Page 25 of 54 FirstFirst ... 15232425262735 ... LastLast
Results 241 to 250 of 536

Thread: Maestro Ilayaraja News and Tidbits 2014

  1. #241
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    //அருண் & காஜா ரெகார்டிங் சென்டர்ஸ் , சேவியர் அண்ணா, நம்மிடம் இதை பகிர்ந்து கொண்ட போயம் எல்லோருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துகள்.//


    சும்மா சும்மா வெறும் வாயால் நன்றி சொல்லாமல் லண்டன்லில் ஒரு வீடு வாங்கி கொடுத்தால் இந்த சகோதரி வேண்டாம் என்றா சொல்ல போகிறேன் :-d

  2. Likes rajaramsgi liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #242
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    புகழ் பெற்ற ’வானுயர்ந்த சோலையிலே’ பாடலுக்கு இப்படியொரு மெட்டு இருப்பது உங்களுக்குத் தெரியுமா?




  5. #243
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Lovely.........




  6. Thanks mappi thanked for this post
    Likes mappi liked this post
  7. #244
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையராஜாவின் இயற்பியல் :



    ஒரு பாடல் நம்மை எங்கெல்லாம் அழைத்துச் செல்லும்? அல்லது ஒரு பாடலால் என்னதான் செய்ய முடியும்? நிச்சயமாக, ஒரு வாழ்க்கைக்கு தேவையான, ஒரு வாழ்க்கை முழுவதும் நினைத்து நினைத்து பார்க்கக் கூடிய அனுபவங்களைத் ஒரு பாடலால் தர இயலும்.. காலத்தின் பாதைகளுக்குள் அது நம்மை கூட்டிப் போகும். அது எப்பொழுது எங்கு நிகழும் என்று நம்மால் சொல்ல முடியாது.

    பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு மாலை வேளையில், பெரியார் பேருந்து நிலையம் அருகே "வானுயர்ந்த சோலையிலே" வந்து கொண்டிருந்தது. "இதய கோயில்" வெளியாகி ஒன்றிரண்டு வருடங்கள் ஆகியிருக்கக் கூடும். எனவே "வானுயர்ந்த சோலையிலே" என்றால் இதய கோயில் என்று தமிழ் நாட்டில் பெரும்பாலானோர் அறிந்திருந்த நேரம். ஆனால் இதில் விசித்திரம் என்னவென்றால், அந்த மாலை வேளையில் இந்தப் பாடலை SPBக்கு பதிலாக ஜெயச்சந்திரன் பாடிக்கொண்டிருந்தார். மெட்டும் வேறு.

    பல்லவி மட்டுமே ஜெயச்சந்திரன் பாடியதிலும் SPB பாடியதிலும் ஒரே வார்த்தைகளைக் கொண்டதாக இருக்கும். சரணங்களின் வரிகள் வெவ்வேறு.
    சட்டென்று மனதில் பதிந்து போனது ஜெயச்சந்திரன் பாடல். சில வாரங்கள் கழித்து, எனது அடுத்த cassette record செய்வதற்காக "shopping complex"ல் உள்ள* தேவி மியூசிக்கல்ஸ் சென்றிருந்தேன். அங்கிருந்தவரிடம் இதய கோயில் படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய "வானுயர்ந்த சோலையிலே" இருக்கிறதா என்று கேட்டேன். அவரோ, "அது SPB பாடியது" என்றார். நான், "இல்லை. ஜெயச்சந்திரனும் வானுயர்ந்த சோலையிலே பாடியிருக்கிறார்" என்று அந்த மெட்டில் பாடிக் காட்ட, என்னை "ஒரு மாதிரியாக" பார்த்து, "இப்படியொரு பாட்டே கிடையாது" என்றார்.

    இடையில் ஓடிய சில வருடங்களில் ஜெயச்சந்திரன் பாடிய வானுயர்ந்த சோலையிலே கேட்கும் வாய்ப்பு மறுபடி கிட்டவேயில்லை. இருப்பினும், கடற்கரையில் நடக்கையில் விரல்களுக்கிடையில் சிக்கிக் கொண்ட மணல் துகள் வீட்டுக்கு வந்த பின்னும் எங்கேயோ ஒட்டியிருப்பதைப் போல, இந்தப் பாடலும் என்னுடன் வந்து கொண்டேயிருந்தது.

    அன்றெல்லாம் பாட்டு கேசட் ரெகார்டு செய்யும் கடைகளில் பெரும்பாலானவை நம்மிடம் list வாங்கி வைத்துக் கொண்டு அவற்றை மொத்தமாக "record room" அனுப்பி record செய்து வாங்கி நம்மிடம் தரும். இந்த வகை கடைகளில், அரிதான பாடல்கள் பலவற்றை "இல்லை" என்று சொல்லி விடுவார்கள். கடைகளில் "collections" என்ற பெயரில் முன்னதாகவே பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யும் வகை கேசட்கள் எனக்கு சுத்தமாக ஒத்து வராது. ரசனையில் நெய்யப்பட்டு நினைவில் சேமிக்கப்பட வேண்டிய* இசையின் உணர்வுகளை பல சமயம் அது அறுத்தெரியும். உதாரணமாக, "சின்ன புறா ஒன்று" என்று உருகும் SPB உடனே "ஆத்தா ஆத்தோரமா வாரியா" என்று கேட்பார். அல்லது "திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே" என்று நாராயணனிடம் நற்கதி தேடும் யேசுதாஸ் அந்தர் பல்டி அடித்து அடுத்த பாடலிலேயே "வச்ச பார்வை தீராதடி" என்பார். எனவே நான் இத்தகைய, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு விற்கப்படும் கேசட்டுகளை ஒதுக்கியே வந்தேன்.

    அரிதான பாடல்களை பதிய முடியாமல், பல கடைகள் ஏறி இறங்கிக் கொண்டிருந்த எனக்கு 1991ல் அந்த அதிர்ஷ்டம் கிட்டியது. இன்று போத்தீஸ் இருக்கும் தெருவில், அதற்கு எதிரே குறுகிய சந்துக்குள் ஒரு "recording room" இருப்பதை கண்டுபிடிக்க நேர்ந்தது. அங்கு நான் முதன்முதலாக ஒரு ஜெயச்சந்திரன் list வைத்துக் கொண்டுதான் சென்றேன். "தங்க ரங்கன்", "நெஞ்சிலாடும் பூ ஒன்று", "முடிவில்லா ஆரம்பம்", "வட்டத்துக்குள் சதுரம்", "மலர்களே மலருங்கள்", "நல்லதொரு குடும்பம்" என்று நிறைய கடைகள் இல்லையென்று கைவிரித்த விசித்திரமான பெயர்கள் கொண்ட படங்களில் இடம்பெற்ற ஜெயச்சந்திரன் பாடிய பாடல்கள் கொண்ட list அது.

    கடையினுள் வெள்ளை வேட்டி சட்டையுடன் ஒரு முதியவர் இருந்தார். சிவகவி படத்திலிருந்து MKT பாட்டு ஒன்று சத்தமாக ஓடிக்கொண்டிருந்தது. தனது கெட்டியான நீள்சதுர வடிவ கறுப்பு நிறக் கண்ணாடியை சரிசெய்தபடி எனது லிஸ்டை பார்த்தார். எனது ஜெயச்சந்திரன் பாட்டுப் பட்டியலில் "பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே; ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப் புவி காணாமல் போகாது பெண்ணே..." (அலைகள், MSV, 1973) பாடலின் வரியை மட்டும் எழுதியிருந்தேன். என்ன படம் என்று தெரியவில்லை. வரிசையாக வாசித்து வந்த அவர், இந்தப் பாடல் வரி வந்தவுடன், சட்டென்று "அலைகள்" என்று சொல்லிக் கொண்டே எழுதினார். இதுதான் ஜெயச்சந்திரனின் முதல் தமிழ் பாடல் என்றும் சொல்லி வியக்க வைத்தார்.

    இவரிடம் ஜெயச்சந்திரன் பாடிய "வானுயர்ந்த சோலையிலே" பற்றி கேட்கலாம் என்று தோன்றியதால் கேட்டேன். சிறிதும் தாமதமின்றி அது "நூலறுந்த பட்டம்" (1979) என்ற படம் என்றார். மேலும், அதற்கு இசை இளையராஜா இல்லை. ஸ்டாலின் வரதராஜன் என்பவர் இசையமைத்த பாட்டு. பிறகு "இதய கோயில்" படத்தில் இளையராஜாவால் இன்னும் மெருகேற்றப்பட்டது என்றார். நான் அவரை ஒருவித பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கும் அவருக்கும் பதினைந்து வருட கால* தொடர்பை அந்தப் பாடல் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை...

  8. #245
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அந்த இரவு...

    அந்த இரவு குறித்து ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்று சில நண்பர்களும் நன்றாக இருக்காது என்று வேறு சில நண்பர்களும் வெவ்வேறு எண்ணங்களில் இருந்தனர். கல்லூரியில் புதிதாய் சேர்ந்திருந்த* நாட்கள் அவை...

    அந்த நாளும் வந்தது. மாலையில் நண்பர்கள் குழுவுடன் காந்தி மியூசியத்திற்குள் நுழைந்து மைதான சிமிண்ட் படிகளில் அமர்வதற்கும் வானில் நட்சத்திரங்கள் மின்னுவதற்கும் சரியாக இருந்தது. நல்ல கூட்டம். மேடையில் இசைக்குழு சுருதி சேர்த்துக் கொண்டிருந்தது. இளையராஜாவுக்கு மட்டுமே இணங்க, இழைய, குழைய பழக்கப்பட்டிருந்த மனதை TMS சுசீலாவின் பழைய பாடல்கள் கச்சேரிக்கு அழைத்து வந்து அமர்த்தியிருந்தேன்....

    ஒரு சில அர்த்தமுள்ள வரிகள், நல்ல பாடல்கள், இடையே அவர்கள் இருவரும் ஓய்வெடுக்கும் வேளையில் ஏதேதோ பாடல்கள் என மணி பதினொன்றை தாண்டியிருந்தது. ஆடிக்காற்று காந்தி மீயூசிய மரங்களில் இருந்து இலைகளை மைதானம் எங்கும் வீசியபடி உலா வந்து கொண்டிருந்தது. அப்பொழுதுதான், அதன்பின் வருடக்கணக்கில் இரவுகளில் திடீரென்று காதுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கும் அந்த ஏகாந்த நொடிக்கரைசலின் ஒலிப்பிம்பத்தின் மூலமான* "தேவன் வந்தாண்டி..." [உத்தமன் / 1976 / KV Mahadevan / TMS - சுசீலா] என்றொரு மயக்கமூட்டும் குரல் மேலெழும்பி காற்றில் நகரும் இலைகள் போல மைதானம் எங்கும் பரவியது. சிறுசிறு பேச்சொலிகள் அடங்க, "தீபம் கொண்டாடி" என்று ஒலியின் மீதொரு ஒளி ஏறியது... மயிலிறகின் நுனிகளில் தென்றலை ஏந்தி நம் மீது தொட்டு தொட்டு வைத்துப் போவது போன்ற குரல். துவக்கத்திலேயே, இந்த இரண்டு வரிகளும் புடலை கொடியிலேறி படர்வது போல நம் மனதில் வளைந்து வளைந்து சுற்றி ஏறும்... அது மட்டுமல்ல. கண்ணதாசன் "டி"யை வைத்தே நம்மை ராட்டினம் ஏற்றப் போகிறார் என்பதும் தெரிந்து விடும்.

    இந்த பாடலில் மற்றபடி பெரிதாக எதுவும் இல்லை. சொல்லப்போனால் இசை சற்றே இரைச்சலாக* இருப்பது போலக் கூடத் தோன்றும். "தேவன் வந்தாண்டி தீபம் கொண்டாடி" என்ற ஒற்றை வரியில் சுசீலா நம்மை எத்தனை நெளிவு சுளிவுகளுக்குள் தோய்த்து எடுக்கிறார் என்பதே இந்த பாடலின் அற்புதம். அதுவும் இரண்டாம் ஸ்டான்ஸா முடிந்த பின் திரும்ப வரும் பல்லவியில் அவர் தீபத்தில் உள்ள "தீ"யை இழுத்து சுருக்கி "கொண்டாடி"யை நீட்டும் லயம் ஒரு மந்திரவாதி புதிதாக ஒரு ஸ்வரத்தை உண்டாக்கி நம் காதுகளில் ஊற்றும் அற்புத அனுபவம். ஐந்தே நொடிகளில் அவர் நிகழ்த்திக் காட்டும் அந்த சாகசம்...கேட்கும் பொழுதெல்லாம் பரவசம்...

    பாடல் முடிந்தது. அனைவரும் அடுத்த பாடலுக்கு தயாராயினர். முன் வரிசைகளில் சலசலப்பு. சுசீலா புன்னகையுடன் வயலின் குழவை நோக்கி கையசைத்தார். அனைத்து வாசிப்பு கருவிகளும் சைலண்ட் ஆக வயலின் வாசிப்பவர்கள் மட்டும் தயார் நிலைக்கு வந்தனர். "தேவன் வந்தாண்டி" என்று பல்லவியை மீண்டும் பாடத்துவங்கினார். வயலின் மட்டும் மலரின் மீது வழியும் பனியின் துளி போல அவரின் குரலை பின் தொடர்ந்தது.
    அந்த நிசப்தமான இரவில் சொர்க்கத்தின் முகவரியை காட்டி விட்டு அமர்ந்தார் சுசீலா. நினைப்பேதுமின்றி இசையின் அணைப்பே முனைப்பாக இருத்தல் மனதுக்கு சொர்க்கம் தானே?

    நள்ளிரவு கடந்த பின் தமுக்கம் ரோட்டில் நடந்து கொண்டிருந்தோம். "தேவன் வந்தாண்டி"யின் மகிழ்ச்சியில் எத்தனை தொலைவும் நடக்கலாம் போலிருந்தது...காந்தி மியூசியத்திலிருந்து வைகை மேம்பாலம் வருவதற்குள் எத்தனை முறை ஏற்ற இறக்கங்களுடன் அந்த "தீபம் கொண்டாடி"யை பாடிப் பார்த்திருப்பேன் என்று எனக்குத் தெரியாது...அந்த வரியின் லாவகம் ஒரு ஒப்பற்ற குரல் தந்த சங்கதியின் உயிர்ப்பின் ரகசியம் போலத் தோன்றியது. வாகனங்கள் ஏதுமற்ற வைகை பாலத்தின் மீது நடக்கத் துவங்கினோம்...ஆற்றின் வாசனையை அள்ளி வந்து முகத்தில் அடித்தது காற்று...வைகையில் நீரோடிய வருடம் அது. பாலத்தின் சுவரில் சாய்ந்து கீழே ஓடிய நீரில் மின்னும் ஒளித்திவலைகளை பார்த்தபடி நின்றிருந்தோம்...எங்கிருந்தோ "தீபம் கொண்டாடி" என்று கேட்பது போல இருந்தது. ஒரு முறை வெளியேறிய உணர்வின் அலை எப்போதும் கால வெளியில் நீந்திக் கொண்டுதானே இருக்க வேண்டும்? அந்த இரவின் நொடிகளை, நிசப்தத்தை, வைகையில் ஜொலித்த நீர் இழைகளை, ஒன்றுக்குள் ஒன்றாய் கோர்த்து மனதின் ஓரமாய் நினைவின் வாசம் வீசும் மலரின் ஆரமாய் தோன்றிய பொழுதெல்லாம் பூத்தபடி இருக்கிறது "தேவன் வந்தாண்டி".

  9. #246
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையராஜாவின் இயற்பியல்:

    எதிர்பாராத இடத்தில் நாம் எதிர்பார்க்காத ஒன்று நிகழ்கையில் அது எத்தகையதாகினும் அதற்குரிய உணர்வு அதற்கான இயல்பை விட* பல்மடங்கு பெருகியே நம்மிடம் சேரும். அதன் காரணமாகவே அது ஆழமாக பதிந்து விடவும் கூடும். இப்படியாகத்தான் ஒரு மாலை வேளையும் ஒரு சைக்கிள் கடை சிறுவனும் சேர்ந்து ஒரு பாட்டைக் காட்டி விட்டுப் போய் இருபது வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது.

    பத்தாம் வகுப்பு பாஸ் செய்ததன் பொருட்டு மீனாட்சி கோயில் அருகில் உள்ள ஜான்சி ராணி பூங்காவின் எதிரில் இருந்த "கமலா சைக்கிள் மார்ட்" கடையில் வாங்கிய எனது சிறகுகள் வீட்டில் வந்திறங்கிய தினம், அதன் மேல் படிந்திருந்த சிறு சிறு தூசியை கூட துடைப்பதுமாகவும், டயர் அழுக்காகாமல் ரோட்டில் ஓட்டுவது எப்படி என்ற கவலையுடன் இரவு முழுவதும் கழிந்தது.

    சைக்கிளை பயன்படுத்திட என்ன சாக்கு கிடைக்கும் என்ற தவிப்புகளுக்கிடையில் காற்றடிப்பது கூட களிப்பான வேலையாகத் தோன்ற, அதற்கென்றே வீட்டிலிருந்து "கமலா சைக்கிள் மார்ட்" வரை போய் காற்றடிக்கும் பழக்கம் தொற்றியது. சைக்கிள் கடையின் எதிரில் ஒரு ஸ்பீக்கர் கடை இருந்தது. விதவிதமாக வெவ்வேறு சைஸ்களில் ஸ்பீக்கர்களை அடுக்கி வைத்திருப்பார்கள். பூக்கடைக்கு மணம் போல, ஸ்பீக்கர் கடையென்றால் பாட்டு வாசம் வீச வேண்டுமே...எப்போதும் அந்தக் கடையில் ஏதேனும் பாட்டு ஒலித்துக் கொண்டே இருக்கும்.

    சைக்கிள் கடையில் முதலாளி தவிர மூன்று நான்கு பேர் உண்டு. அதில், எடுபிடி வேலைக்கு என்னை விட வயதில் குறைந்த ஒரு சிறுவனும் இருந்தான். அங்கு வரும் சைக்கிள்களில் சிறு சிறு ரிப்பேர் மற்றும் பஞ்சர் பார்ப்பதும் அவன் வேலைகளில் அடக்கம். அழுக்கைடந்த ஒரு முண்டா பணியனும் காக்கி டிராயருமாகத் திரியும் அவன் கையில் எப்பொழுதும் ஒரு ஸ்பானர் இருக்கும். எதிர்கடையிலிருந்து வரும் பாட்டுக்கு எசப்பாட்டு போல விசில் அடித்துக் கொண்டே வேலை செய்வது அவன் ஸ்டைலாக இருந்தது.

    சில மாதங்களில், பல முறை சென்று வந்ததன் பயனாக, ஒரு புதிய விஷயம் அந்த சிறுவனை நெருக்கமாக பார்த்ததில் புரிந்தது. அவன் எப்பொழுதும், எந்தப் பாட்டை விசிலடிக்கத் துவங்கினாலும் சற்று நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பாட்டுக்குத் தாவி அதை விசிலடிப்பது அவனது வழக்கமாக இருந்தது. எந்த நேரத்தில் அந்தப் பாட்டுக்குத் தாவுவான் என்பது மிக இயல்பாக நெருடல் ஏதுமின்றி நிகழும் மாற்றமாக இருந்தது...

    அதுவரை நான் அந்தப் பாடலை கேட்டிருக்கவில்லை. பிரபலமான பாடலாகவும் தெரியவில்லை. இப்படி இருக்கையிலே, ஒரு நாள் பள்ளி முடிந்து காற்றடிக்கச் சென்றிருந்தேன். எதிர்கடையிலிருந்து "வா வெளியே இளம் பூங்குயிலே" [பாடு நிலாவே* - 1987] என்னும் ஒரு பாட்டு ஒலிக்கத் துவங்கியது. சிறுவனுக்கு குஷி தாளவில்லை. அவன் எல்லா பாடல்களுடன் இணைக்கும் விசில் இந்தப் பாடலே என்று விளங்கியது. இத்தனைக்கும் அது ஒரு மிகச் சாதாரணமான பாடலாகவே தோன்றியது.

    இந்தப் பாடலின் துவக்கம், குழந்தைகள் விளையாடும் கீபோர்டில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் பீட்களில் ஒன்று போலத்தான் இருக்கும். இந்தப் பாட்டில் என்ன இருந்து விடப் போகிறது என்று கவனச் சிதைவு ஏற்படுத்தும் துவக்கம் அது.

    நம்மூர் பாடல்களுக்கு இரண்டு ஸ்டான்ஸா என்று உருவாக்கப்பட்டதே இளையராஜாவின் interlude களுக்காகத்தானோ? அப்படித்தானே அவர் தனது வயலின் கொண்டும் குழல் கொண்டும் ஏராளமான இரண்டாம் சரணங்களுக்குள் நம்மை மூழ்க வைத்திருக்கிறார்...இந்தப் பாட்டில் அதற்காக* காத்திருக்கும் பொழுதில் பேங்கோஸ் மீது சற்று இளைப்பாறலாம். பிறகு அந்த வயலினும் புல்லாங்குழலும் நிகழ்கிறது. காத்திருந்த பயன் கிடைக்கிறது. முப்பதே நொடிகள். ஒருவிதமான துன்பியலின் படிகளில் நம்மை அமர்த்தி விட்டு மீண்டும் சாதாரணத்தில் சறுக்கிக் கொண்டு போய் விடும் பாட்டு.

    நம் சிறுவன் இந்தக் முப்பது நொடிக் கோர்வையை சற்றே நீட்டி இழுத்து வாசிக்கும் பொழுது அதில் ஒரு சோகத்தின் இழையை இழுப்பது போல இருக்கும். பிறகு சட்டென்று பாட்டின் முடிவில் வரும் சஞ்சாரங்களுக்குப் போய், தனக்குத் தோன்றிய ஸ்வரங்களை சேர்த்து வாசிப்பான். எண்ணம் என்பதே ஸ்வரம் தானே?

    இரண்டு மூன்று வருடங்கள் கடந்திருக்கும். புதியதின் மீதிருக்கும் ஆர்வம் தரும் மகிழ்ச்சியின் சுழற்சிகள் பழக்கமான பின் அவற்றை மெல்ல வடிந்து போகச் செய்வது தானே காலத்தின் கோட்பாடு? சைக்கிள் அன்றாட வாழ்வின் அங்கமானது. போகும் வழியில் இருக்கும் எந்த கடையிலும் காற்றடிக்கும் "பக்குவம்" வந்து விட்டது.

    நீண்ட இடைவெளிக்குப் பின் கமலா சைக்கிள் மார்ட் செல்ல நேர்ந்த பொழுது சிறுவன் அங்கு இல்லை. முதலாளியிடம் "பையன் இல்லையா?" என்றேன். "சாப்பாடெல்லாம் போட்டு பாத்துகிட்டேன்...சொல்லாம கொள்ளாம ஓடிப் போயிட்டான்" என்றார். அதில் கோபத்தை விட வலி அதிகம் இருப்பது போல இருந்தது. சொல்லலாம் என்று நினைத்தும் சொல்ல முடியாத நிலையில் நம்மை வைக்கும் கோடிக்கணக்கான நொடிகளை உருவாக்கும் காலத்தில் இதுவும் அத்தகைய இன்னொரு நொடியாக இருந்திருக்கக் கூடுமோ? யாருக்குத் தெரியும் யார் எதை சொல்ல நினைத்தார்கள் சொல்லாமல் போனார்கள் என்று?

  10. #247
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by poem View Post
    சும்மா சும்மா வெறும் வாயால் நன்றி சொல்லாமல் லண்டன்லில் ஒரு வீடு வாங்கி கொடுத்தால் இந்த சகோதரி வேண்டாம் என்றா சொல்ல போகிறேன்
    ஐபோன்
    டொயோட்டா கார்
    வெள்ளை ஜிப்பா வேஷ்டி.
    மேட்ச்சிங் கட் ஷூ

    பழமையான பிரசாத் ஸ்டுடியோ - ஆனால்
    அதிநவீன ஒலிப்பதிவு சாதனங்கள்.
    பட்டங்கள் பதினாயிரம்
    நலம் விரும்பிகள் கோடி.

    ராஜா சாருக்கு இதெல்லாம் தகும் என்றால்
    அவர் கொடுப்பதை விரும்பும் நமக்கு?

    அவருக்காக -
    மலபார் கோல்ட் ரெண்டு முறை வாங்கியாகி விட்டது.
    ஐபோன் 6 வாங்க போகிறேன்.
    செய்செல்ஸ் போகவும் ஆசை.

    அவரை பற்றி உருகி உருகி எழுதும் அக்கா,
    உங்களுக்கு ஒரு அரண்மனையே கட்டி தரலாம் !

  11. Thanks Russellhaj thanked for this post
    Likes Russellhaj liked this post
  12. #248
    Member Junior Hubber entertainment's Avatar
    Join Date
    Jun 2007
    Posts
    54
    Post Thanks / Like
    http://cinema.vikatan.com/articles/news/28/6810

    கடந்த நாற்பது ஆண்டுகளாக இசைத் துறையில் பல சாதனைகளைப் புரிந்து வரும் இளையராஜா, தன் ரசிகர்களுக்கு ஒரு நேரடிப் போட்டி நடத்துகிறார்.

    இந்தப் போட்டி அவரது இசை தொடர்பானதுதான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் இதுவரை ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள இளையராஜா, அந்தப் படங்கள் மற்றும் பாடல்களின் அடிப்படையில் போட்டியை நடத்துகிறார்.

    போட்டியில் இடம்பெற விரும்புவோர், இளையராஜா இசையமைத்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள், அவற்றை எழுதியவர்கள், படத்தின் இயக்குநர், பாடியவர்கள், தயாரிப்பாளர்கள், படம் வெளியான தேதி போன்றவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.




    இந்த முழு விவரங்களையும் யார் சரியாக திரட்டித் தருகிறார்களோ அவர்களுக்கே முதல் பரிசு. ரசிகர் திரட்டித் தரும் தகவல்களை, இளையராஜாவிடம் உள்ள தகவல்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, சரியாக இருந்தால் பரிசு தரப்படும்.

    சரியான தகவல்களைத் திரட்டித் தரும் ரசிகரை, இளையராஜாவே நேரில் அழைத்து பரிசுகளை வழங்கவிருக்கிறாராம். என்ன பரிசு, எந்தத் தேதியில் போட்டி என்பதையெல்லாம் இளையராஜாவே விரைவில் அறிவிக்க உள்ளார்.

  13. #249
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ''இளையராஜா கொடுத்து வச்சவன்..!''


    ''அமெரிக்கா போவ தற்குச் சில நாட்களுக்கு முன்பு, இளையராஜாவின் இசையமைப்பில் நான்கு பாடல்கள் எழுதித் தருவதாக ஒப்புக்கொண்டிருந்தார் கவிஞர். பிரசாத் ஸ்டூடியோ வில் அவர் மூன்று பாடல் கள் எழுதி முடித்த பிறகு கிளம்பிவிட்டார். காரில் திரும்பிக்கொண்டிருந்த அவர், 'இளையராஜா கொடுத்து வச்சவன். ஏன்னா, அமெரிக்கா போய்த் திரும்பினப்புறம் நான் பாட்டு எழுதமாட் டேன்' என்று கூறினார். கவிஞர் அமெரிக்காவிலி ருந்து திரும்பி வரவும் இல்லை; கவிதை எழுதித் தரவும் இல்லை!''
    - கவிஞர் கண்ணதாசனுக்கு நடைபெற்ற அஞ்சலியில் அவரது செயலாளர் இராம.கண்ணப்பன்







  14. #250
    Member Junior Hubber
    Join Date
    Dec 2004
    Location
    Jersey City
    Posts
    61
    Post Thanks / Like
    Quote Originally Posted by poem View Post
    புகழ் பெற்ற ’வானுயர்ந்த சோலையிலே’ பாடலுக்கு இப்படியொரு மெட்டு இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
    Very interesting!!
    Last edited by sudhakarg; 21st October 2014 at 10:46 PM.

Page 25 of 54 FirstFirst ... 15232425262735 ... LastLast

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •