Page 10 of 59 FirstFirst ... 8910111220 ... LastLast
Results 91 to 100 of 590

Thread: மறு வெளியீட்டிலும் மன்னரின் சாதனை

  1. #91
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    மதுரையம்பதியில், சென்ட்ரல் சினிமா திரையரங்கில், 25.12.2009(வெள்ளி) முதல் 31.12.2009(வியாழன்) வரை ஒரு வாரம் தினசரி 4 காட்சிகளாக வெற்றி நடை போட்ட கலையுலக சுந்தரேஸ்வரரின் "திருவிளையாடல்", அள்ளித் தந்த மொத்த வசூல் ரூ.47,000/- (ரூபாய் நாற்பத்து ஏழாயிரம்). பழைய படங்களைப் பொறுத்தவரை இது சிகர சாதனை. இத்திரைக்காவியத்தைத் திரையிட்டவருக்கு, இந்த ஒரு வாரத்தில், ரூ.14,000/- (ரூபாய் பதினான்காயிரம்) லாபம் கிடைத்துள்ளது.

    கலைக்கடவுளை நம்பினோர் கைவிடப்படார் !!!


    முன்னைய பதிவிலிருந்து

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #92
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    தண்டாயுதபாணி அருள்பாலிக்கும் பழனி மாநகரின் ஓம் ஷண்முகா திரையரங்கில், கலையுலகின் சிகர சிகாமணி நமது நடிகர் திலகத்தின் "சுமதி என் சுந்தரி" திரைக்காவியம், 3.2.2010 புதன்கிழமை முதல், தினசரி 4 காட்சிகளாக திரையிடப்பட்டு, மிக வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. உள்ளூர் மக்களுடன், மதுரை மாநகர, மாவட்ட மக்களும் மற்றும் திருச்சியிலிருந்தும் மக்கள் அலைகடலெனத் திரண்டு வந்து இத்திரைக்காவியத்தைக் கண்டு களித்து வருகின்றனர்.

    இத்தகவலை எமக்களித்த எமது நெருங்கிய நண்பரும், சிவாஜி மன்ற பேச்சாளருமான மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கும் மற்றும் பழனி நகர சிவாஜி மன்றத் தலைவர் திரு.முத்து விஜயன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!


    முன்னைய பதிவிலிருந்து

  4. #93
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாகர்கோவில் பயோனீர்முத்து திரையரங்கில், 25.12.2009(வெள்ளி) முதல் 27.12.2009(ஞாயிறு) வரை 3 நாட்களுக்கு, தினசரி 4 காட்சிகளாக, பாரத ஜோதியின் "பச்சை விளக்கு" திரைக்காவியம் திரையிடப்பட்டு, நல்லதொரு வெற்றியைப் பெற்றுள்ளது. இத்தகவலை எமக்களித்த எமது நெருங்கிய நண்பர் ரசிக நல்லிதயம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு நன்றி!

    முன்னைய பதிவிலிருந்து

  5. #94
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    திருப்பூர் வெற்றி அரங்கில் 9.2.2010(செவ்வாய்) முதல் 11.2.2010(வியாழன்) வரை 3 நாட்கள், தினசரி 4 காட்சிகளாக, நமது நடிகர் திலகத்தின் "கெளரவம்" வெற்றி நடை போட்டுள்ளது. நகரெங்கும் நிறைய போஸ்டர்களும் காணப்பட்டதாம். போஸ்டர் வாசகம் : "கண்ணா நீயும் நானுமா - சிவாஜி மிரட்டும் கெளரவம்". இச்செய்தியைத் தெரிவித்த கடலைக்காட்டுப்புதூர் திரு.சங்கர் அவர்களுக்கும், திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!

    முன்னைய பதிவிலிருந்து

  6. #95
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    திரைவானிலே என்றென்றும் புதிய பறவையாக சிறகடித்து பறந்து கொண்டிருக்கும் புதிய பறவை திரைக்காவியம், மதுரை மாநகரின் சென்ட்ரல் சினிமா திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, மீண்டும் வெற்றிக் கொடி நாட்டி, பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது. 12.2.2010(வெள்ளி) முதல் 14.2.2010(ஞாயிறு) வரையிலான 3 நாட்களில், புதிய பறவை அள்ளித் தந்த மொத்த வசூல் ரூ.25,000/- (ரூபாய் இருபத்து ஐந்தாயிரம்).

    புதிய பறவை = பண மழை.

    எந்தவொரு நடிகரின் எந்தவொரு புதிய படமும், சென்ட்ரல் தியேட்டர் மற்றும் இது போன்ற தியேட்டர்களில், ஷிஃப்டிங் முறையில் திரையிடப்படும் போது, ஒரு வாரத்தில் ரூ.35,000/- க்கும்(ரூபாய் முப்பத்து ஐந்தாயிரத்துக்கும்) குறைவாகவே மொத்த வசூல் கொடுக்கிறதாம்.

    nadigar thilagam, the king of acting is always the king at box-office.

    இத்தகவல்களை எமக்களித்த மதுரை ரசிக நல்லிதயம், எமது நெருங்கிய நண்பர், அரசமரம் செவாலியே சிவாஜி குரூப்ஸ் மன்றத்தைச் சேர்ந்த திரு.குப்புசாமி அவர்களுக்கு அன்பான நன்றிகள்!

    முன்னைய பதிவிலிருந்து

  7. #96
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    The Emperor of World Cinema, rules supreme in the Manchester of South India. Yes!

    கோவை மாநகரின், பழம்பெரும் திரையரங்கமான டிலைட் திரையரங்கில், கலையுலகின் முழுமுதற்கடவுளான சிவாஜி கணேசரின், முழுமுதற் திரைக்காவியமான பார் போற்றும் பராசக்தி, 12.2.2010(வெள்ளி) முதல் 14.2.2010(ஞாயிறு) வரை 3 நாட்களுக்கு, தினசரி 4 காட்சிகளாகத் திரையிடப்பட்டு, அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. பிப்ரவரி 14, ஞாயிறு மாலைக் காட்சியில் கோவை ரசிகர்கள் நிகழ்த்திய ஆரவார ஆர்ப்பாட்டங்களில் அரங்கமே குலுங்கியிருக்கிறது.

    இத்தகவலை எமக்கு வழங்கிய ரசிக நல்லிதயம் சிவாஜி வெள்ளியங்கிரி அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்!

    முன்னைய பதிவிலிருந்து

  8. #97
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    மதுரையில் புதிய பறவையின் வெற்றி பவனி குறித்து நண்பர் சுவாமியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு தகவலை சொன்னார். அதாவது கடந்த நான்கு வருடங்களாக எல்லா வருடமும் இதே சென்ட்ரல் திரையரங்கில் புதிய பறவை வெளியாகியிருக்கிறது. இடைவெளி என்பதே இல்லாமல் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இதை தவிர டி.வியில் இந்த நான்கு வருடங்களில் அதிகமாக ஒளிபரப்பட்ட படங்களில் புதிய பறவையும் ஒன்று. இதை தவிர இப்போது வெளியாகியிருக்கும் பிரிண்டில் சில பல இடங்களில் கட்கள் வேறு இருக்கின்றனவாம். இத்தனை எதிர்மறையான விஷயங்கள் இருந்த போதிலும் இந்த படம் பெற்ற வசூல் ஒரு பிரமிப்பான சாதனை. இந்த படத்தின் இடத்தில், அண்மைக் காலத்தில் மதுரையில் அதிகம் வெளியாகாத சிவந்த மண், எங்கள் தங்க ராஜா, சொர்க்கம் போன்றவை வெளியாகியிருந்தால் அந்த சென்ட்ரல் சினிமாவே தாங்கியிருக்காது.

    முன்னைய பதிவிலிருந்து

  9. #98
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    திரைவானில் என்றென்றும் அழகிய பறவையாக சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கும் "புதிய பறவை" திரைக்காவியம், மதுரையம்பதியின் சென்ட்ரல் சினிமா திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, 12.2.2010 வெள்ளி முதல் 18.2.2010 வியாழன் வரை, அமோக வரவேற்புடன் ஒடியுள்ள ஒரு வார கால கட்டத்தில், அள்ளித் தந்துள்ள மொத்த வசூல் ரூ.45,000 /- (ரூபாய் நாற்பத்து ஐந்தாயிரம்). பழைய படங்களைப் பொறுத்த வரை, இது மிகப் பெரிய, அரியதொரு சாதனை.

    விரைவில், சென்ட்ரல் சினிமாவில், அவன் தான் நடிகனின் "அவன் தான் மனிதன்".

    முன்னைய பதிவிலிருந்து

  10. #99
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    தாராசுரத்திற்கு தங்கப்பதக்கம் செளத்ரி அதிரடி விஜயம்!

    கும்பகோணத்திற்கு அருகாமையில், தாராசுரம் என்னும் ஊரில் உள்ள சூரியகாந்தி டூரிங் டாக்கீஸில், தினசரி 2 காட்சிகளாக(மாலை மற்றும் இரவு), 25.2.2010(வியாழன்) முதல் 27.2.2010(சனிக்கிழமை) வரை 3 நாட்களுக்கு, வெள்ளி விழாக் கண்ட தங்கப்பதக்கம் திரைக்காவியத்தின் மூலம் மாட்சிமை பொருந்திய மேதகு எஸ்.பி. செளத்ரி அவர்கள் தரிசனம் தருகிறார். இந்த தரிசனத்திற்காக காத்திருந்த ரசிக, பக்த, ஜன கோடிகள் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கின்றனர். அலைகடலெனத் திரண்டு, தங்கப்பதக்கம் வென்ற கடமை வீரரை கண்டு களித்து தரிசித்து வருகின்றனர். நேற்று 25.2.2010 மாலைக் காட்சியை 200 நபர்களுக்கும் மேல் கண்டு களித்துள்ளனர். ஒரு டிக்கெட்டின் விலை பத்து ரூபாய். ஒரே காட்சியில், அதுவும் டூரிங் டாக்கீஸில், ரூ.2000 /- த்துக்கும் மேல்(ரூபாய் இரண்டாயிரத்துக்கும் மேல்) வசூல் கிடைத்துள்ளது. இது ஒரு இமாலய சாதனை.

    இந்த சாக்லெட் செய்திகளை எமக்கு வழங்கிய ரசிக நல்லிதயம் குடந்தை ராமலிங்கம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!


    முன்னைய பதிவிலிருந்து

  11. #100
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    இரண்டு வாரங்களுக்கு முன் மதுரை சென்ட்ரலில் புதிய பறவை வெளியாகிறது என்ற செய்தியை சொன்ன நண்பனிடம் தியேட்டர் முகப்பை ஒரு சில புகைப்படங்கள் எடுத்து தருமாறு சொல்லியிருந்தேன்.

    படம் வெளியான வெள்ளியன்று காலையே இது எடுக்கப்பட்டு விட்டது. கைபேசியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை அவன் அனுப்புவதற்கு ஏற்பட்ட தாமதம் ஒரு பக்கம் என்றால் என் கணினியில் ஏற்பட்ட ஒரு தொழில் நுட்பக் கோளாறும் இதை மேலும் தாமதப்படுத்தி விட்டது.

    இனி, இது எடுக்கப்பட்ட நாள் படம் வெளியான வெள்ளி [12.02.2010] காலை 7 மணி. அப்போதே போஸ்டர் போர்டு- க்கு மாலை அணிவிக்கப்பட்டிருப்பதை காணலாம். புதிய படங்களுக்கு கூட இவ்வளவு அதிகாலையில் ரசிகர்கள் இதையெல்லாம் செய்வார்களா என்று தெரியவில்லை. ஆனால் நூற்றுக்கணக்கான முறை வெளியான படத்திற்கு கூட இப்போதும் இது போல் அலங்கரிக்கப்படுகிறது என்று சொன்னால் மதுரை எப்படிப்பட்ட நடிகர் திலகம் கோட்டை என்பதை சொல்லவும் வேண்டுமோ?.

    முன்னைய பதிவிலிருந்து

Page 10 of 59 FirstFirst ... 8910111220 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •