Page 8 of 400 FirstFirst ... 6789101858108 ... LastLast
Results 71 to 80 of 3993

Thread: Makkal Thilagam M.G.R. - Part 6

  1. #71
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள்திலகம் திரி பாகம் - 6 சிறப்பான தொடக்கத்தை மகிழ்ச்சியுடன் முன்னெடுத்து வைப்பதில் நாங்களும் பங்கு பெறுகிறோம் ...கோவை-யில் குமரிகோட்டம் போஸ்டரில் ஒரு போஸ்- பணத்தோட்டம் -ஸ்டில் இன்னொரு போஸ் விவசாயி- ஸ்டில் , இதை பிரஸ் தொழில் செய்வோர் கவனமாக பிரசுரிக்க மாட்டார்களா ? அதே போல திரை அரங்க உரிமையாளர்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள் ஒரே நேரத்தில் பக்கம் -பக்கமாக இரண்டு படங்களையும் திரை இடுவதால் ரசிகர்கள், பொதுமக்கள் பார்ப்பது பிரிய நேருவதும் வசூல் பிரிவதும் தவிர்க்க இயலாதே!!! இதை பற்றி உறுப்பினர்கள் கருத்தை கூறலாமே...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #72
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    என்ன ஒரு அருளும் கருணையும் சாந்தமும் கலந்த இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட முகங்கள்.....இருவரையும் காணும்போது அக்காவும் தம்பியும் போல காட்சி அளிக்கின்றனரே!!! அன்னை தெரேசா அவர்களும் பொன்மன செம்மல் mgr அவர்களும் ஏழை எளிய மக்களுக்கு நெஞ்சார்ந்த பாசத்துடன் சேவை செய்ததை உலகம்- பிரபஞ்சம்- உள்ளவரை மறக்க முடியாது...

  4. #73
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    makkalthilagam movies ran - two ( 2 ) weeks in karur town... NADODI MANNAN, ADIMAIPENN, ULAGAM SUTRUM VAALIBAN,-thinnappa theatre PETTRAAL THAAN PILLAIYAA- light house theatre PERIA EDATHU PENN, GULAEBAKAVALI- ajantha theatre USV- kalaiarankam theatre KUDIYERUNTHA KOIL, ALIBABAVUM 40 THIRUDARKALUM- A 1 theatre ENGAVEETTU PILLAI three ( 3 ) weeks -thinnappa theatre and several films run more than 10 days within twenty years...

  5. #74
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    எம்.ஜி.ஆருடன் வேலனின் நட்பு
    m.g.r. நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்த போது அவருக்காக வேலன்
    'பகைவனின் காதலி'என்ற நாடகத்தை கதை வசனத்தோடு எழுதிக்
    கொடுத்தார். அந்த நாடகத்தை நடத்தும் போது எம்ஜி.ஆரின் கால்கள்
    முறிந்து விட்டது .அப்பொழுது ஏ .கே.வேலன் அவர்கள் ஆர்.எம்.வீரப்பனை எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து,எம்.ஜி.ஆரின் நிறுவனங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்தார் .வேலனால் எம்.ஜி.ஆருக்கு அறிமுகப் படுத்தப் பட்ட ஆர்.ம் .வீரப்பன் பின்னாளில் புரட்சி தலைவர் ராமசந்திரன் அவர்கள் பழையதையும் ஆரம்பத்தில் தொடர்பு கொண்ட நண்பர்களையும் எந்த காலத்திலும் மறக்காதவர் என்பதை கேள்வி பட்டிருக்கிறேன் . அதற்கு ஒரு சிறிய சான்று தான் இந்த தகவல்...
    எம்.ஜி.ஆர். அவர்களின் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
    ஆட்சிக்கு வந்த போது அமைச்சராக பட்டார் .
    எம்.ஜி.ஆர் நடித்து வெளி வந்த மாட்டுக்கார வேலன் ஏ.கே.வேலனின்
    கதையாகும் .இது ஐந்து மொழிகளில் எடுக்கப் பட்டு வெற்றி வாகை சூடியது.மூலக்கதை -ஏ .கே.வேலன் என போடக்கூட முதலில் தயங்கினர்.
    வேலனின் மற்றும் ஒரு கதையான பவானி m.g.r. அவர்களின்
    அரசகட்டளை யாக எடுக்கப் பட்டது .
    பழைய நட்பை மறவாத எம்.ஜி.ஆர் அவர்கள் வேலனின் படப் பிடிப்பு தளமான அருணாசலம் ஸ்டுடியோவில் நவரத்தினம் பட ஷூட்டிங்கின்
    போது வேலனின் இல்லம் தேடி வந்து நலம் விசாரித்தார். வேலனின் எளிமையான வாழ்க்கையை கண்டு வியந்தார். வேலனின் பிள்ளைகளிடம் பேசி மகிழ்ந்தார் .வேலனையும், அவரது மனைவியையும்
    தமது இல்லத்திற்கு விருந்துக்கு அழைத்தார் .எம்.ஜி.ஆரின் இல்லத்திற்கு
    சென்ற வேலனையும் .வேலனின் மனைவி ஜெயலக்குமி அவர்களையும்
    திருமதி. ஜானகி ராமசந்திரன் அவர்கள் அன்புடன் வரவேற்று உபசரித்தார்.நண்பர்கள் பேசி மகிழ்ந்தனர். மீண்டும் நட்பு தொடர்ந்தது
    புரட்சி தலைவர் ராமசந்திரன் அவர்கள் பழையதையும் ஆரம்பத்தில் தொடர்பு கொண்ட நண்பர்களையும் எந்த காலத்திலும் மறக்காதவர் என்பதை கேள்வி பட்டிருக்கிறேன் . அதற்கு ஒரு சிறிய சான்று தான் இந்த தகவல்... மற்றும் ஒரு வேண்டுகோள் நமது திரி தோழர்களுக்காக ...1966- வருடம் மக்கள்திலகம் ஸ்ரீ லங்கா நாட்டுக்கு சென்ற பொழுது உயர்ந்த ஸ்தானத்தில் பதவி வகித்தவர்கள் திரு mgr -அவர்களுக்கு நிருத்திய சக்கரவர்த்தி என்ற உன்னத பட்டம் வழங்கப்பட்டது, அதற்கு அர்த்தம் standsstill - அதாவது போஸ் தருவதில் சக்கரவர்த்தி என என் உறவினர் சொன்னது சரியா ?!

  6. #75
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்


    மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 6 எடுத்த எடுப்பிலே மையம் திரியில் 5 நட்சத்திர அந்தஸ்து கிடைத்திருப்பது மிகவும் பெருமைக்குரிய செய்தியாகும் .

    2012 அக்டோபரில் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 3 துவங்கப்பட்டு , 2013 செப்டம்பரில் -பாகம் 5
    நிறைவு பெற்று 3 பாகங்கள் முடிந்துள்ளது . 11 மாதங்களில் 12,000 பதிவுகளை பெற்றுள்ளோம் .

    எல்லோரின் பங்களிப்பின் மூலம் மக்கள் திலகம் திரி இன்னும் பல சிறப்புகளை பெற வாழ்த்துக்கிறேன் .

  7. #76
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் ''சத்யா மூவிஸ் '' வழங்கிய இரண்டாவது படம் ''காவல்காரன் '' இன்று 46வது

    ஆண்டு நிறைவு நாள் .

    7.9.1967ல் வந்து மிகபெரிய வெற்றி அடைந்த படம் .

    1967 -தமிழக அரசின் சிறந்த படம் - விருது பெற்ற படம் .

    1967 கருப்பு வெள்ளை படங்களில் அதிக அரங்கில் 100 நாட்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்த படம் .

    இனிமையான பாடல்கள் - சண்டை காட்சிகள் - மக்கள் திலகத்தின் நடிப்பு - நிறைந்த காவியம் .
    Last edited by esvee; 6th September 2013 at 06:33 AM.

  8. #77
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சத்யா மூவிஸ் காவல்காரன் -1967 சிறப்புக்கள் .


    1. சென்னை - குளோப் - அகஸ்தியா அரங்கில் 100 நாட்கள் ஓடிய முதல் படம் .

    2. சென்னை - மதுரை - திருச்சி நகரங்களில் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்த படம் .

    3. இலங்கையிலும் வெற்றி வாகை சூடிய படம் .

    4. பெங்களுர் நகரில் மூன்று அரங்கில் 56 நாட்கள் மற்றும் மைசூர் நகரில் 50 நாட்கள் .

    5. தமிழக அரசின் சிறந்த படம் -விருது -1967

    6. எம்ஜிஆர் இளமையாகவும் , சுறுசுறுப்புடனும் தோன்றிய படம்

    7. பாக்சிங் - சண்டை காட்சிகள் புதுமை

    8. மெல்லிசை மன்னரின் அருமையான டைட்டில் இசை - எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .

    9. படம் முழுவதும் எம்ஜிஆரின் ஸ்டைல் - அருமை .

    10.மறு வெளியீட்டில் வெற்றி கொடி நாட்டி வரும் படம் .

  9. #78
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    வினோத் ஸார்,
    காவல்காரன் திரைப்பட தகவல் பதிவு அருமை.
    மக்கள் திலகம் குண்டடிப்பட்ட பிறகு வந்த முதல் படம் காவல்காரன் தானே?

  10. #79
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ்த் திரையுலகம் கண்ட ஜோடிப் பொருத்தங்களில் முதன்மையானது எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா ஜோடிதான். எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தவர். ஜெயலலிதாவும் மூன்றாவது முறையாக முதலமைச்சராக இருப்பவர். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத பெருமை இது. எம்.ஜி.ஆரின் மனைவியான ஜானகியும் சிறிதுகாலம் தமிழக முதலமைச்சராக இருந்திருக்கிறார்.

    எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல் பெரிது. ஆயிரத்தில் ஒருவன் , அடிமைப்பெண், குடியிருந்த கோவில், அன்னமிட்ட கை, ஒரு தாய் மக்கள், கண்ணன் என் காதலன், குடியிருந்த கோவில், காவல்காரன், ராமன் தேடிய சீதை, ரகசிய போலீஸ் 115, கணவன், முகராசி, மாட்டுக்கார வேலன், தேடி வந்த மாப்பிள்ளை, குமரிக்கோட்டம் , நம்நாடு சந்திரோதாயம், புதிய பூமி என்று நீளும் இப்பட்டியலில் சில படங்களின் காட்சிகளும் பாடல்களும் எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா என இருபெரும் நட்சத்திரங்களின் நிஜ வாழ்வுடன் பொருந்திப் போகிறது. குமரிக்கோட்டம் படத்தில் என்னம்மா சின்னம்மா என்ற பாட்டில் அன்பான ஏழை மக்களிடம் அலட்சியமா என தலைவியைப் பார்த்து தலைவர் கேட்பார். முந்தைய ஆட்சியிலும் சரி இப்போதும் சரி ஏழை எளிய மக்கள் எளிதில் அணுக முடியாத பால்கனி தலைவியாகவே ஜெயலலிதா இருக்கிறார்.

    அரசியலில் எப்படியோ சினிமாவில் ஜெயலலிதாவை மிகவும் பிடிக்கும். காரணம் அவரது உடல்மொழி, கண்களின் பாவனைகள், புன்னகை, நளினம், அழகு, திறமை ஆகியவற்றுடன் அற்புதமான நடனக்கலைஞராகவும் அவர் இருந்தார்.



    ஜெயலலிதாவை எம்.ஜி.ஆருக்கும் அவரது ரசிகர்களுக்கும் பிடித்துப் போனதில் ஆச்சரியமில்லை. தனி ஆளுமையுடன்தான் அவர் இருந்தார். எம்.ஜி.ஆர் என்ற இமயமலையின் உச்சத்தில் வைக்கப்பட்ட நாளிலிருந்து ஜெயலலிதாவின் வாழ்க்கையில் ஏறுமுகம்தான்.

    ஆனால் திரையில் இந்த ஜோடி செய்த கலகலப்பும் ரகளையும் அதிகம். ரகசிய போலீஸ் 115 படத்தில் கணவன் மனைவியாக மாறி சண்டை போடுவார்கள். அத்தனை ரசி்க்கத்தக்க தம்பதியரின் சண்டையை வேறு எந்தப் படத்திலும் பார்க்க முடியாது.

    குடியிருந்த கோவிலில் நீயேதான் என் மணவாட்டி என இருவரும் ஆடிப்பாடும் பாடல் எனக்கு என்றும் மறக்காத இனிய அனுபவம்.



    அதெல்லாம் விடுங்கள். ஆறுகுணங்கள் கொண்டவளாம் ஒரு பாவை, அது யாரோ எவளோ ராமன் தேடிய சீதை என்று பாடுவாரே எம்.ஜி.ஆர். அந்த ஆறுகுணங்களுடன் ஜெயலலிதாவின் அரசியல் பிம்பம் வடிக்கப்பட்டு விட்டது.தலைவருக்கு ஏற்ற தலைவியாக அவரை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர்.





    . காவல்காரன் படத்தில் காது கொடுத்துக் கேட்டேன் என்ற பாட்டிலும், மின்மினியைக் கண்மணியைக் கொண்டவள்தான் உன் அன்னை என்ற கண்ணன் என் காதலன் பாட்டிலும் இந்த ஜோடி குழந்தைக்கான ஏக்கத்துடன் பாடுவதை பார்த்து ரசி்க்கலாம். அல்லது நல்ல வேளை அரசியலுக்கு வாரிசு வரவில்லை என ஆறுதல் படலாம்.

    ராமன் தேடிய சீதையில் மணமேடையில் மாலையுடன் இருவரும் இருப்பதாக ஒரு காட்சி வரும். அநேகமாக எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் மணக்கோலத்தில் காணக் கிடைக்கும் காட்சி அது ஒன்றுதான்.


    காவல்காரன் படத்தில் வரும் கட்டழகு தங்கமகள் திருநாளோ என்ற பாட்டில் அன்னை மனம் பற்றி ஜெயலலிதா கனிவுடன் பாடுவார். அதுவும் அவரது அரசியல் பிம்பத்துடன் பொருந்திப் போனது.

    ஜெயலலிதாவின் இயல்பான குணங்களைத்தான் எம்.ஜி.ஆருடன் நடித்த படங்களில் காண முடிகிறது. கோபம், அகந்தை, பாசம், காதல் என திரையில் வடித்த உணர்வுகளையெல்லாம் ஜெயலலிதாவின் சொந்த வாழ்க்கையுடனும் எம்.ஜி.ஆர் என்ற மனிதருடனான அவரது உறவுடனும் இணைத்துப் பார்க்க முடியும். ஆனால் அரசியல் என்பது திரையின் இமேஜினால் மட்டும் வருவதில்லை. அதற்கு எத்தனையோ தந்திரங்களும் பணபலமும் பக்கபலமும் தேவைப்படுகின்றன. தொழிலதிபர்கள், அதிகாரிகள், தொண்டர்கள், டெல்லி அரசியல் தலைவர்கள், மாற்றுக் கட்சியினர், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள், செயலாளர்கள் என எத்தனையோ பேரின் ஆதரவு இருந்தால்தான் திரையுலக பிம்பத்தையும் வைத்து தேர்தலில் வெற்றி பெற முடியும். இதை ஜெயலலிதாவும் நன்கு உணர்ந்தவராக இருக்கிறார்.

    ஆனால் எம்.ஜீி.ஆரிடம் இருந்த ஒரு குணம் ஜெயலலிதாவிடம் இல்லை என்றுதான் கூற வேண்டும். எம்.ஜி.ஆர் தனது அரசியல் கொள்கையை தத்துவார்த்த சித்தாந்தங்களிலிருந்து வடிக்கவில்லை. தன்னை இந்த உயரத்திற்கு உயர்த்திய ஏழை எளிய மக்களின் எதிர்பார்ப்புகளிலிருந்துதான் அவரது அரசில் கொள்கை உருவெடுத்தது. எந்தக் குழந்தையும் பசியுடன் பள்ளிக்குப் போகக் கூடாது என்ற சத்துணவு திட்டத்திற்கு உயிர் கொடுத்ததும் இதனால்தான்.


    இந்த வித்தியாசம்தான் ஜெயலலிதாவை எம்.ஜியாரிடமிருந்து தூர விலக்கி விடுகிறது. தனக்கு நிகராக ஜெயலலிதாவுக்கு புகழ் தந்த எம்ஜிஆரின் படத்தை சின்னதாக போட்டு ஜெயலலிதாவின் கட் அவுட்டுகள் வைக்கப்படும் காலம் இது.



    அரசியலைத் தவிர்த்து நடிகையாக ஜெயலலிதாவை எப்போதும் பிடிக்கும். அவரது திரைப்படங்கள் அதுவும் எம்.ஜி.ஆர் ஜோடியாக நடித்த திரைபப்டங்கள் எப்போதும் மனத்திரையில் ஒளிமங்காது ஓடிக் கொண்டே இருக்கும்.

    courtesy - net

  11. #80
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்


    மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 6 எடுத்த எடுப்பிலே மையம் திரியில் 5 நட்சத்திர அந்தஸ்து கிடைத்திருப்பது மிகவும் பெருமைக்குரிய செய்தியாகும் .

    2012 அக்டோபரில் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 3 துவங்கப்பட்டு , 2013 செப்டம்பரில் -பாகம் 5
    நிறைவு பெற்று 3 பாகங்கள் முடிந்துள்ளது . 11 மாதங்களில் 12,000 பதிவுகளை பெற்றுள்ளோம் .

    எல்லோரின் பங்களிப்பின் மூலம் மக்கள் திலகம் திரி இன்னும் பல சிறப்புகளை பெற வாழ்த்துக்கிறேன் .
    நன்றி. திரு. வினோத் சார். புரட்சித்தலைவரின் ஆசியுடன், தங்களின் தலைமையின் கீழ் எடுத்துசெல்லப்படும் இத்திரி இன்னும் பல சிறப்புகளைப் பெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இந்த சிறப்பு தகுதி பெற ஒத்துழைத்த அனைத்து நண்பர்களுக்கும் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்.

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Page 8 of 400 FirstFirst ... 6789101858108 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •