Page 1 of 400 1231151101 ... LastLast
Results 1 to 10 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #1
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like

    மனதை மயக்கும் மதுர கானங்கள்

    மனதை மயக்கும் மதுர கானங்கள்

    அனைவருக்கும் வணக்கம்.

    அதுவும் பழைய பாடல்கள் விரும்பிகளுக்கு என் ஸ்பெஷல் வணக்கங்கள்.

    இது ஒரு புது இழை.

    'மனதை மயக்கும் மதுர கானங்கள்'

    தமிழ்ப் படங்களில் நம் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்ற மதுர கானங்களைக் கண்டும், கேட்கவும், மகிழவும் இந்த இழை தொடங்கப்பட்டுள்ளது.

    நம் மனதில் பல பாடல்கள் எப்போதும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கின்றன. சில பாடல்களை நம்மை அறியாமல் வாய் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். ஆனால் படம் என்னவென்று தெரியாது. படத்தின் பெயர் தெரியும். பாடல் நினைவுக்கு வராது.

    இதற்கெல்லாம் இந்த இழை ஒரு தீர்வாக அமையும் என்று நினைக்கிறேன்.

    இதில் இன்னொன்று. மிடில் சாங்ஸ் என்று நாம் செல்லமாகப் பெயரிட்டு அழைக்கும் பல பாடல்களை நாம் இங்கே நினைவு கூற இருக்கிறோம். அவ்வளவு அற்புதமான பாடல்கள் இருக்கின்றன. திரையிசைப் பாடல்களைப் பற்றி அறிந்த ஜாம்பவான்கள் பலர் நமது ஹப்பில் இருக்கிறார்கள். நிச்சயம் அவர்கள் இந்த இழையில் பங்கு கொண்டு தங்களுக்குத் தெரிந்த பல அபூர்வ விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்..

    வெறுமனே யூ டியூபிலிருந்து பாடலை இழுத்துப் போட எனக்கு உடன்பாடில்லை. அது போரடிக்கவே செய்யும். அப்பாடல்களைப் பற்றிய சுவையான தொகுப்புகளை நாம் நமக்குத் தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு தெரிவித்தால் இத்திரியின் சுவாரஸ்யம் வெகுவாகக் கூடும். மேலும் அரிய, மிக அரிய பாடல்களை நாம் இங்கே அலசலாம்.

    அனைவரது ஒத்துழைப்பும் இங்கு கிடைக்கும் என்று பரிபூரணமாக நம்புகிறேன்.

    முதலில் 'மறுபிறவி' படத்திலிருந்து ஒரு பாடல்.



    முதலில் இந்தப் படத்தைப் பற்றிய சிறு குறிப்பு. 1973-இல் வெளியான இத்திரைப்படம் விஜயா சூரி கம்பைன்ஸ் தயாரிப்பு.

    முத்துராமன், மஞ்சுளா, அசோகன், தேங்காய் ஸ்ரீனிவாசன் போன்றோர் நடித்திருந்த இத்திரைப்படம் நிஜமாகவே ஒரு புதுமைத் தயாரிப்புதான். டாக்டர் கோவூர் அவர்களும் இப்படத்தில் மனநல மருத்துவராகவே நடித்திருந்தார்.

    அப்போதே 'அடல்ட்ஸ் ஒன்லி' அதாவது 'A' செர்டிபிகேட் பெற்ற படம் இது. மலையாளத்தில் வந்து பெரும் வெற்றி பெற்ற 'புனர்ஜென்மம்' என்ற திரைப்படத்தின் தமிழாக்கமே 'மறுபிறவி' ஆகும். மலையாளத்தில் பிரேம்நசீர், ஜெயபாரதி பிரதான பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    சிக்கலான முள் மேல் நடப்பது போன்ற கதையமைப்பு கொண்ட அருமையான திரைப்படம் இது.

    ஒரு வரியில் கதையை சொல்ல வேண்டுமென்றால்

    கல்லூரி பேராசிரியர் ஒருவர் அக்கல்லூரி மாணவியை விரும்பியே மணந்து கொள்கிறார். ஆனால் அவளுடன் தாம்பத்ய உறவு கொள்ள மட்டும் அவர் உடலும், மனமும் நடுங்குகின்றது. உடலில் அவருக்குக் குறையில்லை. தனக்கு உடல்சுகம் தேவைப்படும் போது தன் வீட்டு வேலைக்காரியுடன் அவர் உறவு வைத்துக் கொள்கிறார். மனதில்தான் அவருக்குக் குறை. மனைவியோ தன் கணவனின் போக்கை எண்ணி செய்வதறியாது திகைக்கிறாள். கண்ணீர் வடிக்கிறாள்.

    இறுதியில் மருத்துவரை நாடும் போது கணவனின் பலவீனத்துக்குக் காரணம் புரிகிறது. கணவனின் தாயின் உருவமும், அவன் தாரத்தின் உருவமும் ஒத்துப் போவதால் அவன் தன் தாரத்தை நெருங்கும் போதெல்லாம் மனைவியின் முகத்தில் தன் அன்னையின் உருவத்தைப் பார்க்கிறான். அதனால் மனைவி உறவு கொள்ள வரும்போதெல்லாம் அவளை விட்டு விலகுகிறான்.

    இறுதியில் அருமையான மனநல மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு நார்மலாகிறான் கணவன்.

    அன்றைய காலகட்டத்தில் "அய்யய்யோ! 'மறுபிறவி' மோசமான படமாயிற்றே!" என்று பொய்யாக எல்லோரும் வெறுத்த படம் இது.

    ஏனென்றால் படத்தின் கதை அமைப்பிற்குத் தேவையான காட்சி அமைப்புகள். இளமை பொங்கும் மனைவியாக மஞ்சுளா தன் தாம்பத்ய உறவிற்காக கணவன் முத்துராமனிடம் ஏங்கும் காட்சிகள் அப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டன. மஞ்சுளாவும் சற்று தாராளமாக நடித்திருந்தார். முத்துராமனுக்கு முற்றிலும் புதுமையான வேடம். அமிர்தம் அவர்களின் ஒளிப்பதிவு பௌர்ணமி நிலவின் ஒளி போல பளிச்சோ பளிச்.

    18 வயதுக்குக் கீழே வரும் சிறுவர், சிறுமிகள், மாணாக்கர்களுக்கு தியேட்டரில் டிக்கெட் தர மாட்டார்கள்.

    இந்த லிஸ்டில் சேர்ந்த வேறு இரண்டு படங்கள். ஒன்று 'அவள்'. இன்னொரு படம் பாலச்சந்தரின் 'அரங்கேற்றம்'.

    இலங்கையை சார்ந்த 'டாக்டர் கோவூர்' எழுதிய இந்த கதையை அற்புதமாகப் படமாக்கியிருந்தார் இயக்குனர் ராமண்ணா. டி .ஆர் பாப்பா என்ற அற்புத இசையமைப்பாளரின் பங்கை இப்படத்தில் என்னவென்று சொல்ல!

    ஒவ்வொரு பாடலும் தேன் சொட்டும் ராகம்.

    டி.என்.பாலு வசனம் எழுதிய இப்படத்தை இப்போது பார்க்கும் போது மிகவும் ரசிக்க முடிந்தது. அப்போது ஆபாசம் மட்டுமே தென்பட்டது. இப்போது மனநல ரீதியாக பல விஷயங்கள் இப்படத்தின் மூலம் புரிய வந்தது.

    படத்திலிருந்து சில காட்சிகள்.











    இப்போது பாடலுக்கு வருவோம்.



    படத்தின் நாயகன் சிறுவனாக இருக்கும்போது கணவனை இழந்த அவனது தாய் தன் மகனைக் கொஞ்சிப் பாராட்டுவது போல் அமைந்த இந்தப் பாடலில்

    விஷேசங்கள் சில உண்டு.

    அந்த இளம் வயதிலேயே எந்த ஈகோவும் பார்க்காமல் நெற்றியில் விபூதி அணிந்து விதவைத் தாயாக மஞ்சுளா நடித்திருந்தார். (இப்போதுள்ள ஹீரோயின்கள் அப்படி நடிக்கத் துணிவார்களா!?)

    மஞ்சுளாவின் சிறுவயது மகனாக வருபவர் நடிகர் பப்லு. என்ன ஒரு அழகு இந்த சிறுவன்!

    இந்தப்பாடலைப் பாடியவர் சூலமங்கலம் ராஜலஷ்மி. ஆஹா! ஒரு தாயின் பரிவையும் பாசத்தையும் இக்குரல் என்னமாய் பிரதிபலிக்கிறது! கேட்க கேட்க அவ்வளவு சுகம். மனதை தாலாட்டும் இப்பாடலைக் கேட்டு மயங்காதவர் இருக்கவே முடியாது.

    காவேரி மாந்தோப்புக் கனியோ!
    கண்கள்
    கல்யாண மண்டபத்து மணியோ!
    நல்ல பாவேந்தர் பாராட்டும் மொழியோ!
    பண்பாடும் தென்பாங்கு கிளியோ!


    நீங்களே பார்த்து உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்.



    vasudevan.
    Last edited by vasudevan31355; 8th June 2016 at 07:24 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes Subramaniam Ramajayam liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    VASUDEVAN SIR

    SUPER ANALYSIS MARU PIRAVI SONG .VERY NICE .

    THIS SONG IS MY FAVORITE IN THIS MOVIE.


  5. #3
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நன்றி வினோத் சார்.

    அருமையான இன்னொரு பாடல் ஒன்றை மறுபிறவி படத்திலிருந்து அளித்துள்ளீர்கள். அடுத்து அந்த பாடலைத்தான் எடுக்கலாம் என்று இருந்தேன். நீங்கள் முந்தி விட்டர்கள்.

    மாணவர் தமிழ் இலக்கிய மன்ற கல்லூரி விழா ஒன்றில் கல்லூரி மாணவியான மஞ்சுளா ஸ்டேஜில் பாடுவது போன்ற சிச்சுவேஷன்.

    சிக்கென்ற, கண் திருஷ்டி பட்டு விடும் அளவிற்கு அழகான மஞ்சுளா. எம்.ஆர்.விஜயாவின் மயக்கும் குரல்.





    ஏடி பூங்கொடி...
    ஏனிந்தப் பார்வை...
    கோடி கோடியோ...
    நீ கொண்ட ஆசை...
    தேடி வந்த தெய்வம் யாரடி?....

    கவிஞரின் அருமையான வரிகள். பாடலின் இடையிசையின் போது தொண்டையை அமைதியாகக் கனைத்து சரி செய்து கொண்டு மைக்கையும் சரி செய்து கொள்ளும் மஞ்சுளாவின் சாமர்த்தியம். (நடிகர் திலகத்தின் திருவிளையாடலான 'பாட்டும் நானே பாவமும் நானே' (தொண்டை செருமல்) பார்த்துவிட்டு மஞ்சுளா ஷூட்டிங்கிற்கு வந்திருப்பார் போல)... அமைதியாக மஞ்சுளாவை ரசிக்கும் முத்துராமன்ஜி. மனதைப் பிசையும், மனதை என்னவோ செய்யும் பாப்பாவின் மயக்கும் இசை.

    இசையை ரசிக்காதவர்கள் கூட பலமுறை தாளம் போட்டு ரசிக்கும் பாடல்.

    இரவு தூங்கப் போகுமுன் கேட்டுப் பாருங்கள். சொர்க்கம் என்பதன் அர்த்தம் புரியும்.
    Last edited by vasudevan31355; 8th June 2014 at 10:56 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #4
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆஹா... வாசு சார்... நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும் பாடல்களுக்கென்றே பிரத்யேகமாக மனதை மயக்கும் மதுரத் திரியைத் தொடங்கி விட்டீர்கள். இனி இத்திரி மிக விரைவில் ஐந்து நட்சத்திர அந்தஸ்தை எட்டி விடும் என்பதில் ஐயமில்லை.

    அடியேனின் பங்கிற்கு..

    மீண்டும் டி.ஆர். பாப்பா இசை..

    எஸ்.பி.பாலாவுடன் கலைச்செல்வி ஜெயலலிதா பாடிய அற்புதமான பாடல். இதுவும் மனதை மயக்கும் கானமாகும். வைரம் திரைப்படத்தில் இடம் பெற்ற இரு மாங்கனி போல் இதழோரம், வெளியான கால கட்டத்தில் விவித் பாரதியில் மதிய வேளையில் திரை அமுதம் நிகழ்ச்சியில் அடிக்கடி இடம் பெறும். சில சமயம் மாலை 4.30 மணி மதுர கீதம் நிகழ்ச்சியிலும் ஒலிக்கும். அருமையான பாடல். விக்டோரியா 203 ஹிந்தித் திரைப்படத்தை தமிழில் எடுத்த படமே வைரம். அசோகன் எம்.ஆர்.ஆர். வாசு இருவரின் அற்புதமான நடிப்பு இப்படத்திற்கு பெரிய பலம். பாடல்களும் அவ்வாறே. ஜெய், ஜெயலலிதா இருவருமே மிகவும் ரம்மியமாக காட்சி அளிப்பர்.

    இனி பாடலைக் கேளுங்கள்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #5
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு - நீங்கள் போகும் இடமில்லாம் நாங்களும் வருவோம் - போ போ போ !!

    எங்கிருந்து இப்படியெல்லாம் பிடிக்கிறீர்கள் - மறு பிறவி என்று ஒரு படம் வந்ததே உங்கள் பதிவிலிருந்துதான் தெரிய வந்தது - மறு பிறவியை இந்த பிறவியிலேயே அலசி எங்களை திக்கு முக்காட வைத்து விட்டீர்கள் - இன்னும் 500mt கூட நடந்தால் NT -திரி -12 வந்துவிடுமே - வரும் வாய்ப்பு உள்ளதா இல்லை அதையும் மறு பிறவியில் தான் சந்திக்க வேண்டுமா ??

    வாசு NT திரியில் இல்லாதது - அயோத்தியில் ராமர் இல்லாத ஆட்சி போல உள்ளது - 14 ஆண்டுகள் வன வாசம் முடிந்து விட்டதே வாசு !!

    கங்கையில் நீர் புரண்டு ஓடும் போது , உங்களை சிற்றோடையில் தானா இப்படி சந்திக்க வேண்டும் ??

    இமயமலையில் வசிக்கும் ஒருவரை பறங்கி மலையில் தானா சந்திக்க வேண்டும் ?

    ஒரு துளி விஷத்தால் ஏற்பட்ட side effect இப்படியா தொடர வேண்டும் ?

  8. #6
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவி,

    நன்றி! தங்கள் பதிவிற்கு தலைவரின் பாடல் வரிகளே பதில்.

    மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை
    மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை
    தெய்வமே! யாரிடம் யாரை நீ தந்தாயோ!
    உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ!

    ரவி,

    நான் அங்கு வந்தால் என்னுடைய டாமினேஷன்தான் அதிகம் இருக்கும். என் உள்ளம் பாராட்டையே எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும். 'ஹானஸ்ட்' உள்ள அறிவுஜீவி ராஜாக்கள் உரைத்தது. ராமர் புகழ் பாடும் மங்கி (அதாவது ஹனுமானை சொன்னேன்பா) என்னை மிதித்து உரைத்தது. அது பாட்டுக்கும் அது வேலையைச் சரியாகச் செய்து விட்டு ஓடியே விட்டது.

    அப்புறமும் எனக்கு புத்தி வரவில்லையென்றால்?....இதற்கு கேட்பாரும் இல்லை. மேய்ப்பாரும் இல்லை. தலைவரின் தீவிர ரசிகன் ஆயிற்றே! சூடு சொரணை அவரிடத்தில் இருந்தது போல கொஞ்சமாவது நமக்கு இருக்காதா?

    கங்கை ஆற்று வெள்ளத்தில் நின்று தண்ணீர் குடித்து ஆற்று வெள்ளத்தில் அடித்து நீரில் மூழ்குவதை விட, எட்ட நின்று குடிக்கும் பாதுகாப்பான சுனை நீர் எவ்வளவோ பெட்டெர். முழு ஆத்ம திருப்தியும் கிடைக்கும். பாதுகாப்பும் உண்டு. வசுவுகள் வராது. ஒவ்வொரு பதிவிற்கும் நடுங்க வேண்டி இருக்காது. (நடுங்குவதைப் பற்றி உங்களுக்கு நான் சொல்லியா தெரிய வேண்டும்?) வழுக்கி விழுந்தால் வாழ்வுண்டு. வழுக்கி, வழுக்கி, வழுக்கி வீழ்ந்தவனுக்கு வாழ்வுண்டோ?

    உனக்கும் புரியலையா ராமா?! அட ராமா! ரகுராமா! ராஜாராமா! ஆதிராமா!முரளீதரா! கிருஷ்ணா! அட கோபாலா! செந்தில் குமரா! கார்த்திகேயா! ராமனுக்கு தாசா!

    ஒரே ஒரு பிறவி! தெய்வப்பிறவி! மறு பிறவி எடுத்தாலும் அது ஒன்றே தெய்வப்பிறவி. அது நான் அணுஅணுவாக பூஜிக்கும் என் இதய தெய்வம் நடிகர் திலகமே!
    Last edited by vasudevan31355; 8th June 2014 at 02:32 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #7
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Hi Vasu,

    I enjoyed your maru piravi.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #8
    Junior Member Newbie Hubber
    Join Date
    May 2021
    Location
    Adayar, Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    Mr. Vasudevan.

    Good write-up on Marupiravi song.

    Please write about the song Oh mere dhil rupa sung by JJ mam in suriyagandhi.

    stl.

  11. #9
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்,

    திரி தொடங்கிய உடனேயே வந்து வாழ்த்துக்கள் கூறி தங்கள் பங்கையும் சிறப்பாக அளித்து விட்டீர்கள். நன்றி!

    'வைரம்' படத்தில் தாங்கள் அளித்துள்ள 'இரு மாங்கனி போல் இதழோரம்' பாடல் என் மனதை மிக மிக கொள்ளை கொண்ட ஒரு பாடல். எஸ்.பி.பாலாவின் குழையும் குரலுக்கு ஈடுகொடுத்து ஜெயலலிதா அவ்வளவு அற்புதமாக இப்பாடலைப் பாடியிருப்பார். (கிட்டத்தட்ட பி. வசந்தாவின் குரல் போல)

    ராமண்ணாதான் இப்படத்தின் இயக்குனர். காதல் காட்சிகளை ரசம் சொட்ட சொட்ட அதுவும் ஹீரோயினை நனையவிட்டு பார்ப்பதில் இவருக்கு இணை இவர்தான்.

    'இது காதல் பூஜை என்றால் ஆரத்தி எங்கே?'

    இந்த வரிகளை மேடம் பாடும் அழகே அழகு.

    தங்களின் பங்களிப்புகள் அவசியம் இத்திரிக்குத் தேவை. ஏனெனில் தமிழ்த் திரைப்படப் பாடல்கள் அனைத்தையும் அறிந்தவர் தாங்கள். அதுமட்டுமல்ல... இசைக்கருவிகளைப் பற்றியும் அற்புதமான தகவல்களைத் தரக்கூடிய விஷயங்கள் அறிந்தவர்.

    அரிதான அருமையான பாடல்களை சுவைபடத் தருவீர்கள் என்று நான் சொல்லவும் வேண்டுமோ!
    நடிகர் திலகமே தெய்வம்

  12. #10
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோ,

    நன்றி!

    நீங்கள் என்ன சாமான்யப்பட்டவரா? எந்தப் பாடலாக இருந்தாலும் நினைத்த நொடியில் நான் கேட்ட மாத்திரத்தில் சொல்லக்கூடிய அசாத்திய திறமை கொண்ட மனிதராயிற்றே!

    நாம் அலைபேசியில் எவ்வளவோ பாடல்களைப் பற்றி மணிக்கணக்காக உரையாடியுள்ளோம். அதுதான் இத்திரியை நான் தொடங்க ஒரு காரணமாய் இருந்தது என்றும் கூறலாம்.

    நடிகர் திலகத்தின் காவியங்களை ஆழ்ந்து அலசுவது தங்களுக்குக் கைவந்த கலை.

    அதே போல இத்திரியில் தங்களது பங்கு இருக்க வேண்டும் என்பது என் ஆசை.

    வாருங்கள். அற்புதமான பாடல்களைப் பற்றிய தகவல்களைத் தாருங்கள். இது என் அன்புக் கட்டளை.
    நடிகர் திலகமே தெய்வம்

Page 1 of 400 1231151101 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •