Page 1 of 2 12 LastLast
Results 1 to 10 of 14

Thread: நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி. எம்

  1. #1
    Administrator Diamond Hubber RR's Avatar
    Join Date
    Sep 2004
    Posts
    6,081
    Post Thanks / Like

    நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி. எம்

    Hi NT fans, I'm sure you'll agree that this needs a separate thread for discussion (and for collection purposes).

    YG Mahendran writes ..

    "சிவாஜியை பற்றி நான் ஏன் எழுத வேண்டும்? அவருக்கும், எனக்கும் என்ன உறவு? உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், சிவாஜி என்கிட்டே, ஒரு எதிர்மறையான பாதிப்பை தான் ஏற்படுத்தியிருக்கிறார்!'

    ஒரு நடிகன், நல்ல ரசிகனாக இருக்கும் போது தான், முழுமை பெறுகிறான். எல்லாரையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ரசிகனாக இருந்த நான், சிவாஜியின் நடிப்பை பார்த்த பின், வேறு யாரையும் என்னால் ரசிக்க முடியவில்லை. அப்படியே ரசித்தாலும், அவர்களுக்குள், சிவாஜியின் வடிவத்தையே பார்க்கிறேன். அனுமானுக்கு எதைப் பார்த்தாலும், ராமன் தெரிகிற மாதிரி.
    பாரதியார், "எங்கெங்கு காணினும் சக்தியடா...' என்று பாடினார். என்னைப் பொறுத்த வரை, எங்கெங்கு காணினும் சிவாஜியடா!
    "சிவாஜியை, கடவுளாக நினைக்கிறீர்களா ...' என்று, என்னை கேட்டால், "ஆமாம்' என்று தான் சொல்வேன். நம்மை கடந்து, நமக்குள் இருப்பவர் தானே கடவுள். சிவாஜி நடிப்பினால், நம் எல்லாரையும் கடந்தும், ஒரு பாதிப்பை நமக்குள் ஏற்படுத்தியிருக்கிறார். எனக்கு இவர், நடிப்பின் கடவுள். ஒரு பக்தன் என்ற முறையில், என்னுடைய காணிக்கையே, இக்கட்டுரைத் தொடர்.

    Part 1 (29 Sep 13)
    2
    ...
    22
    (Todo: to fill up the links)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Administrator Diamond Hubber RR's Avatar
    Join Date
    Sep 2004
    Posts
    6,081
    Post Thanks / Like

    நான் சுவாசிக்கும் சிவாஜி! (Part 23)

    Part 23 - 9 Mar 2014

    ஒருமுறை, காமராஜர் அரங்கத்தில் நடத்திய, சிவாஜியின் நினைவு அஞ்சலி விழாவில், நடிகை வைஜெயந்திமாலாவை கவுரவப்படுத்தி, நினைவுப் பரிசு வழங்கினோம். சிவாஜி மீது மிகுந்த மரியாதை கொண்டவர் வைஜெயந்திமாலா. விழாவின் போது, ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் தயாரித்து, இயக்கிய, இரும்புத் திரை படத்திலிருந்து, 'நெஞ்சில் குடியிருக்கும்...' என்ற பாடலை, இசைக் குழுவினர் பாடினர்.
    திரைப்படத்தில், இப்பாடலுக்கு முந்தைய காட்சியில், சிவாஜியும், வைஜெயந்திமாலாவும் ஒரு குளக்கரையில் சந்தித்து பேசும் காட்சி வரும். படத்தில், வைஜெயந்திமாலாவைத் தான் காதலிப்பார் சிவாஜி. வைஜெயந்திமாலாவும் அவரை விரும்புவார். ஆனால், இன்னொரு ஹீரோயினான சரோஜா தேவியும், சிவாஜியை காதலிப்பதை அறியும் வைஜெயந்திமாலா, சிவாஜி மனதில் யார் இருக்கின்றனர் என்பதை அறிந்து கொள் வதற்காக, அவரிடம் சில கேள்விகள் கேட்பார்.
    அப்போது, வைஜெயந்திமாலாவை நேராக பார்க்காமல், தன் குரலை உயர்த்தாமல், விஷம சிரிப்பு சிரித்துக் கொண்டே நளினமாக பேசுவார் சிவாஜி. வைஜெயந்திமாலாவோ, அவர், வேறு ஒரு பெண்ணை தான் காதலிக்கிறார் என்று நினைத்துக் கொள்வார். பொறாமையும், இயலாமையும் சேர்ந்து கண்களில் நீரை வரவழைக்கும். கடைசியில், 'அவள் என்னை விட அழகா?' என்று, பிரம்மாஸ்திரமாக ஒரு கேள்வி கேட்பார்.
    'உன்னை மாதிரி தான், நல்ல அழகி...' என்பார் சிவாஜி. 'அவள் பெயரை சொல்ல முடியுமா?' என்று, அழுகை பீறிட கேட்பார். 'அது நீ தான்...' என்று, குறும்புத்தனமாக சொல்லும் போது, வைஜெயந்திமாலாவிற்குள் ஏற்பட்ட, பொறாமை, அழுகை எல்லாம் போய், சிரித்து விடுவார். மிகவும் நேர்த்தியாக, யதார்த்தமாக, இந்த காதல் காட்சியை டைரக்ட் செய்திருப்பார் எஸ்.எஸ்.வாசன். 'தன்னுடைய படங்களிலேயே இது ஒரு சவாலான காட்சி...' என்று, என்னிடம் கூறியிருக்கிறார் வைஜெயந்திமாலா.
    அதே போல், சாந்தி படத்தில், தன் காதலி தேவிகாவைப் பற்றி, தன் தாயார் சந்தியாவிடம், சிவாஜி பேசும் காட்சி இடம் பெற்றிருக்கும். தாயின் மடியில் படுத்து, அம்மாவின் கைகளை பிடித்துக் கொண்டே, தயங்கி தயங்கி அரைகுறை வார்த்தைகளில், 'நான் ஒரு பெண்ணை பார்த்தேன். அவள் கண்களை பார்த்தேன்...' என்று, வார்த்தைகளை மென்று விழுங்கி பேசுவார். நம் வீட்டில் நடக்கிற மாதிரி தத்ரூபமான உணர்வு கிடைக்கும்.
    வைஜெயந்திமாலா எனக்கு நெருங்கிய உறவினர். என் தந்தை ஒய்.ஜி.பி.,யின் தாயும், வைஜெயந்திமாலாவின் பாட்டி யதுகிரியும் சகோதரிகள்.
    வைஜெயந்தி மாலா விற்கும், டாக்டர் பாலிக்கும் வைஜெயந்தி யின் வீட்டில் திருமணம் நடந்த போது, அனை வருக்கும் முன் வந்து, முகூர்த்தம் முடியும் வரை இருந்து, மணமக்களை வாழ்த்தினர் சிவாஜி - கமலா தம்பதியர். 'வாங்கோ வாங்கோ கட்டபொம்மன்... நல்லா இருக்கேளா... நீங்க வந்து பாப்பாவை ஆசிர்வாதம் செய்தது ரொம்ப சந்தோஷம்...' என்று, சிவாஜியின் கைகளை பிடித்தபடி சொன்னார் யதுகிரி பாட்டி.
    'என்ன... நீங்க இன்னும் கட்டபொம்மனப் பத்தியே சொல்லிண்டிருக்கேள். பிரஸ்டீஜ் பத்மநாபன் என்ற, அய்யர் ரோல், இப்போ, வியட்நாம் வீடு நாடகத்திலே செய்திருக்கேன்; ரொம்ப அனுபவிச்சு பண்றேன். இந்த வாரம் கூட டிராமா இருக்கு, பார்க்க வாங்கோ...' என்று அழைத்தார் சிவாஜி. நாடக மேடையிலும், சினிமாவிலும் ஏராளமான சாதனைகள் செய்துவிட்ட பின்னரும், ஒரு புது நடிகருக்கே உரிய உற்சாகத்தோடு, தன் நாடகத்தை பார்க்க அழைத்தார்.
    சிவாஜியின் நடிப்பை மிகவும் ரசித்து, பார்ப்பார் டாக்டர் பாலி. மும்பையில் பிறந்து, வளர்ந்த அவருக்கு, தமிழ் நன்றாக புரியும். நாங்கள், ஒரு குரூப்பாக, சாந்தி தியேட்டரில், பட்டிக்காடா பட்டணமா படம் பார்க்க போயிருந்தோம். படத்தின் இரண்டாவது பாதியில், ஹிப்பி ஸ்டைலில், வருவார் சிவாஜி. 'பெண்டாட்டி இங்கே, புருஷன் லண்டனில், வயித்திலே குழந்தை, எப்படி...' என்ற வசனத்தில், 'எப்படி' என்ற வார்த்தையை, ஸ்பெஷலாக, இழுத்து பேசுவார் சிவாஜி. இக்காட்சி, டாக்டர் பாலிக்கு, ரொம்ப பிடிக்கும்.
    பி.மாதவன் இயக்கத்தில், சிவாஜி, ஜெயலலிதா நடித்து, சூப்பர் ஹிட்டான படம், பட்டிக்காடா பட்டணமா. கருப்பு வெள்ளைபடங்களிலேயே, மிக அதிக வசூலை குவித்த படம். சிவாஜி நடிப்பில், ராமன் எத்தனை ராமனடி, பாட்டும் பரதமும் எங்க ஊரு ராஜா, தங்கப் பதக்கம், ஞான ஒளி, ராஜபார்ட் ரங்கதுரை, வியட்நாம் வீடு போன்ற, பல வெற்றிப்படங்களை, பி.மாதவன் இயக்கியுள்ளார்.
    இந்தப் படத்தில், 'கேட்டுக்கோடி உருமி மேளம், போட்டுக் கோடி கோ கோ தாளம்...' பாடல் காட்சியில், கிதார், டிரம்ஸ் என்று, பல மேற்கத்திய இசை கருவிகளை, உபயோகப்படுத்தியிருப்பார். வேஷ்டி, ஜிப்பா, குடுமியோடு கிராமத்தான் கெட்டப்பில், சிவாஜி பாடும் போது, மேற்கத்திய இசைக்கருவிகள் ஒலிக்கும். மாடர்ன் உடையில் இருக்கும் ஜெயலலிதா பாடும்போது, கிராமத்து இசைக்கருவிகளான உருமிமேளம், தாரை, தப்பட்டை போன்றவை ஒலிக்கும்.
    சிவாஜியை பொறுத்தவரை, இந்தப் படம் அவருக்கு, ஒரு மைல் கல் என்றே சொல்லலாம். இந்த படத்தால், அவருக்கு ரசிகர் பட்டாளம் பல மடங்கு அதிகரித்தது.
    பட்டிக்காடா பட்டணமா படத்தை, ஜெயலலிதாவிற்காக பிரத்யேக காட்சி, ஏவி.எம்., தியேட்டரில் ஏற்பாடு செய்திருந்தனர். எங்கள் யு.ஏ.ஏ., நாடகக்குழுவில் உள்ளவர் களையும், அந்த காட்சிக்கு அழைத்திருந்தார் ஜெயலலிதா. படம் பார்த்து முடிந்த பின், எங்களிடம், 'படம் எப்படி இருக்கு...' என்று, கேட்டார் ஜெயலலிதா. சற்று தயக்கத்துடன், 'பரவாயில்லை, சுமார்' என்று சொன்னோம். காரிலே ஏறியபடி, 'இந்தப் படம் உங்களை மாதிரி ஆட்களுக்காக எடுக்கப்படவில்லை. பாமர மக்களுக்காக, அவர்கள் மகிழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட படம். படத்தின், ௨௫வது வார வெள்ளி விழாவில், உங்களை சந்திப்பேன்...' என்று தன்னம்பிக்கையோடு, சொல்லி சென்றார். படமும் மாபெரும் வெற்றி அடைந்து, வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது.
    பழம்பெரும் நடிகர், பாடகர் டி.ஆர்.மகாலிங்கத்தின், கணீர் குரலுக்கு, சிவாஜி மிகப்பெரிய விசிறி.
    பட்டிக்காடா பட்டணமா படப்பிடிப்பு, மதுரை அருகே உள்ள சோழவந்தானில், பதினைந்து நாட்கள் நடைபெற்றது. மற்ற நடிக, நடிகையர், இயக்குனர் மாதவன், டெக்னீஷியன்கள் எல்லாரும், மதுரையில் தங்கி, அங்கிருந்து படப்பிடிப்பிற்கு தினமும் வருவர். ஆனால், சிவாஜி மட்டும், சோழவந்தானில் உள்ள டி.ஆர்.மகாலிங்கத்தின், பண்ணை வீட்டில் தங்கி, அவருடனே படப்பிடிப்பில் கலந்து கொண்டார். டி.ஆர்.மகாலிங்கத்துடன் பதினைந்து நாட்கள் தங்கியது தனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்ததாக
    கூறுவார் சிவாஜி.
    இந்த படத்தில் வரும், 'என்னடி ராக்கம்மா...' பாடல், 42 ஆண்டுகள் ஆகியும், இன்னும் சிரஞ்சீவியாக, ரசிகர்கள் மனதில் பசுமையாக இருக்கிறது. இன்றும் லைட் மியூசிக் குழுக்கள், எப்.எம்.,ரேடியோ, 'டிவி' சேனல்களில் தவறாமல் ஒலிபரப்பப்படுகிறது. சந்திரமுகி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், ரஜினிகாந்த், இந்த பாட்டை உபயோகப்படுத்திக் கொண்டார்.

    தொடரும்.

    Oneline gist: On irumbuthirai and pattikkaadaa pattanama movies, NT's music likes.
    Credits: Dinamalar

    http://www.dinamalar.com/supplementa...d=19530&ncat=2

    It will be great if someone can post the actual varamalar clipping (image/pdf)..

  4. #3
    Administrator Diamond Hubber RR's Avatar
    Join Date
    Sep 2004
    Posts
    6,081
    Post Thanks / Like
    Part 24 - 16 March 2014

    தயாரிப்பாளரும், இயக்குனருமான, ஏ.பி.நாகராஜன் மற்றும் சிவாஜி கூட்டணியில், பல படங்கள் வெளியாகி, சாதனை படைத்துள்ளன. குறிப்பாக, திருவிளையாடல், திருவருட்செல்வர், திருமால் பெருமை, கந்தன் கருணை, சரஸ்வதி சபதம், தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களை சொல்லலாம். நாத்திகம், பெரிய அளவில் மக்களை திசை திருப்ப முயன்ற அக்காலகட்டத்தில், மேற்கூறிய புராண படங்கள், ஆத்திகத்திற்கு உறுதுணையாக நின்றன என்றால் மிகையாகாது.
    ஏ.பி.நாகராஜன், சிவாஜி கூட்டணியில் உருவான, நவராத்திரி படத்தைப் பற்றி, இங்கே குறிப்பிட வேண்டும்.
    பொதுவாக, நவரசம் என்ற பாவங்களை, பரத நாட்டியத்தில் தான் வெளிப்படுத்துவர். ஆனால், முதன்முதலாக, ஏ.பி.நாகராஜன், புதுமையாக ஒன்பது நிகழ்ச்சிகளை வைத்து, அருமையாக திரைக்கதை அமைத்தார். நடிகை சாவித்திரி மட்டும், படம் முழுதும் வரும், ஒரே பாத்திரம். ஹீரோ சிவாஜி, ஒன்பது வேடத்தில், நடித்திருப்பார்.
    இந்த புதுமையை, ஏ.பி.நாகராஜன் உருவாக்கியபோது, 'எப்படி இதை செயல்படுத்துவீர்...' என்று, அவருடைய நண்பர்கள் கேட்டுள்ளனர். அதற்கு, 'சிவாஜி இருக்க எனக்கு என்ன கவலை...' என்று கூறியுள்ளார் ஏ.பி.நாகராஜன்.
    நவராத்திரி மற்றும் முரடன் முத்து ஒரே சமயத்தில், எடுக்கப்பட்ட படங்கள். அப்போது, சிவாஜி, 99 படங்களில் நடித்து, முடித்திருந்தார். முரடன் முத்துவை, பி.ஆர்.பந்துலுவும், நவராத்திரியை, ஏ.பி.நாகராஜனும் இயக்கியிருந்தனர். இரண்டு இயக்குனர்களுமே புகழ்பெற்ற பெரிய இயக்குனர்கள். இந்த இரண்டு படங்களில் எதை, சிவாஜியின் நூறாவது படமாக அறிவிப்பது என, சிவாஜியும், அவரது சகோதரர்களும், தங்களுக்கு நெருக்கமான நண்பர் குழுவிற்கு, இரண்டு படங்களையும் திரையிட்டுக் காண்பித்து, கருத்து கேட்டனர்.
    முரடன் முத்து சிறப்பாக உள்ளதாக நண்பர்கள் குழு கூற, ஏ.பி.என்.,னிடம் நவராத்திரி பட ரிலீசை சற்று தள்ளிப்போட கோரிக்கை வைக்கப்பட்டது. 'வர்த்தக காரணங்களுக்காக அதை ஏற்க முடியாது...' என்று சொல்லி விட்டார் ஏ.பி.நாகராஜன். நவராத்திரி மிட்லண்ட் தியேட்டரிலும், முரடன் முத்து ஸ்டார் தியேட்டரிலும் ரிலீசாகின. மிட்லண்ட் தியேட்டரில், முதல் காட்சியிலேயே, நவராத்திரி சூப்பர் ஹிட் ஆகிவிட்டது. சிவாஜியின் நூறாவது படமாக, நவராத்திரி அறிவிக்கப்பட்டது.
    தமிழ் சினிமாவிலும் சரி, சிவாஜியின் திரைப்பட வாழ்க்கையிலும் சரி, முக்கிய திருப்பு முனையாக, அமைந்த படம் நவராத்திரி. அதுவரை, அதிகமாக குடும்ப கதைகள் மற்றும் சரித்திர கதைகளில் நடித்திருந்த சிவாஜி, இப்படத்தில், முற்றிலும் புதுமையான, ஒன்பது வேடங்களில் நடித்திருப்பார்.
    நவராத்திரி பட கேரக்டர் குறித்து, சிவாஜி என்னிடம் பகிர்ந்து கொண்ட போது, 'ஒன்பது பாத்திரங்களில், இரண்டில் மட்டும் கொஞ்சம் செயற்கைத் தனம், மெலோடிராமா அதிகமாக இருக்கும். ஒன்பது ரோல்களையும், எந்த மிகைப்படுத்தலும் இன்றி, அடக்கி வாசித்தால், படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு போரடிக்கும். இரண்டு கேரக்டர்களை, மிகைப்படுத்தி செய்யும்போது தான், அவர்களால் ரசித்துப் பார்க்க முடியும்...' என்று கூறினார்.
    'பாட்டும் நானே, பாவமும் நானே...' என்ற பெயரில், ஏ.பி.நாகராஜனை பாராட்டும் வகையில், ஒரு நிகழ்ச்சி நடத்தினோம். ஏ.பி.நாகராஜனின் மகன் பரமசிவம், அதில் பங்கு கொண்டு, மறைந்த தன் தந்தைக்கான பரிசை, பெற்றுக் கொண்ட போது, அவர் கூறியது: நவராத்திரி படத்தில், இரண்டாவதாக சிவாஜி, குடிகார முரடனாக வருவார். மிகவும் பாப்புலரான, 'இரவினில் ஆட்டம்...' என்ற பாடல் காட்சியில், பார்க்க முரட்டுத்தனமாக இருந்தாலும், கண்களில் மிரட்சியும், பயமும் தெரியும். அவர் மீது கோபப்பட்டு, சாவித்திரி அவரை அடித்து விடுவார். அந்த காட்சியில், சாவித்திரி, அடித்த அடியில், சிவாஜியின் வாயிலிருந்து, ஒரு பல் கீழே விழுந்து விட்டது, என்றார் ஏ.பி.என்., மகன் பரமசிவம்.
    அடுத்து, குறிப்பிட்டு சொல்ல வேண்டிய கதாபாத்திரம் குஷ்டரோகி பாத்திரம். குஷ்டரோகி கேரக்டர் என்றாலே, நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது, எம்.ஆர்.ராதா நடித்த ரத்தக்கண்ணீர் படம் தான். எம்.ஆர்.ராதா வின் நடிப்புக்கு, சிவாஜி பெரிய விசிறி. ஏற்கனவே, ராதா, குஷ்டரோகியாக சிறப்பாக நடித்திருப்பதால், வித்தியாசப்படுத்தி நடிக்க முடிவு செய்தார் சிவாஜி.
    இப்படத்தில், சிவாஜி, குஷ்டரோகியாக, மேக்-அப் போட்டதும், இரண்டு நாட்கள் தொடர்ந்து, மேக்-அப் கலைக்காமலேயே, அந்தப் பாத்திரத்தை, நடித்துக் கொடுத்தார்.
    குஷ்டரோகியாக காலை விந்தி விந்தி நடப்பார். காலில் உணர்வு இல்லாததால், விந்தி நடந்தாரா அல்லது இதற்காக டாக்டரிடம் ஆலோசனை பெற்றாரா என்ற சந்தேகத்தை பின், ஒரு சமயம், சிவாஜியிடம் கேட்டேன். 'அடப்போடா பைத்தியக்காரா... எந்த டாக்டரையும், 'கன்சல்ட்' செய்யவில்லை. முந்தின நாள் முரடன் முத்து பட ஷூட்டிங்கில், சண்டைக் காட்சி எடுத்தாங்க. காலிலே அடிபட்டு சுளுக்கு ஏற்பட்டுருச்சு. ஏ.பி.என்., படம் என்பதால், ஷூட்டிங்கை கான்சல் செய்ய விரும்பவில்லை. காலில் சுளுக்கு வலியை பொருட்படுத்தாமல், விந்தி விந்தி நடித்தேன். .ஏ.பி.என்., அண்ணனும் ஓ.கே., செய்தார்...' என்று கூறினார் சிவாஜி.
    எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற் போல, இறுதியாக சாவித்திரிக்கும், சிவாஜிக்கும் நடக்கும் திருமண காட்சியில், அடுத்தடுத்த நாற்காலிகளில் சிவாஜி ஏற்று நடித்த மற்ற கதாபாத்திரங்கள் அமர்ந்திருப்பர். கிராபிக்ஸ், கம்ப்யூட்டர் டெக்னிக்குகள் எதுவும் இல்லாத ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்த புதுமையை செய்திருப்பார் ஏ.பி.என்., வெறும் முக பாவங்களில், ஒன்பது வித்தியாசமான சிவாஜியை பார்க்கலாம்.
    நவராத்திரி படத்தை நான் பல முறை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அந்த காட்சியை பார்க்கும் போது, எட்டு மாறுபட்ட நடிகர்கள் நடித்திருப்பதாகத் தான் தோன்றும். முப்பது வினாடிகளுக்கு பின், அந்த எட்டு பேரும், சிவாஜி தான், என்ற உண்மை, நம் மூளையில் பதிவாகும்.
    இந்த வியப்பு எனக்கு மட்டும் தான் என்று நினைத்தேன். நவராத்திரி படம் ரிலீசாகி, ௩௦ ஆண்டுகள் கழித்து, பிரான்ஸ் நாட்டில் சினிமா நிபுணர்கள் அடங்கிய நடுவர் குழு, 'ஒேர நடிகரா ஒன்பது பாத்திரங்களில் நடித்திருக்கிறார்...' என்று வியந்தனராம். அந்த வியப்பின் விளைவு தான், சிவாஜிக்கு வழங்கப்பட்ட செவாலியே விருது. திரைப்படத்துறையில் செவாலியே விருது பெற்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி என்பது, நமக்கெல்லாம் பெருமை அளிக்கும் விஷயம்.

    'உங்களுடன் நடித்த கதாநாயகிகளைப் பற்றி விமர்சனம் சொல்லுங்களேன்...' என்று, ஒரு முறை சிவாஜியிடம் கேட்டேன். ஒவ்வொருவரைப் பற்றியும், ரத்தின சுருக்கமாக அவர் சொன்னது, 'பானுமதி - திறமைசாலி, கே.ஆர்.விஜயா - ஹோம்லி, தேவிகா - நல்ல அழகான கண்கள் கொண்டவர், பத்மினி- ரொமாண்டிக்கான பார்வையுடன் லவ்லி, சாவித்திரி- அவளோடு நடிக்கும்போது, ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும். இல்லைன்னா, நடிப்பில் நம்மளையே சாப்பிட்டு விடுவா...' என்றார்.

    — அடுத்த இதழில் முடியும் —

    Oneline gist: About Navarathiri movie and how NT prepared for the nine roles, and his comments about his heroines.

  5. #4
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நடிகர் திலகம் சிவாஜி பற்றி தினமலர் வார மலர் புத்தகத்தில் நான் சுவாசிக்கும் சிவாஜி என்கிற தலைப்பில் திரு ஒய்.ஜி.மகேந்திரா எழுதும் தொடரில் இதுவரை வந்துள்ள 24 பாகங்களுக்கான இணைப்புகள்

    பாகம் 1 - http://www.dinamalar.com/supplementa...d=17339&ncat=2

    பாகம் 2 - http://www.dinamalar.com/supplementa...d=17435&ncat=2

    பாகம் 3 - http://www.dinamalar.com/supplementa...d=17529&ncat=2

    பாகம் 4 - http://www.dinamalar.com/supplementa...d=17626&ncat=2

    பாகம் 5 - http://www.dinamalar.com/supplementa...d=17727&ncat=2

    பாகம் 6 - http://www.dinamalar.com/supplementa...d=17923&ncat=2

    பாகம் 7 - http://www.dinamalar.com/supplementa...d=18014&ncat=2

    பாகம் 8 - http://www.dinamalar.com/supplementa...d=18096&ncat=2

    பாகம் 9 - http://www.dinamalar.com/supplementa...d=18197&ncat=2

    பாகம் 10 - http://www.dinamalar.com/supplementa...d=18296&ncat=2

    பாகம் 11 - http://www.dinamalar.com/supplementa...d=18393&ncat=2

    பாகம் 12 - http://www.dinamalar.com/supplementa...d=18496&ncat=2

    பாகம் 13 - http://www.dinamalar.com/supplementa...d=18586&ncat=2

    பாகம் 14 - http://www.dinamalar.com/supplementa...d=18678&ncat=2

    பாகம் 15 - http://www.dinamalar.com/supplementa...d=18781&ncat=2

    பாகம் 16 - http://www.dinamalar.com/supplementa...d=18904&ncat=2

    பாகம் 17 - http://www.dinamalar.com/supplementa...d=18994&ncat=2

    பாகம் 18 - http://www.dinamalar.com/supplementa...d=19075&ncat=2

    பாகம் 19 - http://www.dinamalar.com/supplementa...d=19166&ncat=2

    பாகம் 20 - http://www.dinamalar.com/supplementa...d=19261&ncat=2

    பாகம் 21 - http://www.dinamalar.com/supplementa...d=19348&ncat=2

    பாகம் 22 - http://www.dinamalar.com/supplementa...d=19436&ncat=2

    பாகம் 23 - http://www.dinamalar.com/supplementa...d=19530&ncat=2

    பாகம் 24 - http://www.dinamalar.com/supplementa...d=19633&ncat=2

    பாகம் இருபத்தைந்துடன் இத்தொடர் முடிவுறுகிறது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #5
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    நான் சுவாசிக்கு சிவாஜி! (25) - ஒய்.ஜி. மகேந்திரன்

    ஏவி.எம்.மின் உயர்ந்த மனிதன் படத்தில் சிவாஜி, மேஜர் தவிர, நடிகர் எஸ்.ஏ.அசோகனுக்கு, முக்கியமான பாத்திரம்.
    அந்தப் படம், உருவாகும் நிலையில் இருந்தபோது, ஏதோ காரணமாக சிவாஜியுடன் பேசுவதை தவிர்த்திருந்தார் அசோகன். முன்பு இருந்தது போன்ற நட்பு இல்லாத சமயம் அது. யாரெல்லாம் முக்கிய பாத்திரங்களில் நடிக்கப் போகின்றனர் என்று முடிவான போது, அந்த படத்தில், அசோகன் நடிக்க இருப்பது, சிவாஜிக்கு தெரிவிக்கப்பட்டது. சிவாஜி என்றுமே, தன் சொந்த விருப்பு, வெறுப்புகளை வெளிக்காட்டி, தொழிலை, படப்பிடிப்பை பாதிக்க அனுமதித்த தில்லை. தொழிலை, தொழிலாக மட்டும் பார்க்க பழகியவர். அசோகன், அந்தப் படத்தில் நடிப்பதற்கு எந்தவித தடையோ, குறுக்கீடோ செய்யவில்லை.
    சிவாஜியும், அசோகனும், பேசிக் கொள்வதில்லை என்ற நிலை இருந் தாலும், இருவரும் இணைந்து நடிக்க வேண்டிய காட்சியில், முழு கவனத்துடன், முழு ஒத்துழைப்புடன் நடித்தனர்.
    சிவாஜியின் நண்பராக டாக்டர் வேடத்தில் நடிக்கும் அசோகன், படத்தின் கடைசி காட்சியில், சிவாஜியின் வாழ்க்கையில் உள்ள முக்கிய ரகசியங்களை சொல்லிவிட்டு, 'ஹார்ட் அட்டாக்'கில் இறந்து விடுவார். அந்தக் காட்சி படமாக்கப்பட்ட போது, அவ்வளவு திருப்தியாக அந்த காட்சி அமையவில்லை. படப்பிடிப்பில் இருந்த சிவாஜி, படத்தின் இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன் - பஞ்சுவிடம், 'உங்களுக்கும், அசோகனுக்கும் ஆட்சேபனை இல்லையன்றால், நான் இந்த காட்சியில், நடித்துக் காட்டலாமா...' என்று கேட்டார். இயக்குனர்கள் மகிழ்ச்சியோடு சம்மதித்தனர். அந்த டாக்டர் பாத்திரம் எப்படி நடிக்க வேண்டும் என்பதை, முழுமையாக நடித்துக் காட்டினார் சிவாஜி. செட்டில் இருந்த அசோகன் மற்றும் இயக்குனர்கள் உட்பட அனைவரும் பிரமித்து போயினர்.
    சிவாஜி செய்து காண்பித்தவாறே அசோகன், அந்த காட்சியில் நடித்தார். அது, அவருக்கு ஏராளமான பாராட்டுகளை பெற்றுக் கொடுத்தது, என்று, பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், ஸ்டுடியோ அதிபருமான ஏ.வி.எம்.சரவணன் எங்கள், யு.ஏ.ஏ., சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
    நடிப்பைப் பொறுத்தவரை சுயநலம் என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாதவர் சிவாஜி. காட்சி மெருகேறி, படம் வெற்றி பெற வேண்டும், என்பது தான் அவருடைய குறிக்கோள். ஆகையால், அவர் நடித்த படத்தின் டைட்டிலே, அவருக்கு பொருந்தும்... அவன் ஒரு சரித்திரம்!
    இறுதியாக, எனக்கு இரண்டு வேண்டுகோள்கள் உண்டு...
    முதலாவது, நவம்பர் ௧௪, நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக, ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுவதை போல், சிவாஜியின் பிறந்த நாளான, அக்டோபர் ௧ம் தேதியை, நடிகர் சங்கமும், குறிப்பாக நடிகர்களும், 'நடிகர்கள் தினமாக' கொண்டாட வேண்டும்.
    இரண்டாவது, காலண்டர் தயாரிப்பாளர் களுக்கு... சிவாஜி மறைந்த ஜூலை ௨௧ம் தேதியை, காலண்டரிலிருந்து நீக்கி விடுங்கள்.
    என்னைப் பொறுத்தவரை, சிவாஜி மறையவில்லை. உலகில், நாம் சுவாசிக்கும் பிராண வாயு இருக்கும் வரை, சிவாஜியும், நம் சுவாசத்தோடு கலந்து இருப்பார்.

    சிவாஜியின் காஸ்ட்யூ மரான ராமகிருஷ்ணன் தயாரித்து, பீம்சிங் இயக்கிய, 1962ல் வெளியான, படித்தால் மட்டும் போதுமா படத்தில், சிவாஜிக்கு, படிக்காத, முரடன் பாத்திரம். அப்படத்தில், இடம்பெற்ற, 'நான் கவிஞனும் இல்லை...' என்ற பாடல் காட்சியில், ஒரு கட்டத்தில், மாண்டலின் என்ற இசைக்கருவியை இசைத்தபடி பாடுவது போன்ற காட்சி அமைந்திருக்கும். பிரபல மாண்டலின் இசை கலைஞர்களே தோற்றுபோகு மளவுக்கு, அவ்வளவு தத்ரூப மாக, அப்பாடல் காட்சியில் நடித்திருப்பார் சிவாஜி.

    உயிரற்ற பொருள்களுக்கும், உயிர் கொடுக்கத் தெரிந்தவர். அவர் கைப்பட்டால், எந்த பொருளுக்கும், ஒரு மதிப்பு கிடைக்கும். தீபம் படத்தின் படப்பிடிப்பில், இயக் குனர் கே.விஜயனிடம், சிவாஜி, 'என் கையிலே ஏதாவது ஒரு பொருளை கொடுங்க, ஒரு சின்ன கம்பு மாதிரி இருந்தால் நல்லாயிருக்கும்....' என்றார். இதற்கு காரணம், நிறைய நடிகர்களுக்கு உள்ள முக்கிய பிரச்னையே, நடிக்கும் போது, கைகளை எப்படி வைத்துக் கொள்வது என்பதுதான். அச்சமயத்தில், இம்மாதிரி ஏதாவது ஒரு பொருளை கையில் வைத்து நடிப்பது வசதியாக இருக்கும். இதற்கு இரண்டு உதாரணங்களை கூறலாம். அது:
    உயர்ந்த மனிதன் படத்தில், 'அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே...' பாடல் காட்சியில், சிவாஜி கைத்தடியை வைத்திருப்பார். 'உயர்ந்தவன், தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம்...' என்ற பாடல் வரிக்கு, சிவாஜி கையை உயர்த்தாமல், அந்த கைத்தடியை மேலே உயர்த்தி, கீழே தாழ்த்தி வித்தியாசமாக, நடித்திருப்பார். அந்த ஆக் ஷனை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர்.

    'ராமன் எத்தனை ராமனடி படத்தில் அப்பாவி கிராமத்து மனிதராக இருக்கும் சிவாஜி, திரைப்பட நடிகராகி பாப்புலராகி விடுவார். நடிகர் ஆனபின், தன் கிராமத்திற்கு வருவார். ஆரம்பத்தில், கிராமத்தில் வசிக்கும் போது, கழுத்தில் வடை மாலை, பழங்களை தொங்க விட்டுக் கொண்டு, 'அம்மாடி...' என்ற பாடலை, அப்பாவியாக பாடுவார். பின்னர், அதே பாட்டை, பணக்காரராக நடிக்கும் போது, கருப்பு பேன்ட், கருப்பு சட்டை அணிந்து, கையில் ஸ்டைலாக, ஒரு சாட்டையை வைத்து, தரையில் தட்டிக் கொண்டு, வித்தியாசமான முறையில் பாடுவார்.

    -- முற்றும் --
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  7. #6
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திரு ஒய்.ஜீ.மஹேந்திரா அவர்களின் நான் சுவாசிக்கும் சிவாஜி நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழின் நிழற்படங்கள்..





    நமது திரி நண்பர்கள் அனைவரும் பங்கு கொண்டு விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #7
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    ஒய்.ஜீ.மஹேந்திராவின் நான் சுவாசிக்கும் சிவாஜி நூல் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கலைமாமணி லக்ஷ்மி புத்தகத்தை வெளியிட்டு மிகச் சிறப்பாக ஆற்றிய உரை அனைவரையும் மிகவும் கவர்ந்தது. நடிகர் திலகத்தின் நடிப்பை மீறி வேறு யாராலும் கொடுத்து விட முடியாது என்று ஆணித்தரமாக வலியுறுத்திப் பேசியது, எந்த அளவிற்கு அவருக்குள் நடிகர் திலகம் வாழ்கிறார் என்பதை உணர்த்தியது. அன்புச் சகோதரர் ராம்குமார், கலைப்புலி தாணு, சந்தான பாரதி, ஏ.ஆர்.எஸ். ஆகியோரும் வாழ்த்துரையாற்றினர். புத்தக வெளியீட்டாளர் கண்ணதாசன் பதிப்பகத்தின் சார்பில் காந்தி கண்ணதாசன் வரவேற்புரை நிகழ்த்தினார். தன்னுடைய ஆசான் நடிகர் திலகத்தைப் பற்றி தன்னுடைய ஏற்புரையில் ஒய்.ஜீ.மஹேந்திரா ஆற்றிய உணர்ச்சி பூர்வமான உரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.

    நான் சுவாசிக்கும் சிவாஜி நூல், சென்னை புத்தகக் கண்காட்சியில் கண்ணதாசன் பதிப்பகத்தின் ஸ்டாலில் கிடைக்கிறது. புத்தகத்தின் விலை ரூ.120.00 கண்காட்சியில் சிறப்புக்கழிவு போக விலை ரூ. 90.00.

    புத்தகக்கண்காட்சி 21.01.2015 வரை செயல்படும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #8
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    புத்தகத்தின் முகப்பு



    பார்வையாளர்கள்



    திரு காந்தி கண்ணதாசன் அவர்களின் வரவேற்புரை



    தன் வயது எவ்வளவானால் என்ன நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட விழா, என்றவுடன் முடிந்த வரையில் தவறாமல் கலந்து கொள்ளும் திருமதி ஒய்.ஜி.பி. அவர்கள்



    அன்புச்சகோதரர் ராம்குமார் அவர்கள் உரையாற்றுகிறார்



    நூலை திருமதி லக்ஷ்மி அவர்கள் வெளியிடுகிறார்



    அனைவரும் நூலைப் பார்வையிடும் காட்சி



    திரு ஏ.ஆர்.எஸ். அவர்கள் உரையாற்றுகிறார்



    திரு சந்தானபாரதி அவர்கள் உரையாற்றுகிறார்



    திரு ஒய்.ஜி.மஹேந்திரா அவர்கள் ஏற்புரையாற்றுகிறார்



    நிழற்படங்களுக்கு நன்றி ... திரு நிகில் முருகன் அவர்கள்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #9
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #10
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Last edited by RAGHAVENDRA; 13th January 2015 at 09:46 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Page 1 of 2 12 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •