Quote Originally Posted by Gopal,S. View Post
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-50
இந்த பாசமலருடன் , இந்த தொடருக்கு தற்காலிக விடை கொடுக்கிறேன். அவர் நடித்த பாத்திர ,பட உதாரணங்களுடன் அனைத்து பொருட்படுத்த தக்க பள்ளிகளின் தாக்கத்தில் ,அனைத்து வகை நடிப்பையும் தந்த ஒரே உலகநடிகர் அவர் மட்டுமே என்று ஓங்கி உரைத்து ,அவர் வாழ்நாள் ஆஸ்கார் பெரும் நாளுக்காக ஆவலுடன் காத்திருப்பேன்.

முற்றும்.

Dear Gopal,

ஆழ்ந்த அறிவு,பக்தி,திறமை,உழைப்பு ஆகிய அனைத்தின் கலவையாக உங்கள் ஐம்பது பகுதிகளும் திகழ்கின்றன.இவை அனைத்தும் காலத்தை வென்று தலைவர் புகழ் இருக்கும் வரை நிலைத்து நிற்கும் என்பதில் யாதொரு ஐயமும் எனக்கில்லை.

இந்த முத்தாய்ப்பு கட்டுரையான பாசமலர் பற்றிய பதிவில் நீங்கள் கத்தி மேல் நடந்துள்ளீர்கள் என்றால் அது மிகையல்ல.நான் முன்னமே சொன்னது போல பாசமலர் is not just அண்ணன் தங்கை பாசம் அல்லது கைவீசம்மா கை வீசு climax.நடுவில் குவிந்துள்ள முத்துக்கள் ஏராளம்.அத்தனையும் உங்கள் பதிவில் மிகசிறப்பாக வெளிச்சமிடப்படிருக்கிறது.குறிப்பாக இந்தியர்களுக்கே உரித்தான "ஒருவன் நல்லவனாக இருத்தலே அவன் வெற்றிக்கு உத்திரவாதம்" எனும் மாபெரும் மாயை நொறுக்கப்பட்டுள்ளது.வாழ்க்கை என்பது ஒரு போராட்ட களம்.அதில் சிறப்பாக விளையாடுபவனே வெற்றி பெறுவான்.நீங்கள் குறிப்பிட்டது போல ஒரு மீனாக்ஷியும்,ஒரு ஆனந்தனும்,ஒரு பாஸ்கரும், ஒரு மாலதியும், சாதாரணர்கள்.ஆனால் ராஜசேகரும் ராதாவுமே அசாதாரணர்கள் என்பது மிகவும் ஆராய்ந்து அறிய வேண்டிய உண்மை.

இதை பின்னே தள்ளிவிட்டு பாசத்தை முன்னே நிறுத்துவது இரு திலகங்களின் ஒப்பற்ற நடிப்பு.

இவ்வளவு சொல்லி விட்டு உங்கள் ஐம்பது கட்டுரைகளிலும் எனக்கு பிடிக்காத ஒன்று (ஒன்றே ஒன்று) ஐம்பதாவது கட்டுரையில் இருக்கிறது.அதை சொல்லாமல் விடுவது நியாயமில்லை.எனவே அதை சொல்லி விடைப்பெறுகிறேன்.அது "முற்றும்" எனும் வார்த்தை!

மிக்க நன்றி.