Page 211 of 400 FirstFirst ... 111161201209210211212213221261311 ... LastLast
Results 2,101 to 2,110 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2101
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Competition among satelite channels in telecasting the NT's movies and they know very well

    only through NT's film they will increase the TRP rating. If one channel misses out people will avoid and watch

    the other one it shows NT's film.



    NT Rocks everywhere.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2102
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    சமீபத்தில் 2 தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிகர் திலகத்துக்கு சிறப்பான இடம் கொடுக்கப்பட்டுள்ளது ..ஒன்று mcr வேட்டிகளுக்காக பிரபு - சரத்குமார் தோன்றும் விளம்பரம் ..இன்னொன்று ஆர்யா தோன்றும் இன்னொரு விளம்பரம் .

  4. #2103
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நாளை 12.10.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு சென்னை ருஷ்ய கலாச்சார மய்ய அரங்கில் நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில்
    நடிகர் திலகத்தின் 99வது திரைக்காவியம் ...

    முரடன் முத்து

    திரையிடப்படுகிறது.


    இப்படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று VENTRILOQUISM எனப்படும் பொம்மைக் குரல் வித்தை நிகழ்ச்சி. குழந்தைகளுக்காக இத்திரைப்படத்தில் இணைக்கப்பட்ட சிறப்பம்சமாகும். இதை இங்கு குறிப்பிடக் காரணம், பின்னாளில் வெளிவந்த படத்தில் தான் இது முதலில் இடம் பெற்றதாக ஒரு செய்தி பரவியிருப்பதால். எதிலும் முதல்வர் நடிகர் திலகம் மற்றும் அவருடைய படங்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

    முரடன் முத்து திரைப்படத்தில் இடம் பெற்ற Ventriloquism நிகழ்ச்சியின் நிழற்படம்

    Enjoy the ventriloquism pioneered by NT in Irumalargal

    Last edited by sivajisenthil; 12th October 2014 at 05:05 AM.

  5. Likes Russellmai liked this post
  6. #2104
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Dear RKS.
    நடிப்புக்கலை என்பது செவிவழி கர்ணபரம்பரைக் கதைகள் மக்களைச் சென்றடைய வேண்டும் அவை நல்கும் செய்திகள் மக்கள் மனதைப் பண்படுத்த
    வேண்டும் என்ற உயரிய நோக்கில் நடிப்பு என்பது அதன் தொழிநுட்ப வளர்ச்சியை எடடியிராதபோது தெருக்கூத்துக்களாகவே உயிர்ப்பிக்கப்பட்டது.. அதன் பிறகு நாடக கலையாக வளர்ச்சி பெற்று நடிகர்கள் என் ற அமைப்பு உருவானது. நல்ல குரல்வளம்
    பாடி ஆடும் திறன் கொண்டவர்களே நடிகர்களாக அடையாளம் காணப்பட்டனர். பாய்ஸ் கம்பெனி போன்ற குழுக்கள் கடுமையான பயிற்ச்சிகளுக்குப்
    பிறகே சிவாஜிகணேசன் போன்ற நடிப்புத் திறன் மிக்க கலைஞர்களை உருவாக்க முடிந்தது. அனைத்து வகை நடிப்பையும் திறம்படக் கையாண்டு நடிகர்திலகமாக ஜொலித்த நடமாடும் நடிப்புப்பல்கலைக்கழகமாக உருவகம் பெற்றவரை விமரிசிப்பது தீட்டிய மரத்தில் கூர்பார்ப்பதற்க்கு சமம். அவரின் நிகரற்ற சாதனைகள் நிலைத்து நிற்கும் கல்வெட்டுக்கள். ஒருவர் புகழை ஒருவர் மறைத்து உயரும் வரலாறில்லை...

    Let us ignore such comments

  7. #2105
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மாலை மலர் ரிப்போர்ட் உடான்ஸ்.



    1)உத்தம புத்திரன் விளம்பரங்கள் வந்த போது நாடோடி மன்னன் பற்றிய பேச்சே இல்லை.



    2)கலைவாணருக்கும் இதற்கும் சம்மந்தமே கிடையாது.



    3)உத்தம புத்திரன் விட்டு தர படவில்லை. மாறாக தனக்கு பிடித்த மூன்று ஆங்கில படங்களை இணைத்து புதிய கதை தயார் பண்ணி ,தன் சொந்த தயாரிப்பில் உருவாவதை பின்னரே அறிவித்தனர்.



    4)சிவாஜி 1952 இலிருந்தே தமிழின் முதல் நிலை நடிகர். எல்லா வகைப்பட்ட படங்களிலும் அவரே முடிசூடா மன்னர். அவரை வைத்து படம் எடுத்து ,இயக்கிய கலைவாணர் அவரை வளரும் நடிகர் என்று ,முட்டி மோதி எப்படியாவது வளர முடியுமா என்று எதிர்பார்த்து கொண்டிருந்தவரிடம் விட்டு கொடுக்க சொன்னாராம்!!!!!



    அப்பப்பா, வரலாற்றை எப்படியெல்லாம் திரிக்கின்றனர்?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #2106
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிப்புலகில் சிவாஜிகணேசன்
    ஒரு சகாப்தம்





    நன்றி உதயன் (கனடா)

  9. Likes Russellmai liked this post
  10. #2107
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr K C Sir,


    If possible could you please upload the Pattimandram of Tirunelveli Function conducted yesterday for the benefit

    of millions of NT's fans.


    Regards

  11. #2108
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நான் சொல்வதை தயவு செய்து புரிந்து கொள்ளவும். நான் பிற விஷயங்களை,மனம் கவர்ந்த விஷயங்களை
    பகிர்வதை தடை படுத்தவில்லை.பிறர் சுதந்திரங்களை தடை படுத்தவில்லை. உன் கையை நீட்டி நீ ரிலாக்ஸ் பண்ணும் போது ,அங்கே கடினமான உழைப்பை நல்கும் ஒருவரின் கண்ணை,மூக்கை குத்தி விட்டால் ,அதை அவர் எடுத்தும் சொன்னால் கேட்டு திருந்த வேண்டுமல்லவா?

    1)படித்ததில் பிடித்த மற்ற பதிவுகளை ,relevant ஆக இருந்தால் ,ஜோ மாதிரி link கொடுத்தால் போதும் .cut paste பண்ணும் அவசியம் சில சமயம் நேரும். பதிவுகளில் மற்றவர் மனம் கோணும் படி ஏதேனும் இருப்பின் ,edit செய்வதற்கே cut paste உதவும். அல்லது நம் பதிவுக்கு support ஆனா சில விஷயங்களை ,உதவிக்கு அழைக்க cut paste பயன் படுத்தலாம். நமக்கே தெரியாமல்,நாமே படிக்காமல்,சம்மந்தா சம்மந்தமில்லாமல் ,40 cut paste ஒரே நாளில் போடுவது ,அல்லது ஒன்றுமே எழுதாமல் வீடியோ மட்டும் போட்டு ஜல்லியடிப்பது, சம்மந்த பட்ட நபருக்கு relaxation .ஆனால் என் போன்ற,வாசு போன்ற,முரளி போன்ற,கார்த்திக் போன்ற,ராகவேந்தர் போன்ற, sincere பதிவாளர்களுக்கு எரிச்சல் தரும்.

    2)அதே மாதிரி முழு பக்க படத்தை ,முழுவதும் quote செய்து, அருமை சார் என்ற ஒற்றை வரி பதிவு,சில திரிகளில் பக்கம் நகர்த்தி ,பாகம் தேடும் உத்தியாக மேற்கொள்ள படுகிறது. moderator என்பவர்,சும்மா
    வெட்டிதான் அத்திரிகளில். அப்படியாவது சாதனை செய்கிறார்களாம்!!!!

    என்னைத்தை சொல்ல?எனக்குத்தான் அகந்தை,கோபக்காரன்,பிறர் மனதை புண் படுத்தி இன்பம் அடைபவன் என்ற நற்சான்றிதழ்.

    ஏனைய்யா, விமர்சனங்கள்,ஆய்வுகள்,கவிதைகள்,அங்கதம்,அறிமுகங்கள் ,நுண்கலைகள்,மனோதத்துவ உளவியல்,சிறந்த தேர்வுகள் என்று எத்தனை விதம் அனைத்தும் கூர்மையான தெளிவுடன்,coordinated ஆக என்னால் போட பட்டன.அத்தனையும் விழலுக்கிறைத்த நீரோ என்ற .விரக்தியே மிகுகிறது. ஒவ்வொரு பதிவுக்கும் பின்னால் 50 ஆண்டு படிப்பனுபவம்,அழகியல்,ஈடுபாடு என்று எவ்வளவு உள்ளன?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. Likes joe, Harrietlgy liked this post
  13. #2109
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இன்றைய 'தி இந்து' தமிழ் நாளிதழில் வந்துள்ள மானா பாஸ்கரன் அவர்கள் எழுதியுள்ள நடிகர் திலகத்தின் புகழ்பாடும் அருமையான கட்டுரை.

    'நான் சிவாஜி கட்சி'

    Thanks Vasu.


    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  14. #2110
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் கோபால்
    தங்களுடைய விளக்கமான பதிவுக்கு என் பாராட்டுக்கள்.

    நண்பர்களே
    நிழற்படங்களும் ஆவணங்களும் பக்கத்தின் வேகத்தையும் குறைக்காதவை, அதே சமயம் அதில் ஒரு Aesthetics-ம் உள்ளது. ஆனால் வீடியோக்கள் வேகத்தைக் குறைக்கக் கூடியவை. முரளி சார் பல முறை குறிப்பிட்டுள்ளவாறு வீடியோக்களினால் பக்கம் தரவிறக்கம் செய்வது தாமதமாகும். அதிவேக அலைக்கற்றை அனைவரிடமும் இருக்கும் எனக் கருத முடியாது. அவ்வாறு பக்கங்கள் தாமதமாக தரவிறக்கம் ஆகக்கூடிய சந்தர்ப்பங்களில் பார்வையாளர்கள் சலிப்புடன் வேறு பக்கங்களையோ அல்லது வேறு இணைய தளங்களையோ காணச் சென்று விடுவார்கள். இவற்றை நாம் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

    மேற்கோள் காட்டும் போது அந்தப் பதிவு எண்ணைச் சுட்டிக்காட்டினாலே போதும். முழு பதிவினையும் மீள் பதிவினைப் போல் மேற் கோளில் கொண்டு வரத் தேவையில்லை. வரிக்கு வரி விளக்கம் என்கின்ற தேவை ஏற்பட்டால் மட்டுமே அந்த மேற்கோளில் அந்தப் பகுதியை மட்டும் கொண்டு வரலாம்.

    அதே போன்று பாடல் காட்சிகளுக்கென்றே பிரத்தியேகமாக உள்ள பாடல்கள் பல விதம் திரியில் பாடல் காட்சிகளைப் பகிர்ந்து கொள்ளலாம். அத்துடன் அப்பாடல் காட்சி தங்களை ஏன் கவர்கிறது, அல்லது அதன் மூலம் தங்களுடைய நினைவலைகளில் எழும் எண்ணங்கள் போன்றவற்றைத் தொகுத்து எழுதலாம்.

    ஒவ்வொருவருக்கும் உள்ள படைப்புத்திறன் இங்கே பகிர்ந்து கொள்ளப் படும் போது அது உரிய முறையில் அங்கீகரிக்கப்பட வேண்டும். இது ஒவ்வொருவருக்கும் உள்மனதில் இருக்கக் கூடிய ஆதங்கமாகும். இத்திரியைப் பொறுத்த மட்டில் ஒரு படைப்புத்திறன் கூடிய ஆய்வுக் கட்டுரை பகிர்ந்து கொள்ளப் பட்டால் அதற்கான மற்றவர்களின் கருத்து மற்றும் விவாதம் ஆகியவை தொடர்ந்து நடைபெற்ற பின் அடுத்த பதிவின் ஆய்வை எடுத்துக் கொண்டோமானால் நம் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள படைப்பாற்றல் கவனிக்கப் படும். அங்கீகாரம் பெறும்.

    இது கோபால் மட்டுமல்ல நம் ஒவ்வொருவர் மனதிலும் எழக் கூடிய நியாயமான உணர்வாகும்.

    இதே காரணத்தினால் தான் சில பதிவர்கள் இத்திரியிலிருந்து சற்றே விலகி நிற்கிறார்கள்.

    இனி வரும் காலங்களில் நம்முடைய அணுகுமுறையை இதற்கேற்றவாறு நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

    குறிப்பாக நெய்வேலி வாசுதேவன், கோபால், முரளி உள்பட நம் அன்பிற்குரிய பங்கேற்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் ஆழமான கருத்துரைகள் மிக்க பதிவுகள் இடம் பெறும் போது அவற்றின் மீதான விவாதத்திற்கு சற்றே கால அவகாசம் அளித்து அடுத்த தலைப்பிற்கு செல்வோம்.
    Last edited by RAGHAVENDRA; 12th October 2014 at 09:22 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •