Page 9 of 14 FirstFirst ... 7891011 ... LastLast
Results 81 to 90 of 138

Thread: Sivaji Ganesan School of Acting

  1. #81
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    I am very happy and proud about what you'll are doing.
    Prof.Narayanaswamy and Ka.Bharat can be included/interviewed.
    They remember many scenes.Also Mr.Nandakumar.{NTFan and TV actor}
    Mr.Marudhumohan is doing a thesis on Shri.Sivaji at the Madras University.
    Regards and Best of luck,
    ramkumar
    நன்றி! நன்றி!

    திரு.கோபால் அவர்களின் school of acting திரியை முழுவதுமாகப் படித்துப் பாராட்டி நமக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்த திரு,ராம்குமார் அவர்களுக்கு நமது திரியின் சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #82
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கண்பட் சார்,
    ரொம்ப நாள் கழிச்சு வந்த அருள் வாக்கு .நன்றி.
    வாசு,
    படங்களுக்கு நன்றி.

  4. #83
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-42

    அவர் shakespere நாடகம் (படத்துக்குள்ளே வரும் )நடித்த மூன்றுமே cult status கொண்ட காட்சிகள்.

    ஒதெல்லோ என்ற ராணுவ தலைவன், வீரன் என்றாலும் ,தன் கோரமான உருவத்தில் தாழ்மையுணர்வு கொண்டதால் உணர்ச்சி வசப்படும் பொறாமை காரன். desdemona தகப்பன் விருப்பம் இல்லாமல் ,அவளை மணந்து இனிய அன்பான மண வாழ்வில் திளைத்தாலும், ஒரு சாதாரண கைக்குட்டையை வைத்து லகோ என்பவன் ,அவளையும் காசயோ என்பவனையும் வைத்து பின்னும் சதி வலையால் சந்தேக பேய் பிடித்தாட்ட ,மனமின்றி, தூங்கும் மனைவியை கொலை செய்ய வரும் காட்சி.(Othello Act 5 scene 2)

    Julius ceaser நாடகத்தில் senetor சம்பந்த பட்ட கொலை காட்சி. சீசர் ,ரோமானிய சாம்ராஜ்யத்தின் சர்வாதிகாரியாகி ,அதுவரை குடியாட்சி என்ற பெயரில் நடந்த கோமாளிதனங்களுக்கு முடிவு கட்ட எண்ண , மார்கஸ் ,காசியஸ் சதிவலையில் வீழ்ந்து ப்ருட்டஸ் இணைந்து கொள்ள, மார்க் அண்டனி சதி செய்து ஒதுக்க பட , செனெட் அரங்கேற்றும் கொலைகாட்சி.(Act 3)

    ஹாம்லெட் ,தன் தந்தையை கொன்று தாயை மணந்த சதிகாரன் சித்தப்பன் கிளாடியஸ் என்பவனை பழிதீர்க்க ,தந்தையின் ஆவியின் வற்புறுத்தலால் மன சாட்சியுடன் உரையாடும் (காதலி ஒபிலியாவிடம் காதலை முறி க்குமுன்பு), காட்சி. வாழ்வதா சாவதா என்ற மன சாட்சி போராட்டம் ,வாழ்வின் அவலங்கள்,சாவுக்கு பின் என்ன எனும் கேள்விகள் என்று மனதத்துவ சிக்கல்கள் நிறைந்த Nunnery Scene என்று connoiseurs குறிக்கும் Act 3 Scene 1.

    மூன்றுமே சிக்கல் நிறைந்த அந்தந்த நாடகங்கள் சம்மந்த பட்ட Highlight காட்சிகள்.

    இது தவிர அவர் நம் மன்னர்கள்,இதிகாச புராண நாயகர்கள் என்று நடித்த மூன்று பாத்திரங்களை சுருக்கமாய் எடுக்க போகிறேன் .

    சத்ரபதி சிவாஜி மன்னன் (1627-1680) சரித்திரத்தில் வெற்றியின் குறியீடு, ஹிந்துத்துவத்தின் புனர்வாழ்வாக கருத படும் வீர மன்னன். உலக நடிகனுக்கு தனது பெயரை ஈந்தவன்.வெற்றிக்கு பிறகு முடிசூட்ட நாள் குறிக்க பட்டு (6 June 1674), பொறாமை கொண்டோர் பிறப்பின்(குலம்) பேரால் அதை தடுக்க முயல ,தான் அடைந்த வெற்றிகளை குறிப்பிட்டு (Phonda ,Purandhar ,Rajpuri ,Kalyan ) தன்னை விட தகுதி கொண்டவன் யார் என சிவாஜி ஆத்திரம்,ஆவேசம் கலந்து கொடுக்கும் பெருமித கொக்கரிப்பு சவால் காட்சி.

    கர்ணன் படத்தில் இந்திரன் மாறுவேட விஜயம், கிருஷ்ணன் தூது, குந்தி தூது காட்சிகள் ,

    அப்பர் சம்மந்த பட்ட மூன்று காட்சிகள்

    இவற்றை வரும் பாகங்களில் சுருக்கமாக கவனிப்போம்.

    ----To be Continued.
    Last edited by Gopal.s; 28th June 2013 at 10:06 AM.

  5. #84
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    கண்பட் சார்,
    ரொம்ப நாள் கழிச்சு வந்த அருள் வாக்கு .நன்றி.
    வாசு,
    படங்களுக்கு நன்றி.
    என்ன செய்வது கோபால்? காலை எழுந்து குளித்து.பலகாரத்தை வயிறு புடைக்க தின்றுவிட்டு,ஆட்காட்டுவிரல் நுனியால் ஒரு பொட்டு வீபூதியை புருவங்களுக்கிடையே
    இட்டுக்கொண்டு,"முருகா" என்று ஒரே முறை சொல்லி, நாமும் பக்தன் தான் என்ற நம்பிக்கையில் இங்கு கோவிலில் நுழைந்தால்,அடேஞ்ச்சாமி! இங்கு ஒரு பக்தர் குழு, நாள் முழுவதும் உபவாசமிருந்து,ஈர மஞ்சள் வேட்டி அணிந்து அங்கப்ரதட்சணம் செய்து கொண்டிருக்கிறது...

    இதை பார்த்தே பயந்து இன்னொரு பக்கம் பார்த்தால் அங்கு இன்னொரு பக்தர் குழு, உடல் முழுக்க அலகு குத்திக்கொண்டு காவடி எடுத்து ஆடிக்கொண்டு வருகின்றது.

    இந்த பக்தர்களுக்கு நடுவே நான் எந்த மூலை?

    veg.பாணியில் சொல்வதென்றால்,"ஆசீர்வதிக்கப்பட்ட ஆண்கள் சங்கம்" என்ற குழாமில் "அங்கத்தினராக" சேர ஒருவர் bermuda அணிந்து பெருமையுடன் சென்றாராம்.
    அந்த சங்கத்தின் வாயிலிலேயே அதன் காவலாளி நிறுத்தி விசாரிக்க,
    இவரும் தன் நோக்கத்தை சொன்னார்.
    "அங்கத்தினராகவா?அதற்கான தகுதி உங்களுக்குள்ளதா?" என அவன் வினவ,
    இவரும் இறுமாப்புடன் தன் bermuda வை சிறிது உயர்த்திப் பிடிக்க,
    சிரித்த அந்த காவலாளியோ,
    "இதற்கு போய் அங்கத்தினர் பதவியா?"
    என்று கூறி,தன் முழு கால்சராயை சிறிது உயர்த்தி விட்டு சொன்னானாம்,
    "நான் இங்கு வெறும் காவலாளிதான்.!"

  6. #85
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-43

    ஒதெல்லோ பாத்திரத்தில் Paul Robeson நடிப்பும் (Stanislavsky கூட இந்த பாத்திரத்தை விரும்பி ஏற்பாராம்),ஹாம்லெட் பாத்திரத்தில் Laurence Olivier நடிப்பும்,சீசர் பாத்திரத்தில் Louis Calhern ,Rex Harrison நடிப்பும் விமரிசகர்கள் பார்வையில் மிக சிறந்ததாகும். ஆனால் நடிகர்திலகம் தனக்கு அந்நியமான இந்த மூன்று பாத்திரங்களையும் ஏற்று புரிதலுடன்,அந்தந்த பாணியில் தன் தனித்தன்மை விடாது நடித்த பாங்கு அலாதி. அவர் நடித்த காட்சிகள் அந்தந்த பாத்திரங்களுக்கு Highlight என்று சொல்ல தக்க உச்ச பட்ச சவால் கொண்ட காட்சிகள்.

    முதல் வியப்பு உலகத்தின் அத்தனை விதமான பாத்திரங்களும் பொருந்தும் முக அமைப்பு.இரண்டாவது வியப்பு ஒதெல்லோ,ஹாம்லெட் பாத்திரங்களுக்கு மற்றவர் குரல் கொடுத்தாலும் அவர் உள்வாங்கி நடித்த சிறப்பு.

    ஒதெல்லோ பாத்திரத்தில் மனமின்றி மனைவியை கொல்லும் நோக்கோடு தடுமாறி, அவள் அழகில் மயங்கி முத்தமிட்டு,தாழ்வு மனப்பான்மையும், பொறாமையும் மிக அவர் தன்னைத்தானே காதலும் இரக்க உணர்வும் தலை காட்டுவதை அடக்க முயலும் முக பாவங்களும் ,நடையிலேயே அத்தனை வசன சாரங்களை உள்வாங்கி புரியும் ஜாலங்களும் ,கைகளை தன் பாவத்தில் பங்கு கொள்ள இணங்க வைக்க முயல்வதும் , நான் ஏற்கெனெவே எழுதிய பின்னணியில் பொருத்தி பார்த்தால் புரியும்.Desdemona முழித்த பிறகு இறைஞ்சும் போது எங்கே இளகி மன்னித்து விடுவோமோ என்று அவர் காட்டும் கடுமை ,தடுமாற்றம் எல்லாமே அவரின் அபார பாத்திர உள்வாங்கலை காட்டும்.

    சீசர் அரசவைக்குள் நுழையும் senate கூடத்தில் நுழையும் தன்னம்பிக்கை கலந்த கம்பீரம்,மற்றவர் உடல் மொழி ,நிற்கும் நிலை பார்த்து சந்தேகம் கொள்வதும், தம்பியை மன்னிக்க சொல்லி இறைஞ்சுவனிடம் காட்டும் நிர்த்தாட்சண்யம்,மற்றவர் அவனுக்கு சார்பாக பேசும் போது தன்னிலை பிறழா கண்டிப்பான உறுதி,கத்தியால் எதிர்பாராமல் குத்த படும் அதிர்ச்சி வியப்பு கலந்த தடுமாற்றம், brutus இருந்துமா இது நடந்தது என்ற வினாவுடன் வருபவரை Brutus குத்திய உடன் நீயுமா என்று சாயும் இறுதி முடிவு என்று அவருக்கு சீசர் பாத்திரம் பொருந்தும் அழகை பார்த்து ரசிக்கலாம்.சாகும் போது சீசர் வலிப்பு வியாதி உள்ளவன் என்பதை அழகாக கிரகித்து சீசரின் முடிவை காட்டுவார்.

    ஹாம்லெட் பாத்திர காட்சி சிறிதே சிக்கலான monologue .(இதே மன போராட்ட காட்சி சாந்தி படத்தில் வேறு வடிவில்),வாழ்வதா சாவதா, சாவுக்கு பின் என்ன என்ற மன போராட்டம்.வாழ்க்கை பற்றிய கேள்விகள். Odipus Complex கொண்டு தன் அன்னையிடம் வெறுப்பு கலந்த நேசம் ,இரண்டாம் தந்தையை (சித்தப்பன்)பழிவாங்கும் உணர்வு, தந்தையின் ஆவியால் துன்புற்று, காதலியை துறக்க முயலும் சிக்கல். வெறித்த விழிகளோடு , கத்தியுடன் stylised முறையில் சிந்தனை கலந்த நடையில் அவர் திரும்பும் விதம் இந்த காட்சிக்கு புத்துயிர்ப்பு கொடுக்கும்.இதற்கு குரல் கொடுத்த பேராசிரியர் சுந்தரம் இந்த பாணியில் இந்த காட்சி நடிக்க பட்டதே இல்லையென்றும் ,வசனங்களை காட்சியுடன் இணைக்க மிகவும் பிரயத்தனம் எடுத்ததாகவும் வியந்து பாராட்டி உள்ளார்.

    சத்ரபதி சிவாஜி காட்சி அவருடைய கனவு கதாபாத்திரம் ஆனதால் உச்சம் தொடும்.தன்னை தாழ்ந்தவன்,அரசியல் அறியாதவன் என்று மகுடம் சூட்ட மறுப்பவர்களை ,தன்னிலை விளக்கத்துடன் எள்ளும் முறை.Porna கோட்டை வெற்றியை பெருமிதத்துடன் குறிப்பிடுவதும்,புரந்தர் கோட்டை வெற்றி தன்னை மீறிய எதிரியை எச்சரிக்கை மீறி வெற்றி பெற்ற சாதனை விளக்கமும்,ராஜகிரி கோட்டை எதிரி கொக்கரிப்பை எதிர் கொண்டு கைப்பற்ற பட்ட வீர்யம், கல்யாண் கோட்டையில் பகைவரிடம் அகப்பட்டு துன்புற்றவரை காத்த கருணை வீரம் ,இறுதியில் nihilist instinct கொண்டு அடையும் ஆவேசம் ...
    ஒவ்வொரு கோட்டைக்கும் நடை மாற்றம் மட்டுமன்றி, கை முக குறிப்புகளின் நுண்ணிய மாற்றங்கள்,வசன முறைகளில் ஏற்ற இறக்கம், தாள லய சுர மாற்றங்களும் ,reciting poetically என்ற முறையில் தமிழையும் அழகு படுத்தி நடிப்பிலும் ஒருங்கிணைவு படுத்தி ,அந்தந்த content க்கு ஏற்ப மாறு படுத்துவார்.

    மேற்கண்ட காட்சிகளை படித்து ரசிப்பதை விட, கண்டு கேட்டு ரசித்தால் அதன் அருமை, versatality (பன்முகத்தன்மை) உங்களுக்கே புரியும்.

    ----To be Continued.
    Last edited by Gopal.s; 3rd October 2013 at 06:53 AM.

  7. #86
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஒத்தெல்லோ பாத்திரத்தினை இரு படங்களில் அவர் நடித்துள்ளார். அன்பு மற்றும் ரத்த திலகம். இரண்டுமே வெவ்வேறு பரிணாமங்களில் மிளிர்வது சிறப்பு. அன்பு படத்தில் தமிழ் உரையாடலுக்கேற்றவாறு தமிழ் ரசிகர்களுக்கும் புரிய வேண்டும், அதே சமயம் அந்தப் பாத்திரத்தை நம் கலாச்சாரத்திலிருந்து அந்நியப் படுத்திக் காட்ட வேண்டும், அந்நிய நடிப்பினை அது மக்களிடமிருந்து அந்நியப் படாத வகையில் அவர்களை அதில் இன்வால்வ் ஆக வைக்க வேண்டும் என்று தனக்குத் தானே சில நிபந்தனைகளை உருவாக்கிக் கொண்டு அதநை செயல் படுத்தி யிருப்பார். ஆனால் ரத்த திலகம் சற்றே மாறு பட்டது. அது கல்லூரி மாணவர்களின் ஆங்கில இலக்கியம் பற்றிய நாடகமாக இடம் பெறுவது. அதற்கேற்ற வாறு அதில் ஆங்கில உரையாடல் இடம் பெற்றிருக்கும். இந்த வேடத்தில் அவருடைய நடிப்பு சற்று வித்தியாசப் பட்டிருக்கும். மாணவர்களின் ஆர்வத்தையும் அதில் காட்ட வேண்டும், திடீரென வேடம் போட வேண்டிய சூழ்நிலையினை மனதில் நிறுத்தி லேசான பதற்றத்தையும் அதனை மற்றவர்கள் உணராத வண்ணம் கொண்டு வர வேண்டும் என மெனக் கெட்டிருப்பார். ஒவ்வொரு பாத்திரத்திற்கும் அதனுடைய சூழ்நிலை, தன்மை போன்ற அனைத்தையும் அறிந்து அதற்கேற்ற நடிப்பை தந்து விடுவார்.

    குறிப்பாக ரத்த திலகம் படத்தில் இதுவே கடைசி என்று கூறியவாரு மீண்டும் மீண்டும் டெஸ்டிமோனாவை முத்தமிடுவதாக வரும் காட்சியில் அவருடைய முகத்தின் பிரதிபலிப்பில் அந்த கதாபாத்திரத்தின் எண்ண ஓட்டம் தத்ரூபமாகத் தெரியும்.

    கோபால் சார் சொல்வது போல் நாம் வர்ணிப்பதை விட பார்த்தால் மேலும் அதிகமான நுணுக்கங்களை அந்த நடிப்பில் புரிந்து கொள்ள முடியும்.

    ரத்த திலகம் திரைப்படத்திலிருந்து ஒத்தெல்லோவாக நடிகர் திலகம் ... பார்ப்போமா...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #87
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-44

    கதைகளில் மகாபாரதத்தை மீறிய Epic உலகளவில் இல்லாதது போல ,கர்ணனை மீறிய பாத்திர படைப்பு இது வரை உலகம் கண்டதில்லை. வீரபாண்டிய கட்டபொம்மனை குறிப்பிடும் போது ஒரே single agenda , ஒரே பகைவன், ஒரு சில ஆள்காட்டிகள் என்பதோடு பன்முக தன்மை இல்லாத பாத்திரம். ஆனால் கர்ணனோ மிக பெரிய பராக்கிரம சாலியும் அவன்தான். உலகத்தின் மிக துர்பக்கியசாலியும் அவன்தான். மிக மிக போற்ற பட்ட மனிதனும் அவன்தான். ஆனால் எதிரிகளாலேயே சூழ பட்டு வாழ்ந்த மனிதனும் அவன்தான். எல்லோரும் கவனம் செலுத்திய மனிதனும் அவன்தான். ஆனால் தாய் முதல் ,வாழும் குலம்,பெண் கொடுத்தவர் முதல் உதாசீனம் செய்து ஒதுக்கிய மனிதனும் அவன்தான்.

    அவன் நல்லியல்புகளே அவனுக்கு பகையாவதுடன், பகைகளும் உறவாடியே கெடுக்கின்றன. கண்ண தாசனின் வரிகள். செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழும் பாத்திரம்.மனோதத்துவ பின்னல்களுடன், non -linear முறையில்,multi -dimensions உடன் படைக்க பட்ட இந்த காவிய நாயகன் பாத்திரத்தை இன்னொரு காவிய உலக நடிகன் ஏற்று நடிக்கும் பொது நமக்கு கிடைத்த அனுபவம் சுனாமி போன்ற Psychedelic Trip .இன்றும் நம் மனதை பிசைந்து கண்ணீர் விட வைத்தாலும், ஒரு ecstatic உணர்வை தரும் அருமையான நடிப்பின் உன்னத சாதனை.

    இதில் நான் குறிப்பிட விரும்பும் மூன்று கட்டங்கள்- இந்திரா தேவன் வேடம் புனைந்து கவச குண்டலங்களை கவரும் காட்சி.. கிருஷ்ணன் தூது வரும் காட்சி. குந்தி தூது (சூது?)வரும் காட்சி.

    முதலில் இந்திரன் கவச குண்டலங்களை கவரும் காட்சி. தன் ஒளி கடவுளை கும்பிட்டு முடிக்கும் தருணத்தில் யாரோ ஒரு அந்தணர் வந்திருப்பதாக தகவல் வர , கர்ணனுக்கு வந்திருப்பவன் யார் என்றும் ,அவன் நோக்கம் என்ன என்று கடவுளால் குறிப்புணர்த்த பட்டும் அந்தணர் வேடத்தில் வந்த இந்திரனை வரவேற்று வேண்டுவதை கொடுக்கும் காட்சி...

    இந்திரனுடன் இயல்பாக இருக்கும் மரியாதை உணர்வை மீறி , பொய் வேடமிட்டு தன் ஈகை குணத்தையே எள்ளுவதாக கர்ணன் துடித்து போய் ,தனக்கு தெரிந்து விட்டதை குறிப்புணர்த்தி , செயலை சினந்து நகையாடி,வேண்டுவதை கொடுக்கும் இடத்தில் நடிகர்திலகத்தின் மனோதத்துவ ஆழம் நிறைந்த நடிப்பு இந்த காட்சியை இமயத்தில் உயர்த்தும்.இந்திரனின் பொய்யான வர்ணனைகளை கேட்டு உவகை கொண்டாலும், நோக்கத்தினால் ஒரு எள்ளல் சிரிப்புடன் அதை ஏற்பதும், கவச குண்டலங்களை யாசித்ததும் கர்ணன் எதிர்பார்த்த ஒரு எள்ளலுடன் கேட்டதும், இந்திரன் பயம் கொண்டவன் போல பாவிக்க, கர்ணன் தள்ளாடிய தேகம், தள்ளாடாத நோக்கம், பொய்யான நடிப்பு,அதன் பின் மெய்யான பிடிப்பு, என்னிடம் வர வேஷம் வேண்டுவதில்லை, ஆனால் எடுத்த காரியத்தின் தன்மை அப்படி...அப்படி பொய்யுடம்பு போர்த்தி வர தூண்டியுள்ளது உம்மை என்று குறிப்பிடும் கண்களின் சத்திய ஒளி கொண்ட தீட்ஷன்யத்துடன்,இந்த சதி செயலை இடித்து ,தன்னுடன் இந்த நாடகம் தன்னை அவமதிக்கும் செயலே என்று உணர்த்தி , இந்திரன் தன் அசல் உருவில் வந்து கேட்டிருந்தாலே கொடுத்திருப்பேனே என்று உரைத்து ,அதனை செயல் படுத்தும் அந்த காட்சி ... நடிப்பால் மட்டுமே ஒரு காட்சியின் சிறப்பு எத்தனை உயரம் தொட சாத்தியம் கொண்டது என்று தன்னுடைய கவச குண்டலமான நடிப்பை அந்த நடிப்பு கர்ணன் நமக்கு வழங்கி விடுவார்.

    ----To Be Continued.
    Last edited by Gopal.s; 8th July 2013 at 08:40 AM.

  9. #88
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-45

    கண்ணன் தூது வரும் காட்சியில் கர்ணன் ஒரு மௌன சாட்சி போல ,அவன் பங்கு அதில் குறைவு.துரியோதனன் சமாதானத்திற்கு ஒவ்வாமல் முரண்டு பிடிப்பான் என்றும் ,அங்கிருக்கும் அனைவரும் மனதளவில் பாண்டவர் பக்கம் நியாயம் என்று நம்புபவர்கள் என்றும், திருதராஷ்டிரன் பாசம்-நியாயம் இரண்டுக்கும் நடுவில் ஊசலாடுபவன் என்றும் தெரிந்த கண்ணன் , தூதில் சாதிப்பது விதுரன்-துரியோதனன் ,கர்ணன்-பீஷ்மர் இவர்களுக்கிடையில் பிரித்தாளும் சூழ்ச்சி ஒன்றைத்தான். இதில் கர்ணனின் பங்கே ,தனித்து விட படும் (சகுனி துணை என்றாலும் )துரியோதனனுக்கு அரணாக aggressive unconditional support தருவதுதான் என்று உணர்ந்து , தனக்கு ஒவ்வுகிறதோ இல்லையோ ,அவனுக்கு சார்பாக பேச வேண்டிய கடமையை உணர்ந்து செய்ய வேண்டும்.இந்த காட்சியில் நடிகர்திலகம் இதை உள்வாங்கி நடிக்கும் மேதைமை ,உடல்மொழி,பேசும் பாணி எல்லாவற்றிலும் பிரதிபலிக்கும்.

    கண்ணன் உள்ளே வரும் போது ,முள் மேல் உட்காருவது போல மற்றவர் துரியோதனன் கட்டளைக்கு பணியும் போது ,கர்ணன் இதை ஓரக்கண்களால் உணரும் அழகே தனி.(இதில் தனக்கும் ஒப்புமை இல்லை என்ற ஒரு உடல்மொழி),துரியோதனன் தடுமாறி விழ வைக்க படும் நிலையில் எழும் கர்ணனின் முகத்தில் சிறிதே ஆசுவாசம் தெரியும்.கண்ணனுடன் வலுவில் வாதாடினாலும்,மனமின்றியே அதை வலுகட்டாயமாக செய்ய படுவதை காட்ட சிறிதே உரத்த வலுவான உடல் மொழியில் ,பாண்டவர் மனைவியை சூதாடிய இழிவை குத்தி (கண்ணன் கோப படும் அளவு)அந்த பேச்சு முறையில் தானே தனக்கு உரத்து சொல்லி ,தன்னை தானே convince பண்ணி கொள்ள முயலும் strain தெரியும்.மற்றோர் மன ரீதியான துரியோதனன் எதிர்ப்பை கூர்மழுங்க செய்யும் முயற்சி என்பது தெரியும் வகையில் நடித்திருப்பார்.

    ஆனாலும் அடக்க முடியாமல் பீறிடும் நிலைக்கு தள்ள படுவார் ,விதுரன் பிறப்பை சொல்லி அவமான படுத்த படும் போது .கிட்டத்தட்ட தன நிலைக்கு சமமான அவமானத்தை ,தன்னிலை மறந்து உணர்ச்சி வச பட செய்யும்.

    மற்றோருக்கும் ,நடிகர்திலகத்துக்கும் உள்ள வேற்றுமையே அதுதானே?கதாபாத்திரத்தின் ஆன்மாவில் புகுந்து கூடு விட்டு கூடு மாறும் மந்திரம்?கர்ணனுக்கு பங்கில்லா காட்சியிலும்,இந்த அற்புதமான உளவியல் புரிந்த அபார நடிப்பினால்,கர்ணனே முன்னிலை படுவான்.

    ---To be Continued.

  10. #89
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-46

    குந்தி தேவியின் தூது காட்சி இந்திய சினிமா வரலாற்றிலேயே பொன்னெழுத்துக்களில் பொறிக்க பட வேண்டிய மிக சிறந்த ஒன்றாகும். வீரபாண்டிய கட்டபொம்மனின் laser sharp உணர்வு குவி மையம் என்ற நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட பல்வேறு உணர்வு நிலைகளின் கலவை கொண்ட விரிந்த தளத்தை ,பரப்பை உடைய உன்னத காட்சி. இது ஒரு emotional Roller coaster ride என்ற வகையில் ஏழு வகை மனநிலைகளின் கலப்பு போராட்டம் . Joy (சந்தோசம்),Hatred (வெறுப்பு),Sadness (துக்கம்),Reconciliation (தேற்றிகொள்வது),Surrender (சரணாகதி), Cynicism (எள்ளல் ),Assertion (இருப்புநிலை) . அற்புதமான வசனத்தை துணையாக கொண்ட துரித உணர்வு நிலைகளில்(concurrently running and at times in cocktail manner) மாற்றம் காட்டும் மாயாஜால நடிப்பு வித்தை.

    சந்தோசம்- குந்தி தன் வீடு தேடி வந்ததை ஒரு பாக்கியமாக கருதும் போது ,அவர்தான் தன் அன்னை என்று அறியும் போது .தன் பிறப்பறியா களங்க நிலை மாறி தன் உயர்வை தானே உணரும் போது அடையும் உவகை.

    வெறுப்பு- தன் அன்னையின் புறக்கணிப்பால் தான் பட்ட அவமானங்களை எண்ணும் போது
    தாயை சபிக்கும் அளவு பெருகும் வெறுப்பு. தான் தன் முயற்ச்சியால் இவ்வளவு உயரங்களை அடைந்தும் பிறப்பின் அறியாமை, வளர்ப்பின் பின்னணியால் அடையும் அவமானம் சார்ந்த சுய வெறுப்பு நிலை.

    துக்கம்-தன்னுடைய தாயை தேடி அலைந்த துயரம், பலர் வந்தும் சோதனையில் தோற்று ஓடியது, தன் தொடர் அவமானங்கள் சுமந்த பிறப்பறியா வேதனை,தன்னுடைய தாயின் பக்கம் செல்ல முடியாத இயலாமை,அவள் தன் தாயே என்று உலகத்திற்கு தான் உயிரோடிருக்கும் போது சொல்ல முடியாமல் சொல்லும் போங்கள் தாயே.

    தேற்றி கொள்ளும் நிலை-குந்தி தன் தாய் என்று சொல்வது தன்னை அன்னையின் மீதுள்ள ஆத்திரத்தை தணிய வைப்பதற்காக என்று எண்ணும் போது , இன்றேனும் என்னை பெற்றேடுத்தாயே என்று மடியில் ஆயாசம் கொள்ளும் போது ,அர்ஜுனனோ,நானோ இருவரில் ஒருவர் என்று ஐந்து மகன்கள் என்று தாயிடம் உரைக்கும் போது ,துரியோதனன் நற்பண்புகளை சொல்லி தன் இருப்பை உணர்த்தி, தாயெனும் உண்மையை மறைக்க சொல்லும் போது ,தர்மம் வெற்றி பெற தெய்வம் போன்ற துணைவர் காட்டிய வழியில் அன்னையும் கைப்பாவையாய் மாற வேண்டிய நிலையை உணர்ந்து உணர்த்தும் நிலை.

    சரணாகதி-நட்பின் உயர்வுக்கு தான் இறக்கும் வரை செய்ய வேண்டிய கடமைக்கு,தாயின் சுயநல வரங்களை மறுக்காமல் அளிக்கும் போது ,கேள்வி கேட்காமல் தாயின் நிலையை உணர்ந்து தாய்க்கு உரிய ஸ்தானம் அளிப்பது , தன்னையே அழித்து கொள்ளும் அளவு தன்னை மீறிய சுயம் கருதா பண்புக்கு என்று கேள்வி கேட்காத சரணாகதி நிலை.

    எள்ளல்- தாயின் அணி மாற சொல்லும் வேண்டுகோளை நிராகரிப்பது.(இது சரியான பேச்சா தாயே), நாகாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் பிரயோகம் செய்வதில்லை என்ற சத்தியத்தை கேட்கும் போது ,அதன் மூலத்தை உணர்ந்த எள்ளல் .

    இருப்புநிலை- தானிருக்க வேண்டிய இடம்,தாய்க்கு உரிய இடம், தான் சாகும் வரை நடக்க வேண்டியவை, செத்த பிறகு பிறப்பறியா இழிவை நீக்க வேண்டிய அவசியம்,தர்மம் வெற்றி பெற விழைவு, என்று அனைத்து இருப்பு நிலைகளின் நிதர்சனங்களும் உணர்த்த படும்.

    இது அத்தனையும் மீறி மற்றோர் உணர்வு,இது வரை கர்ணனிடம் அந்த படத்தில் அதுவரை வெளிப்படாத ஆயாசம் நீங்கிய பெருமித உணர்வு .தன்னை பற்றி தானே அறிந்து விட்டதை உணர்ந்து ,இனி அடைய கடமையை தவிர எதுவுமில்லை என்ற உணர்வு நிலை.

    இந்த உணர்வுகள் ஒரே குவி மையத்தில் இயங்காமல் ,ஒளி சிதறல்கள் போல தெறித்து நொடிக்கு நொடி முக பாவத்திலும்,உடல் மொழியிலும்,பேசும் மொழியிலும் நடிப்பின் வானவில் கலவை போல ஜாலம் காட்டி முடிவை அடையும்.

    இந்த காட்சி போன்று இனி ஒன்று அமைய நடிகர்திலகம்,சக்தி கிருஷ்ணசாமி,பந்துலு இவர்கள் வியாசருடன் சேர்ந்து பிறந்து வந்தால் மட்டுமே சாத்தியம்.

    ---To be Continued.
    Last edited by Gopal.s; 10th July 2013 at 02:31 PM.

  11. #90
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் கோபால் சார்
    45 மற்றும் 46 ... சட்டம் போட்டு வைத்து பாதுகாக்கப் பட வேண்டிய analysis. Spectrum ஒரே நேரத்தில் பல்வேறு திசைகளில் பார பட்சமின்றி ஒரே அளவில் ஒளி வீச்சினை அளிப்பது போன்று ஒரே காட்சியில் ஒவ்வொரு உணர்விற்கும் அதற்கேற்ப வஞ்சனையின்றி தன்னுடைய நடிப்பு என்கிற கவச குண்டலத்தை நடிகர் திலகம் அளித்துள்ளதை அருமையாக விளக்கியுள்ளது பாராட்டத் தக்கது. Larger Than Life Character provided with Life and Energy..

    ஒரே ஒரு திருத்தம் ... சூது[தூது] ... இது கண்ணனுக்கே பொருந்தும். குந்தி தேவியின் வருகையில் உள்நோக்கம் இல்லை. தன் மகனைப் பார்க்க வரும் ஒரு தாயின் பாசமே மேலோங்கி இருந்தது.. அதற்கு கோரிக்கை என்பது ஒரு காரணமாய் அமைந்தது என்பது ஒரு வகையில் மகிழ்ச்சியைத் தந்தது என்றாலும் அதனையும் மீறி தன் அருமை மகனை, தன் தலை மகனைப் பார்க்கப் போகிறோமே என்ற உணர்வை மிக அருமையாக தன் வசனங்கள் மூலம் வெளிப்படுத்தி இருந்தார் வசனகர்த்தா என்றால், அந்தக் காட்சியில் ஒரு உண்மையான தாயைக் கண்முன் நிறுத்தித் தன் வாழ்நாள் Performanceஐ அளித்து பெருமை கொண்டது எம்.வி.ராஜம்மாவின் திறமை. இந்தக் காட்சியில் சூது என்பது நிச்சயமாக இல்லை என்பதே என் கருத்து.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Page 9 of 14 FirstFirst ... 7891011 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •