Page 8 of 59 FirstFirst ... 6789101858 ... LastLast
Results 71 to 80 of 590

Thread: மறு வெளியீட்டிலும் மன்னரின் சாதனை

  1. #71
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நடிகர் திலகம் - ஏ.பி.நாகராஜன் - ஜெமினி வாசன் கூட்டணியில் உருவான விளையாட்டுப் பிள்ளை வெள்ளிக்கிழமை நவம்பர் 14 முதல் சென்னை மகாலட்சுமியில் திரையிடப்பட்டு மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இரண்டே தினத்தில் 4 காட்சிகளில் பெற்ற வசூல் ஒரு புதிய சாதனை. வினியோகஸ்த நண்பர் மேலதிக தகவல்களை தருவார் என எதிர்பார்ப்போம். நல்ல பிரிண்ட் என்பது ஒரு தனி சிறப்பு.

    கூடுதல் சுவையாக நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை காவியம் நீலவானம் படத்திலிருந்து ஓஹோஹோ ஓடும் மேகங்களே பாடல் இடைவேளையின்போது நல்ல பிரிண்டில் காண்பிக்கப்படுவது அரங்கத்தையே அலற வைக்கிறது என்று பார்த்தவர்கள் சொல்கிறார்கள். அதிலும் round hat with coolers போட்டு நடிகர் திலகம் காலை வளைத்து நிற்கும் காட்சியில் உச்சகட்ட அலப்பரை என்று சொன்னார்கள்.

    தியேட்டருக்கு வந்திருந்த விநியோகஸ்தரை சுற்றிக் கொண்டு எப்போது இந்த படம் போடப் போகிறீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்களாம் ரசிகர்கள்.

    சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

    அன்புடன்

  2. Thanks Russellxqa thanked for this post
    Likes Russellxqa liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #72
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    வெள்ளிகிழமை நவம்பர் 14 முதல் நெல்லை மாநகர் சென்ட்ரல் திரையரங்கில் நடிக மன்னனின் வெள்ளை ரோஜா வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நெல்லையில் கடுமையான மழை. அந்த மழையிலும் ஒரோரு காட்சிக்கும் கணிசமான மக்கள் வந்திருந்து படத்தை கண்டு களித்திருக்கிறார்கள். வரும் நாட்களில் மேலும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.

    கோவை மாநகரில் டிலைட் திரையரங்கில் வெள்ளிக்கிழமை நவம்பர் 14 முதல் வெளியாவதாக இருந்த நடிகர் திலகத்தின் அண்ணன் ஒரு கோவில் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அடுத்த வெள்ளிகிழமைக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

    சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

    அன்புடன்

  5. #73
    Junior Member Newbie Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks for ur news item. Sir, Today i have opened a New Page in Facebook on Nadigarthilagam Sivaji ganesan namely"Sivaji Raghu". All the world sivaji fans can contribute in it by sending rare photos, news items, their addresses, E Mail ID, and landline and Cell Phone numbers, so that everyone can share their views with an open heart. I hope you will appreciate this and will publish this tag in appropriate thread-agra2014

  6. #74
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    வெள்ளிகிழமை நவம்பர் 14 முதல் நெல்லை மாநகர் சென்ட்ரல் திரையரங்கில் நடிக மன்னனின் வெள்ளை ரோஜா வெளியாகி வெற்றிகரமாக ஒரு வாரத்தை நிறைவு செய்தது. நெல்லையில் கடுமையான மழை. அந்த மழையிலும் ஒரோரு காட்சிக்கும் கணிசமான மக்கள் வந்திருந்து படத்தை கண்டு களித்திருக்கிறார்கள்.

    இதில் குறிப்பிட தக்க விஷயம் என்னவென்றால் நீதி 9 நாட்கள் இப்போது வெள்ளை ரோஜா 7 நாட்கள். அதாவது ஒரு மாதத்தில் (30 நாட்களில்) 16 நாட்கள் நடிகர் திலகத்தின் படங்களே அந்த சென்ட்ரல் திரையரங்கில் ஓடியிருக்கின்றன. நடிகர் திலகத்தின் படங்கள் ஓடாது என்ற கணிப்புகள், ஜோசியங்கள், செயற்கை தடைகள் அனைத்தையும் தாண்டி இது நிகழ்கிறது. அதுவும் சாதாரணமாக ஓடவில்லை. இந்த இரண்டு படங்களுமே மறு வெளியீட்டு படங்களில் அதிக வசூலும் பெற்றிருக்கிறது. இன்றைய அன்றைய படங்களை விட அதிக வசூல் என்பது ஒரு போனஸ். இரண்டு படங்களையும் வெளியிட்ட விநியோகஸ்தரிடம் தியேட்டர் அதிபர் அடுத்த மாதம் மற்றொரு சிவாஜி படத்தை எங்கள் அரங்கில் திரையிடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருப்பது எக்ஸ்ட்ரா போனஸ் செய்தி.

    சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

    அன்புடன்

  7. #75
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கடந்த வெள்ளிக்கிழமை நவம்பர் 14 முதல் சென்னை மகாலட்சுமியில் திரையிடப்பட்ட நடிகர் திலகம் - ஏ.பி.நாகராஜன் - ஜெமினி வாசன் கூட்டணியில் உருவான விளையாட்டுப் பிள்ளை மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ஒரு வாரத்தை நிறைவு செய்த படம் வினியோகஸ்த நண்பருக்கு மகிழ்ச்சிக்குரிய லாபத்தை பெற்று தந்திருக்கிறது. விஷயத்தை கேள்விப்பட்டு நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சீனிவாசா மற்றும் கிருஷ்ணவேணி அரங்குகள் இந்தப் படத்தை அவர்களது அரங்கில் திரையிடுவதற்கு ஆர்வம் காண்பித்திருக்கின்றன. இந்த படமெல்லாம் எங்கே ஓடப் போகிறது என்று வழக்கம் போல் மீரான் சாஹிப் தெருவில் கிண்டலடித்தவர்கள் இப்போது வாய் மூடி மௌனம் காக்கிறார்கள். சென்னையில் விளையாட்டுப் பிள்ளையின் வசூலைப் பார்த்த மற்ற மாவட்ட விநியோகஸ்தர்கள் அவர்கள் ஏரியாக்களில் படத்தை வெளியிட முனைப்பு காட்டுகின்றனர்.

    விளையாட்டுப் பிள்ளை படத்தை சென்னையில் திரையிட்ட JRL combines அடுத்தபடியாக நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை காவியமான இரு மலர்கள் படத்தை திரையிடுகின்றனர். அதன் பிறகு நீலவானம் வெளியாகும் என தெரிகிறது.

    கோவை மாநகரில் டிலைட் திரையரங்கில் வெள்ளிக்கிழமை நவம்பர் 21 முதல் வெளியாகி இருக்கும் நடிகர் திலகத்தின் அண்ணன் ஒரு கோவில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. முதல் இரண்டு நாட்களில் படம் வந்த ஆட்களைப் பார்த்து விட்டு அரங்க உரிமையாளர் ஆச்சரியப்பட்டு போனாராம். படத்திற்கு வந்த High class audience அவரின் ஆச்சரியத்திற்கு ஒரு காரணம் என்றால் தியேட்டருக்கு வந்த கணிசமான பெண்கள் கூட்டம் மற்றொரு காரணம். அதிலும் ஒரு நான்கு பேர் 15 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஊரிலிருந்து இந்த படம் பார்க்க வேண்டும் என்று வந்திருக்கிறார்கள். மொத்தம் விற்பனையான டிக்கெட்களில் 25 சதவீதம் பெண்கள் என்பது தனிச் சிறப்பு.

    சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

    அன்புடன்

  8. #76
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கோவை மாநகரில் டிலைட் திரையரங்கில் இன்று அண்ணனுக்கு அமோக வரவேற்பு.

    இன்று மாலைக் காட்சி எப்படி களை கட்டப்போகிறது என்பதன் அறிகுறி மதியக் காட்சியிலே தெரிந்து விட்டதாம். மதியக் காட்சிக்கு நல்ல கூட்டம் என்றால் மாலைக் காட்சி அமர்களப்படுத்தி விட்டதாம். பால்கனி ஹவுஸ் புல். இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள் புஃல். முதல் வகுப்பு கிட்டத்தட்ட நிறைந்து விட்டனவாம். டிலைட் அரங்கில் வெகு நாட்களுக்கு பிறகு ஹை கிளாஸ் பால்கனி டிக்கெட்டுகள் முழுமையாக விற்பனையாகி இருக்கிறது. ஒரே காட்சிக்கு பால்கனியும் இரண்டாம் வகுப்பும் நிறைவது வெகு நாட்களுக்கு பிறகு நடக்கிறதாம். இன்றைய மாலைக் காட்சிக்கு மட்டும் 30 சதவீதம் பெண்கள் வந்திருக்கின்றனர். அதில் முக்கால்வாசிப் பேர் family audience. முதல் இரண்டு நாட்களில் மொத்தம் எத்தனை பேர் பார்த்தார்களோ அதையும் தாண்டிய எண்ணிக்கையில் இன்றைய தினம் audience வந்திருக்கிறார்கள்.

    மிகவும் சந்தோஷம் அடைந்துள்ள அரங்கத்தை லீசிற்கு எடுத்து நடத்துபவர் இப்போது அனைத்து அரங்க உரிமையாளர்களும் சொல்லும் அதே வார்த்தையான அடுத்த மாதம் இன்னொரு சிவாஜி படத்தை திரையிடுங்கள் என்று படத்தை வெளியிட்டவரிடம் சொல்லியிருக்கிறார்.

    சென்னை திருச்சியை தொடர்ந்து இப்போது கோவையிலும் சாதனை படைத்திருக்கிறார் Dr. ரமேஷ். அவரின் திக்விஜயம் மேலும் தொடரும்.

    சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

    அன்புடன்

    இன்று கிடைத்த தகவல்படி வரும் டிசம்பர் 5 வெள்ளி முதல் நெல்லைக்கு சிபிஐ ஆபீசர் ராஜன் விஜயம் செய்கிறார். ஆம், நெல்லை சென்ட்ரலில் தங்கசுரங்கம் வெளியாகிறது.

  9. #77
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    வருடம் - 1959

    கட்டபொம்மனின் வெற்றி சரித்திரம் தொடர்கிறது

    1. முதன் முதலாக கேரளத்தில் 100 நாட்கள் ஓடிய தமிழ் படம் - கட்டபொம்மன்.

    ஊர் - திருவனந்தபுரம்

    2. மீண்டும் மீண்டும் திரையிடப்பட்ட இந்த படம் ஒரு இடைவெளிக்கு பின் 07.09.1984 அன்று தமிழகமெங்கும் வெளியானது. அப்போது நிகழ்த்திய சில சாதனைகள்

    சென்னை மாநகரில் ஒன்றன் பின் ஒன்றாக பல திரையரங்குகளில் இந்த படம் ஓடிய நாட்கள் - 175. அதாவது வெள்ளி விழா.

    3. புதிய படங்களே ஓட முடியாமல் தவித்த போது நடிகர் திலகத்தின் 25 வருட பழைய படம் (1959 -1984) வெள்ளி விழா கொண்டாடியது இன்று வரை முறியடிக்க முடியாத சாதனை.

    4. மதுரையிலும் 07.09.1984 அன்று அலங்கார் திரையரங்கில் வெளியான இந்த படம் ஓடிய நாட்கள் - 45. இதுவும் ஒரு சாதனை.

    [ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி தீபாவளிக்கு (22.10.1984) புதிய படம் திரையிடப்பட்டதால் நிறுத்தப்பட்டது].

    5. நடிகர் திலகத்தின் மறைவிற்கு பிறகு 01.03.2002 அன்று வெளியான கட்டபொம்மன் மதுரை - சிந்தாமணியில் 2 வாரங்கள் ஓடியது.

    6. ஷிப்டிங்கில் மதுரை மட்டும் சுற்று வட்டாரங்களில் ஓடிய நாட்கள் -143


    முரளியின் முன்னைய பதிவிலிருந்து

  10. #78
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    வருடம் - 1963

    1. கதையாக வெளி வந்து அதன் பின் திரைப்படமாக்கப்பட்ட படம் இருவர் உள்ளம். வெகு நாட்களுக்கு பிறகு நடிகர் திலகம் - கலைஞர் பங்களிப்பில் வந்த படம் இருவர் உள்ளம்.

    100 நாட்கள் ஓடிய படம் - இருவர் உள்ளம்.

    2. ஒரு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் இருவர் உள்ளம் திரையிடப்பட்ட போது செய்த சாதனைகள்.

    சென்னையில் ஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 100

    திருச்சியில் ஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 75

    மதுரை பரமேஸ்வரியில் - 4 வாரம்


    முரளியின் முன்னைய பதிவிலிருந்து

  11. #79
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Originally Posted by Murali Srinivas 2. ஒரு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் இருவர் உள்ளம் திரையிடப்பட்ட போது செய்த சாதனைகள்.

    திருச்சியில் ஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 75
    இதற்குப் பின்னர் நான் திருச்சியில் இருந்த போது (1991 அல்லது 1992) இருவர் உள்ளம் ஸ்டார் திரையரங்கில் (A/C) வெளியிடப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்று 4 வாரங்கள் ஓடியது .

    joe வின் முன்னைய பதிவிலிருந்து

  12. #80
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    6. 1965 வருடம் ஜூலை 31 அன்று வெளியான இந்த படம் 1966 ஜனவரி 13 வரை 167 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. முன்கூட்டியே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி பொங்கலுக்கு புதிய படம் வெளியிடப்பட்டதால் நிறுத்தப்பட்டது.

    ஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 200

    7. பல ஆண்டுகளுக்கு பிறகு அதே மதுரை - ஸ்ரீதேவியில் வெளியானபோது செய்த சாதனைகள்

    வெளியான நாள் - 20.02.1985

    ஓடிய நாட்கள் - 28

    மொத்த வசூல் - Rs 2,57,600.80 p

    மதுரையில் ஒரு மறு வெளியீட்டின் போது நான்கே வாரத்தில் மிக அதிகமான வசூல் புரிந்த சாதனையும் செய்தது நடிகர் திலகத்தின் திருவிளையாடல் மட்டுமே.

    முரளியின் முன்னைய பதிவிலிருந்து

Page 8 of 59 FirstFirst ... 6789101858 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •