Page 18 of 54 FirstFirst ... 8161718192028 ... LastLast
Results 171 to 180 of 536

Thread: Maestro Ilayaraja News and Tidbits 2014

  1. #171
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையராஜா உண்மைக்குத் திரை ஏது? நூலில் தூய மலர் என்ற ஓர் அபாரமான சிறுகதையை வசன கவிதை வடிவில் எழுதி இருக்கிறார். philosophical!

    உண்மைக்குத் திரை ஏது? நூலில் இளையராஜா எழுதி இருக்கும் ஒரு நீள்கட்டுரை - ஈஸ்வர ஸர்வ பூதானாம். அதில் அவர் சொல்லி இருக்கும் விஷயங்கள்

    நவீன வானியல் சாஸ்திரத்தை மிகத் துல்லியமாக எடுத்தியம்புகிறது. மிகப் பெரும்பாலும் அவரது புரிதலில் பிசகே இல்லை. இது எனக்கு ஆச்சரியம்!

    -csk

  2. Likes venkkiram liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #172
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    749
    Post Thanks / Like
    New Malayalam music director and his name is Ilayaraja Indeevaram!

    thanks,

    Krishnan

  5. #173
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by poem View Post
    மிகவும் அருமையான படம். நடு வகிடு எடுத்து தலை சீவாத பெண்கள், பெரும்பாலும் இடது பக்கம் வகிடு எடுத்து (என்னையும் சேர்த்து) சீவுவார்கள். மிகவும் அரிதாகவே வலது புறம் எடுத்து , திருமதி. ஜீவா இளையராஜா, கனி மொழி போல. இருவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். இருவருமே ரொம்ப அழகானவர்கள்.
    ஏதோ கோபத்திலோ அல்லது தலை வலியிலோ சாபிடாமல் இருக்கும் ஜீவாவிடம், சாப்பாட்டில் எல்லாம் கோவத்தை காட்ட படாது என்று ராஜா சார் சிரித்து கொண்டே சொல்கிறார்.
    கொஞ்சூண்டாச்சும் சாப்பிடும்மா என்று சொல்லும் பவதாரிணியின் கைகள்.
    நமக்கு இன்னும் கொஞ்சம் பாயாசம் கிடைகாதானு கேட்கும் சபரியின் கண்கள்.
    மாட்டேன்னு நெளியும் ஜீவா..

    பல்கலைகழகமான குடும்பத்தில், ஜீவா மறைந்த பிறகு, யுவன் மதம் மாறும் அளவுக்கு கலகம். யார் கண்ணு பட்டதோ.

    ஏதோ ஒரு ஆன்மீக தலம் என்று தெரிகிறது. ரமணாசிரமம்? குருவாயூர்? கோயில் அன்ன தானம் போல, கவுரவம் பார்க்காமல் பக்தர்களோடு பக்தர்களாக சாப்பிடுகிறார். இந்த இடத்தின் ஆன்மீக சிறப்புக்காக இல்லாவிட்டாலும், ராஜா சார் சென்ற இடம் என்பதற்காக ஒரு முறை போய் வர வேண்டும் (சாப்பிடவும் தான்)

    பெண்களின் கூந்தல் பற்றிய சர்ச்சைகளும், பாடல்களும் பாண்டியர் காலத்திலிருந்து வந்து கொண்டே இருக்கிறது. அவ்வழியே வந்த நீங்களும், வகிடெடுத்து சீவும் விதத்தை கவிதையாய் சொல்லி இருக்கிறீர்கள். அழகு. ராஜா சார் பங்குக்கு அவரும் பாடி இருக்கிறார்.

    தென்றலிடை தோரணங்கள்
    தோளினிலே கூந்தல் அலை
    தாள லயம் நெஞ்சினிலே தாளவில்லை, தாங்கவில்லை

    வான முகில் வாகனத்தில்
    நான் அவளை ஏற்றி வைத்து
    வானுலகில் தேவதைகள்
    நாணும்வரை போய்வரவா?

    படம்: ஈரவிழி காவியங்கள்.

    Last edited by rajaramsgi; 30th August 2014 at 09:52 PM.

  6. Likes venkkiram liked this post
  7. #174
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Yuvan's birthday yesterday. thanks Poem.

  8. #175
    Regular Hubber
    Join Date
    Dec 2009
    Posts
    0
    Post Thanks / Like
    The legendary Telugu movie director "Bapu" passed away on August 31 in Chennai. We all know that his last film was the great runaway success "Sri Rama Rajyam" which had the songs and background score by Maestro. The AP government is planning to erect a memorial for Bapuji at the banks of Godavari river. Anyway it's a great step forward by the present Andhra politicians. I still have my grouse that Sri Rama Rajyam was snubbed by the National Film awards committee which failed to bag zero award. The movie Director, Bapu and Ilayaraaja should have bagged the national awards for this classic movie. The awards screening committee screwed up the movie presentation to the jury members by having substandard audio quality at the preview theater. What a gross injustice to the musical score and songs from the movie!!!. The AP politicians (MLAs and MPs) didn't raise this issue in the assembly and parliament. In fact, the entire Telugu film industry did not win a single national award that year. This is in spite of having two Telugu movie stars in the parliament - Jayapradha and Vijayashanti. I had written to both of them regarding this anomaly. May Bapujis sould rest in peace.

    http://www.thehindu.com/news/cities/...ef=relatedNews

  9. Thanks rajaramsgi thanked for this post
  10. #176
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    You must have read this already.. found this one which I saved in my archives years ago and thought of sharing with you. Enjoy reading.


    இளையராஜா பற்றி ரா.கி.ரங்கராஜன்…


    இளையராஜாவின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவர் என் நெருங்கிய நண்பரும், குடும்ப டாக்டருமான ஆர். ரவிச்சந்திரன். ஐந்து நிமிடம் பிரஷர் பார்த்து விட்டு, ஐம்பது நிமிடம் இளையராஜாவைப் பற்றிப் பேசுவார். அவருடைய எந்தெந்தப் பாட்டு எந்தெந்த விதத்தில் தனித் தன்மையுடன் இருக்கிறது என்பதை ஆராய்ந்து, நோட்டு நோட்டாக எழுதி வைத்திருக்கிறார்.

    டாக்டர் ரவிச்சந்திரனுக்கு வாழ்க்கையில் ஒரே லட்சியம் இசைஞானியை ஒரு முறையேனும் நேரில் சந்திக்க வேண்டும் என்பதுதான். அதற்கு ஏற்பாடு செய்யும்படி என்னைக் கேட்டுக் கொண்டேயிருந்தார். சினிமா நிருபர் செல்லப்பா மூலமாக, இளையராஜாவின் செக்ரட்டரி கல்யாணத்துக்குத் தெரிவித்து, ஒரு ஞாயிறன்று பிற்பகல் அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொண்டேன்.

    டாக்டர் ரவிச்சந்திரனுடன் அவருடைய சிநேகிதர் டாக்டர் கௌரிசங்கரும் வந்திருந்தார். நானும் சேர்ந்து கொண்டேன்.
    வடபழனியில் ஏவிஎம் ஸ்டுடியோவைக் கடந்து, சாலிக்ராமம் சாலையில், பிரசாத் ஸ்டுடியோவுக்குள் அமைந்திருக்கிறது இளையராஜாவின் ரெகார்டிங் தியேட்டர். “வாங்க வாங்க!” என்று வாய் நிறைய வரவேற்றார். (என்னை அவருக்கு நன்கு தெரியும்.) தரையில் விரித்திருந்த மெத்தையில் அமர்ந்திருந்த இசைஞானி. எதிரே ஆர்மோனியத்தை வைத்திருந்தார். ஏதோ ஒரு ட்யூனைப் பிடிக்க முயன்று கொண்டிருந்த நேரத்தில் குறுக்கிட்டு விட்டோமோ என்று எனக்குத் தோன்றியது. வழக்கமான ஒரு வாரத்துத் தாடியுடன், கொஞ்சம் இளைத்த மாதிரித் தெரிந்தார். உடம்பை ஒட்டினாற்போல வெள்ளை ஜிப்பா, வெள்ளை நாலு முழ வேட்டி. சுவரில் ரமணர், ஷிர்டி சாய் பாபா, கோடி ஸ்வாமிகள் படங்கள்.

    பற்பல வருடங்களாகத் தன் மனசுக்குள் பூஜித்து வந்திருக்கும் லட்சிய ஹீரோவை நேரில் காணும்போது எந்த ரசிகருக்கும் பேச்சு வராது. ஆனால் டாக்டர் ரவிச்சந்திரன் சற்று ‘ஹோம் வொர்க்’ செய்து கொண்டு வந்திருந்ததால் பணிவோடு தன் எண்ணங்களைத் தெரிவித்தார்.
    எது கேட்டாலும் முதலில் ‘அது சரி’ என்று சொல்கிறார் இளையராஜா. நல்ல மேனரிசம் இது. ‘அது சரி’ என்று முதலில் கூறி விட்டுப் பிறகு தன் கருத்தைச் சொல்கிறார். அது நம்மைப் பணிவுடன் கேட்க வைக்கிறது.
    “ஓரோர் சமயம் உங்கள் பாட்டைக் கேட்கும்போது அதே ட்யூனை முன்பே வேறொரு பாட்டில் கேட்ட மாதிரி இருக்கிறதே ?” என்று கேட்டார் ரவிச்சந்திரன்.

    “அது சரி. மொத்தம் இருப்பது ஏழு ஸ்வரங்கள் தான். எப்படி ட்யூன் போட்டாலும் ஏதாவது ஓர் இடத்தில் ஏதாவது ஒரு சாயல் வருவது சகஜம்தான்” என்றவர், “வீடு வரை உறவு” என்ற அடிகளைப் பாடிக் காட்டி, அதே போல் வரும் வேறு சில பாடல்களையும் பாடினார். (ரவை புரளும் சன்னமான சாரீரம் அவருக்கு இருக்கிறது.)

    “உங்கள் பாடல்களைப் பல முறை கேட்டு வருகிறேன். மெட்டையும் சாகித்தியத்தையும் தவிர இன்னும் ஏதோ ஒன்று பாட்டுக்குள் இருப்பதாகத் தோன்றுகிறது. அது என்ன ?” என்று டாக்டர் கேட்டார்.

    இதே கேள்வியை பம்பாயிலிருந்து வந்த ஒரு பெண் என்னிடம் கேட்டாள். அது என்னவென்று என்னால் எப்படி விளக்க முடியும் ? ஆரம்ப காலத்தில், நான் கற்றுக் கொண்ட, தெரிந்து கொண்ட, நாட்டுப்புற ட்யூன்கள் மொத்தத்தையும் கொட்டிவிட்டேன். ஐயோ, இனிமேல் என்ன செய்யப் போகிறோம் என்று திகைத்திருந்த போது, தானாகவே பாட்டு வர ஆரம்பித்தது. சிவாஜி காலமான சமயம் அவருடைய மனைவி என்னிடம் அழுதார். ‘அவருக்கு பாத்ரூம் சுத்தமாக இருக்க வேண்டும். அன்று என்ன படம் இருக்கிறது, என்ன நடிக்கப் போகிறோம் என்ற திட்டங்களை பாத்ரூமில் தான் யோசித்து வைத்துக் கொள்கிறேன் என்பார். வீட்டில் எந்த இடம் சுத்தமாயில்லாவிட்டாலும் பாத்ரூம் மட்டும் சுத்தமாக இருக்கும்படி நான் பார்த்துக் கொள்வேன்’ என்று சொல்லி கண்ணீர் வடித்தார். எனக்கு அந்த மாதிரி இல்லை. ஆர்மோனியத்தின் முன்னே உட்கார்ந்ததும் இசை வருகிறது. பறவை ஒருத்தர் சொல்லியா பறக்கிறது ? ‘It happens. Music happens “ என்றார் ராஜா.

    “உங்களுடைய ஆயிரக்கணக்கான பாடல்களில் உங்கள் உள்ளம் கவர்ந்த பாட்டு எது ?” என்று நான் கேட்டேன். உடனே “ஜனனி ஜனனி“ என்றார். ‘கொஞ்சம் பாடிக் காட்டுங்கள்’ என்று நான் கேட்டுக் கொண்டேன். ‘சௌந்தர்ய லஹரி‘ ஸ்லோகத்தை முதலில் சொல்லி விட்டு, ஆர்மோனியத்தின் துணையுடன் பாடினார். அப்பப்பா! அந்த பாட்டு என்ன சுகம், என்ன சுகம்!
    டாக்டர் கௌரிசங்கர், “நீங்கள் ரொம்பப் பிரமாதமான படங்களுக்கும் பாட்டுப் போடுகிறீர்கள். சில சமயம் ரொம்ப சாதாரணமான படங்களுக்கும் பாட்டுப் போடுகிறீர்கள். அது எதனால் ?” என்று கேட்டார்.

    ராஜா
    சிரித்தார். “இன்னாருக்குப் பாட்டுப் போடுவேன், இன்னாருக்குப் போட மாட்டேன் என்று நான் சொல்வதில்லை. ‘நீங்கள் மியூசிக் போடுகிறீர்கள் என்று சொன்னால் உடனே விநியோகஸ்தர்கள் வாங்கிக் கொள்கிறார்கள். அதனால் ஒப்புக் கொள்ள வேண்டும்’ என்று கேட்கிறார்கள். ஒப்புக் கொள்கிறேன். படம் நன்றாக அமைவதோ, மோசமாக அமைவதோ அவரவர் கொடுப்பினை. சிக்னலில் கார் நிற்கிறது. ஏழையொருவன் வந்து கை நீட்டுகிறான். பையில் கையைவிட்டுக் காசை எடுப்பதற்குள் சிக்னல் கிடைத்து, கார் நகர்ந்து விடுகிறது. இன்னொரு சிக்னலில், வேறொரு ஏழை கை நீட்டுகிறான். ஒரு ரூபாய் போடலாம் என்று எடுத்தால் பத்து ரூபாய் நோட்டாக வருகிறது. போடுகிறோம். அதை என்னவென்று சொல்வது ?”

    உன்னிகிருஷ்ணன் ரெக்கார்டிங்குக்கு வந்திருப்பதாக இன்டர்காமில் தெரிவித்தார்கள். ராஜா எழுந்து கொண்டு எங்களிடம் கை குலுக்கினார். “கொஞ்ச நேரம் உங்கள் ரெகார்டிங்கையும் பார்க்க வேண்டும்” என்று டாக்டர் ரவிச்சந்திரன் கேட்கவே, “தாராளமாக வாருங்கள்” என்று அழைத்துப் போனார்.

    உன்னிகிருஷ்ணன் ஜீன்ஸில் கட்டம் போட்ட முழுக்கை ஷர்ட்டை ‘இன்’ செய்து கொண்டு கல்லூரி மாணவன் போல் இருந்தார். பந்தா எதுவும் இல்லை. பிளாஸ்கிலிருந்து வெந்நீர் எடுத்து சிறிது சிறிதாக உறிஞ்சினார். ஸ்டாண்டின் மீது நோட்டுப் புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு, நின்றபடியே அடி அடியாகப் பாடினார். மறுபுறம் கம்ப்யூட்டர் பதிவைப் பார்த்தபடி ராஜா இருந்தார்.

    உன்னிகிருஷ்ணன் பாடுவது சரியாக இருப்பதாகத்தான் எங்களுக்குத் தோன்றியது. ஆனால் ஒவ்வொரு வரியிலும் ஒரு சுளிவை, ஒரு நெளிவை, ஒரு கூட்டலை, ஒரு குறைதலை சொல்லித் திருத்தம் வழங்கிக் கொண்டேயிருந்தார்ராஜா. கூடக்கூட ஸ்வரங்களை சொல்லிப் பாடியும் காட்டினார். ஐந்து நிமிடப் பாட்டுக்கு ஒரு மணி நேரம் ஆயிற்று.
    இப்படிக் கடுகத்தனை ‘சங்கதி’ க்காக இவர் மலையத்தனை சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டுமா என்று நினைத்தேன். ஆனால் அப்படியொரு perfectionist ஆக இருப்பதால்தான் இளையராஜா மகாராஜாவாக இருக்கிறார்.
    நாலு மூலை - ரா.கி.ரங்கராஜன் (கிழக்கு பதிப்பகம்)

    ஆசிரியர்: ரா.கி. ரங்கராஜன்

    தமிழ் வாசிக்கத் தெரிந்த யாரும் ஒரு முறையாவது ரா.கி. ரங்கராஜனின் எழுத்துகளை வாசிக்காமல் நகர்ந்து போயிருக்க முடியாது. நாற்பத்திரண்டு ஆண்டு காலம் குமுதம் வார இதழில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். சிறுகதைகள், நாவல்கள், மொழி பெயர்ப்புகள், கட்டுரைகள், நகைச்சுவை நாடகங்கள் என எழுத்தின் அத்தனை சாத்தியங்களிலும் முத்திரை பதித்தவர்.
    ரங்கராஜனின் எழுத்தின் பிரத்தியேக பலம், அவரது உள்ளோடும் நகைச்சுவை உணர்வு. நடையில் மிளிரும் கம்பீரமான எளிமை. மேலான சத்தியம். வெகுஜன எழுத்துத்துறையில், ஒரு பெரிய தலைமுறையையே அவரது படைப்புகள் பாதித்திருக்கின்றன.
    கல்கியையும் எஸ்.ஏ.பி.அண்ணாமலையையும் தமது ஆதர்சங்களாகச் சொல்லும் ரா.கி. ரங்கராஜன், கும்பகோணத்துக்காரர். (அடியேனும் கும்பகோணம் தான்)
    எழுபத்தெட்டு வயதில், உற்சாகம் குறை யாமல் அண்ணாநகர் டைம்ஸ் இதழில் அவர் எழுதும் நாலுமூலை கட்டுரைகளின் தொகுப்பே
    இந்நூல்
    Last edited by rajaramsgi; 2nd September 2014 at 09:43 PM.

  11. #177
    Senior Member Senior Hubber K's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai48
    Posts
    405
    Post Thanks / Like

  12. #178
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Thanks K for sharing this article. Valid points. But no clue how the fan club association do these things in a planned way. Raja any day is a treasure box for internet music stealers. His BGM score and tunes are heavily being ripped off from emerging youngsters from movie and tv industries. We everyone want Raja's original scores alive forever without any modifications in future days. His scores need to be channelized in proper and planned way.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  13. #179
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  14. #180
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    749
    Post Thanks / Like
    Couple of news article which has references to IR:

    Viji Manuel interview. It seems he is back into the music scene:

    http://www.thehindu.com/features/fri...cle6379597.ece

    Interview with Alleppey Ranganath. He is supposed have made both IR and MSV sing in one album:

    http://www.thehindu.com/features/fri...cle6379956.ece

    Interview series with Kamal. His association with IR:

    http://www.thehindu.com/features/fri...cle6379569.ece

    thanks,

    Krishnan

Page 18 of 54 FirstFirst ... 8161718192028 ... LastLast

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •