Page 208 of 401 FirstFirst ... 108158198206207208209210218258308 ... LastLast
Results 2,071 to 2,080 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #2071
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    Happy birthday wishes to ck sir
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  2. Thanks chinnakkannan thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2072
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by parthasarathy View Post
    Dear Mr. Chinnakkannan,

    Belated happy returns of the day.

    Happy to note your visit to thread again.



    Not only you, Mr. Raghavender and others have also started visiting and contributing their mite.

    However, am yet to start my postings, due to continuous pre-occupation at my office. Hope I will also join the fray soon.

    Regards,

    R. Parthasarathy
    Ditto message and many happy Returns CK.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. Thanks chinnakkannan thanked for this post
  6. #2073
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஜெ. ராதாகிருஷ்ணன் சார், கோபால் சார்.. தஙக்ள் வாழ்த்துக்களுக்கு நன்றி..

    *

    தில்லானா மோகனாம்பாள் சன் டிவியில் போட்டதைப் பற்றி இன்னும் முக நூலில் அலசல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.. பேசுபவர்கள் எல்லாருமே ஒரு வித எக்ஸைட்டிங்க் மனப் பான்மையில் பேசி வருகிறார்கள்..வாவ் என்ன ஒரு படம் என்று.. ந.தி, பத்மினி, பாலையா, நாகேஷ் என எல்லாரையும் பற்றியும்.. நிஜம்மாகவே இப்படி ஒரு படம் இன்றைய சூழ்நிலையில் - எவ்வளவோ டெக்னாலஜி முன்னேறி விட்ட நிலையிலும் - எடுக்க முடியுமா என்பது சந்தேகமே..

  7. #2074
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நரிக்கு நாட்டாண்மை கொடுத்தா... என்று ஒரு பழமொழி உண்டு. மிக மிக ரசிக்கும் படியான ஆங்கில பஞ்சாயத்தாக இருந்தது. மிக்க நன்றி.
    ரொம்ப நாள் கழித்து தீர்ப்பை மாற்றியே சொல்ல வேண்டாத பஞ்சாயத்து.

    ஒரு கேள்வி ,ஒரு பதிலுடன் முடிக்கிறேன்.

    முதலில் ஒரு கேள்வி- இது வரை இல்லாத சொல்லாத nuances பற்றி எழுத தூண்டியதற்கு நன்றி. எழுதிய போது என்ன வந்து கிழித்தீர்கள் நாட்டாண்மை?ஏதாவது முன்னேடுத்தீர்களா,probe பண்ணும் வகையில் மறுவினை பதித்தீர்களா?புனே ,நியூயார்க் திரைப்பட கல்லூரி மாணவர்களால்(முந்தைய) இது வரை இந்த வகையில் எந்த நடிகர் பற்றியும் ஆராய பட்டதில்லை என்று சொன்ன உலக அதிசயத்தில் உங்களின் மறு வினை பங்கு என்ன?உங்களுடைய கவன ஈர்ப்புக்கு ராஜ ராஜன் தானே தேவை பட்டான்? நீங்களே எவ்வித உள்நோக்கும் இல்லாமல் போட்ட கோபால் பதிவை யாருடைய மறுப்பிற்கு பயந்து தூக்கினீர்கள்?(இந்த நேரத்தில் உலக அதிசயத்திற்கு சிறப்பான மறுவினை அளித்த ராகவேந்தர் சாருக்கு என் நன்றி)

    ஒரு பதில்- 50 வருடம் நாம் பூரித்து பல படங்களை கொண்டாடி மகிழ்கிறோம். அவற்றிற்கு மூப்போ இறப்போ இல்லை. நாம் திரைப்பட சரித்திரத்தில் 60-70 களில் மிக எதிர்பார்புக்குள்ளான இரு படங்கள் சிவந்த மண் ,ராஜ ராஜ சோழன்.இரண்டிற்குமே பல வருடங்கள் எதிர்பார்ப்பு தவம் செய்தோம்.இதில் சிவந்த மண் எதிர்பார்ப்பிற்கு மேலாகவே நம்மை பூரிக்க வைத்தது. ஆனால் ராஜ ராஜ சோழன்?அன்று எனக்கு கிடைத்த ஏமாற்றம் சொல்லி மாளாது. அதன் வடு இன்று வரை மறையவில்லை. என்னுடைய மகிழ்ச்சி-துக்கம்,இன்பம்-துன்பம் எல்லாமே சிவாஜியை சார்ந்தவை .அதனாலேயே 31/03/2014 இலும் நினைவு கூர்ந்தேன் ஏமாற்றத்தை.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #2075
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Join Date
    Feb 2012
    Location
    Vietnam
    Posts
    1,893
    Post Thanks / Like

    The movies that I wished ,to have seen the light of the day of our Acting God.
    1)Periyar(Dream of our God)
    2)Jeeva Bhoomy(Sandilyan story ,produced by actor sriram)
    3)Yarukkaga Azhuthan?(Jayakandhan story by Bhimsingh)finally came out with Nagesh in lead.
    4)Maha Chanakya(Announced by Panthulu during release of Karnan but dropped later)
    5)Gnayirum Thingalum(Devika ,had a famous song Pattilum melliya penn idhu)
    6)Mounam Enathu Thai Mozhi(with Vanishri by A.L.S)ramke of Koshish finally came out with Kamal with male role truncated to give better scope to Sujatha
    7)Bambay Babu(Vanishri with VKR production and ACT Direction)
    8)Udal Porul Anadhi(Javar story to be directed by CVR under Ramkumar Films Banner)
    9)Devan Koil Maniosai(By Somu with music by Vijay ramani alias Ragavendar)
    10)Vayasu Appadi(Remake of Shaukeen with Poornam and VKR as co-artists)
    11)An untitled film by balu Mahendra to be produced by sivaji productions.
    12)A movie titled Thamizhan by G.V.Films directed by Suhasini Maniratnam.
    13)Nandha(By Bala with our acting God and ajith in lead) finally came out with surya and Rajkiran.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #2076
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    பழனி - தொடர்கின்றது

    கதை சுருக்கம்

    இந்த படத்தை அணு அணுவாக அலசவேண்டும் என்பது என் ஆசை - அதற்க்கு முரளியை போல அணுகும் முறை தெரிந்து இருக்க வேண்டும்
    அல்லது வாசுவின் உழைப்பு இருக்க வேண்டும் அல்லது ராகவேந்திர சாரின் தமிழ் வளம் வேண்டும் - இப்படி ஒன்றுமே இல்லாமல் தையிரியமாக எழுதுகிறேன் என்றால் அதற்க்கு பழனியை போல பல நல்ல உள்ளங்கள் இந்த திரியில் இருப்பதே காரணம் !

    புளியரை என்ற ஒரு கிராமம் - அதில் அண்ணன் ( பழனி) , தம்பி என்று நால்வர் - அண்ணன் தான் நம் தலைவர் - அண்ணன் ஒரு கோயில் தானே -- அவனையே உயிராக விரும்பும் அவனுடைய தம்பிகள் - SSR , முத்துராமன் - இன்னும் ஒருவர் ( பெயர் தெரியவில்லை - Mr X என்று வைத்துகொள்வோம் ) - மறைந்த அக்காவின் மகள் தேவிகா மற்றும் X இன் மனைவி ( வில்லி ) - குடும்பமே விவசாயம் செய்யும் குடும்பம் - உழைப்பு ஒன்றே மூலதனம் - சந்தோஷமாக வாழ்ந்தால் படம் ஏது - X இன் மனைவி அண்ணன் தம்பிகள் அவர்களது அக்கா மகளையே பாராட்டுவதும் , புகழ்வதும் - அவளுக்கு காதில் ஈயத்தை காச்சி ஊற்றுவதுபோல - குடும்பத்தை பிரிக்க சதி தீட்டுகிறாள் -- இது ஒரு தனி ஆவர்த்தனம்

    அண்ணன் தனது முதலாளியை ( Ts பாலையா ) தெய்வத்திற்கும் மேலாக மதிக்கிறான் - அந்த முதலாளி பசு தோல் போர்த்திய புலி - அவனது பக்தியை பந்தாடுகிறார் - ஏமாறுவது தெரியாமல் ஏமாறுகிறான் - அவனுக்கு குத்திகை விட்ட நிலத்தை , முருகன் கோயில் கட்டவேண்டும் என்று பொய் சொல்லி அதையும் அபகரித்து விடுகிறான் முதலாளி

    இதன் நடுவில் ஏழைகளுக்கு நிலம் வழுங்கும் நிறுவனம் - முதலாளி அந்த சங்கத்திற்கு , பெயர் வாங்குவதற்காக தானமாக கொடுத்த 5.5 acre நிலத்தை , பழனியின் நல்ல பெயருக்காக அவனுக்கு இலவசமாக தந்து விடுகின்றது - உண்மையில் அது ஒரு புறம் போக்கு நிலம் - விளையாத நிலம் - எல்லோரும் மீண்டும் பழனியை திட்டுகிறார்கள் - முதலாளியின் திருட்டுத்தனத்தை இன்னும் வெகுளியாக நம்புவதால் -

    பழனி மனம் தளரவில்லை - அந்த புறம் போக்கு நிலத்தையும் தனது உழைப்பினாலும் , சகோதரர்க்களின் ஒத்துழைப்பினாலும் பொன் வில்லையும் பூமி யாக மாற்றுகிறான் - லக்ஷ்மி என்ற பசுவும் அவர்கள் குடும்பத்தில் ஒரு நபராக சேருகிறது -- மகிழ்ச்சி அதிக நாட்கள் பழனியுடன் வாசம் செய்ய விரும்பவில்லை

    X இன் மனைவி அந்த பசு வந்த பிறகுதான் சந்தோஷம் வந்தது என்று எண்ணி யாருமே செய்ய துணியாத காரியத்தை செய்கிறாள் - அந்த பசுவை விஷம் வைத்து கொன்றுவிடுகிறாள் - X மிகவும் மனம் வருந்தி அவளுடன் வாழ்ந்த வாழ்க்கை விழலுக்கு இரைத்த நீர் போல ஆகிவிட்டது என்று புலம்பும் வேளையில் அவனுக்கு ஒரு விஷ பாம்பினால் வாழ்க்கையிலிருந்து விடுதலை கிடைகின்றது .

    தானமாக கொடுத்த புறம் போக்கு நிலம் அருமையாக வளர்வதை கண்டு , முதலாளியால் தாங்கி கொள்ள முடியவில்லை , பழனியிடம் கடனாக 2000 ரூபாயை கொடுத்து ஒரு பொய் பத்திரத்தில் கையெழுத்து ( கை நாட்டு ) வாங்கி விடுகிறான் -- 2000 - 15000 யமாக மாறுகின்றது சில நாட்களில் - முதலாளி அமீனாவை கொண்டுவந்து பழனியின் நிலத்தை ஜப்தி செய்கிறார் - இரு தம்பிகளும் பட்டணத்திற்கு வந்து இழந்த நிலத்தை மீட்டுவதற்காக வேலையில் சேருகிறார்கள் - ஒரு தம்பி (MR ) தன் கிராமத்தை சேர்ந்த பெண்ணை (புஷ்பா லதா)அண்ணனுக்கு தெரியாமல் திருமணம் - இன்னுருவன் (SSR )தான் சேர்த்துவைத்த பணம் திருடு போக , செய்யாத தவறுக்காக சிறை செல்கிறான் - அண்ணன் பட்டினம் வந்து தம்பிகளின் வாழ்க்கை யை கண்டு மனம் ஒடிகிறான்

    இதன் நடுவில் தன் விருப்பத்திற்கு இணங்காத X இன் மனைவியின் மீது ஒழுக்கம் கெட்டவள் என்ற பெயரை முதலாளி சுமத்துகிறான் - அண்ணன் வந்து தன் வீட்டையே உழுகின்ற நிலமாக்கி எல்லோருக்கும் ஒரு பாடம் புகட்ட எண்ணுகிறான் - இதற்குள் ஊர்மக்கள் கொதித்து எழுந்து அவன் தம்பியுடன் (SSR ) அந்த முதலாளியை வாங்க விரைகிறார்கள் - முதலாளி முருகன் கோவிலில் சென்று தஞ்சம் புகுகிறான் - பழனி மீண்டும் முதலாளி க்காக போராடுகிறான் - முதலாளியை மன்னித்து விடுமாறு வேண்டுகிறான் - அதுவே முதலாளிக்கு சரியான தண்டனை யாக இருக்கும் என்றும் கூறுகிறான் -

    முதலாளியை போலீஸ் கைது செய்கின்றனர் - மனிதனாக முதலாளியும் திருந்துகின்றான் - மீண்டும் தம்பிகள் கூடுகின்றனர் - உற்சாகம் மீண்டும் தலை எடுக்கின்றது - சுபம்

    தொடரும்

  10. #2077
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    தில்லானா மோகனாம்பாள் சன் டிவியில் போட்டதைப் பற்றி இன்னும் முக நூலில் அலசல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.. நிஜம்மாகவே இப்படி ஒரு படம் இன்றைய சூழ்நிலையில் - எவ்வளவோ டெக்னாலஜி முன்னேறி விட்ட நிலையிலும் - எடுக்க முடியுமா என்பது சந்தேகமே..
    தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் நடிகர்திலகத்திற்காக நாதஸ்வரப் பின்னணி வாசித்த இரட்டையர்களில் ஒருவரான MPN பொன்னுசாமி சொல்வதைப் பாருங்கள்.


    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  11. #2078
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //பழனியை போல பல நல்ல உள்ளங்கள் இந்த திரியில் இருப்பதே காரணம் ! // வாரும் ஓய் ரவி..இப்பத் தான் நீரும் நம்ம (நகைச்சுவை) வழிக்கு வந்திருக்கீர்

  12. #2079
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சந்திர சேகரன் சார், எம்பிஎன் பொன்னுசாமி பேட்டியைத் தந்தமைக்கு நன்றி.. நான் முன்பே சொல்லியிருக்கிறேன்..அவர் அல்லது சேது ராமனின் மகன் நடராஜ சுந்தரம் என்னுடன் கல்லூரியில் படித்தவர்..அவரும் இது பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார்..என்னுடைய கல்லூரி தினங்களிலேயே..

  13. #2080
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த படத்தின் சுவைகள் :

    நாகேஷ் : மீண்டும் ஒரு வைத்தியை இங்கு பார்க்கலாம் - ஆனால் இவர் நல்ல வைத்தி - சவாலே சமாளி யை போல , முதலாளி பக்கம் இருந்து கொண்டே அழகாக அவருடைய தவறுகளை சுட்டி காட்டுவார் - இவரது கீச்சகன் உபன்யாசம் மிகவும் சுவை - TS பாலையா கட்டின முருகன் கோயிலை - சூரபத்மனே வந்து கட்டிய கோயில் என்று சொல்லும் போது சிரிப்பை அடக்க முடியாது - படம் நிமிர்ந்து நிற்க இவரின் நகைச்சுவையும் ஒரு காரணம் .


    MR ராதா : என்ன அருமையான நடிப்பு - கருப்பு கணக்கை எழுதுபவர்களை அவ்வளவு ஈசி யாக வேலையிலிருந்து நீக்கமுடியாது என்று சொல்லும் போது எவ்வளவு உண்மையான வார்த்தைகள் ---- வெளி வருகின்றன

    TS பாலையா : வில்லனுக்கு வில்லன் , நடிப்புக்கு நடிப்பு - நிலத்தில் புதையல் கிடைத்தது என்று சொன்னவுடன் அவர் அதை போலீசிடம் மறைக்கும் நடிப்பை காண கண் கோடி வேண்டும் - Ill Earned is always ill spent - புதையலை வேண்டாம் என்று சொன்னவன் அருமையாக தூங்குவதும் , அதை தனக்கு என்று நினைத்தவன் உறக்கம் வராமல் திண்டாடுவதும் எவ்வளவு அழகாக நடித்து காண்பித்திருப்பார்

    தேவிகா - 1965 யில் வெளி வந்த NT யின் எல்லா படங்களிலும் தேவிகா நடித்திருப்பார் - ஜோடியாக இரண்டு மட்டுமே - அதிகமான குறும்புடன் - 7க்கு பிறகு என்ன என்று SSR யை கேட்டு அவர் 8 என்று சொன்ன பின் - உன் தலையில் குட்டு என்று சொல்லி விட்டு ஓடுவது - மீதி பாதியில் நடிப்பும் சேர்ந்து பின்னி இருப்பார் - NT யின் ஜோடியாக இந்த படத்தில் நடிக்காதது ஒரு பெரும் குறையே - அதுவே இந்த படத்தின் வெற்றியையும் சிறிதே பாதித்தது .

    SSR - இயல்பான நடிப்பு - அண்ணன் மேல் உண்மையான அன்பு - பணத்தை கோட்டைவிடும் போது அவர் கத்துவது /நடிப்பது சற்றே செயற்கை யாக இருக்கும்

    முத்துராமன் : அதிகமான நடிப்பு இல்லை இருந்தாலும் தன்னுடைய பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருப்பார்


    NT : மேலே உள்ளவர்கள் super structure என்றால் அஸ்திவாரம் நம் தலைவராகத்தான் இருக்க முடியும் - விவசாயத்தை பற்றியும் அதன் அருமை , பெருமைகளை பற்றியும் எவ்வளவு அழகாக சொல்லுவார் - பட்டிணம் வந்த பின் ஒருவன் வந்து அவரின் உணவு பொட்டலத்தை திருடும் பொது அவனுக்கு கொண்டு போய் தண்ணி கொடுக்கும் அழகாகட்டும் ; புதையல் தனது இல்லை என்று சொல்லும் வெகுளி தனமாகட்டும் , மன்னிப்பதனால் தான் ஒரு கெட்டவனை திருத்த முடியும் என்று சொல்லும் அழகாகட்டும் , தம்பிகளின் மீது காட்டும் பாசமாகட்டும் , ஒரு மனைவியை எப்படி சமாளிப்பது என்று தம்பியிடம் கூறும் அறிவுரையாகட்டும் - NT அங்கே பழநியாக வாழ்கிறார் - இந்த படத்தை பார்த்தவுடன் அவர் பெயரில் ஒரு பெரிய harvard university யே திறந்து விடலாம் - நடிப்பு என்றால் இதுதான் - படம் என்றாலும் இதுதான்

    இத்துடன் பழனி பற்றிய பதிவுகள் முடிவடைகின்றன - பொறுமையுடன் படித்து பாராட்டிய பல நல்ல உள்ளங்களுக்கு என் நன்றி

  14. Likes chinnakkannan liked this post

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •