Page 343 of 400 FirstFirst ... 243293333341342343344345353393 ... LastLast
Results 3,421 to 3,430 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

 1. #3421
  Senior Member Diamond Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  9,187
  Post Thanks / Like
  Desktop version

  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 2. Thanks kalnayak, sivajisenthil thanked for this post
  Likes kalnayak, gopu1954, sivajisenthil liked this post
 3. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 4. #3422
  Senior Member Diamond Hubber Yukesh Babu's Avatar
  Join Date
  Aug 2013
  Posts
  5,135
  Post Thanks / Like
  சிரித்து வாழ வேண்டும்
  பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

  உழைத்து வாழ வேண்டும்
  பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

 5. #3423
  Senior Member Diamond Hubber Yukesh Babu's Avatar
  Join Date
  Aug 2013
  Posts
  5,135
  Post Thanks / Like
  'உங்களுடன் நடித்த கதாநாயகிகளைப் பற்றி விமர்சனம் சொல்லுங்களேன்...' என்று, ஒரு முறை சிவாஜியிடம் கேட்ட போது, ஒவ்வொருவரைப் பற்றியும், ரத்தின சுருக்கமாக அவர் சொன்னது,
  'பானுமதி - திறமைசாலி,
  கே.ஆர்.விஜயா - ஹோம்லி,
  தேவிகா - நல்ல அழகான கண்கள் கொண்டவர்,
  பத்மினி- ரொமாண்டிக்கான பார்வையுடன் லவ்லி,
  சாவித்திரி,
  அவளோடு நடிக்கும்போது, ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும். இல்லைன்னா, நடிப்பில் நம்மளையே சாப்பிட்டு விடுவா...' என்றார்.
  படித்ததில் பிடித்தது.
  சிரித்து வாழ வேண்டும்
  பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

  உழைத்து வாழ வேண்டும்
  பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

 6. #3424
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Jan 2012
  Posts
  1,194
  Post Thanks / Like
  Ooty varai Uravu,

  Ooty varai Uravu released in Delite theatre this week . Myself, mother & father went to the movie after a long time for Sunday evening show, the theatre was nearly houseful , also we could see that the movie attracted family crowds ,yes most the people came with their family , It is to be noted that the film is gaining momentum since Christmas . Songs, Nagesh comedy were well received. It is a very healthy sign that Nadigar Thilagam movies are screened in regular intervals in this theatre and attracting huge crowds

 7. #3425
  Senior Member Regular Hubber
  Join Date
  Dec 2004
  Posts
  233
  Post Thanks / Like

  ஆரூர் தாஸ் அவர்களின் தினத்தந்தி கட்டுரை

  நீங்காத நினைவுகள் (ஆரூர் தாஸ் அவர்களின் தினத்தந்தி தொடர் - நிறைவுக் கட்டுரை )
  பதிவு செய்த நாள்: சனி, டிசம்பர் 27,2014, 11:59 am ist
  நன்றி :திரு vcs


  2001-ம் ஆண்டு ஜூலை இரண்டாவது வாரத்தில் ஒருநாள் நள்ளிரவுஇரைவுக் நான் ஒரு கனவு கண்டேன். சென்னை தியாகராயநகர் 'செவாலியே' சிவாஜிகணேசன் சாலையில் உள்ள அவருடைய 'அன்னை இல்லம்' மாளிகையின் உள்ளேயும், வெளியிலும் நண்பர்களும், ரசிகர்களும் மற்றும் பொதுமக்களும் ஏராளமாகக் குழுமி இருந்தனர். அவ்வப்போது அங்கு சென்று அண்ணன் சிவாஜியைப் பார்த்துப் பேசிவிட்டு வரும் வழக்கமுள்ள நான், இன்றைக்கு அந்தக் கூட்டத்தைப் பார்த்துக் குழம்பிய நிலையில் உள்ளே சென்றேன்.

  கூட்டத்தில் நான் கண்ட அந்தக்காட்சி என்னை அதிர்ச்சி அடையச் செய்தது.

  நான் பார்த்து இதுவரையில் மேல் மாடியில் இரண்டாவது படுக்கை அறைக்குள், பளபளவென்ற ஒரு அழகான அகலமான பித்தளையினால் ஆன கட்டிலில் படுத்துறங்கிவந்த நடிகர் திலகம், இன்று குளிர் பதனம் செய்யப்பட்ட ஒரு நீண்ட கண்ணாடிப் பேழைக்குள் கண் மூடி மீளாத்துயில் கொண்டிருந்தார். அந்தப் பேழையின் மேல் கமலாம்மா தன் முகத்தைப் பொருத்திக் கண்ணீர் விட்டுக் கதறிக் கொண்டிருந்தார். இதைக் கண்டதும் நான் தீயை மிதித்ததைப் போலத் துடித்து 'அண்ணே' என்று அலறினேன்.

  இப்பொழுது நான் என் வீட்டுப் படுக்கை அறையில், படுக்கையிலிருந்து என்னை அறியாமல் எழுந்து உட்கார்ந்திருப்பதை உணர்ந்தேன். என் அலறல் சப்தத்தைக்கேட்டு அருகில் உறங்கிக் கொண்டிருந்த என் மனைவி திடுக்கிட்டு எழுந்து, 'என்னங்க. என்னாச்சு?' என்று கேட்டார்.

  நான்:- அண்ணன் போயிட்டாரு.

  மனைவி:- எந்த அண்ணன்?

  நான்:- சிவாஜி.

  மனைவி:- இல்லே. நீங்க கனவு கண்டிருக்கீங்க.

  நான்:- ஆமா. கனவுதான். இப்படி ஒரு கனவு எனக்கு ஏன் வந்தது?

  மனைவி:- கொஞ்ச நாளா நீங்க போய் அவரைப் பார்க்கலே. பார்க்கணும் பார்க்கணும்னு சொல்லிக்கிட்டு அவர் ஞாபகத்துலேயே இருக்கீங்க. அதனாலதான் அவரைப்பத்தி கனவு கண்டிருக்கீங்க.

  நான்:- இருந்தாலும் இப்படி ஒரு கெட்ட கனவு ஏன் வரணும்? இது ஏதோ ஒரு அறிகுறி மாதிரி எம்மனசுக்குப் படுது... ஒருவேளை...

  மனைவி:- (குறுக்கிட்டு) அதெல்லாம் ஒண்ணும் இல்லே. பேசாம படுத்துத் தூங்குங்க. நாளைக்குக் காலையில போயி அவரைப் பார்த்திட்டு வாங்க. சரியாப் போயிடும்.

  மறுநாள் காலை. அண்ணனின் 'அன்னை இல்லம்'. வழக்கம்போல அந்த 'புலிக்கூட'த்தைக் கடந்து உள்ளே இடது புறம் மாடிக்குச் செல்லும் மரப்படிகளில் ஏறினேன்.

  ஆரம்ப நாட்களில் சிவாஜி வேட்டைப் பிரியராக இருந்தார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூரில் உள்ள அவருடைய அருமை நண்பரும், செல்வந்தருமான என் அன்பிற்கினிய அண்ணன் முத்துமாணிக்கத்தின் இல்லத்தில் கமலாம்மாவுடன் சென்று தங்குவார். பின்னர் இரவு நேரங்களில் அண்ணன் முத்துமாணிக்கம் மற்றும் உறவினர்களுடனும் சேர்ந்து ஊருக்கு அப்பால் உள்ள காட்டிற்கு துப்பாக்கியுடன் சென்று வேட்டையாடுவதை அவ்வப்போது வழக்கமாகக் கொண்டிருந்தார்.

  1960-ல் 'பாசமலர்' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில், இந்த முத்துமாணிக்கம் என் மீது கொண்ட அன்பினால் என்னை எழுதவைத்து, அதை என் அருமை நண்பர் ஸ்ரீதரை இயக்கச் செய்து, சிவாஜி நடித்து ஒரு படம் எடுக்கவேண்டும் என்று ஆவல் கொண்டார். இதற்காக சிவாஜியின் பிள்ளைகளான ராம்குமார், பிரபு இருவரின் பெயரைக்கொண்டு 'பிரபுராம் பிக்சர்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நேரத்தில் நான் இயக்குநர் ஏ.பீம்சிங்கின் 'பாசமலர்', 'பார்த்தால் பசிதீரும்', 'படித்தால் மட்டும் போதுமா', அத்துடன் தேவர் பிலிம்சில் எம்.ஜி.ஆர். நடித்து நான் அவருக்கு எழுதிய முதல் படமான 'தாய் சொல்லைத் தட்டாதே' மற்றும் ஏவி.எம்.மில் ஏ.சி.திருலோகசந்தரின் 'வீரத்திருமகன்' ஆகிய படங்களில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அதனால் போதிய நேரமின்மை காரணமாக ஸ்ரீதருடன் இணைய முடியாமல் போய்விட்டது.

  அதன் பிறகு ஸ்ரீதரே எழுதி- இயக்கி, சிவாஜி- சரோஜாதேவி நடித்த அந்தப்படம்தான், பிரபுராம் பிக்சர்ஸின் 'விடிவெள்ளி'. அந்த ஒரு படத்திற்குப்பிறகு அண்ணன் முத்துமாணிக்கம் மேற்கொண்டு படத்தயாரிப்பில் ஆர்வம் கொள்ளவில்லை.

  வேட்டையாடிய அந்த நாட்களில் சிவாஜிக்கு ஒரு வேங்கைப்புலி கிடைத்தது. அதை அப்படியே பதப்படுத்திப் பாடம் பண்ணி அசல் உயிர்ப்புலி போல ஆக்கி அழகுற இல்லத்தின் முன்கூடத்தில் நிறுத்தி இருந்தார். அதனால் அதை நான் 'டைகர் ஹால்' - 'புலிக்கூடம்' என்று சொல்வதுண்டு.

  மாடி வராந்தாவைக் கடந்தேன். வழக்கம்போல அண்ணனும், அண்ணியும் ஹாலில் அமர்ந்திருந்தனர். நான் வருவதைக்கண்டு கமலாம்மா 'ஆரூரார் வர்றாரு மாமா' என்றார். அதைக்கேட்டு அண்ணன் தன் வலது கையை நெற்றி மீது வைத்து, தூரத்தில் வருபவர்களை வயோதிகர்கள் விழிகளை விரித்துப் பார்ப்பதுபோல என்னைப் பார்த்தார். இதற்கு முன்பு அவர் அப்படிப் பார்த்தது கிடையாது. அதை வைத்து அவருடைய வயதின் முதிர்ச்சியை நான் உணர்ந்து கொண்டேன். வழக்கம்போல அவரது காலைத்தொட்டு வணங்கிவிட்டு அருகில் அமர்ந்தேன்.

  ஒருகணம் என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு கேட்டார்:-

  சிவாஜி:- என்னப்பா? ஊர்லதான் இருக்கியா?

  நான்:- ஆமாண்ணே. இங்கேதான் இருக்கேன்.

  சிவாஜி:- பின்னே ஏன் முந்திமாதிரி என்னைப் பார்க்க அடிக்கடி வர்றதில்லே. அண்ணனை மறந்திட்டியா?

  நான்:- ஐயோ! உங்களை நான் மறக்கமுடியுமா? இப்போ டப்பிங் படங்கள் நிறைய பண்றேன். அதனால நேரம் கிடைக்கலே. அதுதான் காரணம். வேற ஒண்ணுமில்லே.

  உம்...... (சற்றுத்தயங்கியபடி) அண்ணே! நேத்து ராத்திரி கூட உங்களைக் கனவுல கண்டேன்...

  சிவாஜி:- ஓ! அப்போ கனவுல என்னைக் கண்டாதான் நேருல பார்க்க வருவே போலருக்கு. பரவாயில்லே. உன் கனவுலயாவது என்னைப் பாக்குறியே... அதுவரைக்கும் சந்தோஷம். ஆமா...இப்போ உனக்கு என்ன வயசாகுது?

  நான்:- அறுபத்தொன்பது முடிஞ்சி எழுபது நடந்துகிட்டிருக்கு.

  சிவாஜி:- அப்படியா? உன்னைப் பார்த்தா அப்படித் தெரியலே. அஞ்சாறு வயது குறைச்சலா தெரியிது. என்னைப் பார்த்தா எப்படித் தெரியிது? நீதான் கரைக்டா சொல்லுவே.

  நான்:- உங்க வயசு எனக்குத் தெரியும். அதை வச்சு சொல்றேன். இப்போ உங்களைப் பார்க்கும்போது அஞ்சு வயசு கூடுதலா தோணுது. அந்த அளவுக்கு ரொம்ப தளர்ந்து போயிருக்கீங்க.

  சிவாஜி:- உண்மைதான். ஏன் அப்படி ஆயிட்டேன்?

  நான்:- சின்ன வயசுலேருந்து நாடக வாழ்க்கை! சினிமாவுக்கு வந்ததுக்கப்புறம்... நிறைய படங்கள்! ராத்திரி பகலா ஷட்டிங்! கடுமையான உழைப்பு... படத்துக்குப் படம் வித்தியாசமான - பலவிதமான வேஷங்கள்ள உங்களை நீங்களே மறந்து உணர்ச்சி வசப்பட்டு நடிச்சு நடிச்சு உடம்பை ரொம்ப வருத்திக்கிட்டிருக்கீங்க. அதனாலதான் இப்போ தளர்ந்து போயிட்டிங்க...

  சிவாஜி:- (கண்கலங்கி) உண்மைதான். நீ சொல்றதுதான் சரி. அனாவசியமா என் உடம்பைப்போட்டு தண்டிச்சிக்கிட்டேன். அவ்வளவு தேவை இல்லே... இல்லியா? என்ன சொல்றே?

  நான்:- அண்ணே! ஒண்ணு சொல்றேன். உங்களை நீங்களே தண்டிச்சிக்கிட்டு அப்படிக் கடுமையா உழைச்சு நடிச்சதுனாலதான் 'நடிகர் திலகம்' சிவாஜி ஆனீங்க! இல்லேன்னா சாதாரண வி.சி.கணேசனாத்தான் இருந்திருப்பீங்க. அதுமட்டுமில்லே, ஆரம்ப நாட்கள்ள தி.மு.க.வுலேருந்து நீங்க விடுபட்டதுக்கப்புறம், உங்களுக்கு உண்டான எதிர்ப்பு நெருப்புலே உங்களைத் தவிர வேற யாராயிருந்தாலும் எரிஞ்சிப் பொசுங்கிப் போயிருப்பாங்க.

  தனித்துவம் பெற்ற தலைசிறந்த உங்க நடிப்பு ஒண்ணுதான் உங்களுக்கு உறுதுணையா இருந்து காப்பாத்துச்சு. இல்லேன்னா அந்த வெள்ளத்துல நீங்க மூழ்கிக் காணாமலே போயிருப்பீங்க. எதிர்நீச்சல் போட்டுக் கரையேறி இருக்க முடியாமப் போயிருக்கும்!

  அதை வச்சுத்தான் அண்ணா அன்னிக்கு சொன்னாரு:- 'சிவாஜிகணேசன் போன்ற அற்புதமான கலைஞர்கள் நம்முடன் இருக்கிறார்கள் என்பதே நமக்குப் பெருமை அல்லவா. நம் நாட்டிலே இப்படிப்பட்ட கலைஞர்கள் இருப்பது நம் நாட்டுக்குக் கிடைத்த புகழ் அல்லவா. அந்த வகையிலே நாம் பெருமையும், பூரிப்பும் அடையவேண்டும்.

  சிவாஜிகணேசன் சாதாரண நாடக நடிகராக இருந்து இன்று தலைசிறந்த திரைப்பட நடிகரான காலம்வரை அவரை எனக்குத் தெரியும்.

  வைரம் கிடைப்பது கடினம். ஆனால் எவ்வளவு நாள் ஆனாலும் வைரம் மின்னாமல் போகாது. அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடிக்காமலிருந்தால், அமெரிக்கா கிடைக்காதா என்ன? அதுபோலத்தான் சிவாஜிகணேசனும்! அவர் என்றுமே என் உள்ளத்தில் உள்ளார். அவரை என்றும் வாழ்த்திக் கொண்டிருக்கிறேன். அவர் அரும்பாக இருக்கும்போதே, அது மலராகும் என அறிந்தவன் நான். எல்லோரையும்விட நான் அதிகமாக மகிழ்கிறேன்'.

  இதை அண்ணா எப்போ சொன்னாரு? நீங்க கழகத்துல இருந்தப்போ இல்லே - அதைவிட்டு வெளியே வந்ததுக்கப்புறம் உங்க எதிர்ப்பாளர்களுக்கு மத்தியில் எடுத்துச் சொல்லி உங்களைப் பெருமைப்படுத்தினாரு. நினைவிருக்கா?

  சிவாஜி:- (தலையசைத்தபடி) எனக்கு இருக்கோ இல்லியோ, நீ நல்லா நினைவு வச்சிருக்கே. இப்படியெல்லாம் நீ பேசுறதைக் கேக்கும்போது எனக்கு அஞ்சாறு வயசு குறைஞ்சிட்டது மாதிரி மனசுக்குள்ளே ஒரு தெம்பு பொறக்குது. ஆரூரான்! கமலாம்மாதான் என்னைப்பத்தி ரொம்ப கவலைப்படுறா. எனக்குச் சொன்னது மாதிரி உங்க அண்ணிக்கும் சொல்லு.

  நான்:- (கமலாம்மாவிடம்) என்ன அண்ணி? என்ன அப்படி உங்க கவலை?

  கமலாம்மா:- 'ஒண்ணுமில்லே. இப்போல்லாம் 'கமலா! ஜாக்கிறதையா இருப்பியா, ஜாக்கிறதையா இருப்பியா'ன்னு மாமா அடிக்கடி என்னைக் கேக்குறாரு. ஏன் அப்படி கேக்குறார்னு எனக்குப் புரியலே. முந்தியெல்லாம் இப்படிக் கேக்கமாட்டாரு. அது ஒண்ணுதான் எனக்குக் கவலையா இருக்கு. மத்தபடி எதுவும் இல்லே' என்று கூறியவாறு கலங்கியதன் கண்களை முந்தானையால் துடைத்துக் கொண்டார்.

  இதைக்கேட்டு நான் ஏறிட்டு அண்ணனைப் பார்த்தேன். அவருடைய கண்களும் கலங்கியிருந்தன. கமலாம்மா அவ்வாறு கூறியதன் பொருளை நான் புரிந்து கொண்டேன் என்பதை அண்ணன் தெரிந்து கொண்டார் என்பதை அவருடைய கண்கள் எனக்குக் காட்டிக்கொடுத்தன!

  அண்மைக்காலமாக அண்ணன் - அண்ணி இருவருடைய மனங்களுக்குள்ளும், ஒரு 'மவுன நாடகம்' நடைபெற்றுக் கொண்டிருப்பதை அன்றைக்கு என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. சற்று நேரம் நிலவிய மவுனத்திற்குப்பிறகு...

  கமலாம்மா:- (என்னிடம்) முந்தி மாதிரி அடிக்கடி இங்கே வந்து அவரோட பேசிக்கிட்டிருங்க. அவருக்கு ஆறுதலாயிருக்கும். உங்ககிட்டேதான் அவர் மனம்விட்டு எதையும் பேசுவாரு.

  நான்:- ஆமாண்ணி. எனக்குத் தெரியும். இனிமே அடிக்கடி நான் இங்கே வர்றேன். ஒண்ணும் கவலைப்படாதீங்க. நீங்க இருக்கும்போது அவருக்கு என்ன குறை? வர்றேன்.

  விழிகளில் தேங்கிய வெந்நீருடன் விடைபெற்றேன். அடிக்கடி வந்து அண்ணனுடன் பேசி, அவருக்கு ஆறுதல் அளிப்பதாகக் கூறினேனே இனி அதற்கு வாய்ப்பும் சாத்தியமும் இல்லாமல் போய்விடும் - ஏனென்றால், இதுதான் என் அன்பிற்கினிய அருமைப் 'பாசமலர்' ஆன அண்ணன் சிவாஜிகணேசனுடனான எனது 'இறுதிச்சந்திப்பு' என்பதையும் முந்தின நாள் இரவு நான் கண்ட அந்தக் கெட்ட கனவு பலிக்கப்போகும் துக்க நாள் பக்கத்தில் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் அன்றைக்கு நான் அறிந்தேனில்லே.

  நான் முன்கூட்டியே முற்றும் அறியக்கூடிய 'திரிகாலஞானி'யா என்ன? இது நிகழ்ந்த மறுவாரம்...

  21.7.2001 அன்று முன் இரவு வழக்கம்போல குளித்து முடித்துவிட்டு, வீட்டு வாசல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளில் தண்ணீர் வார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது எனது இரண்டாவது மகளான உஷாதேவி வீட்டிற்குள்ளிருந்து பரபரப்புடன் வெளியே ஓடிவந்து...

  உஷா:- அப்பா! சிவாஜி அங்கிள் தவறிட்டாரு.

  நான்:- என்னம்மா சொல்றே?

  உஷா:- ஆமாம்பா. இப்போ டி.வி.லே நியூஸ் போய்கிட்டிருக்கு. அப்போலோ ஹாஸ்பிட்டல்லே... என்பதற்குள் மேற்கொண்டு கேட்க முடியாத நிலையில் திடுக்கிட்டு, கையிலிருந்த தண்ணீர் வாளியை நழுவ விட்டு தலைசுற்றி அப்படியே வெளித்திண்ணையில் உட்கார்ந்து சரிந்து விட்டேன். அதைப்பார்த்து, 'அப்பா' என்று பதறிப்போன என் மகள் உள்ளே ஓடிச்சென்று தண்ணீர் கொண்டுவந்து என் முகத்தில் தெளித்துவிட்டு தலையை உயர்த்தி வாயில் ஊற்றினாள். இதற்குள் என் மனைவி ஓடிவந்து உள்ளே அழைத்துச்சென்று என்னைப் படுக்க வைத்தார். மயக்கம் தெளிந்த பின்னர் தெரிந்தது, மருத்துவமனையிலிருந்து அன்னை இல்லத்திற்கு அண்ணன் இன்னும் கொண்டுவரப்படவில்லை என்பது. அந்தக் கொடிய இரவு எனக்கு நித்திரை இழந்த நெடியதோர் இரவாக அமைந்தது!

  மறுநாள் அதிகாலை. அரக்கப்பரக்க அண்ணனின் கனவு மாளிகையான அன்னை இல்லத்திற்கு ஓடினேன். அங்கு - கடந்த வாரத்தில் ஒருநாள் நள்ளிரவில் நான் கண்ட அந்தப் பாழுங்கனவு பலித்து, நிஜக்காட்சியாக இருப்பதை நேரில் கண்டு நெஞ்சம் பதறினேன்!

  'மலர்ந்தும் மலராத பாதி மலர்போல வளரும் விழி வண்ணமே! வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே!'

  என்று கவியரசர் கண்ணதாசன் பாடல் இயற்றி, நான் வசனம் எழுதிய என்றும் பசுமையான 'பாசமலர்' படத்தில் தன் அன்புத் தங்கை உறங்குவதைப் பார்த்து நெஞ்சுருகப் பாடி நடித்து நாடுபோற்றிய அந்த நடிகர் திலகம், இப்பொழுது உண்மையாகவே கண்ணாடிப் பேழைக்குள் கண்கள் மூடி மீளாத் துயில் கொண்டிருந்தார்.

  1.10.1928-ல் அதிசயமாகத் தோன்றிய வி.சி.கணேசன் என்ற அந்த அபூர்வ விண்மீன் 72 ஆண்டுகள் 9 மாதங்கள் 20 நாட்கள் உன்னதமாக ஒளிவீசித் திகழ்ந்த பின்னர், 21.7.2001 அன்று மறைந்தது.

  கமலாம்மா கண்ணீரும் கம்பலையுமாகத் தலைவிரிக் கோலத்துடன், தன் அன்புக் கணவர் அயர்ந்து அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த அந்தக் கண்ணாடிப் பேழையின் மீது தனது பாதி உடலைப் பதித்துக்கொண்டு 'மாமா - மாமா' என்று கதறிக் கதறிக் குலுங்கிக் குலுங்கித் துடித்துத் துடித்துத் துன்புற்று அழுது கொண்டிருந்தார். ஆனாலும் அண்ணன் சிவாஜி கண் திறந்து தனது பாச மனைவியைப் பார்க்கவே இல்லை. அன்று 'பாசமலர்' படத்தில் பொய்யாக இறந்து நடித்துக் காட்டியவர், இன்று மெய்யாகவே இறந்து இருந்தார்.

  1958-1959-களில் அவர் அன்றாடம் நாள் தவறாமல் வந்து வந்து, பார்த்துப்பார்த்து, ஆசை ஆசையாகக் கட்டி முடித்துக் கண்டுகளித்த 'அன்னை இல்லம்', அதன் முன் திரண்டிருந்த மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் தெப்பமாக மிதந்து கொண்டிருந்தது.

  17.10.1952 தீபாவளித் திருநாளன்று சிவாஜியின் முதல் படமான 'பராசக்தி' வெளிவந்தது. அதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னதாக மே மாதம் முதல் நாள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலையில் வி.சின்னையா மன்றாயரின் இரண்டாவது புதல்வராகப் பிறந்த கணேசமூர்த்தி என்கின்ற வி.சி.கணேசனுக்கு, இல்லத்தரசியாக மங்கலநாண் புனையப் பெற்றவர் மாதரசி கமலாம்மா. அவர் வள்ளுவருக்கு வாய்த்த வாசுகி அம்மையார்போல வாழ்ந்து, தன் இனிய கணவர் மறைந்து ஆறு ஆண்டுகள் மூன்று மாதங்கள் பதினோறு நாட்கள், அவர் இல்லாமல் தனிமையில் எப்படியோ தாக்குப் பிடித்து, அதற்கு மேல் தாங்க இயலாமல் 2.11.2007 அன்று தனது நேத்திரங்களை மூடிக்கொண்டு நீள்துயில் கொண்டார்.

  அன்றைக்கு என் உள்ளத்தில் உண்டான துயரத்தை நவம்பர் 16-ந் தேதி 'ஜூனியர் விகடன்' இதழில் 'போயிட்டு வாங்கம்மா' என்ற தலைப்பில் இவ்வாறு எழுதியிருந்தேன்:-

  பாசமுள்ள கமலா அம்மாளுக்கு, உங்க அன்புச் சகோதரன் ஆரூர்தாஸ் சொல்வது......

  இதய அறுவை சிகிச்சை செய்துகிட்டதுனால ஏற்பட்ட பல வீனத்தோட இருந்த நான், நவம்பர் ரெண்டாந்தேதி வெள்ளிக் கிழமை மத்தியானம் சாப்பிட்டுட்டு தூங்கிக்கிட்டிருந்தேன். அப்போதான் அந்த டெலிபோன் செய்தி வந்தது. இடி இடிச்ச மாதிரி எதிர்பாராத ஒரு கொடிய செய்தி - நீங்க போயிட்டிங்கன்னு.

  உடனே என் பிள்ளை துணையோட வந்து உங்களைப் பார்த்தேன். ஆறு வருஷங்களுக்கு முந்தி அண்ணன் எப்படி கண்ணாடிப் பேழைக்குள்ளே ஆழ்ந்து தூங்கினாரோ, அதே மாதிரி நீங்களும் கண்ணாடிப்பேழைக்குள்ளே கண்மூடி மீளாத் துயில் கொண்டிருந்தீங்க.

  நெத்தியில் ஒரு ரூபா அகலத்துக்கு வட்டமான குங்குமப்பொட்டு வச்சிக்கிட்டு, கள்ளங்கபடம் அறியாத சின்ன குழந்தை மாதிரி அந்த நாள்ல சிரிச்சிக்கிட்டிருந்த உங்க முகம், இப்போ வாடி வதங்கிப் போயிருந்ததைப் பார்த்துப்பதறிக் கதறி அழுதேன். நாப்பத்தொன்பது வருஷங்களுக்கு முந்தி அண்ணனை நான் முதல் முதலா சந்திச்சது - 'பாசமலர்' படத்துக்கு நான் வசனம் எழுதினது - அண்ணன் என்னை வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வந்து, 'இவன்தான் நம்ம 'பாசமலர்' படத்துக்கு வசனம் எழுதுற ஆரூர்தாஸ். நம்ம ஊர்க்காரன்'னு சொல்லி அறிமுகப்படுத்தி, அவரோட சேர்ந்து உங்க கையால என்னை சாப்பிட வச்சது - அதுலேருந்து அடிக்கடி உங்க வீட்டுக்கு நான் வந்த போதெல்லாம் கூடப்பிறந்த ஒரு சகோதரன் மாதிரி பாவித்து என்னை சாப்பிடவச்சு அன்போட நீங்க உபசாரம் பண்ணுனது... இப்படிக் கடந்தகால நினைவுகள்ளாம் ஒவ்வொண்ணா எங்கண் முன்னால வந்து என்னை வதைச்சிது.

  மனசைத்திறந்து சொல்றேன். 'மருமகளா வீட்டுக்கு வந்த மகாலட்சுமி'ன்னு சொல்வாங்களே - சத்தியமா அது நீங்கதான். 1952-ல் உங்க பதினாலாவது வயசுல, இருபத்திநாலு வயது நிறையாத அண்ணன் உங்க கழுத்துல மாங்கல்யம் புனைஞ்சி, உங்க கையைப் பிடிச்சதுக்கு அப்புறந்தான், கமலாங்குற பேர்கொண்ட தாமரையான உங்க முகத்தைப்பார்த்து கணேசன்கிற அந்தக் கலைக்கதிரவன் ஒளிவீசி உச்சிக்கு வந்தாரு!

  நீங்க அவர் வீட்டுக்கு வந்து விளக்கேத்தி வச்சதுக்கு அப்புறந்தான், 'பராசக்தி' வந்து அவர் வாழ்க்கையில விளக்கேத்தி வச்சா!

  நீங்க புன்னகை புரியப்புரிய அவருக்குப் புகழ் பொங்குச்சு!

  நீங்க சிரிக்கச்சிரிக்க அவருக்குச் செல்வம் எல்லாம் சேர்ந்துச்சு!

  'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' அப்படின்னு கண்ணதாசன் பாடினாரே, அந்த வரம் அண்ணனுக்கு கிடைக்கணுங்குறதுக்காகவே, நீங்க அவருடைய அக்கா மகளா தஞ்சாவூர் பாபநாசத்துக்குப் பக்கத்துல ஒரு குக்கிராமத்துல அறுபத்தெட்டு வருஷங்களுக்கு முந்தி பொறந்தீங்க.

  'இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று' என்று கண்ணதாசன் பாடுன இந்தப்பாட்டும் உங்களுக்குப் பொருந்திடுச்சு.

  இப்போ நினைச்சுப் பார்க்கிறேன்... என்னோட எழுபத்தஞ்சாவது பிறந்த நாள் விழாவை நல்லி குப்புசாமி செட்டியார் கொண்டாடி, அதுல நான் எழுதுன மூணு புத்தகங்கள் வெளியிடுறது சம்பந்தமா அழைப்பிதழ் எடுத்துக்கிட்டு உங்களைப் பார்க்கிறதுக்காக வீட்டுக்கு வந்தேன். புத்தகங்களை அண்ணனோட படத்துக்கு அடியில் வச்சிட்டு, அழைப்பிதழை உங்க கையில கொடுக்கணும்னு விரும்பி, அங்கேயிருந்த பணிப்பெண்கிட்டே சொன்னேன். 'அம்மா உள்ளே படுத்திருக்காங்க. அய்யா போனதுக்கப்புறம் அம்மா வெளி மனுஷங்க யாரையும் பார்க்கிறதில்லே. அதனால் நீங்க அவுங்களைப் பார்க்கமுடியாதுன்னு அந்தப்பெண் சொல்ல, அதுக்கு நான், 'ஆரூர்தாஸ் வந்திருக்கேன்னு சொல்லு - வருவாங்க' என்றேன். கொஞ்ச நேரம் தயங்கி அப்புறம் அந்தப்பெண் உள்ளே போச்சு.

  கால்மணி நேரத்துக்கப்புறம் நீங்க உள்ளே இருந்து வந்தீங்க. உங்க தோற்றத்தைப் பார்த்த மாத்திரத்தில் உண்டான துக்கத்தை என்னால தாங்க முடியாம வாய்விட்டு அழுதேன். என்னைப் பார்த்ததும் நீங்களும் குமுறி அழ ஆரம்பிச்சிட்டிங்க. அந்த சத்தத்தைக் கேட்டு மாடியிலேருந்த தம்பி ராமு கீழே ஓடிவந்து உங்களைத் தாங்கிப் பிடிச்சிக்கிட்டு, 'உங்களைப் பார்த்ததும் அம்மா எமோஷனாயிட்டாங்க'ன்னு சொல்லி உள்ளே அனுப்பிட்டு, என்னை ஆறுதல் படுத்துனாரு. அதுதான் உங்களை நான் கடைசியா பார்த்தது.

  'கமலா! ஜாக்கிரதையா இருப்பியா'ன்னு அண்ணன் அடிக்கடி ஒங்ககிட்டே கேக்குறதா அன்னிக்கு நீங்க எங்கிட்டே சொன்னதன் அர்த்தம் இப்போதான் எனக்குப் புரிஞ்சிது அண்ணி.

  அண்ணனோட பிரிவைத் தாங்கிக்க முடியாம, நீங்க உடைஞ்சி நொறுங்கிப்போயிருந்தீங்க. நல்லவேளையா உங்களுக்கு முந்தியே அவரு போயிட்டாரு. ஒருவேளை அவருக்கு முந்தி நீங்க போயிருந்தீங்கன்னா, இந்த ஆறு வருஷத் தனிமையை ஒருநாள்கூட அவரால தாங்கிக்க முடியாமப்போயிருக்கும். அந்த அளவுக்கு ஒருத்தர்மேல ஒருத்தர் உயிரையே வச்சி வாழ்ந்து வந்துகிட்டிருந்தீங்க!

  பொழுது விடிஞ்சதுலேருந்து ராத்திரி தூங்குற வரைக்கும் அண்ணன் 'கமலா - கமலா'ன்னு உங்களைக் கூப்பிடுறதை எண்ணிப்பார்த்தா குறைஞ்சது ஒரு ஐநூறு தடவையாவது இருக்கும். நீங்க இல்லாம தன்னால இயங்கவே முடியாதுங்குற ஒரு நிலைமையைத் தனக்குத்தானே அவரு உண்டாக்கிக்கிட்டாரு. 'ஷேவ்' பண்ணிக்குறதுக்கு 'ரேஸர்' எடுத்து அதுல பிளேடு வைக்கிறதுக்குக்கூட அண்ணன் உங்களைத்தான் கூப்பிடுவாரு.

  ஒருநாள் இதைப்பார்த்து அவர்கிட்டே தமாஷா சொன்னேன்: 'அண்ணே! அப்படியே அம்மாவை ஷேவும் பண்ணிவிடச் சொல்லுங்க. ஒரு வேலை முடிஞ்சிடும்னேன்'. இதைக்கேட்டு நீங்க ரெண்டு பேரும் சிரிச்சிங்க.

  அவர் உங்களைக் கோவிச்சிக்கிட்டதை ஒருநாள் கூட நான் பார்த்ததே இல்லை. உங்களைக் குறை சொல்லியும் கேட்டது இல்லை.

  'மாமா மாமா'ன்னு எப்போ பார்த்தாலும் ஒரு குழந்தை மாதிரி அண்ணனையே சுத்திச்சுத்தி வந்துகிட்டிருப்பீங்க. ஏன்னா, வீட்டுல இருக்குற நேரங்கள்ள உங்களை விட்டா அவருக்கு வேற கம்பெனி கிடையாது. நம்ம தஞ்சாவூர் பக்குவத்துல உங்க கையால நீங்க பண்ணிக்குடுக்குற விறால் மீன் குழம்பு, எறா வறுவல், வறுத்த கருவாடு, அகல அகலமா நறுக்கின சேனைக்கிழங்கு வறுவல் - இதையெல்லாம் ரொம்ப பிரியமா சுவைச்சி சாப்பிடுவாரு. என்னையும் அவரோட சாப்பிடவச்சி சந்தோஷப்படுவாரு. சில நாள்ள காலை ஏழு மணி ஷட்டிங்குக்கு அண்ணன் ஸ்டூடியோவுக்குப் போகும்போது அங்கே கொண்டுபோய் சாப்பிடுறதுக்காக சுடச்சுட இட்லியும், முதல் நாள் ராத்திரி வச்ச மீன் குழம்பும் கொடுத்து அனுப்புவீங்க. மேக்கப் போட்டு முடிஞ்சதும் அதை அவரு ரொம்ப ருசிச்சு ரசிச்சு சாப்பிடுவாரு.

  ஒரு மனிதனுக்கு நல்ல மனைவி மட்டும் அமைஞ்சிட்டா, அவ ஒரு அன்பான தாய்க்குச் சமம்! நீங்க அவருக்கு பண்புள்ள மனைவியாகவும், பாசமுள்ள தாயாகவும் இருந்து கண்ணை இமை காக்கிறதுபோல காத்துக் கவனிச்சிக்கிட்டிங்க. இந்த உலகத்தைப்பத்தி நல்லது கெட்டது எதுவுமே தெரியாம, விதம் விதமா வேஷம் போட்டு உயிரைக் கொடுத்து தத்ரூபமா நடிக்க மட்டுமே தெரிஞ்சி வச்சிருந்த சிவாஜிகணேசன்கிற அந்தச் சின்னக் குழந்தையைப் பெத்த அன்னை ராஜாமணி அம்மாவுக்கு அப்புறம், நீங்கதான் அவரை வளர்த்து உங்க கண்ணுக்குள்ளே வச்சிக் காப்பாத்திக்கிட்டு வந்தீங்கங்குற உண்மை, உங்களையும், உங்கக் குடும்பத்தைப் பத்தியும் நல்லா தெரிஞ்சவுங்களுக்கெல்லாம் தெரியும்.

  பிள்ளைங்களுக்கும், பெண்ணுங்களுக்கும் நல்லபடியா கல்யாணம் பண்ணிவச்சு, பேரன் பேத்திங்க எடுத்து, பேத்தியோட கல்யாணம் வரைக்கும் பார்க்கவேண்டியதை எல்லாம் பார்த்து சந்தோஷப்பட்டு, அண்ணன் ஒருத்தர் மட்டும் இல்லாமல் போயிட்டாரேங்குற ஒரே ஒரு குறையோட வாழ்ந்து வந்த 'அன்னை இல்லம்' நாயகியான எங்கள் அன்புள்ள கமலா அம்மா! அண்ணனைப் பார்க்கிறதுக்காக இப்போ ஆகாயத்துக்குப் போயிட்டீங்க. போயிட்டு வாங்க.

  உங்க பேத்திங்க, கொள்ளுப்பேத்திங்க யாரோட கருவுலேயாவது அண்ணனும் நீங்களும் உருவாகி, மறுபடியும் அன்னை இல்லத்துக்கு வாங்க.

  போயிட்டு வாங்கம்மா! போயிட்டு வாங்க! (நிறைவு பெற்றது).

 8. #3426
  Senior Member Diamond Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  9,187
  Post Thanks / Like


  சிவாஜி கணேசன் நடித்த வசந்த மாளிகை, ரஜினிகாந்த் நடித்த தனிக்காட்டு ராஜா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களின் தயாரிப்பாளர் டி ராமாநாயுடு உடல் நலக் குறைவால் கவலைக்கிடமாக உள்ளார். 78 வயதான ராமாநாயுடு, தெலுங்குத் திரையுலகில் பெரும் மதிப்புக்குரியவராகத் திகழ்பவர்.
  தமிழில் மதுரகீதம், குழந்தைக்காக, தெய்வபிறவி, திருமாங்கல்யம் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். இந்த வயதில் ஆரோக்கியமாக அனைத்து திரை நிகழ்வுகளிலும் பங்கேற்று வந்த ராமாநாயுடுவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
  ஆனாலும் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவருக்கு வெங்கடேஷ்பாபு, சுரேஷ்பாபு என இருமகன்கள் உள்ளனர். தெலுங்கு சினிமாவின் முக்கிய நாயகனாகத் திகழ்கிறார் வெங்கடேஷ்.
  சுரேஷ்பாபுவின் மகன் தான் தெலுங்கு நடிகர் ராணா. ராமாநாயுடுவின் மகள் லட்சுமிதான் பிரபல நடிகர் நாகார்ஜுனின் முதல் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. எம்பியாக பதவி வகித்துள்ள ராமாநாயுடு, தாதா சாகேப் பால்கே உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  http://kathiravan.com/category/cinema-news/
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 9. #3427
  Senior Member Diamond Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  9,187
  Post Thanks / Like
  Sivaji Ganesan – Definition of Style 13

  நடிகர் திலகம் ... உலகப் பெரு நடிகர் ....

  தமிழ்ப் பண்பாடு, தமிழர் வாழ்வு நெறி - இதை நன்கறிந்த தமிழர்களால் இறைவனாக தொழப்படுபவர். இதைப் பற்றித் தெரியாதவர்களால் மிகை நடிப்பு என விமர்சிக்கப் படுபவர்.

  சினிமாவில் எத்தகைய நடிப்பிற்கும் இலக்கணம் வகுத்தவர். இவருக்கு முன்பு சினிமா நடிப்பிற்கு இலக்கணம் இல்லை.. இவருக்குப் பிறகு சினிமா நடிப்பிற்கு இவரே இலக்கணத்தின் எல்லை.

  அதிகம் அறியப்படாத திரைக்காவியங்களில் அவருடைய மிகச் சிறந்த நடிப்பு, குறிப்பாக இன்றைய தலைமுறையினரிடம் அதிகம் பேசப்படும் இயல்பு நடிப்பை, முறைசார் நடிப்பை, அறிமுகப் படுத்தியவர்.

  அப்படி அதிகம் பேசப்படாத ஒரு திரைக்காவியங்களில் ஒன்றிலிருந்து தான் இன்றைக்கு அவருடைய பாணியைப் பற்றி அறியப்போகிறோம்.

  நான் வணங்கும் தெய்வம்

  இத்திரைக்காவியத்தில் பல காட்சிகளில் இயல்பு நடிப்பு என்றால் என்ன என்பதை நடிகர் திலகம் விளக்கியிருக்கிறார். ஒரு சில காட்சிகளில் நடிகர் திலகத்திற்கு பதில் வேறு நடிகர் பயன்படுத்தப் பட்டிருந்தாலும் அதனால் ஒன்றும் பாதிப்பில்லாத காரணத்தால் அதை விட்டு விடுவோம்.
  தன் மனைவியை நினைத்து பெருமைப்படும் ஒரு காட்சி, an example for actors for demonstrating the romance between affectionate husband and wife.
  இன்னும் பல காட்சிகள் உள்ளன. உதாரணத்திற்கு ஒரு காட்சி மட்டும் இப்போது எடுத்துக்கொள்ளப் படுகிறது.

  மேற்கொண்டு காட்சியைப் பற்றித் தொடரும் முன் கதையைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

  கதைச் சுருக்கம்  சுந்தரம் ஒரு ஏழைத் தொழிலாளி. அக்காள் மகள் ருக்மணியை மணக்கிறான். அவளுடைய தம்பி கோபாலை உயர்படிப்பு வரை படிக்க வைக்க ஆர்வம் காட்டுகிறான்.
  வறுமையின் சோதனையில் சிக்குகிறது அவன் குடும்பம். குடும்பத்துக்காக மூட்டை சுமக்கவும் செய்கிறான். அப்போதும் அவனுடைய ஆர்வம் குறையவில்லை. என்றாலும் கோபாலுக்கு உள்ளுக்குள் அவர்களுக்கு பாரமாக இருக்க விருப்பமில்லை. எனவே சொக்குப்பிள்ளை என்ற பணக்கார்ரிடம் கணக்குப்பிள்ளையாக சேர்கிறான்.
  அங்கு எஜமானரின் மகள் லீலாவுக்கும் கோபாலுக்கும் காதல் மலர்கிறது. இந்நிலையில் ஒரு நாள் பணக்கார்ரின் பணத்தில் ஆயிரம் ரூபாய் குறைகிறது. இதற்கு கணக்கப்பிள்ளை தான் காரணம் என பழி போடுகிறார் சொக்குப்பிள்ளை. இதைக் கேட்ட சுந்தரம் கோபமுற்று கோபாலை அடித்து விடுகிறான். அப்போது அங்கு வரும் லீலா விஷயத்தை விளக்கி கோபால் நல்லவன், திருடனல்ல என நிரூபிக்கிறாள். இதற்குள் கோபால் மாமா அடித்து விட்டாரே, என மனவருத்தத்துடன் வீட்டை விட்டு சென்று விடுகிறான். நிரபராதியான கோபாலை எப்படியாவது கண்டுபிடித்து தன் மனைவியிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு சுந்தரமும் அவனைத் தேட முற்படுகிறான்.
  சந்தர்ப்ப வசத்தால் ஒரு டாக்டரைச் சந்திக்கிறான் சுந்தரம். ஒரு நல்ல நோக்கத்திற்காக தான் ஓர் ஆராய்ச்சியிர் ஈடுபட்டிருப்பதாகவும் அதற்கு சுந்தரம் உதவ வேண்டும் எனவும் டாக்டர் வேண்டுகோள் வைக்க சுந்தரம் சம்மதிக்கிறான்.
  துரதிருஷ்டவசமாக டாக்டரின் ஆராய்ச்சி விபரீதமாக, சுந்தரத்தின் முகம் குரூரமாகிறது. உடலில் அசுரபலம் வருகிறது. காட்டு விலங்குகளையும் பொருட்படுத்தாமல் பந்தாடும் வலிமையுடன் சுற்றுகிறான் சுந்தரம்.
  இதற்கிடையில் ருக்மணிக்கு குழந்தை பிறக்கிறது. வறுமையின் காரணமாக குழந்தையை வைத்துக் கொண்டு மிகுந்த சிரமத்துடன் ஒரு கடையில் சேர்ந்து வேலை செய்து பிழைக்கிறாள்.
  ருக்மணியின் நிலைமையை வைத்து கடைக்கார முதலாளி அவளிடம் தவறாக நடக்க முற்படுகிறான். இதற்குள் கண்ணும் காதும் வைத்து ஊரார் அவளை ஏசுகின்றனர். இந்த சூழ்நிலையில் குழந்தையும் தொலைந்து விடுகிறது. தற்கொலை முடிவில் இருக்கும் ருக்மணி அந்தக் குழந்தைக்காக உயிர் வாழ்கிறாள்.
  இதற்கிடையில் டாக்டர் மீண்டும் சுந்தரத்தைக் கண்டு பிடித்து அவனைப் பழைய நிலைமைக்கு கொண்டு வருகிறார். அவருடைய ஆராய்ச்சி வெற்றி பெற்ற இன்ப அதிர்ச்சியில் அவர் உயிரை விடுகிறார்.
  தன் மனைவி மற்றும் குழந்தையைத் தேடி வரும் சுந்தரம் அவர்கள் இறந்து விட்டதாக கேள்விப்படுகிறான். மிகவும் மனவருத்தம் அடைகிறான்.
  இந்நிலையில் அவன் கோபாலை சந்திக்கிறான்.
  சுந்தரம் மனைவியை சந்தித்தானா
  அவனுடயை மனைவி குழந்தை உயிருடன் இருக்கிறார்களா..
  விடையைக் காண படத்தைப் பாருங்கள்.


  சுந்தரமாக நடிகர் திலகம், கோபாலாக டி.ஆர்.ராமச்சந்திரன், ருக்மணியாக பத்மினி, லீலாவாக ராகினி, டாக்டராக நாகையா, கடைக்காரராக எம்.ஆர்.சந்தானம், பணக்காரராக கே.சாரங்கபாணி முதலானோர் நடித்துள்ளனர்.

  மேலே கதையில் சொன்னவாறு தன்னுடைய சுயரூபம் திரும்பி, தன் மனைவியையும் குழந்தையையும் தேடும் போது அவர்கள் மாண்டு விட்டார்கள் என்பதாக கேள்விப்பட்டு நடிகர் திலகம் மனம் பதைக்கிறார்.

  சாதாரணமாக இந்த மாதிரிக் காட்சிகளில் உணர்ச்சி மயமான நடிப்பை எதிர்பார்ப்போம். அப்படித்தான் அமைத்திருப்பார்கள்.
  ஆனால் இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் மனவேதனையை பிரதிபலிப்பது அவர் கைகள்.
  ஆம்.. புதிய பறவைக்கு முன்பே நான் வணங்கும் தெய்வம் படத்தில் பியானோ வாசிப்பில் தன் உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் திலகம்.
  பாச மலரில் சந்தோஷ உணர்வை பியானோவை வெளிப்படுத்தியிருக்கிறார்.
  புதியபறவையில் கோபம் வெறுப்பு போன்ற உணர்வுகள்.
  நான் வணங்கும் தெய்வம் படத்தில் சோகத்தை வெளிப்படுத்தியிருப்பது புதிய பரிமாணத்தில் என்கிற போது பார்ப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. உள்ளம் நெகிழ்கிறது.
  இந்தக் காட்சி 2.18ல் தொடங்குகிறது.
  பியானோ முதலில் பின்னணியில் ஒலிக்க, ஒரு சில விநாடிகள் கேமிரா அந்த வீட்டை சுற்றுகிறது. பின் உள்ளே நுழைகிறது. அப்படியே சுற்றியவாறு வரும் கேமிரா, தற்போது நடிகர் திலகத்திடம் சென்று நிற்கிறது.

  இனி என்ன ஓரிரு நிமிடங்கள் கேமிரா அவர் வசம் தான்..

  அந்தக் கண்களில் தென்படும் வருத்தம், துயரம் யாவையும் பல பக்க வசனங்களை பிரதிபலிக்கின்றன. திரை இசைத்திலகத்தின் மேற்பார்வையில் இக்காட்சியில் பியானோவின் ஆதிக்கம் அக்காட்சியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது.

  நடிகர் திலகத்தின் விரல்கள் அந்தப் பியானோவில் தாண்டவமாடுவதைப் பார்க்கும் போது இந்த கருவியை முற்றிலும் கற்றுத்தேர்ந்தவரோ என்ற எண்ணம் நிச்சயம் நமக்கு உண்டாகும்.

  முழுதும் விவரித்துக் கொண்டிருந்தால் சுவாரஸ்யம் குன்றி விடும்.

  இனி காட்சியைப் பாருங்கள்.  நான் வணங்கும் தெய்வம்...

  ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் தவறாமல் பார்க்க வேண்டிய படம்.
  இன்றைய கால கட்டத்தில் சற்று விறுவிறுப்பாகவே கதை நகரும் விதம் அமைந்துள்ளது.
  Last edited by RAGHAVENDRA; 29th December 2014 at 09:12 PM.
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 10. Thanks sivajisenthil thanked for this post
  Likes gopu1954, kalnayak, sivaa, sss liked this post
 11. #3428
  Moderator Veteran Hubber
  Join Date
  Mar 2006
  Posts
  3,021
  Post Thanks / Like
  Quote Originally Posted by ragulram11 View Post
  Ooty varai Uravu,

  Ooty varai Uravu released in Delite theatre this week . Myself, mother & father went to the movie after a long time for Sunday evening show, the theatre was nearly houseful , also we could see that the movie attracted family crowds ,yes most the people came with their family , It is to be noted that the film is gaining momentum since Christmas . Songs, Nagesh comedy were well received. It is a very healthy sign that Nadigar Thilagam movies are screened in regular intervals in this theatre and attracting huge crowds
  கோவை டிலைட்டில் தொழிலதிபர் ரவியை காண வந்த மக்கள் கூட்டம் தியேட்டரை கிட்டத்தட்ட ஹவுஸ் புல் ஆக்கியது என்றால் இங்கே சென்னை மகாலட்சுமியில் அது நடந்தேறியது.

  Choudary will never fail!

  மேலே குறிப்பிட்டிருக்கும் வரிகள் படத்தில் நடிகர் திலகம் பேசுவது மட்டுமல்ல எங்கெல்லாம் எப்போதெல்லாம் சௌத்ரி விஜயம் செய்கிறாரோ, அப்போதெல்லாம் இந்த படத்தின் வசூல் கட்டியம் கூறுவது அந்த உண்மையைத்தான். இப்போது சென்னை மகாலட்சுமியில் காட்சியளிக்கும் சௌத்ரிக்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.

  முதல் நாளிலேயே இரண்டு காட்சிகளில் பார்வையாளர் எண்ணிக்கை 700 ஐயும் தாண்டிவிட இரண்டாம் நாளில் அதை நிலை நிறுத்தி கால் லட்சத்திற்கு மேல் வசூல் செய்த தங்கபதக்கம் நேற்று ஞாயிறு மாலை அரங்கு நிறைந்தது. மாலையில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் ரசிகர்களும் பொதுமக்களும் தியேட்டரை முற்றுகையிட்டு விட்டனர். மாலைக் காட்சிக்கு வெளியே ரசிகர்களின் ஆரவார ஆர்ப்பாட்டக் கொண்டாட்டங்கள் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தது என்பது நேரில் பார்த்தவர்கள் சொன்ன செய்தி. மூன்றே நாட்களில் வெறும் 6 காட்சிகளில் வசூலில் அரை லட்சத்தை கடந்து புதிய சாதனை புரிந்திருக்கிறார் சௌத்ரி. வெளியான 1974 முதல் என்றும் சாதனை புரிபவர் இப்போதும் அதை செய்ய தவறவில்லை.

  Sp. சௌத்ரி பெங்களூரில் ஒரு மறு வெளியீட்டின் போது நமது அருமை ரசிக கண்மணிகளால் கௌரவிக்கப்பட்ட காட்சியை அனைவருக்கும் அர்பணிக்கிறேன்.  சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்

  அன்புடன்
  Last edited by Murali Srinivas; 31st December 2014 at 12:05 AM.

 12. Likes gopu1954, sivaa liked this post
 13. #3429
  Moderator Veteran Hubber
  Join Date
  Mar 2006
  Posts
  3,021
  Post Thanks / Like
  Quote Originally Posted by ragulram11 View Post
  Ooty varai Uravu,

  Ooty varai Uravu released in Delite theatre this week . Myself, mother & father went to the movie after a long time for Sunday evening show, the theatre was nearly houseful , also we could see that the movie attracted family crowds ,yes most the people came with their family , It is to be noted that the film is gaining momentum since Christmas . Songs, Nagesh comedy were well received. It is a very healthy sign that Nadigar Thilagam movies are screened in regular intervals in this theatre and attracting huge crowds
  நடிகர் திலகத்தின் எவர் கிரீன் வெற்றி சித்திரம் ஊட்டி வரை உறவு கோவை டிலைட்டில் ஞாயிறு மாலை கிட்டத்தட்ட அரங்கு நிறைந்தது என்பதை நேரில் கண்டு இங்கே அதை பதிவும் செய்த ராகுலுக்கு நன்றி! நமக்கு கிடைத்த தகவலின்படி கடந்த 4 நாட்களில் கணிசமான மக்கள் படத்தை கண்டு களித்திருக்கின்றனர். படத்தை வெளியிட்ட விநியோகஸ்தரும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்.

  அதே போல் நெல்லை சென்ட்ரலிலும் சிபிஐ ஆபிசர் ராஜனுக்கும் நல்ல வரவேற்பு. இன்றைய நாட்களில் தியேட்டர்கள் எண்ணிக்கையில் வெகுவாக குறைந்துவிட்ட நெல்லை போன்ற நகரங்களில் அதிலும் நான்கு புதிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி இருக்கும் நேரத்திலும் நடிகர் திலகத்தின் பழைய படம் வரவேற்ப்பை பெறுவது ஒரு சாதனையே!

  சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்

  அன்புடன்

 14. Likes gopu1954, sivaa liked this post
 15. #3430
  Senior Member Veteran Hubber sivajisenthil's Avatar
  Join Date
  May 2012
  Posts
  4,529
  Post Thanks / Like
  Part 6 of NT's originality in stunt scene participations என்தம்பி (1969)

  நடிகர்திலகத்தின் சண்டை சாகசக் காட்சிப் பங்கேற்ப்பில் முக்கியமான படம் 1969ல் வெளிவந்து சிவாஜியின் சவுக்கு சொடுக்கும் ஸ்டைல் மற்றும் கத்திவீச்சுக் கம்பீரம் பரபரப்பாக சிலாகிக்கப் பட்டு ரசிக நெஞ்சங்களை ஈர்த்திட்ட என்தம்பி வெற்றிப்படம். சிவந்தமண்ணிலும் சவுக்கு சொடுக்கி காஞ்சனாவை ஆட்டுவிக்கும் விதம் பிரம்மாண்டத்தின் ஈர்ப்பே நடிகர்திலகத்தின் trim and slim தோற்றம் மென்மேலும் அவரிடமிருந்து அளவான அதிரடியான சண்டைக்காட்சிகளை எதிர்பார்க்க வைத்தது.

  என்தம்பி மறுவெளியீடு மகிழ்வைத் தருமே!!

  Enjoy the exuberance of NT best exemplified by NT in NT ( N Thambi) in fight and song scenes!!  What an attractive dress combination to suit the fencing style atmosphere! simply superb and unforgettable visual feast to fans!!  NT got inspired by the fencing steps from Tony Curtis in his ace movie The Great Race (1965)

  Last edited by sivajisenthil; 9th January 2015 at 10:58 AM.

 16. Likes gopu1954, kalnayak, sivaa liked this post

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •