Page 12 of 59 FirstFirst ... 2101112131422 ... LastLast
Results 111 to 120 of 590

Thread: மறு வெளியீட்டிலும் மன்னரின் சாதனை

  1. #111
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    1973 திரும்பியது...
    இதைத்தான் மனது சொல்ல நினைக்கிறது

    28.03.2010 மாலை சென்னை பட்டாளம் மஹாலக்ஷ்மி திரையரங்கில் எங்கள் தங்க ராஜா படத்துக்கு வருகை புரிந்த என்னைப் போன்ற பழைய ரசிகர்கள் மனதில் ஒரு மனதாக உருவாகிய கருத்து இதுவாகத்தான் இருக்க முடியும்.

    ஒரு பத்து நிமிடம் முன்னதாக சென்றிருந்தால் தளபதி ராம்குமார் அவர்கள் பேச்சைக் கேட்டிருக்க முடியும். தாமதமாகி விட்டது. அது ஒரு குறை.

    மற்றபடி சுமார் 5.30 மணியளவில் அரங்கிற்குச் சென்றபோது அங்கே கூடியிருந்த ரசிகர்களைக் கண்டவுடன் உள்ளத்தில் பொங்கிய உவகைக்கு அளவேது.

    வெடிச்சத்தம் ஒரு பக்கம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் ஒலிபெருக்கியில் கேட்டுக்கோடி, ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன், மயக்கமெனன என்று தலைவர் பாடல்கள் ....

    மற்றொரு பக்கம் தலையை நிமிர்த்தினால்...

    ஆஹா ...
    கண் கொள்ளாக் காட்சி ...
    தலைவரின் கட் அவுட்டுகள் ...
    ஆளுயரத்திற்கும் அதிக நீளத்தில் மலர் மாலைகள் ...
    ரசிகர்களின் பாலாபிஷேகம்....
    வேறு சில ரசிகர்கள் சூடம் காட்ட...
    இங்கே இன்னொரு பக்கம் ஆட்டம் பாட்டம்...
    இன்னொரு பக்கம் தொலைக்காட்சியினரின் படப்பிடிப்பு
    இவையனைத்தையும் பார்த்தவாறு பழைய நினைவுகளில் மூழ்கிய பழைய ரசிகர்கள்..
    குழந்தைகுட்டிகளுடனும், தாய்மார்களுடனும், குடும்பத்துடனும் படத்தைப் பார்க்க அரங்கினுள் நுழையும் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர்...
    வேறொரு பக்கம் பார்த்தால் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் நின்று நிதானித்து பார்வையிட்டுப் பின் கடந்து செல்லும் காட்சி...
    பேருந்துகளில் செல்பவர்கள் வைத்த் கண் வாங்காது பார்த்த காட்சி...
    இவ்வளோ வருஷமானாலும் சிவாசிக்கு கூட்டம் பார்த்தியா ... இது ஒரு மூதாட்டி இன்னொரு மூதாட்டியிடம் பகிர்ந்து கொள்ளும் நெகிழ்ச்சி...
    ...
    இத்தருணத்தில் வசந்தகுமார் எம்.எல்.ஏ.அவர்கள் வருகிறார்..
    தன்னுடைய வழக்கமான நினைவுகளினூடே அவர் சொன்ன இரு கருத்துக்ககள் பெருத்த கரவொலி...
    தலைவரிடம் எதையும் எதிர்பாராமல் தொண்டாற்றிய தொண்டன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ...
    அவரிடம் எதையும் எதிர்பாராமல் தொண்டாற்றும் தொண்டர்க்ள் சிவாஜி ரசிகர்கள்...
    இந்த வரிகள் பலத்த் கரகோஷத்தைப் பெற்றன எனச் சொல்ல்வும் வேண்டுமோ..
    இவையனைத்தும் அரங்கிற்கு வெளியே ...

    இனி உள்ளே...

    பெரும்பாலானோர் தாமதமாக உள்ளே வந்தாலும் ... ஒன்றும் நஷ்டமில்லை...
    அனைவரும் நடிகர் திலகத்தின் முதல் தோற்றத்தைக் காண ஆவலோடு காத்திருந்தனர்...
    அவர் வந்தார்...
    கரகோஷம்...
    மீண்டும் மற்றொரு முறை..
    இம்முறை பட்டாக்கத்தி பைரவன் வருகை...
    அரங்கம் அதிர்ந்து குலுங்கியது...
    இவை யெல்லாம் சாதாரண வர்ணனைகள்...
    ஆனால் இன்றைய அளப்பறையோ...
    வர்ணிப்பில் அடங்காது...

    1973 ஜூலை 14 அன்று சாநதி திரையரங்கில் கண்ட காட்சிகள் மீண்டும் கண்ணெதிரே மலரும் என
    நாங்கள் ஆசைப்பட்டது நடந்தேறியது...

    இப்படிக் கூட்டம் வரும் போது எதற்கு புதிய படங்களைப் போட்டு ரிஸ்க் எடுக்க்ணும்...
    இது தான் திரையரங்கு உரிமையாளர்க்ளின் மனதில் தோன்றியிருக்கக் கூடிய எண்ணம்...

    மொத்தத்தில்...
    1973 திரும்பியது...


    ராகவேந்திரன்

    முன்னைய பதிவிலிருந்து

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #112
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இங்கே சங்கரா தற்செயலாக சொன்னாரா இல்லை சுவாமி இங்கே கொண்டு வந்து குவித்திருக்கும் புகைப் படங்களைப் பார்த்து விட்டு சொன்னாரா என்று தெரியவில்லை, 1973 ஜூலை 14 சனிக்கிழமை காலை 10.30 மணி மதுரை நியூசினிமாவில் நடந்த ஓபனிங் ஷோ மீண்டும் ஒரு முறை கால இயந்திரத்தின் மூலமாக 2010 ஆண்டில் மகாலட்சுமி திரையரங்கில் மீண்டு வந்ததோ என்று வலுவான ஒரு எண்ணம்.

    அண்மைக் காலத்தில் அந்த அரங்கிற்கு வெளியே இவ்வளவு கோலாகல கொண்டாட்டங்கள் நடந்திருக்காது என்பது உறுதி. இங்கே சுவாமி அவர்கள் எடுத்த புகைப்படத்தில் அவன்தான் மனிதன் அதன் அருகில் திருவிளையாடல் படங்களின் ஸ்டில்-கள் அடங்கிய நீண்ட வடிவிலான போஸ்டர்களை அனைவரும் பார்த்திருக்க கூடும். இன்று அந்த போஸ்டர்களே தெரியாத அளவிற்கு ஏராளமான மாலைகள். எத்தனை விதங்கள் உண்டோ அத்தனை மாலைகளும் அங்கே அணிவிக்கப்பட்டன. பூசணிக்காய் சூட, தீப ஆராதனைகள் நடக்க மலர் மாரி பொழிய வாழ்த்தொலிகள் விண்ணை பிளக்க அந்த சாலையில் பேருந்துகள், வான்கள், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் தியேட்டர் வாசலில் நின்று வியப்போடும்
    ஆச்சர்யத்துடனும் நகர்ந்தன. எதிர்வரிசையில் அமைந்துள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் [முன்பு அங்குதான் சரஸ்வதி திரையரங்கம் அமைந்திருந்ததாக சொன்னார்கள்] இருப்பவர்கள் இப்படிப்பட்ட காட்சியை இதற்கு முன் இங்கே பார்த்ததில்லையே என்ற நினைப்போடு பார்க்க, பட்டாசுகள் முழங்கின. இன்னும் சொல்லப் போனால் இன்றைக்கு இருக்கக் கூடிய முன்னணி நடிகர்கள் கூட இந்த காட்களை கண்டிருந்தால் இது போன்ற ஒரு ரசிகர் கூட்டம் நமக்கு இல்லையே என்று நிச்சயமாக ஏங்கியிருப்பார். அந்த இடத்தில் வந்த ஒரு கமண்ட் " ஆஃக்ஷன் ஹீரோக்களுக்கு மாஸ் இருப்பது ஆச்சர்யமில்லை. ஆனால் ஒரு ஆக்டருக்கு இவ்வளவு பெரிய மாஸ் இருப்பது உலகில் இவரை விட்டால் யாருக்கும் இல்லை".

    வசந்தகுமார் அவர்கள் வந்தார். அவருக்கு நல்ல வரவேற்பு. அவர் பேசும் போது நடிகர் திலகத்தின் பல்வேறு பாத்திரப் படைப்புக்களை குறிப்பிட்டார். நடிகர் திலகம், பெருந்தலைவர், காங்கிரஸ் பேரியக்கம் தொடர்புகளை சுட்டிக் காட்டி பேசி விட்டு விரைவில் நடிகர் திலகத்திற்கு சென்னையில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்றார். அந்த மணி மண்டப திறப்பு விழா நாளன்று சென்னையே சிவாஜி ரசிகர்களால் நிறைய வேண்டும், நிறையும் என்று சொன்ன வசந்தகுமார் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு உழைத்தவர் நடிகர் திலகம் அதே போல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நடிகர் திலகத்தின் மீது கொண்டுள்ள பற்றின் காரணமாகவே இன்றும் இருப்பவர் உழைப்பவர் அவரது ரசிகர்கள் என்ற போது ரசிகர்களின் பெரும் ஆரவாரம். பேசி முடித்து விட்டு அவர் கிளம்பினார்.

    தியேட்டருக்கு வெளியே நண்பர் மோகனரங்கனை சந்தித்தோம். அவர் மாலையில் ஒரு வேலை இருந்ததால் மதியக் காட்சியே பார்த்து விட்டு வெளியே நின்றிருந்தார். நண்பர் சுவாமி மற்றும் ராகவேந்தர் சாரையும் சந்தித்தோம். படம் போட்டு விட்டார்கள் என்ற செய்தி அறிவிக்கப்பட உள்ளே நுழைந்தோம்.

    தியேட்டர் நிகழ்வுகள் நாளை. அதற்கு முன் தியேட்டர் உள்ளே வெளியே நடந்த கொண்டாட்டங்களின் புகைப்பட குவியலோடு சுவாமி இங்கே போஸ்ட் செய்வார். அவர் சொல்வது போல் Happy Viewing.

    அன்புடன்

    தியேட்டருக்கு வெளியே நடந்த கொண்டாட்டங்கள் அனைத்தும் வசந்த் தொலைக்காட்சி நிறுவனத்தினரால் படமாக்கப்பட்டன. எனவே வசந்த் டி.வியில் இது ஒளிப்பரப்பாகும் என தோன்றுகிறது.

    முன்னைய பதிவிலிருந்து

  4. #113
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    2010ல் சென்னை மஹாலக்ஷ்மி திரையரங்கில் எங்கள் தங்க ராஜா














  5. #114
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    எங்கள் தங்க ராஜா - தியேட்டர் நிகழ்வுகள்

    நாங்கள் தியேட்டருக்குள் நுழைந்து மாடிக்கு சென்று இடம் தேடி இடம் கிடைத்து உட்காரும் போது கிட்டத்தட்ட நடிகர் திலகத்தின் intro வந்து விட்டது. எங்களின் பின் வரிசையில் அமர்ந்திருந்தவரை ராகவேந்தர் சார் அறிமுகப்படுத்தினார். நமது நண்பர் மோகனரங்கனின் பாதர் -இன்-லா என்று. அவரிடம் ஒரு ஹலோ சொல்லி விட்டு திரும்பினால் மேஜர், சிறுவன் ராஜாவிற்கு முயல் சிங்கத்தை ஜெயித்த கதையை சொல்லும் காட்சி ஓடிக் கொண்டிருந்தது. இதற்கிடையில் வெளியே ஆரவாரங்கள் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து மக்கள் கூட்டம் உள்ளே சாரி சாரியாக வந்து கொண்டிருந்தது. மேஜர் அடுப்பில் வைத்த கல்லில் சின்ன சப்பாத்தியை பெரிய சப்பாத்தியாக மாற்ற ஒயிட் அண்ட் ஒயிட்டில் கூப்பிய கரங்களுடன் தெய்வதை வணங்கும் நடிகர் திலகம். பேப்பர் பறக்க காதை அடைக்கும் கைதட்டல்கள். கிழே திரைக்கு அருகில் மீண்டும் சூடம் ஏற்றப்பட அரங்கு உரிமையாளர்களுக்கு ஒரே கிலி. மன்ற நிர்வாகிகள் சிலர் மேடையில் ஏறி உணர்ச்சி வசப்பட்டவர்களை அமைதிப்படுத்தினர்.

    இட்லி சுட்டு விற்கும் ஆயா நடிகர் திலகத்திடம் " உன் ராசியான கையாலே போனி பண்ணிடேலே வியாபாரம் அமோகமாக நடக்கும்" என்று சொல்லும் போது எழுந்தது வாழ்த்தொலி. மஞ்சுளா அண்ட் கோ கிண்டல் காட்சிகள், சாதாரண ஆளாக இருந்த மனோகர் பெரிய தொழிலதிபர் ஆக இருப்பதைக் காட்டுவது என சில காட்சிகள் போனது. பிறகு வந்தது "சாமியிலும் சாமியிது" பாடல். அந்த கணபதியோட வாரிசுதானே இந்த சாமி என்ற வரிகளுக்கு பலமான வரவேற்பு.

    பிரின்சிபால் ராஜாவை கூப்பிடுகிறார் [நாகேஷ் - பிரின்சிபாலுக்கு பாடத்திலே ஏதோ சந்தேகமாம்,அதான் ராஜாவை கூப்பிடுறார்] ராஜாவிற்கு ஸ்காலர்ஷிப் இனிமேல் இல்லை என்று சொல்லி விட அடுத்த காட்சியில் நடிகர்திலகம் வேதனையோடு மேஜரிடம் சொல்லுவார் குல்லா வைக்கப் பிறந்தவன் கிரீடத்திற்கு ஆசைப்படக் கூடாது. உடனே மேஜர் நீ கிரீடத்திற்கே பிறந்தவன் ராஜா என்ற போது மறுமுறையும் அதிர்ந்தது தியேட்டர்.

    குப்பத்து மக்கள் எல்லோரும் சேர்ந்து பரிட்சைக்கு பணம் கட்ட பரீட்சை நடக்கிறது என்று காட்சிகள் வெகு வேகமாக நகர்ந்தன.[பின்னால் இருப்பவன் நாகேஷிடம் என்ன எழுதறே அதற்கு நாகேஷ் ஸ்ரீராமஜெயம் எழுதறேன். உடனே நண்பன் அதைக் கூட ஸ்ரீராமானுஜன்-னு தப்பா எழுதறே].

    அடுத்து நடிகர் திலகம் நடந்து வர காரிலிருந்து இறங்கும் மஞ்சுளா. தியேட்டரில் ஆரவாரம் அதிகமாகி மீண்டும் சிலர் திரை இருக்கும் மேடை நோக்கி போக, மஞ்சுளாவிடம் என்னை மறந்து விடு என்று சொல்லி நடிகர் திலகம் ஒரு நடை நடப்பார் - கிழே, மேலே திரைக்கு அருகே என எல்லா இடங்களிலும் கைதட்டல் ஒலி காதை கிழிக்க அமர்க்களமாக இருந்தது.

    அதன்பின் நடிகர் திலகம் ஆஸ்பத்திரி ஆரம்பித்து நடத்தும் காட்சிகள். மஞ்சுளா அங்கே வலிய வந்து பணி செய்வது என காட்சிகள் விரைந்தன. நாகேஷ் நடிகர் திலகத்தை வந்து பார்த்து, டா போட்டு பேசி விட ஆப்பக் கடை ஆயா நாகேஷை திட்டி விட "என்னப்பா உன் பேட்டையிலே உன்னைப் பற்றி பேசினா பென்டை கழட்டிடுவாங்க போலிருக்கு" என்று சொல்ல பேசித்தான் பாரேன் என்று நடிகர் திலகம் சொல்ல பேட்டையை வளைக்கிறியா என்று நாகேஷ் கேட்க முதலிலே பேட்டையை வளைப்போம் அப்புறம் என்று நடிகர் திலகம் இடைவெளி விட்டு நிறுத்த பின்னால் பெருந்தலைவர் படம் இருக்க எழுந்த ஆரவாரம் மீண்டும் 1973 -ஐ நினைவுக்கு கொண்டு வந்தது.

    அடுத்து மஞ்சுளா மனோகரின் மகள் என்பதை நடிகர் திலகம் தெரிந்துக் கொள்ளும் காட்சி. வசனங்கள் இல்லாமல் கண் சிவக்க உதடு துடிக்க நடிகர் திலகம் வெளிப்படுத்தும் காட்சி தன்னை அவமானப்படுத்தும் மனோகரிடம் ஒன்றும் சொல்லாமல் உங்க அப்பா நல்லவர்-னு சொன்னியே என்று மட்டும் சொல்லி விட்டு வெளியேறும் நடிகர் திலகம் - பெரும் ஆரவாரம். அது அந்த காட்சிக்கு மட்டுமல்ல அடுத்து வரும் காட்சிக்கும் சேர்த்துதான் என்பது புரிந்தது. மஞ்சுளாவிற்கு போன். சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும் மஞ்சுளா. அங்கே அதை விட அதிக சந்தோஷத்தில் ரசிகர்கள். இப்போது மேடையில் கிட்டத்தட்ட 20 நபர்கள். அதில் நாலைந்து நபர்களின் கையில் தீபம். அது போதாதென்று உள்ளே மேளத்தை கொண்டு வந்து சிலர் அடித்து ஆட ஆரம்பிக்க அட்டகாசம் ஆரம்பமானது.

    நடிகர் திலகம் இந்த பாடலில் சில ஸ்டைல் சில நடை நடப்பார். கர்சீப்பை கையில் வைத்துக் கொண்டு ஒரு கால் மாற்றி ஒரு கால் வைத்து ஆடி வருவார், சரணத்தின் போது நேர் போஸிலும் சைடு போஸிலும் ராஜ நடை நடப்பார். காது கிழியும் டெசிபல் லெவல். கிழே தீபம் என்றால் மேலே பால்கனி கைப்பிடியில் சூடம் ஏற்றப்பட்டு அது அணையாமல் எரிந்துக் கொண்டிருப்பதற்காக சூடங்கள் நெருப்பில் சேர்த்துக் கொண்டே சிலர் நிற்க பார்வையாளர்கள் எல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர்.

    ஒரு சில காட்சிகளுக்கு பின் தியேட்டரே எதிர்பார்த்துக் கொண்டிருந்த காட்சி. மோட்டார் பைக் காட்டப்பட்டு பட்டாக்கத்தி பைரவன் வாயில் சூயிங்கத்தை மென்றுக் கொண்டே திரையில் தோன்ற உள்ளேயே வெடித்தது பட்டாஸ். கிட்டத்தட்ட அனைவரும் எழுந்து நின்று பார்க்க வேண்டிய நிலைமை. காரணம் முன்னால் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று விட்டனர்.

    பைரவ அமர்க்களம் நாளை.

    அன்புடன்

    முன்னைய பதிவிலிருந்து

  6. #115
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - மொத்த வசூல் (சற்றேறக்குறைய)

    27.3.2010 - சனி - கௌரவம்

    இரவு 9:45 மணிக் காட்சி = ரூ. 2,200/- (ரூபாய் இரண்டாயிரத்து இருநூறு)

    28.3.2010 - ஞாயிறு - எங்கள் தங்க ராஜா

    பிற்பகல் 2:30 மணிக் காட்சி = ரூ. 6,000/- (ரூபாய் ஆறாயிரம்)

    மாலை 6:15 மணிக் காட்சி = ரூ. 13,000/- (ரூபாய் பதிமூன்றாயிரம்) (ஹவுஸ்ஃபுல்)

    இரவு 9:45 மணிக் காட்சி = ரூ.3,000/- (ரூபாய் மூவாயிரம்)

    முன்னைய பதிவிலிருந்து

  7. #116
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - மொத்த வசூல் (சற்றேறக்குறைய)

    29.3.2010 - திங்கள் (பங்குனி உத்திரத் திருநாள்) - திருவருட்செல்வர்

    பிற்பகல் 2:30 மணிக் காட்சி = ரூ. 4,500/- (ரூபாய் நான்காயிரத்து ஐநூறு)

    மாலை 6:15 மணிக் காட்சி = ரூ. 5,100/- (ரூபாய் ஐந்தாயிரத்து ஒருநூறு)

    இரவு 9:45 மணிக் காட்சி = ரூ. 2,100/- (ரூபாய் இரண்டாயிரத்து ஒருநூறு)


    முன்னைய பதிவிலிருந்து

  8. #117
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    டியர் முரளியண்ணா....

    மகாலட்சுமி திரையரங்கில் ஞாயிறு மாலை நடந்தவற்றை அப்படியே (எழுத்துக்களால் நீங்களும், புகைப்படத்தொகுப்பால் பம்மலாரும்) கண்முன் கொண்டுவந்து நிறுத்தி விட்டீர்கள். படிக்கும் அத்தனை பேரும் அன்றைய மகாலட்சுமி நிகழ்வுகளை அப்படியே கண்முன்னே காண்பார்கள் என்பது நிச்சயம். முத்தங்கள் நூறு பாடலின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. ('மற்றவர்க்கோ ஒரு நாள் இரு நாள்... எங்கள் மன்னவர்க்கோ தினமும் திருநாள்'). தாஸாமக்கான் 'மகாலட்சுமி'யில் துவங்கிய இந்த திருவிழா சென்னை முழுதும் தொடர வேண்டும். தொடரும்.

    டியர் பம்மலார்...
    தினமும் ஒரு வி.ஐ.பி.வருகையால் மகாலட்சுமி அரங்கம் களைகட்டுகிறது. ராஜபார்ட் ரங்கதுரையில் டி.எம்.எஸ்.அண்ணாவின் பங்களிப்பு கொஞ்சமா?. அதை மீண்டும் மக்களோடு அமர்ந்து ரசிக்கப்போகிறார் என்பதே தித்திக்கும் செய்தி அல்லவா. 'சிவாஜி வாரம்' வசூல் விவரங்கள் அருமை. கலைப்புலி சேகரன் சொன்ன உண்மை மீண்டும் மெய்ப்பிக்கப்படுகிறது.

    சகோதரி சாரதாவின்
    முன்னைய பதிவிலிருந்து

  9. #118
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Originally Posted by RAGHAVENDRA இன்றைய 31.03.2010 சிங்கத்தமிழன் சிவாஜி நிகழ்ச்சியை வசந்த் தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் இனிய இன்ப அதிர்ச்சிக்கு நிச்சயம் உள்ளாகியிருப்பர். கடந்த ஞாயிறன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியின் தொகுப்பு ஒளிபரப்பானது. அன்று அங்கு நேரில் பார்க்க முடியவில்லையே என ஏங்கியோர், குறிப்பாக சகோதரி சாரதா அவர்கள், நிச்சயம் உள்ளம் குளிர்ந்திருப்பர். அரை மணி நேரம் நிகழ்ச்சியில் விளம்பரம் போக எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஒளிபரப்பினார்கள். வசந்த் டிவிக்கு நமது உளமார்ந்த நன்றி.
    ராகவேந்திரன்
    டியர் ராகவேந்தர் அண்ணா...

    நீங்கள் சொலவ்து முற்றிலும் உண்மை. நான் சற்றும் எதிர்பார்க்கவில்ல்லை. நேற்றைய சிங்கத்தமிழன் சிவாஜி நிகழ்ச்சி துவங்கும் முன்பு 'இன்று யார் வி.ஐ.பி.யாக வந்து தன் அனுபவங்களையும் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ளப்போகிறாரோ' என்று எண்ணத்தில் இருந்த எனக்கு இன்ப அதிர்ச்சியாக, நிகழ்ச்சி துவங்கியதும், நாதஸ்வர ஒலியுடன் காட்சிகள் காண்பிக்கப்பட மகிழ்ச்சியின் எல்லைக்குப்போனேன். இந்நிகழ்ச்சியை வசந்த தொலைக்காட்சியினர் படம்பிடித்தனர் என்று நீங்களும், முரளியண்ணாவும் சொன்னீர்கள். என்றைக்காவது சாவகாசமாகக் காட்டுவார்கள் என்று நினைத்திருந்தபோது, சூட்டோடு சூடாக இரண்டே நாட்களில் ஒளிபரப்பி திகைக்க வைத்தனர்.

    பாலாபிஷேகம், கற்பூர ஆரத்தி, பட்டாசு வெடிக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் அருமையாகக் காண்பிக்கப்பட்டன. ச்கோதரர் ராம்குமார் அவர்களின் பேச்சு சுருக்கமாக இருந்தபோதிலும், ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டிருந்தார் என்பது அவர் முகத்தில் தெரிந்தது. சிறுவர்களுக்கு அவர் பரிசுப்பொருட்கள் வழங்குவதும் காண்பிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் திரு வசந்தகுமார் அவர்களின் பேச்சு ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் மனதையும் அப்படியே பிரதிபலிப்பதாய் அமைந்திருந்தது. அதனால்தான் அவருடைய ஒவ்வொரு வரிக்கும் கைதட்டலும் ஆரவாரமும் எழுந்தது. சால்வையணிவித்து வரவேற்கப்பட்ட அவருக்கு இறுதியில் நினைவுக்கேடயமும் வழங்கப்பட்டது.

    டியர் முரளியண்ணா....

    ஞாயிறன்று நிகழ்வுகளை பகுதி பகுதியாக, வரி வரியாக விவரித்து எங்களை அப்படியே மகாலட்சுமி திரையரங்கின் நடு இருக்கையில் கொண்டுபோய் உட்கார வைத்துவிட்டீர்கள். வர்ணிப்புகள் அருமையிலும் அருமை. அவ்வளவு ஆர்ப்பாட்டத்துக்கிடையிலும், பாடல் வரிகளின்போது என் நினைவு வந்தது என்று நீங்கள் சொல்லியிருப்பது, நம் அனைவரின் இதயங்களும் நடிகதில்கத்தைப்பற்றி ஒரே அலைவரிசையில் துடித்துக் கொண்டிருப்பதற்கு எடுத்துக்காட்டு. உங்கள் அனைவரின் விவரிப்புகளும், பம்மலார் அளித்த புகைப்படத் தொகுப்புகளும் எனது 'யு.எஸ்.பி.ஃப்ளாஷ் மெமோரி'யில் நிரந்தரமாக இடம்பெற்றுவிட்டன. விழா பற்றிய உங்களின் வர்ணணைகளை கணிணியில் காண்பித்து என் கணவரிடம் 'பார்த்தீங்களா? நீங்களும்தான் போயிட்டு வந்தீங்க. இப்படி விவரமாகச்சொல்ல உங்களுக்கு தெரிந்ததா?' என்று கேட்க, அவர் ஒரே வரியில் சொன்ன பதில் 'எல்லோரும் முரளி சார் ஆகிவிட முடியுமா?'. (அவர் சொன்னது உண்மைதானே).

    டியர் மோகன் (ரங்கன்)....

    நீங்களும் உங்கள் பங்குக்கு, ஞாயிறு படவிழாவை அருமையாக விவரித்துள்ளீர்கள். நன்றி. குறிப்பாக சகோதரி கிரிஜா அவர்களின் பங்களிப்பைப் பற்றி.

    டியர் பம்மலார்....

    உங்களது புகைப்படத்தொகுப்பு அபாரம். சொர்க்கம் படத்தின் 100-வது நாள் தினத்தந்தி விளம்பரத்தை ரொம்ப நாளாகத் தேடிக்கொண்டிருந்தேன். உங்கள் புகைப்படத்தொகுப்பில் கிடைக்கப்பெற்றேன். பாரதவிலாஸ், ராஜபார்ட் ரங்கதுரைக்கான தியேட்டர் ரெஸ்பான்ஸ் எப்படியிருந்ததாம்?.

    மொத்தத்தில் இந்த வாரம், நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, மகாலட்சுமி திரையரங்க நிர்வாகத்தினருக்கும் மறக்க முடியாத வாரமாக அமைந்துவிட்டது என்பதில் ஐயமில்லை.

    சகோதரி சாரதாவின்
    முன்னைய பதிவிலிருந்து

  10. #119
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இன்றைய மாலைக் காட்சி சொர்க்கம் குறிப்பிடத் தக்க அளவிற்கு மக்கள் நிறைந்த காட்சியாக அமைந்தது. சுமார் 220 லிருந்து 250 வரை இருக்கலாம். இதய வேந்தன் மன்றத்தினர் இடைவேளையில் அரங்க ஊழியர்களை சேலை வேட்டி பரிசு கொடுத்து கௌரவித்தனர். கூடிய விரைவில் இதே மஹாலக்ஷ்மியில் பாசமலர் வெளியிடும் செய்தி கிடைத்தது. தர்மம் தலைகாக்கும் படத்தை வெளியிட்டவர்களே பாச மலரையும் திரையிட உள்ளதாகவும் தகவல். உள்ளே வந்திருந்த அனைவரும் பொன்மகள் வந்தாள் பாடல் காட்சியிலும் சொல்லாதே யாரும் கேட்டால் பாடலிலும் பலத்த ஆரவாரம். அன்று தேவி பேரடைஸில் அன்றைய ரசிகர் கூட்டம் எந்தெந்த காட்சியிலெல்லாம் ஆர்ப்பரித்தனரோ, அதே போன்று இன்றும் அந்தந்த காட்சியிலெல்லாம் அதே வகையான ஆர்ப்பரிப்பு... நமக்கெல்லாம் வயது கூடியது என்பதைத் தவிர வேறெந்த வித்தியாசமும் ரசிகர்களிடமும் மக்களிடமும் காணப்படவில்லை. காரணம் இன்றைய காட்சியிலும் இளைஞர்களைக் காண முடிந்தது. இன்ப அதிர்ச்சியாக நமது புதிய ஹப்பர் ராதாகிருஷ்ணனை சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. உள்ளம் மகிழ்வுற்றது.
    இனி பாசமலர் நம்மைக் கட்டிப்போடக் காத்திருக்கிறது.
    காத்திருப்போம்.

    ராகவேந்திரன்

  11. #120
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Sivajiganesan reg
    நன்றி திரு ராகவேந்தர் சார்,
    இன்று சொர்க்கம் படம் காண வந்த போது ரசிகர்களின் உற்சாகத்தை பார்க்கும் போது Sunday நிகழ்ச்சிகளை miss செய்து விட்டேனே என்று வருந்துகிறேன். Ms கிரிஜா சண்டே அன்று நடந்த அலப்பறை பற்றி பேசிக்கொண்டே இருந்தார். மேலும் உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி.

Page 12 of 59 FirstFirst ... 2101112131422 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •