Page 9 of 59 FirstFirst ... 789101119 ... LastLast
Results 81 to 90 of 590

Thread: மறு வெளியீட்டிலும் மன்னரின் சாதனை

  1. #81
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சாதனை பட்டியல்

    இங்கே ஆண்டு வாரியாக நடிகர் திலகத்தின் சாதனைகள் பட்டியலிடப்படுவதை பார்த்து நமது ஹப்-ல் ஒரு உறுப்பினரும் பெங்களூரை சேர்ந்தவரும் நடிகர் திலகத்தின் பாரம்பரிய ரசிக குடும்பத்தை சேர்ந்தவருமான திரு.செந்தில் குமார் (அவரது தந்தையார் நடிகர் திலகத்தின் மிகப் பெரிய ரசிகராவார்), நடிகர் திலகத்தின் சில படங்கள் பெங்களூரில் மறு வெளியீட்டின் போது ஓடிய நாட்களை இங்கே நமக்காக அனுப்பியிருக்கிறார்.

    மனோகரா

    மறு வெளியீடு - 1988

    அரங்கம் - ஸ்ரீ டாக்கீஸ்

    நாட்கள் - இரண்டு வாரம்

    புதிய பறவை

    மறு வெளியீடு - 1989

    அரங்கம் - ஸ்ரீ டாக்கீஸ்

    நாட்கள் - மூன்று வாரம்

    இதில் முதல் வாரம் நடை பெற்ற அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்த காட்சிகளாக புதிய பறவை ஓடியது.

    பெங்களூரில் ஒரு தமிழ் படம் மறு மறு --- வெளியீட்டின் போது இப்ப்படி ஓடுவது என்பது ஒரு சாதனை என்கிறார் செந்தில்.

    நன்றி செந்தில். நீங்கள் குறிப்பிட்டுள்ள பிற படங்களை பற்றிய சாதனைகள் இங்கே பட்டியலிடப்படும் போது அவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.

    அன்புடன்


    முரளியின் முன்னைய பதிவிலிருந்து

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #82
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    16. பல மறு வெளியிட்டிற்கு பின் மதுரையில் 22. 07. 1977 அன்று சிந்தாமணி திரையரங்கில் திரையிடப்பட்ட சிவந்த மண் ஓடிய நாட்கள் - 23.

    17. இரண்டு வருடங்களுக்கு பின் 08.06.1979 அன்று மீண்டும் மதுரை ஸ்ரீ தேவியில் திரையிடப்பட்டு 14 நாட்கள் ஓடியது.

    18. நீண்ட இடைவேளைக்கு பின் 15.08.1985 அன்று மதுரை சிந்தாமணியில் திரையிடப்பட்ட தங்கசுரங்கம் ஓடிய நாட்கள் - 21

    முன்னைய பதிவிலிருந்து

    19. 1990-ம் ஆண்டு பெங்களுர் நகரில் சங்கீத் திரையரங்கில் திரையிடப்பட்ட தெய்வமகன் ஓடிய நாட்கள் - 21 (நன்றி செந்தில்)

    முன்னைய பதிவிலிருந்து

  4. #83
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    மறு வெளியீடிற்கு என்றே பிறவி எடுத்த படம் - வசந்த மாளிகை. அனேகமாக எல்லா வருடமும் மதுரையில் மற்றும் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் வெளியான போது மக்கள் மீண்டும் மீண்டும் பெரிய வரவேற்பு நல்கி ஆதரித்தார்கள்.

    பெங்களூரில் - 1984 ம் வருடம் மறு வெளியீட்டின் போது அருணா திரையரங்கில் ஓடிய நாட்கள் - 14 [ நன்றி செந்தில்].


    முன்னைய பதிவிலிருந்து

  5. #84
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    மதுரையின் மிகப் பெரிய திரையரங்குகளில் ஒன்றான சென்ட்ரல் சினிமா திரையரங்கில், 6.11.2009 வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகளாக , இரட்டை வேட நடிப்புக்கு இலக்கணமாகத் திகழும் , காலத்தை வென்ற காவியமாம் , நமது நடிகர் திலகத்தின் உத்தமபுத்திரன் திரைப்படம் திரையிடப்பட்டு வெற்றி நடை போட்டு வருகின்றது. முதல் நாளான 6.11.2009 வெள்ளியன்றே , கன மழையையும் பெரு வெள்ளத்தையும் பொருட்படுததாமல், பெருங்கூட்டம் அலை மோதியுள்ளது. 6.11.2009 , முதல் நாள் மொத்த வசூல் மட்டும் ரூ. 9890 /- (ஒன்பதாயிரத்து எண்ணூற்றி தொண்ணூறு). பழைய படங்களின் , முதல் நாள் வசூலில் , இது அசுர சாதனை.

    இன்று 8.11.2009 ஞாயிறு மாலைக் காட்சிக்கு , மழையையும் மீறி , பெரும் ஜனத்திரள் வரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    விக்ரமனையும் , பார்த்திபனையும் , வெள்ளித்திரையில் என்றென்றும் தரிசித்தே தீர வேண்டும் , என மக்கள் நினைக்கும் போது மழையாவது , வெயிலாவது !!!


    முன்னைய பதிவிலிருந்து

  6. #85
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    ராஜபாளையத்தில் உள்ள மீனாட்சி திரையரங்கில் , 12.11.2009 (வியாழன்) முதல் 5 நாட்களுக்கு , தினசரி 4 காட்சிகளாக , நமது நடிகர் திலகத்தின் நீதி திரைப்படம் திரையிடப்பட்டு , வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக , கணிசமான மக்கள் கண்டு களித்து வருகின்றனர். இத்தகவலை எமக்கு அளித்த மதுரை ரசிக நல்லிதயம் திரு. தி. அய்யம் பெருமாள் அவர்களுக்கு உளங்கனிந்த நன்றி !

    முன்னைய பதிவிலிருந்து

  7. #86
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாகர்கோவில் பயோனீர்முத்து திரையரங்கில் , 30.9.2009 முதல் 2.10.2009 வரை 3 நாட்களுக்கு தினசரி 4 காட்சிகளாக, நமது நடிகர் திலகத்தின் கெளரவம் திரையிடப்பட்டு , வெற்றிகரமாக ஓடியுள்ளது. பட வெளியீட்டாளருக்கு ரூ. 3000 /- (ரூபாய் மூவாயிரம்) லாபம் கிடைத்துள்ளது.

    மீண்டும் இதே, நாகர்கோவில் பயோனீர்முத்து திரையரங்கில் , 7.10.2009 முதல் 10.10.2009 வரை 4 நாட்களுக்கு தினசரி 4 காட்சிகளாக , நமது நடிகர் திலகத்தின் ராஜா திரையிடப்பட்டு , அத்திரைப்படமும் வெற்றி வாகை சூடியுள்ளது. படத்தை வெளியிட்டவருக்கு ரூ. 3000 /- த்திற்கும் மேல் (ரூபாய் மூவாயிரத்திற்கும் மேல்) லாபம் கிடைத்துள்ளது.

    இத்தகவலை , எமக்கு அளித்த ரசிக நல்லிதயம் , திரு. எஸ். ராமஜெயம் அவர்களுக்கு நன்றி !

  8. #87
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாகர்கோவில் ராஜாஸ் திரையரங்கில் , கடந்த 13.11.2009 (வெள்ளி) முதல் 16.11.2009 (திங்கள்) வரை , 4 நாட்களுக்கு தினசரி 4 காட்சிகளாக , உலக மகா நாயகரின் உயர்ந்த மனிதன் திரைப்படம் திரையிடப்பட்டு , நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தகவலை அளித்த ராமஜெயம் அவர்களுக்கு எமது நன்றி !

    முன்னைய பதிவிலிருந்து

  9. #88
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    அருள்மிகு மீனாட்சியம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் அருள் பாலிக்கும் மதுரையம்பதியில், சென்ட்ரல் சினிமா திரையரங்கில், இன்று (25.12.2009) முதல் தினசரி 4 காட்சிகளாக, கலையுலக சுந்தரேஸ்வரரின் திருவிளையாடல் புராண காவியம் திரையிடப்பட்டுள்ளது. இறையனாரின் திருவிளையாடல் திரைக்காவியத்தை தரிசித்து இறையருள் பெறுவோம் !

    முன்னைய பதிவிலிருந்து

  10. #89
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    மதுரை சென்ட்ரல் அரங்கிற்கு, பக்த கோடிகள் அலைகடலெனத் திரண்டு வந்து கொண்டே இருக்கின்றனர். கலையுலக சொக்கநாதரின் திருவிளையாடலை தரிசிக்கத் தானே இந்தக் கண்கள். வெள்ளிக்கிழமை (25.12.2009), முதல் நாள் மட்டும் , மொத்த வசூல் ரூ. 10600 /- (ரூபாய் பத்தாயிரத்து அறுனூறு). பழைய படங்களின், முதல் நாள் வசூலில், இது சிகர சாதனை.

    முரளி சாரின் யூகம் சரியே. நாளை திங்கட்கிழமை (28.12.2009) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்ட்ரலில், திருவிளையாடல், நடுநிசிக் காட்சியாக நள்ளிரவு 1:30 மணிக்கு திரையிடப்படுகிறது.

    தகவல்களை வழங்கிய மதுரை ரசிக நல்லிதயங்களுக்கு பசுமையான நன்றிகள் !!!


    முன்னைய பதிவிலிருந்து

  11. #90
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    மதுரை சென்ட்ரலில், சிவாஜி பெருமானின் திருவிளையாடல், வரலாறு படைத்துளளது. முதல் 5 நாட்களில் (வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய்), அதாவது 25.12.2009 முதல் 29.12.2009 வரை, மொத்த வசூலாக ரூ. 40000 /- (ரூபாய் நாற்பதாயிரம்) அளித்துள்ளது. பழைய படங்களைப் பொறுத்த வரை இது இமாலய சாதனை.

    வைகுண்ட ஏகாதசி (28.12.2009) அன்று, நடுநிசிக் காட்சியை தரிசித்தவர்கள் 192 பக்தர்கள். அந்த ஒரு காட்சிக்கு மட்டும் மொத்த வசூல் ரூ. 2200 /- (ரூபாய் இரண்டாயிரத்து இருநூறு). இதுவும், பழைய படங்களுக்கு ஒரு சிறப்பான சாதனையே.
    ( 5 நாள் மொத்த வசூல் தொகையில், நடுநிசிக் காட்சி வசூலும் அடங்கியுள்ளது.)

    முன்னைய பதிவிலிருந்து

Page 9 of 59 FirstFirst ... 789101119 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •