Page 47 of 59 FirstFirst ... 37454647484957 ... LastLast
Results 461 to 470 of 590

Thread: மறு வெளியீட்டிலும் மன்னரின் சாதனை

  1. #461
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    திருச்சி மாநகரின் கெயிட்டி
    திரையரங்கில் 26.03.2016 முதல் தினசரி 4 காட்சிகளாக
    நடிகர் திலகத்தின் அற்புதக்
    கலைப்படைப்பான " தங்கப்
    பதுமை" திரையிடப்பட்டுள்ளது.

    இன்று ஞாயிறு மாலைக் காட்சியில் ரசிகர்கள் சந்திப்பு
    நடந்த போது, திரையரங்க மேலாளர், திரையரங்க ஆபரேட்டர், திரையரங்க
    ஊழியர்கள் மற்றும் இந்தத் திரைப்படத்தின் விநியோகஸ்தர் ஆகியோருக்கு
    ரசிகர்களின் சார்பாக மரியாதை
    செலுத்தி கௌரவம் செய்யப்பட்டது.

    தகவலுக்கும்,நிழற்படங்களுக்கும் நன்றி:

    திரு.S.அண்ணாதுரை,
    அகில இந்திய சிவாஜி மன்ற
    சிறப்பு அழைப்பாளர்.
    ஆதவன் ரவி அவர்களின் பதிவு 27.03.2016 )
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  4. #462
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    இன்றுமுதல் கோவை டிலைட்டில்
    "தெய்வமகனின்"
    நீதி
    திரைப்படம் திரையிடப்படுகிறது.

    (செந்தில்வேல் அவர்களின் பதிவு 30.10.2015 )
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  6. #463
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    14.02 2014. அன்று கோவை ராயலில் நீதி திரையிடப்பட்டபோது ...

    (செந்தில்வேல் அவர்களின் பதிவு 30.10.2015 )
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  8. #464
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    "தங்கப் பதுமை" நாயகன்,
    நேற்று ( 27.03.2016 ) ஞாயிறு
    மாலைக் காட்சியில் திருச்சி
    கெயிட்டி திரைக்குத் தந்த
    திருமுக தரிசனமும்,

    அற்புதரை மறவாத அன்பு
    நெஞ்சங்கள் அங்கே திரண்டு
    வந்து தலைவன் மீது காட்டிய
    கரிசனமும்.

    ஆனந்தத் தகவலும்,
    அழகிய நிழற்படங்களும்:
    திரு.S.அண்ணாதுரை,
    அகில இந்திய சிவாஜி மன்ற
    சிறப்பு அழைப்பாளர்.

  9. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  10. #465
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #466

  12. #467
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    ஆர்ப்பரிக்கும் அலை ஓசை
    இம் மக்கள் கூட்டத்தை
    விடவாபெரிது
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  13. #468
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    குடந்தை எம்எஸ்எம் திரையரங்கில் சிவகாமியின் செல்வன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் வைத்துள்ள பேனர்.

    குடந்தை சிவாஜி சேகர் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  14. #469
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நமது மதுரை சிவா மூவீஸாரின் புதிய பரிமாணத்தில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட சிவகாமியின் செல்வன் திரையில் ஒளி வீசும் கண்கொள்ளாக் காட்சி மனதைக் கவர்கிறது. திரையில் அதன் தோற்றத்தை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு அதன் சிறப்பை எடுத்துரைக்கும் முகமாக சில நிழற்படங்கள் இங்கு பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இந்தத் துல்லியம் இப்படம் திரையிடும் அனைத்துத் திரையரங்குகளிலும் அனைத்துப் பிரதிகளிலும் சமமாக இருப்பது இதன் சிறப்பு.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  15. #470
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    sivagaamiyin selvan - warm arrival !!!

    அனைவரும் எதிர்பார்த்திருந்த நடிகர் திலகம் இரு வேடங்களில் பிரமாதபடுத்திய சிவகாமியின் செல்வன் டிஜிட்டல் வடிவில் நேற்றுமுதல் தமிழகத்தில் சுமார் 27 திரை அரங்குகளில் ( எண்ணிக்கை சரிதானே? முரளி ஸ்ரீநிவாஸ் சார் )மறுவெளியீடு கண்டுள்ளது.

    புதிய திரைப்படங்கள் பல கடைசி நிமிடத்தில் வெளிவந்தமையால் கோவை, திருநெல்வேலி நாகர்கோயில் வட ஆற்காடு, தென் ஆற்காடு, பாண்டிச்சேரி திருச்சி ஆகிய ஊர்களில் சிவகாமியின் செல்வன் திரைக்கு வரவில்லை என்பது ஒரு பக்கம் வருத்தத்திற்கு உரிய செய்தி என்றாலும், விநியோகஸ்தர்கள் பலரும் தங்களுடய இயலாமையை வருத்தத்துடன் தெரிவித்து கூடிய விரைவிலையே திரை அரங்கு தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளனர்.

    ஆகையால் அதிக திரை அரங்குகள் வரும் நாட்களில் கிடைக்கும் என்று தாராளமாக நம்பலாம் !

    இனி சிவகாமியின் செல்வன் வியாபார நிலவரம் !

    சென்னையில் சிறந்த முறையில் ஒரு opening சிவகாமியின் செல்வன் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.

    குளிர் சாதன வசதி இல்லாத ஸ்ரீனிவாச திரை அரங்கில் நேற்று மதிய காட்சிக்கு சுமார் 200 உக்கும் அதிகமான மக்கள் திரளாக வந்திருந்து கண்டுகளித்துள்ளது highlight !

    ஸ்ரீனிவாச திரை அரங்கை பொருத்தவரை வெள்ளிகிழமை அன்று வெளியாகும் திரைப்படம் ..அது புதியதொ ..பழயதோ...60 முதல் 70 டிக்கெட் மட்டுமே போகும்....திரை அரங்கு நிர்வாகிகள் அனைவரும் மிகவும் மலைப்பில் உள்ளனர்...!

    காரணம் இவர்களும் ஒரு சிலரை போல சிவாஜி படத்திற்கு கூட்டம் வராது என்ற காலம் காலமாக பரப்பியுள்ள பொய் செய்தியை நம்பியவர்களே !

    ஆனால் நேற்று ...நடந்ததோ ....உண்மையான ஒரு நிகழ்வு....இதில் ஒரு சாரர் தியேட்டரை சேர்ந்தவர்கள்....போட்டாதானே தெரியும்...கூட்டம் வருதா இல்லையான்னு...சொம்மா இஷ்டத்துக்கு கதகட்டகூடாதுபா ..நம்ப தியேட்டர்ல எப்பயாவது 80 ஆடியன்ஸ் மேல வெளிகிழமா பாத்ருகொமா சொல்லு... இன்னிக்கிதான்யா களகட்டுது ...செல்வத்துக்கு ( கான்டீன் வைத்துள்ளவர்) இனிக்கி ஜாக்பாட் போ ! ...என்று அவர்களுக்குள்ளயே கூறியும் உள்ளனர் !

    கர்ணன் , ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் வெளியிட்ட திரு சொக்கலிங்கம் அவர்கள் ஸ்ரீனிவாச திரை அரங்கில் சென்று அங்கு வந்த மக்கள் கூட்டத்தை பார்த்து ...இடைவேளை வரை திரை அரங்கில் படமும் பார்த்து நம்முடைய சிவா மூவீஸ் திரு சந்திரசேகர் அவர்களை தொடர்புகொண்டு " சந்திரசேகர் சார் ...நீங்க ஜெயிசுடீங்க ! என்று அன்புடன் வாழ்தியுள்ளது கூடுதல் செய்தி !

    நேற்று மூன்று காட்சிகள் முடிய ஸ்ரீனிவாச திரை அரங்கில் 600 உக்கும் அதிகமான மக்கள் கண்டுகளித்துள்ளது ....அந்த திரை அரங்கில் கடந்த பல வருடங்களில் நடக்காத ஒரு புதிய சாதனையாக திகழ்கிறது !

    அடுத்து பெரம்பூர் மகாலட்சுமி திரை அரங்கம் - காலை முதலே திரை அரங்கு களைகட்ட துவங்கியுள்ளது நேற்று....சிவகாமியீன் செல்வன் அல்லவா !

    நேற்று இரவு காட்சி வரை சுமார் 780 உக்கும் மேற்பட்ட மக்கள் கண்டுகளித்துள்ளனர் - இங்கும் சிவகாமியின் செல்வன் தினசரி 3 காட்சிகள் !

    Ags திரை அரங்கை பொருத்தவரை மட்டும் சுமாரான வரவேற்ப்பு மட்டுமே சிவகாமியின் செல்வன் கண்டுள்ளது. எனினும் டிக்கெட் விலை 150 என்பதை கணக்கில் எடுத்தால் கணிசதிர்க்கும் கூடுதலான வசூல் என்றே விநியோகஸ்தர்கள் கூறியுள்ளார்கள். அதே சமயம் புதிய திரைப்படத்திற்கு வந்துள்ள மக்களை காட்டிலும் சிவகாமியின் செல்வனுக்கு இரண்டு மடங்கிற்கு மேல் கூடுதலாக வந்துள்ளார்கள் என்று ஒப்பீடு அவர்களே செய்து குறிப்பிட்டும் உள்ளார்கள். போஸ்டர் கொஞ்சம் சீக்கிரம் ஓட்ட சொல்லுங்க...ஜனங்களுக்கு தெரியனும்லே என்று திரை அரங்கு நிர்வாகிகள் கூறியுள்ளார்கள் ! .

    அங்கு சிவகாமியின் செல்வன் போஸ்டர் திரைப்படம் வெளியான பிறகும் ஏன் ஓட்டுபவர்கள் இன்னும் ஒட்டாமல் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்பது விளங்கவில்லை !

    மொத்தத்தில் கிடைத்த விவரங்களை வைத்து பார்க்கும்போது....limited ஏரியாவில் மட்டுமே வெளியாகி இருந்தாலும் கிட்டத்தட்ட 98.5% திரை அரங்குகளில் சிவகாமியின் செல்வனுக்கு மக்கள் ரிலீஸ் செய்த புதிய திரைப்படங்களை விட இரண்டு மடங்கு கூடுதலாக நல்ல வரவேற்ப்பு கொடுத்துள்ளார்கள் என்பது மட்டும் உறுதி செய்துள்ளனர் திரைப்படத்தை விநியோகம் செய்துள்ளது விநியோகஸ்தர்கள்.

    தரத்திலும் டிஜிட்டல் செய்யப்பட்ட விதத்திலும் சிவகாமியின் செல்வன் மிக மிக சிறந்த முறையில் உள்ளதாக மக்கள் feeback கொடுத்துள்ளது அனைவரையும் உற்சாகபடுத்தி உள்ளது !

    மற்ற ஏரியாக்களின் தகவல்களை திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளை சுந்தர்ராஜன் சார் அவர்களும் பகிர்ந்துகொள்ள விரைவில் வருகிறார்கள் !

    இது ஒருபுறம் இருக்கட்டும்....இனியாவது பொய் பேசும் சில விநியோகஸ்தர்கள் மாறுவார்களா தங்கள் காழ்புணர்ச்சியை மாற்றிகொள்வார்களா என்ற கேள்வி எழாமலும் இல்லை !

    Rks
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 47 of 59 FirstFirst ... 37454647484957 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •