Page 56 of 397 FirstFirst ... 646545556575866106156 ... LastLast
Results 551 to 560 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #551
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Sowrirajan Sree View Post
    திரு கலியபெருமாள் அவர்களுக்கு,

    நீங்கள் இடுகை செய்ததை படித்து உண்மையிலயே நான்தான் அதிர்ச்சி அடைந்தேன்..காரணம்...நீங்கள் எழுதிய வரிகள்...நிதானமாக படித்து பாருங்கள்..! உங்கள் தவறு என்ன என்று உங்களுக்கே புரியும்...நீங்கள் எப்படி வசூல் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் என்று கூறலாம்...உங்களுக்கு மதுரை வீரன் வசூலாகும் என்ற நம்பிக்கை இல்லாதது போல உள்ளது நீங்கள் எழுதியது. !

    உணர்ச்சி மிகுதியில் தாங்கள் தவறாக எழுதியதை தயவு செய்து மாற்றி மீண்டும் இடுகை செய்யவும்.

    சந்தேகமே வேண்டாம் மதுரை வீரன் என்றுமே வசூல் வேட்டையாடும் வீரன் தான் நண்பரே !

    உண்மையை உண்மை என்று சொல்லும் துணிவு என்னக்கு நிச்சயம் உண்டு !
    இனிய நண்பர் சௌரிராஜன் சார்

    தங்கள் ஆலோசனைக்கு நன்றி...நீங்கள் சொல்வது போல் நமது தெய்வத்தின் படங்களின் மேல் நம்பிக்கை எப்போதும் உண்டு..நான் சொன்னது மற்றவர்களுக்கு..இந்த கால கட்டத்தில் இந்த படங்களின் வெற்றியை காணும் பொதுமக்களுக்கு இது அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை கொடுப்பது உண்மை....


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #552
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    சமீபத்தில் இளைய திலகம் பிரபு மற்றும் நடிகர் ஆதி நடித்த 'ஆடு புலி' திரைப்படத்தில் அனைத்து நடிகர்களின் பெயர்களும் நமது தெய்வம் எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களின் பெயர்களாக இருக்கும்..அதில் பிரபுவும் எம்ஜிஆர் ரசிகராக இருப்பார்..கதையின் நாயகன் பெயர் இதயக்கனி என்று நினைக்கிறேன்...உண்மையிலே இளைய திலகம் பிரபு எம்ஜிஆரின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்தது..எம்ஜிஆரை பெரியப்பா என்று அன்புடன் அழைப்பவர் அவர்..
    இன்றைய தமிழ் முரசில் (03.05.2013) ஒரு கிளிப்பிங்..
    'தேசிங்கு ராஜா' என்ற படத்தில் எம்ஜிஆர் ரசிகராக இதயக்கனி என்ற பாத்திரத்தில் விமல் நடிக்கிறார்..எழில் இயக்குகிறார்.

    என்ன ஒரு தேனான செய்தி..தலைவர் திரைத்துறையை விட்ட காலத்திலிருந்தே, ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, சரத்குமார் இன்னும் பல முன்னணி நடிகரெல்லாம் எம்ஜிஆர் ரசிகராகவும், எம்ஜிஆர் படங்கள் மற்றும் பாடல்களை நூற்றுகணக்கான படங்களில் இடம்பெறவும் செய்திருக்கிறார்கள்..அது இன்றைய தலைமுறை நடிகர்களையும் விட்டுவைக்கவில்லை என்று சொல்லும்போது..நமது இதய தெய்வத்தின் சக்தியை (power) என்னவென்று சொல்வது.


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  4. #553
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kaliaperumal vinayagam View Post
    இனிய நண்பர் சௌரிராஜன் சார்

    தங்கள் ஆலோசனைக்கு நன்றி...நீங்கள் சொல்வது போல் நமது தெய்வத்தின் படங்களின் மேல் நம்பிக்கை எப்போதும் உண்டு..நான் சொன்னது மற்றவர்களுக்கு..இந்த கால கட்டத்தில் இந்த படங்களின் வெற்றியை காணும் பொதுமக்களுக்கு இது அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை கொடுப்பது உண்மை....


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
    இனிய நண்பருக்கு,

    உங்களுக்கு உங்கள் இதய தெய்வத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என்பது எனக்கு தெரியும்.
    ஆகையால் தான் "உணர்ச்சி மிகுதியால்" என்ற வார்த்தையை உபயோகித்தேன்.
    புரிந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே !

  5. #554
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    படம் சொல்லும் பாடம்

    மலேசியா பிரதமர் துறை அமைச்சரின் கையில் மக்கள் திலகத்தின் புத்தகம்

    இந்தியாவிற்கே பெருமை தேடித்தந்த இதய தெய்வம்.

    புரட்சி நடிகர் நடித்த படங்கள் தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டெல்லி போன்ற இடங்களில் வெற்றி கொடி நாட்டியிருக்கிறது. அதே போல உலக அளவில் இலங்கை மலேசியா, சிங்கப்பூர், பினாங் போன்ற நாடுகளில் வெற்றி பெற்றுள்ளது..மலேசியாவில் தலைவரின் படங்கள் வெளியாகும்போது தமிழரல்லாத சீனர்களும், மலேயரும் ஆர்வமுடன் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி படம் பார்த்த வரலாறுகளும் உண்டு..அவர்களில் பல பேர் எம்ஜிஆர் ரசிகர்கள் ஆனார்கள். அப்படி எம்ஜிஆரின் படங்களின் பாதிப்பினால் ரசிகர் ஆகி, பினாங் மாநிலத்தில் சுமார் 7 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர் திரு. டான் ஸ்ரீ கோ சூ கூன்..

    சமீபத்தில் மலேசிய கோலாலம்பூர் நகரில் அமைந்துள்ள செந்தூல் கன்வென்ஷன் சென்டரில் மலேசியா எம்ஜிஆர் நற்பணி இல்லத்தின் சார்பில் - எம்ஜிஆர்-96' என்ற மாபெரும் கலை நிகழ்ச்சியுடன் கூடிய பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமை தாங்கியவர்தான் மேலே கூறப்பட்ட திரு. டான் ஸ்ரீ கோ சூ கூன்..இவர் தற்போது மலேசியா பிரதமர் துறை அமைச்சராக உள்ளார்.

    இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து சிறப்பு அழைப்பாளராக எம்ஜிஆரிடம் 30 ஆண்டுகள் பணியாற்றிய எம்ஜிஆரின் பாதுகாவலர் திரு. கே.பி. ராமகிருஷ்ணன் அழைக்கப்பட்டிருந்தார்..மலேசியா எம்ஜிஆர் ரசிகர்கள் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விஞ்ஞானி சிவசுப்ரமணியத்திற்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. டத்தோ துரைராஜ், மலேசியா பத்திரிகையாளர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..மலேசியா இசைக்குழு சார்பாக நமது தெய்வத்தின் திரைப்பட பாடல்கள் பாடப்பட்டு எம்ஜிஆர் உடையில் கலைஞர்கள் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.. டி.எம்.எஸ். செல்வகுமார் அவர்கள் தலைவரின் பாடல்களை பாடினார்

    நமது வள்ளலின் உயர்ந்த குணங்களையும் சிறப்புகளையும் ரசிகர்களிடம் திரு.கே.பி.ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டார். மலேசியாவில் உள்ள மக்கள் ஓசை பத்திரிகை சார்பில் ராமதாஸ் கலந்து கொண்டார்..

    மலேசியா பிரதமர் துறை அமைச்சர் திரு. டான் ஸ்ரீ கோ சூ கூன் பேசுகையில் எம்ஜிஆரை போலவே அவரது வாழ்வில் படிப்படியாக உயர்ந்தவர் தான் தங்கள் நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீத் என்று கூறி, எம்ஜிஆரின் சிறப்பை மேலும் உயர்த்தினார்..இதை கேட்கும்போது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமைதானே..திரைப்படத்தின் மூலம் நல்ல கருத்துகளை கூறி, அதன் வழி நடந்து, மங்கா புகழ் பெற்று, உலகத்தலைவர்களுக்கு உதாரணமாக இருக்கும் நம் தெய்வத்தின் ரசிகர்களாக இருப்பதில் பெருமிதம் ஏற்படுகிறது. விழா செய்திகள் தினமலர் மற்றும் மக்கள் குரல் நாளேட்டில் வந்திருக்கிறது.

    விழா ஏற்பாடுகளை மலேசிய எம்ஜிஆர் நற்பணி இல்லத்தின் தலைவர் ஆர்.ஜே தாமோதரன் செய்திருந்தார்..திரு. தாமோதரன் அவர்கள் எம்ஜிஆரின் தீவிர பக்தர்..எம்ஜிஆர் புகழை உலகமெல்லாம் பரப்ப பாடுபடும் ஒரு உண்மைதொண்டர்..அவர் புதுச்சேரி வந்திருந்தபோது பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அறக்கட்டளையின் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதை இப்போது நினைவு கூர்கிறேன்..

    நன்றி. Sri.MGR.com


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  6. #555
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  7. #556
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    மலேசியாவில் மக்கள் திலகம் விழா

    மக்கள் திலகத்தின் விழா - மலேசியாவில் நடைபெற்ற விழா தொகுப்பு அருமை . திரு ரூப் அவர்களுக்கும் , திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நன்றி .

    எனக்கு வாழ்த்துக்கள் கூறிய இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி .

  8. #557
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    புதிய வரலாறு படைக்கும் மக்கள் திலகம்

    மக்கள் திலகம் மலர் மாலை -நம்
    மன்னவனின் படங்களின் பூஞ்சோலை
    மாலை தொடுத்தவரும் -சீர்மிகு
    பதிப்புரை வழங்கியவரும் -யார் என்று நோக்கின்
    பம்மலார்..... யார் இவர் ?

    விழிகளும் -இதயங்களும் ஒன்று சேர
    எண்ண அலைகள் சிறகடித்து பறக்க
    நாற்பத்தியொரு ஆண்டு திரை களஞ்சியத்தை
    நூற்று முப்பத்து நான்கு பக்கங்களில்
    வரலாற்று பெட்டகமாய்
    ஒரு சரித்திர நாயகனின்
    காவிய நாயகனின்
    ஒவ்வொரு படத்தின் பல்வேறு நடிப்பின்
    கலைவேந்தனின் படங்கள்
    உயர் தர தொழில் நுட்பத்தில்
    புதுமை படைப்பு .
    இது வரை - யாரும் வழங்காத பொக்கிஷம்
    யாருமே செய்ய நினைக்காத -ஒரு
    சரித்திர சாதனையை படைத்திட்டரே
    அவரேதான் நம் பம்மலார் .

    உலக திரைப்பட சாதனைக்கு மக்கள்திலகம் ஒரு கலங்கரைவிளக்கம்
    அவரது பெயரில் காவிய மலர் படைத்த பம்மலார் [அவன்] ஒரு சரித்திரம் .

  9. #558
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    malaimalar - news.

    மலேசிய தேர்தல் பிரசாரத்தில் எம்.ஜி.ஆர். பாடல்கள்: ஓட்டு வேட்டை தீவிரம்
    சனிக்கிழமை, மே 04, 12:16 pm



    கோலாலம்பூர், மே. 4-

    மலேசியாவில் நாளை (5-ந்தேதி) பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் ஆளும் பாரிசான் நேசியனல் கூட்டணியும், எதிர்க் கட்சிகளின் கூட்டணியும் மோதுகின்றன. நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுவதையொட்டி அங்கு தீவிர தேர்தல் பிரசாரம் நடந்தது. வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றன.

    ஆளும் பாரிசன் நேசியனல் கூட்டணியில் மலாய் கட்சி, மலேசியன் சைனீஸ் அமைப்பு, மலேசியன் இந்தியன் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மலேசியாவில் இந்தியர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். எனவே அவர்களை கவர்ந்து வாக்குகளை பெற ஆளும் கட்சி கூட்டணி தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரின் பட பாடல்களை போட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். இது வாக்காளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

    எம்.ஜி.ஆர். மறைந்து சுமார் 26 வருடங்கள் ஆகி விட்டன. தமிழகம் மட்டுமின்றி மலேசியாவிலும் இன்னும் அவரது புகழ் மங்க வில்லை. மக்கள் மனதில் அவர் இன்னும் நிலைத்து வாழ்வதையை இது காட்டுகிறது.
    Last edited by esvee; 4th May 2013 at 01:57 PM.

  10. #559
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  11. #560
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    இதற்கு மேல் நாங்கள் என்ன சொல்ல?



    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •