Page 103 of 400 FirstFirst ... 35393101102103104105113153203 ... LastLast
Results 1,021 to 1,030 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #1021
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    மெல்லிசை மன்னரும், எஸ்.பி.பி. அவர்களும் சேர்ந்து பாடிய ஒரு அருமையான பாடல் இது.

    படம்: முத்தான முத்தல்லவோ

    ""எனக்கொரு காதலி இருக்கின்றாள், அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்""

    மெல்லிசை மன்னருக்கு இசையின் மேல் உள்ள காதலை, வாலி அவர்கள் கவிதையாக எழுதி அவரிடமே இசை அமைக்க கொடுத்த பாடல் இது. இசையை காதலியாக கற்பனை செய்து அவளை வர்ணனை செய்யும் இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் சுகமானவை.

    'ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்' என்ற வரிகளை பாடியவுடன், இந்த வரிகளுக்கு விளக்கம் கொடுப்பது போல 'க,ம,ப,த,நி........என்று ஸ்வரங்களை பாடி சிரிப்பது மிகவும் அழகு

    "பஞ்சமம் பேசும் பார்வையில் என்றும் பஞ்சணை போடும் எனக்காக
    தெய்வதம் என்னும் திருமகள் மேனி கைகளை அணைக்கும் இனிதாக"


    "என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன் மெல்லிசையாகும் எந்நாளும்
    வையகம் யாவும் என் புகழ் பேச கைவசமாகும் எதிர்காலம்"

    எவ்வளவு அர்த்தம் நிறைந்த வரிகள் இவை. இசை என்பவள் அதை ரசிக்கும் எல்லோருடனும் ஒரு ஜீவனாகவே வாழ்கிறாள். நம் மனதில் தோன்றும் பல வித உணர்ச்சிகளுக்கு ஏற்ப இந்த இசையானது எத்தனை வடிவங்களில் வந்து நம்முடன் நம் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறது. ஆறுதல் அளிக்கிறது. இந்த இசையை சுவாசிக்கும் அனைவருமே இதை உணர்திருப்பார்கள்.

    "மோகனம் என்னும் வாகனம் மீது தேவதை போல அவள் வந்தாள்"

    வாலி அவர்களின் அழகான கற்பனையில் வந்து ஒரு தேவதையை கண்ட பரவசத்தை உண்டாக்கும் வரிகள் இவை
    .
    மனதில் உள்ளதையே வார்த்தையில் கொண்டு வருவது கடினமாக உள்ளபோது, மெல்லிசை மன்னரின் மனதில் இசையாக உள்ள அவர் காதலியை பற்றி வாலி கவிதையாக்கி இருப்பதை எப்படி பாராட்டுவது? வார்த்தையே வரவில்லை.

    இந்தப் பாடல் பியானோவிலே ஆரம்பித்து அதிலேயே முடியும். ஒவ்வொரு சரணங்களின் இடையிலும் வரும் வயலினின் இசையும், பியானோவின் இசையும், பாடலின் இறுதியில் வரும் அந்த பியானோ மீட்டும் ராகத்தையே மறுபடி வயலினில் கேட்பதும் மனதை உருக வைக்கும்.

    இந்த பாடலின் இன்னொரு அழகு என்னவென்றால் மெல்லிசை மன்னர் அவர்கள் முதல் சரணத்தை எப்படி பாடி இருக்கிறாரோ, அதே பாணியில் இரண்டாவது சரணத்தை எஸ்.பி.பி. அவர்கள் பாடி இருக்கிறார்கள். கடைசியில் இருவரும் சேர்ந்து பாடும்போது காதில் தேன் வந்து பாய்கிறது.

    "கீதம் அவளது வளையோசை நாதம் அவளது தமிழோசை "

    ஒரு பெண் அசைந்தால் எப்படி வளையோசை ஒலிக்குமோ, அது போல் இவரது ஒவ்வொரு அசைவும் ஒரு இசைதான். தமிழ்ச் சொற்களுக்கு உயிரும் உணர்வும் கொடுத்து, அவை ஒழுங்காக உச்சரிக்கப்பட வேண்டும் என்பதிலும் ஒரு தமிழாசிரியரைப் போலக் கவனம் செலுத்துபவர் நம் தமிழிசை வேந்தரைத் தவிர வேறு யார்?


    கவிஞர் வாலி அவர்கள் எந்தப் பொருளில் இந்தப் பாடலை எழுதியிருப்பாரோ தெரியாது. பலரும் இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் என்று மயங்கியதில் வியப்பில்லை!


    பாடலை கேட்டு ரசியுங்கள். எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத ஒரு விருந்துதான்.


    குறிப்பு : இந்த பாடலின் வீடியோவை பார்க்கவேண்டும் என்றால் , வாழ்கையே வெறுத்துவிடும் . அவரவர் விருப்பம் . ஏவிஎம் ராஜனையும் , விஜயகுமாரையும் கிண்டலதிவர்கள் , ஜெய் கணேஷை பார்த்தால் என்ன சொல்வார்கள் ?

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1022
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    இளையராஜா கவிஞர் கண்ணதாசனை முதல் முறை சந்தித்த அனுபவம் .....

    "நான் ஜி.கே வெங்கடேஷிடம் பணியாற்றி கொண்டிருந்த போது முதன் முதலாக கவிஞரை சந்திதேன்.ஜி.கே.வி கன்னடத்தில் இசை அமைத்த ஒரு மெட்டை தமிழில் இசை அமைக்க தீர்மானித்து,பாடலை எழுத கண்ணதாசனை அழைத்தார். கன்னடத்தில் அந்த பாடல் எழுதிய் பாடலாசிரியருக்கு ஒரு வாரம் பிடித்தது,ஓரளவு கடினமான மெட்டுதான்.

    கண்ணதாசன் வந்தார், நான் கிடார் வைத்து கொண்டு உட்கார்ந்த...ு இருக்கிறேன்.டைரக்டர் சுழலை சொல்ல சொல்ல கவிஞர் கவனிக்கவே இல்லை..புகை பிடிக்கிறார், பிடிக்கிறார் பிடித்து கொண்டே இருக்கார் .. எனக்கோ எரிச்சல் வந்தது..டைரக்டர் சொல்லி முடிச்சதும், ஜி.கே.வெங்கடேஷை பார்த்து, சரி டியுன் என்ன என்றார்..
    ஜி.கே.வி: தானானனே நா நா.. டியுன் கேப் விடாம போய்டே இருந்தது..இன்னோரு வாட்டி கேட்டு கொண்டார்

    தானானனே நா நா
    தேன் சிந்துதே வானம்
    அப்புறம் என்ன ?

    தனா தனா தானானனா
    உனை எனை தாலாட்டுதே
    இப்படியே தொடர்ச்சி இல்லாமல்..

    மேகங்களே
    தரும் ராகங்களே
    என்று கூறி கொண்டே இருந்தார்.. கடைசியா எல்லா வரிகளையும் ஒன்று சேர்த்து பாடி பார்த்தால்..அந்த மெட்டுக்கு அந்த பாடல் அவ்வளவு அற்புதமாக பொருந்தியது.. மெய் சிலிர்த்து போனேன் . "



  4. #1023
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    பாலா ஜானகி குரலில்

    நவாப்க்கு ஒரு கேள்வி நல்ல ஜவாப் சொல்லையா
    சவால் விட்டு சலாம் போட்டு போக வந்தாரா

    கேள்வி பதில் பாணியில்

    'அக்காளை ஒருவனும் அப்பாவை ஒருத்தியும் மனந்ததெப்படி?'

    'அக் 'காளை ' ஒருவனும் அப் 'பாவை ' ஒருத்தியும் மணப்பதென்பது உலக வழக்கம்தானே

    இறுதியில் தான் மும்தாஜின் சூப்பர் கேள்வி
    "சூரிய சந்திரன் வானில் வருவது எதனாலே "
    உடனே chorus
    "எதனாலே எதனாலே எதனாலே "
    எங்கும் நிசப்தம் கேமரா ரவியை நோக்கி இருக்கும்
    சற்று நிறுத்தி
    "நிரந்தரமானது பூமியில் வராது அதனாலே ஆ ஆ ஆ ஆ " எக்ஸ்செல்லன்ட் பாலாவின் பருகா

    வாவ வாவ வாவ - பாதுஷாவின் இதர அல்லகைகள்

    Superb கவாலி

    http://www.youtube.com/embed/g2peaYaBFi0?
    gkrishna

  5. #1024
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    பாலா சார்
    முத்தான முத்தல்லவோ படத்தை நினவு படுத்தி விட்டீர்கள்
    முத்துராமன் சுஜாதா ஜெய் கணேஷ் தேங்காய் மனோரமா நடித்து 1976 ரிலீஸ்
    genius பாலா மெல்லிசை மன்னர் இசையில் இந்த படத்தின் இன்னொரு பாடல்

    மார்கழி பனியில் மயங்கிய நிலவில்
    ஊர்வசி வந்தாள் என்னை தேடி

    கார்குழல் தடவி கனி இதழ் பருகி
    காதலை வளர்தனே இசை பாடி
    ஆ இசை பாடி ஆ இசை பாடி

    வானத்தில் ஆயிரம் தாரகை பூக்கள்
    வேடிக்கை பார்க்கையிலே
    கானத்தில் நாங்கள் கலந்திரிந்தோமே
    இனி வேறென்ன வாழ்கையிலே
    இனி வேறென்ன வாழ்கையிலே

    மார்கழி பனியில் மயங்கிய நிலவில்
    ஊர்வசி வந்தாள் என்னை தேடி

    நான் ஒரு கண்ணில் நீ ஒரு கண்ணில் நீந்திவர
    மாங்கனி தன்னை பூங்கொடி என்று ஏந்திவர
    ஆசை நாடகம் ஆடி பார்க்கவும்
    ஓசை கேட்குமோ பேச கூடுமோ

    மார்கழி பனியில் மயங்கிய நிலவில்
    ஊர்வசி வந்தாள் என்னை தேடி

    கோமகள் என்னும் பூமகள் நெஞ்சில் சாய்ந்துவர
    தாமரை பொய்கை போலொரு வைகை பாய்ந்துவர
    தேவலோகமும் தெய்வகீதமும்
    ராஜயோகமும் சேர்ந்து வந்ததோ
    கார்குழல் தடவி, கனி இதழ் பருகி
    காதலை வளர்த்தேன் இசை பாடி

    ஒரு வித மயக்கத்தை ஏற்படுத்தும். பாடல்
    பாடலின் இசையை சொல்லவா
    பாடல் வரிகளை சொல்லவா
    எஸ்.பி.பி. அவர்களின் குரலை சொல்லவா
    கவிஞ்சரின் கற்பனையை சொல்லவா

    சற்று யோசித்து பாருங்கள்
    நாம் தனிமையில் இருக்கும் போது
    மார்கழி பனியும், மயங்கிய நிலவும் சேர்ந்து இருந்தாலே ஒரு இனிமை. கூட 'ஊர்வசி வந்தாள் எனைத்தேடி' என்ன ஒரு கற்பனை சார் !!!!
    வேறு என்ன வாழ்கையிலே வேண்டும்

    நிஜ வாழ்கையிலே காதல் கொண்ட பல பேருக்கு காதலை வெளிப்படுத்தவும், வளர்க்கவும் திரை இசை பாடல்கள் உதவுவதை சொல்வது போல இந்தப்பாடலில் கவிஞரின் அவர்கள்
    'காதலை வளர்த்தேன் இசைபாடி' என்று எழுதி இருப்பது மிகவும் பொருத்தம்.
    தேவலோகத்து ஊர்வசியுடன் இவர் காதலை வளர்ப்பது போல் வரிகள் இருப்பதால், மெல்லிசை மன்னரும் இந்த பாடலின் வரிகளை தேவகானமாகவே இசைத்துள்ளார்.

    "தேவலோகமும், தெய்வகீதமும், ராஜயோகமும் சேர்ந்து வந்ததோ"

    தேவலோகத்து ஊர்வசி இவரை தேடி வந்தது இவருக்கு எப்படி இருந்தது என்பதையும் கவிஞர் இந்த வரிகளில் எழுதி இருப்பது மிகவும் ரசிக்கும்படி உள்ளது.

    இந்தப்பாடலில் இரண்டாவது சரணத்துக்கு முன், இந்த பாடலின் பல்லவியை trumpet-l இசைதிருப்பதும், மேலும் சரணங்களுக்கு முன் வரும் அந்த வயலின் ஒலியும் மனதை தாலாட்டும்.

    இந்த பாடல் முடியும் அழகு மிகவும் ரசனைக்குரியது
    பொதுவாக பல பாடல்கள் முடியும்போது, அந்த பாடலின் பல்லவியிலோ அல்லது அந்த பாடலின் மெட்டையே ராகமாக இசைத்தோ முடிப்பார்கள். ஆனால் இந்த பாடல் முடிக்கப்படிருக்கும் விதமே வேறு. பாடல் முடியும் போது பல்லவியின் முதல் இரண்டு வரிகளை பாடாமல், அடுத்த இரண்டு வரிகளை பாடி முடிப்பது போல மெல்லிசை மன்னர் அமைத்திருப்பது, இந்த பாடலுக்கு ஒரு தனி அழகை தருகிறது. அதை எஸ்.பி.பி. அவர்கள் பாடி இருப்பது, குறிப்பாக 'இசை பாடி .....ஹா .......இசை பாடி' (மூச்சு விட்டு) என்று முடித்து, நம்மை இந்த பாடலை கேட்பதை முடிக்க விடாமல் மீண்டும் கேட்க தூண்டுகிறார்.

    இந்த பாடலை இசைக்காகவும், பாடலின் வரிகளுக்காகவும் ஒருமுறை கேட்ட பின், எஸ்.பி.பி. அவர்கள் இந்தப் பாடலில் வரும் ஒவ்வொரு வார்த்தையையும் மயக்கத்துடன் கூடிய கொஞ்சும் குரலில் பாடி இருப்பதற்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்

    படத்தில் ஜெய்கணேஷ் பாடுவது போலவும் டிவி ஸ்டேஷன் இல்
    அதை மனோரமா சுஜாதா பார்த்து ரசிப்பது போலவும் .

    கேட்க திகட்டாத கானம்

    இன்னும் சில பாடல்கள் உண்டு இந்த படத்தில்

    கோவை சௌந்தர் ராஜனின் குரலில் "புன்னை மரம் ஒன்று தென்னை மரம் ஒன்று கிட்ட கிட்ட நின்னு கொஞ்சுதம்மா கண்ணு "

    jc சுசீலா குரல்களில் "பாலபிஷேகம் செய்யவோ உனக்கு " இதையும் அலசலாம் சார்

    http://www.inbaminge.com/t/m/Muthana%20Muthallavo/
    gkrishna

  6. #1025
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ஒரு கொடியில் இரு மலர்கள்

    ஜெய் கீதா புரொடக்ஷன்
    sp முத்துராமன் டைரக்க்ஷன்
    ஜெய் ஷங்கர்,சுஜாதா,ஸ்ரீகாந்த் நடித்து 1976 இல் வெளிவந்த படம்
    கருப்பு வெள்ளை

    இந்த படத்தில் சுஜாதா ஜெயக்கு ஜோடி கிடையாது. சுஜாதா ஜெயக்கு தங்கை .ஸ்ரீகாந்த் இன்ஸ்பெக்டர் ஆக வருவார் .அவர் மனைவிதான் சுஜாதா . ஜெய் ஒரு திருடன் என்று நினைத்து ஸ்ரீகாந்த் அவரை அர்ரெஸ்ட் செய்து ஜெயிலில் அடைத்து விடுவார். சுஜாதாவையும் தள்ளி வைத்து விடுவார் .பிறகு உண்மை வெளி வந்து இறுதியில் எல்லாம் சுபமாக முடியும்

    சுஜாதாவின் கல்யாணம் முடிந்த பிறகு ஜெய் பாடும் ஒரு பாடல் .
    சுஜாதா ஸ்ரீகாந்த் இருவரும் முதல் இரவு அறையில் இருப்பார்கள்
    வெளியில் இருந்து ஜேசுதாஸ் குரலில் ஜெய் பாடும் ஒரு அருமையான பாடல்


    (தொகையறா)
    "அலங்கார ஓவியம் அன்பு எனும் காவியம்
    அண்ணனின் தங்கை அங்கே
    நலம் பாடும் நெஞ்சமே நாளெல்லாம்
    கொண்டவன் தங்கையின் அண்ணன் இங்கே "

    பல்லவி

    கண்ணனின் சன்னதியில்
    எந்தன் கண்மணி புன்னகையில்
    இனிமேல் காலங்கள் உள்ளவரை
    எந்தன் பொன்மனிக்கென்ன குறை

    அன்பு சொன்ன வேதம் நான் அன்று கொண்ட பாசம்
    எங்கு நின்ற போதும் என் எண்ணம் உன்னை வாழ்த்தும்
    அன்னமிட்ட கைகள் நான் அன்னை என்று சொல்லும்
    கங்கை போல பொங்கும் என் தங்கை கொண்ட உள்ளம்
    கற்பனை ஒரு கோடி
    எந்தன் கண் வழி உருவாகி
    இன்று சொப்பனம் காணுதம்மா
    எங்கோ சிந்தனை ஓடுதம்மா

    மாலை சூடி கொண்டு என் மஞ்சள் வாழை கன்று
    நாணம் பொங்க நின்று நான் காண வேண்டும் என்று
    அண்ணன் செய்த யாவும் நீ அறிந்ததில்லை இன்று
    காலம் சொல்ல கூடும் என் உள்ளம் என்னவென்று
    கட்டிலில் ஓர் உறவு
    பின்னால் தொட்டிலில் ஓர் உறவு
    இது போல் ஆயிரம் உறவு வரும்
    எங்கே அண்ணனின் நினைவு வரும்

    இந்த பாட்டை நன்றாக கவனித்தீர்கள் என்றால் ஜேசுதாஸ் தமிழ் உச்சரிப்பு மிக அருமையாக இருக்கும்

    இந்த பாடல் வாலி எழுதியதா அல்லது கண்ணதாசன் எழுதியதா என்று ஒரு debate ஒன்று உண்டு.
    இந்த படத்திற்கு கதை வசனம் பாடல்கள் வாலி என்று நினவு

    இந்த பாட்டு சுசீலா ஜெயச்சந்திரன் குரலிலும் ஒரு தடவை உண்டு
    அந்த பாடல் வரிகள்

    உன்னை போல பிள்ளை
    நான் பெற்றெடுக்கவில்லை
    ஏழை என்றும் என்னை
    நீ ஏற்றுகொண்ட முல்லை
    மாலையிட்ட மன்னன்
    என் மனதை பார்க்கவில்லை
    ஏழை சொன்ன சொல்லை
    என் தெய்வம் ஏற்கவில்லை
    நாயகன் ஓரிடமும்
    அன்பின் நாயகி ஓரிடமும்
    காணும் காவியம் இதுவம்மா
    எல்லாம் காரணம் விதியம்மா
    (கண்ணனின் சந்நிதியில் )

    மாலைசூடிகொண்டு என் மஞ்சள் வாழை தண்டு
    வாழவேண்டுமென்று நான் வாடிநின்றதுண்டு
    அண்ணன் செய்த யாவும் என் நன்மைக்க்காகவென்று
    அன்று சொன்ன பின்பு நான் அமைதிகொண்டதுண்டு
    கொண்டவன் துணையோடு நெற்றி குங்குமமலரோடு
    தங்கை மங்களம் பெறவேண்டும் அந்நாள கண்களில் வரவேண்டும்

    இரண்டாவது சரணம் ஜேசுதாஸ் பாடலுக்கும் சுசீலா ஜெயச்சந்திரன் பாடலுக்கும் உள்ள வேறுபாடு மிக அழகாக வெளிப்படும்
    ஒன்று கல்யாணம் முடிந்தவுடன்
    மற்றொன்று கணவனை விட்டு பிரிந்தவுடன்

    இந்த இரண்டு பாட்டுமே flute தபேல இடை இசையுடன் மிக ஒரு அருமையான அண்ணன் தங்கை பாசமலர்


    மெல்லிசை மன்னரின் குரலில் "உப்பை தின்னவன் தண்ணி குடிப்பான்
    தப்பை செய்தவன் தண்டனை கொள்வான் " பின் கோவை சௌந்தரராஜன் சேர்ந்து கொள்வார்
    ஜெய் ஜெயிலில் இருக்கும் போது இந்த பாடல் வரும்

    இந்த பாடல்களின் விடியோ லிங்க் எனக்கு கிடைக்கவில்லை
    யாரவது உதவி செய்தால்
    gkrishna

  7. #1026
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    கொக்கரக்கோ படம் - இசைஞானி இசையில் உயிர் கொடுக்க, பாலு குரலால் உயர் கொடுத்த பாடல்.


    பாலு பின்னியெடுத்திருப்பார். "நீதானே என் காதல்" என்று சொல்லிவிட்டு ஒரு சிரிப்பு சிரித்திருக்கிறார் பாருங்கள்! அழகாக இருக்கிறது கேட்க.


    கீதம் கீதம் சங்கீதம்
    நீதானே என் காதல் வேதம்
    நீதானே என் காதல்...ஹஹ்ஹாஹ்ஹா



    ..................................உன் கண்ணில் நீலங்கள் நான் கண்டு நின்றேன்
    ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன்
    காணாத கோலங்கள் என்றேன் ஆஆஆஆஆஆஆஆஆஆஆ................

    ................................உன்னை நான் கண்டாலே உண்டாகும் வெப்பம்
    நீதானே ஆனந்தத் தெப்பம் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ...................

    இந்த பல "ஆ' வுகாக பாலுவிற்கு கோடி கோடி நமஸ்காரங்கள். இந்த மாதிரியான பாடல்களை பாலுவை அடித்துக்கொள்ள யாருமில்லை.

    படத்தை பற்றி ...... யார் பார்த்தார்கள்.

  8. #1027
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார், பாலா சார்,

    மதிய வணக்கம்.

    இருவரும் சேர்ந்து பொறாமைப் பட வைத்து விட்டீர்கள். நான் என்னென்ன பாட்டு எழுத வேண்டுமென்று நினைத்தேனோ (அதாவது எனக்கொரு காதலி இருக்கின்றாள்) அதை பாலா சார் பிளந்து கட்டி விட்டார். என்ன ஒரு ரசனை மற்றும் எழுத்தாற்றல். பாலா சார், இவ்வளவு அழகாக எழுதுவீர்கள் என்று எனக்கு இப்போதுதான் தெரிகிறது. அருமை.

    கிருஷ்ணா சார்,

    'பாக்தாத் பேரழகி' போட்டிப் பாட்டை இன்றைக்கு எடுக்கலாம் என்றிருந்தேன். அதற்குள் நீங்கள்...

    நான் ரொம்ப ரசித்த பாடல் அது.

    ஆயிரம் காலமும் நீரினில் வாழ்ந்திடும் மான்
    எந்த மான்?
    எந்த மான்?

    அம்பு விடாதவன் துன்புறுத்தாத வில் அது என்ன?

    அருமையாய் இருக்கும் சார்.

    அப்புறம் என் உயிர்ப் பாடலான மார்கழிப் பனி பாடலை நான் எந்த அளவிற்கு ரசித்தேனோ அதைவிட அருமையாக ரசித்து எழுதி விட்டீர்கள்.

    பாலா சார்,

    உங்கள் ஜெயகணேஷ் நகைச்சுவையை ரொம்ப ரசித்தேன்.
    Last edited by vasudevan31355; 27th June 2014 at 03:53 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #1028
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (14)



    1975-இல் வெளிவந்த 'உறவு சொல்ல ஒருவன்' கருப்பு வெள்ளைத் திரைப்படம். விஜயபாஸ்கரின் அற்புத இசையமைப்பில் நமதருமை சுசீலா அவர்களின் கோடிகோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத முழுமையான இனிமையான குரலில் நம்மை அணுஅணுவாக இன்ப சாகரத்தில் மூழ்க வைக்கும் ஒரு பாடல்.

    இப்படி ஒரு குரலின் மூலம், இப்படி ஒரு டியூன் மூலம் நம்மை அப்படியே கட்டிபோட்டு விட முடியுமா...

    முடியும் என்கிறார்கள் இப்பாடலைப் பாடிய பாடகியர் திலகமும், இசையமைத்த இசையமைப்பாளர் விஜயபாஸ்கரும்.

    அப்படி நம் ரத்த நாளங்களில் புகுந்து இன்ப அதிர்வுகளை நமக்குள்ளே அதிரச் செய்யும் பாடல்.

    முத்துராமன், பத்மபிரியா முக்கியப் பாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

    தனக்கு வரப்போகும் வாழ்க்கை எப்படியெல்லாம் இருக்க வேண்டும்...தனக்கு வாய்க்கும் கணவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்... என்று கற்பனை செய்து செய்து வைத்திருக்கிறாள் இந்த இளம் நங்கை.
    அவள் நினைத்தது போலவே எல்லாம் நடக்க ஆரம்பிக்கிறது. வசதியான வாழ்வு அவளுக்குக் கிட்டவிருக்கிறது.

    மனமெல்லாம் மகிழ்ச்சி பொங்க, தன் தோழியர் கூட்டத்திடம் தான் நினைத்திருந்த வாழ்வு கிட்டப் போவதை எண்ணி அவள் ஆனந்தமாய்ப் பாடுவதைக் கவனியுங்கள்.

    அந்தக் குரலில் என்ன ஒரு மகிழ்ச்சி கலந்த ஆணவம்!

    என்னை மாதிரி இந்த உலகிலே யார் அதிர்ஷ்டசாலி இருக்க முடியும் என்ற களிப்பான கர்வம்.

    மகராணி போல மகராசியாய் வாழப் போகிறேன் என்று கொக்கரிக்கிறாள்.

    அளவு கடந்த ஆனந்தத்தால் அவள் எதைக் கண்டாலும் அது அவளுக்கு சுகமாகவே தெரிகிறது.

    எல்லோருக்கும் நினைத்த வாழ்வு எதிர்பார்த்தபடி கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதை அவர்கள் ரசித்து அனுபவிப்பதில்லை. அப்படியே ரசித்தாலும் அந்த வாழ்வு அவர்களுக்கு நிலைப்பதில்லை.

    ஆனால் என்னைப் பாருங்கள்.

    நிலையான, என்றென்றும் நான் ரசித்து மகிழும் வாழ்வு எனக்குக் கிடைத்து விட்டது. நான் மகராணியல்லாமல் வேறு என்ன?

    அந்த சந்தோஷத் தாரகை அழகுப் பதுமை பத்மப்ரியாதான். கொலு பொம்மை போல் நம் எல்லோரையும் தன் அளவான உடலமைப்பால் கவர்ந்தவர். கலர்ப்பட கதாநாயகி. அழகுமுகம். எடுத்த எடுப்பிலேயே நடிக இமயத்தின் ஜோடியாகி நம் 'வைர நெஞ்சங்'களில் ஊடுருவியவர்.

    அவர் தோழிகளுடன் ஆடிப்பாடும் இந்த உற்சாகப் பாடலைப் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் பத்மப்ரியா இன்னும் நன்றகப் பண்ணியிருக்கலாம். ஆனால் அவர் அழகுத் தோற்றமும், ஸ்லிம்மான உடலும் எல்லாவற்றையும் மறக்கடித்து விடுகின்றது.

    முழுக்க முழுக்க சுசீலாம்மா ஆக்கிரமிப்பு செய்த என் நெஞ்சமெல்லாம் நிறைந்துவிட்ட ஒரு பாடல்.

    தெள்ளத் தெளிவான ஆணித்தரமான தமிழ் உச்சரிப்பு, குரலில் தெரியும் கர்வம், குரல் பாவம், 'நச்'நச்சென்று வாயிலிருந்து விழும் வார்த்தைகள்

    இந்த 'தென்னகத்துக் குயில்' இப்பாடலில் செய்துகாட்டும் மாயாஜாலங்கள் தான் என்ன! உலகத்தில் வேறெந்தப் பாடகிக்காவது இவ்வளவு இனிமையான, முழுமையடைந்த குரல் இருக்கிறதா என்ன!


    (இந்த மாதிரி தற்பெருமை பொங்கும் இன்னொரு பாடலை 'புது வெள்ளம்' படத்தில் சுசீலா 'நான் ராஜாவீட்டுக் கன்னுக்குட்டி...கன்னுக்குட்டி' என்று பாடி அசத்தியிருப்பார். கன்னட மஞ்சுளா படுதிமிர் கொண்ட ஜமீந்தார் வீட்டுப் பெண்ணாக அருமையாக நடித்திருப்பார்)

    பஞ்சு அருணாச்சலம் இயற்றிய இப்பாடல் படத்தின் கதாநாயகியின் பாத்திரத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது. இயக்கம் தேவராஜ் மோகன்.

    இனி பாடலின் வரிகளைப் பார்க்கலாம். பின் பாடலைப் பார்க்கலாம்.


    பனிமலர் நீரில் ஆடும் அழகை
    ரசிக்க மனதில் சுகமே
    நினைவுகள் கோலம் போடும்
    இளமை குலுங்கும் தங்க ரதமே
    பனிமலர் நீரில் ஆடும் அழகை
    ரசிக்க மனதில் சுகமே

    (முத்துராமன் பத்மப்ரியா கேட்ட நகை, புடவையெல்லாம் வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறாரே! பின் ஏன் பத்மாவுக்கு சந்தோஷம் பொங்காது?)

    எண்ணங்கள் இனிக்கட்டுமே
    வண்ணங்கள் மலரட்டுமே
    வாலிபம் சிரிக்கட்டுமே
    வாழ்க்கையில் தொடரட்டுமே
    மகராணி நான் மகராசி நான்
    மகராணி நான் மகராசி நான்

    மனது போலவே வாழ்வு கிடைத்தது
    பார்க்கும் யாவையும் சுகம் சுகமே

    பனிமலர் நீரில் ஆடும்
    அழகை ரசிக்க மனதில் சுகமே

    கண்ணான கண்ணன் வந்தான்
    கண்ணோடு கண்ணை வைத்தான்
    பொன்னான புன்னகையில்
    பெண் என்னைத் தழுவிக் கொண்டான்
    மகராணி நான் மகராசி நான்
    மகராணி நான் மகராசி நான்

    இரவு போனது பொழுது விடிந்தது
    எனது நெஞ்சிலே சுகம் சுகமே

    பனிமலர் நீரில் ஆடும்
    அழகை ரசிக்க மனதில் சுகமே

    எல்லோரும் நினைப்பதில்லை
    நினைத்தாலும் கிடைப்பதில்லை
    கிடைத்தாலும் ரசிப்பதில்லை
    ரசித்தாலும் நிலைப்பதில்லை
    மகராணி நான் மகராசி நான்
    மகராணி நான் மகராசி நான்

    நினைத்த யாவையும் உண்மையானது
    இறைவன் கருணையால் சுகம் சுகமே

    பனிமலர் நீரில் ஆடும் அழகை
    ரசிக்க மனதில் சுகமே


    Last edited by vasudevan31355; 27th June 2014 at 04:03 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #1029
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    நன்றிகள் பல வாசு சார்

    இந்த பாடல் கொஞ்சம் கிட்ட தட்ட வாழ்க்கைக்கு சம்பதபட்டது. அதனால் மிகவும் பிடித்தமான பாடல்
    பலமுறை மனதிற்குள்ளே பாடல். (நான்) பாத்ரூம் பாடகர் கூட கிடையாது.

    திரைப்படம் : இரவும் பகலும்

    பாடியவர் : டி.எம். சௌந்தரராஜன்

    இயற்றியவர்: ஆலங்குடி சோமு

    இசை: டி.ஆர் . பாப்பா

    ஜெய் நடித்த முதல் படம்

    "உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இங்கே
    உறவுக்குக் காரணம் பெண்களடா
    உள்ளத்தை ஒருத்திக்குக் கொடுத்துவிடு - அந்த
    ஒருத்தியை உயிராய் மதித்து விடு"

    பாடல் எழுத்துபவர்கள் கற்பனை உலகிலேயே மிதப்பார்கள் போல் இருக்கிறது. கற்பனை வேறு நிஜம் வேறு. பாடல் எழுதுபவர்கள் மட்டும் அல்ல , காதல் வய பட்டவர்களும், கற்பனை உலகத்திலே இருக்கிறார்கள்.


    "காதல் என்பது தேன்கூடு - அதை
    கட்டுவதென்றால் பெரும்பாடு"

    அனுபவமான வரிகள். நிஜ வாழ்கையில் உண்மையே.


    "காலம் நினைத்தால் கைகூடும் - அது
    கனவாய்ப் போனால் மனம் வாடும்"

    நிஜ வாழ்க்கையில் கனவாய் போய், மனம் வாடி, பிறகு கை கூடியது.


    இப்பொழுதெல்லாம் காதல் எங்கே இருக்கிறது.

    அவள் இல்லை என்றால் , இன்னொருத்தி, அவன் இல்லை என்றால் இன்னொருவன்.

    உயிருக்கு உருவம் கிடையாது - அந்த
    உயிரின்றி எதுவும் நடவாது
    உயிருக்கு உருவம் கிடையாது - அந்த
    உயிரின்றி எதுவும் நடவாது
    உருவத்தில் உண்மை தெரியாது - என்றும்
    உலகத்தில் நேர்மை அழியாது


    ............... நேர்மை எங்கே இருக்கிறது ?


  11. #1030
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அருமை பாலா சார்!

    பாடல் எழுத்துபவர்கள் கற்பனை உலகிலேயே மிதப்பார்கள் போல் இருக்கிறது. கற்பனை வேறு நிஜம் வேறு.
    அப்பட்டமான உண்மை.

    நல்ல பாடல். அனைவருக்கும் பிடித்த பாடல்.

    (நான்) பாத்ரூம் பாடகர் கூட கிடையாது.
    சார்,

    உங்கள் நச்' நகைச்சுவை அதிரடி கலந்த சுவை.

    இப்பொழுதெல்லாம் காதல் எங்கே இருக்கிறது.

    அவள் இல்லை என்றால் , இன்னொருத்தி, அவன் இல்லை என்றால் இன்னொருவன்.
    இதுவும் முழுமையான உண்மை

    ............... நேர்மை எங்கே இருக்கிறது ?
    'ஆயிரத்தில் ஒருவரி'டம்.
    Last edited by vasudevan31355; 27th June 2014 at 04:13 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •