of Style 15



    திரைப்படத்தில் ஒரு பாட்டிற்கு அடிப்படை ஓசை நயம்... தாள லயம்... இவை இரண்டையும் வாய்ப்பாட்டில், வார்த்தைகளில், இசைக்கருவிகளில் கொண்டு வந்து கேட்போரை சொக்க வைப்பது ஒரு இசையமைப்பாளருக்கு இறைவன் அளித்த வரப்ரசாதம்.. இது அமையப்பெற்ற ஏராளமான இசையமைப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர் திரு எஸ்.வி.வெங்கட்ராமன் அவர்கள். அவருடைய பாடல்கள் நம்மையும் அறியாமல் நம்மை மயங்க வைக்க வல்லவை. நடிகர் திலகத்தின் படங்களிலும் அவர் இசையமைத்த பாடல்கள் மிகவும் பிரபலமாகியுள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை, கண்கள், மனோகரா, மருதநாட்டு வீரன், இரும்புத்திரை போன்றவை.

    இதில் மருத நாட்டு வீரன் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டும். பாவ மன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும் படங்களின் சுனாமியில் அமுங்கி விட்டது எனவே நாம் கூறலாம். தனியாக வேறோர் சந்தர்ப்பத்தில் வந்திருந்தால் மிகப் பெரிய வெற்றியை இப்படம் அடைந்திருக்கும். முழுதும் நடிகர் திலகத்தின் கொடி பறந்த பல படங்களில் இதுவும் ஒன்று.

    ராஜா ராணி காலத்திய கதை என்றால் திரைப்படங்களில் பொதுவாக நாயகர்களின் அழகு மற்றும் வீர தீர சாகசங்கள் பற்றியே அதிகம் அலசப்படும் காலத்தில், 60களிலேயே இந்த வட்டத்தைத் தாண்டி அவர்களும் சாதாரண மனிதர்களைப் போல் ஆசா பாசங்களுட்பட்டவர்கள் தான் எனக் கூறி அவர்களுடைய நடைமுறை வாழ்க்கையை தத்ரூபமாக சித்தரித்த கதைகளில் நடித்தவர் நடிகர் திலகம் முதன்மையானவர். அவருக்கு அடுத்த வரிசையில் இருப்பவர்களை வெகுதொலைவில் எங்கோ தேட வேண்டும். இந்தக் கோணத்தில் முன்னரே நாம் ராஜ ராஜ சோழன் திரைப்படத்தைப் பற்றிய ஆய்வில் பார்த்தோம்.

    இப்படிப்பட்ட இயல்பான ராஜா ராணி கதையம்சம் கொண்ட படங்களில் நடிகர் திலகம் நடித்தவற்றில் மருதநாட்டு வீரன் குறிப்பிடத்தக்க படமாகும். ஒரு சிப்பாயின் கதை. இதில் வீரனாக நடித்திருப்பார் நடிகர் திலகம்.

    இதில் இந்த வீரனின் காதலைப்பற்றிச் சொல்லும் போது சிறிதும் மிகையின்றி யதார்த்தமான ஒரு வீரனை அறிமுகப்படுத்தியிருப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் காதலனும் காதலியுமே காதலின் ஒரு விளையாட்டாக வாட்போர் புரிவதாக ஒரு பாடல் காட்சியில் இடம் பெற்றிருக்கும். இதுவே இயக்குநரின் திறமைக்கு மிகச்சிறந்த சான்றாகும்.

    அந்த மருத நாட்டு வீரனுக்குள் ஒளிந்திருக்கும் அந்த யதார்த்தமான மனித உணர்வை தத்ரூபமாகக் கொண்டு வரும் காட்சி தான் இப்போது நாம் காண இருக்கும் பாடல் காட்சி.

    துவக்கமே சிறப்பாக இருக்கிறது.

    அந்தப் புல்லாங்குழலின் பின்னணி இரவை உணர்த்த, காமிரா நடிகர் திலகத்தின் ஊடே அந்த நிலவைக் காட்டியவாறு திரும்புகிறது. கைகளைக் கட்டிக் கொண்டு நிலவின் குளுமையைப் புன்முறுவலோடு ரசித்துக் கொண்டிருக்கிறார் தலைவர்.

    சஞ்சரிக்கும் மேகங்கள் இப்போது நிலவை சூழந்து கொண்டவாறே நகர்கின்றன. ஓர் இருள் மெல்ல பரவுகிறது. அதன் நிழல் நாயகனின் முகத்தில் படர்கின்றன.

    மேகங்கள் நிலவைக் கடந்து செல்கின்றன. இப்போது நிலவொளி முழுதம் வெளிப்பட்டு எங்கும் ஒளிமயமாகின்றது.
    இதை கதையில் எழுதி விடலாம், வசனமாகவும் கூறி விடலாம். ஆனால் காட்சிப்படுத்தும் போது மற்ற நடிகர்கள் நடித்திருந்தால் இயக்குநர் எப்படிக் காட்சியமைத்திருப்பார்... அந்தப் பகுதியில் காமிரா அப்படியே ஒரு சுற்று சுற்றி வந்து நிலவொளி எங்கெங்கெல்லாம் படுமோ என யூகித்து அந்த அடிப்படையில் ஒளி யுமிழப்பட்டு அவ்விடமெங்கும் பிரகாசமாக்க் காட்டப்படும்.
    ஆனால் இப்பாடல் காட்சியிலோ நடிப்பது நடிகர் திலகமாயிற்றே. இயக்குநருக்கு தோன்றிய யோசனை பிரமிக்க வைக்கிறது. ஆசைப்பட்டார், அந்த நிலவொளி பிரகாசமாவதும், அது மேகத்தைக் கடக்கும் போது இருளாவதும் கடந்த பின் மீண்டும் பிரகாசமாவதும், நடிகர் திலகத்தின் முகத்திலேயே பிரதிபலிக்க விரும்பியுள்ளார் போலும். இந்த யுத்தியை மிகப் பிரமாதமாக்க் கையாண்டதன் பலன். ஈடு இணையற்ற ஒப்பற்ற நடிகரின் ஒப்பற்ற பரிமாணம் வெளிப்பட்டுள்ளது.
    இந்தக் காட்சியில் இந்த சூழ்நிலை அப்படியே நடிகர் திலகத்தின் முகத்தில் பிரதிபலிப்பது பார்ப்போரை பரவசப்படுத்தும், வியப்பூட்டும். முதலில் முகத்தை பிரகாசமாக வைத்துக் கொள்வதும், இருள் சூழும் போது முகத்தில் வாட்டத்தைப் பிரதிபலிப்பதும், மீண்டும் மேகங்கள் கடந்து நிலவொளி தவழும் போது முகத்தில் அந்த மந்தகாசப் புன்னகை படர்வதும்...
    இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இவரை விட்டால் நடிகரில்லை எனக் கட்டியமன்றோ கூறுகின்றது.
    அது மட்டுமா.. பாடகர் திலகமும் தன் பங்குக்கு தன் ஈடு இணையற்ற திறமையைத் தன் குரல் வழி நிரூபிக்கிறார். நிலவு மேகத்தை சூழும் போது குரல் லேசாகத் துவங்கி ஒரு வித மந்தமான உணர்வை வெளிப்படுத்தி மேகங்கள் விலக விலக அந்த ஹம்மிங்கில் அதனை அப்படியே உணர்த்தியிருப்பது ... இவர்களல்லவோ கலைத்தாயின் தலைமக்கள் எனத் தோன்றுகிறது.

    இப்போது பல்லவி தொடங்குகிறது..
    பருவம் பார்த்து அருகில் வந்து வெட்கமா...
    அடுத்த வரியில் பாருங்கள்...
    பழக வந்த அழகன் மீது கொண்ட கோபமா ....
    இப்போது மிகவும் ஒய்யாரமாக நடந்து வந்து கைகளை தன் கால்களின் பக்க வாட்டில் வைத்துக் கொண்டு நிற்கும் ஸ்டைல்... நின்றவாறே ஒரு மந்தகாசப் புன்னகை... ஆஹா.... பார்த்துக் கொண்டே இருக்கலாம்...

    வருவார் வருவார் என்று வாசலில் நின்றாயோ ... இந்த வரிகளின் போது நளினமாக வந்து நிற்கும் ஜமுனா... பெண்மையின் பிரதிபிம்பமாய் அந்த நளினத்தை வெளிப்படுத்தும் போது.. சரியான தேர்வு என்பது நிரூபணமாகிறது..

    அடுத்த வரி...
    வாடை என்னும் காற்று வந்து வதைத்திடக் கண்டாயோ சென்றாயோ...
    இந்த வரியின் போது கைகளை மெல்ல மெல்ல மேல் நீட்டி முன்பக்கம் கொண்டு வரும் அழகு...

    அடுத்த சரணத்தின் முதல் வரி ஞாயிறு பெற்றவள் நீ தானோ...
    இந்த வரியின் போது இடுப்பில் கை வைத்தவாறே மண்டபத்தை நோக்கி நடந்து வரும் அழகு.. நீதானோ என்று அந்த வரியை முடிக்கும் போது.. அந்த தானோ.. என்ற இடத்தில் இடுப்பை சற்றே இரு பக்கமும் மிக மிக நளினமாக அசைக்கும் அழகு... மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஸ்டைல்...
    திங்கள் என்பதுன் பேர்தானோ எனக் கூறி விட்டு நகரும் போது... அந்த அலட்சியமான நடை...
    இனி வருவது இன்னும் சூப்பர்...
    நலம் பாடும் செவ்வாயில் தமிழ் பாடும் நகை கொண்டு இந்த வரியின் துவக்கத்தில் திரையின் இடது ஓரத்தில் புன்னகைத்தவாறே நுழையும் வசீகரம்...
    பின்னர் நடமாடும் தனி வைரச்சிலையோ என்றவாறே திரையில் முன்புறம் நோக்கி நகரும்.. ஸ்டைல்..
    மேகம் வலைவீசி மணம் கொண்ட சுனையோ...இந்த வரிகளின் போது இன்னொரு ஒய்யாரமான நடை..
    இப்போது அந்த சுனையின் மதில் மேல் அமர்ந்து புன்னகைத்தவாறே பல்லவியைப் பாடும் பாங்கு..
    அடுத்த சரணத்தில் வரும் கண்களிலே மின்னல் பளீர் பளீரென என்ற வரிகளின் போது தன் கண்களிலே பளிச்சென்ற புன்னகையின் மூலம் அந்த மின்னலின் தாக்கத்தை பிரதிபலிக்கும் நேர்த்தி..

    அந்த ஸ்டைலான போஸில் அமர்ந்தவாறே பல்லவியை மீண்டும் பாடி அந்தப் பாடலை முடிக்கும் போது..

    உங்களையும் அறியாமல் உங்கள் கைகள் யூட்யூபில் Replay பட்டனைச் சொடுக்கும் என்பது உறுதியாகி விடும்...

    ஒவ்வொரு ஃப்ரேமிலும் நடிகர் திலகத்தை ரசிக்க வேண்டிய பாடல் பருவம் பார்த்து அருகில் வந்து வெட்கமா.

    Last edited by RAGHAVENDRA; 9th January 2015 at 11:15 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3522
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு.சிவாஜி கணேசன் படங்களின் தலைப்புகள் வைத்து வெள்ளை கார துரை படத்தில் விக்ரம் பிரபு பாடி நடித்த பாடல் இதில் மக்கள் திலகத்தின் கூண்டு கிளி பட தலைப்பும் பாடலின் இறுதி வரிகளில் வருகிறது


  5. Likes RAGHAVENDRA liked this post
  6. #3523
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Murali Sir's Excellent analysis on the turning point in NT's career - the year 1967 - Don't miss it in the Filmography thread :

    http://www.mayyam.com/talk/showthrea...=1#post1198092

    My supportive post:

    http://www.mayyam.com/talk/showthrea...=1#post1198115
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Likes KCSHEKAR liked this post
  8. #3524
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    பாசமும் பந்தமுமே கசக்குமையா பிசாசு Part 2 பந்தபாசம்
    (ஜெமினி திரியிலிருந்து ஓர் இணைப்பதிவு )


    சந்தேகப் பிசாசு
    மிஷ்கினின் பிசாசு மட்டுமே காதல் பாச உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நல்ல ஒரு நியாயப் பிசாசு. ஆனால் சந்தேகம் என்பது ஒரு மோசமான கொள்ளி வாய் மாயப்பிசாசு!!


    திரையில் தோன்றிய அனைவருமே உச்ச நட்சத்திரங்களாக மின்ன இயலாது புகழின் போதைக்கு ஆளாகும் போது போட்டி பொறாமைகள் சகஜமே ஆனாலும் நடிகர்திலகமும் காதல் மன்னரும் இந்த விஷயத்தில் ஒரு நல்ல புரிதலுடன் பொறாமையின்றி போட்டியை நடிப்பிலே காட்டி படங்களின் தரத்தை உயர்த்தி மாபெரும் வெற்றிகளைத் தந்து ஏனைய நடிகர்களுக்கும் எடுத்துக்காட்டாக பெண்ணின் பெருமையில் ஆரம்பித்து நாம் பிறந்த மண் வரை தங்களது நட்புக்கோட்டையை எந்த சந்தேகப் பிசாசுக்கும் இடம் கொடுக்காமல் கட்டிக் காத்தார்கள்


    பந்தபாசம் திரைப்படத்தில் அண்ணன் சிவாஜி தன்னுடைய அலுவலகத்துக்கு வந்து தான் வெளியே சென்று வந்த சின்ன இடைவெளியில் தனது அலமாரியில் வைத்திருந்த பணத்தை திருடி விட்டாரோ (எடுத்தவர் சந்திரபாபு)என்ற சந்தேகப் பிச்ச்சாசு ஆட்கொண்ட வேளையில் இப்பாடலில் இரு திரைவேந்தர்களின் போட்டி நடிப்பையும் கண்டு மகிழ்வோமே

    சந்தேக பிசாசு சகோதர பாசத்தின் மகிழ்ச்சியையும் தின்றுவிடுகிறதே!!

    Last edited by sivajisenthil; 10th January 2015 at 01:42 PM.

  9. Likes KCSHEKAR, kalnayak liked this post
  10. #3525
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    காதல் கசக்குமையா பிசாசு Part 3 தில்லானா மோகனாம்பாள்

    சந்தேகப் பிசாசு 3
    மிஷ்கினின் பிசாசு மட்டுமே காதல் பாச உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நல்ல ஒரு நியாயப் பிசாசு. ஆனால் சந்தேகம் என்பது ஒரு மோசமான கொள்ளி வாய் மாயப்பிசாசு!!



    தில்லானா மோகனாம்பாள். ஒரு புகழ்பெற்ற நாவலை அதன் சுவை குன்றாமல் 19 ரீல்களில் காட்சிகளாகத் தொகுப்பது கடினமான சாதனையே! நடிகர்திலகம் சிக்கல் சண்முகசுந்தரமாக 'ஊதித் தள்ளிய' நடிப்பின் சிகரம். கதையைப் படித்தவர்கள் அறிவர் நடிகர்திலகம் இந்தக் கதாபாத்திரமாக மாறிட எத்தனை விதமாக சிந்தித்து செயல்பட்டிருக்க வேண்டும் என்பதை நாதஸ்வர இசையின் நிகரில்லாத கலைஞன் ஆனால் தொழில் கர்வத்துடன் முன்கோபம் என்னும் பேயும் சந்தேகம் என்னும் பிசாசும் கைகோர்க்கும் போது என்னென்ன விளைவுகள் .....எத்தனை மனக் கஷ்டங்கள்....சிக்கலில் தவிக்கும் சந்தேக சுந்தரமாக.....


    காதல் வயப்பட்ட கலைஞனின் கௌரவமான கள்ளமற்ற நேச வெளிப்பாடுகள்.....உலகப் பெரும் நடிகர்கள் கண்ணுற வேண்டும் எமது நடிப்புத் தலைவனின் பாத்திரத்தோடு பின்னிப்பிணைந்த உடல்மொழி பாவனை வாயிலான நடிப்பின் வெளிப்பாடுகளை......






    யார்மீது நாம் மிகுந்த அன்பு வைக்கிறோமோ அவர்கள் சற்று விலகும்போது சந்தேகப் பிசாசு நம் மண்டைக்குள் மாவாட்டுவது தவிர்க்கமுடியாததே !



    சந்தேகத்தின் வயப்பட்ட சிக்கலாருக்கு வெள்ளுடை தேவதை போதிக்கும் பாடம் !

    Last edited by sivajisenthil; 10th January 2015 at 03:09 PM.

  11. Likes KCSHEKAR, kalnayak, Russellmai liked this post
  12. #3526
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    நாளை 11.01.2015 ஞாயிறு பிற்பகல் 1.00 மணிக்கு வேந்தர் டி.வி.யில் தடம் பதித்தவர்கள் தொடரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாறு...இடம் பெறுகிறது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Thanks eehaiupehazij thanked for this post
  14. #3527
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Likes kalnayak, Russellmai, Harrietlgy liked this post
  16. #3528
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    காதல் கசக்குமையா பிசாசு Part 4 ஆலயமணி

    சந்தேகப் பிசாசு 4
    மிஷ்கினின் பிசாசு மட்டுமே காதல் பாச உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நல்ல ஒரு நியாயப் பிசாசு. ஆனால் சந்தேகம் என்பது ஒரு மோசமான கொள்ளி வாய் மாயப்பிசாசு!!



    ஆலயமணி நடிகர்திலகத்தின் மைல்கல் திரைச் சாதனை சரோஜாதேவி நண்பன் எஸ் எஸ் ஆரின் காதலி என்பதறியாது காதல் வயப்படுகிறார் ஏழ்மை நிலையிலிருந்து தன்னை கைதூக்கி விட்ட நட்புக்காக காதலியை மறக்கிறார் எஸ் எஸ் ஆர் தனிமையில் அவர்கள் பேசும் சந்தர்ப்பத்தில் சந்தேகப் பிசாசு சிவாஜியை ஆக்கிரமிக்க அதன் பக்க விளைவுகளும் தீர்வுமே படம்


    காதல் மணியடிக்கும்போது கல்லெல்லாம் மாணிக்கக் கல்லே கலையெல்லாம் காதலியின் கண்கள் சொல்வதே!



    சந்தேக பிசாசின் பிடி இருகும்போது சட்டி சுட்டதடா கை விட்டதடா ......?!

    Watch NT's jealous eyes....heralding the danger of vengeance under the clutches of evil!!





    The End of this mini series....folks!! Better read these Pisaasu write-ups in RaadhaRavi's creeper style!!
    Last edited by sivajisenthil; 10th January 2015 at 06:02 PM.

  17. Likes KCSHEKAR, kalnayak, Russellmai liked this post
  18. #3529
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    COMING SOON...........

    TRICHY RAMAKRISHNA......
    TIRUNELVELI CENTRAL......

    MADURAI CENTRAL.......... ALL DAILY 4 SHOWS !
    COIMBATORE ROYAL........
    CHENNAI ANNA...............

    ILAYA THILAGAM PRABHU's BLOCK BUSTER " CHINNA THAMBI "


    DESIGN COURTESY & CONTRIBUTION - OUR HUBBER & THALAIVARIN PILLAI SUNDERRAJAN !



    Any Photos of this film / Release Advertisements of this films / Any Flashback of this Film release may please be shared here..! Thanks !



    Last edited by RavikiranSurya; 10th January 2015 at 10:29 PM.

  19. Likes Russellmai liked this post
  20. #3530
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Flashback Ecstasy 1 இனிக்கும் நினைவசை 1

    Gap filler Nostalgia to relax. Sit back and enjoy!!
    பட்டிக்காடா பட்டணமா (1972) கலரில் எடுக்கப்படவில்லையே என்று ஏங்க வைத்தாலும் கறுப்பு வெள்ளைப்படங்களில் வசூலின் சிகரத்தைத் தொட்டு முறியடிக்க முடியாத சாதனை செய்திட்ட நடிகர் திலகத்தின் வெள்ளிவிழாக் காவியம். அதிலிருந்து ஒரு ரசிக்கத்தக்க சிலம்பாட்டக் காட்சியில் பட்டையைக் கிளப்புகிறார் நடிகர்திலகம் கதாநாயகியின் 'குடுமி அங்கிளாக'!!





    (courtsy : Silambam Academy / Asia presentation) in You Tube

    Pattikada Pattanama (பட்டிக்காடா, பட்டணமா, 1972 ) starring Sivaji Ganesan, Jayalalitha and Manorama. Pattikada Pattanama played for 189 days in theaters and turned out to be one of the box office hits of year 1972. This was the last black and white movie celebrated 25 weeks silver jubilee in four centres - Chennai, Salem, Madurai and Trichy and this was the first movie ran daily four shows more than 30 days at Salem. It broke the record of even color movies.
    courtsy : wikipedia

    நடிகர்திலகத்தின் சிலம்பு வீச்சும் சுருள்கத்தியை கையாளும் விதமும் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இனிக்கும் நினைவசையே !!
    Last edited by sivajisenthil; 11th January 2015 at 08:12 PM.

  21. Likes KCSHEKAR, kalnayak, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •