Page 51 of 400 FirstFirst ... 41495051525361101151 ... LastLast
Results 501 to 510 of 3993

Thread: Makkal Thilagam M.G.R. - Part 6

  1. #501
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #502
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

  4. #503
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    Quote Originally Posted by jaisankar68 View Post
    Really a rare photo showing Makkal Thilagam and NTR..
    Thanks..Jaisankar sir.

  5. #504
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    நாடோடி மன்னன்
    திரைப்படம் வெளிவந்து 55 ஆண்டுகள் முடிந்தன. நடிப்புத் தொழிலை விட்டு 36 ஆண்டுகள் முடிந்துவிட்டன. மண்ணுலகை நீத்து 26 ஆண்டுகள் முடிவடைந்தது. ஆனால் இன்னும் கொடிகட்டிப் பறக்கிறது மக்கள் திலகத்தின் திரைப்படங்கள். சேலத்தைத் தொடர்ந்து திருப்பூரில் திரையிடப்பட்டுள்ளது. சாதனை படைக்கப் போகிறது.மக்கள் திலகத்தின் சாதனையைப் பற்றி இன்னும் என்ன சொல்ல?

  6. #505
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பதிவாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் !



    ஓங்குக பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ். !

    அனபன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

  7. #506
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பேரறிஞர் அண்ணா அவர்களின் கண்ணியம் : நிகழ்வு : 1

    பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோது, மாவட்ட ஆட்சியர்களை கூட்டி ஆலோசனை நடந்த்தினார்.

    கூட் டம் முடிந்து சக அமைச்சர் ஒருவர், மாவட்ட ஆட்சியர் ஒருவரை "விரலை" நொடித்து ஓசை எழுப்பி கூப்பிட்டதை, அறிஞர் அண்ணா அவர்கள் கவனித்து விட்டார். அந்த அமைச்சரை அழைத்து, "ஒரு நாய் குட்டியை அழைப்பது போல,. மாவட்ட ஆட்சியரை அழைக்கிறாயே , நீ என்ன படித்திருக்கிறாய் ? அவர் ஐ.ஏ. எஸ். (ias) படித்தவர். அவர் நினைத்தால், தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நின்று வெற்றி பெற்று அமைச்சராகி விட முடியும். நீயோ, நானோ, ஐ.ஏ. எஸ். (ias) ஆக முடியாது. படித்தவர்கள், பதவியில் உள்ளவர்கள் மட்டுமல்ல, எல்லோரிடமும் மரியாதையாக நடக்க பழகிக் கொள் என்று கடிந்து கொண்டார்.


    ஓங்குக பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ். !

    அனபன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்
    Last edited by makkal thilagam mgr; 15th September 2013 at 10:35 AM.

  8. #507
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பேரறிஞர் அண்ணா அவர்களின் கண்ணியம் : நிகழ்வு : 2

    1961ம் ஆண்டு சென்னை மாநகராட்சி கல்வி அலுவலர் பதவி காலியானது. (fell vacant) யாரை நியமிப்பது என்று தி.மு.க. வினருக்கு குழப்பம். அறிஞர் அண்ணா அவர்களிடம் இது பற்றி சென்று கேட்டனர். திறைமையும், தகுதியும் உள்ளவர்களை நியமியுங்கள் என்றார். தி.மு. க. வினர், மீண்டும் அறிஞர் அண்ணா அவர்களிடம், "அப்படியென்றால் நம்மை எதிர்த்து எழுதி பேசிவரும் குத்தூசி குருசாமியின் மனைவி குஞ்சிதம்மாள் தானே அப்பதவிக்கு வருவார். இது நமக்கு நல்லதல்ல" என்றனர்.
    உடனே, கோபம் கொண்ட அண்ணா அவர்கள், "அந்த அம்மாவின் கணவர் எந்த கட்சியாகவும் இருக்கட்டும், அதற்காக, திறமையும், தகுதியும் குஞ்சிதம்மாள் ஏன் பாதிக்க வேண்டும்" என்று சொன்னார்.

    பின்னர் அறிஞர் அண்ணா அவர்களின் விருப்பப்படி குஞ்சிதம்மாள் நியமிக்கப்பட்டார்.

    ஓங்குக பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ். !


    அனபன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்
    Last edited by makkal thilagam mgr; 15th September 2013 at 10:35 AM.

  9. #508
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பேரறிஞர் அண்ணா அவர்களின் கண்ணியம் : நிகழ்வு : 3

    அன்றைய உயர் போலீஸ் அதிகாரியாக இருந்தவர் எப். சி. அருள். ஒரு சமயம் அண்ணா அவர்கள் உட்பட 5 பேர் எந்த காரணமும் இல்லாமல் கைது செய்யப்பட்டனர். பேரறிஞர் அண்ணா அவர்களை கைது செய்யும்போது, அவரின் மேல் துண்டை, எப். சி. அருள், தனது கைத்தடியால் தூக்கி எறிந்தார். உடனே அண்ணா அவர்கள் கீழே குனிந்து துண்டை எடுத்துக் கொண்டார். துண்டை கையில் வைத்துக்கொண்டே காவல் நிலையத்தில் கால் கடுக்க நின்றார்.

    காலம் மாறியது. பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை அவமானப்படுத்திய எப். சி. அருள், தானே, வலிய வந்து, பதவியை ராஜினாமா செய்தார். "ஆட்சி மாறலாம், ஆட்சியாளர்கள் மாறலாம், மக்களை பாதுகாக்கின்ற அதிகாரிகள் மாறத் தேவையில்லை" என்று தம்மை மதிக்காத ஒரு அதிகாரியை பழி வாங்கும் உணர்வு இல்லாது ராஜினாமாவை ஏற்க மறுத்து பனியினை தொடரச் செய்தார், பெருந்தன்மைக்கு பெயர் போன பேரறிஞர் அண்ணா அவர்கள்.

    ஓங்குக பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ். !

    அனபன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்
    Last edited by makkal thilagam mgr; 15th September 2013 at 10:36 AM.

  10. #509
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    அறிஞர் அண்ணா அவர்களின் நெத்தியடி ! :

    பேரறிஞர் அண்ணா தலைமையில் 1957ல் 15 பேர் சட்டசபை தி. மு. க உறுப்பினர்களாக தேர்வானார்கள். ஒரு நாள், சட்ட சபையில் எவரும் பாராத வகையில் அன்றைய நிதி மந்திரி சி. சுப்பிரமணியம் , அண்ணா அவர்களை நோக்கி, "நீ ஒரு அறிஞரா" என்று கேட்டார். வழக்கம் போல், கலைஞர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் துள்ளி எழுந்தனர். ஆனால், அவர்களை, அண்ணா அவர்கள் உட்கார வைத்து விட்டார்.

    மறுநாள் சட்டபேரவைக்கு வா வேண்டாம் என்றும், தாங்கள் பார்த்துக் கொல்கிறோம் என்றும், இதர 14 தி.மு.க. உறுப்பினர்கள் கூறியதும், அண்ணா அவர்கள், இது தன் சொந்த விஷயம் என்றும், தானே பதில் சொல்லிக் கொள்வதாகவும், வேறு எவரும் இது பற்றி பேச வேண்டாம் எனவும் தெரிவித்து விட்டார். அடுத்த நாள், சபையில் அண்ணா அவர்கள் பேசத் துவங்கினார். சட்ட மன்றம் அனைத்து உறுப்பினர்களால்,வழிந்தது. ஆனால், அண்ணா அவர்கள் நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியம் அவர்களை வானளாவப் புகழ்ந்தார். பேசிக் கொண்டே வந்தவர், இடையில் நிறுத்தி, தலைவர் அவர்களே ! தாங்கள் என் பேச்சை கேட்டு வருகிறீர்கள். இன்று நமது நிதி மந்திரி அவர்களை புகழ்ந்தேன். புத்திசாலி. பெருமைக்குரியவர். பாராட்டுக்குரியவர் என்றேன். ஆனால், நேற்று நிதி அமைச்சரோ, நீ ஒரு அறிஞரா என்று கேட்டார். இது எப்படி இருக்கிறது என்றால், என்ன அண்ணாதுரை, என்னைப் போய் புகழ்ந்து பேசுகிறிர்களே ! நீங்கள் ஒரு அறிஞரா என்று அவர் என்னைக் கேட்பது போல் உள்ளது என்றார் !.

    சட்டமன்றமே அதிர்ந்தது. தலைகுனிந்த அமைச்சர் நிமிர்ந்து உட்கார முயன்றார். ஆனால் முடியவில்லை.


    ஓங்குக பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ். !

    அனபன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்


  11. #510
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    குறள் யாருக்கு ?

    அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோது, தெய்வப்புலவர் திருவள்ளுவரின் குறள்கள் அரசுப் பேருந்துகளில் இடம் பெற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, "யாகாவாராயினும் நா காக்க" என்ற குறளும் இடம் பெற்றது. இது குறித்து சட்ட சபையில் விவாதம் நடைபெற்ற போது, உறுப்பினர் ஒருவர், இக்குறள், ஓட்டுனருக்கா ? நடத்துனருக்கா ? அல்லது பொது மக்களுக்கா ? என்று வினவினார்.

    பேரறிஞர் அண்ணா அவர்கள், இதற்கு பதிலளிக்கையில், "யாருக்கெல்லாம் நாக்கு இருக்கிறதோ .... அவர்களுக்குத்தான் இந்த குறள் என்று தெளிவான முறையில் தெரிவித்தார்.
    கேள்வி கேட்டவரால் அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை.

    ஓங்குக பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ். !

    அனபன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

    Last edited by makkal thilagam mgr; 15th September 2013 at 05:53 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •