Page 3 of 59 FirstFirst 123451353 ... LastLast
Results 21 to 30 of 590

Thread: மறு வெளியீட்டிலும் மன்னரின் சாதனை

  1. #21
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    மகாலட்சுமியில் மன்னவரின் சாதனைகள் தொடர்வதை இங்கே பதிவிட்ட நண்பர் RKS அவர்களுக்கு நன்றி. ஞாயிறு மாலைக் காட்சிக்கு வந்த கூட்டம் சரியான கூட்டம். உள்ளே அமர நாற்காலி இல்லாமல் நின்று கொண்டு படம் பார்த்த பலரையும் பார்க்க முடிந்தது. தங்க சுரங்கத்திற்கு எந்தளவிற்கு அலப்பரை இருந்ததோ அதே அளவிற்கு இங்கேயும் நடந்தது. அருமை நண்பர் சாரதியும் நானும் சென்றிருந்தோம். இருவருக்கும் வெவேறு வேலைகள் இருந்தன. இருவரின் எண்ணமும் படம் சிறிது நேரம் பார்த்து விட்டு கிளம்பி விடலாம் என்று நினைத்துதான் உள்ளே சென்றோம். ஆனால் எப்போதும் நாம் நினைப்பது போல் நம்மை கிளம்ப அனுமதிக்க மாட்டார் நடிகர் திலகம். நம்மை அப்படியே கட்டி போட்டு விடுவார். அன்றும் அதுதான் நடந்தது. இந்த காட்சி முடிந்தவுடன் போகலாம், இந்தப் பாடல் முடிந்தவுடம் போகலாம் என்று நினைத்து நினைத்து இருக்க இதற்கு நடுவில் சந்திக்கிறேன் என்று சொல்லியிருந்த நண்பரிடமிருந்து அலைபேசி அழைப்புகள் வேறு வருகிறாயா இல்லையா என்று. அதனை சமாளித்து முடிப்பதற்குள் இடைவேளை வந்து விட்டது. இடைவேளை முடிந்து கிளம்பலாம் என நினைத்திருக்கும் போது நமக்கு மிகவும் அறிமுகமான பாடலின் prelude music [பாடலின் ஆரம்ப இசை]. என்னவென்று எட்டிப் பார்த்தால் தேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே பாடல் காட்சி ஓட ஆரம்பித்தது. நான் சில நாட்கள் முன்பு நமது திரியில் குறிப்பிட்டிருந்தது போல மகாலட்சுமி திரையரங்கில் விரைவில் இரு துருவம் வெளியாக போகிறது. அதற்கு முன்னோடியாகத்தான் அந்தப் படத்தின் பாடல் ஒளிபரப்பட்டது. அந்த ஒரு பாடல் காட்சிக்கே ரசிகர்களின் பலத்த ஆரவாரம் அமர்க்களம்.

    பிறகு மீண்டும் இடைவேளைக்கு பிறகு வரும் படத்தின் சில காட்சிகள் வரை இருந்துவிட்டு கிளம்ப மனம் இல்லாமல் கிளம்பினோம். நண்பர் சாரதிக்கு இரவுக்கும் பகலுக்கும் பாட்டு பார்த்து விட்டு போகலாம் என்ற ஆசை. ஆனால் நான் கிளம்பியதால் அவரும் கிளம்ப வேண்டிய நிலை. ஆனால் இருவருக்குமே முழுமையாக பார்க்க முடியவில்லையே என்ற ஏமாற்ற்றம்தான் மனதில்.

    படத்திற்கு வந்த கூட்டத்தை பார்த்தவுடன் ஒன்று புரிந்தது. இந்தப் படமும் மகாலட்சுமியில் வசூல் சாதனை புரியும் என்று. சந்திப்பு தியாகம் போன்றே இதுவும் தியேட்டர் வாடகையை எல்லாம் வெகு எளிதாக கடந்து விட்டது. ஒரு வார இறுதியில் கணிசமான லாபத்தை வெளியிட்டாளருக்கு ஈட்டி தரும் என்பதும் இன்றைய 5-ம் நாளில் நிதர்சனமாக கண்ணுக்கு தெரிகிறது.

    அன்புடன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #22
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like


    தமிழகத்தின் உண்மையான மண்ணின் மைந்தன், மறத்தமிழன், திரை உலகின் சித்தர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், திரை உலகம் மற்றும் அன்னை இல்லத்தின் பாச விளக்கு கமலா அம்மையார் திருமண நாளை முன்னிட்டு மீண்டும் வாசம் வீச....நல்ல அன்பிற்கும்...நல்ல பண்பிற்கும்...நல்ல குடும்பபாசத்திற்க்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய நடிகர் திலகத்தின் "பாசமலர்" கோடையில் ஒரு பாசமழையாய் குளிர்விக்க வருகிறது.





    மே 9 முதல் சென்னை ப்ரோட்வே திரை அரங்கில் தினசரி 3 காட்சிகளாக வெற்றி வலம் வர இருக்கிறது, 1972 இல் வெளிவந்த 7 திரை காவியங்களில் 6 நூறு நாட்கள் காவியத்தில் ஒன்றான சுஜாதா சினி ஆர்ட்ஸ் " நீதி " !

    பாசமலர் படம் வெளியாகும் திரையரங்குகளின் பட்டியலை அதன் விளம்பரத்தோடு அதனை வெளியிடுபவரிடமிருந்து பெற்று இங்கே பதிவிட்ட நண்பர் RKS அவர்களுக்கு நன்றி. மேலும் வைர நெஞ்சம் மே 2 அன்றும் நீதி மே 9 அன்றும் முறையே மகாலட்சுமி மற்றும் பிராட்வே திரையரங்குகளில் வெளியாகும் விவரங்களை பதிவிட்டதற்கும் நன்றி.

    மே மாதம் மேலும் ஒரு நடிகர் திலகத்தின் திரைப்படம் மகாலட்சுமியில் வெளியாகும் என்று தெரிகிறது. If all goes well மே 23 அன்று வெள்ளை ரோஜா வெளியாகும். அதே போன்று ஜூன் மாதம் சென்னையில் நடிகர் திலகத்தின் அண்ணன் ஒரு கோவில், இரு துருவம் ஆகியவை வெளியாக இருக்கிறது. அதன் பின் எங்கிருந்தோ வந்தாள் ரிலீஸ் ஆகும். மீண்டும் Sp சௌத்திரி விஜயம் செய்ய இருக்கிறார்.

    ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் ஏன் பொது மக்களுக்கும் கூட பிடித்த 70-களின் முற்பாதியில் வந்த சில படங்கள் திரையை அலங்கரிக்க இருக்கின்றன. கலர் மட்டுமல்ல 60-களின் கருப்பு வெள்ளை காவியங்களும் திரைக்கு வரும் என்ற இனிப்பான செய்தி வந்திருக்கிறது.

    சென்னை மட்டுமல்ல கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை மற்றும் நாகர்கோவில் போன்ற அனைத்து ஊர்களிலும் இந்த திரை விருந்து ரசிகர்களுக்கு பரிமாறப்படும். Once everything gets finalised, விவரங்கள் இங்கே பகிர்ந்துக் கொள்ளப்படும்.

    அன்புடன்

  4. #23
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மதுரை ஜெய்ஹிந்த் புரம் அரவிந்த் திரையரங்கில் நேற்று முதல் தினசரி 3 காட்சிகளாக பட்டாக்கத்தி பைரவனின் ஆர்ப்பாட்டமான விஜயம் நடைபெற்றிருக்கிறது.

    இன்று மாலைக்காட்சியில் குணசேகரனைக் காண மிகத் திரளாக மக்கள் வருகை புரிந்துள்ளனர். நெல்லை சென்ட்ரல் திரையரங்கில் 400க்கும் மேற்பட்ட மக்கள் கண்டு களித்துள்ளனர்.

    தகவல் உபயம் ராமஜெயம். நன்றி ராமஜெயம் சார்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #24
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இன்று 04.05.2014 மாலைக் காட்சியில் மகாலட்சுமி திரையரங்கில் வழக்கம் போல் கிட்டத் தட்ட அரங்கு நிறைந்த காட்சியாக துப்பறியும் அதிகாரி ஆனந்த்துக்கு பலத்த வரவேற்பு கிட்டியுள்ளது.

    நீண்ட நாட்களுக்குப் பின், கிட்டத்தட்ட முதல் வெளியீட்டுப் பின் தற்போது எனலாம், ஓடியன் தியேட்டரில் ரிலீஸில் பார்தததற்குப் பின்னர், இன்று மகாலட்சுமி திரையரங்கில் வைர நெஞ்சம் பார்க்கும் வாய்ப்பு அமைத்துக் கொண்டது மிகவும் நல்லதாகப் போயிற்று. ஒவ்வொரு பிரேமிலும் ஸ்டைல் பிய்த்துக் கொண்டு போகிறது. அன்று ரசித்ததை விட இன்றைய ரசிப்புத் தன்மை இன்னும் சிறப்பாக இருந்தது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பலத்த கைதட்டலும் அளப்பரையும் இன்றளவும் ரசிகர்களின் நெஞ்சில் தெய்வமாய்க் கொலுவிருக்கும் மன்னவனின் ஆளுமையை அழுத்தமாகப் பறை சாற்றியது.

    குறிப்பாக நீராடும் நேரம் நல்ல நேரம் பாடல் அளப்பரையில் முதலிடம் பெற்றது. ஸ்டைலாக திரும்பும் ஒவ்வொரு நொடியும், ஸ்டைலாக சிகரெட் புகைவிடும் ஒவ்வொரு நொடியும், புதிய பறவை, சாந்தி பட சிகரெட் ஸ்டைலுக்கு ஈடாக வரவேற்பைப் பெற்றது ரசிகர்களின் ரசிப்புத் தன்மையின் சிறப்பை எடுத்துரைத்தது.

    சற்று தாமதமாக சென்றதால் அரங்கிற்கு வெளியே நடைபெற்ற கோலாகலங்களைக் காண முடியவில்லை. இருந்தாலும் உள்ளே நாம் கண்ட காட்சிகள் தங்களுடைய பார்வைக்கு.







    அறிமுகக் காட்சியில்



    செந்தமிழ் பாடும் பாடல் காட்சியில்





    சூப்பரான போஸ்.... கேட்கணுமா அளப்பரையை

    Last edited by RAGHAVENDRA; 4th May 2014 at 11:54 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #25
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தொடர்ச்சி...

    ஐஸ்க்ரீம் வெண்டிங் மிஷின் இருக்கும் இடத்திற்கு மேலே ஸ்டில்ஸ் வைக்கும் இடத்தில்..



    நீராட நேரம் நல்ல நேரம் பாடலின் போது





    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #26
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் நினைவு நாளையொட்டி அவர் நடித்த சில திரைப்படங்கள் வெளியாகியும் மற்றும் சில வரும் வெள்ளியன்று வெளியாகவும் போகின்றன.

    கோபி நகரில் வீராஸ் திரையரங்கில் கடந்த ஞாயிறு (ஜூலை 13) முதல் வசந்த மாளிகை தினசரி 4 காட்சிகள் வீதம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

    வரும் வெள்ளி ஜூலை 18 முதல் சென்னை பிராட்வே திரையரங்கில் தினசரி நண்பகல் காட்சியாக வைர நெஞ்சம் திரையிடப்படுகிறது.

    மதுரை சென்ட்ரலில் வரும் வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகள் வீதம் நடிகர் திலகத்தின் சந்திப்பு வெளியாகிறது. மதுரை சென்ட்ரல் திரையரங்க வளாகமே இப்போதே விழாக் கோலம் பூண்டிருக்கிறது என்ற செய்தியை மதுரையிலிருந்து நண்பர் சந்திரசேகர் பகிர்ந்துக் கொண்டார்.

    அன்புடன்

  8. #27
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் மறு வெளியீடுகளின் வெற்றி செய்திகளை பகிர்ந்து கொண்டிருந்த இந்த திரியில் நடுவில் சிறிது இடைவெளி விழுந்து விட்டது. விட்டுப் போன செய்திகளின் சுருக்கம் இதோ.

    சென்னை மகாலட்சுமியில் மே முதல் வாரம் திரையிடப்பட்ட வைர நெஞ்சம் பலரின் எதிர்பார்ப்பையும் தாண்டிய ஒரு வெற்றியை அடைந்தது. படம் வெளிவருவதற்கு முன் படம் வெளியான காலத்தில் சரியாக போகாதை சுட்டிக் காட்டி அது போலவே இப்போதும் நடக்கும் என்று ஆரூடம் கூறியவர்களின் வாக்கை பொய்யாக்கி இந்த 2014-ம் ஆண்டு மகாலட்சுமியில் வெளியான பல படங்களையும் பின்னுக்கு தள்ளி அந்த ஒரு வாரத்தில் ரூபாய் 70,000/- ஐ தாண்டிய வசூலைப் பெற்றது.

    மே இரண்டாம் வாரம் பிராட்வேயில் வெளியான நீதி, அந்த திரையரங்கில் கடந்த 3,4 மாதங்களாக திரையிடப்படும் எந்த படமும் வாடகையை கூட கவர் பண்ணுவதில்லை என்ற நிலையை மாற்றி வாடகையை தாண்டிய வசூலை பெற்று லாபத்தை ஈட்டியது.

    ஜூன் முதல் வாரத்தில் மகாலட்சுமியில் வெளியான தங்கச் சுரங்கம் இரண்டு மாதங்களுக்கு முன்பு பைலட்டில் வசூலித்ததை விட அதிகமாக மகாலட்சுமியில் வசூல் செய்தது. அதே நாட்களில் [ஜூன் 6 முதல் 12 வரை] பைலட்டில் நடிகர் திலகத்தின் மற்றொரு மாஸ் படமான எங்கள் தங்க ராஜா வெளியிடப்பட்ட சூழலிலும் பொதுமக்களின் பேராதரவைப் பெற்று அந்த ஒரு வாரத்தில் ரூபாய் 78,000/- அளவிற்கு வசூலித்தது.

    அதே நாட்களில் சென்னை பைலட்டில் இரண்டு காட்சிகளாக வெளியான எங்கள் தங்க ராஜா [அதற்கு ஒன்றரை மாதம் முன்புதான் மகாலட்சுமியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியிருந்தது] அந்த குறிகிய கால இடைவெளியையும் தங்கச்சுரங்கதின் போட்டியையும் சமாளித்து கணிசமான வசூலையும் பெற்றது.

    மதுரையில் அதே நேரத்தில் சென்ட்ரலில் திரையிடப்பட்ட சங்கிலி திரைப்படம் எப்படி சந்திப்பு சென்னையில் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி சாதனை புரிந்ததோ அதே போன்றே சாதனையை புரிந்தது. நடிகர் திலகத்தின் பிற்கால படங்கள் குறிப்பாக 1980-களில் வந்த படங்கள் ஓடாது என்று கொண்டிருந்ததையெல்லாம் முறியடித்து ஒரு வார வசூலில் ரூபாய் 80,000/- ஐ தொட்டு கணிசமான லாபத்தை வினியோகஸ்தருக்கு பெற்று தந்தது சங்கிலி.

    இதே போல் நெல்லையில் எடுத்துக் கொண்டால் நெல்லை சென்ட்ரலில் பராசக்தி ஒரு வார காலம் கலக்கியதை தொடர்ந்து ஸ்டைல் சக்கரவர்த்தியின் ராஜா அதே திரையரங்கில் வெளியாகி சக்கை போடு போட்டது. அண்மைக் காலமாக எந்த பழைய படத்திற்கும் கிடைக்காத வரவேற்பை பெற்று ஒரு வார விநியோகஸ்தர் பங்காக சுமார் பதினாலயிரம் [Rs 14,000/-] பெற்று தந்திருக்கிறது.

    அதே நெல்லை சென்ட்ரலில் ஜூனில் வெளியான எங்கள் தங்க ராஜாவும் சரி தன பங்குகிற்கு விநியோகஸ்தர் பங்கு தொகையாக சுமார் 11,000/- ரூபாய் பெற்று தந்திருக்கிறது. இதை பார்த்து உள்ளம் பூரிப்படைந்த அரங்க உரிமையாளர் என்னவெல்லாம் நடிகர் திலகத்தின் படங்கள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் கொண்டு வாருங்கள் திரையிட்டு தருகிறேன் என்று சொல்லியிருக்கிறாராம்.

    அனைத்து ஏரியாக்களிலும் ஸ்கோர் செய்பவர் நடிகர் திலகம் என்பதற்கு மற்றும் சில சான்றுகளும் தருகிறோம்.

    மதுரையில் ஜெய்ஹிந்தபுரம் ஏரியாவில் அமைந்திருக்க கூடிய B கிளாஸ் தியேட்டர் அரவிந்த். பொதுவாக கிளாஸ் ஆடியன்ஸ் எனப்படுபவர்கள் அந்த திரையரங்கிற்கு வருவதை தவிர்ப்பார்கள். அந்த திரையரங்கில் மே மாதம் மாஸ் படமான எங்கள் தங்க ராஜா வெற்றிகரமாக ஓடி வாடகைக்கு எடுத்து போட்டவருக்கு லாபம் கொடுத்தது கூட பெரிய விஷயமில்லை. கிளாஸ் படமான உயர்ந்த மனிதன் இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த திரையரங்கில் வெளியிடப்பட்டு அதுவும் வெளியிட்டவர்க்கு ஷேர் பெற்று கொடுத்திருக்கிறது.

    இது போன்றே கோவை மாநகரில் அமைந்திருக்கும் டிலைட் திரையரங்கம். கிளாஸ் ஆடியன்ஸ் மற்றும் பெண்கள் தவிர்க்கும் திரையரங்கம். காரணம் அதன் அருகே அமைந்திருக்க கூடிய டாஸ்மாக் பார். இதன் காரணமாகவே அங்கே இரவுக் காட்சி கிடையாது. இப்படிப்பட்ட எதிர்மறையான சூழலிலும் அண்மையில் அங்கு வெளியான தங்கபதக்கம் வெளியிட்டவருக்கு லாபத்தை கொடுத்திருக்கிறது.

    ஆக எந்த ஊரிலும் எந்த சூழலிலும் எந்த அதிகார அரசியல் பின்பலமும் இல்லாமல் சாதனை புரிபவர் நடிகர் திலகம் என்பது நாம் சொல்லாமலே அனைவருக்கும் புரியும்.அது வரும் காலங்களிலும் தொடரும். அந்த மகிழ்ச்சியான செய்திகளை நாம் இங்கே பகிர்ந்து கொள்வோம்.

    அன்புடன்

  9. Likes Russellmai, joe liked this post
  10. #28
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    இன்று மதியம்தான் மதுரை மாநகரில் ஹீரோ 72-ன் சாதனைகளைப் பற்றி பேசினோம். 72-ல் மட்டுமல்ல 2014-லும் தன்னை வெல்ல யாரும் இல்லை என்பதை மீண்டும் இன்று நிரூபிக்கிறார் நடிகர் திலகம். 1980-களுக்கு பிறகு வந்த நடிகர் திலகத்தின் படங்கள் மறு வெளியீடுகளில் ஓடாது என்ற மாயை தோற்றம் மீண்டும் பொய் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது இன்று சென்ட்ரலில் மறு வெளியீடு கண்ட சந்திப்பு புதிய சாதனை படைக்கிறது. இன்று நான்கு காட்சிகளில் மட்டும் படத்தை கண்டு களித்தவர்கள் 716 பேர். இதில் பெரிதும் குறிப்பிட வேண்டிய விஷயம் இன்றைக்கு மட்டும் கண்டு களித்தவர்கள் எண்ணிக்கையில் பெண்கள் மட்டுமே 100 பேர். இதில் என்ன ஆச்சரியம் என்று கேட்கிறீர்களா? தொலைக்காட்சி பெட்டியை விட்டு வெளியே வராத பெண்கள் அதுவும் இன்று முதலாம் ஆடி வெள்ளி, அந்த நாளில் காலைக் காட்சி [பல வருடங்களுக்கு பிறகு பெண்கள் வந்திருக்கின்றனர்] பகல் காட்சி மற்றும் மாலைக் காட்சி [இதற்கு மட்டும் 50 பேர்] என்று அனைத்துக் காட்சிகளுக்கும் பெண்கள் [நான் குறிப்பிடுவது பெண்கள் தனியாக திரையரங்கிற்கு வருவது] வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அதுதான் நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரீச். தொடரும் நாட்களின் விவரங்கள் இங்கே பகிர்ந்து கொள்வோம்.

    அன்புடன்

  11. #29
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சந்திப்பு -இரண்டாம் நாள்

    இன்றைய கால கட்டத்தில் பழைய திரைப்படங்கள் வெளியிடும் திரையரங்குகளில் படம் பார்க்க வரும் pattern என்று ஒன்றை குறிப்பிடுகிறார்கள். படம் வெள்ளியன்று வெளியாகிறது. அன்று வசூல் நல்ல முறையில் இருக்கிறது. ஆனால் இரண்டாம் நாள் சனிக்கிழமை அன்று வசூல் டிராப் ஆகிறது. மீண்டும் ஞாயிறன்று பெரிய அளவில் சென்று திங்கள் செவ்வாய் என்று படிப்படியாக முடிகிறது. சென்னை மதுரை கோவை திருச்சி என்று அனைத்து நகரங்களிலும் இதே patternதான். முன்காலங்களில் வெள்ளியன்று ஆரம்பித்து சனி ஞாயிறு தினங்களில் peak-ற்கு சென்று திங்கள் அன்று sustain ஆகி பின் டிராப் ஆகும்.

    நாம் சொல்ல வந்தது இப்படி இரண்டாம் நாள் சனிக்கிழமையான இன்று சென்ட்ரலில் மறு வெளியீடு கண்ட சந்திப்பு மற்ற படங்களை விட அதிக வசூல் பெற்று முன்னணியில் நிற்கிறது. நேற்று 716 நபர்கள் பார்த்தார்கள் என்று சொன்னால் இன்று 600-க்கும் அதிகமான நபர்கள் பார்த்திருக்கின்றனர். இரண்டு நாட்களிலும் சேர்த்து 1300-க்கும் அதிகமாக பார்வையாளர்கள் வந்திருக்கின்றனர். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த மொத்த எண்ணிகையில் ரசிகர்கள் 20 பேர் கூட இல்லை எனபதுதான். பொது மக்கள் மட்டுமே வந்து சிறப்பித்திருக்கின்றனர்.

    அரங்க நிர்வாகத்தினர் பல விஷயங்களில் அசந்து போய் பாராட்டியிருக்கின்றனர். "என்னங்க இது மார்னிங் ஷோவிற்கு லேடீஸ் வராங்க, ஆடி வெள்ளி அன்னிக்கு ஈவினிங் ஷோவிற்கு 50 லேடீஸ் வராங்க, சனிக்கிழமை நைட் ஷோவிற்கு பால்கனி டிக்கெட் 50 போகுது, அதிலும் family audience வந்திருக்காங்க, சிவாஜி படத்துக்கு மட்டும்தாங்க இப்படியெல்லாம் பாக்க முடியும்" என்று வியந்து பாராட்டியிருக்கின்றனர்.

    உண்மைதானே! நமது நடிகர் திலகத்தால் மட்டும்தானே இதையெல்லாம் சாதிக்க முடியும்!

    அன்புடன்

  12. #30
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சந்திப்பு - மூன்றாம் நாள்.

    இன்றும் சென்ட்ரல் திரையரங்கம் திருவிழாக் கோலம் பூண்டிருக்கிறது. காலை மதியம் மாலைக் காட்சிகளுக்கு மக்கள் திரண்டு வந்து அமோக வரவேற்பளித்துள்ளனர். மாலைக் காட்சிக்கு பெரும் திரளான மக்கள் வந்திருக்கிறார்கள். முதல் இரண்டு தினங்களில் குறிப்பிட்டது போல் பெண்கள் கணிசமான எண்ணிக்கையில் வந்திருந்தனர் என செய்தி. டவுன் ஹால் ரோடு இன்று மாலை ரசிகர்களின் கோலாகல கொண்டாட்டத்தை கண்டு வியந்திருக்கிறது. முதல் மூன்று நாட்களில் மொத்த வசூல் 2014-ல் சென்ட்ரலில் புதிய ரிகார்ட் ஏற்படுத்தியிருக்கிறது.

    சந்தோஷ செய்திகள் தொடரும்.

    அன்புடன்

Page 3 of 59 FirstFirst 123451353 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •