Results 1 to 10 of 122

Thread: Why I Consider IR Unparalleled

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    வருஷம் 16 - பூ பூக்கும் மாசம்



    பல்லவிக்கு என ஒரு தாள நடை..பல்லவி முடிந்தவுடன் அதற்கு துளி கூட தொடர்பில்லாத ஒரு இசை ஓவியத்தை ராஜா வயலின் கற்றைகளால் வரைகிறார். அதைத் தொடர்ந்து இன்னொரு நடை. இடையிசை பரவிச் சென்று சரணத்தில் ஏறிவிடுவது மிகவும் இயல்பாக இருக்கிறது. சரணம் முடிந்து பல்லவி தொடங்குகையில் பல்லவிக்கே உரிய நடை மீண்டும் சேர்ந்து விடுகிறது. ராஜாவின் ஆக்கங்களில் இதுபோன்ற முயற்சிகள் அடிப்படையான ஒன்றாக அமைந்துவிடுவதைக் காணலாம். குறிப்பாக லயக் கட்டமைப்பில் வெவ்வெறு நடைகளில் பல்லவி, சரணம் இயங்குவது. ராஜாவைப் பிறகு வந்த யாருமே இந்த அளவுக்கு லயத்தில் மெருகு கூட்டியதில்லை. ராஜாவின் ஆக்கங்களில் பாதிக்கு பாதி / பாதிக்கும் மேற்பட்ட பாடல்கள் இப்படிப் பட்ட வகையில் வந்தவை. ராஜாவிற்கு பிறகு வந்த இசையமைப்பாளர்கள் எல்லாருமே பெரும்பாலான பாடல்களுக்கு பெரும்பாலும் ஒரே ஒரு நடையினை (ரிதம்) வைத்துக்கொண்டு பாடல் முழுதையும் நிரப்பிவிடுவார்கள். அப்படியே மிஞ்சி மிஞ்சிப் போனாலும் அடிப்படையான ரிதத்தின் மீது சில தாள வாத்தியங்க்களை மேலும் சேர்த்திருப்பார்கள். அவ்வளவுதான். அதற்கு மேல் லயத்தின் மீதான திறமை / ஈடுபாடு வெளிப்படுவதில்லை. ராஜா இதிலிருந்து விலகி லயத்தில் பலதரப்பட்ட முயற்சிகளை மிகவும் அனாயசமாக போறபோக்கில் செய்துவிடுகிறார். தவில், தபேலா, காங்கோ, ட்ரம், உறுமி, பறை, பம்பை, மத்தளம், முரசு, செண்டை இன்னபிற இப்படி ஒவ்வொரு தாளக் கருவியும் ராஜாவின் ஆக்கங்களால் பெருமை பட்டுக் கொள்ளும்.



    அதே படத்திலிருந்து "ஏய் அய்யாசாமி" பாடலையும் இன்னொரு உதாரணமாகச் சொல்லலாம். பல்வேறு நடைகளை அமைத்து ரொம்ப அழகா ஒரு கர்நாடக-தெம்மாங்குப் பாடலை கட்டமைக்கிறார் ராஜா.

    இசைப்பாடலில் ரிதம் என்ற பதத்தின் வித்தையே ராஜாவுக்கு பிறகு மறைந்து விடும் போலிருக்கிறது. பல்வேறு இசை ஜாம்பவான்கள் வரிசையின் கடைசியில் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி க்கு அடுத்து ராஜாவோடு இந்த லயச் சங்கிலி முடிந்து விடுகிறது.
    Last edited by venkkiram; 3rd January 2014 at 11:03 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. Likes mappi liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •