Page 3 of 54 FirstFirst 123451353 ... LastLast
Results 21 to 30 of 536

Thread: Maestro Ilayaraja News and Tidbits 2014

 1. #21
  Banned Devoted Hubber
  Join Date
  Sep 2013
  Posts
  419
  Post Thanks / Like
  Iliyaraaja's new book on thirupaavai to be released on June 2nd, 2014.  thirupaavai.jpg

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #22
  Senior Member Devoted Hubber rajaramsgi's Avatar
  Join Date
  Mar 2009
  Location
  U.K
  Posts
  493
  Post Thanks / Like
  இளையராஜா கொடுத்த தர்ம அடி!
  விகடன் மேடை - எஸ்.பி.பாலசுப்ரமணியம் பதில்கள்

  சுஜாதா, ஸ்ரீவில்லிபுத்தூர்.

  ''பாரதிராஜா உங்கள் ஆத்ம நண்பர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்... அப்படியா?''
  ''அப்படியேதான்! எனக்கு முதல்ல அறிமுகமாகி நண்பன் ஆனது பாரதிராஜாதான். அவரோட நாடகங்கள்ல பாடல்கள் பாடுவேன்; பேத்தாஸ்ல ஹம்மிங் பண்ணுவேன்; ஃப்ளூட் வாசிப்பேன். எனக்கு, பாவலர் சகோதரர்கள் அறிமுகமானதே அவர் மூலமாத்தான். குறும்புப் பசங்க நாங்க. அப்ப பாரதிராஜா டைரக்டர் ஆகலை; இளையராஜாவும் இசையமைப்பாளர் ஆகலை.
  சிதம்பரத்துல ஒரு கல்லூரியில் புரோகிராம். சாயங்காலம்தான் நிகழ்ச்சிங்கிறதால, சும்மா உட்கார்ந்து அரட்டை அடிச்சிட்டு இருந்தோம். அப்ப பாரதிராஜா, 'இப்ப எல்லாரையும் அரட்டுற மாதிரி ஒண்ணு பண்ணுவோம். ரெண்டு பேரும் பயங்கரமா சண்டை போடுற மாதிரி நடிப்போம். எல்லாரும் பயந்துடுவாங்கள்ல?னு கேட்டார். சரினு சண்டை போட ஆரம்பிச்சோம்.
  'பெரிய சிங்கராடா நீ? நான் ஆகப்போறேன் பார்... பெரிய டைரக்டர்!னு ஆரம்பிச்சு ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிட்டு கீழே விழுந்து புரள்றோம். இளையராஜா, பாஸ்கர், அமர்சிங்னு எல்லாரும் ஓடி வந்துட்டாங்க. 'யோவ் விடுங்கய்யா... ஃப்ரெண்ட்ஸா இருந்துட்டு இப்படியா அடிச்சிப்பீங்க? காலேஜ் பசங்கள்லாம் பார்க்கிறாங்க... விடுங்கனு விலக்கினாங்க.
  10 நிமிஷத்துக்குப் பிறகு, 'என்னடா பாரதி... நான் நல்லா நடிச்சேனா? - கேட்டப்பதான் அது விளையாட்டுனு தெரிஞ்சது அவங்களுக்கு.
  கோபம் வந்து, 'நடிச்சீங்களா..?னு கேட்டு அடிச்சாங்க பாருங்க அடி. அதுதான் ரியல் தர்ம அடி. இப்படி... அப்போ நிறைய வால்தனம் பண்ணியிருக்கோம்!''


 4. #23
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Dec 2004
  Posts
  1,178
  Post Thanks / Like
  Complaint against Agilan of AGI music for misusing IR's name:

  http://tamil.oneindia.in/movies/news...er-201808.html

  thanks,

  Krishnan

 5. #24
  Senior Member Regular Hubber
  Join Date
  Dec 2009
  Posts
  140
  Post Thanks / Like
  Such things are expected from an unknown music label company. Why can't Raaja associate with big world brands like Sony, Tharangini (Yesudas), Saregama, T-Series, Magnasound? The music world is a big social engineering platform where artists from every corner of the globe are trying to compete. We have such magnificient collection of Platinum hits from Ilayaraaja which is being abused by an unknown music label. This is not the first time that we have heard of fights with music companies. Raaja himself went through litigation with Inreco, Echo, AVM Audio and others. Rahman had issues with few companies regarding music royalty. I would expect Karthik Raaja to resolve these litigations and hand over Maestro's music album distribution to big label firms. You have to think big and global in order to take Maestro's music to all parts of the globe. Ilayaraaja's music certainly cannot be limited to just Indian cinema because he is a global phenomenon. A truly global music company can spread his music/ songs to billions of listeners world wide. Every time I listen to a music soundtrack or album, I am more than convinced that our Maestro is truly a Legend. The so called hyped mega productions sound tracks are a failure. Raaja's sound track has indeed salvaged many super star's career.

  The following article is from NY Times in 2010. Why can't Raaja's albums be distributed via Universal Music/ Deshits?
  http://www.nytimes.com/2010/07/19/ar...desi.html?_r=0
  Last edited by rajsekar; 29th May 2014 at 12:21 AM. Reason: Adding few lines

 6. #25
  Banned Devoted Hubber
  Join Date
  Sep 2013
  Posts
  419
  Post Thanks / Like
  பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று... ஆமாம் நீங்கள் நடப்போகும் மரங்கள் வீசும் பூங்காற்று உங்கள் பேர் சொல்லும் ...நண்பர்களே ..

  வரும் இரண்டாம் தேதி இசைஞானி பிறந்தநாள் விழாவாக IFCG யின் 71001 மரங்கள் நடுவிழா உலகம் முழுவதும் நடக்கபோகிறது , இந்த விழாவில் பங்கேற்க இயலாதவர்கள் தங்கள் வீட்டில் கூட ஒரு மரம் நட்டு கொண்டாடலாம், மரக்கன்றுகள் வேண்டுபவர்கள் கோவை, காந்திபுரத்தில், ராம் நகர் , செந்தில் குமரன் திரையரங்கு எதிரில் உள்ள என் அலுவலகத்தில் கூட பெற்றுகொள்ளலாம் ,

  முப்பத்து ஒன்றாம் தேதி முதலாக உங்களுக்காக வழங்கலாம் என்று இருக்கிறேன் , வேண்டுபவர்கள் முன்பே எனக்கு தகவல் தந்தீர்களானால் உங்களுக்காக வழங்க காத்திருக்கிறேன் .. இசைஞானி இசையால் நம்மை தூய்மையாக காத்தது போல நாமும் இவ்வுலகை தூய்மையாக காப்போம் .. நாம் நடும் கன்றுகள் மரமாகும்போது நாம் இல்லாமல் போனாலும் அவை என்றும் இருக்கும் . பலன் பெறுவது யாராய் இருந்தாலும் நடுவது நாமாய் இருப்போமே .. என் அலைபேசி எண் : 80151  00477http://https://lh5.ggpht.com/HNXpWmI...ZAZDD1nG1A=s85

 7. #26
  Banned Devoted Hubber
  Join Date
  Sep 2013
  Posts
  419
  Post Thanks / Like
  இசை மேதை மொசார்ட்டும் ( Wolfgang Amadeus Mozart ) இசைஞானி இளையராஜாவும் சந்திக்கும் ஒரே புள்ளி .!!!

  I Pay no attention whatever to anybody's praise or blame.
  I simply follow my own feelings
  ( W.A.Mozart )


  நேற்றின் அரங்கிலே நிழல்களின் நாடகம்
  இன்றின் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
  வருங்காலம் வசந்த காலம்
  நாளும் மங்களம்
  இசைக்கென இசைகின்ற ரசிகர்கள்
  ராஜ்ஜியம் எனக்கே தான்

  வாழ்த்த வயசு எதுக்கு? நல்ல மனம் தானே வேண்டும்!!

  பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம் !!!

  அவரின் விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின்
  நாட்டியங்களை இன்னும் இன்னும் அமைத்துக் கொண்டே இருக்க வேண்டும


  Last edited by poem; 2nd June 2014 at 12:41 AM.

 8. #27
  Member Junior Hubber
  Join Date
  Sep 2010
  Location
  Bahrain
  Posts
  40
  Post Thanks / Like

  IR's Birthday

  ISAI alias ILAYARAJAVUKKU PIRANTHA NAAL VAAZTHUKKAL. May GOD Bless HIM with Good Health , Peace & MORE DIVINE MUSIC...
  Enrum Anbudan
  Madhanraj M

 9. #28
  Banned Devoted Hubber
  Join Date
  Sep 2013
  Posts
  419
  Post Thanks / Like
  இசையாலணையும் பெயர்..


  தாலாட்டில் துவங்கி ஒப்பாரியில் நிறைவுறும் ஒவ்வொரு மனித வாழ்விலும் இசையென்பது உடன் வரும் நிழலைப்போல தொடர்ந்து வந்துகொண்டே தானிருக்கிறது இன்றும்.. ஆதியில் விலங்குகளை விரட்டவும்,பயங்களைத் துரத்தவும் ஒலியெழுப்பி சப்தத்தை மௌனத்திடமிருந்து மொழி பெயர்த்தார்கள், நாகரீகம் வளர,வளர சப்தம் சங்கீதமானது. இன்றைய காலத்தின் கணக்குப்படி பார்த்தால் ஒரு தலைமுறையென்பது 50 முதல் 60 வயதிற்குள்ளேயே முடிந்துவிடும் அபாய கட்டத்தில் அறுந்து விழாமல் தொக்கி நிற்கிறது, இந்தத் தலைமுறையின் இசைத் தட்டினை 30 வருடங்கள் பின்னோக்கி பின்னோக்கிச் சுழற்றினால் இசையின் சகல பரிவாரங்களையும் ஒற்றை மனிதனாக சுமந்து நிற்கிறார் இளையராஜா என்ற பண்ணைபுர பாட்டுக்கார ராசய்யா.. இந்திப்பட பாடல்களின் ஆக்கிரமிப்பு தமிழ்த்திரைப்பட பாடல் ரசிகர்களின் காதைத் திருகிக் கொண்டிருந்த தருணங்களில் தமிழ்ப்பாரம்பரிய நாட்டார் வழக்கு இசையை உயிர்ப்புடனும்,துடிப்புடனும் பாடல்களில் மெருகேற்றி நம் செவிக்கு உணவாக்கிய உன்னத கலைஞன் இளைய ராஜா!! இசைத்தட்டிலிருந்து தொழில்நுட்பம் ஆடியோ கேசட்டிற்குள் குடியமர்ந்த காலத்தில்,எங்கள் வீட்டில் வானொலிப்பெட்டி இருந்ததே ஆடம்பரமென நினைத்த பொற்காலம் அது, இலங்கை வானொலியில் மாலை 4.00 முதல் 4.30 வரை"இசைக்களஞ்சியம்" என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்.ஆண்குரலில் தனித்து ஒரு பாடல்,பெண் குரலில் தனித்து ஒருபாடல்,ஜோடிக்குரலில் ஒருபாடல்,பலகுரல் கலந்து ஒருபாடல், நகைச்சுவை உணர்வேந்திய ஒரு பாடலென 5 பாடல்கள் வரும். அடுத்து ஒலிக்க இருப்பது,ராகதேவன் இளையராஜாவின் இசையில் வைரமுத்துவின் வைர வரிகளில் ,எஸ்பிபியின் மயக்கும் குரலில் பொன் மாலைப்பொழுது பாடல்,நிழல்கள் படத்திலிருந்து.. காற்றலைகளில் தவழ்ந்த படி என இராஜேஸ்வரி சண்முகம் அம்மாவின் தேமதுரக்குரல் அறிமுகப்படுத்தியது இளையராஜாவை எனக்கு 6வயதில். அன்றிலிருந்து இன்று வரை அவரது இசை மீது தீராக்காதல். இசை என்பது செவிகளையும் தாண்டி மனதின் ஜீவ நாடிகளுக்குள் பசையற்று கிடக்கும் உயிரணுக்களை ஒன்றாகத்திரட்டி மயிலிறகால் வருடுவதைப் போலிருக்க வேண்டும்.அதைச் செவ்வெனச் செய்வது இளையராஜாவின் இசை மட்டுமே . இது என் மனது தீர்மானித்து விடாப்பிடியாக சொல்வது.!! பால்யம் தீர்ந்ததும், பருவத் தினவுகளை பருக ஆயத்தமாகி விடுகிறது காலம்,அப்பருவத்தினவுகள் நுரைத்து அடங்கி நீர்த்து ஏகத்திற்கும் ஏங்கி நிற்கிற தனிமை சூழ் வெறுமை என் மனதை பிசைகிற போதெல்லாம்," தனியானா என்ன? துணையாக நான் பாடும் பாட்டுண்டு" எனஆறத்தழுவி ஆறுதல் கரம் நீட்டுவதும் இளையராஜா இசைதான்.. உண்பதைப்போல,நீர்பருகுவதைப்போல,சுவாசிப்பதைப்போல,அன் றாட தேவைகளாகவும்,அத்யாவசியமானதாகவும் இளையராஜாவின் இசையேந்திய பாடல்களுடன் பயணித்து வரும் என்னைப் போன்று ஏராளம் ரசிகர்கள் இருக்கிறார்கள் ,வேலை,சூழ்நிலை காரணமாக குடும்பங்களை பிரிந்து வாழும் நகரத்து மனிதர்களின் தனிமை குடியிருக்கும் இரவின் கதவை தட்டினால் அங்கே துணைக்கு இளையராஜாவின் இசை மெலிதாக கசிந்தபடிதான் இருக்கிறது இன்றளவிலும்.!! "தாய்மடி+தகப்பன் தோள்கள்= இளையராஜா இசை"என ஒருமுறை நான் எழுதிய போது,"காதலியின்முத்தம்+ நண்பனின் தோள்கள் = ரஹ்மான் இசை" என எதிர்ப்பதமாக என் தலைமுறைக்கு முந்தைய தாய் ஒருவர் எழுதியிருந்தார்கள், இதை எதிர்ப்பதம் என்று சொல்வதை விட முந்தைய தலைமுறைகளின் ரசனைகள் ஊசியிலை மரங்களைப்போல் உயர்ந்தும்,ஆல,அரச மரக்கிளைகள் போல அகன்றும்,அடர்ந்தும் பரவி நிறபது ஆரோக்யமான விஷயமே!! இன்றைய சூழலில் அனிருத் வரையிலான இசையமைப்பாளர்களின் பாடல்களை ரசிக்கிற அளவு ரசிப்புத்தன்மை விரிந்திருந்தாலும்,கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும் குழந்தையிடம் வீட்டிலுள்ள உறவுகளில் யாரைப் பிடிக்கும் எனக் கேட்டால் தயக்கத்தோடும்,குழப்பத்தோடும் யோசித்து அம்மாவைக் கை காட்டுவதைப்போல,என் மனதும் பிடித்த இசையமைப்பாளர் என்று இளையராஜாவைக் கை காட்டுகிறது!! ஜூன் 2 ல் பிறந்தநாள் காணும் இசைஞானியை வாழ்த்த வயதில்லை,வணங்க மனதும் வயதும் இருக்கிறது, அவர் நீடூழி வாழ எல்லாம் வல்ல இயற்கையை பிரார்த்திக்கிறேன்!! _ பாலா!

 10. #29
  Senior Member Diamond Hubber venkkiram's Avatar
  Join Date
  Jan 2009
  Posts
  5,153
  Post Thanks / Like
  மக்களின் இசைக்கு வயது 71 - மக்களே பேசும் வீடியோ!

  சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

 11. Thanks mappi, poem thanked for this post
  Likes mappi, poem liked this post
 12. #30
  Senior Member Veteran Hubber
  Join Date
  Dec 2010
  Location
  France
  Posts
  3,338
  Post Thanks / Like
  Quote Originally Posted by venkkiram View Post
  மக்களின் இசைக்கு வயது 71 - மக்களே பேசும் வீடியோ!
  Hats-off to Suga & Karthick, nicely choosen pieces and a subtle naration of IR indisputable run. Great video by the whole team.

  IR Music : Athai Kaetkum Nenjamae, Sugam Kodi Kaanattum

  Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

Page 3 of 54 FirstFirst 123451353 ... LastLast

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •