Page 2 of 2 FirstFirst 12
Results 11 to 16 of 16

Thread: Thanthi Tv

  1. #11
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    தந்தி டி.வி.யில் சந்தை

    வணிகம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்பது உணர்த்தும் வகையில், தந்தி டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘‘சந்தை.’’

    உள்ளூர் சந்தை முதல், உலகச்சந்தை வரையிலான நுட்பங்கள் விரிவாக ஆராயப்படுகின்றன. நிகழ்ச்சியில் வணிகத்தின் ரகசியங்களும் பரிமாறப்படுகின்றன. தானியங்கள் முதல் தங்கம் வரையிலான முதலீடுகள் மற்றும் அதற்கான வழி
    முறைகளையும் அலசுகிறது.

    சந்தை செய்திகள், பங்குச்சந்தை, தங்கம் விலை உள்ளிட்டவை குறித்தும் நிபுணர்கள் நேரடியாக பதில் தருகிறார்கள்.

    பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் புதிய செய்திகள், ஏற்றம் தரும் முதலீடுகள் முதல் மாற்றம் தரும் தொழில் யுக்திகளை பற்றிய செய்திகளை நேயர்களுக்கு வழங்குகிறது, சந்தை செய்திகள். முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி எல்லோருக்குமே பயன் தரக்கூடியது இந்த சந்தை.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    தந்தி டி.வி.யில் செய்தித்தளம்

    உங்கள் தந்தி டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ‘‘செய்தித்தளம்’’ ஒளிபரப்பாகிறது. அன்றைய செய்திகளை அன்றே விவாதிக்கும் செய்தித்தளம் பகுதியில், ஒரு முக்கிய நிகழ்வு அலசி ஆராயப்
    படுகிறது. ஒட்டு மொத்த செய்திகளை உள்ளடக்கிய செய்தித்தளம் எல்லோரும் காணவேண்டிய களமாகும்.

    செய்திகளின் முக்கியத்துவம் அறிந்து, அந்த செய்திகளை அன்றைய தினமே விரிவாகவும், ஆழமாகவும் விவாதிக்கும் செய்தித்தளத்தின் வரவு, இரவு நேரத்தின் தவிர்க்க முடியாத உறவாகவே மாறியிருக்கிறது. சுவாரஸ்ய நிகழ்வுகளை ஊர்க்குருவி, நாட்டு நடப்பு, உலக உலா என வெவ்வேறு வடிவங்களில் சுருக்கமாகவும், சுவையாகவும் செய்தித்தளம் தருகிறது. மொத்தத்தில் நம் சிந்தனையில் புகுத்திக்கொள்ள ஏராளமான செய்திகள் செய்தித்தளத்தில் இருக்கின்றன.

  4. #13
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    சமையல் குருகுலம்

    உங்கள் தந்தி டி.வி.யில் ஞாயிறுதோறும் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘சமையல் குருகுலம்’ நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களுக்கான களமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக கேட்டரிங் கல்லூரி மாணவர்களை திரட்டி அவர்களில் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுக்கும் வேலையும் இப்போது நடந்து வருகிறது.

    நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 40 கேட்டரிங் கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களில் இருந்து 8 மாணவர்கள் பிரித்தெடுக்கப்பட இருக்கிறார்கள். அவர்களுக்கு வைக்கப்படும் போட்டிகளின்அடிப்படையில் வெற்றியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர்.

    வெற்றி பெறும் சமையற்கலை வல்லுனர்களுக்கு ஆச்சரியமூட்டும் விருதுகளும் பரிசுகளும் காத்திருக்கின்றன. தலை சிறந்த ‘செப்’களை உருவாக்கும் இந்த முயற்சியில், ஏற்கனவே சமையற்கலையில் தேர்ச்சி பெற்ற இருவர் உறுதுணையாக இருப்பர். எல்லோரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது, இந்த ‘சமையல் குருகுலம்’ நிகழ்ச்சி.

    nandri.dinamani.

  5. #14
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    பதிவு செய்த நாள் : Dec 06 | 04:03 pm

    தந்தி டி.வி.யில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு ‘‘தெனாலி தர்பார்’’ ஒளிபரப்பாகிறது. இரவு நேரத்தை காமெடி கலாட்டாக்களால் வசீகரிக்கும் தெனாலி தர்பார், ஐம்பது எபிசோடுகளை தாண்டி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது. கலகலப்பாகவும், கண்ணியம் குறையாமலும் நகைச்சுவைகளை அள்ளி தெளிக்கும் இந்த நிகழ்ச்சி, நேயர்களின் சிரிப்புகளுக்கு சொந்தமாகியுள்ளது.

    ராண்டி மற்றும் குட்டிச்சுவர் பாய்ஸ்பேண்ட் இசை விருந்தில் நாளுக்கு நாள் புதுப்பொலிவுடன் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை நகைச்சுவையோடு கொண்டாடுகிறார்கள். சிரிக்கவும், சிந்திக்கவும் சொல்லித்தரும் தெனாலி தர்பார், சில நேரங்களில் சிறகடித்து பறக்கவும் செய்து விடுகிறது.

  6. #15
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    வெற்றிப்படிக்கட்டு

    உங்கள் தந்தி டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 2.30 மணிக்கு வெற்றிப்படிக்கட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கல்வி சம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கும் வெற்றிப்படிக்கட்டு விடை சொல்கிறது. நாளுக்கு நாள் அறிமுகமாகும் புதிய படிப்புகள் குறித்தும், அவை தொடர்பான சந்தேகங்கள் பற்றியும் தேர்ந்த நிபுணர்கள் விளக்கம் அளிக்கிறார்கள். 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு, மாணவர்களின் சந்தேகங்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

    வேலை வாய்ப்பின்றி தவிப்பவர்களுக்கும் தகுந்த ஆலோசனைகள் பெற்றுத் தருகிறது இந்த வெற்றிப்படிக்கட்டு. அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் ஐயங்களை போக்குகிறார்கள். தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் குறித்த சந்தேகங்களுக்கும், இந்த நிகழ்ச்சியில் தெளிவு கிடைக்கும்.

    என்ன படிக்கலாம்? எந்த படிப்பை தேர்ந்தெடுத்தால் எதிர்காலத்தில் வேலை கிடைக்கும் என்பதையும் வெற்றிப்படிக்கட்டு உயிர்ப்புடன் விதைக்கிறது. வாழ்க்கை கல்விக்கு தேவையான அனைத்து விஷயங்களும் அலசப்படுகின்றன. எதிர்கால சந்ததிகளின் அறிவு வேட்டைக்கு இந்த நிகழ்ச்சி நிச்சயம் உணவாக அமையும்.
    Nandri.DailyThanthi.

  7. #16
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    உங்கள் தந்தி டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, மைதானம். விளையாட்டுப் போட்டிகளை விறுவிறுப்புடன் தரும் இந்த நிகழ்ச்சியில், உள்ளூர்போட்டிகள் முதல் சர்வதேச போட்டிகள் வரை அனைத்தையும் அலசுகிறார்கள்.விளையாட்டு உலகின்அத்தனை நிகழ்வுகளையும் அப்படியே செய்திகளாக்கித் தருவதில் தனக்கென தனியிடம் பிடித்திருக்கிறது, இந்த மைதானம். விரர்களின்உற்சாகத்தையும் உத்வேகத்தையும் குறைவில்லாமல் பிரதிபலிக்கம் இநத நிகழ்ச்சி, எல்லோரது வரவேற்பையும் பெற்றுள்ளது.

    விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமல்லாது அனைவரையுமே கவர்ந்ந்துள்ள மைதானம்பல சாதனையாளர்களை உருவாக்கும் களம் என்பதில் சந்தேகமில்லை. வீரத்தை பறை சாற்றும் விளையாட்டுக்களும் உண்டு. விவேகத்தால் வெற்றி காணும் விளையாட்டுக்களும் உண்டு. இவை எல்லாவற்றையுமே கண்டுணர்ந்து சொல்கிறது, மைதானம்.

    சாதிக்கத் துடிப்பவர்களை உந்தித் தள்ளும் இந்த மைதானம், தந்தி டிவி தரும் வெற்றிக்கான களம்.

Page 2 of 2 FirstFirst 12

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •