Page 341 of 400 FirstFirst ... 241291331339340341342343351391 ... LastLast
Results 3,401 to 3,410 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #3401
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் – 51
    (From Mr.Sudhangan's FB Page)

    1961ம் வருடம் சிவாஜிக்கு ராஜயோகம் என்றே சொல்லலாம்!
    இந்த வருடம் மூன்று `பா’ வரிசைப் படங்கள்!
    `பாசமலர்’ `பாலும் பழமும்’ ` பாவ மன்னிப்பு’ மூன்று படங்களுமே போட்டி போட்டுக்கொண்டு ஒடிய படங்கள்!!
    ஆனாலும் மக்கள் மனதில் மிகவும் ஆழமாக பதிந்து போன படம் `பாசமலர்’
    `பாசமலர்’ வெள்ளி விழா கண்ட படம்!
    இந்தப் படம் வந்த போது எனக்கு மூன்று வயது!
    ஆனால் எனக்கு பத்து வயதாக இருக்கும் போது, அம்மாவோடு இந்த படத்தை பார்த்தேன்!
    படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது! ஒரு துக்க வீட்டிலிருந்து வருபவர்களை போல மக்கள் அழது கொண்டே வருவார்கள்!
    இந்த அழுகையில் `ஆண் பெண்’ பாகுபாடே இருக்காது!
    ஆயிரம் படங்களுக்கு மேல் வசனம் எழுதிய ஆரூர்தாஸ் இந்தப் படத்தின் மூலமாகத்தான் சிவாஜியுடன் இணைந்தார்.
    அவரை சிவாஜிக்கு அறிமுகம் செய்து வைத்தவர் நடிகர் ஜெமினி கணேசன்!
    இதில் சிவாஜி, சாவித்திரி, ஜெமினி மூன்று பேருமே போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள்!
    அண்ணன் – தங்கை பாசத்தை வைத்து படமெடுப்பவர்களுக்கு இந்த படம் தான் ஒரு கையேடு!
    தங்கையே தனக்கு உலகம் என்றிருக்கும் அண்ணன்!
    அண்ணன் தான் எல்லாம் என்றிருக்கும் தங்கை!
    அந்த தங்கையில் கதா பாத்திரத்தில் வெகுளித்தனமும் இருக்கும், குடும்பப் பொறுப்பும் இருக்கும்!
    ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருப்பார்கள்!
    காரணமில்லாமல் ஒரு காட்சி கூட நகராது!
    இதில் அண்ணன் ராஜீ கதாபாத்திரம் சிவாஜிக்கு
    தங்கை ராதா சாவித்திரி!
    ஆனந்தனாக வரும் ஜெமினி கணேசனும், சிவாஜியும் ஒரே மில்லில் வேலைப் பார்ப்பவர்கள்!
    இருவரும் நட்பாவதற்கு முன்பே ஆனந்தனும், ராதாவும் சந்தித்திருப்பார்கள்!
    அதன்பிறகு ஆனந்தனும், ராஜீவும் நண்பர்களாவார்கள்.
    இப்போது ஆனந்தனுக்கும் ராதா மீது காதல் வரும்!
    தன் காதலை ராதாவிடம் தனிமையில் வெளிப்படுத்துவார்!
    `காதல்’ ன்னா என்னா ?’
    வெகுளித்தனமாக கேட்பார் சாவித்திரி
    `அதாவது நான் உன்னை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்வது’
    `வாழ்க்கைத் துணைன்னா என்ன ?’
    அத்தனை வெகுளித்தனத்தை வெளிப்படுத்தும் அதே கதாபாத்திரத்துக்கு அவள் அண்ணனை தவிர வேறு எதுவுமே தெரியாது!
    ஆனால் பொறுப்புள்ள தங்கை என்பதையும் அடுத்த காட்சியிலேயே காட்டியிருப்பார்கள்.!
    ஆனந்தன், சொன்னதால் ராஜுவான சிவாஜி அவர்கள் வேலை செய்யும் மில்லின் தொழிற்சங்கத்தைல் சேருவான். இப்போது மில்லை மூடிவிட்டார்கள்.!
    தான் சங்கத்தில் சேர்தததால் தான் மில்லை மூடிவிட்டார்கள் என்று நினைத்தபடியே தன் தங்கையிடம் புலம்புவார் சிவாஜி!
    ராஜு: நான் அப்பவே நெனைச்சேன். இந்த ஆனந்த பய பேச்சக் கேட்டதுனாலே தான் இவ்வளவும் துன்பமும். அந்த மடப் பய ஆயிரம் சொல்லுவான், இந்த மடப்பயலுக்கு எங்கே போச்சு மூளேங்கிறேன்…?
    ராதா: எங்கேயும் போகலை, ஒங்ககிட்டத்தான் இருக்கும்!
    ராஜு : சும்மாயிரும்மா, நீ விளையாடாதே நீ. அப்புறம் எனக்குக் கோபம் வரும். இதனால எவ்வளவு துன்பமெல்லாம் வரும் தெரியுமில்ல ?
    ராதா: இப்ப என்ன குடி முழுகிப் போச்சு ? ஏண்ணா இப்படி குதிக்கிறீங்க ?’
    ராஜீ : வயிறு எரியுது
    ராதா: ஏன் அர்த்தமில்லாம எரியுது ?’
    ராஜீ: அவன் சொன்னதனாலதானே சங்கத்துல சேர்ந்தேன். சங்கத்துல சேர்ந்ததுனாலதானே ஸ்ட்ரை பண்ணினேன். ஸ்டிரைக் பண்ணினதாலதானே கதவை இழுத்து மூடினான். கதவை இழுத்து மூடினதாலதானே வேலை போச்சு. இப்போ நாளைக்கு அவனா வந்து சோறு போடுவான்?’
    ராதா : நிறுத்துங்க! நிறுத்துங்க. இப்படி வந்து உட்காருங்க
    ராஜீ : ம்.. எல்லாம் வேதனை மடத்தனமான காரியம் பண்ணிட்டு இப்ப வேதனையா முடிஞ்சுட்டுது
    ராதா : நான் கேக்கறதுக்கு பதில் சொல்லுங்க
    ராஜு: என்ன ?
    ராதா : ஆமா, அவரு பேச்சை கேட்டுத்தானே நீங்க சங்கத்துல சேர்ந்தீங்க ?’
    ராஜு : ஆமா
    ராதா : நீங்க சங்கத்துல சேர்ந்ததுனாலேதான் ஸ்ட்ரைக் பண்ணினாங்களா ?
    ராஜு : ஆமா ?
    ராதா : நீங்க ஸ்ட்ரைக் பண்ணினதுனாலதான் கம்பெனியை மூடிட்டாங்களா ?
    ராஜு : ஆமா ?
    ராதா : அப்ப, நீங்க மட்டும் வேலைக்கு போங்களேன். எங்க அண்ணன் வருவார்ன்னு கேட் திற்ந்து வைக்கிறாங்களான்னு பார்ப்போம். ஐயோ, அண்ணே ! இப்பவாவது புரிஞ்சுக்கிட்டிங்களா ? நீங்க ஸ்ட்ரைக்லே கலந்துக்கலேன்னாலும் ஒங்க வேலை போறது என்னமோ நிச்சயந்தான். அதோட கருங்காலிங்கிற பட்டம் வேற வந்து சேந்துடும். அந்த வேதனையோட வீட்டு மூலையில் வந்து கிடக்காம வீதியிலே வீர நடை போட்டு நடக்கலாமில்லை ?’
    ராஜு : ஆமா நீ சொல்றது சரிதான்
    ராதா : உ..க்கும்
    ராஜு : ஆனா, இப்ப வேலையில்லாம என்னமா செய்யறது. ? தேதி முப்பதைக் காமிச்சவுடனேயே பணம் வேணுமே. அதுக்கு எங்க போறது நானு ?’
    ராதா : எங்கேயும் போக வேண்டாம் எல்லாம் இங்கேயே இருக்கும்.
    ராஜு : இங்கேயா ?
    ராதா : அண்ணே உங்களுக்கும் பணம்தானே வேணும் ? கவலைப்படாதீங்க. எவ்வளவு வேணும்னாலும் நான் தரேன்.
    ராஜு : ஒங்கிட்டே எவ்வளவு ? ஓ புதையல் கிதயல் எடுத்தியா ?
    ராதா : இல்லேண்ணா, நான் சாம்பாதிச்சிருக்கேன்.
    ராஜு : எப்படி ?
    ராதா : நம்ம பசுமாட்டு பாலக் கறந்து வித்தேன். விரட்டி, தட்டி, தட்டி வித்தேன். அப்புறம் உங்கள் சம்பளத்தில சிக்கமாச் செலவு செஞ்சு மாசா மாசம் பத்து ரூபாய் மீதம் வெச்சிருக்கேன். அது மட்டுமா ? நம்ம வீட்டு பக்கத்துல இருக்கிற பொம்மை செய்யற கம்பெனி இல்ல. அங்கே போயி பொம்மைகளுக்கு வர்ணம் பூசி அதுல வேற சம்பாதிச்சிருக்கேன்.
    ராஜு ; என்னது ? வேலைக்கா போன நீ ? ஒன்ன உக்கார வெச்சு சாப்பாடு போடறதுக்கு உங்க அண்ணன் இருக்கும்போது என்னக் கேக்காம வேலையா செய்தே நீ ?
    ராதா : நான் சம்பாதிச்சு வைக்கலேன்னா இப்போ உங்களுக்கு இந்த வேலை போற நேரத்துல எங்கிட்டா முழசா ஆயிரம் ரூபாய் இருந்திருக்குமா ?
    இயல்பான இந்த வசனம் காட்சி படத்தின் போக்கையே மாற்றும் . இந்த படம் அண்ணன் – தங்கை பாசத்தை மட்டுமா சொன்னது?
    படம் வெள்ளி விழா ஒட காரணம் இதில் ஏராளம் உண்டே ?

    (தொடரும்)
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  2. Likes Harrietlgy, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3402
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    இயக்குனர் பாலசந்தர் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி,

    அவரின் புதல்வர் கைலாசம் அவர்கள் மறைந்த நான்கு மாதத்தில் மீண்டும் ஒரு சோக நிகழ்வு.
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  5. #3403
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan - Definition of Style 12


    செல்வம் - அணு அணுவாக ரசிக்க வேண்டிய உன்னதத் திரைக்காவியம்...

    இறைவா உனக்கு கோடான கோடி நன்றிகள்... இந்த நூற்றாண்டில் நான் பிறந்ததற்கு, இந்த யுகபுருஷன் காலத்தில் வாழ்ந்ததற்கு, அவருடன் பழகும் வாய்ப்புத் தந்தமைக்கு..


    எத்தனை விதமான முகபாவங்கள்.. ஒவ்வொரு ஃப்ரேமிலும் கலக்கும் நடிகர் திலகம்..

    முழுப்படத்தையும் முழுதுமாய் விவரிக்க கொள்ளை ஆசை..

    பிறிதொரு சந்தர்ப்பத்தில் அதை வைத்துக்கொள்வோம்..

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறாக இப்போது..(காட்சியைப்பற்றிய வர்ணனையைத் தொடரும் வண்ண எழுத்துக்களில் இடம் பெற்றுள்ள வாக்கியங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பினைப் பறறிய குறிப்புகள்)

    குறிப்பு..
    காணொளியில் இக்காட்சி 1.16.20 ல் தொடங்குகிறது.



    செல்வம் வள்ளியை விரும்புகிறான்.. அவள் மேல் தீராத மோகமும் காதலும் கொண்டிருக்கிறான். அவன் தாயாரோ முறைப்பெண்ணை அவனுக்குக் கட்டி வைக்க விரும்புகிறாள்.. அவளைப் பார்க்கும் போதெல்லாம் செல்வத்திற்கு வள்ளியின் முகமே நினைவுக்கு வருகிறது.
    தன் மனப்போராட்டத்தில் ஜெயிக்க முடியாமல் வள்ளியைப் பார்க்கக் கிளம்பி விடுகிறான்.
    வள்ளியின் வீட்டுக்கு வருகிறான்.
    பின்பக்கத்தில் துளசி மாடத்தில் வள்ளி பூஜை செய்வதைப் பார்க்கிறான்.
    ...இந்த இடத்தில் வாயிற்கதவருகில் நின்று நடிகர் திலகம் பார்க்கும் பார்வையை கவனியுங்கள்.. இந்தப் பார்வையில் ஓர் தாபம் தென்படுகிறது.

    அந்த சூழ்நிலை அவனுக்குள் ஒரு தாபத்தை ஏற்படுத்துகிறது..
    வள்ளியிடம் நெருங்குகிறான்..
    சுற்றுமுற்றும் பார்த்தவாறே அப்பா இல்லே எனக் கேட்டு அங்கு யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்கிறான்..
    அப்பா இல்லே என்று கேட்கும் போது வாய்ஸ் மாடுலேஷனைக் கவனியுங்கள் ... அ என்ற எழுத்து ஹ என்று ஒலிக்கும்.. அந்த ஹ விலேயே அந்த விரக தாபம் வெளிப்படுவதை உணரலாம்

    வரத்துக்கு ரொம்ப நேரமாகும்னு சொல்லு என்றவாறே அவளைத் தீண்டுகிறான்... இதை எதிர்பாராத வள்ளி சற்றே அச்சமும் நாணமும் மேற்கொண்டு விலகி ஓடுகிறாள்..
    அவளைத் தொட முற்படும் போது நடையில் ஒரு வேகத்தைக் கூட்டுவதை கவனியுங்கள்..இதே சமயம் அந்த அச்சமும் நாணமும் கலந்த உணர்வை கே.ஆர்.விஜயா அற்புதமாக வெளிப்படுத்துவதை கவனியுங்கள்.

    இனிவரும் விநாடிகளில் மௌனம்.. இருவருமே விரகத்தில் ஏங்கத் துவங்குகின்றனர்.. வள்ளி பெண்மைக்கே உரிய எச்சரிக்கை உணர்வை மேற்கொள்கிறாள்.

    இப்போது நடிகர் திலகம், கே.ஆர்.விஜயா இருவருமே போட்டி போட்டுக் கொண்டு தங்கள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துகிறார்கள். இவர்கள் இருவரையும் மீறி அங்கே இயக்குநர் திலகம் கே.எஸ்.ஜி.யின் திறமை வெளிப்படுகிறது. கால்களை ஒரு வித்தியாசமான கோணத்தில் வைத்துக் கொண்டு கைகளை பாக்கெட்டின் அருகே கொண்டு சென்று நடிகர் திலகம் அபிநயம் புரியும் ஸ்டைல்.. இதைப் பார்த்து நாணத்தோடு கே.ஆர்.விஜயா சிரிக்கும் போது அவரும் ஸ்கோர் செய்து விடுகிறார்.

    செல்வம் உள்ளே நுழையும் போது வேகமாக ஒலிக்கும் பாங்கோஸ் இசை இப்போது மீண்டும் வேகமெடுக்கிறது.
    அவள் குடத்தை எடுத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டுச் செல்ல முற்படுகிறாள்.
    செல்வம் அவளைக் கேட்கிறான் ஏன் சிரிக்கிறாய் என.
    அதற்கு அவள் சொல்கிறாள். உங்களை நான் எத்தனை நாள் பார்த்திருக்கிறேன்.. எத்தனை தடவை பார்த்திருக்கிறேன்.. எனக் கேட்கிறாள்..
    இப்போது இந்தக் கட்டத்தில் நடிகர் திலகத்தின் கைகளை கவனியுங்கள்.. கைகளைப் பின்னால் கட்டியவாறே விரல்களால் அபிநயம் புரிகிறார்.

    அவள் சிலேடையாக சொல்கிறாள்.. நான் பார்க்காததெல்லாம் உங்கள் முகத்தில் இருக்கு
    அதற்கு அவன் கேட்கிறான். என்ன இருக்கு...
    அவள் சொல்கிறாள்.. என்னென்னவோ இருக்கு..

    இப்போது சிணுங்கிக் கொண்டே நடிகர் திலகம் சொல்வதைக் கேளுங்கள்.. ம்ஹேஹே... அது மனசிலிருக்கு என்று சொல்லும் போது குரலில் ஏற்படும் மாற்றத்தைக் கேளுங்கள்..எவ்வளவோ என்று சொல்லிக்கொண்டு கை விரலை வாயருகில் கொண்டு சென்று சட்டென்று எடுத்து விடுகிறார்..நான் எப்படி என்று வரியை முடிக்காமலே சமாளிக்க முற்படுகிறார்...

    தன் மனசில் எத்தனையோ இருக்கிறது என்கிறார்.. அவள் அதை என்னவென்று கேட்கிறாள்...
    பாடல் துவங்குகிறது.

    இப்போது இந்தப் பின்னணியில் இப்பாடலைப் பாருங்கள்..

    தமிழ்த்திரையுலக வரலாற்றில் மோகத்தையும் தாபத்தையும் இவ்வளவு அழகாக கொண்டு வந்த காட்சி வேறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை..
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. Likes Russellmai liked this post
  7. #3404
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ஹாப்பி! நாளை முதல் ஹாப்பி!

    நடிகர் திலகத்தின் எவர் கிரீன் வெற்றி சித்திரம் ஊட்டி வரை உறவு கிறிஸ்துமஸ் தினமான நாளை முதல் [25.12.2014] கோவை டிலைட்டில் வெளியாகிறது.

    நான் பிறந்த நாட்டிற்கு எந்த நாடு பெரியது?

    நடிகர் திலகத்தின் ஜேம்ஸ் பாண்ட் வெற்றி சித்திரம் தங்கச்சுரங்கம் கிறிஸ்துமஸ் தினமான நாளை முதல் [25.12.2014] நெல்லை சென்ட்ரலில் வெளியாகிறது

    Choudary will never fail!

    நடிகர் திலகம் காவல் துறைக்கு ஈந்த காணிக்கையாம் வித்தகத்திலும் வர்த்தகத்திலும் ஒரே போல் வெற்றி பெற்ற காவியம் தங்கப்பதக்கம் நாளை மறுநாள் முதல் [26.12.2014] சென்னை மகாலட்சுமியில் வெளியாகிறது

    சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்

    அன்புடன்

  8. Thanks ifohadroziza thanked for this post
    Likes Russellmai liked this post
  9. #3405
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கிருஸ்துமஸ் & புத்தாண்டை முன்னிட்டு மக்கள் தலைவர், வசூல் சக்கரவர்த்தி நடிகர்திலகம் வெற்றிவிஜயம்.

    கோவை டீலைட் தியேட்டரில்




    எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

  10. Thanks ifohadroziza thanked for this post
    Likes Russellmai, ifohadroziza liked this post
  11. #3406
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கிருஸ்துமஸ் & புத்தாண்டை முன்னிட்டு மக்கள் தலைவர், வசூல் சக்கரவர்த்தி நடிகர்திலகம் வெற்றிவிஜயம்.

    நெல்லை சென்ட்ரல் தியேட்டரில்




    எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

  12. Likes Russellmai, ifohadroziza liked this post
  13. #3407
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எனக்கு சினிமாவை நேசிக்க, சினிமா என்ற 20 ஆம் நூற்றாண்டின் வசீகர பேயை கனவாக,நனவாக ,லட்சியமாக,பொழுது போக்காக,இனிய சுவாசமாக்க ஆரம்பகர்த்தாக்கள் சிவாஜி,பாலசந்தர் என்ற இரு தமிழ் பால்கேக்கள்.பிறகு 6 வயது முதல் ,15 வயது வரை தமிழ்நாட்டில் வசதிகள் நிரம்பிய நகர கிராமமான தொழில் இரண்டுங்கெட்டான் நெய்வேலியில் வளர்ந்த, பொது நூலகத்தை,ஒரே ஒரு சினிமா கொட்டகையை மட்டும் நம்பி வாழ்ந்த ,சிறுவன்,தகப்பன் என்று ஒரு படி தாண்டி குதித்து ,விடலை என்ற அற்ப ,அற்புத சுகம் காணா இந்த தமிழ் மட்டுமே அறிந்த அப்பாவி சிறுவனுக்கு, பேசும் ஊமை படங்களை, அறிந்த மொழி எழுத்துக்களுடன் பார்த்து பெல்லினி,கோடர்ட்,பெர்க்மென் என்ற பெயர்களா தெரிந்திருக்க போகிறது? ஆனால் உண்மை என்னவென்றால் ,இவ்வளவும் தெரிந்த பிறகும், மனதில் இந்த மேதைகள் இன்னும் விஸ்வரூபம் எடுத்து நிற்பதை நன்கு உணர முடிகிறது. அதனால்தான் உலக மேதைகளை பற்றி எழுத லட்சம் மேதைகள், போலி தமிழ் பேதைகள் என போலி அறிவுஜீவி கும்பல்கள் மற்றோர் கருத்தை பிரதியெடுத்து ,பேதி போல எழுத்துக்களை கிருமிகளுடன் கழிந்து தள்ள, நானோ தமிழும் அறிந்து,சினிமாவையையும் அறிந்து,எழுத்துக்களையும் அறிந்து,எண்ணங்களையும் அறிந்து சுத்தமாக வாழ்வதால், இந்த சுற்றி வாழ்ந்த நாம் மட்டுமே நன்கு அறிய வாய்ப்பிருந்த ,அங்கீகாரம் பெறாத உலக மேதைகளை, மற்றவர் பார்க்க தவறிய கோணத்தை காட்டி வெளிச்சம் பரப்புவதை, நன்றி கடனாக, தமிழர்களை தமிழர்க்கு உணர்த்தும் பணியாக செய்தேன்? இதை என்னை தவிர எவனும் செய்திருக்க முடியாது என்ற அகந்தையும் எனக்குண்டு.

    பாலசந்தர் என்ன செய்தார்?

    தூய கலைக்கும் ,பாமர மனதுக்கும் கலப்பு மணம் புரிந்து இடைநிலை படங்கள் தந்தார்.

    அறிவுக்கும், மனதுக்கும் இடைநிலையில் சமத்துவம் கண்டார்.

    ஜன்னலை திறந்து உலக வெளிக்காற்றை மட்டுமே அனுபவிக்க செய்து காட்சியை மட்டும் தனதாக்கி போலி செய்தார்.

    தொடர்ந்த ஒரு நிலைப்பட்ட கற்பனைகளை மட்டும் வைத்து கதைக்காமல் தன்னை புதிப்பித்து கொண்டே சோதனைக்கு ஆட்படுத்தி,நமக்கு கண்டுபிடிப்பின் பலனை மட்டும் ,அறிவு சார் நிதி கேட்காமல்,இலவசமாக மற்ற சராசரிகளுக்கு கொடுக்கும் விலையிலே தந்தார்.

    மந்திர கடவுளாய் மாறி நரிகளை பரியாக்கினார்.புதுமை தந்தார்.மாற்றம் தந்தார். நனவான கனவுகளை,கனவான நனவுகளை
    புத்திணைப்பில் தந்தார்.

    சினிமா அறியாகுழந்தைகளாய் தா தா தா என்று தேவர் படங்களுடன் தத்தகாரம் பயின்ற அறிவு நோயாளி தமிழ் குழந்தைகளுக்கு தேனை ஊட்டினார்.மருந்தை ஊட்டினார்.தேனுடன் மருந்தும் ஊட்டினார்.முதல் ஊரறிந்த நல்ல சினிமா மருத்துவர் அவரே.

    அவர் படங்களில் ஆச்சர்யங்கள் உண்டு.புது உலகங்கள் உண்டு. சுவைகள் உண்டு. களிப்பும் உண்டு. நவரசங்களும் உண்டு. ஆனால் பழக்கமான பதார்த்தங்களோ ,சமையலோ இல்லை.மாற்றம் விரும்பிய நாவுகளுக்கு அரு சுவை விருந்து.

    உலகத்தோடு ஓட்ட விரும்பி குதித்து முன்னேற துடித்த உள்ளங்களுக்கு ,பழங்குடிகளின் ,மூட பழக்க வழக்கங்கள்,சடங்குகள் கொண்ட தமிழ் படங்கள் என்ற அறியாமை தீவை தாண்ட, இடை பாலமாகி ,இன்னொரு உலக சினிமா புது உலகுக்கு வேகமாக ஓட வைத்தார்.

    புதிர் மனதை ,மேலும் புதிராக்கும் ,கனவு பட்டறையின் மனோதத்துவ மருத்துவராய்,நோய் முதல் நாடி குறை தீர்த்து, ஆரோக்கியம் கண்டார்.

    யாரும் போகாத பாதைகளை முதலில் சென்று வென்று, மற்றவர்களும் தெளிவும் திடமும் கண்டு தன்னை தொடர்ந்து வர செய்த முதல் பயணி. தூரத்தில் தெரிந்த நல்ல சினிமா என்ற நிலவில் தமிழ் நாட்டில் இருந்து சென்று கால் வைத்த முதல் ஆம்ஸ்ட்ராங் .

    இத்தனையும் மீறி கற்றாரை கற்றார் காமுற வேண்டும் என்ற மன பயிற்சியை கற்றாருக்கு கற்று கொடுத்து,பாரதி ராஜாவை,மகேந்திரனை,பாலு மகேந்திராவை திறந்த மனதுடன் கடிதம் கொடுத்து வரவேற்ற பக்குவ மனிதர்.

    தமிழ் சினிமாவுக்கு திருவள்ளுவரை கொடுத்த அகர முதல் எழத்து ஆதி பகவன்.

    எங்கெங்கோ சேகரித்து ,முறை படுத்தி சுமந்து,எனக்கு சுவாரஸ்ய புதிர்கனவுகளை விற்ற சுவாரஸ்ய ,நெறி -நிறை வியாபாரி.

    சிவாஜி- பாலசந்தர் சொர்க்கத்திலாவது இணைந்து உங்கள் ஒரே படத்தை எதிரொலிக்காமல் ,இணைந்து ஒரு அதிசயத்தை வானுலக அமரர்களுக்கு தாருங்கள். அதை காண நானும் ஒரு நாள் அங்கு வருவேன்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  14. Likes Russellpei liked this post
  15. #3408
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Happy Christmas to all

    From NT's Muththukkal Moondru.....!



    Last edited by sivajisenthil; 25th December 2014 at 08:57 AM.

  16. Likes Russellmai liked this post
  17. #3409
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    எல்லோர் மனங்களிலும் அமைதியும் ,அன்பும் நிலவட்டும் .

    இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

  18. #3410
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்
    உழவரெல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்
    பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்
    நல்வாழ்வை அளிக்கின்ற
    மெய்ஞானம் ஒளிவீசட்டும்
    நம் கடமை அறவாழ்வில்
    நாட்டத்தே சிறக்கட்டும்
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்



    அனைவருக்கும் உளமார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  19. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •