Page 4 of 16 FirstFirst ... 2345614 ... LastLast
Results 31 to 40 of 157

Thread: Padalgal Palavidham - பாடல்கள் பலவிதம்

  1. #31
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    புன்னகை தவழும் மதிமுகம் - 1

    தலைவரே... பார்க்கப் பார்க்கத் திகட்டாத உன்னழகைப் பார்க்க பசி தீருமே....

    மரகதம் திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் நம்மைக் கட்டிப் போட்டு விடும் என்பதில் ஐயமுண்டோ..

    எனதுள்ளம் இன்றல்லவோ என்ற வரிகளின் போது மரத்தின் மறைவிலிருந்து துள்ளிக் குதித்து வரும் ஸ்டைல்...

    தலைவரின் ஈடு இணையற்ற கொள்ளை அழகை ரசிப்பதற்கு கண்கள் இரண்டு போதாதன்றோ...

    புன்னகை தவழும் மதிமுகத்தைப் பாருங்களேன்..



    ஆம் புன்னகை தவழும் மதிமுகத்தைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே இருக்கலாம்.

    இத்தொடரில் நாம் அனைவருமே பங்கு கொண்டு நடிகர் திலகத்தின் பாடல்களைப் பற்றி எழுதி முரளி சாரின் இந்த திரியில் நடிகர் திலகத்தின் பல உன்னதங்களை வெளிக் கொண்டு வருவோம்.
    Last edited by RAGHAVENDRA; 1st August 2014 at 07:23 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #32
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    புன்னகை தவழும் மதிமுகம் - 2

    யூ.ஆர் ஜீவரத்தினம் அவர்களைப் புகழின் உச்சியில் கொண்டு சென்ற பாடல்.

    வாழ்விலே ஒரு நாள் திரைக் காவியத்தில் இடம் பெற்ற தென்றலே வாராயோ நம் நெஞ்செல்லாம் நிறைந்து உள்ளத்தில் உவகையூட்டும்.

    நடிகர் திலகத்தின் புன்னகை தவழும் வசீகர மதிமுகம் நம்முடைய ஒவ்வொரு நாளையும் வாழ்விலே ஒரு நாளாக நினைத்து நினைத்து மகிழும் நாளாக ஆக்கி விடும்.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Likes Russellmai liked this post
  6. #33
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    புன்னகை தவழும் மதிமுகம் - 3



    கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பாடல். கள்வனின் காதலி திரைப்படத்தில் கோவிந்தராஜுலு நாயுடு இசையில் தலைவருக்கு கண்டசாலா பாடிய பாடல். இதே பாடல் டூயட்டாக இதே படத்தில் பாடகர் திலகம் டி.எம்.எஸ். மற்றும் பானுமதி பாடி இடம் பெற்றுள்ளது.

    இந்தக் காட்சியில் கண்டசாலா பாடுவதைக் கருத்தில் கொண்டு மென்மையான குரலுக்கேற்றவாறு வாயசைப்பில் வித்தியாசப் படுத்தி புன்னகை தவழும் மதிமுகத்துடன் நடிகர் திலகம் நடித்திருக்கும் காட்சியைப் பாருங்கள்.

    உட்கார்ந்தவாறே ஸ்டைலை வெளிப்படுத்தும் பாங்கு... என்னவென்று சொல்வதம்மா என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Likes Russellmai liked this post
  8. #34
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    புன்னகை தவழும் மதிமுகம் - 4

    கெமிஸ்ட்ரி என்பது திரவங்களின் கலவையைக் குறிக்கும் அறிவியல் சொல் என்று தான் நாம் முந்தைய தலைமுறை வரை எண்ணியிருந்தோம். ஆனால் தற்போதைய தொலைக்காட்சிகளின் அகராதிகளில் இதனுடைய அர்த்தமே வேறாகப் போய், இன்னும் கொஞ்ச நாட்களில் உண்மையிலேயே அறிவியல் வகுப்புகளில் மாணவர்கள் கெமிஸ்ட்ரி என்றால் தொலைக்காட்சிகள் கூறும் அர்த்தத்தையே எழுதி விடுவார்கள் போலிருக்கிறது..

    ஆனால் உண்மையிலேயே கெமிஸ்ட்ரி என்பதற்கு தற்போதைய தொலைக்காட்சிகள் தரும் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு நடிகர் திலகம் பத்மினி நடித்த ஆரம்ப கால படங்களின் பாடல் காட்சிகளைச் சுட்டிக் காட்டலாம். அதற்கு ஒரு உதாரணம் இந்தப் பாடல். கோடீஸ்வரன் திரைப்படத்தில் எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் ஏ.எம்.ராஜா, சுசீலா பாடிய அருமையான பாடலாகும். வெள்ளுடை வேந்தர் வசீகர நாயகரின் புன்னகை தவழும் மதிமுகம் பக்கவாட்டு தோற்றத்திலும் கவர்வதைப் பாருங்கள்.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Likes Russellmai liked this post
  10. #35
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Raghavendra Sir,

    Expecting many more NT's songs through your active participation in this
    thread. Do continue.

    Regards

  11. Thanks RAGHAVENDRA thanked for this post
  12. #36
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    புன்னகை தவழும் மதிமுகம் -5

    தங்கள் ஆதரவிற்கு நன்றி வாசுதேவன்.

    மெல்லிய புன்னகையின் வசீகரம் காந்தம் போல் இழுக்கும். பெரும்பாலும் காதல் கண்களில் பிறக்கும் என்பார்கள். ஆனால் இந்தப்புன்னகையும் காதலின் கருவறைக்கு வாசலாக விளங்கும் தன்மை வாய்ந்தது. அதுவும் பென்சிலால் கோடு போட்டது போன்ற மெல்லிய புன்னகையை வீசுவதில் ஒரு மயக்கமும் கிறக்கமும் உண்டாவதில் வியப்பென்ன. இங்கே பாருங்கள் தன் புன்னகை என்னும் ஆயுதத்தை வைத்தே காதலின் மேன்மையை சித்தரிக்கும் அந்த மதிமுகத்தை..

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Likes Russellmai liked this post
  14. #37
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்னையின் ஆணை -சிவாஜி கோடீஸ்வரன், மணமகன் தேவை படங்களில் கோடி காட்டி இருந்தாலும் ,தன்னுடைய நடிப்பின் பாணியை முற்றிலும் வேறு திசையில் மேற்கு நோக்கி திருப்பிய ஆரம்ப படம் அன்னையின் ஆணை.

    அதே போல சிவாஜி-சாவித்திரி இணை ஆரம்ப படங்களான (இறுதி 50 களின்) அமர தீபம்,வணங்காமுடி,அன்னையின் ஆணை ,காத்தவராயன் படங்களில் அவ்வளவு அழகாக வந்திருக்கும். என்ன ஒரு கெமிஸ்ட்ரி இந்த திலகங்களிடையே. அவ்வளவு அழகு ஜோடி.
    பாச மலர் வந்து புரட்டி போட்டு விட்டது.

    இந்த பாடல் கதாநாயகனின் கனவு. fantasy கலந்த செட்,உடைகள் எனினும் மிக மிக அழகுணர்ச்சியுடன் வடிவமைக்க பட்டிருக்கும். ஆண் -பெண் உடையமைப்பில் ஒத்திசைவு அபாரம். திராவிட மன்மதன் இளமையுடன் ஆணழகின் இலக்கணமாக ,துறு துறு வென்று மனதை அள்ளி விடுவார்.
    நடன ஒத்திசைவு (rhythm ),அமைப்பு (choreography ),நளினம் (Grace ),ஸ்டைல் (style )வெளியீடு (execution ) எல்லாவற்றிலும் அப்படி ஒரு முழுமை. நடிகர்திலகம் முற்றிலும் புது பாணி கையாண்ட ஆரம்ப படம்.

    கனியே உன்னாசை போலே, மலர்ந்தாடும் இன்ப சோலை மனம் மகிழும் பொன்னான வேளை ,அழகாய் நின்றாடும் மானே ,ஓஹோஹோ அமுதே எந்தன் வாழ்வுதனிலே வரிகளில் தலைவரை கண் கொட்டாமல் கவனியுங்கள்.இந்த இடத்தில் ஒரு ஸ்டெப் எடுப்பது போல நிறுத்தி பிறகு வருவதை பாருங்கள். ஸ்டைல்
    ஆனாலும் சரி ,cue மிஸ் பண்ணி சமாளித்தாலும் (படசுருள்
    வீணாகாமல்)இரண்டுமே ஒரு சாதனை நாயகனை பிரித்து காட்டும் அதிசயம்.



    வாசுவின் ஸ்பெஷல் ஆன காத்தவராயனில் சிவாஜி-சாவித்திரி அழகு இணையின் நிறைவேறுமோ எண்ணம்.ஜி.ராமநாதன் இசையில் டி.எம்.எஸ்-ஜிக்கி இணையில் .

    கிளி ,நிலவொளியில் நடிகர்திலகமாகும் அந்த எனதாசை வனிதாமணி
    கணத்தை தவற விடாமல், அந்த சைடு போஸில் ஜொலிப்பை ,கண் கொட்டாமல் பாருங்கள். இந்த ஸ்டில் மிகவும் பிரபலம்.சுவை கண்டால் மீறி இங்கே ஓடுவார் வரிகளிலும் அவ்வளவு அழகு. பாருங்க,பாருங்க,பார்த்து கிட்டே இருங்க.


    Last edited by Gopal.s; 2nd August 2014 at 08:56 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  15. Likes Russellmai liked this post
  16. #38
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எனதருமை பாடகர் பீ.பீ.ஸ்ரீநிவாஸ் ,நடிகர்திலகத்திற்கு பாடிய ஒரே டூயட்.குறிஞ்சி மலர் போல ,நினைவில் தங்கும். நான் சொல்லும் ரகசியம் படத்தில்.வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அடுத்து வந்ததாலோ என்னவோ,ஜி.ராமநாதனின் இன்பம் பொங்கும் சாயலில் வந்த பாடல் கண்டேனே உன்னை கண்ணாலே.
    இந்த படத்தில் ஹீரோ ரிக்ஷாகாரன் கனவு காணுவதாய் வருவதால் fantacy & realism சரிபாதியாய் கலந்த உடைகள்,அரங்க அமைப்பு.

    பீ.பீ.ஸ்ரீநிவாஸ் தன்னுடைய வழக்கமான பிட்ச் இல் இருந்து சிவாஜிக்காக ஒரு படி மேலேற ,சிவாஜி ஏ.எம்.ராஜா,எஸ்.பீ.பீ.,ஜேசுதாஸ் இவர்களுக்கு ,இவர்கள் குரலுக்காக மாற்றி அட்ஜஸ்ட் செய்து ,body language ,வாயசைப்பு,முகபாவம் எல்லாவற்றிலும் தத்ரூபமாய் குரலின் பிரதிபலிப்பை கொண்டு வருவார். அஞ்சலி இந்த காட்சியில் அழகு ,சிவாஜியுடன் மிக இசைவாக இருக்கும்.(சிவாஜி ,நடிகைகளுக்கும் அவர்கள் இயல்பு படி விட்டு,தான் வித்யாசபடுத்தி இணைவார்,இசைவார்)
    அந்த பாக்கெட் இல் கை விட்டு ,அடக்கி வாசிக்கும் வாயசைப்பு.ஹா ஹா என்று தொப்பி கழட்டும் ஸ்டைல்,நிலவென்று நீயே உனதல்லி நானே என்ற வரிகளில் ஆ ஆ ஆ என்று ஆமோதிக்கும் ஸ்டைல்,எனதாசை மானே என்று துள்ளி அருகில் விழும் துரு துரு ஸ்டைல் ,என் பிரியமான டூயட்.
    பீ.பீ.எஸ் இதை பற்றி பத்து நிமிடம் சிலாகித்தார்.

    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  17. Likes Russellmai liked this post
  18. #39
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கோபால்
    கண்டேனே உன்னைக் கண்ணாலே ... அருமையான பாடல் அட்டகாசமான தலைவரின் ஸ்டைல் என தூள் பரத்தும்... கனவையும் உண்மையாக சித்தரித்திருப்பார் இயக்குநர். ஒரு ரிக்ஷாகாரனின் கனவில் எந்த பரிமாணம் தென்படுமோ அதை அப்படியே காட்சிப்படுத்திய விதம்... அவ்வளவு பணக்காரத்தனத்திலும் அந்த ஷார்ட்ஸுடன் ரிக்ஷாகாரன் கனவு காணுவதாக வருவதும் அதை இயக்குநரின் நடிகர் அப்படியே பிரதிபலிப்பதும்... காட்சியில் உள்ள ஜீவனை வெளிக் கொண்டு வந்திருக்கும்..

    நல்ல சாய்ஸ்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  19. #40
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்னையின் ஆணை, வணங்காமுடி, காத்தவராயன் வரிசையில் குறவஞ்சியை விட்டு விட்டீர்களே.. இவையனைத்தையும் மிஞ்சி விடும்.. ஆனால் என்ன எல்லாம் மைனாவதி வரும் வரை தான்... மைனாவதியுடனான காதல் காட்சிகளில் தென்படும் ஒரு ஜீவன் சாவித்திரியுடனான காதல் காட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி விடும்..

    சில சமயங்களில் பாச மலர் மீது கோபம் வரும்... இதனால் பாதிக்கப் பட்டது நடிகர் திலகம் நடிகையர் திலகம் இணையில் வந்த தி பெஸ்ட் படமான எல்லாம் உனக்காக...

    நடிகர் திலகம் நடிகையர் திலகம் நடித்த பாடல் காட்சிகளில் என்னுடைய most favourite. அதுவும் பாடல் முடிய இருக்கும் நேரத்தில் காமிராவுக்கு முதுகைக் காட்டியவாறு நின்ற நிலையிலும் தன் முகத்தை கீழே இறக்கி அவளுடைய கால்களைப் பார்க்கும் காட்சி....

    இவரல்லவோ நடிகர் ....



    சும்மாவா சொன்னார்கள் திரை இசைத் திலகமென்று..

    அந்த உற்சாகத்தை மேண்டலினில் கொண்டு வந்து பாட்டைத் துவக்கியிருக்கும் இசையைக் கேளுங்கள்...
    Last edited by RAGHAVENDRA; 3rd August 2014 at 08:41 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  20. Likes Russellmai liked this post
Page 4 of 16 FirstFirst ... 2345614 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •