Page 14 of 17 FirstFirst ... 41213141516 ... LastLast
Results 131 to 140 of 164

Thread: Silambarasan♥ NayanThara•இது நம்ம ஆளு 2016

  1. #131
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Today's AD

    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #132
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ’சிம்பு இவ்வளவு நேர்மையான ஆளா?’ என்று நயன் சிலாகிப்பது சரியா? - #இது நம்ம ஆளு விமர்சனம் - VIKATAN


    படம் ஓடினால் ஹிட் என்பது தாண்டி வெளியானாலே ஹிட்தான் எனுமளவுக்கு ‘இப்ப வருமோ.. எப்ப வருமோ’ என்று காத்திருந்து, நேற்று இரவு வரை தடா தடா என்று பேசப்பட்டு, பல ட்விஸ்ட்களுக்குப் பிறகு இன்று வெளியாகியிருக்கிற படம் ‘இது நம்ம ஆளு’

    ரெண்டு காதலில் தோற்றவன், மூன்றாவது காதலிக்கு மூணு முறை தாலிகட்டும் ஜாலியான காதல் படம்! ஏன், எதற்கு, எப்படி என்பது திரைக்கதை. சிம்புவின் நடிப்புக்கு 'விடிவி' கார்த்திக் கேரக்டரை மட்டுமே சிலிர்த்துக் கொண்டு பேசிய ரசிகர்களுக்கு, இன்னொரு சர்பிரைஸ் கிஃப்ட் கொடுத்திருக்கிறார் சிம்பு. விடிவி எலைட் வெர்ஷன் என்றால் இது பொலைட் வெர்ஷன். சண்டை இல்லை, பன்ச் இல்லை, விரலை ஆட்டும் வித்தைகள் இல்லை. அட, டான்ஸில்கூட குட்டிக்கரணம் அடிக்கவில்லை. எந்தவிதமான பூச்சும் இல்லாத இயல்பான நடிப்பால் ஸ்கோர் செய்கிறார் சிம்பு. நயன்தாரா வெறுப்பேற்றும் போதெல்லாம் பொங்கி எழாமல் அடக்கி வாசித்து அடக்கி வாசித்து நயன்தாராவை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் கவர முயற்சித்து ஓரளவு அதில் வெற்றியும் பெறுகிறார்.‘ சிம்பு இவ்வளவு நேர்மையான ஆளா’ என நயன் சிலாகிப்பது போல், நம்மையும் எண்ண வைத்துவிடுகிறார் பாண்டிராஜ். ஆனால் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் எல்லா வசனத்தையும் மெ-து-வா-க-வே பேசுவது ஏன் ப்ரோ?

    நயன்தாரா! இந்த மாதிரிப் பொண்ணு கடுப்பேத்தினா எத்தனை வேணா தாங்கிக்கலாம்யா என்பதுபோல வருகிற ஒவ்வொரு காட்சியிலும் அப்படி மின்னுகிறார். அந்தக் குட்டியூண்டு உதட்டில், சில்மிஷ சிரிப்பை உதிர்த்துக் கொண்டே சிம்புவுக்கு இவர் வைக்கும் டெஸ்ட்கள் ஒவ்வொன்றும் ஓஹோ. அழைப்பை எடுக்காமல் கடுப்பேற்றும்போதும், அழைத்துக் கோபப்படும்போதும், ஆக்ஸிடென்ட் பற்றிச் சொல்லும்போது சண்டை போடும்போதும், பேச்சை வளர்த்து வளர்த்து முத்தம் கேட்பதாகட்டும் அம்மணிக்கு க்யூட்னஸ் ஓவலோட்! அதில் காஸ்ட்யூமரின் பங்கு குறிப்பிடவேண்டியது!

    ஆர்யா தமன்னா இந்தப் படத்தில் நடித்திருந்தால் நிச்சயம் இடைவேளையோடு நடையைக் கட்டியிருப்போம். படத்தின் ஸ்பெஷலே, சிம்பு - நயன் உடனான ரியல் லைஃபை ஒட்டிய கதையையே ரீலிலும் காட்டிய இயக்குநர் பாண்டிராஜின் புத்திசாலித்தனம்தான். ஆரம்பத்திலிருந்து படம் முடியும் போது ‘உங்களை வெச்சு ஒருவழியா படத்தை முடிச்சுட்டேன்யா’ என்பது வரை தொய்வில்லாமல் நிஜ கலாய்ப்புகளாய் ரசிகனை ஒன்ற வைத்ததில் ஜொலிக்கிறார் பாண்டிராஜ்.

    ஆண்ட்ரியா, சிம்புவின் ப்ரேக் அப் ஆன காதலியாக வந்து, படத்தில் மிக முக்கியமான கட்டத்தில் சிம்பு - நயன் சேர உதவுகிறார். அவருக்கும் சிம்புவுக்கும் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகும் அந்த டிபார்ட்மென்டல் காட்சியும், அதை வைத்துக் கொண்டே விளம்பர லீட் எடுக்கும் ஐடியாவும் செம்ம! கால், மெசேஜ்கள் வரும்போது திரையில் அதைக் காண்பிப்பதும், அதே போல சிம்பு நயன் பெயரையும், நயன் சிம்பு பெயரையும் காண்டாக்டில் சேமிப்பதிலேயே அவர்கள் கெமிஸ்ட்ரி வளர்வதையும், தேய்வதையும் இந்த ஜெனரேஷன் டிரெண்டுக்கு ஏற்ப காண்பித்ததற்கும் சபாஷ்!

    சிம்பு பேசிக் கொண்டே இருக்க அதற்கு கவுன்டர் கமெண்ட் கொடுக்கும் வேலையை முழுநேரமாகச் செய்து வருகிறார் சூரி. சூரியின் குறிப்பிடப்படக்கூடிய சில படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். மனதில் நிற்கவில்லையென்றாலும், படம் பார்க்கும்போது சூரியின் காமெடிகள்தான் கொஞ்சம் எனர்ஜி ஏற்றுகிறது. நயன்தாரா 1000 முறை சிம்புவிடம் 'ஸாரி' சொல்லச் சொல்ல, அதை எண்ணும் சூரியின் அட்ராசிட்டி செம! லவ் பண்ணும்போது ஓகே. நிச்சயம் ஆன பொண்ணுகூட பேசறப்பவும் ஃப்ரெண்ட் கேக்கறா மாதிரியேவா பேசிட்டிருப்பாங்க? அதுவும் சூரியே ‘ரொம்ப பேசி U சர்ட்டிஃபிகேட் படத்துக்கு A சர்ட்டிஃபிகேட் வாங்க வெச்சுடாதீங்கடா’ என்னும் அளவுக்கு!

    அப்பாக்கள் என்றாலே அன்பானவர்கள்தான் என்ற 'பாண்டிராஜ் தியரி'தான் ஜெயப்பிரகாஷ் கேரக்டருக்கும். அன்பான அப்பாவாக அல்லாமல், சிம்புவுக்கு அருமையான நண்பனாக வந்துபோகிறார் இந்தப் 'Buddy'. ஜெயப்ரகாஷுக்கும் நயன்தாராவின் அப்பாவாக வரும் உதய் மகேஷ் இருவருக்குமான கெமிஸ்ட்ரியும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. குறளரசன் இசை என்பதை டைட்டிலில் காட்டிய அளவுக்கு படத்தின் பின்னணியிலும் காட்டியிருக்கலாம். ஆஃபீஸ், வீடு, பைக், கார் என்று சீரியலுக்கான லொகேஷனிலேயே படமும் பயணிப்பது கொஞ்சம் போரடிக்கிறது. அதே போல அத்தனை அந்நியோன்ய சம்பந்திகள் இதற்கெல்லாம் கல்யாணத்தை நிறுத்துவது.. ம்ஹும்.

    தயாரிப்பு டி.ஆர் என்பதால் ‘அந்த டயலாக் ஷீட்டை எங்கிட்ட குடு’ என்று பாண்டிராஜிடமிருந்து வாங்கி ரீ ரைட் பண்ணிக் கொடுத்துவிட்டாரோ எனுமளவு கொரியர் / கேரியர், சரித்திரம் / தரித்திரம், கவுச்சி / கவர்ச்சி என்று ஒவ்வொரு வரிக்கும் ரைமிங்கோ ரைமிங். ‘ஆறு மணி நேரமா பேசறாங்க’ என்று சூரி சொல்வதை நாமே உணருமளவு நயனும், சிம்புவும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். எகெய்ன், அது நயன் - சிம்பு என்பதாலும் அவர்களின் ஆஃப் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரியை நாம் அறிந்தவர்கள் என்பதாலுமே ரசிக்க முடிகிறது. அது தெரியாமல் படம் பார்த்தால்..என்ன இது இவ்வளவு மெதுவாக கதை நகர்கிறது என யோசிக்க வைத்து இருக்கும்.

    சாதாரண, ட்விஸ்ட்கள் அற்ற, எதிர்பார்க்கிற காட்சியமைப்புகள் கொண்ட கதைதான். ‘எனக்கு நடிக்கத் தெரியாதுங்க’ என்று சிம்பு தன்னைத் தானே கலாய்த்துக் கொள்ள, ‘நீ ஏன் பப்ளிசிட்டிக்கு என்ன வேணா பண்ற?’ என்று நயன் சிம்புவைக் கேட்க, ‘அவன் கான்ட்ரவர்ஸி மன்னன். சொன்ன நேரத்துக்கு வராம அவன் நெனைச்ச நேரத்துக்குதான் வருவான்’ என்று சூரி சிம்புவின் மைனஸ்களைச் சொல்ல என்று படம் முழுக்க நிஜத்தைத் தூவியிருப்பதில் ரசிக்க வைக்கிறான் இந்த, இது நம்ம வாலு.. ச்சே.. இது நம்ம ஆளு!
    டெய்ல் பீஸ்: இந்தக் கால இளைஞர்கள், ஏற்கனவே சென்சிடிவ். இந்த லட்சணத்தில், காதல் சேர்வதற்காக, நயன்தாரா எடுக்கும் அந்த முடிவு.. இந்த அழகான படத்திற்கு அபத்தமான திருஷ்டிப் பொட்டு!
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  4. #133
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    நெட்டிசன் நோட்ஸ்: இது நம்ம ஆளு - தன்னிலை விளக்கம்! - TAMIL HINDU


    பாண்டிராஜின் இயக்கத்தில், குறளரசனின் இசையில், சிம்பு- நயன் ஜோடியில் எக்கச்சக்க எதிர்பார்ப்புகளோடு எகிற வைத்தது 'இதுநம்மஆளு'. பற்பல தடைகளைத் தாண்டி வெளியான படம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்?...

    கவிஞன் மோக்கியா:
    சூர்யா மூணுவாட்டி செத்தா - 24
    சிம்பு மூணுவாட்டி கல்யாணம் பண்ணா - இதுநம்மஆளு

    சால்ட்&பெப்பர் தளபதி:
    இரண்டரை மணி நேரம் முழுக்க முழுக்க சிம்புவ பாக்கலான்ற ஒரு காரணம் போதும், இந்தப்படம் பாக்க! #இதுநம்மஆளு

    அருள்:
    ஹாலிவுட்டில் 'இது நம்ம ஆளு' படத்தை எடுத்திருந்தால் டைட்டானிக்கின் இந்த வருட சாதனையை முறியடித்து இருக்கும்...

    சின்னபுள்ள:
    தேவையில்லாம படத்துக்கு போய் பழசலாம் ஞாபகப்படுத்தி அன்ப்ளாக் பண்ண வச்சுடானுக.. ப்ச்ச.. வேணாம் blocked it again. #இதுநம்மஆளு

    ❤தல ரியாஸ் ❤:
    செம்ம ஒன்ஸ் மோர் பார்க்கலாம். லவ்னா லவ் செம்ம, சிம்பு நயன் தாறுமாறு கெமிஸ்ட்ரி ரசிச்சு பார்த்தேன் #இதுநம்மஆளு
    *
    எத்தனை பேரு லவ் மூவிஸ்ல நடிச்சாலும்
    சிம்பு ஸ்டைலே தனி தான்.... #இதுநம்மஆளு

    ட்விட்டர்MGR:
    நாலா பக்கமிருந்தும் நல்ல நல்ல விமர்சனங்களாக வருகிறது!.. மகிழ்ச்சி... #இதுநம்மஆளு

    மாண்புமிகு ப்ரபா:
    லவ் பண்றீங்களா?? உடனே சிம்பு படம் பாத்துருங்க #இதுநம்மஆளு #லவ்படம்

    உத்தம வில்லன்:
    லவ் பண்றவங்க சிம்பு நயன்தாரா இடத்துல இருந்து படத்த பாருங்க; லவ் பண்ணாதவங்க சூரி இடத்துல இருந்து பாருங்க.
    #இதுநம்மஆளு

    கவிஞன் மோக்கியா:
    காதலிக்கனும்ன்னு நினைக்கிறவன் கூட இதுநம்மஆளு படம் பார்த்தா அந்த முடிவ மாத்திக்குவான்

    karthik:
    சிம்புவோட தன்னிலை விளக்கம்தான் #இதுநம்மஆளு படம்

    La Ra:
    ஒரு வழியா சிம்பு நயன்தாராவை கல்யாணம் பண்ணிக்கிட்டார்...
    அதுவும் மூணு தடவை... #இதுநம்மஆளு

    தமிழ் சிவா:
    ஒவ்வொரு பேச்சுலர் பசங்க ரூம்லயும் சிம்பு, சூரி கேரக்டர்ல பசங்க கண்டிப்பா இருப்பாங்க...
    #இதுநம்மஆளு

    சுரேஸ் ரா:
    VTV,கோவில், வானம் வரிசையில் இயக்குனரின் படமாக வந்திருக்கிறது #இதுநம்மஆளு. சிம்பு நடிப்பு ரொம்ப நாளுக்கு அப்புறம் பிடிக்கிறது!!!

    சின்னபுள்ள:
    உண்மையாவே சிம்பு பிடிக்கும்னு நம்மள நாம உணரவச்சுட்டாப்ல பாண்டியராஜ். #இதுநம்மஆளு

    மைனர் & சன்ஸ்:
    "இது நம்ம ஆளு"ங்கிறத விட "சொல்வதெல்லாம் உண்மை" சாலப்பொருந்தும் #தஞ்சாவூர்கல்வெட்டுகள்

    Kosaqsi பசப்புகழ்:
    இது நம்ம ஆளு: காதலிப்பவர்களுக்கும், திருமணம் முடிக்க காத்திருப்பவர்களுக்குமான படம்...!!!

    Parasaran ‏@Parasarann
    இது நம்ம ஆளு- காதலிக்கலாம் பாஸ்
    எவ்வளவு தாமதமாக வந்தாலும் சிம்புவுக்கான இடம் அப்படியே இருப்பதாக உணர்கிறேன்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  5. #134
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Idhu Namma Aalu: True love - Baradwaj Rangan | THE HINDU
    Idhu Namma Aalu comes off like gossipy fan-fiction written by one of Simbu's fans who really, really wanted him to be with Nayanthara.

    As sarakku scenes go, it’s the usual scenario. Two men get drunk. One of them talks about the girl who ditched him, the one that ran away. The other one talks about the girl he loved, the one that got away. (In Tamil cinema, the woman is always the heartbreaker, the man always the one left nursing his broken heart.) You’d think the conversation is between Siva (Simbu) and Vasu (Soori) — isn’t that why heroes have best friends? But it’s actually two older men talking, Siva’s father and the father of the girl Siva is engaged to (Myla, played by Nayanthara).

    If you’re wondering, as I was, why Siva isn’t shown with a bottle in his hand, here’s a theory. The first time he sees Myla, he’s struck by her beauty. He tells Vasu, “Paathadhukke full adicha maadhiri irukku.” Siva doesn’t need intoxicants. He’s drunk on love.
    As, some might say, Simbu is. The actor has made no secret about his love life, and Pandiraj’s Idhu Namma Aalu comes off like gossipy fan-fiction written by one of the actor’s fans who really, really wanted him to be with Nayanthara. (They called off their relationship some years ago.) At one point, Myla asks Simbu, “Love pannirkeengala?” – you have to wonder how sporting these actors are, and also what ran through their minds while shooting the scene.
    Later, Siva/Simbu says, “Ellaarum en love-a vachu comedy pannreenga.” And what to make of the Loosu Penne reference? Is that…? Could that be…?

    Idhu Namma Aalu is the story of a couple that gets together through an arranged-marriage setup, and Pandiraj captures the natural moments that occur in such a situation — the getting-to-know-you part, the does-she-have-a-past part, the hours-and- hours-on-the-phone, the going-on-long-drives-with-Ilayaraja- songs… Pandiraj is trying to make a young, cool film.

    When Siva talks about his ex-girlfriend Pooja, played by Andrea Jeremiah, a corner of the screen shows the text “Flashback Loading,” along with the icon of a battery-like device “loading” this flashback. A lot of this works fairly well. The dialogues are fun, though you wish they’d give lines with rhyming words (privacy/paradesi) a rest. And Soori is a riot. He delivers a running commentary about the Siva-Myla romance, pricking their mushy speech balloons with sardonic barbs.

    But he also prevents the film from becoming something better, something greater. When Mani Ratnam or Gautham Menon does the urban romance, you don’t just smile. You wince. You keep watching a parallel movie in your head, one made from memories. They make love stories that are real, and become reference points for a certain kind of movie-love. Pandiraj, on the other hand, doesn’t even take the time to savour the romantic situations. The night that Siva and Pooja spend in a store after they find themselves locked in, or the multiple marriages that end the film — these should have been way more awww-some.

    Pandiraj’s aims are modest. He just wants the audience to be entertained while watching the movie — and that’s perfectly legit. But the problem is that the relative real-ness of the Siva-Myla portions is compromised by terribly contrived events, like Vasu hiring a detective to check up on Myla, or the in-laws getting into a fight after a drink, or even an attempt at suicide.

    After a while, you get the feeling Pandiraj is throwing these things at us simply because he did not know how else to bring about conflict. Even Myla’s temporary break-up with Siva looks less a genuine moment of crisis in a relationship than something that will lead to a dramatic interval point. What’s worse is that these conflicts are resolved very simplistically.

    But Simbu and Nayanthara are in good form, and they keep us watching. And wondering.
    Last edited by balaajee; 30th May 2016 at 05:35 PM.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  6. #135
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    'Idhu Namma Aalu' box office collection: Simbu-Nayanthara's film earns more than Rs. 14 crore

    "Idhu Namma Aalu" collects Rs. 14.05 crore at TN box office. Pictured: A promotional material of Simbu and Nayanthara-starrer movie.Thenandal Films Twitter Account

    Silambarasan's "Idhu Namma Aalu" has struck gold at the Tamil Nadu box office. The movie has reportedly collected a little over Rs. 14 crore in its first weekend in the state.
    "Idhu Namma Aalu" was released in over 350 screens in Tamil Nadu on Friday, May 27. The Kollywood flick had a good pre-release buzz as ex-lovers Simbu and Nayanthara teamed up again after a decade.

    Cine-goers have been eagerly waiting to see how their chemistry on-screen. And, "Idhu Namma Aalu" got good response for the advance booking. As a result, the Tamil flick managed to collect Rs. 4.10 crore on its first day, Behindwoods reported. The movie enjoyed good occupancy for the morning shows and evening prime-time shows on the opening day.




    "Idhu Namma Aalu" opened to positive reviews and this helped the Tamil movie to better its collection on its second day. It raked in Rs. 4.85 crore on Saturday. However, the Simbu-starrer registered fantastic occupancy on Sunday as it collected Rs. 5.10 crore to take its three-day total tally to Rs. 14.05 crore.

    According to trade reports, this is the highest collection for a Simbu film in Tamil Nadu. His previous best was Rs. 8.5 crore, made by "Vaalu."

    "Idhu Namma Aalu" has done well in A and B centres. But C centres are a concern for the makers as the performance has not been good.

    The trade experts feel that the movie is expected to do well, given the good word-of-mouth. The fact that no big film is releasing in near future might turn out to be a big advantage for the film.
    "Idhu Namma Aalu" has been written and directed by Pandiraj. It is a romantic-comedy film, which also has Andrea Jeremiah in a key role.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  7. #136
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Simbu's Idhu Namma Aalu Box Office

    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  8. #137
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Todays AD

    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  9. #138
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Kashayam ...


    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  10. #139
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Idhu Namma Aalu Review by Behindwoods

    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  11. #140
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Simbu Interview: I am not a Star or a Common man | Red Carpet

    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

Page 14 of 17 FirstFirst ... 41213141516 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •