Page 13 of 17 FirstFirst ... 31112131415 ... LastLast
Results 121 to 130 of 164

Thread: Silambarasan♥ NayanThara•இது நம்ம ஆளு 2016

  1. #121
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் மீண்டும் நயன்தாராவுடன் நடிப்பேன் - சிம்பு பேட்டி

    சிம்பு, நயன்தாரா நடித்துள்ள இது நம்ம ஆளு வரும் 27 -ஆம் தேதி வெளியாகிறது. அதனை முன்னிட்டு சிம்பு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.


    இது நம்ம ஆளு எந்த மாதிரி படம்?

    விண்ணைத்தாண்டி வருவாயா மாதிரி ஒரு காதல் படம் இது. வழக்கமான சிம்பு படமாக இருக்காது. இதில், பஞ்ச் வசனங்கள் கிடையாது. வெறும் காதல் மற்றும் சண்டை காட்சிகளை மட்டும் கொண்ட படமாக இருக்காது.


    சண்டைக் காட்சி இருக்கிறதா?

    சண்டை காட்சி இல்லாமல் நான் நடித்த முதல் படம் இது. திருமணத்துக்கு முந்திய காதலை சொல்லும் படமாக இருக்கும்.


    இது நம்ம அளு படத்தின் சிறப்பு என்ன?

    திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்ட ஒரு இளைஞருக்கும், பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை பேசும் படம் இது. இருவருக்கும் இடையே திருமணத்துக்கு முன்பு நடைபெறும் நிகழ்வுகளை சித்தரிக்கும் கதை. இந்த படத்தை பார்க்கும் எல்லா இளைஞர்களும் சிம்பு மாதிரி இருக்க வேண்டும் என்றும், எல்லா பெண்களும் நயன்தாரா மாதிரி இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள். இப்படி ஒரு பையன் நமக்கு கணவராக வரவேண்டும் என்று பெண்கள் விரும்புவார்கள். அதுமாதிரி என் கதாபாத்திரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.


    நீங்களும், நயன்தாராவும் மீண்டும் ஜோடியாக நடிப்பீர்களா?

    எங்கள் இருவருக்கும் பொருத்தமான நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால், மீண்டும் ஜோடியாக நடிப்போம்.


    ஒரு பாடல் காட்சியில் நயன்தாரா நடிக்க மறுத்து விட்டதாக பேசப்பட்டதே?

    படம் தாமதம் ஆனதால், அந்த பாடல் காட்சியில் அவரால் நடிக்க முடியவில்லை. தனிப்பட்ட முறையில் நயன்தாராவுடன் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது.


    படம் தாமதம் ஆனதற்கு யார் காரணம்?

    யாரும் காரணம் அல்ல. படம் நன்றாக வந்திருக்கிறது. அந்த வகையில் படக்குழுவினர் அனைவருக்கும் சந்தோஷம்.


    உங்களுக்கு வீட்டில் பெண் பார்த்தார்களே...அது என்ன ஆனது?

    இந்த கேள்விக்கான பதிலை இறைவன் பார்த்துக் கொள்வார். நம் கையில் ஒன்றுமில்லை. நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #122
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    நடிக்கலை வாழ்ந்தாங்க - பாண்டிராஜ் சொல்லும் சிம்பு, நயன்தாரா லவ் கெமிஸ்ட்ரி

    இது நம்ம ஆளு வரும் 27 வெளியாகிறது. முன்னாள் காதலர்களின் திரைக்காதலைப் பார்க்க ரசிகர்கள் தயார்.



    சிம்பு, நயன்தாரா காதல் காட்சிகள் எப்படி வந்திருக்கின்றன என படத்தின் பாண்டிராஜ் கூறினார்.

    "சட்டென்று பூக்கும் பூவைப்போல, மின்னலைப்போல எந்த நொடியில் காதல் தோன்றும் என்பதை சொல்ல முடியாது. அந்த காதலை மைய கருத்தாக கொண்டு நான் செதுக்கியுள்ள திரைப்படம் தான் இது நம்ம ஆளு. ஐடி நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் தம்பதியர்களின் காதல் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி எனக்குள் வெகு நாட்களாக இருந்து வந்தது. எனது அந்த தேடலின் முயற்சி தான் இந்த 50 சதவீத காமெடி மற்றும் 50 சதவீத காதல் திரைப்படம்.

    படத்தில் நாயகன், நாயகியாக நடித்த சிம்பு, நயன்தாராவிற்கு நான் காதல் காட்சிகளை சொல்லி தர வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவர்கள் இருவரின் சிரிப்பு, காதல் பார்வை, செல்ல கோபம் என அனைத்தும் படத்தின் லவ் கெமிஸ்டிரிக்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது. அவர்களின் காதல் காட்சிகள் யாவும் நடிப்பு போலவே இல்லை. பத்து வருடத்திற்கு பிறகு இவர்கள் இணைந்து நடிக்கும் இந்த படம், எது மாதிரியும் இல்லாம, புது மாதிரியும் இல்லாம, ஒரு மாதிரியா இருக்கும்" என்றார்.

    பிடிக்கிற மாதிரி இருந்தா சரிதான்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  4. #123
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Total 50 screens in USA releasing big via @PinakinStudios ⚡️�� #inarockingadvancebookings @iam_str @pandiraj3 @NayantharaU
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  5. #124
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Idhu Namma Aalu: 5 reasons to watch Simbu and Nayanthara film - www.ibtimes.co.in

    1) It is well known that Simbu and Nayanthara were in love from long time and had broken up due to some personal issues. After this incident now they both are coming together with this movie, so fans are eagerly waiting to see them together on screen. Vallavan which gave a big hit for both of them, we wish for the same success.

    2) Simbu's brother Kuralarasan has given the music score for this movie. He has already received good response to his previous songs. Now everyone is waiting for Simbu's steps for the score, especially his mass song in movie "Maman Waiting".

    3) Simbu and Soori will be together throughout the film. They are teaming up for the first time we have to wait for their new combination.

    4) Pandiraj direction has come up very well, he stated that both the actors had good chemistry on screen. The director has given many good films like Pasanga etc...

    5) The grand release of this movie will be in 350 plus theatres in Tamil Nadu alone, Simbu has been always active on social media, he is a very popular actor in media pages. Even we can see Santhanam in 2-3 scenes which will make us to shrink in laughter.
    Last edited by balaajee; 26th May 2016 at 04:14 PM.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  6. #125
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    'Idhu Namma Aalu' celebrity review: Simbu-Nayanthara starrer garners positive response

    The makers of "Idhu Namma Aalu" could not have expected to have a better pre-release buzz than this as the Tamil movie has garnered positive reviews from the people who have already seen it.
    A special show for celebrities was organised on Wednesday, May 25, in Chennai. "With excellent pre-release buzz & positive WOM from last night's celebrity premiere, #INA set for grand release tomm, [sic]" journalist Haricharan Pudipeddi wrote on his Twitter. Among many celebrities, Dhananjayan Govind has taken Twitter to praise "Idhu Namma Aalu."
    Dhananjayan Govind tweeted, "Watched #IdhuNammaAalu at a special show by @iam_str ...I would call #IdhuNammaPadam" ba ...a breezy romantic entertainer. Congrats to Team, [sic]"
    Talking about the performance, he wrote, "@iam_str is back with a bang with his usual & effortless performance & with #Nayanthara he is simply superb. #Andrea makes a good impact, [sic]"
    He added, "The film is another superb dialogue based entertainer from @pandiraj3 sir. He rocks & makes us laugh throughout. Congrats for another winner," and concluded, "Special appreciation to @sooriofficial ...He comes out with superb one liners throughout #IdhuNammaAalu & entertains us. Good work Team. [sic]"
    Another celebrity, Tania Samtani, also appreciated the movie on her Twitter account. She posted, "#Ina #mustwatch it's amazing how this one comes back with a bang every single time ! #proud @iam_str #funny as hell @sooriofficial,[sic]"
    She added, "#INA Fun film, super comedy @iam_str Ps: this year marks 12 years since I know U and u will always be namma aalu! [sic]"
    "Idhu Namma Aalu" is a romantic comedy movie, written and directed by Pandiraj. The upcoming Tamil movie is produced by Simbu's father, T Rajender. Andrea Jeremiah plays the second female lead in "Idhu Namma Aalu," which also features Soori, Arjunan, Jayaprakash, Uday Mahesh and Madhusudhan Rao in the supporting roles. Adah Sharma has done an item number in the flick.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  7. #126
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    MOVIE STILLS









    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  8. #127
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    “Idhu Namma Aalu isn’t just a breezy ROM-COM, but celebration of love and glorifying women” – STR

    Certain films have shown the absolute essence of these traits of how True Love brings heavens into everyone’s lives. Much adherent to these aspects, some of the STR films have been the greatest illustrations of how beautifully Love was adored. Even the disunited love turned to be an inspiration for Karthik in ‘Vinnaithaandi Varuvaaya’, where his true love was glorified. Well, his upcoming film ‘Idhu Namma Aalu’ has more to celebrate with love as it all arrives to offer a wholesome breezy entertainer for family audiences.

    “It’s been a great journey, creating this emotional love story that has finally cleared off the hurdles and gets ready for a worldwide release on May 27. I ardently thank Pandiraj sir for this graceful film and his soft-natured patience at speculative times. The basic sketch of the hero is very well carved I will say. Every girl will have a dream about her future husband in terms of certain qualities, the Hero of ‘Idhu namma aalu’ will match many credentials of a normal girl’s dreams, and such is the intensity of the character. I thank Nayanthara for her complete cooperation for this film and her role will be greatly appreciated not alone her for onscreen charisma, but a promising performance. The film is more like a token of respect for women, who have been the source of all divine love from being a mother, sister, spouse and daughter. Idhu Namma Aalu isn’t just a breezy love tale that would sparkle your moments with smile and happiness, but has something special and cherishing to take home back. I thank Sri Thenandal Films for their earnest efforts in promoting the film to a greater magnitude and everyone, who have been a part of this film. My father co incidentally the producer of this film has invested not only his hard earned resources but also his time and integrity to present a clean family entertainer that had been a brand equity of his banner. Kuralarasan the music director has created a sensation i will say with the assorted numbers. I reserve my biggest of gratitude to my fans who stand by me in fire and ice and what else could be a better gift to them than a film they could hold closer to heart forever. I wholeheartedly believe the film would have a great opening as fans showed their love for all my previous releases’ concluded STR with a smile that had stolen many a hearts.

    “காதலின் சிறப்பு மட்டுமின்றி, பெண்களை மகிமைப்படுத்தும் வண்ணமாகவும் அமைந்துள்ளது இது நம்ம ஆளு திரைப்படம்!”– சிலம்பரசன்
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  9. #128
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    இது நம்ம ஆளு - படத்தை திரையிட இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம்

    சென்னை: நடிகர் சிம்பு, நடிகை நயன்தாரா நடித்த, 'இது நம்ம ஆளு' படத்தை கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் நாளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 'இது நம்ம ஆளு' திரைப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாக இருந்த நிலையில், இந்தப் படத்தை திரையிட தடை விதிக்க கோரி, சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய்குமார் லால்வானி என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

    இதில், சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரித்துள்ள 'இது நம்ம ஆளு' படத்தில் நடிகர் சிம்புவும், அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவும் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.ஆனால், இந்த படத்தைத் தயாரிக்க சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் எங்களிடம் ரூ.1.9 கோடி கடனாகப் பெற்றிருந்தது. இந்தக் கடனை 36 சதவீத வட்டியுடன் படத்தை வெளியிடுவதற்கு முன்பாக திருப்பித் தருவதாகவும், அத்துடன் வட ஆற்காடு, தென் ஆற்காடு பகுதி விநியோக உரிமையையும் தருவதாகவும் உறுதியளித்து இருந்தனர்.ஆனால், திடீரென வேறு ஒரு நிறுவனம் வாயிலாக தமிழகம் முழுவதும் மே 27-இல் திரையிட திட்டமிட்டுள்ளனர். எனவே, இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம், இது நம்ம ஆளு படத்தை திரையிடக்கூடாது என வழக்குத் தொடர மனுதாரருக்கு போதிய முகாந்திரம் உள்ளது.எனவே, மனுதாரரிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் வரை வட ஆற்காடு, தென் ஆற்காடு சினிமா விநியோக பகுதிகளான கடலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  10. #129
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    என்னை இயக்குவது கடவுள் - சிம்புவுடன் ஒரு நேர்காணல் - Tamil HINDU


    தன்னைச் சுற்றி எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் எப்போதுமே அதனை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார் சிம்பு. எந்தச் சூழ்நிலையிலும் சினேகமாகவும் யதார்த்தமாகவும் பேசும் அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…

    சண்டை, நாயகனுக்கான அறிமுகப் பாடல் எதுவுமே இல்லாமல் ‘இது நம்ம ஆளு’ படத்தை எப்படி ஒப்புக்கொண்டீர்கள்?

    இது உண்மையில் சிம்பு படம், பாண்டிராஜ் படம் மாதிரியே கிடையாது. இந்தப் படம் ஒப்புக்கொண்டதில் எனக்கு ஆபத்து இருப்பது உண்மைதான். இந்தக் கதையை நான் கேட்கும்போது, யாரோ இரண்டு பேர் நடித்தாலும் இப்படம் வெற்றிதான் என்று தோன்றியது. நானும் நயனும் நடித்தால் சூப்பர் ஹிட்டாகும் என்று ஒப்புக்கொண்டேன். ‘சுப்பிரமணியபுரம்’ வெற்றிதான். ஆனால் அதே படத்தில் சசிகுமார் - ஜெய் வேடங்களில் அஜித் - சிம்பு இருவரும் நடித்திருந்தால் அப்படத்துக்குக் கிடைத்திருக்கக்கூடிய வெற்றியை எண்ணிப் பாருங்கள். அதுதான் இந்தப் படம்.
    திருமணமாவதற்கு முன்பு புருஷன் - பொண்டாட்டி இருவருக்கும் ஒரு மொபைல் போன் காதல் இருக்கும். அதுதான் இந்தப் படம். இதில் சிம்பு - நயன் இருவரும் தெரிய மாட்டார்கள். இருவருமே பாத்திரங்களாகத்தான் தெரிவோம்.

    பாண்டிராஜ், கெளதம் மேனன் இருவருமே “சிம்பு. தாமதமாக வருவது மட்டுமே அவரிடம் இருக்கும் பிரச்சினை” என்று கூறுகிறார்களே.

    ரஹ்மான் சார் கிட்ட நீங்க காலையில் பாட்டு கொடுத்தால் நீங்கள் இருக்க வேண்டிய இடமே வேற என்பதுபோல் இருக்கிறது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி வேலை செய்வார்கள். நான் தாமதமாகப் போக வேண்டும் என்ற எண்ணத்தோடு போவதில்லை. தாமதமாக வருவதைப் பற்றிப் பேசுபவர்கள், தாமதமாக வந்தாலும் வேலையைச் சரியாக முடித்துக் கொடுக்கிறேனே, அதைப் பற்றிப் பேசுவதில்லையே. தவறைப் பற்றி மட்டுமே பேசுவார்கள், நல்லதைப் பற்றிப் பேசவே மாட்டார்கள். அவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காகத் தவறைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தால், என்னுடைய நல்ல விஷயங்கள் காணாமல் போய்விடும். நான் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.

    எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் எதற்கும் கவலையே படாமல் இருக்கிறீர்களே…

    அதை எல்லாம் தாண்டி வந்துவிட்டேன். கடவுளிடம் என்னை ஒப்படைத்துவிட்டேன். நடிப்பது மட்டும்தான் நான். என்னை இயக்குவது கடவுள். நான் அடைந்திருக்கும் இடம் ஒரே நாளில் எனக்குக் கிடைத்ததல்ல. கொஞ்சம் கொஞ்சமாக இந்த அளவுக்கு வந்திருக்கிறேன். அதனால் நான் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. ஒருவேளை நாளை என்னை வைத்து யாருமே படம் இயக்க முன்வரவில்லை என்றாலும்கூட சிலம்பரசனே இயக்குவார். நம்ம விட்ட இடத்தைப் பிடிக்க என்ன பண்ண வேண்டும் என்று எனக்குத் தெரியும். அதனால் நான் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. உள்ளுக்குள் நான் யார், எந்த இடத்தில் இருக்கிறோம் என்று தெரியும். தாமதம் என்கிற விஷயம் எல்லாம் என்னைப் பாதித்தது இல்லை.
    ஹிட் கொடுத்தால் மதிப்பார்கள், ப்ளாப் கொடுத்தால் மிதிப்பார்கள். ஆனால், நான் ஒரே மாதிரிதான் இருந்திருக்கிறேன். அது மட்டுமே என்னைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. மாறுபவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. 4 வருஷம் படம் வரவில்லை என்றாலும், தொடர்ச்சியா 4 வருஷம் ஹிட் கொடுத்தாலும் சிம்பு ஒரே மாதிரி இருப்பான். அது என்றைக்குமே மாறாது.

    இனிமேல் படங்கள் வெளியீட்டில் தாமதம் இருக்குமா, இருக்காதா?

    இனிமே வேற மாதிரி இருக்கும். நான் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இப்போது இல்லை. நிரூபித்தே ஆக வேண்டும் என்ற பயம் எல்லாம் எப்போதோ போய்விட்டது. அப்படி இருந்தால்தானே கவலைப்பட வேண்டும். இப்போது ரசிகர்களிடம் என்னை ஒப்படைத்துவிட்டேன். என்னை அவர்கள் வழிநடத்துவார்கள். 3 படங்கள் தொடர்ச்சியாக ப்ளாப், இனிமேல் சிம்பு படமே வேண்டாம் என்றால்கூட ஜாலியாகக் கிளம்பி ஊருக்குப் போவேன்.

    ‘அச்சம் என்பது மடமையடா’ நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்துவருகிறதே..

    ‘மின்னலே’, ‘காக்க காக்க’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘வேட்டையாடு விளையாடு’ என அனைத்து பாணியிலும் ஹிட் கொடுத்திருக்கிறார் கெளதம் மேனன். இவை அனைத்தும் கலந்த படம்தான் ‘அச்சம் என்பது மடமையடா’. முதல் பாதி முழுக்க ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ என்றால் இரண்டாம் பாதி முழுக்க ‘வேட்டையாடு விளையாடு’ என்று புதுமையாக இருக்கும். கமர்ஷியலாக ஒரு சில விஷயங்கள் பண்ணியிருக்கார். ரசிகர்களுக்கு புதுசாக இருக்கும்.

    நடிகர் சங்கத்தை விட்டு விலகப் போகிறேன் என்றீர்களே...

    அந்த எண்ணம் இருந்தது உண்மைதான். தற்போது நடிகர் சங்கத்தை விட்டு விலகவில்லை. இதுவரை நான் கடிதம் கொடுக்கவில்லை. அப்பா, நாசர் சார் எல்லாம் பேசியதால் நான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக நீடிக்கிறேன்.
    தேர்தல் வாக்குப் பதிவு அன்று “மாற்றம் ஏன்?” என்று கேட்டீர்கள். அதிமுக மீது உங்களுக்கு அவ்வளவு பிரியமா?
    மாற்றம் வேண்டுமா என்று கேட்டார்கள். சரி நமக்கு என்ன தோணுதோ சொல்லலாம் என்று “இந்த ஆட்சியே நல்லாதானே இருக்கு. ஏன் மாற்றம்” என்று சொன்னேன். ஏனென்றால் என்னுடைய வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்பதால் மாற்றம் வேண்டாம் என்று சொன்னேன். உடனே அதிமுகவுக்கு ஆதரவு என்று தெரிவித்துவிட்டார்கள். உண்மையில் திமுகவில்தான் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அதிமுகவில் எனக்கு யாரையுமே தெரியாது. பீப் பாடல் பிரச்சினையின்போதுகூட நான் யாரிடமும் பேசவில்லை. திமுக ஆட்சியில் இருந்தால் என்னால் கருணாநிதி ஐயாவிடம் பேச முடியும். அரசியல்வாதியாக நான் எதுவும் சொல்லவில்லை, ஒரு குடிமகனாக எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். அவ்வளவுதான்.

    உங்களைப் பற்றி தவறாக வரும் செய்திகளுக்குக்கூட அமைதியாக இருக்கிறீர்களே… வருத்தமே இல்லையா?

    நான் பண்ணாததைச் சொல்லும்போது கொஞ்சம் வருத்தப்படுவேன். மற்றபடி கிசுகிசு உள்ளிட்ட செய்திகளுக்கு எல்லாம் நான் கவலைப்படுவதே இல்லை. பீப் பாடலே நான் வெளியிடவில்லை. ஒரு தாயின் வயிற்றுக்குள் இருக்கும் கருவை 4 மாதத்திலேயே புடுங்கி, கை சரியில்லை, கால் சரியில்லை என்று சொன்னபோதுதான் நான் வருத்தப்பட்டேன். குழந்தை பிறந்தவுடன் எப்படியிருக்கு என்று சொல்லுங்கள் என்பதுதான் என் கேள்வி. நான் என் வீட்டுக்குள் என்ன வேண்டுமானாலும் பண்ணுவேன்.

    எப்போதுதான் திருமணம் செய்துகொள்வதாக எண்ணம்?

    நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கட்டும் என்று விட்டுவிட்டேன். ஆனால் ‘இது நம்ம ஆளு’ வெளியானவுடன் ஒரு பிரச்சினை இருக்கும் என நினைக்கிறேன். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்துக்கு பிறகு கார்த்திக் மாதிரி ஒரு பையன் வேண்டும் என்று பெண்கள் சொன்னார்கள். அதே போல ‘இது நம்ம ஆளு’க்கு பிறகு சிவா மாதிரி ஒரு பையன் வேண்டும் என்று தாலியுடன் பெண்கள் சுற்றுவார்கள். அதனால்தான் நமக்கு கல்யாணம் ஆயிடுமோ என்று பயம் வந்திருக்கிறது. ஏனென்றால் நான் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தவுடன் படம் ‘சூப்பர்’ என்று தோன்றவில்லை, இப்படம் வெளியானவுடன் நமக்குக் கல்யாணம் ஆயிடுமோ என்று பயம்தான் வந்தது. எனக்கு இன்னொரு 3 மாதத்தில் கல்யாணம் ஆனாலும் ஆயிடும்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  11. #130
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Idhu Namma Aalu review by prashanth

    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

Page 13 of 17 FirstFirst ... 31112131415 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •