Page 243 of 401 FirstFirst ... 143193233241242243244245253293343 ... LastLast
Results 2,421 to 2,430 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #2421
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழகத்தின் உண்மையான மண்ணின் மைந்தன், மறத்தமிழன், திரை உலகின் சித்தர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், திரை உலகம் மற்றும் அன்னை இல்லத்தின் பாச விளக்கு கமலா அம்மையார் திருமண நாளை முன்னிட்டு மீண்டும் வாசம் வீச....நல்ல அன்பிற்கும்...நல்ல பண்பிற்கும்...நல்ல குடும்பபாசத்திற்க்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய நடிகர் திலகத்தின் "பாசமலர்" கோடையில் ஒரு பாசமழையாய் குளிர்விக்க வருகிறது.

    அப்படிப்பட்ட "பாசமலரை", மோசமலர் என்று உண்மை மலர்களை பற்றி பேச தகுதியே இல்லாத, ஆனால் இன்றும் காழ்புணர்ச்சியால், பொறாமையால் குறை கூவும்...ஒரு சில காகித மலர்களுக்கு, என்றுமே வாசம் வீசும் மலர்களின் அருமை அறியாத, தெரியாத ஒன்று என்பது மட்டும் உண்மை மலரை விரும்புகிறவர்கள் அறிந்த ஒன்று !

    Last edited by RavikiranSurya; 23rd April 2014 at 11:46 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2422
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    அன்புள்ள ரவிகிரண்
    அருமையான கருத்துக்கள் , சற்றே நாம் திரிய விட்டு வெள்ளியே சென்று விட்டாலும் , உணர வேண்டிய வார்த்தைகள் - இப்பொழுது இருக்கும் எல்லா அரசியல் வாதிகளும் கோடியில் மிதக்கின்றார்கள் - நாம் தான் தெரு கோடியில் நிருத்தபட்டுள்ளோம் - படித்தவர்களின் ஓட்டுக்கள் யாருக்கு வேண்டும் ? 76% மக்கள் , criminal records , tainted அரசியல் வாதிகளை மன்னித்து விடுகிண்டார்களே - we are left with a choice of choosing between a deep sea and a devil

  4. #2423
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr RKS,

    Best wishes for the success of Pasa Malar and other NT's super hit movies.

    Regards

  5. #2424
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ragul. u will be in coimbatore on 2nd or 3rd May? We meet at Royal

  6. #2425
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    பாசமலர் படம் வெளியாகும் திரையரங்குகளின் பட்டியலை அதன் விளம்பரத்தோடு அதனை வெளியிடுபவரிடமிருந்து பெற்று இங்கே பதிவிட்ட நண்பர் RKS அவர்களுக்கு நன்றி. மேலும் வைர நெஞ்சம் மே 2 அன்றும் நீதி மே 9 அன்றும் முறையே மகாலட்சுமி மற்றும் பிராட்வே திரையரங்குகளில் வெளியாகும் விவரங்களை பதிவிட்டதற்கும் நன்றி.

    மே மாதம் மேலும் ஒரு நடிகர் திலகத்தின் திரைப்படம் மகாலட்சுமியில் வெளியாகும் என்று தெரிகிறது. If all goes well மே 23 அன்று வெள்ளை ரோஜா வெளியாகும். அதே போன்று ஜூன் மாதம் சென்னையில் நடிகர் திலகத்தின் அண்ணன் ஒரு கோவில், இரு துருவம் ஆகியவை வெளியாக இருக்கிறது. அதன் பின் எங்கிருந்தோ வந்தாள் ரிலீஸ் ஆகும். மீண்டும் Sp சௌத்திரி விஜயம் செய்ய இருக்கிறார்.

    ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் ஏன் பொது மக்களுக்கும் கூட பிடித்த 70-களின் முற்பாதியில் வந்த சில படங்கள் திரையை அலங்கரிக்க இருக்கின்றன. கலர் மட்டுமல்ல 60-களின் கருப்பு வெள்ளை காவியங்களும் திரைக்கு வரும் என்ற இனிப்பான செய்தி வந்திருக்கிறது.

    சென்னை மட்டுமல்ல கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை மற்றும் நாகர்கோவில் போன்ற அனைத்து ஊர்களிலும் இந்த திரை விருந்து ரசிகர்களுக்கு பரிமாறப்படும். Once everything gets finalised, விவரங்கள் இங்கே பகிர்ந்துக் கொள்ளப்படும்.

    அன்புடன்

    அந்த நாள் ஞாபகம் பாடல் பதிவிற்கு பாராட்டு தெரிவித்த சந்திரசேகர். கோபால் மற்றும் ரவி ஆகியோருக்கு நன்றி!

  7. Thanks Russellbpw thanked for this post
    Likes Russellbpw liked this post
  8. #2426
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கல்யாணியின் கணவன்! இந்த பெயரை கேட்டதும் நினைவுகள் பல்லாண்டு பின்னோக்கி ஓடுகிறது. இளமையில் நடிகர் திலகத்தின் ரசிகனாக பழைய படங்களை பற்றி கேட்டு படித்து பார்த்து தெரிந்துக் கொண்டிருந்த காலம். பலதரப்பட்ட படங்களைப் பற்றிய பல்வேறு செய்திகள் அதன் மூலம் கிடைத்தன. ஆனால் ஒரு சில படங்களைப் பற்றிய தகவல்கள் அதாவது படத்தின் கதை, பாடல்கள் நடிப்பு பற்றிய செய்திகள் மட்டும் அவ்வளவாக தெரிய வராமல் இருந்தது. அவற்றில் ஒன்றுதான் கல்யாணியின் கணவன். பட்சி ராஜா படம் என்று தெரியும், ஒரு கொலையை அதன் மர்மத்தை அடிப்படையாக கொண்ட படம் என்பது தவிர வேறு ஒன்றும் தெரியாது.

    1979-ம் வருடம் மார்ச் மாதம். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம். கல்லூரி வளாகத்தில் பாதி நேரமும் திரையரங்குகளில் மீதி நேரமும் செலவழித்துக் கொண்டிருந்த காலகட்டம். நமது திரிசூலம் மகத்தான வெற்றி பெற்று இமாலய சாதனைகளை புரிந்து ஓடிக் கொண்டிருக்கும் நேரம். நடிகர் திலகத்தின் படங்கள் தவிர வெளியாகும் அனைத்து படங்களையும் ஒன்று விடாமல் பார்த்துக் கொண்டிருந்த நேரம். மார்ச் 2 வெள்ளியன்று அப்போதே சொன்னேனே கேட்டியா என்று ஒரு படம் மதுரை சென்ட்ரலில் வெளியானது. இதை ஓபனிங் ஷோ பார்த்தேன். எத்தனை பேர் இந்தப் படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள் என்பதே பெரிய கேள்விக் குறிதான். சஷ்டி பிலிம்ஸ் சார்பில் வி.டிஅரசு தயாரித்து இயக்கிய படம். ஜெய்கணேஷ் ஹீரோ. சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இசையமைத்த படம். ஆனால் இந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலைப் பற்றி சொன்னால் ஏராளமானோர் கேட்டிருப்பார்கள். அதுதான் யேசுதாஸ் வாணி ஜெயராம் குரல்களில் ஒலித்த எல்லாம் அவன் தந்தது பாடல். அருமையான பாடல். அதிலும் சரணத்தில் ரோஜாக்கள் மலரும் ஆனந்த பவனம் நமது இல்லம் தானே பாப்பா என்ற வரியில் எல்லாம் வாணியின் குழைவு அவ்வளவு பிரமாதமாக இருக்கும். அந்தப் பாடலுக்காகவே பார்த்தேன். ஆனால் படம் சரியாக ஒரு வாரம்தான் ஓடியது. அடுத்த வெள்ளியன்று [மார்ச் 9] மாம்பழத்து வண்டு படம் அதே சென்ட்ரலில் வெளியாகி விட்டது. அதுவும் ஓபனிங் ஷோ. மறுநாள் மார்ச் 10,11 சனி மற்றும் ஞாயிறுதான் திரிசூலத்தின் 200-வது பட விழா வெகு கோலாகலமாக மதுரை தமுக்கம் மைதானத்தில் கொண்டாடப்பட்டது. 10-ந் தேதி காலை ஊர்வலத்தையும் இரண்டு நாட்கள் மாநாட்டு நிகழ்ச்சிகளையும் கண்டு களித்தேன்.

    சிம்மக்கல் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள தெருவின் உள்ளே அமைந்திருக்கும் கல்பனா திரையரங்கத்தில் [தற்போதைய அண்ணாமலை] ஓடுகின்ற படங்களைப் பற்றிய போஸ்டர்கள் தெருவின் திருப்பத்தில் இருக்கும் கம்பத்தில் ஒரு தட்டியில் ஒட்டியிருப்பார்கள். அடுத்த வாரம் மார்ச் 16 வெள்ளியன்று பஸ்ஸில் செல்லும் போது தற்செயலாக அதைப் பார்த்தால் கல்யாணியின் கணவன் காலலை 11.30 மணிக் காட்சி என்று போஸ்டர் தெரிகிறது. எத்தனை நாள் தேடிக் கொண்டிருந்த படம்? உடனே பார்க்க வேண்டும் என்று மனம் துடித்தது. ஆனால் வெள்ளி, சனி கல்லூரி இருந்தது. அன்றைய நாட்களில் நண்பர்கள் ஒரு குழுவாக படத்திற்கு செல்வோம். தனியாக ஒருவர் மட்டும் செல்லும் பழக்கம் கிடையாது. முன்னரே திட்டமிட்டபடி மார்ச் 16 வெள்ளியன்று வெளியான அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தை மார்ச் 18 ஞாயிறு மதியக் காட்சி அலங்கார் திரையரங்கில் பார்த்தோம். திங்களன்றும் கலயாணியின் கணவன் பார்க்க போக முடியவில்லை. மனதுக்குள் தவிப்பு அதிகமாகிறது. எந்தந்த படங்களையோ ஒன்று விடாமல் பார்க்கிறோம் [அதற்குதான் முதலில் பார்த்த படங்களைப் பற்றி குறிப்பிட்டேன்] நாம் வெகு நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த நமது நடிகர் திலகத்தின் படத்தை எங்கே பார்க்க முடியாமல் போய் விடுமோ என்ற தவிப்பு.

    ஒரு வழியாக மார்ச் 20 செவ்வாயன்று நானும் இரண்டு நண்பர்களும் [அதில் என் காலேஜ் mate-ம் நம்முடைய திரியில் பங்களிப்பாளருமான VCS-ம் ஒருவர்] போவதென்று முடிவு செய்து காலையில் இரண்டு மணி நேரம் இரண்டு கிளாஸ் அட்டெண்ட் செய்த பிறகு கிளம்பி பஸ் பிடித்து சிம்மக்கல் வந்து திரையரங்கம் வந்தால் சரியான் கூட்டம். இந்த திரையரங்கில் நடிகர் திலகத்தின் மூன்று படங்கள் காலை 11.30 மணிக் காட்சிக்கு வந்து விட்டு இரண்டு விஷயங்களில் ஆச்சரியப்பட்டிருக்கிறோம். ஒன்று கூட்டத்தைப் பார்த்து. இரண்டாவது படம் நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக படம் நன்றாக இருந்ததையும் பார்த்தோம். அவை மருத நாட்டு வீரன், கல்யாணியின் கணவன் மற்றும் குலமகள் ராதை.

    படம் பெரிய படம். இடைவேளை வரை கிரிப்பாக சென்ற படம் இரண்டாம் பகுதியில் திரைக்கதை அமைப்பில் ஏற்பட்ட சில பலவீனங்களால் படம் சற்றே தொய்வை தந்தது. ஆனாலும் நாங்கள் எதிர்பார்த்து சென்றதற்கு மேல் திருப்தி. படத்தின் கதை மற்ற அம்சங்களைப் பற்றி தம்பி ராகுல் எழுதி விட்டதால் அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. படத்தில் எங்களுக்கு கிடைத்த போனஸ் எனது ராஜ சபையில் ஒரே சங்கீதம் பாடல் காட்சி. பாடல் ஆரம்பிக்கும் பல்லவியில் இடது பக்கம் ஒருக்களித்தார் போன்று நின்று இடது கையை கால்சராயின் பைகளுக்குள் விட்டுக் கொண்டு வலது கையால் அணிந்திருக்கும் மேல் கோட்டின் நுனியை சற்றே நகர்த்தியவாறே மனதில் ஒரு களங்கமில்லை ஒரே கொண்டாட்டம் என்று ஸ்டைலாக நடப்பாரே அதிர்ந்தது அரங்கம். அதே போல் சொல்லி தெரியாது பாடலும் popular category வகையை சார்ந்தது என்பதால் ரசிக்க முடிந்தது.

    நடிகர் திலகத்தின் படத்திற்கு S M சுப்பையா நாயுடு இசையமைத்த கடைசி படம் கலயாணியின் கணவன். எனது ராஜ சபையினிலே பாடலில் வரும் சரணத்தின் மெட்டு கிட்டத்தட்ட பாவ மன்னிப்பு படத்தில் இடம் பெற்ற பாலிருக்கும் பழமிருக்கும் பாடலின் சரணம் போலவே அமைந்திருக்கும். இந்தப் படத்தின் மற்றொரு குறிப்பிட வேண்டிய அம்சம் நடிகர் திலகத்தின் பெயர் படத்தில் கதிரேசன் என்று அமைந்திருக்கும். சிவாஜி படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்களைப் பொறுத்தவரை இந்த பெயர் சற்று அபூர்வமே. இந்தப் படத்தை தவிர லட்சுமி கல்யாணம் படத்திலும் நடிகர் திலகத்தின் கதாபாத்திரத்தின் பெயர் கதிரேசன் என்றிருக்கும்.

    எப்போதும் சொல்வதுதான். இருந்தாலும் சொல்கிறேன். என்றும் இனிய அந்த பழைய நினைவலைகளில் நீந்த செய்த தம்பி ராகுல் ராமிற்கு நன்றி.

    அன்புடன்
    Last edited by Murali Srinivas; 24th April 2014 at 01:17 AM.

  9. #2427
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பார்த்ததில் பிடித்தது 27

    முதல் தேதி

    1952 ல் அறிமுகம் ஆகி 1955 ல் பல பிள்ளைகளுக்கு தந்தையாக நடித்து ரசிகர்களை ஆச்சர்ய பட வைத்தவர் நம்மவர்

    கதை :

    பெரிய குடும்பஸ்தர் சிவாஜி சார் , சாரா சரி மிடில் கிளாஸ் குடும்பம் , budget போட்டு குடும்பம் நடுதுகிறார் , ஒரு நாள் அவர் வேலை செய்யும் வங்கி மூட பட சிவாஜி சாரின் குடும்பம் வறுமையில் வாடுகிறது . வெறும் குமஸ்தா உத்யோகம் பார்த்தால் வேறு வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்பட ,குடும்பம் வாடுகிறது , அவருக்கு உதவுகிறார் NSK , அவர் உதவியால் வேலை கிடிக்க , முதல் நாளில் முதலாளி இறந்து விடுகிறார் , இன்னொரு கம்பனியில் ப்யூன் வேலை கிடைகிறது , ஆனால் சைக்கிள் இல்லாதனால் அந்த வேலையும் போக , வெறுப்பின் உச்சியில் வாழுகிறார் சிவாஜி சார் , கடன்காரர்கள் தொல்லை வேறு , ஒரு நாள் வேலை கிடைத்து விட்டது என்று பொய் சொல்லி விடுகிறார் , முதல் தேதி அன்று பணத்தை திருடு போய் விட்டதாக சொல்ல , குடும்பம் மேலும் துன்ப பட , அந்த நேரத்தில் ஒரு இன்சூரன்ஸ் agent யை பார்க்கிறார் , அவர் இன்சூரன்ஸ் பணம் கட்டி , இறந்து விட்டால் அவர் குடும்பத்துக்கு பணம் கிடைக்கும் என்று சொல்ல , சிவாஜி தன் குடும்பத்தை காப்பாற்ற உயிரை விடுகிறார் . சொர்க்கம் செல்லுகிறார் , அங்கே ஈசன் அவர் தற்கொலை செய்து கொண்டதால் கர்மவினை அனுபவிக்க , அவர் மீண்டும் பூலோகம் செல்லும் படியும் , அப்படி செல்லும் பொது அவரை யாரும் பார்க்க முடியாது , அவர் பேசுவதை யாரும் கேட்க முடியாது என்றும் சொல்ல , தன் தண்டனையை அனுபவிக்க பூலோகம் வருகிறார் சிவாஜி .

    அங்கே வந்து தன் குடும்பம் படும் துன்பங்களை பார்க்கிறார்

    தன் பெரிய பெண் மானபங்கம் படுத்த படுகிறார்
    தன் மகன் தான் இறந்த செய்தியை கூவி கூவி பாற்றிகை விற்கிறார்
    தன் மனைவி தற்கொலை செய்ய மோற்சிகிறார்
    தன் சின்ன மகள் பிச்சை எடுத்து சாபுடுகிறார்
    இதை பார்த்து மீண்டும் ஈசனிடம் சென்று அழுது புலம்புகிறார்

    காலையில் தான் சாகவில்லை என்று மனைவி , மக்களிடம் பிததுகிறார் ,
    அப்போ தான் அவருக்கும் , நம்மளுக்கும் தெரிகிறது , நடந்தது கனவு என்று (சிவலோகம் காட்சிகளும் , எசனிடம் பேசுவதும் )

    முடிவில் தன் பிரச்சனைகளை தைரியத்துடன் எதிர்கொள்ள முடிவு செய்கிறார்

  10. #2428
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    அலசல் :

    எனக்கு எப்போதும் positve ஆக முடியும் படம் தான் பிடிக்கும் , இதில் அது ஒரு பெரிய ஆறுதால் , ஆனால் அது வரை அனைத்தும் சோக மயம். அதில் பெரிய relief கலைவாணர் மற்றும் மதுரம் அவர்களின் நகைச்சுவை , கலைவானர்யை ஒரு சிறந்த நகைச்சுவை சக்கரவர்த்தி என்று அனைவரும் சொல்வதை கேட்டு உள்ளேன் ஆனால் அவர் நடித்த படங்கள் பார்த்தது இல்லை , இதில் அதை நிறைவேற்றி கொள்ள ஒரு சந்தர்பம் . அதனால் முதலில் அவர் பாத்திரத்தை பற்றி :

    NSK & மதுரம்

    தனக்கு வேலை போய் விட்டது என்பதை ஒரு மனிதன் இப்படியும் எதிர்கொள்ள முடியும் என்று அவர் நடித்து இருக்கும் விதம் , அழகாக தண்ணி குடித்து விட்டு , யாரும் மயக்கம் போட்டு விடாதிர்கள் தண்ணி தீர்ந்து விட்டது என்று அவர் சொல்லும் விதம் ஹாசியம்

    அவர் அறிமுகம் ஆகும் காட்சியில் கையில் cigarette உடன் அறிமுகம் ஆகும் காட்சியும் , மதுரதுடன் அவர் பேசும் வசனத்தை கேட்டு சிரிப்பு வர வில்லை என்றால் டாக்டரை பார்ப்பது நலம் , அதும் பேச்சு வாக்கில் cigarette மதுரம் கைக்கு போவது நகைச்சுவையின் உச்சம்

    வேலை பரி போய் வீட்டுக்கு வந்த உடன் வீட்டுக்கு புதுசாக வரும் வேலைக்காரனின் பெயர் கோவிந்தன் (குலதெய்வம் ராஜகோபால் )
    தன் மனைவி வேலைக்கு போக சொல்லும் பொது எல்லாம் அந்தமான் போய் விடுவேன் என்று மிரட்டுவதும் , உண்ணாவிரதம் இருக்க போவதாக சொல்ல , அந்த நேரம் பார்த்து பிச்சகாரன் வர ஒன்னு நீங்க சாப்புடுங்க இல்லை பிச்சகாரனுக்கு போட்டுடுவேன் 1,2,3 என்று என்ன , கலைவாணர் சாப்பிடும் காட்சியும் , வேலை கேட்டு போகும் இடத்தில் ciagrette பிடிப்பதும் ,எனக்கு வேலை வேண்டாம் , நான் நல்ல எங்க மாமனார் சொத்தில் வாழ்ந்து வருகிறேன் , என் நண்பர் தான் கஷ்ட படுகிறார் என்று சிவாஜி சாருக்கு வேலை கேட்பதும்

    cigarette பிடிக்க கூடாது என்று அதன் பாதிப்பை பற்றி lecture அடித்து விட்டு , தான் பிடிப்பதும் கேட்டால் அட்வைஸ் மட்டும் தான் பண்ணுவேன் அதை கடைபிடிக்க மாட்டேன் என்று சொல்லும் காட்சிகள் என்னை இந்த படத்தின் heavy சுப்ஜெக்ட் யில் இருந்து கொஞ்சம் சிரிக்க வைத்தது , அவர் சிவாஜிக்கு செய்யும் உதவிகள் , அதை செய்யும் விதம் (just like that செய்து விட்டு போவார் ) டாப்

  11. #2429
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி

    இமேஜ் ஆ ? அப்படி என்றால் என்ன ? ஹீரோ க்கு இலக்கணம் இருக்கனும் இல்லையா , இல்லை , பாத்திரம் மட்டுமே முக்கியம் என்று நடிகர் திலகம் நடித்த படம் தான் இது , ஹீரோக்கு கடைசியில் தான் கல்யாணம் ஆகவேண்டும் என்ற இலக்கணத்தை உடைத்து , பல குழந்தைகளுக்கு தந்தையாக நடித்து அதுவும் , இந்த படம் பண்ணும் பொது அவர் வயது 30 கூட நிரம்ப வில்லை , அந்த சிறிய வயதில் இப்படி ஒரு நடிப்பு என்றால் நான் சிவாஜி ரசிகன் என்று சொல்ல பெருமை படுகிறேன் , பாத்திரத்துக்கு தகுந்த , இன்னும் சொல்ல போனால் ஏழ்மையை வலு படுத்த தடி மீசை , ஒரு அழுக்கு வேஷ்டி , சட்டை கிழுந்து இருப்பதால் over கோட் , கண்ணாடி என்று பாத்திரத்துக்கு வலு சேர்கிறார் நம்மவர் , கண்களில் கலகம் , வாழ்கையின் வசந்தகாலத்தை நினைத்து மட்டுமே வாழ்ந்து , 19 ருபாய் மிச்சம் என்று முதலில் budget சொல்ல , ஆனால் அது பகல் கணவாய் போக பெரிய fuss ஒன்றும் செய்யாமல் இயல்பாய் இருப்பதும் , இவர் வறுமைக்கு பழக்க பட்டு உள்ளார் என்பதை காட்டுகிறது

    தனக்கு குமாஸ்தா வேலைக்கு மதிப்பு கிடையாது என்பதை அறிந்து , தான் சாக போகும் பொது , கை தொழில் கற்று கொள் என்று மகனுக்கு அறிவுரை சொல்லும் காட்சி , நெஞ்சை பிழிந்தாலும் அதுவே நிஜம் , நிஜம் எப்போதும் சுடும் , நாட்டின் education சிஸ்டம் எப்படி உள்ளது என்று எடுத்து காட்டுகிறது இந்த காட்சி , இறந்து போய் சிவாஜி தன் குடும்பம் படும் அவலங்களை பார்க்கும் காட்சி , தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் அனைவரும் பார்க்க வேண்டியது .

    மனோகரா படத்தில் கொக்கரிக்கும் , வீரத்திருமகன் , எதிர்பாராது படத்தில் அசத்தல் வில்லன் என்று ஸ்டைல்க்கு இலக்கணம் வகுத்த நம்மவர் , இதில் timid , coward பாத்திரத்தை எடுத்து , நடித்து கலக்கி இருப்பதை என்ன என்று சொல்ல , தன் இமேஜ் க்கு இது ஒத்து வரத்து என்று சொன்ன நடிகர்கள் மத்தியில் இப்படியும் ஒருவர்

    சிவாஜி சார் சிவனாக நடித்ததை பார்த்து விட்டு இந்த படத்தில் வரும் சிவனை பார்க்க கொஞ்சம் கஷ்ட பட்டு போனேன்

  12. #2430
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    அஞ்சலி தேவி :

    இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வந்தால் ஒரு குடும்ப தலைவி என்ன செய்ய வேண்டும் , எப்படி அவமாங்களை தாண்டி வாழ பழகி கொள்ள வேண்டும் , கணவர் தோற்கும் பொது , அவருக்கு நம்பிக்கை கொடுத்து , பிள்ளைகளை சமாளித்து அப்பப்பா சொல்லும் போதே மூச்சு வாங்குகிறது , நடிப்பில் சிவாஜிக்கு ஈடு , நடிக்க அவசியம் கம்மி , இயல்பாக நடிகனும் , முக்கியமாக react செய்யணும் , இவர் வாழ்ந்து இருக்கார் இந்த பாத்திரத்தில் .


    இசை : தண்டபாணி தேசிகர்

    பாடல்கள்:
    எல்லோரும் கேளுங்க
    ஒண்ணுல இருந்து
    துன்பம் வரும்
    என்று அணைத்து பாடல்களும் கருத்து அதிகம்
    கதை : தாதா மிராசி
    வசனம் இயக்கம் - பா நீலகண்டன் (மக்கள் திலகத்தை வைத்து அதிக படங்களை இயக்கிய இயக்குனர் )
    தயாரிப்பு BR பந்தலு : வித விதமாக நடிகர் திலகத்தின் நடிப்பை வெளி கொண்ட வந்த நிறுவனத்தில் ஒன்று

    இந்த படத்தை பற்றி நடிகர் திலகத்தின் சுயவிமர்சனம் :

    இன்பம் துன்பத்தை தத்ரூபமாக பரதிபலிக்கும் படம் , கடைசியில் கதாநாயகன் கண்டது எல்லாம் கனவு என்று சித்தரிக்கபடதால் ரசிகர்கள் அதை ஜீரணிக்க முடியாமல் , படம் எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை

    என் பார்வை :

    படம் எதார்த்தத்தின் உச்சம் , கொஞ்சம் சோகம் அதிகம் , நடிகர் திலகத்தின் அறிபுத இயற்கை நடிப்பு , கலைவாணரின் ultimate நகைச்சுவை , கொஞ்சம் கூட commercial காரணங்களுக்கு அடிபணியாமல் இயக்கி , தயாரித்த நல்ல உள்ளங்களுக்கு ஒரு சபாஷ்

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •