Page 22 of 54 FirstFirst ... 12202122232432 ... LastLast
Results 211 to 220 of 536

Thread: Maestro Ilayaraja News and Tidbits 2014

  1. #211
    Senior Member Senior Hubber K's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai48
    Posts
    405
    Post Thanks / Like
    Ilaiyaraaja's Response to SPB's Questions . Year 1996. Thalaivar Nethu Oru Pechu Inaiku oru Pechu Kidaiyaathu.
    Watch and Enjoy.

    Thanks to Venkateswaran Ganesan(Uploder of the Video).


  2. Thanks Russellhaj thanked for this post
    Likes Russellhaj liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #212
    Senior Member Devoted Hubber
    Join Date
    Apr 2007
    Location
    USA
    Posts
    133
    Post Thanks / Like
    Quote Originally Posted by K View Post
    Ilaiyaraaja's Response to SPB's Questions . Year 1996. Thalaivar Nethu Oru Pechu Inaiku oru Pechu Kidaiyaathu.
    Watch and Enjoy.

    Thanks to Venkateswaran Ganesan(Uploder of the Video).

    God bless. Thanks so much.

  5. Likes Russellhaj liked this post
  6. #213
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by K View Post
    Thalaivar Nethu Oru Pechu Inaiku oru Pechu Kidaiyaathu.
    20 வருடத்துக்கு முன்னர் வந்த பேட்டி. K சொல்வது போல் அன்றைக்கு பேசியது தான் இன்றும். ஒரு நாக்கு ஒரு சொல். K, வெல்கம் பேக். சகலகலா வல்லவர் எங்கே?

    பேட்டி வந்த நேரத்தில் 50 வயது இருந்திருக்கலாம். ஆனால் வயது தெரியாத அளவுக்கு என்ன ஒரு வசீகரமான முகம், லேசான தாடி, மீசை, வாரி சீவிய தலை, கூர்மையான பார்வை. இந்த தேஜஸ் எல்லாம் தியானத்தின் வெளிப்பாடு. லதாங்கியை பற்றி சொல்லிவிட்டு யார் தூரிகை பாடும்போது, தலையை ஒரு சிலுப்பு சிலுப்பினாரே கவனித்தீர்களா? ஐயோ கொன்னுட்டார்..(note video: 11:43 mins)

    பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில், தினமலர் வாரமலரில், தினமும் பேருந்தில் பயணம் செய்து நொந்து நூலான பெண்மணி ஒருவர் இப்படி ஒரு கவிதை எழுதி இருந்தார். அதில் எவ்வளவு பொருள் பாருங்கள்.

    இடிக்க வருகிறார்கள்
    கட்ட மறுக்கிறார்கள்!

    இங்கு வருவோர் படிப்பதோடு நிறுத்திவிடாமல், எழுதவும் செய்தால் தான் , இந்த திரியை எரிபொருள் குறையாமல் கொண்டு செல்ல முடியும். நிறைய சமூக வலைத்தளங்கள் வந்து விட்டதால், எனக்கு தெரிந்து 17 ஆண்டுகளுக்கு மேலாக ஓடி கொண்டிருக்கும் tfmpage மவுசு குறையாமல் பார்த்து கொள்ளவேண்டியது நம் கடமை.

    ஆகவே எல்லோரும் அவரை பற்றி தோன்றுவதை எழுதுங்கள் நண்பர்களே. உங்களோடு ராஜா சாரின் இசையை, செய்திகளை பகிர்ந்து கொள்ள காத்திருக்கிறோம்.
    Last edited by rajaramsgi; 26th September 2014 at 04:13 PM.

  7. Likes Russellhaj liked this post
  8. #214
    Junior Hubber
    Join Date
    Sep 2010
    Location
    Bahrain
    Posts
    3
    Post Thanks / Like

    IR's Action & Reaction

    Being observing IR for long time, one thing is certain...
    Any topic or issue or question is thrown to him, he repeats almost the SAME WORDS & also in the same order...
    Seems like his answers are READY MADE and fixed in his Brain Permanently...
    It's just like retrieving from ARCHIVE...
    No mixing...Result is the Same...
    May GOD Bless Him...
    Long Live IR...

    Rgds Madhan

  9. Thanks rajaramsgi thanked for this post
    Likes K, Russellhaj liked this post
  10. #215
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by Madhanraj View Post
    Being observing IR for long time, one thing is certain...
    Any topic or issue or question is thrown to him, he repeats almost the SAME WORDS & also in the same order...
    Seems like his answers are READY MADE and fixed in his Brain Permanently...
    It's just like retrieving from ARCHIVE...
    No mixing...Result is the Same...
    May GOD Bless Him...
    Long Live IR...

    Rgds Madhan
    தான் செய்வது/நினைப்பது தவறாக இருந்தால் கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் சபையோர் முன்னிலையில் தன்னை தாழ்த்திக் கொள்வது - ராஜாவிடத்தில் நான் கண்டு வியக்கும் குணம். அதுவும் அப்பேற்பட்ட ஆளுமையிடமிருந்து அப்படியொரு நிலைப்பாடு. இந்த நேர்காணலில் ராஜ்கிரணை ஆரம்பத்தில் புறக்கணித்து பின்பு அதற்கு வருந்தியதாகவும், சென்ற வருடங்களில் ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசும்போது பாக்யராஜ் மீதான தன்னுடைய ஆரம்பகால தவறான அபிப்ராயங்களையும், பின்பு அது தவறான ஒன்று என திருத்திக் கொண்டதாகவும் பேசியிருந்தார். ஒரு கலைஞன் தன் துறையில்/தொழிலில் ஈடுபாட்டோடு இருந்தால் அதை ராஜா முழுமனதாக அங்கீகரிக்கிறார். இசைத் துறை மட்டுமில்லாமல் சினிமா சம்பந்தமான / தொடர்புடைய மற்ற துறைகளின் கலைஞர்களிடத்தும் அவருக்கு பற்று/ஈர்ப்பு வந்துவிடுகிறது.. அவர்கள் தங்களது துறைகளில் தங்களை நிரூபிக்கும்போது. கண்ணதாசனை, வாலியை அவர் புகழாத இடம் கிடையாது. முத்துலிங்கம், மேத்தா, பஞ்சு என ஒவ்வொருவரையும் அவரவர்களுக்கு இருக்கும் முக்கியத் துவத்தை சொல்லி புகழ்ந்துவிடுவார். ஆண் குரல்களில் ஆண்மையான ஒரே குரல் என டிஎம்எஸ்க்கு புகழாரம். சிலாகிப்பு. லதா, ஆஷா, சுசிலா, ஜானகி, பாலு, யேசுதாஸ், சித்ரா என எல்லோரையும். இசையமைப்பாளர்கள் என்றால் வடக்கு, தெற்கு பேதமில்லாமல் முன்னோர்கள் எல்லோரையும் ஒன்றுவிடாமல் சொல்லி புகழ்ந்து சாஸ்டாங்கமாக காலில் விழுந்துவிடுவார்/வணங்குவார். இயக்குனர் ஸ்ரீதர் தன்னை அணுகியபோது, நீங்கள் எம்.எஸ்.வியோடு இணைந்த எல்லா படங்களுமே சூப்பர் ஹிட் என்றிருக்க, என்னை ஏன் தேடி வந்தீர்கள்? அவரிடமே போய்விடுங்கள் என்றே முறையிட்டதாகவும் குறிப்பிடுகிறார் அவர் எழுதிய நூலொன்றில். ராஜாவிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். இந்த பாலு-ராஜா நேர்காணலில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் 'அடிவயத்தை கலக்கிடிச்சி.. கருவே கலைஞ்ச மாதிரி.." என்ற இடம்தான். எப்பேர்பட்ட மேதையாக/ஆளுமையாக இருந்தாலும் இசைக்கு முன்னாடி முழுதும் சரணாகதியாக நிற்கும் குணம் எல்லோருக்கும் வராது.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  11. Thanks Russellhaj thanked for this post
    Likes K, Russellhaj liked this post
  12. #216
    Senior Member Senior Hubber K's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai48
    Posts
    405
    Post Thanks / Like
    Thanks to Mr.Venkateswaran Ganesan


    The King Speaks.

  13. Thanks rajaramsgi thanked for this post
  14. #217
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by K View Post
    Thanks to Mr.Venkateswaran Ganesan
    The King Speaks.
    Excellent recollection of Heyram promo interview. I remember seeing this in sun tv @ my parents place, thank you for taking my memory back to Pongal celeberations, year 2000.

  15. #218
    Regular Hubber
    Join Date
    Dec 2009
    Posts
    0
    Post Thanks / Like
    http://chennaionline.com/movies/cine...usic--Bala.col

    Has anyone seen this event recording?

  16. #219
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajaramsgi View Post

    https://www.dropbox.com/sh/bvjp4xi3z...AXVqpqTda?dl=0

    Album: Ilaiyaraja Classics, composed by Raja Sir and performed by Mandolin U Srinivas & Party. No one ever talks about this album, not sure why, it is really a great one.
    Rajaramsgi,

    Eventhough I used the Thanks button, I would like to thank you once again for this fabulous share.

    Track 4 - Manam Kanindhu is a master-piece. With a runtime of 30 minutes, its pure bliss. The conversation with mandolin and violin was amazing, where violin seems to be quite mischevious while mandolin takes an advisory stand, calm and sutle. At a point of time I could see the violin gigling at mandolin (17m30s), but around 23m20s, mandolin takes a full swing. What a class ! The fusion which starts around 26m30s between the percussion instruments was awesome.

    I have some questions here :

    1/ 'Manam Kanindhu', is it a kind of a famous classical song or freshly composed by IR ?
    2/ Could you please tell me who are the musicians on Gatam, Mridhangam & Kangira and ofcoarse the one on the violin ?
    3/ Is it possible to buy this album on a retail CD ?
    4/ (optional) If you find some time, could you talk more about this song / instrumental piece or the album in general, please ?
    Last edited by mappi; 30th September 2014 at 05:13 PM.
    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  17. #220
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Mappi,

    Released in 1994, this is the original cassette cover. Sankara Hall, alwarpet may stock the CDs this during december season. I leave it to the experts to provide reviews on the songs.

    Mandolin: U. Srinivas
    Violin: S.D. Sridar
    Mruthangam: Guruvayur Durai
    Ganjira: Madurai Srinivasan
    Ghatam: E.M. Subramaniam
    Thampoora: Sathyaveni Varalakshmi



    அட்டைபடம் எல்லாம் கொடுத்து அசத்தி இருக்கிறேன், அதனால் விதியே என்று இதையும் படித்து வையுங்கள்.

    என்னுடைய தாத்தா ஒரு இசை புரவலர். திருவையாறு தியாகப்ரம்ம சபை கமிட்டி ஆயுள் உறுப்பினர். பழைய காங்கிரசாருக்கும், பழைய சங்கீத வித்வான்களுக்கும் நெருங்கிய பழக்கமுடையவர். அவர் இருக்கும் வரை, இவர்களில் யாரேனும் எங்கள் ஊரு பக்கம் வந்தால் அனைவரும் எங்கள் வீட்டுக்கு வந்து தாத்தாவிடம் அளவளாவி விட்டே செல்வர். எனக்கு தெரிந்து மதுரை சோமு, MPN சேதுராமன் பொன்னுசாமி, குன்னக்குடி, வலயபட்டி, ஹரித்வாரமங்கலம், சீர்காழி, வடுவூர் ராமையா பிள்ளை (பாடகர் மாணிக்க விநாயகத்தின் தந்தை) மற்றும் தஞ்சை பக்கம் உள்ள நாதஸ்வர மேள வித்வான்கள் என்று தாத்தாவின் நட்பு வட்டாரம் பெரிது. தலை கிராப்பு, துன்நூற்று பட்டை, குங்குமம், கதர் வேஷ்டி, கதர் சட்டை ஜிப்பா, பட்டு துண்டு, தங்கப்பல், வெள்ளியில் வெத்தலை, சீவல் டப்பா (அதிலும் கும்பகோணம் கொழுந்து வெத்தலை, ஏஆர்ஆர் சீவல், ராஜாஜி பன்னீர் புகையிலை). ஜனவரியானால் திருவையாறு, டிசம்பர் மாதமானால் சென்னை என்று அந்த வட்டத்தில் ஒரு மைனர் குஞ்சு என்று வைத்து கொள்ளுங்களேன்...

    அவர் கர்நாடக சங்கீதம் தவிர வேறெந்த இசையும் கேட்பதில்லை. சினிமா காரர்களில் தேவர் நெருங்கிய நண்பர், என்பதால் தாத்தாவுக்கும் சினிமாவுக்கும் உள்ள ஒரே கனெக்ஷன் சின்னப்பா தேவர் மட்டும் தான். நேருவும், இந்திராவும் இந்தியாவை ரட்ச்சிக்க பிறந்தவர்கள் என்று தீர்மானமாய் நம்பியவர். ...

    கர்நாடக சங்கீத கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது மட்டும் அவருடைய குறிகோளாக இருந்ததால், கொடுக்கும் ஸ்தானத்தில் நாம் இருக்க வேண்டும், நாம் கலைஞர்களாக இருந்து அவர்களுக்கு போட்டியாக இருக்ககூடாது என்று அவரே ஒரு தத்துவத்தை வைத்திருந்தார்.

    எனிவேஸ், மேட்டர் என்னவென்றால்......

    தாத்தாவிடம் ராஜா சார் பெருமை பீத்த, 1994ல் மாண்டலின் ஸ்ரீனிவாசின் இளையராஜா கிளாசிக்ஸ் காசட் வாங்கி வந்து குடுத்தேன். வாங்கி பார்த்தவர் அதை போட்டு கேட்கவில்லை. யாரோ ஒரு சினிமாகாரன் போட்டு கொடுத்ததை ஸ்ரீநிவாஸ வாசித்திருக்கிறான், நான் ஏன் அதை கேட்க வேண்டும் என்று அலச்சியம். மட்டேனுன்னுடார். நானும் விட வில்லை. அவரும் அந்த காசட்டை போட்டு கேட்பது போல் தெரியவில்லை. ஒரு நாள் மாலை நேரம், வீட்டுக்கு வெளியில் ஏதோ வேலை நடக்க, நான் அந்த கேசட்டை , சத்தமாய் அவர் காதில் விழும் படியாக ப்ளே போட்டு விட்டேன். முதலில் சற்று முரண்டு பிடித்தாலும் நேரம் போக போக, டேப் ரெகார்டர் அருகில் ஒரு நாற்காலி போட்டு உட்கார்ந்து விட்டார். பிறகு அடிக்கடி கேட்கிறார் என்று தெரிந்து உள்ளுக்குள் நான் மகிழ்தாலும் அவரிடம் அதை பற்றி பேசவில்லை.

    கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாய், பின்னொரு நாளில், வீட்டுக்கு வந்த ஒருவரிடம் ஸ்ரீநிவாஸ் பற்றி ஏதோ பேசி விட்டு இந்த கேசட்டை பற்றி புகழ்ந்து கொண்டிருந்தார்.

    மறந்தும் இளையராஜா சார் பற்றி தாத்தா வாய் திறக்கவில்லை.
    Last edited by rajaramsgi; 30th September 2014 at 08:41 PM.

  18. Thanks mappi thanked for this post
    Likes mappi liked this post
Page 22 of 54 FirstFirst ... 12202122232432 ... LastLast

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •