Page 4 of 13 FirstFirst ... 23456 ... LastLast
Results 31 to 40 of 122

Thread: Why I Consider IR Unparalleled

  1. #31
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    ராஜா என்றாலே பின்னணி இசைதான், மெட்டமைப்பதில் (மெலடி - குரல் பகுதி) மற்றவர்கள்தான் சிறந்தவர் என்பதே ஒரு மித். அதை எளிதானக் காரணிகளை கருத்தில் கொண்டு சுலபமாக உடைக்கலாம். இது ராசைய்யாவிற்காக பிரத்யேக இடம். இதில் மற்ற இசையமைப்பாளர்களில் மெட்டுக்களை ஒப்பீட்டு எது சிறந்தது எது தாழ்ந்தது என்ற விளிம்பு வரை செல்லவேண்டாம் என நினைக்கிறென். பாடலுக்காக பின்னணி இசை, படக் காட்சிகளுக்காக பின்னணி இசை இந்த இரண்டு அஸ்திரங்களையும் பயன்படுத்தாமலேயே ராசய்யாவின் மெட்டுக்களையும் பேசலாம். நீங்கள் மேற்குறிப்பிட்ட இரு இசையமைப்பாளர்களின் பாடல்களையும் கேட்டு ரசிப்பவன் என்ற முறையில் என்னாலும் ராசைய்யா எந்த இடத்தில் நிற்கிறார் என்பதை கணிக்க முடியும்.

    ராசைய்யாவிற்கு கொடுக்கப் பட்ட பாடல் சூழ்நிலைகளை பட்டியலிட்டால் இந்த திரியே பத்தாது. டெம்ப்ளேட் வகை உணர்ச்சிகளை உள்ளடக்கியதாக இருந்தாலும் சரி, சட்டகத்தை விட்டு தள்ளி பிரத்யேக சூழ்நிலைகளை வெளிப்படுத்தும் இடங்களாக இருந்தாலும் சரி, ஒரே மெட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட ரசங்களை வெளிப்படுத்தும் இடங்களாக இருந்தாலும் சரி.. எல்லாவற்றிலும் பரிட்சார்த்த முயற்சியில் ராகத்தை கையாண்டிருக்கிறார். முழுக்க முழுக்க சாஸ்திரிய வகை, முழுக்க முழுக்க தெம்மாங்கு வகை, முழுக்க முழுக்க மேற்கத்திய வகை இப்படி தனித் தனியாகவும், பல்வேறு இசைவகைகளை ஒன்றாக பின்னிப் பிணைத்தும் கூட மெட்டமைத்திருக்கிறார்.

    ஆயிரம் படங்களை தொடும் நிலையில் (சுமார் 4500 பாடல்கள்) இருக்கும் பட்சத்தில் மூன்றே மூன்று பாடல்களை இங்கே வைக்கிறேன். மூன்றுமே ஒருசில காரணிகளில் ஒன்றுபடும். அவை 1) மண் வாசனை ததும்பும் 2) மனிதர்களாக வாழ்ந்து மறைந்து அவர்களின் பிற்கால சந்ததிகளால் / ஊர்மக்களால் கடவுள் ஸ்தானத்தில் வைக்கப்பட்டு பூஜிக்கப் படுபவர்களைப் பற்றிய கதைப் பாடல். 3) மூன்றிலுமே மிக மிகக் குறைந்த அளவில் வாத்தியக் கருவிகள் பயன்படுத்த பட்டு இருக்கிறது.

    மலையூர் மம்பட்டியான் - காட்டுவழி போற பொண்ணு


    கரிமேடு கருவாயன் - கதகேளு கதகேளு


    விருமாண்டி - கருமாத்தூர் காட்டுக்குள்ளே


    மூன்றுமே நமது நாட்டுப்புற மெட்டமைப்பின் அகராதி. பொக்கிஷங்கள். மண்ணின் வரலாற்றை பதியவைக்கும் முயற்சி. வரிகளுக்கு ஏற்ப சரியான உணர்வுகளை வெளிப்படுத்த குரல்களை எப்படியெல்லாம் வளைத்து வளைத்து செதுக்கியிருக்கிறார் இவைகளில். இந்த மூன்று மெட்டுக்களே போதும் என்னளவில் ராசைய்யா ஒரு தன்னிகரற்றவர் என்பதை பறைசாற்ற.
    Last edited by venkkiram; 19th July 2014 at 06:41 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. Likes Russellhaj liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #32
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by poem View Post
    Free Tamil Ebooks...........................


    இசை ஜீனியஸ் ராஜா - மின்னூல் - ரவி நடராஜன் -


    http://t.co/REfDfqESWp
    திரு ரவி நடராஜன்!

    உங்களது இந்தப் பணி பாராட்டுதலுக்குரியது. உலகம் முழுவதும் வாழும் லட்சக் கணக்காக ராஜா ரசிகர்களை இது சென்று சேரும் என நம்புகிறேன்.

    நன்றிகள்! வாழ்த்துக்கள்!
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  5. #33
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    The recent attempt on Piono from Mr. Vicky.



    Quote Originally Posted by vicky
    Malaysia Vasudevan is a soulful singer whose solos always have a deep impact in me. So its only natural that today's pick is by him.

    In this song the first 8 bars of Pallavai (i.e., the from 'Poove Ilaiya Poove' until 'Enakkuthaane' ) have three distinct arrangements.

    First two variations are executed without much ado and used only once in the whole song.

    1. The first version is when Malaysia Vasudevan is talking the dialogues "Kaamatchi". The bass track is parallel to the melody and provides a beautiful contrast.
    2. The second of the variation is when "Poove Ilaiya Poove" starts (without the rhythm) and actually acts as the prelude. The three notes of B-C#-D bass and the corresponding D6th, C# Aug, D by the strings ensemble is to die for..
    3. The third variation is the main bass track played every time the pallavi appears in the rest of the song.

    I tried playing all the 3 variations as it is in the same order as the original so the listeners can appreciate it.

    But I have mixed feelings about umpteen such superior ideas peppered all over a song in a non eye catch way (rather ear-catchy way). One one hand it demonstrates the wizardry of Raaja. Given a chance, Raaja will perhaps compose 20 other bass tracks for the same melody. On the other hand such tracks are not easily picked up by listeners and lay wasted behind insignificant movements/ picturizations of the song.

    Compare that with the music directors of today who get one idea and chew the same again and again in a song (and even across multiple songs !!)
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  6. Thanks mappi thanked for this post
  7. #34
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    கவுண்டர்பாயின்ட் என்பதை வாத்திய இசைகளில் மட்டுமே முயற்சி செய்து பார்க்காமல் குரல்களிலும் கொண்டுவந்தவர்..

    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  8. Likes mappi, Russellhaj liked this post
  9. #35
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    மெட்டுக்களின் ஊற்று.. மெட்டருவி என்றும் அழைக்கலாம். முதல் பதினோரு நிமிடங்கள் பாருங்கள். ஒரு சோறு பதம்.

    அபஸ்வரம் ராம்ஜி மற்றும் பாடலாசிரியர் முத்துலிங்கம் இருவரும் ராஜாவோடு நடத்திய உரையாடல்.

    Last edited by venkkiram; 19th July 2014 at 07:21 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  10. Likes Russellhaj liked this post
  11. #36
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    "ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் இந்த சொந்தம்மம்மா !!
    வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சம்மம்மா ..

    உமா ரமணன் , ராஜா குரல்களில் இன்னும் இனிமையாக வேறுபட்டு கேட்குது !!!


    ராஜா , மிகநல்ல இசையையையும் சர்வசாதாரணமாகக் கொடுக்கும் காரணத்தால் அதன் உண்மையான மதிப்பு தெரியாமல் போகின்றது
    xyz......


    பிண்ணனி இசைக்கு'னு தனிய சன்மானமே பிறபொருட்களோ எந்த காலகட்டத்திலும் தரப்பட்டதாக தெரியவில்லை, ஆனால் ராஜா இந்த அளவுக்கு ஏன் மெனக்கெட்டார்..

    xyz........
    Last edited by poem; 19th July 2014 at 08:49 AM.

  12. #37
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    ராஜா போன்று இன்னொரு பிறவி நம் மண்ணில் பிறப்பது அரிதே. பறந்து பட்ட இசை ஞானம் மட்டுமல்லாமல், மொழியறிவு, கலாச்சார, பண்பாட்டுத் தள அனுபவம், சிறுவயதில் ஊர்ஊராக அலைந்து திரிந்து மேற்கொண்ட கம்யூனிச பிரச்சார அனுபவம் மூலம் முகர்ந்துகொண்ட மண்வாசனை.. இதெல்லாம் ஒரே நபருக்கு! ம்ஹும்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  13. #38
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    ராஜா போன்று இன்னொரு பிறவி நம் மண்ணில் பிறப்பது அரிதே. பறந்து பட்ட இசை ஞானம் மட்டுமல்லாமல், மொழியறிவு, கலாச்சார, பண்பாட்டுத் தள அனுபவம், சிறுவயதில் ஊர்ஊராக அலைந்து திரிந்து மேற்கொண்ட கம்யூனிச பிரச்சார அனுபவம் மூலம் முகர்ந்துகொண்ட மண்வாசனை.. இதெல்லாம் ஒரே நபருக்கு! ம்ஹும்.
    வெங்கி ராம்,

    நீங்கள் இசையையும் தாண்டி குதிக்கிறீர்கள். சரி , நானும் விளையாட்டில் தங்கள் நண்பன் என்ற முறையில் குதிக்கிறேன்.

    நீங்கள் சொல்வது போல அடிப்படை வாழ்க்கையிலிருந்து மேலெழுந்த நமது பண்பாட்டு மண்ணின் மைந்தனை ,சமத்துவம் பேசிய

    communism பின்னணியும் , அது சார்ந்த இலக்கிய அறிவும் கொண்ட ,இசை வல்லுநர் வாழ்க்கை ,1976 வரை இருந்தது,அதன் பிறகு

    தொடர்ந்ததா ?

    1) மண்ணின் அடிப்படை சமூகத்திலிருந்து வந்தவர்,அவர்களோடு தன்னை ஐக்கிய படுத்தினாரா,அல்லது எம்.எஸ் பாணியில் மேல்தட்டோடு ஐக்கியம் ஆனாரா? தன் மக்களை சமூக ,பண்பாட்டு சார்ந்த மதிப்பீட்டு முறையில் வளர்த்தாரா?

    2)பூர்ஷ்வா முறையில் ,பிறரை அவமதிப்பது,சிறு சிறு உரசல் வந்தவர்களை எதிரி போல பாவிப்பது ,பழி வாங்குவது,சுற்றம்,சொந்தம்,நட்பு இவற்றை உதாசீனம் செய்து நம்பியவர்களை நட்டாற்றில் விடுதல் இவற்றை செய்யாமல் இருந்தாரா?

    3)இவரது ஆன்மீக பற்று ,இவர் அளவு மீறிய அகந்தையை கட்டுக்குள் வைத்திருந்ததா ?

    4)தொழில் போட்டியாளர்களை ,வளரும் இளம் இசையமைப்பாளர்களை இவர் எதிர் கொண்ட விதம் பெருமைக்குரியதா?

    5)இவர் தன்னை நம் மண் பாரம்பரிய இசை பிரும்மங்களோடு இணைத்து கொள்ள விரும்பினாரா அல்லது மொசார்ட் ,பீத்தோவன் நகலாக விரும்பினாரா?

    என்னுடையது கேள்விகள் மட்டுமே.பதிலல்ல.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  14. #39
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    வெங்கிராம் இசையை தாண்டி எதுவும் பேசவில்லை, கம்யூனிச பிரச்சாரத்தின் மூலம் ஏற்பட்ட மண்வாசனை அனுபவம் என்று தான் கூறினார்.

    வரதராசனுக்கு இடது சாரிகளின் தொடர்பும் சிந்தனையும் இருந்தது. அவர்கள் குடும்ப வாழ்வாதாரத்துக்கு கம்யூனிச மேடை பயன்பட்டதே தவிர, தன்னுடைய சிந்தனையை எப்பாடு பட்டாவது பரப்ப வேண்டுமென்று இருப்பதை இழந்துவிட்டு ஊர் ஊராக அலையவில்லை. அமரும், ராஜா சாரும், பாஸ்கரும் அறியாத வயதில் பிழைப்புக்காகவே வரதராசனுடன் சுற்றி இருக்கவேண்டுமே தவிர, இடது சாரிகளின் கொள்கைக்காக அலைந்தார்கள் என்று சொல்ல முடியவில்லை.


    அவ்வாறு சென்ற இடத்திலெல்லாம் அன்றைய ஜீவனத்துக்கு கிடைத்தது கொஞ்சம் தான், ஆனால் கற்றுகொண்டது நிறைய - கலாச்சாரமும் மண்வாசனையும்.


    ராஜா சாரோ அவருடைய சகோதரர்களோ ஒரு இயக்கம் தொடங்கி தான் சார்ந்த மக்களை கை தூக்கி விட வேண்டும் என்கிற சாதீய எண்ணத்தில் வந்துவிட்டு, பிறகு கொண்ட கொள்கையை மாற்றி இசைத்துறையில் பயணித்து விட்டது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்.


    அவர்களுக்கு இசை மட்டுமே தெரியும், அதுவே லட்சியமும் கொள்கையுமாக இருந்திருக்கிறது. தெரிந்ததை நூல் பிடித்து தெளிவாக போய் கொண்டிருக்கிறார்கள். இதில் தவறென்ன?


    எனக்கு ராஜா சார் என்ன செய்திருக்கிறார் என்று நம்மில் பலரும் ஒவ்வொருவராக, ஒவ்வொரு நிமிடம் எடுத்து சொல்ல ஆரம்பித்தால், சொல்லி முடிக்க குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் ஆகும்.


    3,4,5 இல் குறுப்பிடபட்டிருக்கும் குறைகளை நீங்களும் நானும் பார்த்தோமா? நாம் பார்பதும் கேட்பதும் அவருடைய பாடல்கள் மட்டுமே. அதில் ஏதேனும் குறை இருந்தால் நன்றாக சொல்லுங்கள், இசை தெரிந்தவர்கள் பதில் சொல்லட்டும். அதை விட்டுவிட்டு அடுத்தவர் முதுகில் அழுக்கு இருக்கிறது என்று ஒப்பாரி வைப்பதில் என்ன நியாயம்?


    நாமெல்லாம் என்ன, புத்த பிரானின் மறுவடிவமா?

  15. Thanks Russellhaj thanked for this post
    Likes Russellhaj, mappi liked this post
  16. #40
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சரி சார். glorification ,sycophancy ரொம்ப ரொம்ப தூரம் செல்வதால் என் சிற்றுரையை முடித்து விடுகிறேன்.

    மற்றவர்கள் எல்லோருமே,சுற்றியிருக்கும் மண்ணையோ,மக்களையோ,புல் பூண்டுகளையோ காணாது ,இலக்கியம்,மொழி அறியாது,அனுபவங்கள் அற்று, வானத்திலிருந்து தொபீரென்று இருபது வயதில் குதித்து தொழிலை கவனிக்க ஆரம்பிக்கிறோம்.இது அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் பொருந்தும் ராஜா சாரை தவிர.

    போதுமா? convince ஆகி ரொம்ப நேரமாகிறது.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Page 4 of 13 FirstFirst ... 23456 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •