Page 4 of 59 FirstFirst ... 234561454 ... LastLast
Results 31 to 40 of 590

Thread: மறு வெளியீட்டிலும் மன்னரின் சாதனை

  1. #31
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சந்திப்பு - நான்காம் நாள் - மதுரை

    நான்காம் நாளான நேற்று மீண்டும் மக்கள் ஆதரவோடு சென்ட்ரலில் மறு வெளியீடு கண்ட பழைய படங்களின் வசூலில் முன்னணி பெற்றிருக்கிறது. நான்கே நாட்களில் சுமார் ஐம்பத்தி ஆறாயிரம் ரூபாய்க்கும் அதிகமாகப் வசூலித்து நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் பவரை மீண்டும் பறை சாற்றியிருக்கிறது சந்திப்பு.

    பிற ஊர் செய்திகள்

    கோவையில் டிலைட் திரையரங்கில் தங்கப்பதக்கம் பெற்ற வெற்றியை தொடர்ந்து சென்ற வெள்ளிக்கிழமை முதல் புதிய பறவை திரையிடப்பட்டு பெரும் வரவேற்ப்பை பெற்றிருக்கிறது, ஞாயிறு மாலை படத்திற்கு வந்த கூட்டத்தையும் வசூலையும் பார்த்த அரங்க நிர்வாகத்தினர் அடுத்தடுத்து நடிகர் திலகத்தின் படங்களை வெளியிட முடிவு செய்திருக்கின்றனர். அதன்படி விரைவில் டிலைட் திரையரங்கில் எங்க மாமா ஹரிசந்திரா போன்ற படங்கள் திரையிடப்பட்ட உள்ளன.

    நெல்லை சென்ட்ரலில் பராசக்தி ராஜா மற்றும் எங்கள் தங்க ராஜாவை தொடர்ந்து சென்ற வெள்ளி முதல் தியாகம் திரையிடப்பட்டு வெற்றி கொடி நாட்டி வருகிறது. முந்தைய படங்களைப் போலவே இதுவும் வெளியிட்டவருக்கு கணிசமான தொகையை பெற்று தரும் என நெல்லை தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன.

    அன்புடன்

  2. Thanks Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #32
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Great and good news murali sir
    gkrishna

  5. #33
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சந்திப்பு

    மதுரை சென்ட்ரலில் இன்றோடு ஒரு வாரத்தை நிறைவு செய்த சந்திப்பு இன்று இரவு காட்சியோடு சிறப்பான வசூலைப் பெற்று ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது. ஒரே வாரத்தில் ரூபாய் 80 ஆயிரத்திற்கும் அதிகமான வசூலைப் பெற்று சென்ற மாதம் இதே போல் வெற்றிக் கொடி நாட்டிய சங்கிலி வசூலையும் தாண்டியிருக்கிறது. முன்பே குறிப்பிட்டது போல் அரங்க நிர்வாகத்தினரும், வெளியிட்டாளரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்கள் இது போன்ற சிறப்பான வரவேற்பை பெறுவதால் இனி வரும் மாதங்களில் நடிகர் திலகத்தின் படங்கள் அதிகமாக வெள்ளித்திரைகளை அலங்கரிக்கும். செய்திகளை துல்லியமான புள்ளி விவரங்களோடு பகிர்ந்து கொண்ட நண்பர் சந்திரசேகர் அவர்களுக்கு நன்றி.

    நெல்லை சென்ட்ரலில் மக்கள் ஆதரவோடு வெற்றி நடை போட்ட தியாகம் இன்றோடு ஒரு வாரத்தை நிறைவு செய்கிறது. தகவலளித்த நண்பர் ராமஜெயம் அவர்களுக்கு நன்றி.

    கோவையில் புதிய பறவை வெற்றி சிறகடித்து பறந்த செய்தியை பகிர்ந்து கொண்ட நண்பர் ரமேஷ் பாபு அவர்களுக்கு நன்றி.

    சந்தோஷ செய்திகள் தொடரும்.

    அன்புடன்

  6. Thanks Russellmai thanked for this post
  7. #34
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    மதுரை சென்ட்ரலில் சந்திப்பு திரைப்படத்திற்காக வைக்கப் பட்டிருந்த பேனர் ... நிழற்படம் உபயம் முகநூல் நண்பர் சுந்தரராஜன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #35
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சூரியன் காலையில் உதித்தது மாலையில் மறைந்தது என்று சொன்னால் என்ன தோன்றும்? அது போன்றுதான் வசந்த மாளிகை படத்திற்கு மாபெரும் வரவேற்பு, பிரமாதமான வசூல் என்று சொல்வதும். இன்றல்ல நேற்றல்ல என்றென்றும் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் இதுதான் நிலைமை. அதற்கு மீண்டும் கோவை மாநகரம் சாட்சியாக மாறியிருக்கிறது.

    சென்ற வருடம் கோவையில் நான்கு திரையரங்குகளில் வெளியாகி பெரு வெற்றி பெற்று வசூல் சாதனை கண்ட அழகாபுரி சின்ன ஜமீன் ஆனந்த் 1-ந் தேதி வெள்ளி முதல் கோவை ராயலில் தன் ஆட்சியை மீண்டும் ஆரம்பித்தார். ஆடி வெள்ளி, ஆடிப்பெருக்கு மற்றும் தென் மேற்கு பருவகாலம் காரணமாக கேரளத்தில் கொட்டும் பேய் மழை அதன் எல்லைகளை விரித்து அண்டையில் அமைந்துள்ள கோவை மாநகரையும் வெகுவாக நனைத்துக் கொண்டிருக்க அத்தனையும் தாண்டி முதல் இரண்டு நாட்களில் ரூபாய் இருப்பத்தையாயிரத்திற்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது[above Rs 25,000/-].

    இன்றும் சரியான கூட்டம். மாலைக்காட்சிக்கு பெரிய வரவேற்பு. மொத்த டிக்கெட்டுகளில் 40 டிக்கெட்டுகள் மட்டுமே நின்று போயினவாம். அரங்கினுள்ளே அமர்க்களமாக இருந்தது என்று செய்தி. அரங்க வாசலிலே எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.

    தகவல்களை பகிர்ந்து கொண்ட கோவை நண்பர் சக்திவேல், வடிவேல் மற்றும் புகைப்படங்களை அனுப்பிய நண்பர் Dr. ரமேஷ் ஆகியோருக்கு நன்றி.





    அன்புடன்

  9. #36
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கோவை ராயலில் அழகாபுரி சின்ன துரை ஆனந்த் அவர்களின் வெற்றி உலா தொடர்கிறது. இன்று வரை மொத்த வசூல் ரூபாய் 53 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது.

    நடிகர் திலகத்தின் பல்வேறு படங்களின் வெற்றி அணிவகுப்பு தொடர்கிறது.

    வரும் ஆகஸ்ட் 15 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரலில் சிபிஐ ஆபிசர் ராஜன் வெற்றி பவனியை துவக்குகிறார். தங்க சுரங்கம் சென்ட்ரலில் ஆகஸ்ட் 15 முதல் வெளியாகிறது.

    அதே ஆகஸ்ட் 15 சென்னை மகாலட்சுமியில் Dr ரமேஷ் வெற்றி விஜயம். ஆம், அண்ணன் ஒரு கோவில் வெளியாகிறது.

    அதே ஆகஸ்ட் 15 அன்று கோவை டிலைடில் நடிகர் திலகம் இரட்டை வேடங்களில் நடிக்கும் சந்திப்பு ரிலீஸ்.

    அதே ஆகஸ்ட் 15 அன்று நெல்லை சென்ட்ரலில் நடிகர் திலகம் வேடங்களில் ஜொலித்த வெள்ளை ரோஜா வெளியாகும் என தெரிகிறது.

    சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

    அன்புடன்

  10. Thanks Russellmai thanked for this post
  11. #37
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    மற்றொரு மறு வெளியீட்டு செய்தி

    வரும் ஆகஸ்ட் 15 முதல் திருச்சி கெயிட்டியில் நடிகர் திலகம் இரட்டை வேடங்களில் தூள் பரத்திய வெள்ளை ரோஜா வெளியாகிறது.

    கோவை ராயலில் இன்று மாலைக் காட்சியோடு மொத்த வசூல் ரூபாய் எழுபதாயிரத்தையும் தாண்டி வெற்றி நடை போடுகிறது காலத்தை வென்ற காதல் காவியம் வசந்த மாளிகை.

    சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

    அன்புடன்

  12. #38
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கோவை ராயலை கலக்கிய அழகாபுரி சின்ன ஜாமீன் ஆனந்த் ஒரு வாரத்தில் nett மட்டும் Rs 80 ஆயிரத்தை தாண்டியும் மொத்த nett வசூலையும் விட gross வசூல் அதற்கும் சில ஆயிரங்கள் தாண்டி ஒரு சாதனை புரிந்துள்ளார்.

    அதே போன்று நாம் முன்னரே இங்கே பகிர்ந்து கொண்ட செய்தியான நெல்லை சென்ட்ரலில் தியாகம் ஒரு வாரம் ஓடிய போது வெளியீட்டாளர் பங்கு மட்டும் ரூபாய் 12 ஆயிரத்திற்கும் அதிகமாக (Above Rs 12,000/-) பெற்று தந்திருக்கிறது.

    சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

    அன்புடன்

  13. #39
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    மறு வெளியீடுகளில் நடிகர் திலகம் தமிழகமெங்கும் மீண்டும் ஒரு கலக்கு கலக்குகிறார் என்பதை அனைத்து செய்திகளும் உறுதிப்படுத்துக்கின்றன.



    திருச்சி செய்திகளை நண்பர் ராமச்சந்திரன் பதிவிட்டிருக்கிறார். அவர் இன்று திரையிடப்பட்டிருக்கும் வெள்ளை ரோஜா படத்திற்கு காலை, மதியம் மற்றும் மாலைக் காட்சிகளின் விவரங்களை பதிவிட்டிருந்தார். இரவுக் காட்சிக்கு 186 டிக்கெட்டுகள் போயிருக்கிறது. இன்று மொத்தத்தில் பார்த்த மக்களின் எண்ணிக்கை 697. கெயிட்டி திரையரங்கில் முதல் நாள் 700 பேர்கள் படம் பார்த்தது 7 வருடங்களுக்கு பிறகு இதுதான் முதல் முறை.

    மதுரை சென்ட்ரலில் தங்க சுரங்கம் செய்திகளை நண்பர் CS பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதை வசூல் விவரங்களாக பார்த்தோமென்றால் மாலைக் காட்சியோடு ருபாய் 13 ஆயிரத்தை தாண்டிய படம் இரவுக் காட்சியோடு ரூபாய் 17 ஆயிரத்தை தொட்டிருக்கிறது. மழை நாளில் வந்த இந்த கூட்டம் (கிட்டத்தட்ட ஞாயிறுக்கிழமை போல) பெரிய சாதனை. பெண்கள் எண்ணிக்கையை பற்றி குறிப்பிட்டார். இன்று கடைசி ஆடி வெள்ளி. அப்படியிருந்தும் இப்படி பெண்கள் கூட்டம், அதுவும் ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நிறைந்த ஒரு நாளில் இத்தனை கூட்டம்.

    சென்னையில் மகாலட்சுமி அரங்கில் இன்று முதல் Dr. ரமேஷ் விஜயம். மகாலட்சுமி அரங்கில் இப்போது மெயின் படம் மூன்று காட்சிகளுக்கு பதிலாக இரண்டு காட்சிகள் மட்டுமே திரையிடப்படுகிறது. இரவுக் காட்சியில் வேறு படம். எத்தனை காட்சி இருந்தால் என்ன, நடிகர் திலகம் அதிலும் சாதனை படைப்பவர்தானே. இன்று அண்ணன் ஒரு கோவில் திரைப்படத்தை இரண்டு காட்சிகளும் சேர்த்து கண்டு களித்த மக்களின் எண்ணிக்கை 646.மொத்த வசூல் ரூபாய் 13 ஆயிரத்திற்கும் அதிகம் [more than Rs 13,000/-]. இது சாதனை என்று சொல்லவும் வேண்டுமோ!

    அரங்க உரிமையாளர் சற்று குழப்பம் அடையாமல் இருந்திருந்தால் கோவையிலும் நமது படம் கொடி நாட்டியிருக்கும். இந்த வாரம் போனால் என்ன? if all goes well, அடுத்த வெள்ளி ஆகஸ்ட் 22 முதல் கோவை ராயலில் சந்திப்பு திரையிடப்படும் என தகவல்.

    நாளை முதல் அருப்புக்கோட்டையில் சந்திப்பு திரையிடப்படுகிறது.

    சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்

    அன்புடன்

  14. Likes Russellmai liked this post
  15. #40
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சென்னை மகாலட்சுமி

    அண்ணன் ஒரு கோவில் மூன்று நாட்களில் வெறும் 6 காட்சிகளில் மொத்த வசூல் ரூபாய் 33,500/- ஐ தாண்டியிருக்கிறது [Above Rs 33,500/-]. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களையும் மீறி நேற்று நல்ல கூட்டம். பெரம்பூர் பகுதியில் குறைந்த அளவில் ஒட்டப்பட்டிருந்த விளமபர போஸ்டர்களை கூட மறைத்து அரசியல் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர் சில நல்ல மனம் படைத்தோர். அப்படியும் வந்த பொதுமக்கள்.

    மதுரை சென்ட்ரல்

    தங்கச்சுரங்கம் - படத்தை வெளியிட்டவருக்கு உண்மையிலே தங்க சுரங்கம் கிடைத்தது போல் வசூல். வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்களிலும் மதுரையில் பலத்த மழை. அதையும் முறியடித்து மூன்றே நாட்களில் மொத்த வசூல் ரூபாய் 48,000/- வந்திருக்கிறது. மிகப் பெரிய வசூல் சாதனை.இது. மழை மட்டும் இடையூறு செய்யாமலிருந்திருந்தால் வசூல் ரூபாய் 50 ஆயிரத்தை தாண்டியிருக்கும் என்று தெரிகிறது. காரணம் மாலை நேர மழை குறிப்பாக நேற்று ஞாயிறு மாலை 5.55 க்கு ஆரம்பித்த மழை இரவு 7.15 மணி வரை பெய்திருக்கிறது. வெளியிட்டாளரைப் பொறுத்தவரை அவரின் விநியோக உரிமம இந்த மாத இறுதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே அது நிறைவு பெறும் முன் ஒரு முறை வெளியிட்டு விடலாம் என்று பிளான் செய்து வெளியிட்ட அவருக்கு ஜாக்பாட்.

    திருச்சி கெயிட்டி

    வெள்ளை ரோஜா தன் பிடியை விடாமல் ஸ்டடியாக ஓடிக் கொண்டிருகிறது. கெயிட்டி திரையரங்கை சுற்றி 3 அரங்குகள் அமைந்திருக்கின்றன. அந்த அரங்குகளில் (ராமகிருஷ்ணா, ஸ்டார்) எல்லாம் சனிக்கிழமை முதல் ஷிப்டிங் படங்கள் வெளியாகி ஒரு opposition -ஐ உருவாக்கியும் கூட வெள்ளை ரோஜாவிற்கு மக்கள் சிறப்பாகவே வரவேற்பு அளித்துள்ளனர். மூன்று நாட்களில் ரூபாய் 22 ஆயிரத்தை தாண்டிய வசூல். கெயிட்டி திரையரங்கை பொறுத்தவரை இது நல்ல வசூல் என்று கூறப்படுகிறது.

    சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

    அன்புடன்

  16. Likes Russellmai liked this post
Page 4 of 59 FirstFirst ... 234561454 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •