Results 1 to 10 of 590

Thread: மறு வெளியீட்டிலும் மன்னரின் சாதனை

Threaded View

  1. #11
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    மகாலட்சுமியில் மன்னவரின் சாதனைகள் தொடர்வதை இங்கே பதிவிட்ட நண்பர் RKS அவர்களுக்கு நன்றி. ஞாயிறு மாலைக் காட்சிக்கு வந்த கூட்டம் சரியான கூட்டம். உள்ளே அமர நாற்காலி இல்லாமல் நின்று கொண்டு படம் பார்த்த பலரையும் பார்க்க முடிந்தது. தங்க சுரங்கத்திற்கு எந்தளவிற்கு அலப்பரை இருந்ததோ அதே அளவிற்கு இங்கேயும் நடந்தது. அருமை நண்பர் சாரதியும் நானும் சென்றிருந்தோம். இருவருக்கும் வெவேறு வேலைகள் இருந்தன. இருவரின் எண்ணமும் படம் சிறிது நேரம் பார்த்து விட்டு கிளம்பி விடலாம் என்று நினைத்துதான் உள்ளே சென்றோம். ஆனால் எப்போதும் நாம் நினைப்பது போல் நம்மை கிளம்ப அனுமதிக்க மாட்டார் நடிகர் திலகம். நம்மை அப்படியே கட்டி போட்டு விடுவார். அன்றும் அதுதான் நடந்தது. இந்த காட்சி முடிந்தவுடன் போகலாம், இந்தப் பாடல் முடிந்தவுடம் போகலாம் என்று நினைத்து நினைத்து இருக்க இதற்கு நடுவில் சந்திக்கிறேன் என்று சொல்லியிருந்த நண்பரிடமிருந்து அலைபேசி அழைப்புகள் வேறு வருகிறாயா இல்லையா என்று. அதனை சமாளித்து முடிப்பதற்குள் இடைவேளை வந்து விட்டது. இடைவேளை முடிந்து கிளம்பலாம் என நினைத்திருக்கும் போது நமக்கு மிகவும் அறிமுகமான பாடலின் prelude music [பாடலின் ஆரம்ப இசை]. என்னவென்று எட்டிப் பார்த்தால் தேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே பாடல் காட்சி ஓட ஆரம்பித்தது. நான் சில நாட்கள் முன்பு நமது திரியில் குறிப்பிட்டிருந்தது போல மகாலட்சுமி திரையரங்கில் விரைவில் இரு துருவம் வெளியாக போகிறது. அதற்கு முன்னோடியாகத்தான் அந்தப் படத்தின் பாடல் ஒளிபரப்பட்டது. அந்த ஒரு பாடல் காட்சிக்கே ரசிகர்களின் பலத்த ஆரவாரம் அமர்க்களம்.

    பிறகு மீண்டும் இடைவேளைக்கு பிறகு வரும் படத்தின் சில காட்சிகள் வரை இருந்துவிட்டு கிளம்ப மனம் இல்லாமல் கிளம்பினோம். நண்பர் சாரதிக்கு இரவுக்கும் பகலுக்கும் பாட்டு பார்த்து விட்டு போகலாம் என்ற ஆசை. ஆனால் நான் கிளம்பியதால் அவரும் கிளம்ப வேண்டிய நிலை. ஆனால் இருவருக்குமே முழுமையாக பார்க்க முடியவில்லையே என்ற ஏமாற்ற்றம்தான் மனதில்.

    படத்திற்கு வந்த கூட்டத்தை பார்த்தவுடன் ஒன்று புரிந்தது. இந்தப் படமும் மகாலட்சுமியில் வசூல் சாதனை புரியும் என்று. சந்திப்பு தியாகம் போன்றே இதுவும் தியேட்டர் வாடகையை எல்லாம் வெகு எளிதாக கடந்து விட்டது. ஒரு வார இறுதியில் கணிசமான லாபத்தை வெளியிட்டாளருக்கு ஈட்டி தரும் என்பதும் இன்றைய 5-ம் நாளில் நிதர்சனமாக கண்ணுக்கு தெரிகிறது.

    அன்புடன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •