Page 45 of 59 FirstFirst ... 35434445464755 ... LastLast
Results 441 to 450 of 590

Thread: மறு வெளியீட்டிலும் மன்னரின் சாதனை

  1. #441
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #442
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. Likes Russellmai liked this post
  6. #443
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. Likes Russellmai liked this post
  8. #444
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. Likes Russellmai liked this post
  10. #445
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. Likes Russellmai liked this post
  12. #446
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  13. Likes Russellmai liked this post
  14. #447
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  15. Likes Russellmai liked this post
  16. #448
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தை வைத்து படமெடுத்த 90% சதவிகித தயாரிப்பாளர்கள் முதல் வெளியீட்டிலேயே லாபம் கண்டு அவரை திரும்ப திரும்ப வைத்து படமெடுத்தவர்கள்.இது நடிகர்திலகத்தின் வெற்றி விகிதம்,ஒரு முறை எடுத்தவர்கள் திரும்ப திரும்ப எத்தனை முறை எடுத்தனர் என்ற கணக்கை போட்டாலே தெரியும்.(உ.ம் -பக்ஷிராஜா,வேலுமணி,பீ.எஸ்.வீரப்பா,பந்துலு,ஏ.பீ .நாகர ாஜன்,ஸ்ரீதர்,ஜெமினி,ஏ.வீ.எம்,பாலாஜி, முக்தா,ஏ.சி.டி,பீ.மாதவன் என்று பெரும் படை ,பல படங்கள்)


    ஆடி பாடி கதிரறுப்பார் ஆனந்தத்தோடு. ஆனால் அறுத்த கருது போற இடம் வேறொரு வீடு என்பது போலத்தான் மறு வெளியீடுகள்.தயாரிப்பாளர் துண்டை காணோம் துணியை காணோம் என்று போன பிறகு ,மற்றவர் அடிமாடு விலையில் வாங்கி நடத்தும் முறையில்லா வியாபாரம். எதற்கும் புள்ளி விவரமோ,நிரூபணமோ செய்ய முடியாத வெற்று கூச்சல்களே.



    நடிகர்திலகம் படங்கள் மட்டுமே போட்டிக்காக இல்லாமல்,இயல்பாக பொது மக்கள் பார்த்து ஓடிய படங்கள். அவருக்கு அரசியல் சார்ந்த உதவிகளோ, கைகாசு போட்டு படத்தை ஓட வைக்க வேண்டிய அவசியமோ அல்லது அதை மாதிரி செய்து அவரை தூக்கி பிடிக்க பார்க்கும் போலி ரசிகர் படைகளோ இருந்ததில்லை. இதை பெருமையாகவே கூறி கொள்ளலாம்.



    இப்போதுதான் தெள்ளதெளிவாக முரளி சார் மறு வெளியீட்டு சாதனைகளையும் உரைத்து, யார் வசூல் சக்ரவர்த்தி என்று நிருபித்து விட்டாரே?



    மறு வெளியீடுகளிலும் புதிய பறவைக்கும்,சிவந்த மண்ணுக்கும், பராசக்திக்கும்,கட்டபொம்மனுக்கும்,வசந்த மாளிகைக்கும் சென்னையில் நான் மாணவனாக இருந்த போது (1976-1984) யார் படத்திற்கும் எந்த காலத்திலும் கண்டதேயில்லை. புதிய பறவை பைலட் திரையரங்கில் 1977 வாக்கில் மறு வெளியீடு கண்டு ,கிட்டத்தட்ட சென்னை நகரை நான்கு வருடங்கள் தொடர்ந்து, பல திரையரங்குகள் கண்டு ஆண்டது வரலாறு.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  17. Likes Russellmai liked this post
  18. #449
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    திரண்ட மக்கள்தலைவரின் இதயங்கள், மிரண்ட மதுரை சென்ட்ரல் தியேட்டர்.

    கடந்த 11.03.2016 வெள்ளியன்று மதுரை சென்ட்ரல் திரையரங்கில் மக்கள்தலைவரின் காலத்தால் அழியாத மாபெரும் காதல் காவியம் வசந்தமாளிகை திரைப்படம் திரையிடப்பட்டது.
    நாம் ஏற்கனவே கூறியது போல் மக்கள்தலைவரின் படங்களை திரையிட பல விநியோகஸ்தர்கள் சென்ட்ரல் தியேட்டர் நிர்வாகத்திடம் தேதி கேட்டுள்ளனர். அதில் கலைமதி சார்பில் வசந்தமாளிகை திரையிட தியேட்டர் நிர்வாகம் அனுமதியளித்தது. பட விளம்பரத்திற்கு போதுமான சுவரொட்டிகள் இல்லை என்பதனால் இருக்கின்ற சுவரொட்டிகளை வைத்து படத்தை திரையிட போவதாக தகவல் வந்தது. உடன் தியேட்டர் நி்ர்வாகத்திடம் முறையிடப்பட்டது, சரியாக விளம்பரம் செய்யாமல் படத்தை திரையிட்டு கூட்டம் வரவில்லையென்றால் சிவாஜி படம் சரியாக போகவில்லை என்றால், ரசிகர்களாகிய எங்களது உழைப்பு வீணாகிப் போகும். எனவே, எல்லா படத்திற்கும் செய்வது போல் விளம்பரம் செய்யாவிட்டால் நாங்கள் எப்படி ரசிகர்களிடம் எடுத்துச் செல்வது என்று கூறினோம். தியேட்டர் நிர்வாகம் உடனே தலையிட்டு விநியோகஸ்தரிடம் நன்றாக விளம்பரம் செய்யவேண்டும் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள், எனவே நன்றாக விளம்பரம் செய்யுங்கள் என்று கூறினார். மறுநாள் நானும் (சுந்தராஜன், பிரபு வெங்கடேஷ், பழனிச்சாமி, பச்சைமணி, பாண்டி, ராஜன் ஆகியோர் விநியோகஸ்தரை சந்தித்து பேசினோம். ஆனால், அதற்கு முன்னதாக இரவோடு இரவாக புதிய சுவரொட்டிகள் தயாராகி அதிகாலை வந்து விட்டது என விநியோகஸ்தர் எங்களிடம் காட்டினார். மேலும் தியேட்டர் நுழைவு வாயிலில் வைக்கும் பேனர் ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு அலங்கார் தியேட்டரில் வைத்தது அந்த பேனரை இங்கு வைப்பதாக கூறுகிறார்கள் அதன் அளவு வேறு சென்ட்ரல் தியேட்டர் அளவு வேறு என்று கூறியதும், வேறு புதிய பேனர் வைத்து விடுகிறோம் என்று கூறினார்.
    ஆண்டாணடு காலமாக சிவாஜி படமென்றால் விநியோகஸ்தர்கள் போஸ்டர் ஒட்டாமல் மக்களுக்கு தியேட்டரில் சிவாஜி படம் ஓடுகிறது என்பதே தெரியாத அளவிற்கு தான் விளம்பரம் இருக்கும்.
    விநியோகஸ்தர் சொன்னது போல் போஸ்டர் விளம்பரம் புதன் இரவு நன்றாக செய்யப்பட்டது. இதிலும் சோதனை என்னவென்றால் தேர்தல் நடத்தை விதியைக் காட்டி போஸ்டர் ஒட்டக்கூடாது என்று கூறி போஸ்டர் ஒட்டியவர்களிடமிருந்து போஸ்டர், ஏணி மற்றும் சைக்கிள் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொண்டு காலையில் தான் கொடுத்தார்கள். விநியோகஸ்தர் வியாழன் மாலை மலர் நாளிதழில் விளம்பரம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ரசிகர்களின் கொண்டாட்டம் புதன் கிழமையிலிருந்தே துவங்கிவிட்டது. அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் மாபெரும் இரண்டு போஸ்டர்கள், பிரபு வெங்கடேஷ் மற்றும் சிவாஜி குமார், சிவாஜி ராஜன் சார்பில் வசந்த மாளினை சாதனை பேனர் வைக்கப்பட்டது, சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் பிரமாண்ட போஸ்டர், மதுரை நகர் சிவாஜி மன்றத்தின் போஸ்டர்கள் மற்றும் அவனியாபுரம் சிவாஜி ரசிகர்கள் சார்பில் மாபெரும் பேனர் என தியேட்டர் திருவிழாக் கோலம் பூண்டது. நமது மக்கள்தலைவரின் இதயங்கள் செய்யும் அலங்காரங்களைப் பார்ப்பதெற்கென்ற ஒரு கூட்டம் வரும், அது இந்தப் படத்திற்கும் தொடர்ந்தது.
    படம் வெளியான வெள்ளியன்று காலை காட்சியிலேயே வசூல் மழை பொழிய துவங்கி விட்டது. ஆம் சில மாத காலமாக எந்தப் படம் போட்டாலும் தியேட்டரில் வசூல் சரியாக இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கோடையில் கோடை மழை வருகிறதோ இல்லையோ நமது தலைவரின் படத்திற்கு வசூல் மழை வந்து விட்டது. வெள்ளியன்று படத்தின் வசூல் 17,000 ஐ தாண்டியது. விழாக்காலம் இல்லாமல் திரையிடப்படும் எந்தப்படமும் மறுநாள் சனியன்று வசூல் 13,000 ம் தான் வரும் ஆனால் வசந்தமாளிகை படத்திற்கு மறுநாளும் வசூல் 15,000 ம் ஆனது. மறுநாள் ஞாயிறு தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தது. ஞாயிறும் வந்தது,
    ஞாயிறு காலை, மதியக் காட்சியும் வசூல் அட்டகாசமாக இருந்தது. மாலைக் காட்சிக்கு மாலை 5 மணியிலிருந்தே ரசிகர்கள் குவியத் தொடங்கினர். சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற சிவகாமியின் செல்வன் டிரைலர் வெளியீட்டு விழாவின் கூட்டத்தைப் பார்த்து வியந்தவர்களுக்கு மற்றொரு வியப்பாக இருந்தது கூட்டம். தியேட்டர் நுழைவு வாயில் முழுவதும் மாநாட்டிற்கு வந்த கூட்டம் போல்
    ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே டிக்கெட் கொடுக்கப்பட்டது. பழைய ரசிகர்கள் நிறைய பேர் மீண்டும் வந்திருந்தனர், ஒவ்வொரு படத்திற்கும் பல புதிய ரசிகர்களும் பழைய ரசிகர்களும் அதிகமாகிக் கொண்டே வருவதைப் பார்க்க எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அன்று மதியம் சன் டிவியில் தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டதால் பாதி ரசிகர்கள் வரவில்லை என்பது எங்களுக்கு சந்தோசமாக இருந்தது. ஏனென்றால் அவர்களும் வந்திருந்தால் தியேட்டரில் நிற்பதற்கு கூட இடம் இருக்காது.
    வெளியில் நின்றிருந்த எங்களுக்கு அரங்கிற்குள் இருந்து பயங்கரச் சத்தம் வர தியேட்டருக்கும் ஓடினோம். ஆம் நாங்கள் எதிர்பார்த்தது போல் நமது மக்கள்தலைவரின் அறிமுகக் காட்சி, படம் வெளிவந்த போது இப்படி ஒரு அலப்பரை இருந்திருக்குமா என்பது சந்தேகமே.
    அடுத்து ஏன் ஏன் பாடல் தியேட்டரில் ஒருவர் கூட இருக்கையில் இல்லை வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரும் ஆடித் தீர்த்து விட்டனர். ஒட்டு மொத்த கூட்டமும் ஆடினால் தியேட்டர் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். அதிலும் தலைவர் அதில் நான் சக்கரவர்த்தியடா என்று சொல்லும் போது, நாங்கள் உள்ளே வெடி போடக்கூடாது எவ்வளவோ தடுத்திருந்தும் ரசிகர்கள் அரங்கினுள் வெடியை வைத்தனர். அடுத்து குடிமகனே பாடல் சொல்லவும் வேண்டுமா ரசிகர்களின் குதுாகலத்திற்கு. இடைவேளையில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஏன் ஏன் பாடல் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. மீண்டும் அதே ஆட்டம் ரசிகர்கள் சோர்வடையவே இல்லை. ஆம் நம் தலைவரின் முகம் தான் நமது சத்து டானிக் ஆயிற்றே, அவரைப் பார்க்க பார்க்க உடல், மனது எல்லாம் புத்துணர்ச்சி பெறுகிறதே.
    இன்னும் முழுவதும் எழுதினால் இதைப் படிப்பவர்கள் மனம் புண்படும், ஆம், நாம் இந்தக் காட்சியைக் காண முடியவில்லையே என்று எனவே இத்தோடு நிறுத்தி விட்டு வசூல் சக்கரவர்த்தியின் வசூல் விபரங்களுக்கு வருகிறேன்.
    ஞாயிறு மாலைக் காட்சி வசூல் 14,700 சில மாதங்களாக சென்ட்ரல் ஞாயிறு மாலைக்காட்சியின் வசூல் 10,000 ஐ தொடுவதே சந்தேகமாக இருந்த நிலையில் 15,000 ஐ நெருங்கியது தியேட்டர் நிர்வாகம் தொடங்கி விநியோகஸ்தர் வரை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஞாயிறு இரவுக் காட்சியும் சேர்த்து மொத்த வசூல் 25,000 ஐ நெருங்கியது.
    திங்கட்கிழமையும் வசூல் குறையாமல் நின்று கொண்டிருக்கிறார் நமது மக்கள்தலைவர், ஆம் திங்கள் மாலைக் காட்சி வரை வசூல் 10.000 ம். திங்கட்கிழமை மாலைக்காட்சி வரை மொத்த வசூல் 67,000. இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் சிலர் சிவா மூவீஸ் சார்பில் போடப்படும் படங்களுக்கு மட்டும் தான் அவர்கள் வசூல்சக்கரவர்த்தி சிவாஜி என்று விளம்பரம் செய்வார்கள் மற்ற விநியோகஸ்தர்கள் செய்யமாட்டார்கள் என்று பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக படத்தை திரையிட்ட கலைமதி கம்பைன்ஸார் வசூல் சக்கரவர்த்தி சிவாஜி விஜயம் என்று படத்திற்கு விளம்பரம் செய்திருந்தார் அவருக்கு நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.
    திரைப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து மக்கள்தலைவரின் புகழ் காக்க எனக்கும் (சுந்தராஜன்) பிரபு வெங்கடேசிற்கும் ஒத்துழைப்புக் கொடுத்த அகில இந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ரமேஷ்பாபு, பழனிச்சாமி, சோமசுந்தரம், சிவாஜி சமூகநலப் பேரவையைச் சேர்ந்த பாண்டி, சிவாஜி செல்வம், பச்சைமணி, மதுரை நகர் சிவாஜி மன்றத்தைச் சேர்ந்த ஜோதிபாஸ்கரன், சிவாஜி வெங்கிடு மற்றும் சிவாஜி ராஜன், சிவாஜிகுமார் அவனியாபுரத்தைச் சேர்ந்த குப்புசாமி ஆகியோர் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  19. #450
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like



    (திரு சுந்தரராஜன் அவர்களின் பதிவலிருந்து
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 45 of 59 FirstFirst ... 35434445464755 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •