Page 330 of 400 FirstFirst ... 230280320328329330331332340380 ... LastLast
Results 3,291 to 3,300 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #3291
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கோபால்,

    இன்றைய தினம் உங்களின் ஒரு சுய விளக்கப் பதிவு வந்திருக்கிறது. ஒரு சில நிகழ்வுகளுக்கு எதிராக அல்லது நீங்கள் சம்மந்தப்பட்ட சில வாக்குவாதங்களுக்கு உங்கள் விளக்கத்தை சொல்லியிருக்கிறீர்கள். அது உங்கள் உரிமை. அதில் தலையிட விரும்பவில்லை. அதே நேரத்தில் உங்கள் பதிவின் இறுதிப் பகுதியில் உங்களைப் பற்றிய ஒரு ஒரு சுய மதிப்பீடு கொடுத்து என் பெயரையும் அதில் சேர்த்திருக்கிறீர்கள்.

    நாம் விரும்புகின்ற, ஏற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதன். அந்த மனிதன் மேல் நாம் கொண்டிருக்கின்ற அன்பை ஒரு குறிப்பிட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் நிறுவ முயற்சிக்கும்போது நம்மை தவிர வேறு ஆட்களின் பெயரை சேர்பதிலோ அல்லது நீக்குவதிலோ மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள மதிப்பீடு மிகவும் சென்சிடிவானது. அதில் ஒரு பெயரை மட்டும் சொல்வது மற்றவர்களை காயப்படுத்தி விடும். ஆகவே உங்கள் தன்னிலை விளக்கத்தில் இடம் பெற்றிருக்கும் என் பெயரை நான் நீக்கி விட்டேன்.

    உங்களுக்கு நான் எப்போதும் சொல்வதுதான். எந்த விஷயத்தை வேண்டுமானாலும் சொல்லலாம். சொல்லும் மொழி அதன் தொனி மிகவும் முக்கியம். எல்லோரும் உங்களை போல எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். அதிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் படிக்கும் open discussion forum என்று சொல்லும்போது அது பகிரங்கமாக நேர்ந்த அவமானமாகவே மற்றவர்கள் எடுத்துக் கொள்ளும் சாத்தியக்கூறுகள் அதிகம். ஆகவே ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து எழுதினால் நல்லது.

    அன்புடன்

    கோபால்,

    நான் மாடரேட்டர் ஆனபிறகு மிக அதிகமாக எடிட் செய்தது உங்கள் பதிவுகளைத்தான். அந்த சாதனையையும் புரிந்தது நீங்களே!

  2. Thanks Gopal.s thanked for this post
    Likes KCSHEKAR liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3292
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

    கடந்த பதிவின் இறுதி பகுதி


    எது எப்படியோ, அது போன்ற உணர்ச்சிக் குவியலான ஒரு மக்கள் கூட்டத்தையும் அந்த ஆவேசத்தையும் அதே அளவில் நான் அதற்கு முன்பும் பார்த்ததில்லை. அதற்கு பின்பும் பார்த்ததில்லை. அந்த வகயில் தர்மம் எங்கே என்றுமே ஸ்பெஷல்தான்.

    இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

    அந்த நாள் ஞாபகம்

    தர்மம் எங்கே இப்படி அலப்பரை கொடுத்துக் கொண்டிருக்க மற்றொரு பக்கம் இதன் பாதிப்பு சிறிது கூட இல்லாமல் பட்டிக்காடா பட்டணமா தன வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டேயிருந்தது. அதன் வசூல் சூறாவளியில் சிக்கி முன்னர் நிறுவப்பட்டிருந்த அனைத்து வசூல் மைல் கற்களும் தகர்ந்து வீழ்ந்தன.

    இதனிடையில் 1971-ம் ஆண்டு திரைப்பட தேசிய விருதுகள் வழங்கப்பட்டதில் பின்னணியில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை துக்ளக் இதழ் தொடர்ந்து எழுதியது. அப்போது மாதமிருமுறையாக வெளிவந்துக் கொண்டிருந்த துக்ளக் [1972 ஜூலை 1,15 மற்றும் ஆகஸ்ட் 1 என்று நினைவு] மூன்று இதழ்களில் இது பற்றிய விவாதங்களும் பேட்டிகளும் இடம் பெற்றன. 1972 மே முதல் வாரத்திலேயே விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட போதிலும் துக்ளக் இந்த விஷயத்தை கையிலெடுத்ததும் ஒரு பரபரப்பு நிலவியது. நடிகர் திலகத்திற்கு சவாலே சமாளி திரைப்படத்தின் மூலமாக கிடைக்க வேண்டிய சிறந்த நடிகர் விருது கிடைக்காமல் போனதில் ரசிகர்களுக்கு மிகுந்த மன வருத்தம் இருந்தாலும் இவற்றையெல்லாம் என்றுமே ஒரு பொருட்டாக கருதாத நடிகர் திலகம் தான் தலைவராக இருந்த தென்னிந்தியா நடிகர் சங்கத்தின் சார்பாக சிறந்த நடிகர் விருது பெற்ற எம்ஜிஆர் அவர்களுக்கு பாராட்டு விழா ஒன்றை நடத்தினார். ஜூலை 30 ஞாயிறன்று மாலை நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவின் மூலமாக தன் பெருந்தன்மையை நிறுவினார்.

    விவசாயிகள் போராட்டம் அதன் காரணமாக நடந்த உயிரிழப்பு போன்றவற்றால் அந்த வருடம் ஜூலை 15 தன் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என்று பெருந்தலைவர் முடிவெடுத்தார், வந்தது ஜூலை 23. அதற்கு சரியாக ஒரு வருடம் முன்பு அதே நாளில்தான் [1971 ஜூலை 23] ஒரு வருங்கால தூண் வெட்டி சாய்க்கப்பட்டது. மாணவர் திலகமாக திகழ்ந்த அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் தலைவர் உதயகுமார் அரசியல் வன்முறையாளர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த நாள். 1971-ல் ரஷ்ய மையால் கிடைத்த வாழ்வை வைத்துக் கொண்டு திராவிட இயக்கத்தினர் மாற்று அரசியல் கட்சியினரை தங்கள் அரசியல் எதிரிகளாக பாவித்து அவர்கள் மேல் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர்.

    அரசு நிர்வாகத்தை செவ்வனே நடத்துவதை விட தங்களுக்கு தாங்களே பட்டங்கள் கொடுத்துக் கொள்வதிலும் பட்டங்களை தேடி சென்று வாங்குவதிலும் மிகுந்த விருப்பம் கொண்ட அன்றைய ஆளும் கட்சியினர் அன்றைய முதல்வருக்கு டாக்டர் பட்டம் வாங்கி கொடுக்க ஏற்பாடு செய்தனர். அரசின் தயவை வேண்டி நின்ற தனியார் பல்கலைக்கழகமான அண்ணாமலை பல்கலைக்கழகம் அதற்கு இசைவு தந்து பட்டமளிப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்தது. ஜனநாயக முறைப்படி கறுப்புக் கொடி காட்ட முயற்சித்த உதயகுமார் கொடூரமாக தாக்கப்பட்டு அங்கேயிருந்த குளத்தில் தூக்கி எறியப்பட்டு மறுநாள் காலை பிணமாக மிதந்தார். இறந்து போனது தங்கள் மகன்தான் என்று சொல்லி கதறி அழும் உரிமை கூட அந்த மாணவனின் பெற்றோருக்கு மறுக்கப்பட்டது. இறந்து போனது தங்கள் மகனே அல்ல என்று சொல்ல வைக்கப்பட்டார்கள். இப்படி பிணத்தின் மீது பட்டமளிப்பு விழா நடத்தி முடிந்தபின் மாணவர்கள், ஸ்தாபன காங்கிரஸ் மாணவர் அணி மற்றும் பொதுமக்கள் மற்றும் ஒரு சில நடுநிலை ஏடுகள் இதற்கு எதிராக போராட்டம் நடத்த ஆரம்பிக்க அரசு எந்திரம் பணிந்து ஒரு விசாரணை கமிஷனுக்கு உத்தரவிட்டது.

    இந்த விவகாரம் என்றில்லை. தங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் அனைவருக்கும் எதிராக வன்முறை அடக்குமுறை கட்டவிழுத்து விடப்பட்டது சேலத்திலே ராமர் முதலான இந்து கடவுள்கள் படங்களுக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் நடத்திய வீரமணி கூட்டத்தின் மேல் எந்த நடவடிக்கையும் கிடையாது. அந்த ஊர்வலத்தை புகைப்படம் எடுத்து போட்ட துக்ளக் பத்திரிக்கை பறிமுதல் செய்யப்பட்டது. தங்கள் ஆட்சியையும் கட்சியையும் விமர்சிக்கும் படம் என்பதனால் முகமது பின் துக்ளக் படம் வெளிவர எத்தனை தடைகள் உண்டோ அத்தனையும் செய்யப்பட்டது. படத்தை வெளியிடாமல் இருக்க சோ அவர்கள் மீது சாம தான பேத தண்ட முறைகள் பயன்படுத்தப்பட்டது. திரையுலகை சேர்ந்த சிலரே சோவை அழைத்து படத்தை வெளியிடக் கூடாது என்றெல்லாம் சொன்னார்கள். பின்னர் அதே நிலைக்கு தாங்களும் ஆளானார்கள் என்பது வரலாறு.

    சிம்சன் தொழிற்சாலையில் தங்கள் கட்சியின் தொழிற்சங்க பிரிவை தொடங்க முடியாமல் போனபோது அங்கே தொழிற்சங்க தலைவராக பணியாற்றிக் கொண்டிருந்த குருமூர்த்தியை நீக்குவதற்கு சதி செய்து தங்களது ஆளான காட்டூர் கோபால் அங்கே திணிக்கப்பட்டு தொழிலாளர்களின் நலனை பாதிக்கும் வண்ணம் ஒப்பந்தங்கள் போடப்பட்டு பிறகு அந்த நிறுவனத்திற்கு எதிராக ஸ்ட்ரைக் வந்தபோது வளாகத்திற்கு உள்ளே கொலைவெறி தாக்குதல் நடத்தி அதன் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு நிறுவனம் லாக் அவுட் செய்ய 450 தொழிலாளிகள் வேலை இழந்த சாதனையை செய்த பெருமை திராவிட இயக்கத்தையே சாரும். இவையெல்லாம் கூட 1972 ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நடந்த சம்பவங்கள்தான். இந்த பிரச்சனை நீண்ட காலம் தொடர்ந்து 1976 வரை போனது. 1974-ல் தொழிலாளிகளின் ரகசிய வாக்கெடுப்பில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த குசேலர் தலைவரானது அதன் பின் நடந்த பேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள் எல்லாம் நீண்ட வரலாறு. அதையெல்லாம் விவரிக்க ஆரம்பித்தால் பக்கங்கள் போதாது.

    இதையெல்லாம் நடிகர் திலகத்தின் கலைப் பயணத்தில் குறிப்பிட காரணம் எப்படிப்பட்ட எதிர்மறை சூழலில் நடிகர் திலகம் சாதித்தார் என்பதையும் தமிழக அரசியல் களத்தில் ஆளும் கட்சியினரால் உருவாக்கப்பட்ட வன்முறை நெருப்பாற்றில் எப்படி நீந்தி கரையேறினார் நடிகர் திலகம் எனபதையும் வாசகர்கள் உணரவே இந்த விஷயங்களையெல்லாம் கோடிட்டுக் காட்டுகிறேன். நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட விஷயங்களும் எப்படி பாதிக்கப்பட்டன என்பதற்கு உதாரணம் 1970 அக்டோபர் 25 அன்று சாந்தி தியேட்டர் தாக்கப்பட்டதும் தாக்கியவர்களை விட்டு விட்டு அப்போது தியேட்டர் வளாகத்தில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டதையும் கூற வேண்டும்.

    ஒரு அரசாங்கத்தை தன் கையில் வைத்திருக்கும் ஆளும் கட்சி அரசு நிர்வாகத்தை எந்தளவிற்கு அதிகார துஷ்பிரயோகம் செய்ய முடியும் என்பதற்கு ஒரு மீகப் பெரிய உதாரணம் மதுரையில் ஆகஸ்ட் 4,5 மற்றும் 6 தேதிகளில் நடைபெற்ற திமுக மாநாடு. அன்றைய மதுரை மேயர் முத்து மாநகராட்சி நிர்வாகத்தையும், மாநகராட்சி ஊழியர்களையும் கட்சி மாநாட்டிற்கு பயன்படுத்தியதை மக்கள் திகைத்துப் போய் பார்த்தனர். அங்கே மாநாட்டிற்காக விளையாடிய பணம் அன்றாடம்காய்ச்சிகளாக இருந்த ஆளும்கட்சியினர் எப்படி கோடிஸ்வரர்களாக மாறி விட்டனர் என்று பெருந்தலைவர் குற்றம் சாட்டுவது முழுக்க முழுக்க உண்மை என்பதையும் மக்கள் புரிந்துக் கொண்டனர்.

    இந்த மாநாட்டில் அன்றைய ஆளும் கட்சியில் இருந்த உட்கட்சி பூசலும் பகிரங்கமாக வெளியே தெரிய ஆரம்பித்தது. மாநாட்டு ஊர்வலத்தை முதல் நாள் முக முத்து தொடங்கி வைத்தபோதே ஆரம்பித்த பிரச்சனை ஊர்வலத்தை விளக்குத்தூண் அருகே நின்று பார்வையிட்ட அன்றைய முதல்வர், அவர் நின்றிருந்த மேடைக்கு முன்னால் சென்று நின்றுக் கொண்டு நகராமல் ஒரு குழுவினர் எம்ஜிஆர் அவர்களை வாழ்த்தி கோஷம் போட்டது, முதல் நாள் ஊர்வலத்தை துவக்கி வைக்க வருவதாக இருந்த எம்ஜிஆர் அவர்கள் மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று மாலை மட்டும் வந்துவிட்டு மேடையில் பேசி விட்டு புறப்பட்டு போய்விட அவருக்காக வந்த கூட்டம் அவர் சென்றவுடன் மாநாட்டு பந்தலை விட்டு வெளியேறி விட முதல்வர் திமுக தலைவர் மு.க. மேடையில் மயங்கி விழ அரசியல் பார்வையாளர்களுக்கு நடப்பது நன்றாகவே புரிந்தது. ஆனால் ஒன்று சொல்ல வேண்டும். இதற்கு இரண்டு மாதங்களுக்கு பிறகு [அக்டோபர் 72-ல்] திமுகவின் முக்கிய தலைவர்கள் முதல்வர் உட்பட பல அமைச்சர்களும் ஊழல் செய்து விட்டனர் என்று சொல்லி வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர் அவர்கள் இந்த மாநாட்டில் பேசும்போது வெளியேறியபோது அவர் யாரையெல்லாம் ஊழல் வாந்திகள் என்று சொன்னாரோ அவர்கள் அனைவரும் மேடையில் வீற்றிருக்க " இவர்கள் அனைவரும் ஊழல் செய்தவர்கள் என்று காமராஜர் கூறுகிறார். நீங்கள் சொல்லுங்கள் இவர்கள் ஊழல் செய்தவர்களா" என்று கூட்டத்தை பார்த்து கேட்க கூட்டம் இல்லையென்று சொல்ல " காமராஜர் வேண்டுமென்றே சொல்கிறார்" என்று ஊழல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்கியதையும் இங்கே குறிப்பிட வேண்டும். [மாநில சுயாட்சி கிடைக்காவிட்டால் ராணுவத்தை சந்திப்பேன் என்று சொன்னதெல்லாம் தனி கதை].

    இப்படியாக நாம் கடந்து வந்துக் கொண்டிருக்கும் 1972 ஜூலை ஆகஸ்ட் காலகட்டம் தமிழக அரசியலிலும் சரி தமிழ் திரையுலகிலும் சரி பல்வேறு பரபரப்புகளை சந்தித்துக் கொண்டிருந்த நேரம்.

    (தொடரும்)

    அன்புடன்

  5. Thanks sss, RAGHAVENDRA thanked for this post
  6. #3293
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    என்.பாலகிருஷ்ணன்- சிவந்த மண் என்றாலே நினைவுக்கு வரும் கேமரா மேன் . நேற்று 84 ஆம் வயதில் மரணம் அடைந்த அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

    இவர் என் தூரத்து உரவினர். விசு வின் அரட்டை அரங்கத்தில் என்னை படம் பிடித்தவர்.

    சிவாஜியை பற்றி பேசும் போது பரவச பட்டார். அவரை மாதிரி யாருப்பா?எந்த கோணத்தில் படமெடுத்தாலும் ,அவரை மாதிரி முக அமைப்பு கெடாமல் எடுப்பான தோற்றம் யாருக்கு வரும்? அதே போல ,பின்னாட்களில் அவர் இடம் பெற்ற படங்களில் இடம் பெற்ற சிலரையும் குறிப்பிட்டு, சேப்பு தோல் மட்டும்தான். எங்கே கேமரா வச்சாலும் இடைஞ்சல்.ஒரே angle மட்டும்தான் வைக்க முடியும்.அங்கே ,இங்கே என்று பணியாற்றும் சுதந்திரமே இருக்காது.என்று.மனம் திறந்தார். ரொம்ப reserve ஆனவர்.பெரும்பாலும் பேசவே மாட்டார்.

    சிவந்த மண்ணில் ,சில இடங்களில் இவர் ஜாக்கிரதையாக கையாண்டிருக்கலாமே என்று தோன்றும். (ஓடம் பொன்னோடம்,வெள்ளிய மேகம் ).அப்படியே ஷ்யாம் சுந்தரும் .
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #3294
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராகவேந்தர்,

    உங்கள் புதிய ஸ்டைல் அமர்க்களமாக தொடர்கிறது.திரிக்கு நன்கு விறுவிறுப்பான ஊசி ஏற்றி அமர்க்களம் செய்கிறீர்கள். நேற்றுத்தான் இந்த படத்தில் சில காட்சிகளை போட்டு மனைவியுடன் ரசிக்கும் போது ,ஒரு தரம் பாட்டில் காலை நிற்கும்,நடக்கும் இடை நிலையில் சில வினாடிகள் போஸ் பற்றி சிலாகித்து மகிழ்ந்தேன்.தொடருங்கள். அவ்வப்போது வந்து நானும் தொடுவேன்.

    முரளி,

    உங்கள் பயம் புரிகிறது. உங்கள் பெயரையே நீக்கி கொள்ளும் அளவு நீதிமானாக நீங்கள் விளங்குவது ,எங்களை மயிர் கூச்செறிய வைக்கிறது. அப்படியா,தாங்கள் அதிகம் எடிட் பண்ணி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற போவது என் பதிவுகளாலா ?
    Last edited by Gopal.s; 13th December 2014 at 10:07 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. Thanks RAGHAVENDRA thanked for this post
  9. #3295
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan - Definition of Style 6

    நன்றி கோபால், தாங்கள் குறிப்பிட்ட அந்த எதிர்பாராத உடல் மொழி வெளிப்பாடு இத்தொடரில் அடிக்கடி இடம் பெறும். சரியான நேரத்தில் தாங்களும் அதனைக் குறிப்பிட்டுள்ளீர்கள். தொடர்ந்து தங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.

    நடிகர் திலகத்தின் ஸ்டைல் .. அதாவது பாணி என்பது யாராலும் பின்பற்ற முடியாது என்பதை மீண்டும் நிரூபிக்கும் மற்றோர் காட்சி.

    ஞான ஒளி...

    என்னென்று சொல்வது.. நடிப்பின் இலக்கணம் எனச் சொல்லலாம்.. மிகை நடிப்பு கத்தல் என்றெல்லாம் பிதற்றும் கும்பலுக்கு சமட்டியடி கொடுக்கும் திரைப்படம் ... இல்லை இல்லை.. காவியம்..

    தன்னைக் கைது செய்யத் துடிக்கும் இன்ஸ்பெக்டர் லாரன்ஸின் மகன் ஜார்ஜைத் தன் மகள் வழி பேத்தி காலிக்கிறாள் என்பதை அறிந்து கொள்ளும் கட்டம்.
    சர்ச்சில் ஊழியருக்கு ஆலோசனை கூறிக் கொண்டே நடக்கும் காட்சியிலேயே துவங்கி விடுகிறது அவரது ஆளுமை. தன் பேத்தியைப் பார்த்ததும் ஒரு விநாடி அந்த ஆலோசனையை நிறுத்துவதும், பிறகு அவளோடு பேசுவதற்காக அந்த ஊழியரை அனுப்பும் பாங்கும்... சொல்லவொணா மேதைமையை விளக்குகின்றன. எந்த வார்த்தையில் நிறுத்தினாரோ அதே வார்த்தையை மீண்டும் தொடர்ந்து அந்த ஆலோசனையை முடிக்கும் கடமை உணர்ச்சி...பேத்தியிடம் பேசுவதற்காக அருகில் அமரும் உத்தி, மெல்ல பேசத்தொடங்குபவர், யாரோ ஒருவர் பின்னால் வருவதை அறிந்தவுடன் சட்டென்று பேச்சின் ஒலியளவைக் குறைத்து கம்மிப் பேசுகிறார். அவளுக்கு ஆலோசனை கூறி முடிந்ததும் அவள் சந்தோஷமாக எழுந்து செல்ல, புன்னகைத்த படியே அவளை நோக்கி அவள் செல்லும் பாதையிலேயே முகத்தைத் திருப்பி முகவாயக்கட்டையில் கைவைத்துப் பார்ப்பது.. நிச்சயம் யாராலும் எதிர்பார்த்திருக்க முடியாத அற்புதமான உடல்மொழி...



    இவையெல்லாம் அந்த நடிகனுக்குள் அந்த பாத்திரம் ஆட்கொண்டு அவர் மூலம் அந்த பாத்திரம் வெளிப்படும் பாணி... இது நடிகர் திலகத்தால் மட்டுமே சாத்தியம். அவர் செய்தால் மட்டுமே ரசிக்கக் கூடிய ஒன்று..



    மேலே தரப்பட்டுள்ள காணொளியில் 43.40 லிருந்து பார்க்கவும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #3296
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கோபால்
    தங்களுடைய சுய விளக்கப் பதிவுகளுக்கு அவசியமே இல்லை. தங்களுடைய நடிகர் திலகம் பக்தியை யாராலும் சந்தேகப்பட முடியாது. இது குடத்திலிட்ட விளக்கல்ல குன்றத்திலிட்ட விளக்கம்.. கலங்கரை விளக்கம்..
    எனவே அதைப் பற்றிக் கவலைப்படாமல் தொடருங்கள்.
    ஆனால் மற்ற பதிவர்களைப் பற்றிய விமர்சனம் வேண்டவே வேண்டாம். ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாணி இருக்கும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்திருக்கும். இதனால் இதை மாற்றும் முயற்சியில் நாம் இறங்காமல் நம் பணியை மட்டும் செய்து வருவோம். நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றிய கருத்துக்களை இருகரம் நீட்டி வரவேற்போம். அவர் மறைந்து இவ்வளவு ஆண்டுகளாகியும் இன்னும் பல ஆண்டுகளானாலும் அவர் புகழ் வளருமே தவிர மங்காது.
    நடிகர் திலகத்தைப் பாராட்டி எழுதும் ஒவ்வொரு பதிவருக்கும் வரவேற்பளிப்பதை என்னுடைய கடமையாகவே நான் கருதுகிறேன். தங்களையும் அதையே கடைப்பிடிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
    நடிகர் திலகத்தின் படங்கள் விமர்சனங்களுக்குள்ளாகலாம். ஆனால் அவருடைய நடிப்பு விமர்சனங்களுக்கப்பாற்பட்டது. யாராலும் ஈடு செய்ய முடியாது. எனவே நெகடிவ் விமர்சனங்களுக்கு சற்றும் இடம் கொடாமல் அவர் நடிப்பில் ஈடுபாடுடன் ஆய்வு செய்து எழுதும் நண்பர்களை ஊக்குவியுங்கள்.
    இது என் தனிப்பட்ட வேண்டுகோள்
    Last edited by RAGHAVENDRA; 13th December 2014 at 08:20 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Thanks eehaiupehazij thanked for this post
    Likes KCSHEKAR liked this post
  12. #3297
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    கோபால்
    தங்களுடைய சுய விளக்கப் பதிவுகளுக்கு அவசியமே இல்லை. தங்களுடைய நடிகர் திலகம் பக்தியை யாராலும் சந்தேகப்பட முடியாது. இது குடத்திலிட்ட விளக்கல்ல குன்றத்திலிட்ட விளக்கம்.. கலங்கரை விளக்கம்..
    எனவே அதைப் பற்றிக் கவலைப்படாமல் தொடருங்கள்.
    ஆனால் மற்ற பதிவர்களைப் பற்றிய விமர்சனம் வேண்டவே வேண்டாம். ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாணி இருக்கும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்திருக்கும். இதனால் இதை மாற்றும் முயற்சியில் நாம் இறங்காமல் நம் பணியை மட்டும் செய்து வருவோம். நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றிய கருத்துக்களை இருகரம் நீட்டி வரவேற்போம். அவர் மறைந்து இவ்வளவு ஆண்டுகளாகியும் இன்னும் பல ஆண்டுகளானாலும் அவர் புகழ் வளருமே தவிர மங்காது.
    நடிகர் திலகத்தைப் பாராட்டி எழுதும் ஒவ்வொரு பதிவருக்கும் வரவேற்பளிப்பதை என்னுடைய கடமையாகவே நான் கருதுகிறேன். தங்களையும் அதையே கடைப்பிடிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
    நடிகர் திலகத்தின் படங்கள் விமர்சனங்களுக்குள்ளாகலாம். ஆனால் அவருடைய நடிப்பு விமர்சனங்களுக்கப்பாற்பட்டது. யாராலும் ஈடு செய்ய முடியாது. எனவே நெகடிவ் விமர்சனங்களுக்கு சற்றும் இடம் கொடாமல் அவர் நடிப்பில் ஈடுபாடுடன் ஆய்வு செய்து எழுதும் நண்பர்களை ஊக்குவியுங்கள்.
    இது என் தனிப்பட்ட வேண்டுகோள்
    நீங்கள் சொல்வதும் சரிதான் ராகவேந்தர். யார் என்ன எழுதினாலும் வரவேற்க தக்கதே. நமது பிரத்யேக கருத்துக்களை சில நேரம் பொது நன்மை முன்னிட்டு நம்மோடு தேக்கி வைத்து விடலாம் என்பதே எனது எண்ணமும். இனி எந்த பதிவர்களின் எண்ணமும்,எழுத்தும் என்னால் கட்டு படுத்த படவோ,விமர்சிக்கவோ படாது என்ற உறுதியை வழங்குகிறேன்.

    வாசு தேவன் (நெய்வேலி), சின்ன கண்ணன்,கிருஷ்ணா, ரவி(ஹைதராபாத்),ராகுல்,கண்பட் போன்றவர்களை இங்கு பங்களிக்க சகோதரன் என்ற உரிமையில் வேண்டுகிறேன். கார்த்திக் வர வேண்டிய நேரத்தில் அவசியம் வந்து விடுவார். நான் இனி ,என்னுடைய பிரத்யேக தளத்தில் கவனம் செலுத்துவேன்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  13. Thanks sivaa, eehaiupehazij, RAGHAVENDRA thanked for this post
    Likes sivaa, KCSHEKAR, RAGHAVENDRA liked this post
  14. #3298
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் எதிர் பாரா ஆச்சர்ய அதிசய நடிப்பு முத்துக்கள்.

    1)மூர்க்க தனமாக நம்பியாரிடம் ஆணைகள் பிறப்பித்து விட்டு, போக எத்தனிக்கும் போது ,நம்பியார் நாங்களென்ன முட்டாளா என்று கேட்கும் போது ,திரும்பி முகத்தை சிறிதே அருகில் கொண்டு சென்று அவர் சொல்லும் "ஆமாம்".(உத்தம புத்திரன்.)

    2)தெய்வ மகனில், பெரிய சண்டையாளி போல பாவித்து வில்லன்களுடன் சண்டையிடும் சிவாஜி (விஜய் ),பின் மண்டையில் தாக்கி விடும்,நம்பியாருடன் ஹெட் லியாடா அடிச்சே என்று பொம்மை போல கேட்டு ,மரம் போல சாயும் அழகு.

    3)ஞான ஒளியில் ,மகள் வந்த சந்தோஷத்தில் ,கிடைத்ததையெல்லாம் ப்ரிட்ஜிலிருந்து அள்ளியெடுத்து,இரு கைகையும் நிரப்பி, பிரிட்ஜை காலால் சார்த்தும் gesture .அதே ஞான ஒளியில் ,முணு முணுத்து திட்டி கொண்டே வரும் போது ,எதிரில் வருபவரை பார்த்து சலாம் அடிக்கும் பாங்கு.

    4)புதிய பறவையில், இறுதி காட்சியில் , சரோஜாதேவி(லதா) மோசம் செய்ததை குறித்து வினவி கொண்டே ,ஆதரவாக அவர் கழுத்தையும் தடவி,நேசம் உணர்த்தும் பாங்கு.(அதே நேரத்தில் நெரிக்கும் கோபம் கட்டு படுத்த பட்டு தடவலாக மாறுவதான பிரமை)

    5)மஞ்சுளாவை தட்ட கூடாத இடத்தில் தட்டி வம்பு பண்ண ,அப்பா மனோகர் ,பிறவா ஏண்டா உனக்கிந்த வெறி என்று கேட்கும் போது ,கட்டிலில் தாவி,தலையணை எடுத்து, இதெல்லாம் உனக்கு தெரியாது,இது ஒரு ஜாலி என்று சொல்லும் எங்கள் தங்க ராஜா.

    6)பாடலில் எதிர்பாராமல் ,ஒரு தரம் ,சுமதி என் என் சுந்தரியில் , ஆறு நோக்கிய உல்லாச கல்லெறிதல்.(போலிங் ஆக்க்ஷன் ).
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  15. Likes sivaa, KCSHEKAR, Harrietlgy, kalnayak liked this post
  16. #3299
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் மலையாளப்படங்களில் ஒன்றான தச்சோளி அம்பு திரைப்படத்தை இதுவரை பார்க்காதவர்களுக்காக..

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Likes Russellmai liked this post
  18. #3300
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan - Definition of Style 7

    எதிர்பாராத வகை நடிப்பை வழங்குவதில் நடிகர் திலகத்தை மிஞ்ச யாராலும் முடியாது. ஒரு காட்சியில் அவருடைய உடல் மொழி இப்படித்தான் இருக்கும் என்று கணிக்க யாராலும் முடியாது. இதற்கு இன்னொரு உதாரணம், ஜெனரல் சக்கரவர்த்தி திரைப்படத்தில் இடம் பெற்ற நீ என்ன கண்ணனா பாடல் காட்சி.

    எந்தெந்த சூழ்நிலைக்கு எப்படிப்பட்ட உடல் மொழி தரவேண்டும் என்கின்ற இலக்கணத்தை வகுத்த நடிப்புத் தொல்காப்பியர் நடிகர் திலகம். இந்த பாடல் காட்சியில் ஒரு ராணுவ அதிகாரியின் குடும்ப சூழ்நிலை சித்தரிக்கப்படுகிறது. தன் மகள், தான் காதலித்து குழந்தை பெற்றதையும் அதைத் தன்னிடமிருந்து தன் மனைவி மறைப்பதையும் தெரிந்து கொண்ட அவர் அந்த உண்மையை வரவழைக்கப் போடும் திட்டமே இப்பாடல் காட்சியின் அடிப்படை. கவியரசரின் அற்புதமான சிலேடை வரிகளில் இந்த சாராம்சம் மிகச் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஈடு இணையற்ற மெல்லிசை மன்னர் இப்பாடலில் சிறப்பம்சமாக மிருதங்கத்தை பயன் படுத்தியிருப்பது அந்தத் தாயாரின் இருதலைக் கொள்ளி எறும்பு நிலையை சிம்பாலிக்காக எடுத்துரைக்கிறது. இவர்கள் இருவரும் இணைந்து தன்னிடம் மறைக்கும் உண்மையை அவர்கள் மூலமாகவே வெளிக்கொணரும் ராணுவ அதிகாரியின் மன நிலை மிக மிக அற்புதமாக நடிகர் திலகத்தின் உன்னத நடிப்பில் உடல் மொழியில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

    சாதாரணமாக இந்த மாதிரியான பாடலைக் கேட்டவுடன் நடிகர் திலகம் இப்படித்தான் நடித்திருப்பார் என எதிர்பார்த்து வரும் பார்வையாளன் நிச்சயம் ஏமாந்து போவான். பல இடங்களில் கைகளுக்கு வேலை தராமல், அதே சமயம் அந்தக் கைகள் பயன்படுத்தப்படும் போது அதில் ஏராளமான உள்ளர்த்தங்களைப் பொதிய வைத்து, தன் நடையிலும் அந்த பாத்திரத்தின் மனோ நிலையை பிரதிபலித்து .. கண்களில் ஒரே சமயம் தந்திரமும் கோபமும் ஒரு சேர வெளிப்படும் வகையில் இப்பாத்திரத்தை மிக மிகச் சிறப்பாக பார்வையாளரின் நெஞ்சில் சித்தரித்திருக்கும் பாணி..

    இப்பாட்டில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நம் நெஞ்சில் சட்டென்று உடனே தொற்றிக் கொள்ளும் அவர் கர மொழி..

    குயில் இட்ட முட்டையென்று காக்கைக்குத் தெரியும். . அது கூவும் போதும் பாடும் போதும் யாருக்கும் புரியும் ..

    இந்த வரிகளின் போது தன் விரல்களை அபிநயம் புரிந்து கைகளை மேல் நோக்கிக் காட்டும் போது..

    மெய்சிலிர்க்கிறது..

    இறைவா.. எங்களை சிவாஜி ரசிகராகப் படைத்ததற்காகவே உன்னைக் கும்பிடலாம்...

    "Style.. you are defined... as...Sivaji Ganesan"

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •