Page 153 of 400 FirstFirst ... 53103143151152153154155163203253 ... LastLast
Results 1,521 to 1,530 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #1521
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (25)

    இன்று உற்சாகமூட்டும், தன்னம்பிக்கை உரமூட்டும் ஒரு அபூர்வ பாடல்.

    'விஜயபுரி வீரன்' (1960) திரைப்படத்திலிருந்து.



    சி.எல்.ஆனந்தன், ஹேமலதா, ராமதாஸ், அசோகன், பாண்டி செல்வராஜ், சந்திரகாந்தா முதலிய நட்சத்திரங்கள் மின்னிய படம் இது.

    அதுவரை நடனக் கலைஞராக குரூப் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த ஆனந்தன் இப்படத்தின் ஹீரோவாக்கப் பட்டார். நடனம், வாள்வீச்சு, குதிரையேற்றம் இவற்றில் சிறந்த பயிற்சி பெற்றிருந்ததால் அவர் இந்தப் படத்தில் நன்கு சோபித்து 'விஜயபுரி' ஆனந்தன் என்று படத்தின் பெயராலேயே அழைக்கப்பட்டார். வில்லன் நடிகர் எஸ்.வி.ராமதாசுக்கும் இது முதல் படம்.



    சிட்டாடல் பிலிம் கார்பொரேஷன் தயாரிப்பு இது. ஜோசப் தளியத் ஜூனியர். நம் திருலோகச்சந்தர் திரைக்கதை அமைத்து உதவி இயக்கமும் செய்து இருந்தார். டி.ஆர்.பாப்பா இசை அமைத்திருந்தார். நல்ல வெற்றி பெற்ற படமும் கூட.

    தஞ்சை ராமையாதாஸ் அவர்கள் இப்படத்தில் இயற்றிய சூப்பர் பாடலை இன்று பார்க்கலாம்.


    பொதுவாகவே அப்போதைய கதாநாயகன் குதிரையில் ஏறி காடு, மலை, மேடு, தேயிலைத் தோட்டமெல்லாம் ஒத்தையடிப் பாதையில் வளைந்து வளைந்து சுற்றி வந்து 'டொக் டொக்' என்ற குளம்பொலியுடன் புரட்சி கருத்துக்களை டி.எம்.எஸ்.வாய்ஸிலோ அல்லது சீர்காழியாரின் வாய்ஸிலோ பாடி ஜனங்களின் நாடி நரம்புகளை அந்த சமயம் முருக்கேற்றுவான்.

    ஆனால் இந்தப் படத்தில் மூன்று நாயகர்கள் ஒன்று சேர்ந்து அருமையான அறிவுத்தல் பாடல் ஒன்றைப் பாடி வருகிறார்கள். அதுவும் மிருதுவான குரல் கொண்ட ஏ.எம்.ராஜா அவர்களின் இனிய குரலில் கோஷ்டியாக. அதுதான் இப்பாடலின் வித்தியாசம், விஷேசம்.

    இம்மாதிரிப் பாடல்களை கம்பீரமான குரல்களிலேயே கேட்டுப் பழகிப் போன நமக்கு சாப்ட் வாய்ஸாலும் இப்பாடலை நன்கு ரசிக்க வைக்க முடியும் என்று தன் தங்கக் குரலால் நமக்குப் புரிய வைத்திருப்பார் ராஜா. பாப்பாவும் கூட.

    இரண்டாவது எளிமையான வளமான புரியக்கூடிய கருத்துக்கள். விளக்கமே தேவையில்லாத வரிகள். இனிமையான இசை.

    நெஞ்சிலே துணிவும், தன்மானமும் என்றும் கொண்டிருக்க வேண்டும் என்ற தத்துவத்தை அழகாக விளக்கும் பாடல். இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் நமக்குள் ஒரு உத்வேகம் பிறப்பது தவிர்க்க முடியாதது.

    பொதுவாக 'ஆளுக்கொரு வீடு கட்டுவோம்'... 'சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா', என்று ரம்பம் போடும் தொல்லைக்காட்சி சேனல்கள் இம்மாதிரிப் பாடல்களை ஒளிபரப்புவதே இல்லை.

    சிறுவயது முதலே இப்பாடலில் எனக்கு அப்படி ஒரு மோகம். நீங்களும் கேட்டு மகிழ்ந்திருப்பீர்கள்.

    இப்போது நம் திரியின் வாயிலாக இன்னொரு முறை.


    உள்ளத்திலே உரம் வேணுமடா
    உள்ளத்திலே உரம் வேணுமடா
    உண்மையிலே திறம் காணுமடா
    ஒற்றுமையால் வெற்றி ஒங்குமடா

    (குதிரைகள் குளம்பொலி)

    வல்லவன் போலே பேசக்கூடாது
    வானரம் போலவே சீறக் கூடாது
    வல்லவன் போலே பேசக்கூடாது
    வானரம் போலவே சீறக் கூடாது

    வாழத் தெரியாமலே கோழைத்தனமாகவே
    வாலிபத்தை விட்டுவிடக் கூடாது
    வாழத் தெரியாமலே கோழைத்தனமாகவே
    வாலிபத்தை விட்டுவிடக் கூடாது

    மானம் ஒன்றே பிரதானம் என்றே
    மறந்து விடாதே வாழ்வினிலே
    மானம் ஒன்றே பிரதானம் என்றே
    மறந்து விடாதே வாழ்வினிலே

    உள்ளத்திலே உரம் வேணுமடா
    உள்ளத்திலே உரம் வேணுமடா
    உண்மையிலே திறம் காணுமடா
    ஒற்றுமையால் வெற்றி ஒங்குமடா

    வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்
    ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்
    வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்
    ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்

    ஏட்டுச் சுரைக்காயெல்லாம்
    மூட்டை கட்டியாகணும்
    நாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும்
    ஏட்டுச் சுரைக்காயெல்லாம்
    மூட்டை கட்டியாகணும்
    நாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும்

    மானம் ஒன்றே பிரதானம் என்றே
    மறந்து விடாதே வாழ்வினிலே
    மானம் ஒன்றே பிரதானம் என்றே
    மறந்து விடாதே வாழ்வினிலே

    உள்ளத்திலே உரம் வேணுமடா
    உள்ளத்திலே உரம் வேணுமடா
    உண்மையிலே திறம் காணுமடா
    ஒற்றுமையால் வெற்றி ஒங்குமடா

    உள்ளத்திலே உரம் வேணுமடா
    உள்ளத்திலே உரம் வேணுமடா
    உண்மையிலே திறம் காணுமடா
    ஒற்றுமையால் வெற்றி ஒங்குமடா


    கார்த்திக் சார்,

    'மானம் ஒன்றே பிரதானம் என்றே
    மறந்து விடாதே வாழ்வினிலே'

    வரிகள் நமக்காகவே எழுதப்பட்டது போல் இல்லை?


    Last edited by vasudevan31355; 9th July 2014 at 09:51 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1522
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    [QUOTE=vasudevan31355;1146274]இன்றைய ஸ்பெஷல் (25)

    வாசு சார்

    விஜயபுரி வீரன் திரைபடத்தில் இருந்து அவ்வளவாக வெளியில் தெரியாத பாடல் ஒன்றை நினவு கூர்ந்து உள்ளீர்கள் . மிக்க மகிழ்ச்சி
    எனக்கு இந்த விஜயபுரி வீரனுக்கும் வீரதிருமகனுக்கும் கொஞ்சம் குழப்பும்

    ரொம்பநாள் கழித்து அவரை அடுத்த வாரிசு படத்திலும் ஊமை விழிகள் படத்திலும் பார்த்த நினைவு.
    காந்த கண் அழகி நம்ம விஜயலலிதவை செந்தூர பூவே யில் பார்த்த நினைவு

    ஒருமுறை கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறன்
    தஞ்சையில் அசோகா ஹோட்டல் இல் நானும் என்னுடைய மேல் அதிகாரி ஒருவரும் தங்கி இருந்தோம் . . காலையில்
    சுமார் 8.30 மணி இருக்கும் .வேலை நிமித்தம் ஆக தஞ்சாவூர் இல் இருந்து கும்பகோணம் சென்று அங்கிருந்து மாயவரம் சென்று
    இரவுக்குள் நெல்லை செல்லவேண்டிய பரபரப்பான ஒரு வேளையில்
    தீடீர் என பக்கத்துக்கு அறையில் இருந்து ஒரே சத்தம். அறையில் தங்கி இருந்தவருக்கும் ஹோட்டல் சிப்பந்திக்கும் வாக்குவாதம்
    என்ன என்று எட்டி பார்த்தால் விஜயபுரி வீரன் ஆனந்தன் ஹோட்டல் சிப்பந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தார்
    சிறிது நேரத்தில் அந்த சிப்பந்தி வந்து எங்களிடம் "நேற்று இரவில் அடிச்ச சரக்கே இறங்கலை இன்னும் காலையிலே வேறு மீண்டும்
    ஏற்றி கொண்டு எங்களை சாகடிக்கிறார் " என்று சொல்லி விட்டு போனார் .
    சற்று நேரம் கழித்து ஆனந்தன் அவர்களே வந்து எங்களிடம் "தம்பிகளா மன்னிக்கவும் உங்களை காலையில் நோக அடித்து விட்டேனா ? நீங்கள் எல்லாம் படித்தவர்கள் பல ஜோலி காரர்கள். இன்று இரவு நாடகம் 7 மணிக்கு மேல் தான். அது வரை பொழுது போக வேண்டும். எனக்கு வேற வேலை எதுவும் தெரியாது . அதனால் காலையிலே கொஞ்சம் சீக்கிரம் சரக்கு (கிடா மார்க்) ஆரம்பித்து மதியம் ஒரு தூக்கம் போட்டு எழுந்து பிறகு மாலையில் நாடகம் ஆரம்பிபதற்கு சரியாக இருக்கும். அதற்குள் இந்த பாவி பய மூடை ஸ்பாயில் செய்து விட்டான் . பாருங்க ஸ்பாயில் சொன்னவுடன் நினைவிற்கு வருகிறது ஆப்பாயில் சொல்லி அரை மணி நேரம் ஆகிறது இன்னும் வரவில்லை அவனை " என்று
    சொல்லி கொண்டே போனார் . நினைவலைகளை மீட்டி விட்டீர்கள் .
    நானும் கொஞ்சம் நீட்டி விட்டேன் . மன்னிக்கனும் . உங்களுக்கும் பல ஜோலி இருக்கும் போய் கவனீங்க

    gkrishna

  4. #1523
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வணக்கம் கிருஷ்ணா சார்!

    நன்றி!

    பார்த்தீங்களா! 'உள்ளத்திலே உரம்' பாட்டைப் போட்டால்
    ஆனந்தன் உள்ளுக்குள் 'கடா' இறக்கின சூப்பர் கதை வருதே!

    ஆனா மனுஷன் உண்மையை மறைக்காம சொன்னாரே! அதுவரைக்கும் பாராட்டணும்.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #1524
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'வீரத்திருமகன்' படத்துல 'வெத்தல போட்ட பத்தினி பொண்ணு சுத்துது முன்னாலே' பாட்டுல அச்சு அசலா அப்படியே டிஸ்கோ சாந்தி மாதிரியே பொம்பள வேஷத்தில் ஆனந்தன் இருப்பார். என்ன கொஞ்சம் குண்டா தெரிவார். நல்ல டான்சர் அப்படிங்கிறதனால சமாளிச்சுடுவார்.

    ஆனா அதைவிட டாப் பாடகர் திலகத்தின் குரல்தான். அம்சம். அப்பத்தைய கூடையில கருவாடு.

    நடிகர் திலகமே தெய்வம்

  6. #1525
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார்

    "வெதுல போட்ட பத்தினி பொண்ணு சொக்குது முன்னாலே "
    சூப்பர் பாட்டு இது

    பாடகர் திலகத்தின் இன்னொரு குரல் பாட்டு இது
    வீர திருமகன் சச்சு என்ற சரஸ்வதி ஜோடி
    அந்த ஊஞ்சல் ஆடும் காட்சி

    ரோஜா மலரே ராஜகுமரி
    பாடாத பாட்டு எல்லாம் பாட வந்தாய்

    கண்ணதாசனின் காலத்தால் அழியாத மதுர கானங்கள்
    ஆனந்தன் ஆளு கொஞ்சம் குள்ளமாய் தெரிவார் .
    மேல் பாடி வீதி கொஞ்சம் ஜாஸ்தி .

    இந்த நேரத்தில் முத்து பெற்ற ரத்தினம் பாடி நடித்த அமரன்
    படத்தில்
    "வெத்தில போட்ட ஷோக்குல " பாட்டு ஒன்னு நினைவுக்கு வருகிறது
    இது நிச்சயம் மனதை மயக்கும் மதுர கானம் கிடையாது .
    ஜஸ்ட் for remembrance

    பேச்சே வராது இதுல புன்னகவராளில பாட்டு வேற


    gkrishna

  7. #1526
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'மகளே உன் சமத்து' திரைப்படம் எனக்கு ரொம்பப் பிடித்த படம். எம்.ஆர்.ராதாவின் நடிப்புக்காகவே நான் பலமுறை பார்த்திருக்கிறேன். இன்றைய திரியின் ஹீரோவாகிவிட்ட ஆனந்தன் தான் இப்படத்தின் ஹீரோ. ராஜஸ்ரீ ரொம்ப சமத்து. ஹீரோயின். முகமூடிக் கதை. எல்லாம் mask of the zorro படம் ஒன்னு வந்து அப்போ ஹிட்டானதனால் வந்த வினை.

    பத்மினி பிரியதர்ஷினி நடிகவேளின் ஜோடியாக வருவார்.



    எம்.ஆர்.ராதா வயதான மன்னர். நல்லவர். ஆனால் அப்பாவி. ஆட்சியை சரிவர கவனிக்க மாட்டார். எல்லாம் கெட்ட தளபதி பொறுப்பு. பெண் சபலம் ஜாஸ்தி. பத்மினி பிரியதர்ஷினியை தாரம் போல வைத்திருப்பார். ராதாவுக்கு இளமை மீண்டும் திரும்ப வேண்டும் என்று ஆசை. தோற்றத்திலும் வாலிபனாக வேண்டும் என்று பேராசை. வைத்தியர்களைக் கூப்பிட்டு அதற்கு மருந்து ரெடி பண்ண சொல்லி வற்புறுத்துவார். இவர் தொல்லை தாங்காமல் 'அய்யா தெரியாதய்யா' ராமாராவும், பக்கிரிசாமியும் வேறு ஏதோ மருந்தை ராதாவுக்குக் கொடுத்துவிட கெட்டது கதை. ஏற்கனவே கிழமாக இருந்த ராதா இப்போது படுகிழமாக உருமாறிப் போய்விடுவார். காமெடிக் கலக்கல்.

    இப்படியாக ராதா போர்ஷன் போகும். செம ஜாலியாய் இருக்கும். ஆனந்தன் ராதாவின் மகன். இளவரசன். வழக்கம் போல எஸ்.ஏ.நடராஜன் தளபதி. கொடுங்கோலாட்சி. மக்கள் பிரதிநிதியாக ஒருவன் முகமூடி அணிந்து தளபதியின் சூழ்ச்சிகளை முறியடிக்கிறான். ஆனால் அது ஹீரோ ஆனந்தன் கிடையாது. பின் யார் அந்த நல்ல முகமூடி? அதுதான் சஸ்பென்ஸ். மிகுதியை வெண் திரையில் காண்க.

    இந்தக் காலத்தில் வெண் திரையில் எங்கே பார்ப்பது? எல்.சி.டி.திரையில்தான் பார்க்க முடியும். நல்ல பொழுதுபோக்கு படம்.

    இந்தப் படத்தில் ஒரு அருமையான பாடல்

    சுசீலாம்மாவின் 'அன்பில் ஆடுதே... இன்பம் தேடுதே' பி.பி.ஸ்ரீனிவாசுடன் இணைந்து.

    இனிமையான ஒரு பாடல்.

    Last edited by vasudevan31355; 9th July 2014 at 12:26 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #1527
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    படமே கதை சொல்லி விடுமே!

    நடிகர் திலகமே தெய்வம்

  9. #1528
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    அய்யய்யோ கார்த்திக் சார்! பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. பெரிய இடத்து விஷயம் சார் பெரிய இடத்து விஷயம். கூட்டணி முறிவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற ரேஞ்ச் வரை போய்விட்டது.

    இருந்தாலும் கார்த்திக் சார் இன்னும் பெரிய இடம் என்பதால் கூட்டணி மாறி விடலாமா என்ற நினைப்பு இப்போது வந்துள்ளது.

    பார்க்கலாம்.
    டியர் வாசு சார்,

    கார்த்திக்கை எல்லாம் நம்பி அணி மாறி விடாதீர்கள். கார்த்திக் ஒரு மண்குதிரை. அதையெல்லாம் நம்பி ஆற்றில் இறங்குவது ஆபத்து.

    களம் பல கண்ட பீஷ்மர் துணையிருப்பதே தங்களுக்கு நல்லது.

  10. #1529
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    டியர் வாசு சார்,

    களம் பல கண்ட பீஷ்மர் துணையிருப்பதே தங்களுக்கு நல்லது.
    கார்த்திக் சார்,

    அதுக்கு வாயெல்லாம் பல்லா இருக்கும் இப்போ.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #1530
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் ஆனந்தன் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள கீழே சொடுக்குங்கள்

    http://antrukandamugam.wordpress.com...2/c-l-anandan/
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •