Page 3 of 14 FirstFirst 1234513 ... LastLast
Results 21 to 30 of 131

Thread: Paasa Malar for Human Values

  1. #21
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Mr Mahendra Raj. The combo of NT-GG always had mutual understanding without any ego between them, which paved way for more than 15 movies to act together. In fact NT was so magnanimous that he had allowed GG to have more screen space and presence than him in films like Pennin Perumai, Paarthaal Pasi Theerum , Unakkaga Naan..... GG was also so magnanimous to act together with NT though sometimes he might have to play a second fiddle in films like VPKB or Paava Mannippu. Both were rather story conscious than egoistic.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #22
    Junior Member Regular Hubber
    Join Date
    Oct 2005
    Location
    KUALA LUMPUR
    Posts
    13
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    Dear Mr Mahendra Raj. The combo of NT-GG always had mutual understanding without any ego between them, which paved way for more than 15 movies to act together. In fact NT was so magnanimous that he had allowed GG to have more screen space and presence than him in films like Pennin Perumai, Paarthaal Pasi Theerum , Unakkaga Naan..... GG was also so magnanimous to act together with NT though sometimes he might have to play a second fiddle in films like VPKB or Paava Mannippu. Both were rather story conscious than egoistic.
    Yes to both Sivajisenthil and Sowrirwjann Sri.

    I remember reading a long time ago that there was a decision to trim Nagesh acting as Dharumi in Thiruvilayaadal as it was felt that he stole the show rather than Shivaji. But Shivaji was magnanimous enough to allow the whole scene as he foresaw the popularity of this scene although dominated by Nagesh and he was right. However, Nagesh, wrote in a weekly that he was sorely disappointed that he was deliberately left out when the awards for Thiruvilayadaal were given out in a celebrity function.

    When 'Unakaaaga Naan' did not meet the expected success Gemini Ganesh commented in a weekly at that time that the cause was Shivaji's over acting. Since there was no reaction from Shivaji forthcoming it was assumed to be so. Shivaji could have refuted Gemini Ganesh's statement but he chose to be a gentleman.

    Last but not least, there is a saying that no two fingerprints are alike. The same is true of all of Shivaji's films. You don't see Shivaji, the person in his films but the characters he portrays so professionally. Kamalhassan came close enough in films like 'Nayagan' and 'Guna'. Of course, in 'Devar Magan' he was almost like Shivaji in the second half.
    Mahendra Raj

  4. #23
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=mahendra raj;1044172]Yes to both Sivajisenthil and Sowrirwjann Sri.

    [QUOTE=mahendra raj;1044172]Yes to both Sivajisenthil and Sowrirwjann Sri.

    I remember reading a long time ago that there was a decision to trim Nagesh acting as Dharumi in Thiruvilayaadal as it was felt that he stole the show rather than Shivaji. But Shivaji was magnanimous enough to allow the whole scene as he foresaw the popularity of this scene although dominated by Nagesh and he was right. However, Nagesh, wrote in a weekly that he was sorely disappointed that he was deliberately left out when the awards for Thiruvilayadaal were given out in a celebrity function.

    Am not sure how come such rumours are getting spread...I would like to see that weekly if it is so...The same Nagesh had quoted he was paid additional amount than what was agreed for Thiruvilayadal citing his performance.

    When 'Unakaaaga Naan' did not meet the expected success Gemini Ganesh commented in a weekly at that time that the cause was Shivaji's over acting. Since there was no reaction from Shivaji forthcoming it was assumed to be so. Shivaji could have refuted Gemini Ganesh's statement but he chose to be a gentleman.

    I dont recollect any comment of such type from Gemini Ganesh whatsoever...Infact, Mr.GG should have been happy that Nadigar Thilagam was ok too in casting Mr.GG in this film. Mr.Gemini Ganesh was not active in films those days. The comment of "Over Acting " itself was brought in by one useless fellow called Manian though he used effectively to passify few people for monetary gains. The biggest comedy is, those who are incapable to act had started to define what is acting, what is underplay etc., Acting itself means doing something assuming it exists . So where is the question of Over or Under..?

  5. #24
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Unakkaga Naan was not a commercial success for simple reasons like the relative aging of NT and GG compared to Khanna and Amitabh in Namak Haraam which was copied from Burton-O'Toole starrer Becket. NT justified his role though his make up was little bit gaudy. GG looked very old. Regarding over acting..... fighting with 10 goondas at a time, spinning legs and hitting, kung fu styles, dance and songs.... are these not over acting?
    Last edited by sivajisenthil; 18th May 2013 at 04:46 PM.

  6. #25
    Junior Member Regular Hubber
    Join Date
    Oct 2005
    Location
    KUALA LUMPUR
    Posts
    13
    Post Thanks / Like
    [QUOTE=Sowrirajann Sri;1044186][QUOTE=mahendra raj;1044172]Yes to both Sivajisenthil and Sowrirwjann Sri.

    Quote Originally Posted by mahendra raj View Post
    Yes to both Sivajisenthil and Sowrirwjann Sri.

    I remember reading a long time ago that there was a decision to trim Nagesh acting as Dharumi in Thiruvilayaadal as it was felt that he stole the show rather than Shivaji. But Shivaji was magnanimous enough to allow the whole scene as he foresaw the popularity of this scene although dominated by Nagesh and he was right. However, Nagesh, wrote in a weekly that he was sorely disappointed that he was deliberately left out when the awards for Thiruvilayadaal were given out in a celebrity function.

    Am not sure how come such rumours are getting spread...I would like to see that weekly if it is so...The same Nagesh had quoted he was paid additional amount than what was agreed for Thiruvilayadal citing his performance.

    When 'Unakaaaga Naan' did not meet the expected success Gemini Ganesh commented in a weekly at that time that the cause was Shivaji's over acting. Since there was no reaction from Shivaji forthcoming it was assumed to be so. Shivaji could have refuted Gemini Ganesh's statement but he chose to be a gentleman.

    I dont recollect any comment of such type from Gemini Ganesh whatsoever...Infact, Mr.GG should have been happy that Nadigar Thilagam was ok too in casting Mr.GG in this film. Mr.Gemini Ganesh was not active in films those days. The comment of "Over Acting " itself was brought in by one useless fellow called Manian though he used effectively to passify few people for monetary gains. The biggest comedy is, those who are incapable to act had started to define what is acting, what is underplay etc., Acting itself means doing something assuming it exists . So where is the question of Over or Under..?
    Nagesh was writing a series of articles in the now defunct Devi Tamil weekly somewhere in the early part of 2000 where he mentioned the above story in verbatim. He was told that at the celebrity function to commemorate the success of Thiruvilaiyaadal he will be felicitated with a bagful of cash to replicate that immortal scene. He was waiting for the official invitation but alas that was never forthcoming. He was even sad that at that function his name was never mentioned at all.

    Re - Unakaaaga Naan, this piece was reported in Kumudham in 1976 in the 'Lights On' section by Sunil (it was none other than the late Ra.Ki. Rangarajan) without assigning names directly thereof as was the fashion those days lest it creates friction. It was upto readers to discern which was easy given the fact that not many films or films artistes existed as opposed to now.

    The same Kumudham also reported in this section of how a senior artiste who was the godfather to a budding actor was proudly announcing to all and sundry that if not for him (the senior) the aspiring artiste will be a persona-non-grata. Of course, these continuous and unwarranted statements by the senior riled the junior so much so that he blew his top and ridiculed him of his softie nature and unnatural acting style. It was not hard to decipher these veiled stories as it was very obvious that they were Gemini Ganesh and Kamal Hassan. This end was in 1977 when Gemini Ganesh was past the retirement age and Kamal Hassan was seen by many as the next Kadhal Mannan which must have irked the senior!

    Whatever I am commenting is based on what was reported in print a long, long time ago but which is still fresh in mind.
    Mahendra Raj

  7. #26
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    When is pasamalar releasing?
    Last edited by Gopal.s; 24th May 2013 at 11:07 PM.

  8. #27
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mahendra raj View Post

    Whatever I am commenting is based on what was reported in print a long, long time ago but which is still fresh in mind.
    இந்த மகேந்திர ராஜ் தான் கொஞ்ச நாள் முன்பு நடிகர்திலகத்தின் பாடலை எடுத்து சம்பந்தாசம்பந்தமில்லாமல் ஏதோதோ எழுதி முரளி சாருடன் வாங்கி கட்டி கொண்டார். மாவீரன் அலெக்சாண்டர் வந்திருந்த போது நெப்போலியன் போனபார்ட் உடன் சோனியா காந்தி டீ குடித்து கொண்டிருந்தார் என்பதற்கு ஈடான ஒரு பதிவு.(கால குழப்பங்களுடன்) இன்னொரு திரியில் positive ஆகவே எழுதும் இவருக்கு நம் திரியில் பதிய மட்டும் பிரத்யேக விஷயங்கள் அகப்படும்(Biased and subtly venomous). இவருக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டாம்.
    Last edited by Gopal.s; 3rd June 2013 at 08:35 AM.

  9. #28
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தினத் தந்தி நாளிதழில் சனிக்கிழமை தோறும் இடம் பெறும் ஆரூர் தாஸ் அவர்களின் தொடரில் இந்த வாரம் பாசமலர் படத்தில் அவர் பணியாற்றிய அனுபவம் வெளிவந்துள்ளது. அந்தக் கட்டுரை நம் பார்வைக்கு.


    கடற்கரையில் உருவான காவியம்

    பாசமலருக்கு வசனம் எழுதும் என் பணி ஆரம்பமாகியது.

    ‘எங்கே வைத்து எழுதுகிறீர்கள்?, எந்த ஓட்டலில் ரூம் போடவேண்டும்’ என்று

    என்னை ‘ராஜாமணி பிக்சர்ஸ்’ தயாரிப்பாளர்களான அண்ணன்

    எம்.ஆர்.சந்தானமும், ‘மோகன் ஆர்ட்ஸ்’ மோகனும் கேட்டார்கள்.

    சற்று நேரம் யோசித்தேன்.

    அந்த நாட்களில் 1960–ல் இன்றைய அடையாறு ‘பெசன்ட்நகர்’ ‘அஷ்டலட்சுமி

    ஆலயம்’, ‘புனித ஆரோக்கிய மாதா ஆலயம்’ அமைந்துள்ள அந்தப் பகுதி

    முழுவதுமே கண்களுக்கு எட்டிய தூரம் வரை வெறும் கடற்கரை மணலாகவே

    இருந்தது. அடையாறில் வசிப்பவர்கள் கோடை காலத்தில் காற்று

    வாங்குவதற்கு அங்கு வருவதுண்டு. அது தவிர ஆங்காங்கே மீனவர்களின்

    குடிசைகள் இருந்தன.

    அக்காலத்தில் அந்த இடத்திற்கு ‘எலியட்ஸ் பீச்’ என்று பெயர். அங்கு கடலில்

    குளிக்க வந்து நீந்தி, அலைகளால் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டு உயிர்

    துறந்த ஒரு ஆங்கிலேய அதிகாரியின் நினைவாக, வளைவு ஒன்று

    கட்டப்பட்டிருந்தது.

    அத்துடன் கூட, அன்றைய சென்னை வாழ் பிரமுகர்களும்,

    பெருந்தனக்காரர்களும், தொழிலதிபர்களும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை

    நாட்களில் அங்கு வந்து தங்கி, கடற்காற்று வாங்கி உல்லாசமாகப் பொழுது

    போக்கும் பொருட்டு, கரையோரமாக வரிசையாகச் சிறுசிறு கட்டிடங்களையும்

    ஓலைக் குடிசைகளையும் கட்டி, அவற்றைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை

    மீனவர்களிடம் ஒப்படைத்திருந்தனர்.

    அந்தப் பகுதியில் அவ்வப்போது சினிமா படப்பிடிப்பு நடை பெறுவதும் உண்டு.

    கடற்கரைக் காதல் காட்சிகள், ஹீரோ – ஹீரோயின் டூயட் பாடல் காட்சிகள்

    போன்றவற்றை பல டைரக்டர்கள் அங்கு படமாக்குவார்கள்.

    ஒரு நாள் புகழ் பெற்ற அடையாறு ஆலமரத்தைப் பார்க்கச்சென்ற நான்

    அதைப்பார்த்துவிட்டு அப்படியே எலியட்ஸ் பீச்சுக்கும் சென்றேன். அழகும்

    அமைதியுமான அந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த சிறு சிறு குடில்களும்

    அவற்றின் எதிரே அலைவீசிக் கொண்டிருந்த வங்கக் கடலும் என் கண்களைக்

    கவர்ந்தன!

    என் இளமைக் காலத்தில் கிராமியச் சூழ்நிலையில் நான் வளர்ந்து

    வாழ்ந்தவனாதலால், இயற்கையை நேசிப்பதிலும், அதன் எழிலை ரசிப்பதிலும்

    அதிக ஆர்வம் கொண்டிருந்தேன்.

    ஆகவே, அந்தக் கடற்கரைக் குடிசையொன்றில் அமர்ந்து ஒரு படத்திற்குக் கதை

    வசனம் எழுதவேண்டும் என்று ஆசைப்பட்டேன். நீண்ட நாளைய அந்த ஆசை

    நிறைவேறும் தருணம் இப்போது வந்தது.

    அந்தக் குடிசைகளைக் குறிப்பிட்டு அதில் ஒன்றில் உட்கார்ந்து எழுத ஏற்பாடு

    செய்ய முடியுமா? என்று கேட்டேன்.

    தயாரிப்பாளர்கள் சிரித்தார்கள்.

    ‘‘ஏன் சிரிக்கிறீங்க?’’

    ‘‘இல்லே. ஒவ்வொருத்தர் ஊட்டி, கொடைக்கானலுக்குப் போயி எழுதிக்கிட்டு

    வரலாம். இல்லேன்னா கன்னிமாரா ஓட்டல்லே ஏ.சி. ரூம் போடுங்கன்னு

    கேப்பாங்க. நீங்க என்னடான்னா கடற்கரைக் குடிசை கேக்குறீங்களே?

    ஆச்சரியமா இருக்கு. சரி. ஒங்க விருப்பப்படியே ஏற்பாடு பண்றோம்’’ என்றவர்,

    ‘முகிலன்’ என்று பெயர் கொண்ட ஓர் இளம் தயாரிப்பு நிர்வாகியிடம் இது பற்றி

    கூற, அவர் உடனே அங்கு சென்று ஒரு மீனவரிடம் பேசி முடித்து, அவருடைய

    கண்காணிப்பில் இருந்த ஒரு ஓலைக் குடிசையை ஏற்பாடு செய்துவிட்டு

    என்னை கம்பெனி காரில் அழைத்துக் கொண்டு போய் ‘‘இந்தக் குடிசை தான்’’

    என்று காட்டினார்.

    அதன் உள்ளே நுழைந்தேன். நான்கைந்து பேர் உட்காரக் கூடிய அளவிற்கு இடம்

    இருந்தது. கீழே, தரையில் கடற்கரை மணற்குவியல்! அதைத் தவிர மேஜை

    நாற்காலிகள் எதுவும் இல்லை.

    ‘‘இங்கே ஒங்களுக்கு வேற என்ன வசதிங்க வேணும்?’’ என்று முகிலன்

    கேட்டார். அவர் திருவாரூரை அடுத்த மாயவரத்தைச் (இன்றைய

    மயிலாடுதுறை) சேர்ந்தவர். ஆகவே அந்த மண் பாசம் என் மீது அவருக்கு

    இருந்தது.

    நான் கேட்டேன்:–

    ‘‘முகிலன்! கீழே தரையிலே ஒக்காந்து எழுதுறதுக்கு வசதியா, நம்ம ஊர்ல

    கணக்கப்பிள்ளைங்க வச்சிருப்பாங்களே, அந்த மாதிரி ஒரு சின்ன மேஜை! ஒரு

    கோரைப்பாய், ரெண்டு தலையணைங்க வேணும்.

    ‘‘அவ்வளவுதானா? வேற ஒண்ணும் வேண்டாமா?’’

    ‘‘வேற ஒண்ணுமில்லை – ‘ஒண்ணுமே வேண்டாம்.’ இந்த ‘ஒண்ணுமே’ என்ற

    வார்த்தையைச் சற்று அழுத்தமாக உச்சரித்தேன்.

    அவர் சிரித்தார். சினிமா கம்பெனியில் இருப்பவர் அல்லவா? உடனே அந்த

    வார்த்தையின் பொருளைப் புரிந்து கொண்டார். (அதாவது ‘‘ஒண்ணுமே

    வேண்டாம்’’ என்று நான் சொன்னதன் பொருள் ‘சிகரெட், சீசாக்கள்’ முதலியன).

    தயாரிப்பு நிர்வாகி முகிலன் அடையாறில் எங்கெங்கேயோ அலைந்து திரிந்து

    நான் கேட்ட கணக்குப் பிள்ளை மேஜை, பாய் தலையணைகள் மற்றும்

    நொறுக்குத் தீனி தின்பண்டங்கள் வாங்கி வந்து கொடுத்தார். அத்துடன்

    மத்தியானத்திற்கு மட்டன் கறிக்குழம்பு, வறுவலுடன் சாப்பாட்டிற்கு ஏற்பாடு

    பண்ணியிருப்பதாகவும் தெரிவித்தார்.

    மணல் தரையில் பாயை விரித்தேன். அதன் மீது அந்தக் குட்டி மேஜையை

    வைத்தேன். பின்னால் சாய்ந்து கொள்வதற்கு ஒரு தலையணை! பக்கத்தில்

    ஆதரவாக ஒரு தலையணை! வரும் பொழுதே வாங்கிக்கொண்டு வந்த ‘புல்

    ஸ்கேப்’ வெள்ளை பேப்பரை இரண்டு இரண்டாகக் கிழித்து ரைட்டிங் பேடின்

    கிளிப்பில் பொருத்திக்கொண்டேன்.

    மேஜைக்கு அடியில் இரண்டு கால்களையும் வாட்டமாக நீட்டிக்கொண்டு, கிழக்கு

    முகமாக அமர்ந்தேன். ஏறிட்டுப் பார்த்தேன். எதிரே நீலக்கடல்! அதன் மீது

    கவிந்திருந்த நீல
    வானம்! அலுப்பில்லாமல் அடிக்கடி எழுந்து எழுந்து புரண்டுப் புரண்டு

    நுரையுடன் வந்து கரையை முத்தமிட்டு முத்தமிட்டுப் பின்வாங்கிச் செல்லும்

    பேரலைகள்! அவற்றின் தாளகதியும் சுதியும் கூடிய இரைச்சல் ஒலி! கடற்
    குருவிகளின் காதுக்கினிய இசை! ஈரமணல் படிந்த கரையோரம் ஆங்காங்கே

    சிறு சிறு குழிக்குள் இருந்து வெளிவரும் நண்டுகளின் நர்த்தனம்! விழிகளுக்கு

    ரம்மியமோ ரம்மியம்!

    ஐந்து நட்சத்திர ஓட்டல் அறையில், இந்த அற்புத இயற்கை எழிற்காட்சிகளைக்

    காண இயலுமா? – ஆயிரம் ஆயிரமாகப் பணம் கொடுத்தாலும்!

    வழக்கம்போல காகிதத்தின் உச்சியில் சிலுவையை வரைந்து, அதன் கீழே

    ‘மாதா துணை’ என்று எழுதினேன்.

    ஒருகணம் கண்களை மூடி அவற்றின் உட்திரையில் தோன்றிய என் அன்னை –

    ஆண்டவரின் திருஉருவங்களைக் கண்டு கரங்கூப்பியபடி எனக்கு நானே

    கூறிக்கேட்டுக் கொண்டேன்:–

    ‘‘எனக்கு முன்னிருந்து வழிகாட்டிய அன்னையே! பின்னிருந்து ஒளிகாட்டி

    என்னை அழைத்து வந்த ஆண்டவரே! நீங்கள் எனக்கு வழங்கிய இந்த அரிய

    பெரிய வாய்ப்பினை நான் நன்கு பயன்படுத்திக் கொண்டு, என் கடமையைச்

    சரியாகச் செய்து, அதனால் பெயரும், புகழும் பெற்று மகிழ எனக்கு

    உறுதுணையாக இருந்து உதவி புரியுமாறு உளமார உங்களை வேண்டிக்

    கொள்கிறேன்.’’

    அவ்வளவுதான்!

    ‘பாசமலர்’ படத்திற்கான வசனங்கள் எழுத்து வடிவங்கொள்ளத்

    தொடங்கிவிட்டன!

    காட்சி–1:– வெளிப்புறச்சாலை.

    நேரம்: பகல்.

    சுமார் பத்து வயதுடைய ஒரு சிறுவன் தன் கையில் மருந்து சீசாவுடன்

    வேகமாக ஓடி வருகிறான்.

    காட்சி 1–ஏ:– ஒரு குடிசையின் உட்பகுதி.

    உள்ளே வந்த அந்தச் சிறுவன் தன் நோயாளித் தாய் இறந்து கிடப்பதைப்

    பார்த்து அதிர்ச்சி அடைகிறான். அவன் கையிலிருந்த மருந்து சீசா நழுவிக் கீழே

    விழுந்து உடைகிறது. தாயின் அருகில் தன் இரண்டு வயதுத் தங்கை அழுது

    கொண்டிருக்கிறது. அவன் அந்தக் குழந்தையைத் தூக்கி அன்புடன் அணைத்துக்

    கொள்கிறான். படத்திற்கான பெயர் வரிசை (டைட்டில்) ஆரம்பமாகிறது.

    ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் அளிக்கும் ‘ராஜாமணி பிக்சர்ஸ்’ ‘‘பாசமலர்.’’

    டைட்டில் முடிகிறது. ‘டயம் லேப்ஸ்.’

    காட்சி–2:– ராஜு வீடு (உள்ளே – பகல்)

    தங்கை ராதா (சாவித்திரி அறிமுகம்)

    டிபன் பாக்சில் இட்லி வைத்துக்கொண்டிருக்கிறாள். ஆலையின் சங்கு ஒலிக்கும்

    ஓசையைக் கேட்டபடி அண்ணன் ராஜு (சிவாஜி கணேசன்) அறிமுகமாகி

    தங்கையிடம் வந்து ‘‘அம்மாடி! சங்கு ஊதிட்டான். சீக்கிரம் சீக்கிரம்.’’

    ராதா:– ‘‘அண்ணே! இன்னிக்கு ஒங்களுக்குப் பிரியமான தக்காளி குருமா

    வச்சிருக்கேன்.’’

    ராஜு:– ‘‘இப்படி வாய்க்கு ருசியா கொடுத்தின்னா அப்புறம் டிபன் மட்டுமில்லே,

    பாக்சும் திரும்பி வராது.’’ (என்று வாங்கிக்கொண்டு ஓடுகிறான்)

    இதில் தொடங்கி இரண்டு வாரங்கள் தொடர்ந்து 249 காட்சிகளுக்கான

    வசனங்களையும், அவை சம்பந்தப்பட்ட மற்ற விவரங் களையும் எழுதி

    முடித்தேன்.

    இறுதியாக அண்ணனும், தங்கையும் சேர்ந்தாற்போல் இறந்து போகும் அந்த

    உச்சகட்டக் காட்சிக்கு வந்தேன். எழுதத் தொடங்குவதற்கு முன்பு சிறிது நேரம்

    சிந்தித்தேன்.

    இத்துடன் பாசமலர் படம் முடிகிறது. இந்த இறுதிக்காட்சியைக் கண்டு அழாத

    கண்களும் அழவேண்டும். ஒரு துக்க வீட்டிற்குச் சென்று திரும்புவதைப்

    போன்ற கனமான சோக உணர்வுடன் மக்கள் தியேட்டரை விட்டு வெளியே

    வரவேண்டும். அவரவர் தங்கள் வீட்டில் நடந்ததுபோல எண்ணி அந்தக்

    காட்சியோடு – சினிமாப்படம் என்பதையும் மறந்து ஐக்கியமாகி தங்களையும்

    மீறி அந்தச் சோகத்தை சுமந்து செல்ல வேண்டும். அப்பொழுதுதான் இந்தப்படம்

    மகத்தான வெற்றி பெற்று எக்காலத்திலும் மறக்க இயலாத ஒரு

    ‘சிரஞ்சீவித்துவம்’ கொண்ட சிறந்த படமாக அமையும்’ என்று முடிவு செய்து

    கொண்டேன்.

    இதுவரையில் நான் வசனம் எழுதிக்கொண்டு வந்த எந்த ஒரு காட்சியைப்

    பற்றியும் இவ்வளவு நேரம் சிந்தித்ததில்லை. எல்லோரையும் அழவைக்க

    வேண்டும். எப்படி? சிந்தித்தேன் – சிந்தித்தேன். அப்படிச் சிந்தித்தேன்.

    ‘வசனம் எழுதிக்கொண்டு வரும்பொழுதே முதலில் என் கண்கள் கலங்கி

    அவற்றில் நீர் நிரம்ப வேண்டும். அப்போதுதான் படம் பார்க்கும் மக்களையும்

    கண்ணீர்விட வைக்க முடியும்.

    இந்தப் படத்திற்கு நான் எழுதியிருக்கும் மொத்த வசனங் களுக்கும் இந்த சோக

    ரசக் காட்சிக்கான வசனம் ஒரு சிகரமாக அமையவேண்டும்.’

    ‘‘உங்க திறமை பூராவையும் இந்த ஒரே படத்தில் காட்டி சிவாஜியைப்

    பிடிச்சிடணும்’’ என்று நான் அட்வான்ஸ் பணம் வாங்கிய அன்றைக்கு அண்ணி

    சாவித்திரி சொன்னாரே – அது இப்பொழுது என் நினைவிற்கு வந்தது.

    நான் சிவாஜியைப் பிடிப்பது பிறகு இருக்கட்டும். முதலில் ரசிகப்பெருமக்களைப்

    பிடிக்க வேண்டும்!

    எண்ண மேகங்கள் சூழ்ந்திருந்த மனதில், என் இளமைக்கால நிகழ்ச்சியொன்று

    மின்னலாகத் தோன்றி மறைந்தது.

    என் தாயார் நான்கு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகளை

    ஈன்றெடுத்தவர்! நான் தலைப்பிள்ளை. பழைய கதைகள், தாலாட்டுப்

    பாடல்களை என் தாயார் நன்கு அறிந்தவர். அதைக்கூறி, பாடி குழந்தைகளைத்

    தூங்க வைப்பார். நான் மூத்த பிள்ளையாதலால் அவர் பாடும் தாலாட்டுப்

    பாடல்களைக் கேட்டு அவற்றை மனப்பாடம் செய்து வைத்திருந்தேன்.

    ‘‘சாஞ்சாடும்மா, சாஞ்சாடு
    அன்னக்கிளியே சாஞ்சாடு
    அழகு மயிலே சாஞ்சாடு.’’
    ‘‘கைவீசம்மா கை வீசு
    கடைக்குப் போகலாம் கைவீசு.
    மிட்டாய் வாங்கலாம் கைவீசு
    மெதுவாய் திங்கலாம் கைவீசு!’’

    இவை போன்ற இன்னும் பல பாடல்களை அம்மா பாடுவார். அதைக்கேட்டு என்

    தம்பிகள், தங்கைகள் உறங்கி விடுவார்கள்.

    நாங்கள் ஏழு பேர்களில் என் கடைக்குட்டித் தங்கையின் பெயர் வாசமேரி!. அது

    ஒரு வயதுக் குழந்தையாக இருந்தபொழுது எப்பொழுதும் அழுதுகொண்டே

    இருக்கும். அதனால் அதைத் தூக்கிக்கொண்டு போய் பாட்டுப்பாடி அழுகையை

    நிறுத்தும்படி அம்மா என்னிடம் சொல்வார். அதன்படி நான் அம்மாவின்

    பாட்டைப்பாடி என் தங்கையின் அழுகையை நிறுத்துவேன்.

    இந்த ‘‘கைவீசம்மா கைவீசு’’ பாட்டு இப்பொழுது என் நினைவுக்கு வந்தது.

    இதைக் கடைசியாக வைத்துக்கொண்டு, இதற்கு இணைப்பாக முன்னாலிருந்து

    வசனங்களை எழுதிக்கொண்டு வந்தேன்.

    கண் பார்வை இழந்த அண்ணன் சிவாஜி, தன் அருகிலிருக்கும் அருமைத்தங்கை

    சாவித்திரியிடம் சொல்வார்:–

    ‘‘அம்மா! ஒன்னைவிட்டு இந்த உலகத்துல நான் எங்கே போனாலும்,

    என்னைச்சுத்தி நீ போட்டிருக்குற அந்த அன்பு வட்டத்துக்குள்ளேதாம்மா

    சுத்திக்கிட்டிருக்கேன். அதை விட்டு என்னால வெளியே வரமுடியலேம்மா.

    அம்மா! நாம எப்பவுமே சின்னக் குழந்தைகளாகவே இருந்திருக்கக்கூடாதா?

    அப்போவெல்லாம் நீ அழுதுக்கிட்டிருப்பே. ஒன்னை என் கையிலே தூக்கி

    வச்சிக்கிட்டு, நான் பாடுவேன்:–

    கைவீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கைவீசு, மிட்டாய் வாங்கலாம்

    கைவீசு’’

    இதற்கு மேல் பாட முடியாமல் அந்த அன்பு அண்ணன் அழுது குமுறுகிறான்.

    இதைக்கேட்டுத் தாங்க முடியாத தங்கை துக்கம் பீறிட்டு தன் அருமை

    அண்ணனுடன் சேர்ந்து கதறி அழுது கண்ணீர் வடிக்கிறாள்.

    இந்த வசனத்தையும், அதன் விவரத்தையும் நான் எழுதிய அந்த ஆண்டு 1960.

    இன்றைக்கு 53 ஆண்டுகளுக்குப் பிறகுங்கூட இதை அப்படியே நினைவு

    வைத்திருந்து இப்பொழுது நான் எழுதும் போதுகூட, என் இரு விழிகளையும்

    நீர்த்திரை மறைத்து மேற்கொண்டு எழுத முடியாமல் நிறுத்திவிட்டு எழுந்து

    சென்று என் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வந்தமர்ந்து சில நிமிட நேரம்

    அமைதியாக இருந்து அதன் பிறகு மீண்டும் தொடர்கிறேன்.

    இந்த உச்சக்கட்டக் காட்சிக்கான வசனங்களை அன்றைக்கு எழுதியபோது கூட,

    எனக்கு இந்த மனோ நிலை ஏற்பட்டது.

    படைப்பாளியான எனக்கே இந்த நிலை என்றால், படத்தைப் பார்ப்பவர்கள்

    உள்ளம் உருகி அழமாட்டார்களா என்ன?

    எழுதியபோதே, இந்த உச்சக்கட்டக் காட்சியில் அமைந்த உணர்ச்சி மிக்க

    வசனங்களை வைத்து இதன் வெற்றியை நான் உறுதிப்படுத்திக் கொண்டேன்.

    ‘பாசமலர்’ படத்திற்கான மொத்த வசனங்களையும் ஒரே மூச்சில் எழுதி

    நிறைவு செய்து கொண்டு, என் இதயங்கவர்ந்த ‘எலியட்ஸ்’ கடற்கரையின்

    எளிய குடிசையிலிருந்து பிரிய விருப்பம் இல்லாமல் பிரிந்து விடைபெற்றேன்.

    முழுவதும் எழுதி முடித்துவிட்டேன். அதுவும் இரண்டே இரண்டு

    வாரங்களுக்குள் என்று தெரிந்தும் சிவாஜியோ அல்லது இயக்குனர் பீம்சிங்கோ

    அதைப் படித்துக்காட்டும்படி என்னிடம் கேட்கவே இல்லை.

    ‘விரலால் தட்டிப்பார்க்கவோ, காதருகில் வைத்து உள்ளே நீர் இருந்து

    ஆடுகிறதா என்று அசைத்துப் பார்க்கவோ அவசியம் இல்லாத நன்கு முற்றிய

    நெற்றுத்தேங்காய் நான்’ என்று அவர்கள் இருவருமே முடிவு செய்துவிட்டார்கள்

    போலும்!

    நம்பிக்கை பிறந்து விட்டால், சோதித்துப் பார்க்கவேண்டிய அவசியம் வராது

    அல்லவா!

    சீசாக்கள்... சிங்காரிகள்...

    எனது அருமையான அறுவடைக் காலத்தில், ஜெமினி ஸ்டூடியோ படங்களைத்

    தவிர, மற்றபடி அனேகமாக அதிக கம்பெனிகளின் படங்களுக்கு வசனங்கள்

    எழுதியிருக்கிறேன். எந்த ஒரு கம்பெனியிலும், எந்தச் சந்தர்ப்பச்

    சூழ்நிலையிலும் – பணந்தான் வாங்கியிருக்கிறேனே தவிர, ‘பாட்டில்கள்’

    கேட்டதே கிடையாது. இது சத்தியம்! இந்த எனது சத்தியத்திற்கு இன்றைய

    நேர்முகச் சாட்சிகள் ஏவி.எம்.சரவணன், ஏ.சி.திருலோகசந்தர் ஆகிய இருவரும்!

    ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப்பற்றி அங்குலம் அங்குலமாக

    அறிந்தவர்கள் இவர்கள்! என்னைச் சரியாக எடைபோட்டு வைத்திருப்பவர்கள்!

    ‘‘நோ விஸ்கி, நோ விமன், நோ சிகார், ஹி ஈஸ் ஆரூர்தாஸ்’’ என்று

    ஆங்கிலத்தில் கூறி திருலோகசந்தர் என்னை விமர்சிப்பார். இந்த ஆங்கிலச்

    சொற்றொடரை அவர் இயக்கிய ‘‘நீ இன்றி நான் இல்லை’’ என்ற படத்தில் ஒரு

    காட்சியில் நான் வசனமாக எழுதியிருக்கிறேன்.

    இதை தமிழில் நான் மொழிபெயர்த்துச் சொல்வேன்:–

    ‘‘சீசாக்கள் இல்லை, சிங்காரிகள் இல்லை, சிகரெட் இல்லை – அவர்தான்

    ஆரூர்தாஸ்.’’

    இதைக்கேட்டு அவர் சிரிப்பார்.

    என் மீது உள்ள பிரியத்தில் நான் எது கேட்டாலும் வாங்கிக் கொடுக்கத்

    தயாரிப்பாளர்கள் தயாராய் இருந்தார்கள். ஆனால் நான்தான் தயாராக இல்லை.

    ‘ஓசி’யில் கிடைக்கிறது என்பதற்காக வாங்கி ஊற்றிக்கொண்டு உடலையும்,

    குடலையும் பாழாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை!

    ஆசைப்பட்ட ஆகார வகைகளை வாங்கி வரச்சொல்லி உண்பேனே தவிர,

    ஆகாததைக் கேட்கமாட்டேன். அதனால்தான் எல்லா தயாரிப்பாளர்கள் –

    இயக்குனர் களாலும் நான் விரும்பப்பட்டு ஏராளமான படங்களுக்கு எழுதக்கூடிய

    வாய்ப்பு பெற்றேன்.

    இது எனக்கு எப்படி சாத்தியம் ஆனது? சினிமாவில் எனது ஆரம்ப நுழைவே

    ‘தேவர் பிலிம்ஸ்’ என்ற ராணுவ முகாம்! அதில் தேவரண்ணன் ஓர் உயர்

    அதிகாரியாக இருந்து முழுக்க முழுக்க ஒழுக்கத்தைக் கண்டிப்புடன்

    கடைப்பிடித்தார்!

    தாம்பூலம் தரித்துக் கொள்வதைத்தவிர, வேறு தகாத விஷயங்கள் எதையுமே

    அறியாத அண்ணன், தன்னைப்போலவே தன் நிறுவனம் சார்ந்த எல்லோருமே

    இருக்கவேண்டும் என்று எண்ணினார்.

    தேவர் பிலிம்ஸ் அலுவலகத்தை அவர் சினிமா கம்பெனியாக அல்ல. செந்தூர்

    முருகன் ஆலயம் போல வைத்திருந்தார்!

    அன்றாடம் கட்டிக் கற்பூரம் ஏற்றிக்காட்டி, கந்தனை வழிபட்டு கடமையிலும்,

    கண்டிப்பிலும் கவனம் செலுத்தினார்.

    அலுவலகத்தின் உள்ளே யாராவது சிகரெட் பிடித்தாலோ, சீசாக்கள்

    திறந்தாலோ, சீட்டு ஆடினாலோ அடித்தே கொன்று விடுவார் என்ற அச்சம்

    அனை
    வருக்குமே இருந்தது. அதனால்தான் அன்றைக்கு அந்த நிறுவனம் ஒழுக்கத்
    தின் உறைவிடமாக
    விளங்கியது!

    இன்றைக்கும் – இந்த எனது எண்பத்து இரண்டு வயதிலும் நான் கடைப்பிடித்து

    வரும் ஒழுக்கம், ஒழுங்கு, அனுபவ அறிவு, ஆற்றல் இந்த நான்கையும் –

    அன்றைக்கு நான்கு சினிமா மேதைகளிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன்.

    அந்த நால்வர்:–

    1. தேவரண்ணன்!
    2. ஏவி.எம்.செட்டியார்!
    3. எல்.வி.பிரசாத்!
    4. வாகினி நாகிரெட்டியார்!

    தேவரண்ணனிடமிருந்து ஒழுக்கத்தையும், ஏவி.எம். செட்டியாரிடமிருந்து

    ஒழுங்கையும், எல்.வி.பிரசாத்திடமிருந்து அனுபவ அறிவையும்,

    நாகிரெட்டியாரிடமிருந்து செயலாற்றலையும் கற்றுக் கொண்டு, என்னால்

    இயன்ற அளவுக்கு அவற்றை அனுசரித்து வருகிறேன்.

    அவையே இன்றைக்கு எனக்கு பலத்தையும், நலத்தையும், வளத்தையும்,

    நல்வாழ்வையும் கொடுத்திருக்கிறது என்று நான் கூறினால் அது மிகை அல்ல.

    ஆன்றோரும், சான்றோரும் ஆண்டவனின் பிரதிநிதிகள் ஆவர்! அவர் களைப்

    பின்பற்றி நடந்தால் பிறவிப்பெரும் பயன் அடையலாம். இது என் அனுபவம்!

    சிற்றினம் சேர்ந்தால் வாழ்வு சிதையும்.
    இந்தக் கட்டுரையைத் தமிழில் சிரமப்பட்டு கணினியில் தரவேற்றம் செய்ய வழிவகுத்த நண்பருக்கு நம் உளமார்ந்த நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #29
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Any news on pasamalar release?

  11. #30
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தினத்தந்தி நாளிதழில் பாசமலர் திரைப்படம் குறித்து ஆரூர்தாஸின் நினைவலைகள்...
    15.06.2013 சனிக்கிழமை இதழில் வெளிவந்த பகுதி

    1960 டிசம்பர் 25.
    அன்றைக்கு கிறிஸ்துமஸ் திருநாள்.

    சிவாஜி, ஜெமினி, பீம்சிங் மூவருமே கிறிஸ்துவத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். அதனால் தான் அவர்களுடைய கூட்டுக்குழுவிலிருந்து அக்காலத்தில் ‘பாவமன்னிப்பு’ படம் உருவாகியது.

    கிறிஸ்துமஸ் விழாவும் அதுவுமாக அடையாறு நெப்டியூன் ஸ்டூடியோவில் ‘பாசமலர்’ முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது.

    அதற்கு முன்னதாக அடையாறு ‘மெக்கரனெட்’ பேக்கரியில் இருந்து ஒரு பெரிய சாக்லட் கேக் வந்திருந்தது.

    அதன் மீது ‘ஹேப்பி கிறிஸ்துமஸ்’ என்றும், ‘பாசமலர்’ என்றும் ஆங்கிலத்தில் வெள்ளை கிரீமினால் வரையப்பட்டிருந்தது.

    சிவாஜி தன் கரங்களால் கேக் வெட்டி முதல் துண்டை எடுத்துக்கொண்டு ‘ஆரூரான்’ என்று அழைத்தார்.

    அருகில் சென்றேன், முதல் துண்டை என் வாயில் ஊட்டினார். எல்லோரும் கைதட்டினார்கள்.

    தொடர்ந்து இயக்குனர் ஏ.பீம்சிங், ஜெமினிகணேசன், சாவித்திரி, ஒளிப்பதிவாளர் ஜி.விட்டல்ராவ் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் கேக் ஊட்டினார்.

    பீம்சிங் ஒரு துண்டை எடுத்துத் தன் கரங்களால்
    சிவாஜிக்கு ஊட்டினார். தொடக்க விழாவே களை (கலை) கட்டி இருந்தது.

    படப்பிடிப்பு தொடங்கியது.

    சிவாஜியின் எளிய வீட்டிலிருந்து காட்சி ஆரம்பம்.

    சிவாஜி வீட்டில் இருக்கமாட்டார் என்று எண்ணிய ஜெமினி, கையில் மல்லிகைப்பூவுடன் சாவித்திரியைப் பார்க்க உள்ளே வருவாரே, அந்தக் காட்சி முதன் முதலாகப் படமாக்கப்பட்டது.

    அத்துடன் மதிய உணவு வேளை வந்தது. நான் சிவாஜியுடன் சாப்பிட்டேன். அவருடன் சேர்ந்து சாப்பிட்டது அதுதான் முதல் முறை!

    அவருடைய வீட்டிலிருந்து சாப்பாடு வந்திருந்தது.

    அப்பொழுது அவர் ராயப்பேட்டை சண்முக முதலி தெருவிலிருந்த சொந்த வீட்டில் வசித்து வந்தார். தியாகராயநகர் இன்றைய செவாலியே சிவாஜிகணேசன் சாலை (பழைய தெற்கு போக் ரோடு) பங்களாவை வாங்கி ‘அன்னை இல்லம்’ என்று பெயரிட்டுப் புதுப்பித்துக் கொண்டிருந்தார்.

    மதிய உணவிற்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது.

    சிவாஜி தொழிலாளியாக வேலை செய்த அந்த ஆலைக்கே முதலாளியாகி அவரிடம் வேலை கேட்டு ஜெமினி வருவாரே – அந்தக்காட்சி படமாக்கப்பட இருந்தது.

    அதில் சாவித்திரிக்கு வேலை இல்லாததால் அவர் வீட்டிற்குப் போய்விட்டார்.

    அது ஒரு சாதாரண காட்சிதான். வேலையிலிருந்து விலக்கப்பட்ட தொழிலாளர் சார்பில் ஜெமினி வந்து சிவாஜியிடம் காரணம் கேட்கிறார். அவ்வளவு தான்.

    இதை நல்ல வசனங்களால் ஒரு ‘ஹைலைட்’ அதாவது மிகவும் சிறப்பான காட்சியாக்கிக் காட்ட வேண்டுமென்ற எண்ணத்துடன் இலக்கிய நயமுள்ள அழகிய வசனங்களை அமைத்திருந்தேன்.

    நிறைய வசனங்கள் இருந்ததால், முழுவதையும் ஒரு முறை படித்துக்காட்டி விடுகிறேன் என்று சொல்லி, நான் நடுவில் நின்றுகொண்டு, எனக்கு இடது, வலது புறமாக சிவாஜி – ஜெமினியை வைத்துக்கொண்டு வாசிக்கலானேன்.

    எதிரில் பீம்சிங் நின்றுகொண்டு நான் வாசிக்கும் வசனங்களைக் கவனமுடன் கேட்டார்.

    அரங்கமே அதிரும் அளவுக்குக் கைத்தட்டல் பெற்றதும், ‘நான் ஒரு சிறந்த வசனகர்த்தா’ என்று எனக்கு ‘ஐ.எஸ்.ஐ’ முத்திரை குத்தி, ‘அக்மார்க்’ வழங்கப்பட்டதுமான அந்த வசனங்களின் ஒரு பகுதியை இங்கு எழுதுகிறேன்:–

    ஜெமினி:– ‘இவர்களை வேலையிலிருந்து விலக்கி விட்டாயாமே?’.

    சிவாஜி:– ‘ஆமாம். அதிக வேலை இல்லாத காரணத்தால் ஆட்குறைப்பு செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டது’.

    ஜெமினி:– ‘இல்லை, இவர்கள் என்னுடைய ஆட்கள் என்பதற்காக விலக்கியிருக்கிறாய்’.

    சிவாஜி:– ‘நன்றி கெட்டவர்களையும், நயவஞ்சகர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வதைவிட, அவர்களை விலக்கி விடுவதே மேல்’.

    (ஜெமினியுடன் வந்துள்ள தொழிலாளர்களை நோக்கி...) ‘சொந்த விஷயத்திற்காகவும், சுய நலத்திற்காகவும் பகை கொண்டு என்னைப் பழிவாங்கப் படை எடுத்து வந்திருக்கிறார். உங்களுக்காகப் பரிந்து பேசவரவில்லை’.

    ஜெமினி:– ‘யார் சுயநலவாதி? ஒருவன் வாழவேண்டும் என்பதற்காகப் பலர் பாடுபடவேண்டுமென்ற ஏகாதிபத்திய மனப்பான்மை கொண்ட நீ சுயநலவாதியா?, பலர் வாழவேண்டும் என்பதற்காக ஒருவன் பாடுபடவேண்டுமென்ற கொள்கை கொண்ட பொது நலவாதியான நான் சுயநலவாதியா?.

    சிவாஜி:– ‘பொது நலம்! எது பொது நலம்?. பொறியிலே பலகாரம் வைப்பது எலியின் பசியைப் போக்கவா?. புற்றுக்கு அருகே நின்று மகுடி ஊதுவது நாகத்தின் காதுகளை நாதத்தால் குளிர வைக்கவா?. காட்டிலே குழிபறிப்பது யானை ஓய்வு பெறுவதற்கா?. கணையை வில்லில் பொருத்துவது கலைமானுக்கு வேடிக்கை காட்டுவதற்கா?... இல்லை. இவையெல்லாம் பிறர் துன்பத்தில் இன்பம் காண வேண்டும் என்ற பேய் வெறி! அந்த வெறிதான் உனக்கும்’.

    ஜெமினி:– ‘இல்லை, மெழுகுவர்த்தி எரிந்து ஒளியைக் கொடுப்பதுடன் தன் மேனியையும் உருக்கிக் கொள்கிறது. ஊதுவத்தி எரிந்து நறுமணத்தைக் கொடுத்த பிறகு உருவமற்றுச் சாம்பலாகிறது! தேய்ந்து தேய்ந்து மணத்தைக் கொடுக்கும் சந்தனக் கட்டை போன்றவர்கள் தியாகிகளும், பொதுநலவாதிகளும் என்பதைப் புரிந்துகொள்’.

    சிவாஜி:– ‘புரிகிறது, அன்று நம்மோடு வேலை பார்த்தவன் இன்று இந்த உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டானே என்ற வயிற்றெரிச்சல் உனக்கு’.

    ஜெமினி:– ‘தவறு, தனக்குத் தண்ணீர் இல்லாததால் ஒரு செடி கருகுமே தவிர, வேறொரு செடிக்குக் கிடைக்கிறதே என்ற ஏக்கத்தால் எந்தச் செடியும் எரிவதில்லை.

    இந்தத் தத்துவத்தில் வளர்ந்து, தன்னம்பிக்கையில் மலர்ந்து, கவலை இல்லாத வாழ்க்கை நடத்துகிற என்னை விட்டு விட்டு வேறு எவனாவது கையாலாகாதவனிடம் உன் வயிற்றெரிச்சல் கதையைக் கூறு’.

    சிவாஜி:– (கோபத்துடன் எழுந்து நின்று)

    ‘Mister Anand! I am The Sole Proprieter of This Concern. I Can do Whatever I Want’

    (மிஸ்டர் ஆனந்த்! ஐயேம் தி ஸோல் புரோப் ரைட்டர் ஆப் திஸ் கன்ஸர்ன்! ஐ கேன் டு வாட் எவர் ஐ வாண்ட்– ‘மிஸ்டர் ஆனந்த்! நான் இந்த நிறுவனத்தின் முழு முதலாளி. நான் என்ன நினைத்தாலும் அதைச் செய்ய முடியும்’).

    ஜெமினி:– (அதிகக் கோபத்துடன் சிவாஜியை நெருங்கி)

    ‘Those Days Have Gone Mister Raju. Now Each for All and All for Each’.

    (தோஸ் டேஸ் ஹேவ் கான் மிஸ்டர் ராஜு. நவ் ஈச் ஃபார் ஆல் அண்ட் ஆல் ஃபார் ஈச்– அந்தக்காலம் போய்விட்டன மிஸ்டர் ராஜு. இன்று எல்லாம் எல்லாருக்கும் சொந்தம். எல்லாரும் எல்லாவற்றிற்கும் சொந்தம்’).

    (இந்த ஆங்கில வசனங்களை சிவாஜியும், ஜெமினியும் மாறி மாறிக் கூறியதைக் கேட்டு, 52 ஆண்டுகளுக்கு முன்பு – அன்றைக்கு அரங்கங்களே கையொலியாலும், ரசிகர்களின் விசில் சப்தத்தினாலும் அதிர்ந்தது!)

    ஜெமினி தொடர்கிறார்:–

    ஜெமினி:– ‘நாளை உன் தொழிற்சாலையின் கதவுகள் பூட்டப்படும்’.

    சிவாஜி:– ‘அத்துடன் உன் கரங்களிலும் விலங்குகள் மாட்டப்படும்’.

    ஜெமினி:– ‘பார்க்கலாம்’.

    சிவாஜி:– ‘ஆனந்தா! இங்கு எரிந்து கொண்டிருக்கும் மின்சார பல்புகளை எல்லாம் நீ அணைத்து விட்டாலும்கூட, இந்த இடத்தில் ஒரே ஒரு சின்னஞ்சிறு அகல் விளக்கு எரிந்து கொண்டிருக்கும். அந்தச் சொற்ப வெளிச்சத்தின் அடியில் அற்பர்கள் துணையின்றி ஒரே ஒரு உருவம் மட்டும் ஓடி வேலை செய்து கொண்டிருக்கும். அதுதான் இந்த ராஜு!

    போ – மூலைக்கு மூலை நின்று முரசு கொட்டு, திட்டு, கெட்... அவுட்’.

    இந்த வசனங்களை நான் உணர்ச்சிப்பூர்வமாக சிவாஜி – ஜெமினி இருவருக்கும் ஏற்றபடி என் குரலை ஏற்றித்தாழ்த்தி ‘மாட்யுலேஷனுடன்’ படித்து முடித்தேன்.

    இதைக்கேட்டு இருவருமே சற்று உணர்ச்சி வசப்பட்டு நின்றனர்.

    சிவாஜியின் கண்கள் லேசாகச் சிவந்திருந்தன. தன் இடது கையை என் தோள் மீது வைத்து வலது கையால் என் கன்னத்தில் தட்டியபடி, ‘வெரிகுட்! வெரிகுட்! கொன்னுட்டே. ஒன்னை முதல் முதல்லே சந்திச்ச அன்னிக்கே உன்னை நான் நல்லா புரிஞ்சிக்கிட்டேன். நல்லாருக்கு. ரொம்ப நல்லாருக்கு. நீ எழுதியிருக்கிற விதம்! அதைப்
    படிச்சி சொன்ன முறை – பிரமாதம்!’.

    (ஜெமினியை நோக்கி) ‘டேய் கணேசா! எனக்கு ஒரு அருமையான வசனகர்த்தாவைக் கொடுத்தேடா, தேங்க் யூ!’.

    இதைக்கேட்டதும் ஜெமினியின் முகத்தில் பத்து தாமரைப்பூக்கள் மலர்ந்ததை நான் பார்த்தேன். சிவாஜியிடம் அவர்தானே என்னை அறிமுகம் செய்து எழுத வைத்தார். என்னைவிட அவருக்குத்தானே அதிக மகிழ்ச்சி. இருக்காதா பின்னே?

    சிவாஜி தொடர்ந்தார்:–

    ‘‘இதோ பார் கணேசா! தம்பி ஆரூரான் படிச்சிக்கிட்டு வரும்போதே பாதி எனக்கு மனப்பாடம் ஆயிடுச்சி. இனிமே அங்கங்கே ஷாட்டுக்கு ஷாட்டு அவன் என்னை ‘டச்’ பண்ணுனா போதும். சொல்லிடுவேன். நீ மறுபடியும் இன்னொரு தடவை அவனைப் படிக்கச் சொல்லிக் கேட்டு நல்லா மனப்பாடம் பண்ணிக்க. ஏன்னா? தியேட்டர்ல ‘கிளாப்ஸ்’ வாங்கக்கூடிய டயலாக் இது. நம்ம ரெண்டு பேருக்கும் நல்லா பேலன்ஸ் பண்ணி எழுதியிருக்கான். அவன் இப்போ படிச்சி சொன்னது மாதிரியே ஒழுங்காப் பேசி நல்லா நடிக்கணும் தெரிஞ்சிதா?’’

    டைரக்டர் பீம்சிங் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். அவரும் சிவாஜியும் எப்பொழுதுமே ஒருவரை ஒருவர் ‘பாய்’ என்றுதான் கூப்பிட்டுக் கொள்வார்கள். ‘பாய்’ என்னும் இந்தி மொழிச் சொல்லுக்கு ‘சகோதரன்’ என்று பொருள்.

    சிவாஜி:– ‘‘பாய்! சீன் – டயலாக் ‘பில்ட் அப்’ நல்லாருக்குல்ல?’’

    பீம்சிங்:– ‘‘ரொம்ப நல்லாருக்கு. இது சாதாரண சீன்தான். டயலாக்கால இவ்வளவு நல்லா ‘டிராமா பில்டப்’ ஆகும்னு நான் நினைக்கலே.’’

    சிவாஜி:– ‘‘நான் ரெடி – நீங்க ‘ஷாட்’ வைக்கலாம்.’’

    இந்தக் காட்சி படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே தளத்திற்கு வெளியில் என்னைப்பற்றியும், வசனங்கள் பற்றியும் மற்றவர்கள் விமர்சனம் செய்து கொண்டிருந்தார்கள். எல்லோருமே என்னை ஒருமாதிரியாகப் பார்த்தார்கள். அதன் பொருள் என்ன? எனக்குப் புரியவில்லை.

    மாலைச்சிற்றுண்டி வேளை வந்தது.

    ஜெமினி என்னைத் தனியாக அழைத்துக்கொண்டு போய் சொன்னார்:–

    ‘‘தாசு! உன் வண்டி புறப்பட்டுடுச்சி. சிவாஜிக்கும், பீம்சிங்குக்கும் உன்னை ரொம்பப் பிடிச்சிப்போச்சி. அவ்வளவுதான். இனிமே இங்கே நீதான் ‘ஆஸ்தான ஆசிரியர்’ ஆகப்போறே. என் வேலை முடிஞ்சிது. ‘கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்’ என்று சொல்லி அவர் கையை என் தலையில் வைத்தார். பதிலுக்கு நான் என் கையை அவர் காலில் வைத்தேன். அவர் என்னைப் பிடித்து உயர்த்தித் தன் மார்போடு அணைத்துக்கொண்டார்.

    அவர் மகிழ்ந்தார்! நான் நெகிழ்ந்தேன்!

    ---

    புராணம் மாறிப்போயிடுச்சி...

    பாசமலர் படப்பிடிப்பு தொடங்கிய அடுத்த நாள்.

    அன்றைக்கு ஜெமினிக்கு வேலை இல்லை.

    சிவாஜி – சாவித்திரி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருந்தன.

    காலையில் ஸ்டூடியோவுக்கு வந்தேன். சிவாஜியுடன் டிபன் சாப்பிட்டுவிட்டு சாவித்திரியின் ‘மேக்–அப்’ ரூமுக்குள் நுழைந்தேன்.

    நாற்காலியில் அமர்ந்து மேக்–அப் போட்டுக் கொண்டிருந்தார். எதிரே கண்ணாடியில் தெரிந்த என் உருவத்தைப் பார்த்தபடி பேசினார்:–

    அவர்:– ‘நேத்து மத்தியானத்துக்கப்புறம் எடுத்த சீன்ல டயலாக் பிச்சி உதறிட்டிங்களாமே!’.

    நான்:– ‘அண்ணன் சொன்னாரா?’.

    அவர்:– ‘ஆமா, சிவாஜியும் நானும் போட்டிப் போட்டுக்கிட்டு டயலாக் பேசி நடிச்சிருக்கோம். ‘ரஷ்’ வந்ததும் நீ பாரு. உன் கொழுந்தனை இனி சிவாஜி விடமாட்டான்’னு சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டாரு. டிபன் சாப்பிட்டிங்களா?’.

    நான்:– ‘சாப்பிட்டேன்’.

    அவர்:– ‘எங்கே?’

    நான்:– ‘சிவாஜியோட வீட்லேருந்து இட்லியும், மீன் குழம்பும் வந்திருந்துச்சி’.

    இதைக்கேட்டதும் சாவித்திரி சிரித்தார்.

    ‘ஏண்ணி சிரிக்குறே?’.

    அவர்:– ‘அவ்வளவுதான். இனிமே போக் ரோட்டுக்குப் போயிடுவீங்க. அபிபுல்லா ரோட்டை அடியோட மறந்திடுவீங்க’.

    (‘போக் ரோடு’ என்று குறிப்பிட்டது சிவாஜி வீட்டை, ‘அபிபுல்லா ரோடு’ என்றது அவருடைய வீட்டை)

    அதற்கு நான் பதில் சொன்னேன்.

    ‘அண்ணி! டி.நகர்ல எந்த ரோடை மறந்தாலும், ரெண்டு ரோடை மட்டும் எப்பவுமே மறக்கமாட்டேன். ஒண்ணு ‘நுங்கம்பாக்கம் ஹைரோடு’ (ஜெமினி வீடு) இன்னொண்ணு ‘அபிபுல்லா ரோடு’ (சாவித்திரி வீடு)

    பாயசம் சாப்பிடணும்னா பாப்ஜி அம்மா (ஜெமினியின் துணைவியார்) கிட்டே போவேன். பாயா சாப்பிடணும்னா ஒங்கிட்டே வருவேன். பீர்க்கங்காய் சட்னி அங்கே! பெஸரட் இஞ்சிச்சட்னி இங்கே!’.

    இதைக்கேட்டு சாவித்திரி சிரித்து:– ‘அண்ணனும் தம்பியும் சதா திங்குறதுலேயே இருங்க. நல்லாச் சேந்திங்க. ஒரு அய்யரும் ஒரு கிறிஸ்துவரும்’.

    நான்:– ‘அதோட ஒரு ஆந்திராவும்னு ஒன்னையும் சேத்துக்க அண்ணி! ஒனக்கு விஷயம் தெரியுமா...?’

    அவர்:– ‘என்ன?’

    நான்:– ‘போன ஜன்மத்துல அண்ணன் ராமரா இருந்தாராம். நீ சீதையா இருந்தியாம். நான் தம்பி லட்சுமணனா இருந்தேனாம்’.

    அவர்:– ‘யார் சொன்னது? ராமருக்கு ஒரே ஒரு சீதை தானே! அப்போ நான் சூர்ப்பனகையாவுல இருந்திருக்கணும்’.

    நான்:– ‘கரெக்ட் தான். அந்த ஜன்மத்துல சூர்ப்பனகை ராமர் மேல ஆசைப்பட்டு அவரை அடைய முடியலே. அதனால தான் இந்த ஜன்மத்துல சாவித்திரியா பொறந்து அண்ணனை அடைஞ்சிருக்கே. அது சரி! சாவித்திரி அடையவேண்டியது சத்தியவானைல்ல. நீ எப்படி இவரை...’

    அவர்:– ‘புராணம் மாறிப்போயிடுச்சி’ என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

    அந்தச் சிரிப்பில் அழகும் இருந்தது! ஓர் அர்த்தமும் இருந்தது!.
    நன்றி திரு சின்னசாமி வேறோர் இணைய தள நண்பர்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Page 3 of 14 FirstFirst 1234513 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •