Page 12 of 14 FirstFirst ... 21011121314 LastLast
Results 111 to 120 of 138

Thread: Sivaji Ganesan School of Acting

  1. #111
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-50
    இந்த பாசமலருடன் , இந்த தொடருக்கு தற்காலிக விடை கொடுக்கிறேன். அவர் நடித்த பாத்திர ,பட உதாரணங்களுடன் அனைத்து பொருட்படுத்த தக்க பள்ளிகளின் தாக்கத்தில் ,அனைத்து வகை நடிப்பையும் தந்த ஒரே உலகநடிகர் அவர் மட்டுமே என்று ஓங்கி உரைத்து ,அவர் வாழ்நாள் ஆஸ்கார் பெரும் நாளுக்காக ஆவலுடன் காத்திருப்பேன்.

    முற்றும்.

    Dear Gopal,

    ஆழ்ந்த அறிவு,பக்தி,திறமை,உழைப்பு ஆகிய அனைத்தின் கலவையாக உங்கள் ஐம்பது பகுதிகளும் திகழ்கின்றன.இவை அனைத்தும் காலத்தை வென்று தலைவர் புகழ் இருக்கும் வரை நிலைத்து நிற்கும் என்பதில் யாதொரு ஐயமும் எனக்கில்லை.

    இந்த முத்தாய்ப்பு கட்டுரையான பாசமலர் பற்றிய பதிவில் நீங்கள் கத்தி மேல் நடந்துள்ளீர்கள் என்றால் அது மிகையல்ல.நான் முன்னமே சொன்னது போல பாசமலர் is not just அண்ணன் தங்கை பாசம் அல்லது கைவீசம்மா கை வீசு climax.நடுவில் குவிந்துள்ள முத்துக்கள் ஏராளம்.அத்தனையும் உங்கள் பதிவில் மிகசிறப்பாக வெளிச்சமிடப்படிருக்கிறது.குறிப்பாக இந்தியர்களுக்கே உரித்தான "ஒருவன் நல்லவனாக இருத்தலே அவன் வெற்றிக்கு உத்திரவாதம்" எனும் மாபெரும் மாயை நொறுக்கப்பட்டுள்ளது.வாழ்க்கை என்பது ஒரு போராட்ட களம்.அதில் சிறப்பாக விளையாடுபவனே வெற்றி பெறுவான்.நீங்கள் குறிப்பிட்டது போல ஒரு மீனாக்ஷியும்,ஒரு ஆனந்தனும்,ஒரு பாஸ்கரும், ஒரு மாலதியும், சாதாரணர்கள்.ஆனால் ராஜசேகரும் ராதாவுமே அசாதாரணர்கள் என்பது மிகவும் ஆராய்ந்து அறிய வேண்டிய உண்மை.

    இதை பின்னே தள்ளிவிட்டு பாசத்தை முன்னே நிறுத்துவது இரு திலகங்களின் ஒப்பற்ற நடிப்பு.

    இவ்வளவு சொல்லி விட்டு உங்கள் ஐம்பது கட்டுரைகளிலும் எனக்கு பிடிக்காத ஒன்று (ஒன்றே ஒன்று) ஐம்பதாவது கட்டுரையில் இருக்கிறது.அதை சொல்லாமல் விடுவது நியாயமில்லை.எனவே அதை சொல்லி விடைப்பெறுகிறேன்.அது "முற்றும்" எனும் வார்த்தை!

    மிக்க நன்றி.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #112
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அருமை நண்பர் கோபால் அவர்களே,

    முத்தாய்ப்புக் கட்டுரையாக நீங்கள் எடுத்துக்கொண்ட பாசமலர் காவியமும் அதை நீங்கள் அலசிய விதமும் மிக மிக அசாதாரணமான ஒன்று. வழக்கமான ரசனைகளுக்கு அப்பாற்ப்பட்டது. அதையும் கூட நீங்கள் பதிப்பித்த காலம் மிக மிகப் பொருத்தமான ஒன்று. இக்கட்டுரைத்தொடரைப் படித்து விட்டு, விரைவில் தமிழகமெங்கும் வெளியாக இருக்கும் இத்திரைக்காவியத்தைக் காண்போர் நிச்சயம் இதுவரை பார்த்திராத வித்தியாச கண்ணோட்டத்தோடு பார்ப்பார்கள் என்பது முற்றிலும் உண்மை. இனி பார்ப்பவர்கள் ராஜசேகரையும் ராதாவையும் மட்டுமல்லாது பாஸ்கரையும் மாலதியையும் கூட இதுவரை பார்த்துவந்த அன்னியப்பார்வையை விடுத்து அவர்களின் ஆதங்கங்களையும், நியாயங்களையும் புரிந்து பார்க்கக் கற்றுக்கொள்வார்கள் என்பது திண்ணம்.

    இப்படி ஒரு நுணுக்கமான கோணத்தில் பார்த்து, படித்து, ஆராய்ந்து ரசிக்கப்படக்கூடிய ஒரு கலைஞன் தமிழகத்தில் பிறந்தார், நம்மிடையே வாழ்ந்தார் என்பது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை.

    நான் ஏற்கனவே சொன்னதுபோலவே இக்கட்டுரைத்தொடரை ஒரு பல்கலைக்கழகத்தின் ஆய்வு மையத்தில் சமர்ப்பியுங்கள். டாக்டர் பட்டம் நிச்சயம் என்றாலும் இப்போது அத்தகைய டாக்டர் பட்டங்கள் தன தரத்தை இழந்து நிற்பதால் அதைவிட பெரிய தகுதியும் கௌரவமும் தங்கள் ஆய்வுக்குத் தரப்பட வேண்டும். தலைவருக்கு 'வாழ்நாள் ஆஸ்கார்' கிடைக்க வேண்டும் என்ற ஆசையோடு இதுவும் எங்கள் இன்னொரு ஆசை.

    'முற்றும்' என்ற வார்த்தை தற்காலிகமானது என்றே எடுத்துக்கொள்கிறோம்...

  4. #113
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் கோபால் சார்,

    தங்களின் இந்தியாவின் ஒரே உலக அதிசயம் பாகம் 50 ஆக பாசமலரை அருமையாகத் தொடுத்திருக்கிறீர்கள். அண்ணன் தங்கைப் பாசத்திற்கு ஒரு dictionary யாக இன்றுவரை இருக்கும் ஒரு திரைப்படம், இதிலுள்ள கருவை மட்டும் எடுத்து பின்னாளில் பல திரைப்படங்கள் வந்தும் வெற்றிபெற்றிருக்கின்றன.

    கார்த்திக் சார் சொன்னது மாதிரி "இப்படி ஒரு நுணுக்கமான கோணத்தில் பார்த்து, படித்து, ஆராய்ந்து ரசிக்கப்படக்கூடிய ஒரு கலைஞன் தமிழகத்தில் பிறந்தார், நம்மிடையே வாழ்ந்தார் என்பது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை."

    அத்தைகைய பெருமையை உலகிற்குப் பறைச்சாற்றிய வியட்நாம் வாழ் தமிழனுக்கு கோடி நன்றிகள்
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  5. #114
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வெங்கி ராம் அவர்களே- நீங்களும் ,பிரபுவும் எனக்களித்த உத்வேகத்திற்கு நான் மிக கடமை பட்டவன். தங்கள் மனமார்ந்த பாராட்டு எனக்கு அளப்பரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. இதை புத்தகமாக முயற்சி எடுப்பேன். (தமிழிலும் ,ஆங்கிலத்திலும் முழுதாக மொழி படுத்தி. content முக்கியமானதால் மொழிகலப்போடு எழுதி விட்டேன்.)
    கண்பட் சார்- மணிக்கணக்கில் நம் அரட்டைகளின் by-product இந்த தொகுப்பு. நன்றி.
    கார்த்திக் சார்- டாக்டர் பட்டம் கொடுத்தால் வேண்டாமென்றா சொல்ல போகிறேன். இருக்கவே இருக்கு சத்யபாமா.
    KCS - உங்கள் பணிக்கு முன்னால் ,இதெல்லாம் சாதாரணம். பாராட்டுக்கு நன்றி.
    SR சார்- நிச்சயமாக Guestbook இல் register செய்யுங்கள்.

  6. #115
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    திரு கோபால் சார்,
    தங்கள் தொடரின் சிகரம் என்றால் அது பாசமலர்தான் என்பேன் .இதுவரை அவரின் தீவிர ரசிகர்கள் கூட எண்ணிப்பார்க்காத ஒரு கோணத்தில் ராஜசேகரனை உளவியல் ரீதியாக ஆராய்ந்து எங்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டீர்கள் .உங்களை போன்றவர்களை ரசிகனாக பெற்றதில் நடிகர்திலகம் கொடுத்துவைத்தவர் என்று சொன்னால் மிகையில்லை
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  7. #116
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    கோபால் சார்,

    நான் பாசமலர் படத்தை பற்றி சீரியசாக எழுதினால் அழுது விடுவேன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பார்த்து அழுது கொண்டுதான் இருக்கிறேன். ஆனாலும் ஒவ்வொரு முறையும் படத்தை பார்க்கின்ற போதும் பார்த்து முடித்த பின்பும் கிடைக்கின்ற உணர்வுகள் இருக்கின்றதே... என்னத்தை சொல்ல? சுருக்கமாக சொன்னால் ... நாமெல்லாம் இம்மானிட பிறவி எடுக்க கொடுத்து வைத்தவர்கள்.

    உங்களுடைய வித்தியாசமான பார்வையில் இத்திரைப்படத்தை நன்றாக அலசியுள்ளீர்கள். நடிகர் திலகத்தின் ரசிகராய் நீங்கள் இருப்பதால், இந்த கட்டுரைகள் மூலம் நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம். உங்களை போன்றவர்களை ரசிகர்களாக பெற்றதானாலும் நடிகர் திலகத்தின் புகழ் ஓங்கி இருக்கிறது. நீங்கள் ஆற்றிய இந்த சேவைக்கு நன்றி என்ற சொல்லன்றி யாதொன்று சொல்ல?

    மற்றபடி உங்க கிட்ட இதை நான் எதிர் பார்க்கவில்லை --- திடீர்னு முற்றும் போட்டு கொண்டதை. சும்மா விளையாட்டுக்குதான்னு உண்மையை தெளிவாக சொல்லிவிடுங்கள்.

  8. #117
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கரும்பு தின்ன கூலி என்ற தமிழ் பழமொழி உண்மையானது. என் மனம் கவர்ந்த உலக நடிகனை பற்றி ,புது கோணத்தில் எழுதும் அவா என் சிறு வயது கனவு அது. அதற்கு தகுந்த தளமாக ஒத்த நண்பர்களை கொண்ட இந்த திரி எனக்கு உதவியது. என் சந்தோசம் கரும்பு தின்னுவது போல.
    ஆனால் இத்தனை நண்பர்களின் உள்ளம் நிறைந்த பாராட்டுக்களையும் பெற்றது எனக்கு கிடைத்த கரும்பு தின்ன கூலிதான்.நன்றிகள் ஹரிஷ்,கல்நாயக் ,g k .

  9. #118
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Gopal Sir,

    We are also proud of your great work on NT by showing him
    in different angles.

    Thanks a lot.

  10. #119
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இதுவரை எழுதியதற்கு காரணங்களாவது சொல்ல வேண்டுமே? சொல்லி விடுகிறேன்.

    நமது உலகத்திலேயே unique &Best product சரியாக marketing செய்ய படவில்லை.

    அவருடைய வெவ்வேறு பாணியிலான,.நடிப்பு மற்றவர்களால் புரிந்து கொள்ள படாமல் ,பல குற்ற சாட்டுகள் சுமத்தி கொண்டிருந்தனர். அதை இந்த மாதிரி வெவ்வேறு school of Acting உலகம் தழுவிய அளவில் உள்ளது என்று சொல்லி, அவரை ,அவரது நடிப்பின் அளவற்ற எல்லைகளை கோட்பாடுகளின் படி விஞ்ஞான விளக்கம் கொடுத்தே ஆக வேண்டிய அவசியம்.Einstein கோட்பாட்டை அனைவரும் புரிந்து கொள்ள முடியாதே?

    மற்ற நடிகர்களை ,sampling முறையில் ஒரே படத்தில் திறமையை அளந்து விடலாம்.ஆனால் நடிகர்திலகத்தை தொடருபவர்கள் மட்டுமே அவரை புரிந்து கொள்ள முடியும் .

    அவ்வாறு தொடர நினைப்பவர்களுக்கு நமது shoddy way of movie making ஒரு தடை.அவருக்காக மட்டுமே படம் பார்க்கும் பொறுமை நமக்கு மட்டுமே இருக்கும்.

    அவருடைய ஆற்றலுக்கு ஈடு கொடுக்கும் இயக்குனர்களோ,கதாசிரியர்களோ நம்மிடையே இல்லை.(தில்லானா தவிர) அவருடைய மிக சிறந்தவை பெங்காலி,கேரளா ,hollywood இலிருந்து வந்தவையே.

    தெய்வ மகனை எடுத்தால் அவர் அந்த(kannan) பாத்திரத்தை execute செய்ததற்கும்,ஆரூர்தாஸ் வசனம் எழுதிய விதத்துக்கும் mis match இருக்கும். அதனாலேயே பாகம் இரண்டில் ,எல்லாவற்றையும் ஒதுக்கி அவர் நடிப்பு மட்டுமே ஆராய படும் என்று என்று மற்றவற்றை உறைநிலையில் வைத்தேன்.
    Last edited by Gopal.s; 9th August 2013 at 10:00 AM.

  11. #120
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Friends,
    This serial Analysis is to kindle interest in our Fans with Global Concepts in Acting and Our NT's performance in all types of varied schools to perfection. You can develop further with your observations and keep this thread Active.

Page 12 of 14 FirstFirst ... 21011121314 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •