Page 2 of 400 FirstFirst 12341252102 ... LastLast
Results 11 to 20 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    தங்கள் வரவேற்பிற்கும் பாராட்டிற்கும் நன்றி.
    அபூர்வமான பல பாடல்களை அவற்றின் சிறப்போடு இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

    பொதுவாக ஹோட்டல், கிளப் நடனக் காட்சி, பாடல், எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் என்றாலே அந்தக் காலத்தில் தியேட்டரில் மக்கள் அமரமாட்டார்கள், இளைஞர்களைத் தவிர. அதுவும் பாடல் ஈர்க்க வேண்டும். ஆனால் மெல்லிசை மன்னருக்கு எந்த சூழ்நிலையானால் என்ன அவருடைய திறமை பளிச்சிட்டு விடும். எம்.எஸ்.வி. இசையமைத்து எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பல கிளப் டான்ஸ் பாட்டுக்கள் ஒவ்வொன்றிலும் இசையில் ஏராளமான நுணுக்கங்களைப் புகுத்தியிருப்பார். அப்படி ஒரு பாடலைத் தான் நாம் இங்கே காண உள்ளோம்.

    மிஸ்டர் சம்பத் திரைப்படத்தில் எல்லோரும் பொதுவாக அறிந்த பாடல் ஆரம்பம் யாரிடம், அலங்காரம் போதுமடி. அவ்வப்போது எம்எஸ்வி பாடிய ஒரே கேள்வி உனைக் கேட்டேன் பாடல். ஆனால் இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் அவர் அமைத்த பாடல் அன்பான ரசிகன் என்னோடு இருக்க.. இப்பாடலில் கிடார் மற்றும் அக்கார்டியனுடன் மேற்கத்திய பாணிய்ல தொடங்கும் பாடல் நடுவில் சாஸ்த்ரீய மெட்டில் புகுந்து நாதஸ்வரத்தை வாசிக்க வைத்திருப்பது அவருக்கே உரிய சிறப்புத் திறமையாகும். அதனைத் தொடர்ந்து ட்ரம்பெட் ஒலிக்கும். பாடலின் தாள அமைப்பில் பாங்கோஸ் இசைக் கருவி அற்புதமாக கால்களைத் தாளம் போட வைக்கும்.

    என்றென்றும் நான் விரும்பும் எம்எஸ்வியின் பாடல்களில் இது குறிப்பிடத் தக்கதாகும்.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #12
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    VASU SIR

    PLEASE

  4. #13
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நன்றி ஸ்டெல்லா அவர்களே!

    இதோ நீங்கள் கேட்ட பாடல்.

    'சூர்யகாந்தி' திரைப்படத்திலிருந்து.

    ஒ..மேரி தில்ரூபா...
    ஏ..மேரா தீவானா...


    பாடல்.



    வித்யா மூவிஸ் 'சூர்யகாந்தி' 1973-இல் வெளிவந்த ஒரு கருப்பு வெள்ளைப் படம். 100 நாட்கள் ஓடிய வெற்றிச் சித்திரம். இசை 'மெல்லிசை மன்னர்'. பாடல்கள் கவிஞர் கண்ணதாசன். தயாரிப்பு வேணுகோபால். இயக்கம் முக்தா ஸ்ரீனிவாசன்.

    கணவன் தன் மனைவி மேல் கொண்ட ஈகோ பிரச்னையை அற்புதமாக இப்படம் அலசுகிறது.

    கணவன் தன்னைவிட அதிகம் சம்பாதிக்கும் தன் மனைவிக்கு சமூகத்தில் அவளுக்குக் கிடைக்கும் மதிப்பையும், அங்கீகாரங்களையும் கண்டு அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறான். தன் தாழ்நிலையை எண்ணி குமுறுகிறான். தன் வீட்டார் கூட தன் மனைவியைத் தலையில் தூக்கிக் கொண்டு ஆடுவதை அவனால் பொறுக்க முடியவில்லை.

    இறுதியில் கணவனின் ஈகோ வென்றதா அல்லது மனையாளின் பொறுமை வென்றதா என்ற கருத்தை அழகாக வலியுறுத்திய படம்.

    கணவன் மனைவி சரிசம உறவே சாலச் சிறந்தது என்ற கருத்தை போதிக்கும் இப்படத்தில் முத்துராமன், ஜெயலலிதா பிரதான பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    நீங்கள் குறிப்பிட்டிருந்த பாடல் அக்காலங்களில் பாண்டி வானொலியிலும், இலங்கை வானொலியிலும் அதிகம் ஒலிபரப்பப்பட்ட ஒரு பாடல்.

    கால்பந்து வீரர்கள் உடையணிந்து முத்துராமனும், ஜெயலலிதாவும் ஆடிப் பாடும் இந்த டூயட் பாடலை டி.எம்.எஸ்ஸும், ஜெயலலிதாவும் இணைந்து அற்புதமாகப் பாடியிருந்தனர். சற்றே வயது முதிர்ந்திருந்தாலும் கிளாமரில் நான்தான் ராணி என்று ஜெயா இப்பாடலில் மீண்டும் நிரூபித்திருந்தார்.

    இப்படத்தின் அபாரமான வெற்றி சரிந்திருந்த ஜெயலலிதாவின் மார்கெட்டை மீண்டும் சரி செய்தது. இதே மாதிரி கதையமைப்பில் சில படங்களை முத்துராமன், ஜெயலலிதா இணைந்து நடிக்க இப்படம் மூல காரணமானது. (கணவன் மனைவி, அன்புத் தங்கை)

    1973ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் நடிகை என்று பிலிம்பேர் பத்திரிகை அவார்ட் தந்து ஜெயா மேடத்தை கௌரவித்தது.

    அதுமட்டுமல்லாமல் கவிஞரே ஒரு காட்சியில் தோன்றி நடித்து காலத்தால் அழிக்க முடியாத 'பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது' பாடலைத் தந்து இப்படத்திற்கு மேலும் பெருமை சேர்த்தார்.

    எஸ்.பி.பி மற்றும் ஜெயலலிதா இருவரும் இணைந்து பாடிய 'நானென்றால் அது அவளும் நானும்' பாடலை யார்தான் மறக்க முடியும்?

    இப்படத்தில் 'தெரியாதோ நோக்கு' என்று ஆச்சி பாடிய ஐயராத்து மாமி பாடல் அப்போது மிகவும் பிரசித்தம்.



    இப்போது பாடலுக்கு வருவோம்.

    முழுப் பாடல் வரிகளும் உங்களுக்காக.

    ஒ..மேரி தில்ரூபா...
    ஏ..மேரா தீவானா...

    உன் ஆசைக்கிளி
    மாடர்ன் அனார்கலி
    இந்த உடை எப்படி?
    வந்த நடை எப்படி?

    நாலு பக்கமும் சுவரெழுப்பினால்
    நடுவில் உன்னை வைப்பேன்
    ஷாஜஹானைப் போல்
    காதல் போதையில் கவிதை நூறு சொல்வேன்

    என் திராட்சைக் கொடி
    காதல் தேமாங்கனி
    இந்த உடை எப்படி?
    வந்த நடை எப்படி?

    ஒ..மேரி தில்ரூபா...
    ஏ..மேரா தீவானா...

    உன் வீட்டுக்கு ஜன்னல்கள் ஏனோ!
    என்னை ஓயாமல் நீ பார்க்கத் தானோ!
    உன் பார்வை பட்டதும் பனியைப் போலவே
    உருகிப் போனவள் நானோ!

    நீ சொர்க்கத்தில் வாழ்ந்தாலும் கூட
    உன் பக்கத்து வீடெந்தன் வீடு
    நீ ஊரை மாற்றலாம்
    வீட்டை மாற்றலாம்
    உள்ளம் மாறுமோ கூறு

    மனம் முன்னோடு பின்னோடும் போது
    இனி நான் வேறு நீ வேறு ஏது?

    மனம் முன்னோடு பின்னோடும் போது
    இனி நான் வேறு நீ வேறு ஏது?

    ஒ..மேரி தில்ரூபா...
    ஏ..மேரா தீவானா...

    உன் ஆடைகள் மேல்நாட்டுப் பாணி
    நீ பாவைகள் சாம்ராஜ்ய ராணி
    உன் ஜாடை என்னவோ
    ஜாதி முல்லையோ
    சிலை கொடுத்ததோ மேனி

    என் பொன்னான கன்னத்தைக் கேட்டு
    உன் எண்ணத்தின் வண்ணத்தைத் தீட்டு
    உன் சொந்தமான பின் எந்தன் மேனியைத்
    தொட்டுப் பேசுமோ காற்று

    ஒரு முத்தாரம் இட்டாக வேண்டும்
    அதில் ஈரேழு லோகங்கள் தோன்றும்

    ஒரு முத்தாரம் இட்டாக வேண்டும்
    அதில் ஈரேழு லோகங்கள் தோன்றும்

    உன் ஆசைக்கிளி
    மாடர்ன் அனார்கலி
    இந்த உடை எப்படி?
    வந்த நடை எப்படி?

    என் திராட்சைக் கொடி
    காதல் தேமாங்கனி
    இந்த உடை எப்படி?
    வந்த நடை எப்படி?

    ஒ..மேரி தில்ரூபா...
    ஏ..மேரா தீவானா...


    இப்போது பாடலைப் பார்த்து மகிழுங்கள்.

    Last edited by vasudevan31355; 9th June 2014 at 10:42 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #14
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    டியர் வாசு சார்
    சூரிய காந்தி ஹிந்தி அபிமான் (அமிதாப் அண்ட் ஜெயா பாதுரி) ஜோடி தழுவல் என்று படித்த நினவு
    அது சரியா
    gkrishna

  6. #15
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    டியர் வாசு சார்
    உங்கள் நகை சுவை அபாரம
    மறு பிறவி திரை படத்தில் இன்னொரு பாடல் எனக்கு நினவு உண்டு
    "சொந்தம் இனி உன் மடியில் சொர்க்கம் இனி என் அழகில் "
    spb என்றும் நினவு
    கிருஷ்ணா
    gkrishna

  7. #16
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்!

    வருக!

    உங்கள் சந்தேகம் எனக்கும் உண்டு. அபிமான் படத்தில் பாடகரான அமிதாப் கிராமத்து பெண்ணான ஜெயாபாதுரியை மணந்து கொள்கிறார். ஆனால் ஜெயாவோ பின்னணிப் பாடகியாகி அமிதாபை விட புகழ் பெறுகிறார். அமிதாப் மனைவியின் முன்னேற்றம் காண சகியாமல் துடிக்கிறார்.

    சூரியகாந்தியின் கதை வேறு. ஆனால் ஆனால் இருபடங்களின் கதைக் கரு ஒன்று. மனைவியின் முன்னேற்றம் காணப் பொறுக்காத தாழ்நிலை குணம் கொண்ட கணவர்கள் கதை கொண்டது இரு படங்களும்.

    தவிர 'சூர்யகாந்தி' முன்னம் ரிலீஸ் ஆனதா அல்லது அபிமான் (27 July 1973) முன்னமேயே ரிலீஸ் ஆனதா என்றும் தெரியவில்லை. ஆனால் இரண்டுமே 1973-இல்தான் வெளியாகி உள்ளன.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #17
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    அதே போல் தாய் வீடு சீதனம் என்று ஒரு படம் (ரவி அண்ட் விஜயா ஒரு ஜோடி) (ஜெய் அண்ட் உஷா நந்தினி என்று நினவு) மதுரை திருமாறன் direction
    " எனக்கும் உனக்கும் வழக்கு இரண்டும் சுகத்தின் கணக்கு கை இணைத்து தொட்டு அணைத்து நாம் கலந்தால் என்ன "
    விச்சு இசை (saxophone இண்டர்லுட பின்னி பிடல் எடுத்து இருப்பார்)
    gkrishna

  9. #18
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்,

    "சொந்தம் இனி உன் மடியில் சொர்க்கம் இனி என் அழகில் "

    அற்புதமான ஒரு பாடல்.

    இப்பாடலைப் பற்றி விரிவாக எழுதினால்?.... எழுத

    ஆசை துடிக்கின்றது

    இருந்தாலும்

    அச்சம் தடுக்கின்றது.

    நான் எழுதினால் என்னை அறம் பாடி உண்டு இல்லை என்று பண்ணி விடுவார்கள். இதற்கெல்லாம் கோபால்தான் லாயக்கு.

    அவர் எழுதுவார் என்று நினைக்கிறேன்.

    ஆனாலும் அற்புதமான பாலாவின் குழையும் குரலில் ஒலிக்கும் பாடல். ராமாண்ணாவுக்கு துணிச்சல் ஜாஸ்தி. அதைவிட மஞ்சுளாவுக்கு. அதை விடவும் நவரசத் திலகத்திற்கு. மனிதர் பூனை மாதிரி இருந்து கொண்டு என்னவெல்லாம் செய்கிறார்?! ஊமைக் குசும்பர்களை நம்பக் கூடாது என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்?

    விஷுவலாகப் பார்க்கும் போது தனியாக பார்த்தால் கூட நெளியத்தான் வேண்டியிருக்கும்.

    இரவு மணி 12 ?

    சார்,

    நான் ரவிச்சந்திரன் நடித்த மயிலாடும் பாறை மர்மம் படத்தைப் பற்றி சொன்னேனாக்கும்.

    நீங்க வேற!
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #19
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    அதே போல் தாய் வீடு சீதனம் என்று ஒரு படம் (ரவி அண்ட் விஜயா ஒரு ஜோடி) (ஜெய் அண்ட் உஷா நந்தினி என்று நினவு) மதுரை திருமாறன் direction
    " எனக்கும் உனக்கும் வழக்கு இரண்டும் சுகத்தின் கணக்கு கை இணைத்து தொட்டு அணைத்து நாம் கலந்தால் என்ன "
    விச்சு இசை (saxophone இண்டர்லுட பின்னி பிடல் எடுத்து இருப்பார்)
    யப்பா! பெரிய ஆள் சார் நீங்க.

    உங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும் போல இருக்கே!

    பின்னாடி வரேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #20
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    டியர் வாசு சார்
    உங்கள் பதிலுக்கு நன்றி
    அபிமான் 27 July 1973 என்று விக்கியில் பார்த்த நினவு
    சூரிய காந்தி 15 aug 1973 என்று நினவு
    நிச்சயமாக தழுவல் ஆக இருக்க முடியாது
    நீங்கள் சொன்னது போல் இரண்டும் கதை கரு தான் ஒன்று ஆனால் தளம் வேறு
    gkrishna

Page 2 of 400 FirstFirst 12341252102 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •