Page 12 of 17 FirstFirst ... 21011121314 ... LastLast
Results 111 to 120 of 164

Thread: Silambarasan♥ NayanThara•இது நம்ம ஆளு 2016

  1. #111
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Kaushik (LMK)@Lmkmoviemaniac 7h7 hours ago
    Superb response to #IdhuNammaAalu prebookings at @SPIcinemas..Film pacing towards May 20 release.. @iam_str..




    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #112
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Pandiraj@pandiraj3 3h3 hours ago
    #INA Wait is over..!! It's sathyama Official now.. #Mind blowing #Mind blowing !!






    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  4. #113
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    மே 20-ம் தேதி வெளியாகிறது 'இது நம்ம ஆளு' - TAMIL HINDU



    சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் 'இது நம்ம ஆளு' மே 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க உருவாகி இருக்கும் படம் 'இது நம்ம ஆளு'. குறளரசன் இசையமைத்திருக்கும் இப்படத்தை டி.ராஜேந்தர் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் இயக்குநர் பாண்டிராஜ் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் தமிழக திரையரங்க உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

    நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. பலமுறை இப்படத்தின் வெளியீடு திட்டமிடப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இப்படத்தில் படமாக்கப்படாமல் இருந்த ஒரு பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் வழங்கினர். அனைத்துப் பணிகளும் முடிவுற்றதைத் தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இன்று படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

    அதன்படி "சத்தியமா மே 20ம் தேதி வர்றோம்" என்று வீடியோ பதிவின் மூலமாக படக்குழு அறிவித்திருக்கிறது.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  5. #114
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    VERY SOON

    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  6. #115
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    VERY VERY SOON
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  7. #116
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    மீண்டும் தள்ளிப் போன இது நம்ம ஆளு

    இது நம்ம ஆளு படம் தயாராகி வருடங்கள் ஆகிறது. எப்போதோ வந்திருக்க வேண்டிய படம். வாலு படத்திற்காக ஏற்படுத்திக் கொண்ட கடன்கள் இது நம்ம ஆளை வெளிவரவிடாமல் மூச்சுத்திணற வைத்துக் கொண்டிருந்தது.

    இந்நிலையில், வரும் மே 20 மருது படத்துடன் இது நம்ம ஆளு வெளியாகும் என்று சத்தியம் செய்து கூறினர். ஆனால், வழக்கம்போல மே 20 படம் வெளிவரப்போவதில்லை. மே 27 கண்டிப்டபா வர்றேnம் என்று இன்னொரு வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர்.

    நீங்க வர்ற போது வாங்கன்னு ரசிகர்கள் சொல்வதற்குள் படத்தை ரிலீஸ் பண்ணிடுங்க.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  8. #117
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    FINALLY FROM 27th May 2016

    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  9. #118
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    சிறப்பு முன்னோட்டம் இது நம்ம ஆளு - அய்யோ... சிம்புவுக்கு சண்டை இல்லையா? - tamil hindu

    சிம்பு நயன்தாரா காதல் பிரிவுக்குப் பிறகு அவர்கள் இருவரும் நடித்திருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. இதனால் எத்தனை தாமதமாக வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவரும் படமாக இருக்கிறது. இந்தப் படத்தில் என்ன சுவாரசியம் என்று படக் குழுவிடம் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் திரை முன்னோட்டமாக… 
    ஐ.டி. துறையில் பணியாற்றுபவர்கள் எல்லாம் அதிகமான சம்பளம் வாங்கிக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்ற ஒரு பேச்சு இருக்கிறது. ஆனால் அவர்களுடைய வாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் வலியையும் வேதனையும் இப்படத்தில் கூறியிருக்கிறார் பாண்டிராஜ்.

    இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்போது ‘லவ்ன்னா லவ்… அப்படி ஒரு லவ்’ என்று தலைப்பு வைத்துத்தான் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், நயன்தாரா நாயகியாக ஒப்பந்தமானவுடன் ‘இது நம்ம ஆளு’ என மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

    சிம்பு நடித்த படங்களில் சண்டைக் காட்சியே இல்லாத படமாக இது இருக்கும் என்று இயக்குநர் சொன்னவுடன், சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் “அய்யோ.. சிம்புவுக்கு சண்டை இல்லயா?” என்று முறைக்க, “இதில் சண்டை வைக்கணும்னா சிம்பு - நயன் இருவருக்கும்தான் வைக்கணும்” என்று சிரித்துக்கொண்டே சொல்லியிருக்கிறார் பாண்டிராஜ்.

    சிம்பு - நயன்தாரா முதல் பாதியில் இணைந்திருப்பார்கள். சிம்பு - நயன் இருவருக்கும் சண்டை வரும் காட்சிதான் இடைவேளை, இடைவேளைக்குப் பிறகு பிரிந்தவர்கள் எப்படி இணைந்தார்கள் என்பதுதான் படம்.

    இப்படத்தில் சிம்புவுக்கு மொத்தம் மூன்று காதல்கள் இருக்கின்றன. சிம்பு - ஆன்ட்ரியா காதலைக் கவித்துவமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறாராம் பாண்டிராஜ். சிம்பு - நயன்தாரா காதலை யதார்த்தமாகக் காட்டியிருக்கிறாராம். மூன்றாவது காதல் பற்றி ரகசியம் காக்கிறது படக் குழு.

    சூரிதான் காமெடி என்றவுடன், சிம்புவோ சந்தானம் நல்லாயிருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், சூரி மட்டுமே சரியாக இருக்கும் என்று விடாப்பிடியாக இருந்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். சிம்பு - சூரி சம்பந்தப்பட்ட முதல் காட்சி படமானவுடன் “ஜி... சூப்பர்ஜி. ப்ரஷ்ஷாக இருக்கிறது. அப்ளாஸ் அள்ளும்” என்று பாண்டிராஜிடம் தெரிவித்திருக்கிறார் சிம்பு.

    சிம்புவுக்கு நாயகி என்றவுடன் முழுக் கதையையும் கேட்டுவிட்டு ஒப்பந்தமாகியிருக்கிறார் நயன்தாரா. அப்போது ‘வல்லவன்’ மாதிரி பாடல் எல்லாம் இருக்குமா என்று கேட்டிருக்கிறார். இல்லை என்றவுடன்தான் கையெழுத்திட்டு இருக்கிறார். முழுக்க சுடிதார், சேலை மட்டுமே அணிந்து நடித்திருக்கிறார்.

    சிம்பு - நயன்தாரா இருவரும் காதல் பிரிவுக்குப் பிறகு நடித்த முதல் காட்சியை நீங்கள் திரையில் பார்க்கும்போது பிரிவு, வெட்கம் அனைத்தையுமே உணர முடியும் என்கிறார்கள். அதுதான் இருவரும் சந்தித்துக்கொள்ளும் முதல் காட்சியாகப் படத்தில் வருகிறது.

    சிம்பு குறித்து பாண்டிராஜிடம் கேட்டால் “நல்ல மனிதர். ரொம்ப கூலாக இருப்பார். எதற்கும் டென்ஷனாகி அவரைப் பார்க்க முடியாது. அதுதான் அவருடைய மிகப்பெரிய ப்ளஸ். படப்பிடிப்புக்குத் தாமதமாக வருவதை மட்டும் அவர் சரிசெய்துகொண்டால், சிம்பு பெரிய இடத்துக்குப் போவதை யாராலும் தடுக்க முடியாது” என்கிறார்.

    பாண்டிராஜ் படங்களிலேயே அதிகப்படியான இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட படம் ‘இது நம்ம ஆளு’ தான். சுமார் 20 காபி ஷாப்களில் சிம்பு - நயன், சிம்பு - ஆண்ட்ரியா சந்திக்கும் காட்சிகளை எடுத்திருக்கிறார்கள்.

    கிராமம் சார்ந்த கதைக்களங்களை விடுத்து முழுக்க நகரம் சார்ந்த ஒரு காதல் கதையைப் படமாக்கியிருக்கிறார் பாண்டிராஜ். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ பாணியில் பாண்டிராஜ் - சிம்பு உருவாக்கியிருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’.

    மூன்றரை வருடம் படமாக்கி இருக்கிறார்கள் என்பதால் ‘பாகுபலி’ என்று நினைத்து வர வேண்டாம், 5 மாதத்தில் படமாக்கப்பட்ட படம்தான் ‘இது நம்ம ஆளு’. 3 வருடம் கழித்து வந்தாலும், படத்தின் கதைக் களம் அவ்வளவு அப்டேட்டாக இருக்கிறதாம்.

    ‘இது நம்ம ஆளு’ படம் முடிந்தவுடன் சுமார் 3 நிமிடங்கள் சிரிப்பதற்காக ப்ளூப்பர்ஸ் காட்சிகள் வைத்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். அதனைத் தொடர்ந்து வரும் பாண்டிராஜின் வசனம் அப்ளாஸ் அள்ளுவது உறுதி என்கிறது படக்குழு.

    நிஜ வாழ்க்கையில் சிம்பு கடந்து வந்த காதல் வாழ்க்கையை இப்படத்தில் அப்படியே காணலாம். மேலும் அதற்கு “நீங்க நிறுத்துங்க... நாங்க நிறுத்துறோம்” என்று சிம்பு பாணியிலே காதலிகளுக்குப் பதில் சொல்வது போல வசனம் எழுதியிருக்கிறார் பாண்டிராஜ்.

    இடைவேளைக் காட்சியில், சிம்பு - நயன்தாரா இருவரும் போனில் சண்டை போடுவது போலத்தான் முதலில் எடுத்திருக்கிறார் பாண்டிராஜ். அக்காட்சி படமானவுடன் “ஜி... இக்காட்சி நேரில் சண்டை போடுவது போல எடுத்தால் இன்னும் டச்சிங்கா இருக்கும்” என்று கேட்டவுடன் இருவரும் நேரில் சண்டையிடுவது போலக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

    ‘இது நம்ம ஆளு’ 2-ம் பாகம் குறித்து கேட்டால் “அது படத்தோட வெற்றியைப் பொறுத்து இருக்கும்” என்று சிரிக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  10. #119
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    TODAY's AD

    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  11. #120
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    From tomorrow

    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

Page 12 of 17 FirstFirst ... 21011121314 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •