Page 396 of 400 FirstFirst ... 296346386394395396397398 ... LastLast
Results 3,951 to 3,960 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #3951
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gapfiller3 :
    Back Projection scenes குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் தொழில்நுட்பம்


    ஆனானப்பட்ட ஜேம்ஸ் பாண்டே பேக் ப்ரோஜெக்ஷனில் காரோட்டும்போது ....நாங்கள் சளைத்தவர்களா!! திரிசூலம்







    James Bond on Spy Helicopter and NT on balloon!!



    Last edited by sivajisenthil; 9th February 2015 at 05:41 PM.

  2. Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3952
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    திரியின் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்! சில பல நாட்களாக பதிவிட முடியவில்லை மன்னிக்கவும்

    இன்று மாலை நமது NT FAnS சார்பில் திரையிடப்பட்ட அன்புக் கரங்கள் திரைப்படம் நல்ல ஒரு மாலையை பரிசாக தந்தது. ஆழமான உணர்ச்சிபூர்வமான ஒரு திரைப்படத்தை நடிகர் திலகத்தின் நடிப்பை ஒரே அலைவரிசை ரசிகர்களோடு சேர்ந்து பார்ப்பது ஒரு சுவையான அனுபவம் என்றால் அந்த சுவைக்கு சுவையூட்டுவது போல் அமைந்தது ஒரு இளம் பெண்ணின் பேச்சு.

    நமது அமைப்பில் உறுப்பினராக இருக்கும் இருபதுகளின் முதல் பகுதியில் இருக்கும் அந்த இளம் பெண் சபையில் ஒரு சில வார்த்தைகள் பேசலாமா என்று அனுமதி கேட்க பேசுங்கள் என்று சொன்னோம்.

    சபையோருக்கு தன் வணக்கத்தை சொல்லிவிட்டு ஆரம்பித்த அந்த இளம் பெண் தன் தமிழில் ஏதேனும் குறைகள் இருந்தால் மன்னிக்கும்படி கூறிவிட்டு பேச்சை தொடங்கினார். காரணம் அந்தப் பெண் பிறந்து வளர்ந்து படித்ததெல்லாம் பம்பாய் மாநகரத்தில். ஆனால் அந்தப் பெண்ணின் பெற்றோர் தங்கள் பெண் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக தமிழை ஒரு பாடமாக சொல்லித்தரும் பள்ளிக்கூடத்தில் சேர்த்திருக்கின்றனர். அது மட்டுமல்ல வீட்டில் பேசுவது முழுக்க தமிழில் மட்டும்தான் என்பதோடு நின்று விடாமல் தமிழ படங்களையும் தமிழ் பாடல்களையும் பார்க்க வைத்திருக்கின்றனர். பழைய தமிழ் படங்கள் குறிப்பாக நடிகர் திலகத்தின் படங்களை காண்பித்திருக்கின்றனர். தமிழை அதன் உச்சரிப்பு சுத்தியோடு கற்றுக் கொண்டது நடிகர் திலகதிடமிருந்துதான் என்று பெருமையாக குறிப்பிட்டார் அந்த இளம் பெண்.

    வைணவ சம்பிரதாயத்தை பின்பற்றும் குடும்பம் என்பதால் திவ்யப்பிரபந்தங்கள், பாசுரங்கள் திருவாய்மொழி முதலியவற்றை கற்க ஆரம்பித்திருக்கிறார் அந்தப் பெண். அந்த நேரத்தில்தான் திருமால் பெருமை பார்க்கும் வாய்ப்பு அந்தப் பெண்ணிற்கு கிடைத்திருக்கிறது. ஆண்டாளைப் பற்றியும் பெரியாழ்வார் பற்றியும் படித்துக் கொண்டிருந்த தனக்கு பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் தொண்டரடிப்பொடியாழ்வாரும் உருவகப்பட்டது நடிகர் திலகத்தின் மூலமாகத்தான் என்று அந்தப் பெண் சொன்னபோது அரங்கம் கைதட்டி வரவேற்றது. அதே போன்று திருவிளையாடல் ஈசனையும் அந்தப் பெண் நினைவு கூர்ந்தார்.

    இறுதியாக அந்தப் பெண் குறிப்பிட்ட விஷயம் அவர் எந்தளவிற்கு கிரகிப்பு தன்மை வாய்ந்தவர் என்பதையும் எத்துனை நுணுக்கமாக காட்சிகளை உற்று நோக்குபவர் என்பதை புலப்படுத்தியது. பொதுவாக தமிழில் ர மற்றும் ற ஆகிய இரண்டு எழுத்துக்கள் எப்படி வித்தியாசப்படுகின்றன அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதில் ஒரு குழப்பமே இருந்ததாகவும் அது அன்னை இல்லம் படத்தில் வரும் எண்ணிரெண்டு பதினாறு வயது பாடல் காட்சியை பார்த்ததும்தான் தெளிவு கிடைத்ததாகவும் குறிப்பிட்ட அந்தப் பெண் அந்த வரிகளை சொல்லிக் காட்டினார்.

    சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றி கிடந்தோம்

    என்ற வரியில் சுற்றி என்ற வார்த்தையில் வரும் ற வையும் சுவர்களுக்குள் என்ற வார்த்தையில் வரும் ர வையும் எப்படி உச்சரிக்க வேண்டும் எதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எதை இலகுவாக உச்சரிக்க வேண்டும் என்பதை தன் வாயசைப்பினாலேயே சொல்லிக் கொடுத்தவர் நடிகர் திலகம் என்றபோது அனைவரும் சிலிர்த்து விட்டனர். வாய்பிற்கு நன்றி கூறி விடைபெற்றார் அந்தப் பெண்.

    அவரின் மனதிலிருந்து நேரடியாக வந்த அந்த கருத்துகளுக்கு நன்றி தெரிவித்த நான் அவரின் பார்வையை சிலாகிக்கும் விதமாக ஒன்றை சுட்டிக் காட்டினேன். அவர் குறிப்பிட்ட அந்த அன்னை இல்லம் பாடல்காட்சியில் அந்த குறிப்பிட்ட வரிகளில் கடற்கரையில் பாறை மீது ஏறி நிற்கும் நடிகர் திலகம் தனக்கே உரித்தான அந்த கையை சற்றே மேலே தூக்கி நீட்டியவாறே பாடுவார். அந்த வசீகரத்தில் அனைவரும் தன்னை மறந்து அவரின் உடல்மொழியைதான் பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் அதையும் தாண்டி அவரின் வாயசைப்பை கவனித்த அந்தப் பெண்ணிற்கு பாராட்டுகளை தெரிவித்தேன்.

    எந்த தலைமுறையையும் ஏன் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் அவர்கள் அனைவரையும் கவரக்கூடிய ஒரே நடிகன் என்றென்றும் நமது நடிகர் திலகம் மட்டும்தானே!

    அன்புடன்

  5. Thanks sss thanked for this post
    Likes Harrietlgy, abkhlabhi, KCSHEKAR, kalnayak, sss liked this post
  6. #3953
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    8.2.2015 மாலை மறக்க முடியாத மாலை. தலைமுறைகளைத் தாண்டி நூற்றாண்டுகளைத் தாண்டி, பல புதினங்கள், பல இலக்கியங்கள், பல இலக்கண நூல்கள் செய்வதை தன் ஒரே ஒரு வாயசைப்பில் செய்து சரித்திரம் படைத்துள்ளார் நடிகர் திலகம்.
    மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம். இன்று மாலை அன்புக்கரங்கள் நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் திரையிடப்பட்டபோது வந்திருந்த உறுப்பினர்களில் ஒருவர் இளைய தலைமுறையைச் சார்ந்தவர். அந்தப் பெண்மணி நடிகர் திலகத்தின் தீவிர ரசிகை என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்றால் அவர் அதை எப்படி உணர்ந்திருக்கிறார் என்பதை அறிந்த போது அது மெய் சிலிர்க்க வைக்கும் செய்தியாகி விட்டது.
    தமிழின் சிறப்பான வல்லினம், மெல்லினம் இடையினம் இவை மூன்றையும் பாடங்களில் உச்சரித்து வகுப்பறையில் கேட்டிருக்கிறோம். நடிகர் திலகத்தின் உச்சரிப்பில் அதை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோம்.
    ஆனால் அவருடைய உதட்டசைவில் அந்த வேறுபாட்டை அவர் உணர்த்தியிருக்கிறார் என்பதையும் அதை இன்றைய தலைமுறை இளம்பெண் ஒருவர் கவனித்து ரசித்து அதைக் கூறிய போது ஆஹா.. நாம் எவ்வளவு பெரிய மேதையுடன் வாழ்ந்திருக்கிறோம் என மிகப் பெரிய கர்வம் ஏற்பட்டது. வாழ்ந்த வாழ்க்கையின் பயன் பூர்த்தியாகி விட்டது எனத் தோன்றியது.
    எண்ணிரண்டு பதினாறு வயது .. இந்தப் பாடலில் ஒரு சரணத்தில் சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றிக் கிடந்தோம் என்ற வரிகளின் போது அவருடைய ஸ்டைலையே பார்த்து ரசித்து மெய் மறந்து கை தட்டியிருக்கிறோம்.
    மடையா அதற்கும் மேலே அந்தப் பாட்டில் விஷயம் இருக்கிறது எனப் பொட்டில் அடித்தாற்போல அந்த இளம் பெண் கூறியது இவ்வளவு வயதானால் என்ன எத்தனை முறை பார்த்திருந்தால் தான் என்ன நடிகர் திலகம் என்ற கடலில் நாம் ஓரிரு முத்துக்களைத் தான் நாம் எடுத்து அணிந்திருக்கிறோம் என மறைமுகமாக நம்மை சாடியது போல் இருந்தது.
    சுற்றி என்ற வார்த்தையில் வரும் வல்லின ற விற்கு அதற்கேற்பவும், சுவர்களுக்குள் என்ற வார்த்தையில் வரும் இடையின ர விற்கு அதற்கேற்பவும் நடிகர் திலகம் தன் உதட்டசைவை வெளிப்படுத்தியிருக்கிறார் என அந்தப் பெண் எடுத்துரைத்த போது..
    ஓ... எனக் கத்த வேண்டும் போலிருந்தது.. தலைவா என்று உரக்கக் கூறி இறைவனுக்கு நன்றியை மிகவும் பலத்த குரலில் சொல்ல வேண்டும் போலத் தோன்றியது..

    நடிகர் திலகம் பாட்டிற்கு வெளிப்படுத்தும் உதட்டசைவை ஏளனம் புரிவோர்க்கு இது சரியான சவுக்கடி

    அந்த இளம்பெண்ணிற்கு என் உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
    அந்த வேறுபாட்டை நீங்கள் இப்போது கவனியுங்கள்.



    சற்றே இடைவெளிக்குப் பின் நம் நிகழ்ச்சிக்கு மீண்டும் வந்திருந்த அவரையும் அவர் தாயாரையும் வரவேற்று உரையாடும் போது, என்னிடம் அவர் இந்த விஷயத்தைக் கூறினார். மிகவும் மகிழ்வுற்ற நான், இதை சபையில் அனைவரும் அறிய கூறினால் சிறப்பாக இருக்குமே என்ற ஆவலில் வேண்டுகோள் விடுத்தேன். அதை ஏற்று அவர் சற்றும் தயங்காமல் சம்மதித்து தன் ரசனையைப் பகிர்ந்து கொண்டதற்கு அவருக்கு மிக்க நன்றி.

    என்னதான் சொல்லுங்கள், முரளி சாரின் எழுத்தாற்றல் தனி தானே..நிகழ்ச்சியை நேரிலேயே பார்ப்பது போல் அவ்வளவு அழகாக கூறியுள்ளார்.

    Hats off Murali Sir
    Last edited by RAGHAVENDRA; 9th February 2015 at 02:47 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Thanks sss thanked for this post
    Likes abkhlabhi, KCSHEKAR, kalnayak, sss liked this post
  8. #3954
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Professions made Perfections for emulation by NT's on-screen Performances : Part 4 Justice

    ராமரின் பாதம் பட்டு உயிர்த்தெழுந்த அகலிகைகள் : குறுந்தொடர்
    நடிகர்திலகம் பெருமைப்படுத்திய உழவும் தொழிலும் : பகுதி 4 நீதித்துறை


    சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதமே சுடர் விளக்கு .........
    ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப் படக் கூடாது


    நீதி வழுவா நெறிமுறைகளைக் கட்டிக் காப்பதில் வழக்குரைஞர்களின் பங்கு மகத்தானது அது போலவே வாத பிரதிவாதங்களின் அடிப்படையில் வழங்கப்படும் நீதிபதியின் தீர்ப்பும் உன்னதமானதே

    நீதித் துறைக்குப் பெருமை சேர்க்கும் நடிகர்திலகத்தின் நடிபபுத்துறை!






    Last edited by sivajisenthil; 9th February 2015 at 06:57 AM.

  9. Likes KCSHEKAR, kalnayak liked this post
  10. #3955
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகம் பாட்டிற்கு வெளிப்படுத்தும் உதட்டசைவை ஏளனம் புரிவோர்க்கு இது சரியான சவுக்கடி
    by Raghavendhar

    Perfection.. thy name is Nadigar Thilagam Sivaji Ganesan!!

    நடிகர்திலகத்தின் ஒப்பிடமுடியாத சொத்துக்கள் அவரது பன்முக நடிப்பாற்றல் , நம்பமுடியாத ஞாபக சக்தி, ஏற்ற இறக்கங்களுடன் கூடிய வசன மழைப் பொழிவு, நடையின் கம்பீரம், காமெரா கோணங்களுடன் கைகோர்க்கும் முகபாவங்கள், உயிர்த் துடிப்புள்ள உடல்மொழி, இசைக் கருவிகளை கையாள்வதில்காட்டும் துல்லியமான அசைவுகள்..எல்லாவற்றுக்கும் மேலாக பாடல் காட்சிகளில் உலகின் எந்தவொரு கலைஞனாலும் நினைத்துக் கூடப் பார்க்க இயலாத பொருத்தமான உதட்டசைவு .. முதல் படத்திலிருந்தே ! ......மெய்சிலிர்த்து வாயடைத்துத்தானே போய் விடும்!!.....எங்கிருந்து வருகிறது ஏளனம்?












    Last edited by sivajisenthil; 9th February 2015 at 09:47 AM.

  11. Likes KCSHEKAR, kalnayak liked this post
  12. #3956
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் – 58
    (From Journalist Mr.Sudhangan's FB Page)

    `பா; வரிசைப் படங்களைப் படத்தைப் பற்றி சொல்லும்போது `பாலும் பழமும்’ படத்தின் கதாசிரியரைப் பற்றி பதிவு செய்ய வேண்டியது அவசியம்!
    அவர் பெயர் ஜி.பாலசுப்ரமணியம்!
    இவர் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி!
    அந்த வேலையை உதறிவிட்டு சினிமாவிற்கு கதை எழுத வந்தவர்!
    எப்போது புத்தகமும் கையுமாகத்தான் இருப்பார்!
    கதைக்கானாலும் சரி, கதையில் சிக்கலானாலும் சரி விடுவிக்க கூடியவர் ஜி.பாலசுப்ரமணியம்!
    ஆங்கில நாவல்கள் அனைத்துமே இவருக்கு அத்துப்படி!
    பாலும் பழமும், பணமா பாசமா, எம்.ஜி.ஆரின் ரகசிய போலீஸ் 115 தங்கச் சுரங்கம், தீர்க்க சுமங்கலி, தெய்வ சங்கல்பம் என்று பல படங்களுக்கு கதை எழுதியவர் இவர்!
    நாடகத்தை எப்படி நடத்த வேண்டும்! நாடக மேடையில் அங்க அசைவுகள் எப்படி இருக்கவேண்டுமென்றல்லாம் இவருக்கு அத்துப்படி!
    உலக நாடகமேடை சினிமா இரண்டையும் விரல் நுனியில் வைத்திருந்த ஒரு மேதை!
    தான் எழுதாத படங்களாக இருந்தால் கூட, கதையில் சிக்கல் என்று இவரிடம் போனால் அந்த முடிச்சை அவிழ்த்து சீராக்கிக்கொடுப்பதில் வல்லவர்!
    ஆறடி உயரம், அஜானுபாகுவான தோற்றம், சிவந்த மேனி! ஒரு போலீஸ் அதிகாரியின் மிடுக்கோடு இருப்பார்!
    கதை வேண்டுமென்றால் அவரைத் தேடித்தா போகவேண்டும்.
    இவராக தேடிப்போய் யாரிடமும் தன்னிடம் கதை இருக்கிறது என்று சொல்லவே மாட்டார்!
    தான் கதை எழுதும் படம் உட்பட எந்த படத்தின் பூஜையிலும் இவரை பார்க்க முடியாது!
    அதனால் அவர் புகைப்படத்தை தேடி எடுப்பது கூட கடினம்!
    ஆனால் அன்றைய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், எம்.ஜி.ஆர் சிவாஜி உட்பட பல பெரிய நடிகர்கள் கூட ஜி.பாலசுப்ரமணியத்திடம் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள்.
    இவர் இன்னொரு ஜாவர் சீதாராமன் என்றே சொல்லலாம்!
    வசனம் திரைக்கதை எழுதும்போது எந்த இயக்குனருக்கு எப்படி எழுத வேண்டுமென்று அழகாக சொல்லிக்கொடுப்பார்!
    ஒரு வகையில் கே. பாலசந்தரின் நாடக குரு என்றே இவரைச் சொல்லலாம்!
    படத்தில் பாடல்கள் பதிவாகி விட்டால் இவருக்கு அதை போட்டுக் கேட்க வைப்பார்கள்!
    பாடலை வைத்து காட்சி அமைப்பை செப்பனிட்டு மெருகேற்றுவார்!
    இந்த பாட்டு இந்த சிச்சுவேஷனுக்கு பொருந்தாது, இதை தூக்கி அந்த இடத்தில் போடுங்கள் என்பார்!
    ஆனால் இவரது தன்மானமும், சுயகெளரவமும் இவருக்கு அதிகம்!
    சினிமாவிற்கே உரித்தான் கூழை கும்பிடு விவகாரமெல்லாம் இவரிடம் கிடையாது!
    சிவாஜி எம்.ஜி.ஆர் இருவருமே ஒரு படத்தை துவக்குவதற்கு முன் ஜி.பியிடம் ஏதாவது நல்ல கதை இருக்கான்னு கேளுங்கள் என்பார்கள்!
    பாச மலர் அண்ணன் தங்கை பாசமென்றால்!
    பாவமன்னிப்பு மத நல்லிணக்கம் என்றால்!
    பாலும் பழமும் அதன் நல்ல கதைக்காக ஒடியது!
    `பாலும் பழமும் வெற்றி நாங்கள் அதாவது திரையில் தோன்றிய நடிகர்கள் மட்டுமல்ல. படத்தை மக்கள் பாக்கறதுக்கு முன்னாடியே இரண்டு பேர் ஜெயிச்சுட்டாங்க! ஒருவர் ஜி.பி. இன்னொருவர் கண்ணதாசன். இந்த படத்தில் ` என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்! இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்!ன்னு ஒரு பாட்டு வரும்!
    அப்போது எனக்கு செட்டியாருக்கும் ( கண்ணதாசன்) லேசான மன வருத்தமிருந்தது.
    அந்த வயசில இருந்த கோபத்தில் எனக்கு கண்ணதாசன் பாட்டு வேணாம்னு சொல்லிட்டேன்.
    அப்புறம் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணியும், படத்தின் இயக்குனர் பீம்சிங்கும் நீங்க வேணா அவரை பாக்காம இருங்க. ஆனால் இந்த கதைக்கு கண்ணதாசன் இல்லேன்னா சரியா வராதுன்னு பிடிவாதமாக இருந்தாங்க!
    நானும் சரின்னு சொல்லிட்டேன்!
    என்னை சீண்டற மாதிரி எழுதின வரிகள் ` என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்! இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்’ இந்த வரிகள் அவர் கதைக்காக எழதலை எனக்காக கண்ணதாசன் எழுதினது . ஆனால் இந்த பாட்டை கேட்டவுடன் நானே அப்பச்சிக்கு ( கண்ணதாசன்) போன் பண்ணி கவிஞரே எதையும் மனசுல வெச்சுக்காதீங்கன்னு சொன்னேன்.
    நாங்க கலைஞர்கள் குழந்தைகள் மாதிரி! அடிச்சுப்போம்! அடுத்த நிமிடமே எல்லாத்தையும் மறந்துட்டு சேந்துப்போம். ஆனால் கவிஞர் பாட்டைக் கேட்டாலே எனக்கு நடிப்பு பீறிட்டிக்கிட்டு வரும்!’ இப்படி ஒரு பேட்டியில் என்னிடம் சொன்னவர் சிவாஜி கணேசன்!
    இந்த பேட்டிக்கு பிறகு தன் படங்களுக்கு கண்ணதாசன் எழுதிய பல பாடல்களை சிவாஜி உதாரணம் காட்டினார்!
    பாலும் பழுமும் படத்தில் பல பாடல்கள் இன்றைய நல்ல உணர்வுள்ள காதலர்களுக்கு இன்றும் பொருந்தும்!
    பாலும் பழமும் படத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள்!
    அத்தனையும் அருமையான பாடல்கள்!
    இந்த படத்தின் எந்த பாடலுக்கு முதல் மார்க் என்றால் பலருக்கு குழப்பம் வரும்!
    ஆனால் இந்த படத்தின் பாடல்களுக்கு சிவாஜி கொடுத்த முதல் ரேங்க் பாடல் எது தெரியுமா ?
    `இந்த பணம், புகழ் இந்த போதையெல்லாம் என் தலைக்கு ஏறும்போதெல்லாம். இந்த பாட்டை கேட்டால் நான் சகஜ நிலைக்கு வருவேன்! இது எல்லார் வாழ்க்கைக்கு பொருந்தும்’ என்றார் சிவாஜி!
    அந்த பாட்டுதான்
    `போனால் போகட்டும் போடா – இந்த
    பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா !
    எனக்கு ஒவ்வொரு மனிதரின் மரணத்தின் போது இந்த வரிகள் வந்து காதுகளில் வந்து அலை மோதும்!
    வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்
    ஜனனம் என்பது வரவாகும் – அதில்
    மரணம் என்பது செலவாகும்!
    என்னைப் பொறுத்தவரையில் கண்ணதாசன் `அர்த்தமுள்ள இந்து மதம்’ எழுதுவதற்கு அவர் ஆழ்மனதில் ஆழமாக பதிந்த அவர் எழுதிய இந்த மாதிரி வரிகள் என்றே எனக்கு தோன்றும்!
    ` இரவல் தந்தவன் கேட்கின்றான் - அதை
    இல்லையென்றால் அவன் விடுவானா!
    உறவைச் சொல்லி அழுவதனாலே
    உயிரை மீண்டும் தருவானா ?
    கூக்குரலாலே கிடைக்காது – இது
    கோர்ட்டுக்கு போனால் ஜெயிக்காது – அந்தக்
    கோட்டையில் நுழைந்தால் திரும்பாது!
    கண்ணதாசன் வரிகளை வைத்தே காட்சிகளை அமைப்பார்கள் இயக்குனர்கள்!
    இந்தப் பாடலை கேட்டவுடனே இந்த பாட்டுக்கு நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை உடனே மனதில் அசை போட்டுக்கொண்டேன்!
    பாடல் பதிவாகி எனக்கு அனுப்புவார்கள்!
    அந்த பாடல் காட்சி படப்பிடிப்பு நடக்க இன்னும் பல நாட்கள் இருந்தாலும் அந்த பாடலை கேட்டு கேட்டு மனப்பாடம் செய்துவிடுவேன்!
    அதானால் படத்தில் நான் நடிக்கும் போது பலர் நானே பாடுவதாக நினைப்பார்கள்.
    இந்த போனால் போகட்டும் போடாம் காட்சி எடுத்த விதமே இன்னும் என் நினைவில் இருக்கு

    (தொடரும்)
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  13. Likes kalnayak liked this post
  14. #3957
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    வேந்தர் தொலைக்காட்சியில், ஒவ்வொரு ஞாயிறு அன்றும் பிற்பகல் 1 மணி முதல் 1.30 வரை, நடிகர்திலகம் சிவாஜி அவர்களைப் பற்றி "தடம் பதித்தவர்கள்" என்ற தலைப்பில் தொடர் ஒளிபரப்பாகிறது. (சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் 9 மணி வரையும் முதல் வாரத்தின் பகுதி மறு ஒளிபரப்பாகிறது)
    (இத்தொடர் இன்னும் மூன்று வாரங்கள் ஒளிபரப்பாகவிருப்பதாகும், நடிகர்திலகத்தின் இறுதி ஊர்வலக் காட்சியையும் கடைசி EPISODE -ல் சேர்க்க இருப்பதாகவும் நிகழ்ச்சி இயக்குனர் தெரிவித்தார்). 08-02-2015 அன்று ஒளிபரப்பான பகுதி -5 ன் இணைப்பு:

    Last edited by KCSHEKAR; 9th February 2015 at 02:43 PM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  15. Thanks kalnayak thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  16. #3958
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like

  17. #3959
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    DO WE KNOW - SIVAJI GANESAN'S BOX OFFICE STAGE PLAY

    To day every filmmaker, producer and of course, the actors are so much concerened about spreading their "100 CRORES" news everywhere on the micro blogging pages and social networking sites. But least we know that Sivaji Ganesan during his time managed to spin 32 LACS OF COLLECTIONS JUST WITH 100 STAGE SHOWS OF HIS MAGNUM OPUS "VEERAPANDIYA KATTABOMMAN". During the 100th show, the the TN CM Annadorai made his presence at the stage play and awarded a trophy to Sivaji Ganesan. Well, Sivaji ganesan DIDN'T HAVE ANYTHING TO DO WITH THE HUGE COLLECTION AND DONATED THE COMPLETE FUNDS TO THE GOOD PURPOSES OF STATE.

    Courtesy - Pride of Tamil Cinema 1931-2014 - G Dhananjayan

  18. #3960
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    Raghavendra Sir .................................................. .................................................. ...............................................
    ................................. "இவ்வளவு வயதானால் என்ன எத்தனை முறை பார்த்திருந்தால் தான் என்ன நடிகர் திலகம் என்ற கடலில் நாம் ஓரிரு முத்துக்களைத் தான் நாம் எடுத்து அணிந்திருக்கிறோம் என மறைமுகமாக நம்மை சாடியது போல் இருந்தது".

    TRUE SIR

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •