Page 16 of 17 FirstFirst ... 614151617 LastLast
Results 151 to 160 of 164

Thread: Silambarasan♥ NayanThara•இது நம்ம ஆளு 2016

  1. #151
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Nayanthara & Simbu had fun even with my doubtfull scenes : Pandiraj

    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #152
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    kumudham given - ok
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  4. #153
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    இது நம்மாளு படத்துல இதெல்லா நீங்க கவனிச்சிங்களா? - one india

    கவனிக்க வேண்டியது #1
    அப்பா மகன் உறவு! மனைவி தன்னை விட்டு பிரிந்த பிறகும் கூட, தன் மகன் மீதான பாசத்தை சற்றும் குறைக்காமல் வளர்க்கும் அப்பா. மேலும், நண்பர்கள் போன்று பழகும் அப்பா மகன்களின் உறவு சிறந்து விளங்குகின்றது.

    கவனிக்க வேண்டியது #2
    குட்டி காதல்! நிச்சயம் செய்த திருமணாக இருப்பினும், இப்போது காதலித்து தான் திருமணம் செய்துக் கொள்கின்றனர். ஆம், இடைப்பட்ட மூன்று நான்கு மாதத்தில் முடிந்த வரை ஒருவரை பற்றி ஒருவர் நன்கு புரிந்துக் கொள்கின்றனர். இந்த புரிதல் இருவர் மத்தியில் ஏற்பட்டாலே இல்லற வாழ்க்கை சிறக்கும்

    கவனிக்க வேண்டியது #3
    பெண்ணை அணுகும் முறை! ஆண் நண்பர்களிடம் பேசுவது போல பெண்களிடமும் பேசக் கூடாது. பெண்களிடம் கொஞ்சம் ஷார்ப்பாகவும், கொஞ்சம் சாமார்த்தியமாகவும் பேச வேண்டும். இல்லையேல் அவர்களை மன ரீதியாக நெருங்குவதே கடினம்.

    கவனிக்க வேண்டியது #4
    கட்டன்ட் ரைட்! எதுவாக இருந்தாலும், உங்கள் துணையிடம் நேரடியாக கேட்டு அறிந்துக் கொள்வது உத்தமம். தேவையில்லாமல், மூன்றாவது நபரிடம் யோசனை கேட்டு, உளவு பார்க்கும் வேலைகள் செய்வது, இன்று இல்லையெனிலும், பின்னாளில் தெரியவரும் போது சங்கடங்களை உண்டாக்கும்.

    கவனிக்க வேண்டியது #5
    நோண்டி நுங்கெடுப்பது! பெண்கள் சும்மாவே கேள்வி மேல் கேள்வி கேட்பார்கள். அதுவும், தான் திருமணம் செய்துக் கொள்ள போகும் ஆணிடம் நோண்டி நுங்கெடுக்கும் அளவிற்கு கேள்வி கேட்பார்கள். முக்கியமாக முன்னால் காதலி பற்றி. எனவே, சற்று உஷாராக இருங்கள். முடிந்த வரை உண்மையை சொல்லிவிடுங்கள்.

    கவனிக்க வேண்டியது #6
    திருமணதிற்கு முன்னரே ஒரே குடும்பத்தை போல இருவீட்டாரும் பழகுவது நல்லது விஷயம். இருப்பினும், சில விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளும் முன்னர் அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என யோசித்து பகிர்ந்து கொள்வது நல்லது.

    கவனிக்க வேண்டியது #7

    மொபைல் பேச்சு! திருமணதிற்கு முன்னர் பேசுவது தவறில்லை. ஆனால், திருமணத்திற்கு பிறகு பேசுவதற்கு ஒன்றுமில்லை என்ற அளவிற்கு பேசுவது தவறு. திருமணதிற்கு பிறகு உங்களுக்குள் பகிர்ந்துக் கொள்ள கொஞ்சம் விஷயத்தை மிச்சம் மீது வைத்துக் கொண்டு பேசுவது நல்லது.

    கவனிக்க வேண்டியது #8
    சின்ன, சின்ன ஆசை! பெண்களுக்கு எப்போதுமே சின்ன சின்ன ஆசைகள் ஏராளமாக இருக்கும். அதை அவர்கள் வெளிப்படையாக கூறிவிடுவார்கள். ஆனால், அதை உடனே நிறைவேற்றாமல். அவர்கள் எதிர்பாராத போது நிறைவேற்றி அவர்களை ஆச்சரியப்படுத்த வேண்டும்.

    கவனிக்க வேண்டியது #9
    நட்பு! எத்தனை காதல் செய்தாலும், முட்டி மோதி அலுத்து அழுது நின்றாலும். எல்லா கட்டத்திலும் ஒன்றாக துணையாக நிற்பது நட்பு தான். இதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  5. #154
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    'Idhu Namma Aalu' box office collection: Simbu-starrer gets average opening - http://www.ibtimes.co.in

    Silambarasan aka Simbu's "Idhu Namma Aalu" has got a decent start at the international box office. In its first weekend, the Tamil film has earned about Rs. 2.80 crore ($416,648) overseas, Tamilboxoffice1 reported.Among all the centres, it is in Malaysia where "Idhu Namma Aalu" has done well at the box office. The movie has collected Rs. 1.39 crore (MYR 848,322) from 75 screens. The flick has also made notable collection in the U.S. by raking in Rs. 35.07 lakh ($52,377) from 35 screens.

    In the U.K. box office, "Idhu Namma Aalu" has raked in Rs. 13.34 lakh (£13,622) from five screens. The movie has collected Rs. 90.59 lakh ($134,916) from the rest of the world. However, the Tamil flick should hold well in the coming days so as to earn profit.



    "Idhu Namma Aalu" was released in 16 foreign countries in over 200 screens. It had released big in Malaysia (75 screens), the U.S. (35 screens), U.A.E. (31 screens) and Sri Lanka (22 screens).
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  6. #155
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    இது நம்ம ஆளு வசூல்… ஆச்சரியத்தில் திரையுலகம்! - http://www.gtamilcinema.com

    கடந்த வெள்ளிக்கிழமை (மே 27) வெளியான ‘இது நம்ம ஆளு’ படம் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 3 வருடங்கள் கழித்து படம் வெளிவந்தாலும் ரசிகர்களிடையே இருந்த எதிர்பார்ப்பில் எந்தவித குறையும் இல்லை. இதனால் படம் வெளியான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. வரவேற்பில் மட்டுமல்ல… வசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது ‘இது நம்ம ஆளு’. குறிப்பாக சென்னையில் மட்டும் இப்படத்தின் வசூல் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

    முதல் வாரத்தில்சென்னையில் மட்டும் 1.18 கோடிகளை வசூல் செய்திருக்கிறது இப்படம். இதுவரை சிம்புவின் எந்தப் படத்திற்கும் இப்படி ஒரு ஓப்பனிங் கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர தமிழ்நாடு முழுவதும் இப்படம் முதல் வாரத்தில் 14 கோடிகளை வசூல் செய்திருக்கிறது. இப்படத்தை வாங்கி வெளியிட்ட தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ‘அரண்மனை 2′ படத்திற்குப் பின் ‘இது நம்ம ஆளு’ வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

    விஷால்-ஸ்ரீதிவ்யாவின் ‘மருது’ 2 வது வாரத்தில் 37.97 லட்சங்களுடன் 2 வது இடத்திலும், ஹாலிவுட் படமான ‘எக்ஸ்மேன் அபோகாலிப்ஸ்’ 11.22 லட்சங்களுடன் 3 வதும் இடத்தையும் தக்க வைத்திருக்கிறது. ஜூன் 3ஆம் தேதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த ‘இறைவி’யும், எழிலின் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படங்கள் வெளியாகிறது. இந்த படங்களின் வரவேற்பை பொறுத்த ‘இது நம்ம ஆளின்’ வசூல் வரும் நாட்களில்அதிகரிக்கும்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  7. #156
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    2nd week

    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  8. #157
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ANANDA VIKATAN - 34 Marks
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  9. #158
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    STR ‏@iam_str 16h16 hours ago Admin : #STR celebrates the success of #INA with @anirudhofficial , Santhanam & friends.

    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  10. #159
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Simbu Nithish STR ‏@NithishSTR 22h22 hours ago Kalkulam, India @iam_str Top 10 Movies No.1 Idhu Namma Aalu Thanks Sun Tv

    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  11. #160
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    இது நம்ம ஆளு - Dina Thanthi

    கதாநாயகன்-கதாநாயகி: சிம்பு-நயன்தாரா.

    டைரக்ஷன்: பாண்டிராஜ்.

    கதையின் கரு: திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி இடையே மலரும் காதல்.

    சென்னை ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்யும் சிம்புவுக்கும், திருவையாறை சேர்ந்த நயன்தாராவுக்கும் திருமண பேச்சுவார்த்தை நடக்கிறது. இருவரும் தனியாக சந்தித்து பேசும்போது, ‘‘தம் அடிப்பீங்களா, தண்ணி அடிப்பீங்களா, யாரையாவது லவ் பண்ணியிருக்கீங்களா?’’ என்று நயன்தாரா கேட்க-எல்லா கேள்விகளுக்கும் பதிலாக, உண்மையை சொல்கிறார் சிம்பு.

    சிம்பு, ஆண்ட்ரியாவை காதலித்து அது முறிந்து போன விவரத்தை சிம்புவிடம் நயன்தாராவே கூறுகிறார். இனிமேல் திருமணம் அவ்வளவுதான் என்ற முடிவுக்கு வரும் சிம்புவுக்கு, அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்து இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார், நயன்தாரா.

    சிம்புவின் அப்பா ஜெயப்பிரகாசும், நயன்தாராவின் அப்பா உதய் மகேசும் நண்பர்களாகி விடுகிறார்கள். நயன்தாராவின் வீட்டிலேயே ஜெயப்பிரகாஷ் தங்குகிற அளவுக்கு அந்த நட்பு நெருக்கமாகிறது. ஜெயப்பிரகாசும், உதய் மகேசும் சேர்ந்து மது அருந்துகிறார்கள். அப்போது உதய் மகேஷ் போதையில் தனது முதல் காதலை சொல்ல-அதை ஜெயப்பிரகாஷ் ஜாலியாக நயன்தாராவின் அம்மாவிடம் போட்டுக்கொடுக்கிறார்.

    அந்த சின்ன விஷயம், சீரியசாகிறது. சிம்பு-நயன்தாரா திருமணத்தை உதய் மகேஷ் நிறுத்தி விடுகிறார். நின்று போன அந்த திருமணம் மீண்டும் நடந்ததா, இல்லையா? என்பது எதிர்பார்ப்புடன் கூடிய ‘கிளைமாக்ஸ்.’

    ஐ.டி. ஊழியராக சவரம் செய்யப்பட்ட பளபள முகத்துடன் அறிமுகமாகிறார், சிம்பு. அந்த ‘சிவா’ கதாபாத்திரத்தில், நடிப்பு-வசன உச்சரிப்பு-ஸ்டைல் எல்லாவற்றிலும் முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய சிம்புவை பார்க்க முடிகிறது. எதையுமே சுலபமாக-அமைதியாக எடுத்துக் கொள்ளும் பக்குவத்தை படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அழகாக பதிவு செய்கிறார், சிம்பு.

    ‘‘ஆண்களின் மனதை கடவுள் படைச்சிருக்கான்...பெண்களின் மனதை சைனாக்காரன் படைச்சிருப்பான் போல...’’ என்று பஞ்ச் வசனம் பேசும்போதும், ‘‘எல்லோரும் என் லவ்வை வச்சி காமெடி பண்றாங்க...என் வலியை உணர்ந்தால்தான் தெரியும்...’’ என்று அவர் சொல்லும்போதும், தியேட்டரில் ஆரவாரம். ‘‘காம்பினேஷன் நல்லாயிருக்குமேன்னு பார்த்தால், டாமினேஷன் சாஸ்தியா இருக்கு’’ என்ற அடுக்கு மொழி வரிகளுக்கும், கைதட்டல். ஒரு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு ரசிகர்களை திருப்தி செய்திருக்கிறார், சிம்பு.

    சிம்புவுக்காக நிச்சயிக்கப்பட்ட அழகான பெண் மைலாக, நயன்தாரா. இவருக்கும், சிம்புவுக்குமான காட்சிகளில், வசீகரம். சிம்புவின் முன்னாள் காதலியாக ஆண்ட்ரியா. படத்தில் இவருக்கு அதிக வேலை இல்லை.

    படத்தில் சிம்புவை விட அதிக ‘பஞ்ச்’ வசனம் பேசியிருப்பவர், சூரிதான். படம் முழுக்க இவருடைய காமெடி, சரவெடி. அவ்வப்போது கொளுத்திப் போட்டுக் கொண்டே இருக்கிறார். சந்தானம் இரண்டு சீன்களில் வந்து போகிறார். மகன் மீது பாசம் கொண்ட நல்ல அப்பாவாக மனசுக்குள் இடம் பிடிக்கிறார், ஜெயப்பிரகாஷ்.

    மிதமான வேகத்துடன் நகரும் திரைக்கதையின் பலவீனம் தெரியாத அளவுக்கு படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார், இசையமைப்பாளர் குறளரசன். பாடல்கள் அத்தனையும் மென்மையும், ரகளையும் கலந்த ராகங்கள். பின்னணி இசை, இதமாக வருடிக்கொடுக்கிறது. காட்சிகளுக்கு கவித்துவம் கூட்டுகிறது. படத்தின் மற்றொரு சிறப்பு அம்சம், பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு. வகை வகையாக வண்ண ஓவியம் பார்த்த திருப்தி.

    சிம்புவையும், நயன்தாராவையும், அவர்களின் பழைய காதலையும் நம்பி படம் எடுத்திருக்கிறார், டைரக்டர் பாண்டிராஜ். திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒரு ஜோடி இடையே மலரும் காதலை மையக்கருவாக்கி, அதிக மெனக்கெடல் இல்லாமல் மிக இயல்பாக திரைக்கதை அமைத்து இருக்கிறார். அதற்காக, சிம்பு-நயன்தாராவின் செல்போன் உரையாடலை இருபத்திரண்டு நிமிடங்கள் காட்சிப்படுத்தியிருப்பது, ரொம்ப ஓவர்.

    காதலை சந்தித்தவர்களுக்கும், காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், திருவிழா.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

Page 16 of 17 FirstFirst ... 614151617 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •