Page 5 of 16 FirstFirst ... 3456715 ... LastLast
Results 41 to 50 of 157

Thread: Padalgal Palavidham - பாடல்கள் பலவிதம்

  1. #41
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    புன்னகை தவழும் மதிமுகம் -6

    பொய்யில்லாத நாக்கிருக்கு முத்தையா...
    நம்ம புன்னகைக்கு பொருள் இருக்குது முத்தையா...

    அந்த புன்னகை தவழும் மதிமுகம் நிச்சயமாக நமக்கு பல விஷயங்களை சொல்வது உண்மை தானே... எத்தனை பாடல் காட்சிகளில் உணர்ச்சியமான காட்சிகளில் நாம் பார்த்திருக்கிறோம்..

    கல்யாணியின் கணவன் திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடலை ஒளிபரப்பும் போது மெகா டிவி தொகுப்பாளர் ஒருவர் கேட்ட கேள்வி..

    இப்பாடலில் முத்தையா என்ற சொல் எத்தனை முறை வருகிறது..

    இப்பாடலில் நடிகர் திலகத்தின் அற்புதமான முக பாவங்கள் பார்த்து ரசிக்கத் தக்க நடை உடை பாவனைகள் என ஏராளமாக இருக்க ஒரு சொல் எத்தனை முறை வருகிறது எனக் கூறி கவனத்தைத் திருப்பும் இவர்களையெல்லாம் என்ன சொல்வது...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  4. #42
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    புன்னகை தவழும் மதிமுகம் 7

    ஆஹா.. மலர்ச்சி என்றால் என்ன... இருள் சூழ்ந்த வானில் நிலவு மேகக் கூட்டத்தை ஒதுக்கித் தள்ளி விட்டு மெல்ல தன் முழு ஒளியையும் வீசும் போது ஏற்படுகிறதே.. அந்த மலர்ச்சியை நீங்கள் முகத்தில் பிரதி பலிக்க முடியுமா... ஐயமே.. ஆனால் முடியும் என்று நிரூபித்துக் காட்டி விட்டார் நடிகர் திலகம்.. அந்த REFLECTION ஐத் தன் முகத்தில் எவ்வளவு அனாயாசமாக கொண்டு வருகிறார் பாருங்கள். அங்கே நிலவொளி வெளிவரும் போது இங்கே இவர் முகத்தில் பிரகாசம்.. அதுவும் அதைத் தன் புன்னகையில் வெளிப்படுத்தும் பாங்கு.. மதிமுகம் என்பது எந்த அளவிற்குப் பொருந்துகிறது பாருங்கள்.. நிலவின் ஒளியை அப்படியே பிரதிபலிக்கும் மதிமுகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம்..

    அதுவும் நிலவைக் கேட்கிறார்.. பருவம் பார்த்து அருகில் வந்து வெட்கமா... என்று... அந்த ஸ்டைலை எப்படி வர்ணிப்பது..

    நீங்களே பார்த்து அனுபவியுங்கள்..

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Thanks Russellmai thanked for this post
  6. #43
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    புன்னகை தவழும் மதிமுகம் - 8

    பார்ப்பதற்கென்று சில முகங்கள் இருக்கலாம். ஆனால் பார்த்து ரசிப்பதற்கென்று இருக்கும் ஒரே முகம், புன்னகை தவழும் மதிமுகம் தான். நடிகர் திலகம் என்று அழைத்த அந்த பேசும் பட வாசகருக்கு சிலையே வைக்கலாம். இதோ காலத்தால் அழியாத புகழ் பெற்ற இந்தப் பாடலில் பாருங்கள்.. புன்னகையின் சக்தி என்னவென்று நிரூபிக்கிறார் தலைவர். புன்னகையிலும் ஏராளமான அர்த்தங்களைக் கூற வல்லவர். இதழின் கடைக்கோடியில் மட்டுமே புன்னகையைக் காண்பிக்கக் கூடிய வல்லமை படைத்தவர்.

    Last edited by RAGHAVENDRA; 5th August 2014 at 08:04 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Thanks Russellmai thanked for this post
  8. #44
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    புன்னகை தவழும் மதிமுகம் 9

    70 வயதில் இந்த சிங்கத்தின் ஆட்டம் பாருங்கள்.. இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தமிழனின் பெருமையப் பறை சாற்றும் இந்த உலக மகா கலைஞனை இந்த யுக புருஷனை சிறுமைப் படுத்த வென்றே அலைவதை நினைத்தால் இந்த விடுதலை நாள் கசக்கிறது. ஆனால் இவர் படங்கள் மூலம் இந்த தேசத்தின் விடுதலைக்காகப் பாடுபட்ட பல தியாகிகளின் உழைப்பும் வேர்வையும் இன்னும் பல தலைமுறைகளுக்குப் பாடமாய் விளங்கப் போவதை நினைத்தால் இந்த விடுதலை நாள் இனிக்கிறது.
    கசப்பும் இனிப்பும் இணைந்ததே வாழ்க்கை என்பதைத் தன் படங்கள் மூலம் எடுத்துச் சொன்ன நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியங்களில் ஒன்றாக விளங்குகிறது என் ஆச ராசாவே. கட்டணும் கட்டணும் என்கிற இந்தப் பாடலில் வரும் ஒரு வரி

    எப்பவும் இவன் சுத்தம் தான்
    இவன் மொத்தமும் அப்பனின் ரத்தம் தான்

    இந்த வரிகளின் போது சிங்கத்தின் கம்பீரத்தையும் பெருமிதத்தையும் பாருங்கள்..

    இன்னும் எத்தனை ஜென்மமெடுத்தாலும் சிவாஜி ரசிகனாகப் பிறக்க வேண்டும்... சிறுமதியில்லாமல் வாழ வேண்டும் என்பதே இறைவனிடம் நம் வேண்டுதலாகும்.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #45
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    புன்னகை தவழும் மதிமுகம் 10

    இந்தப் புன்னகைக்கு விலை என்றுமே இல்லை. இவர் சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே... பாருங்கள் இந்தப் பாடலில்.. முகத்தில் புன்னகை கரத்தில் கோஷம்.... ஸ்டைல் என்ற வார்த்தைக்கு விளக்கமே நடிகர் திலகம் தான் என்பதற்கு இன்னொரு சான்று..

    "மர்மம் எதுவுமில்லை மனது சுத்தம் தோழி - நம்
    மனதுக்கு நீதி என்றால் மனிதருக்கு நீதி..." -

    நேர்மையான மனிதருக்கு பொருந்தும் பொன்னான மொழிகள்...

    திருமால் பெருமை படத்தில் இடம் பெற்ற கள்வனுக்கும் கண்ணனுக்கும் பேதம் இல்லை தோழி பாடல்... கவியரசரின் வரிகள் திரை இசைத் திலகம் கே.வி.எம். இசை பாடகர் திலகத்தின் குரல்
    Last edited by RAGHAVENDRA; 16th September 2014 at 07:58 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #46
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    புன்னகை தவழும் மதிமுகம் 11

    நாளை மலர உள்ள புரட்டாசித் திங்களை முன்னிட்டு திருமால் பெருமையைப் பாடும் பக்தி மயமான பாடல்..

    புன்னகை தவழும் மதிமுகத்தின் பக்தி மயமான புன்னகையைப் பாருங்கள்..

    Last edited by RAGHAVENDRA; 16th September 2014 at 08:35 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Likes Russellmai liked this post
  12. #47
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    புன்னகை தவழும் மதிமுகம் 12

    ஒவ்வொரு நாளும் புலரும் பொழுது - உங்களைக்
    காண ஏங்கும் மனது...
    தங்களின் மதிமுகத்தில் தவழும்
    வசீகரப் புன்னகை
    ஏன் மயக்காது இவ்வுலகை...

    இந்நாளை இனிதே துவக்க
    தொடர் வண்டியில்
    வருகிறார் கலக்க..

    பூமாலைகள் உன்மீது விழுந்து
    ஊரெங்கும் பேர் பாடும் பொன்னாளிலே
    பாமாலைகள் பல்லாக்கு வரிசை
    ஒன்றல்ல பல கோடி உன் வாழ்விலே.
    Last edited by RAGHAVENDRA; 17th September 2014 at 06:50 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Likes Russellmai liked this post
  14. #48
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் கோபு
    தங்களுடைய தொடர்ந்த ஆதரவும் அன்பும் எனக்கு மிகுந்த மகிழ்வூட்டுகிறது. தாங்களும் தொடர்ந்து பதிவுகளை எழுதி பங்கு கொள்ள வேண்டும் என வேண்டுகிறேன்.
    தங்களுடைய அந்நாளைய அனுபவங்கள் நம்மைப் போன்றவர்களுக்கு நினைவூட்டலாகவும் புதியவர்களுக்கு தகவலாகவும் பயனளிக்கும் என்பது என் எண்ணம்.
    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Thanks Russellmai thanked for this post
  16. #49
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Raghavendra

    Your post must come atlteast on this thread everyday to enable us to view our Acting God daily

    with his Unique and handsome face supported by superb song.

    Regards

  17. Thanks RAGHAVENDRA thanked for this post
  18. #50
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    புன்னகை தவழும் மதிமுகம் - 13

    சின்னையா என்ற அப்பாவி கிராமத்து இளைஞன். தொழில் மாடு மேய்த்தல். என்றாலும் சதா சர்வகாலமும் காளியின் கோயிலிலேயே தவம் கிடைப்பவன். அங்கே கிடைக்கும் சிதறு தேங்காயே அவன் உணவு. தன் தாயை மறந்தாலும் மறப்பான் காளியை மறக்க மாட்டான். அவன் இப்படியே சதா சர்வ காலமும் சுற்றுகிறானே அவன் எதிர்காலம் என்னாகுமோ என்பதே அவன் தாயாரின் கவலை.

    காளி சின்னையாவிற்கு அருள் பாலிக்கிறாள். அப்பாவி இளைஞன் அதிமேதாவியாகிறான்.

    எழுத்து அவனை ஆட்கொள்ளுகிறது.

    மொழி அவனுக்கு அடிமையாகிறது.

    கவிதை அருவி போல் கொட்டுகிறது.

    கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு... நம் கலைஞனுக்கோ

    கால் வைத்த இடமெல்லாம் சிலிர்ப்பு...

    குழந்தைகள் வரைவது ஓவியமா...
    இந்த குருடன் வரைவது ஒரு காவியமா
    நினைந்ததை உரைத்தேன் புலவர்களே
    குற்றம் நிறைந்திருந்தாலும் அருளுங்களேன்..

    எனக் கேட்டவாறு கலைமகளின் ஆணையை சிரமேற்கொள்கிறான்.

    பிறக்கிறது கவிதை எனும் குழந்தை.
    சுரக்கிறது சொல்லாடல்...
    திறக்கிறது இலக்கியக் கதவு..

    அங்கே கலைமகள் தன் வாயிற் கதவை இந்தக் கலைஞனுக்காக திறந்து வைத்துக் கொண்டு வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறாள்..

    ..... ஆஹா.... இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல ... என்ற வாலியின் வரிகளைக் கடன் வாங்கி, அந்த புன்னகை பூக்கும் மதிமுகத்தின் பெருமையைப் பற்றிக் கூறத் தலைப்பட்டவனாகிறேன்...

    அதுவும் பல பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாக...

    எடுத்தவுடனேயே குழந்தையின் கோடுகள் ஓவியமா என்ற அந்த மூன்று வார்த்தைகளுக்குள்ளாகவே, மூடியிருக்கும் விழிகளினின்று இமைகளை மெல்லத் திறந்து மெதுவாக அந்த வசீகரமான புன்னகையை விரிக்கும் அந்த அழகு...

    இந்தக் குருடன் வரைவது ஒரு காவியமா என்ற வரிகளின் போது சிரிப்பை சற்றே அதிகரிப்பது...

    குற்றம் நிறைந்திருந்தாலும் அருளுங்களேன்... என்ற வரிகளின் போது முகத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்து எளிமையையும் பணிவையும் கொண்டு வந்து அவையடக்கத்தை வெளிப்படுத்துவது...

    பின்பு முகத்தில் தன்னம்பிக்கையுடனும் சற்றே கர்வத்துடனும் கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள் என புன்முறுவலோடு பல்லவியை துவங்கும் ஆளுமை...

    திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன்,

    கவியரசர் கண்ணதாசன்,

    பாடகர் திலகம் டி.எம்.சௌந்தர்ராஜன்

    மற்றும்
    இசையரசி பி.சுசீலா

    இவர்களின் கூட்டணியில் உருவான இப்பாடலுக்கு உயிர் தந்து காலமெல்லாம் காவியமாக நிலைக்கச் செய்து விட்ட

    எங்கள் இதயதெய்வம் நடிகர் திலகத்தின் புன்னகை தவழும் அந்த மதிமுகத்தைப் பாருங்கள்...

    கலைமகள் நடிகர் திலகத்திற்கு இட்ட ஆணை...

    மொழிக்கும் உணர்விற்கும் உருவம் தரவேண்டும்...
    அதற்கு உயிர் தரவேண்டும்...
    அதற்கு நடிகர் திலகமாய் நீ புவியில் தோன்ற வேண்டும்.

    கலைமகள் நமக்கு இட்ட ஆணை....

    அந்த அவதாரத்தை உரிய முறையில் பேண வேண்டும்...
    உரிய முறையில் கௌரவிக்க வேண்டும்..
    உரிய முறையில் அங்கீகரிக்க வேண்டும்...

    கலைமகள் நடிகர் திலகத்திற்கு இட்ட ஆணையை அவர் பரிபூரணமாக நிறைவேற்றி விட்டார்..

    கலைமகள் நமக்கு இட்ட ஆணை....

    ???????????????
    Last edited by RAGHAVENDRA; 4th October 2014 at 11:56 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  19. Thanks Russellmai thanked for this post
Page 5 of 16 FirstFirst ... 3456715 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •