Page 52 of 400 FirstFirst ... 242505152535462102152 ... LastLast
Results 511 to 520 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #511
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஆட்சேபணை 1 – கார்த்திக் சார் லட்டு “லதா’ வென்றால் மெகா ஜெயந்தி சரிவரவில்லை “ஜெட்டு” ஜெயந்தி அல்லது சிட்டு(கொஞ்சம் ரொம்பப் பழைய!) ஜெயந்தி
    ஆட்சேபணை 2 – வாசு சார் பாமா விஜயம் அந்தக் கடைசித் துள்ளல் மிடி பாட்டு ஸ்டில் போடாதது..பாட்டைப் போட்டாலும் ஓகே..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #512
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்னொரு rare song

    'பத்துமாத பந்தம்' படத்தின் கிட்டத்தட்ட குத்துப் பாட்டு ரேஞ்சில்

    ரவியும், நிர்மலாவும் கலரில்.

    ஆத்தூரு மாமா
    போட்டாரு மசாலா
    உப்புமில்லே
    சப்புமில்லே
    ஒண்ணுமே வேகவில்லே

    என்று நிர்மலா ரவியைக் கிண்டலடிப்பார்.

    பதிலுக்கு ரவி நிர்மலாவை வாங்கு வாங்குவென்று vanguvaar

    சேத்தூரு மாமி
    கூத்தாட வந்தாளாம்
    முன்னும் இல்லே
    பின்னும் இல்லே
    ஒண்ணுமே ஆடவில்லே (என்னா நக்கலு! கொடுமைடா சாமி)

    பாடலாசிரியருக்கு செம தில்லுதான்

    நிர்மலா இந்தி மும்தாஜ் போல கொள்ளை அழகு.

    நடிகர் திலகமே தெய்வம்

  4. #513
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னக் கண்ணன் சார்,

    துள்ளலா அது! நினைத்தால் சிலிர்க்க வைக்கும் ஆட்டமான ஆட்டம் சார்.

    காஞ்சனா முத்துராமனை பரிதாபமாக கொஞ்ச

    இங்கேயோ

    நாகேஷ் தீவிரவாதிக்கு தீனி போட ஜெயந்தி

    எதற்கும் தயார். இங்கேயும் ராட்சஸி.

    ஆடை மாறிய பாணி என்ன கிருஷ்ணய்யா...

    பேய் ஆட்டம் முடிந்து ஓய்ந்ததும் பார்க்கணுமே!



    நடிகர் திலகமே தெய்வம்

  5. #514
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாசு சார்..வணக்கம் வந்தனம் நன்றி

    மதுரைப் புலி(முரளி சார்) பார்த்துச் சூடு போட்டுக்கொள்ளும் மதுரைப் பூனையாக நான் சில மீள் பதிவு இடப் போகிறேனே

  6. #515
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    (இந்த மீள்ப்திவில் – பா.பே வா வெகுசில தான் எழுதினேன்..புதிதாகவும் எழுத உள்ளேன்..இதுமுடித்ததும்..அன்பர்கள் உஷார்..)
    பாட்டுப் பேச வா - 1
    *-****************************
    அப்துல்ரஹ்மான் கவிதை தான் முதலில் நினைவுக்கு வந்தது.. என்னவாக்கும் அது..

    வானத்துச் சூரியன்
    வர்ணங்களின் தலைவன்
    அதனால் தான்
    அந்திப் பொழுதினில்
    அவன் சிதையின் அருகே
    அத்தனை வர்ணங்களின்
    அனுதாபக் கூட்டம்..!
    *
    வெகுசின்ன வயதில் படித்த இந்தக் கவிதை மனதில் பதிந்த காரணமும் உண்டு..ஒரு அந்திப் பொழுது..கல்லூரி லைப்ரரியில்கவிதைப் புத்தகத்தைவாங்கி பஸ்ஸில் வருகையில் கொய்ங்க் கொய்ங்க் என்று ஏதோ கஷ்டத்திலோ மன வருத்தத்திலோ சூரியன் மேல் திசையில் ஆற்றமாட்டாமல் சிவந்த கண்களுடன் பஸ்ஸின் வேகத்தோடு ஓடிக்கொண்டிருக்க வெளிச்சமும் குறைய பஸ்ஸில் கூட்டமும் கூடியிருக்க – நல்லவேளை ஜன்னலோரம் சீட் என நினைவு- புரட்டிப் புரட்டிப் படித்ததில் மனதைக் கவ்விய வரிகள் இவை..
    ஆமா எதுக்காக..
    *
    காரணம் அந்தி..
    அந்தின்னா என்னவாம்..கூகுளிட்டால் மாலை செவ்வானம் எக்ஸெட்ரா..
    ஆக்சுவலாக செவ்வானம் என்பது சரி..
    *
    வைரமுத்து ப்ரிஸைஸ் ஆ ஒரு விளக்கம் தர்றார்..
    இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு..
    ஸோ பகலோட முடிவாரம்பிச்சு இரவோட ஆரம்பம்..
    அதனாலத் தான் ஒரு பாட்டில இப்படி வருது.. (வாலியோ)
    பொன் அந்தி மாலைப் பொழுது
    பொங்கட்டும் இன்ப நினைவு..
    *
    ஒரு பாட்டில்காதலன் சொல்கிறான்.. அந்த செவ்வானம் மெல்ல மெல்ல இருள் சூழ ஆரம்பிக்க அப்ப பொதக்கடீர்னு நிலாவேற புறப்பட்டு வருதாம்..அது தான் காதலியாம்..
    அழகைச் சுமந்து வரும் அழகரசி
    ஆனந்தப் பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ?
    அவளும் கோச்சுக்கிட்டு ஆன்ஸர் சொன்னது தெரியும் தானே

    நாளும் நிலவது தேயுது மறையுது
    நங்கை முகமென யாரதைச் சொன்னது? (கவிஞர் முத்துலிங்கம் என நினைக்கிறேன்)
    *
    இந்தஃ அந்தி நேரமும் கொஞ்சம் கஷ்டமான நேரம் போல..பாவம் ஒருத்தனுக்கு என்ன ஆச்சு..
    அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து
    கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே..!
    *
    ஃபேமஸ் பாட்டு என்னது அது..
    அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது..
    *
    (சூரியனோ மறையற நேரம்….அப்போ மழை பெய்யுது....கொஞ்சம் கொஞ்சமா டபக் டபக்குன்னு இருளரக்கி சூரியப் பழத்தை ஸ்வாஹா பண்ணிக்கிட்டிருக்கற நேரத்தில என்னாகும்.. வெளிச்சம் மங்கும்..அதுல ரெய்ன் ட்ராப் எப்படி இருக்கும்..மங்கலா இருக்கும்..அதுல முகம் தெரியுதுன்னா.. ஒருவேளை காதலியோட அவுட் ஆஃப் போகஸ் போட்டோ வச்சிருப்பானோ  )
    *
    அந்தின்னுபோட்டா சோன்னு மழை மாதிரி பாடல் நிறைய இருக்கு..
    ஒரு சில..
    கன்னி மயிலென்ன கண்டேன் உனை நானே அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
    *
    அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே
    *
    அந்தி சாயற நேரம் மந்தாரச் செடி ஓரம்..
    *
    அந்திவரும் நேரம்
    *
    முன் அந்தி சாரல் நீ முன் ஜென்ம தேடல் நீ நான் தூங்கும் நேரத்தில் தொலை தூரத்தில்
    *
    அந்தி பொழுதில் தொடங்கும் அன்பு கவிதை அரங்கம் ....
    அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம்
    கடைசியா ஒரு பாட்டு..
    *
    அந்தி மயங்குற நேரத்திலே ஆத்தங்கரை ஓரத்திலே அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்
    பாவம் தானில்லை..அந்தக் காதலன்…ம்ம் என்னவோ முன்னால் எழுதிப்பார்த்த ஒரு பழையகதையில்எழுதிப் பார்த்த வெண்பாவைக் கொஞ்சம் திருத்தி எழுதினால்..:
    *
    வான்பொதிகைத் தென்றலில் வட்டமிடும் சந்திரன்
    தான்பறித்த பூக்களாம் தாரகைகள் - பின்புலத்தில்
    சொல்லாமல் போய்மறைந்த சோகமெந்தன் காதலினால்
    கொல்லாமல் கொல்லும் இரவு..

    பாவம் அந்தக் காதலனை இரவு கொல்லும் தான்..!@
    ***

  7. #516
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாட்டுப் பேச வா - 3
    *-****************************
    கைகேயி “யூ ஹாவ் டு கோ டு ஃபாரஸ்ட் மை பாய்” எனச் சொல்லிவிட ராமர் காட்டிற்குப் புறப்படுகிறார்.. அவர் புறப்படுவதை சோகத்துடனும் அழுகையுடனும் பார்க்கும் மக்கள் எப்படி இருக்கிறார்களாம்..
    *
    வால்மீகி ராமாயணத்தில் இவ்வாறு வருகிறது…
    *
    ஒரு பெரிய தாமரைக் குளம்..தண்ணீர் முழுதும் நிரம்பி இருக்கின்றது.. அங்கே சின்ன,பெரிய, நடுத்த மீன்களெல்லாம் கூட்டம்கூட்டமாய் வந்து அங்கு நிரம்பியிருக்கும் தாமரைத் தண்டுகளில் மோதுகின்றதாம்..அப்போர்து என்ன ஆச்சாம்.. குளத்திலிருந்து தண்ணீரெல்லாம் பலதிசையில் சிதறுகிறதாம்.. அது போல மக்களின் கண்ணீர் சிதறின.. என்கிறார் வால்மீகி..
    *
    சரி கம்பன் என்ன சொல்கிறார்..
    *
    ஆவும் அழுத அதன்கன்று அழுத;; அன்றலர்ந்த
    ..பூவும் அழுத;புனல்புள் அழுத கள் ஒழுகும்
    காவும் அழுத: களிறு அழுத; கால்வயப்போர்
    ..மாவும் அழுத;- அம்மன்னவனை மானவே

    ராமனுடைய பிரிவால் துன்பமுற்ற தசரதனைப் போல் பசுக்கள் அழுதன; பசுக்கள் ஈன்ற கன்றுகள் அழுதன;அப்போது மலர்ந்த பூக்கள் கூட அழுதன;யானைகளும் அழுதன\; காற்றின் வலிமை கொண்ட குதிரைகள் கூட அழுதன..
    *
    எனில் எதற்காக இவையெல்லாம்..ம்ம் கண்ணீர்.. இந்தக் காலத்துக் கவிஞன்(ம்க்கும்!  ) என்ன சொல்றான்..
    *
    உன்னதத்தில் பொங்குகின்ற உணர்விலே தான்வரும்
    கண்ணீரும் தருமோர் காட்சி – திண்ணமாய்
    நெஞ்சிலே பட்டவலி நேர்படக் கண்ணீராய்த்
    துஞ்சுவதும் ஓர்காட்சி தான்….
    *
    உன்னதம்..மகிழ்ச்சியிலும் கண்ணீர் வரும்; சோகத்திலும் கண்ணீர் வரும்.. ஆமாம்..இதே
    ஸிம்ப்பிளா திரைப்பாடலில் வந்துருக்கே..
    *
    சிரித்தாலும் கண்ணீர் வரும் அழுதாலும் கண்ணீர் வரும்
    உறவினிலே சிரிப்பு வரும் பிரிவினிலே அழுகை வரும்..
    சிரித்தாலும் அழுதாலும் சுகமாக அமைதி வரும்..
    அதெப்படி அமைதி..ஆமாம் வாய்விட்டு சிரிச்சா மட்டுமில்லை வாய்விட்டு அழுதாலும் பாரம் குறையும்..மனசு பாரம் கொஞ்சம் குறையும்..
    *
    திரைப்பாடல்கள்ல பார்த்தா காதல் க்கு மட்டும் தான் கண்ணீர் குத்தகை எடுத்திருக்காங்க..
    இந்தாள் என்ன சொல்றார்…
    கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
    வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
    என்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்
    வேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்
    (காதலிக்கறப்ப இப்படித்தான் இருக்கும் குரு..கல்யாணம் ஆச்சுன்னா..ம்ம்பார்க்கலாம்!!)
    *
    இன்னொரு பொண்ணு..கண்ணனை நினச்சு தன்னோட கொழுக் மொழுக் உடம்பு உருக உருகபாடுது...
    கண்ணன் முகத்தோற்றம் கண்டேன் கண்டவுடன் மாற்றம்கொண்டேன்
    கண்டவுடன் ஏங்கி நின்றேன் கன்னிசிலையாக நின்றேன்
    என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ கண்ணீர் பெருகியதே..
    கண்ணனைப்பார்த்துட்டாளாம்..பேச்சு வல்லை..மூச்சு மட்டும் ஓரிழையாய் வர எல்லாமே மறந்துபோகுது.. கண்ணுக்குள்ள இருந்து வாட்டர் டேங்க்ல தண்ணீர் ஜாஸ்தியா ஏறிச்சுன்னா கொட்டறாப்புல பொலபொலன்னு கண்ணீரா வருதாம்..ம்ம் இது ஆனந்தக் கண்ணீர் 
    *
    சமத்தா பொண்டாட்டியோட சந்தோஷமா இருக்க வந்த ஆள பொசுக்குன்னு கடத்திட்டுப் போய்டறாங்க தீவிர வாதிங்க..பாவம்..சின்னப் பொண்ணாச்சே .. என்ன கஷ்டப் படறாளோ..வாழ்க்கையோட ஆரம்பத்திலேயே இப்படி ஆச்சே..ம்ம்னு நினச்சு மனசுக்குள்ள தேடிப்பாக்கறது பாட்டா திரையில் வருது..
    *
    காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
    கண்ணீர்வழியுதடி கண்ணே
    : கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
    ம்ம் நல்ல பாட்டுதேன்..
    *
    கண்ணீர்ங்கறது என்ன பிரிவின் வேதனை உள்ளத்தின் வலியை உடல் வெளிப்படுத்தும் முறை..அது வந்து ஒரு அழுகை போட்டுக்கிட்டா கொஞ்சம் ரிலாக்ஸீம் ஆகலாம்..இல்லியோ.
    *
    இங்க பாருங்க இந்தப் பையன் புலம்பறத.. அந்தக் கண்ணீர் கண்ணுக்குள்ளயே தங்கிடுதாம்..அதோட வெப்பம் கண்ணையே சுட்டுப்பொசுக்குதாம்...
    *
    விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய்
    விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
    நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
    சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
    தத்திச்செல்லும் முத்து சிற்பம் கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
    இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
    முல்லை பூவில் முள்ளும் உண்டோ கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன
    *
    நல்ல சிச்சுவேஷ்னல் பாட்டு.. ஆனா ஹீரோயினா இன்னும் நல்லா ஆடத்தெரிந்த யாரையாவது போட்டிருக்கலாம்..
    *
    காதலில் சோகம்னா சிவாஜி தான் முதலில் கண் முன் வர்றார்.. கண்ணதாசன் வரி, டிஎம் எஸ் குரல், நடிகர் திலக நடிப்பு..ம்ம் மறக்க முடியுமா இந்தப் பாட்டை..
    *
    காதல் கிளிகள் பறந்த காலம்
    கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
    கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
    நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்
    *
    ம்ம் ஒரே பாடல்..உள்ளத்தைக் கவ்வும்..
    *
    அட இந்தக் காலப் பாட்டிலும் வந்துருக்கே.. என்ன கொஞ்சம் வித்தியாசமாக.
    *.
    மார்கழித் திங்களல்லவா...
    இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
    உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் என்னுயிரும் கரைவதென்ன
    இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை
    நீ மட்டும் என்னுடல் காண்பாயா
    **
    நல்ல சாங் தானில்லை..
    **
    கடைசியா நம்மை விட்டுக் குறுகியகாலத்திலேயே பிரிந்த ஸ்வர்ணலதாவோட பாட்டு..

    போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு
    தண்ணீரும் சோறும் தந்த மண்ணை விட்டு
    பால் பீச்சும் மாட்ட விட்டு
    பஞ்சாரத்து கோழியே விட்டு
    போறாளே பொட்ட புள்ள ஊரை விட்டு
    *
    ம்ம் நிறையக் கண்ணீர் விட்டுட்டேன்னு நினைக்கறேன்..இன்னும் விடுபட்டுப் போயிருக்கும்.. நீங்கதான் இருக்கீங்களே..சொல்றதுக்கு..

  8. Likes Gopal.s liked this post
  9. #517
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாட்டுப்பேச வா - 5
    ****************


    அதுல பாருங்கோ.. நம்மோட தமிழே - கன்னிப் பொண் (அம்மா கிட்ட கேட்டு பக்குவமா நிறைய சக்கரையைப் போட்டு) செஞ்ச காரட் அல்வாவாட்டமா
    ஸ்வீட்ல் லாங்க்வேஜ் தான் இல்லியோ.. ஆனா அதுவே வெவ்வேற பகுதில்ல எப்படியெல்லாம் பேசறாங்க/பாடறாங்க..

    அதே தாங்க.. இன்னிக்கு..

    மொதல்ல நம்ம ஊர் மதுரை.. இந்த ஹீரோ என்ன சொல்றார்../ஜொள்றார்..

    பொட்டுனா பொட்டு வச்சி வெட்டு வெட்டுனு வெட்டிபுட்டு..
    பட்டுனு சேலைய கட்டி எட்டி வச்சி நடந்துகிட்டு..
    கட்டுனா கட்டிபுட்டே நெஞ்சை கொஞ்சம் தட்டிபுட்டே..
    வெட்டும் இரு கண்ணை வச்சி என்னை கட்டி போட்டுபுட்டே..

    அந்தப் பொண்ணோட பதில்..

    கட்டுறது உனக்கு மட்டும் தானா இந்த சிட்டும் கூட சிக்கியது ஏனா..
    எப்போதோ விட்ட குறை மாமா அது இரு உசிரை கட்டுதையா தானா..
    அது இப்போது வாட்டுதென்னை பாட்டு ஒன்னை அவிழ்த்துவிடு..

    அப்புறம். என்ன செய்யணுமாம்.. அவங்க என்ன சொல்றாய்ங்கன்னு பாக்கலாமா...

    .மெட்டுனா மெட்டு கட்டி இட்டு கட்டி பாடிகிட்டு..
    கட்டுனா ராகம் என்னும் மாலை ஒன்னை கட்டிபுட்டு
    சுத்தினா சுத்தி அதைஎன் கழுத்தில் போட்டுபிட்டே
    ஒன்னை மட்டும் விட்டு பிட்டே..
    தாலி கட்ட மறந்துபுட்டே..

    ம்ம் எல்லாக் காதலிக்கும் நேச்சுரல்லா இருக்கின்ற கவலை தான்..அந்தக்காலத்தில!

    *

    இந்தப் பொண்ணோ செக்கச் செவப்பு. என்னவாம்... நேராவே பேசத் தெரியாது காதலன் கிட்ட.
    (எல்லாக் காதலியும் அப்படித் தானோ?) பேசறதெல்லாம் ஒரே விடுகதைதான்.

    வானத்திலே ஒரு கல் என்ன கல்
    பூமியிலே ஒரு கல் என்ன கல்
    அரிசியிலே ஒரு கல் என்ன கல்
    வெற்றிலையில் ஒரு கல் என்ன கல்..

    இப்படில்லாம் இந்தக்காலத்தில சொன்னா காதலன் அன்ஃப்ரண்ட் செஞ்சுட்டுப் போய்டுவான்..இவன் பாவம் அந்தக்காலத்து ஆசாமி..
    பேந்தப்பேந்த ஆந்தையோட ப்ரதராட்டமா ஜோதிகாவோட ஒண்ணுவிட்ட ரிலேஷனாட்டமா முழிக்கிறான்..இந்தப் பொண்ணுக்கோ
    சிரிப்பு பொத்துக்கிட்டு வருது. அவ பாடற்துல ஊர் பாஷயும் ஊரும் வருது.

    பாரு பாரு பாரு இவரு பயந்துட்டாஹ பாரு
    திரு திருன்னு முழிக்கறாரு திருனெல்வேலி ஆளு
    அட வெவரங்கெட்ட ஆளு இப்போ விடையைச் சொல்றேன் கேளு

    வானத்திலே ஒரு கல் கருக்கல்
    பூமியிலே ஒரு கல் வழுக்கல்
    அரிசியிலே ஒரு கல் புழுங்கல்
    வெற்றிலையில் ஒரு கல் அழுகல்..

    அச்சமில்லை அச்சமில்லையில் வரும் பாட்டு இது.

    *

    தூத்துக்குடி பாஷை.

    முத்துக்குளீக்க வாரீகளா
    மூச்சையடக்க வாரீகளா.. (தின்னவேலிக்கும் தூத்துக்குடிக்கும் ஒரு மெல்லிய வித்தியாசம் தான் உண்டு.பாஷையில்!)

    அடி ஜின்ஜினாக்கடி ஜின் ஜின்னாக்கடி பாத்தீகளே நீங்களும்
    அந்தச் சரசம் பண்ணிப் பாருங்க

    ம்ம் மறக்க முடியாத பாடல்.

    **

    கருவாப்பையா கருவாப்பையா
    கருவாச்சி கவுந்துபுட்டா மனசாச்ச தொலச்சுபுட்டா (பாஷையும் படமும் தூத்துக்குடி)

    **

    அப்ப சென்னப் பட்டினம்?

    மச்சான் உன் நினப்பாலே நான் நாஸ்தா துண்ணு நாளாச்சு.
    ஆயாக் கடை இடியாப்பம்னா
    பாயாக்கறியும் நீ ஆச்சு
    வா மச்சான் வா மச்சான்
    வா வா மச்சான் ஒண்ணா சேர்ந்து
    வாராவதிக்கே போகல்லாம்


    ம்ம் மறக்க முடியுமா இந்தப் பாட்டை.

    **

  10. Likes Gopal.s liked this post
  11. #518
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கொஞ்சம் புதுப்பாட்டும்கலந்துடுத்து ஸாரி..மீள்பதிவுஇங்கு முற்றும்

    இனி புத்தம் புதிதாய் பழையபாடல்களோடு பாட்டுப் பேச வா 2ம் பாகம் ஆரம்பிக்கப் பார்க்கிறேன்

  12. #519
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Do you need ragam serial? If you guys are not serious ,i will come and participate in arattai.
    Last edited by Gopal.s; 19th June 2014 at 04:59 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  13. #520
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கிருஷ்ணாஜி,

    தூள் படத்தி கொண்டிருக்கிறீர்கள் .எனக்கு 100% பரிச்சயமான 60,70 களின் பாடல்களை பற்றி நீங்களெல்லாம் அரட்டை அடித்து விளையாட,வாசு என்னை ராகங்களில் முடக்கி விட்டாரே (இதை விடாதீர்கள் என்று)!!!திரியின் ஜீவனாய் உள்ளீர்கள் என்றால் மிகையில்லை.

    கார்த்திக்-

    உங்கள் பதிவுகள் nostalgia நினைவுகளை தூக்கி நிறுத்தி சொக்க வைக்கும்.
    என்னை எழுத்தாளராக்கிய முன்னோடி பதிவாளராயிற்றே?

    வாசு- உன் CONCEPT கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது.

    சி.க- உங்கள் பதிவுகளின் வித்தியாச தரம்,இலக்கிய கணம்,மற்றும் நகைச்சுவை கனம் .... புது தொடருக்காக ஆவலுடன்....
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •