Page 1 of 6 123 ... LastLast
Results 1 to 10 of 58

Thread: Filmography of Tamil Cinema 1931-1940

  1. #1
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    Filmography of Tamil Cinema 1931-1940

    நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நமது மய்யத்தின் பங்கு தமிழ் சினிமாவின் வரலாற்றில் தனியிடம் பெற்று வருகிறது, அதனுடைய வளர்ச்சியிலும் பங்காற்றி வருகிறது. இதனை ஒரு ஆவணப் பொக்கிஷமாக பலர் பயன் படுத்தி வருகின்றனர். இதற்கு மேலும் வலு சேர்த்திடும் வகையில் தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சியை அறிந்து கொள்வது அவசியம். அதற்கு முதல் தேவை, தமிழ்த்திரைப்படங்களின் பட்டியல் மற்றும் அவை தொடர்பான தகவல்கள். இந்த தேவையைப் பூர்த்தி செய்யும் முயற்சியில் இத்திரி தொடங்கப் படுகிறது. 1931 தொடங்கி 1990 வரையிலான 60 ஆண்டு கால வரலாற்றினை இந்த TAMIL FILM CLASSICS பிரிவில் நாம் பதிவு செய்யலாம். அதற்குப் பிந்தைய கால கட்டங்கள் நடப்பு பிரிவில் இடம் பெறுகின்றன. இந்த 60 ஆண்டு கால படங்களையும் ஒரே திரியில் கொண்டு வருவது கடினம். எனவே ஒவ்வொரு பத்து ஆண்டு கால கட்டத்தையும் தனித் திரிகளாக அமைத்து அதில் தகவல்களை நாம் பகிர்ந்து கொள்வோம். அனைவருமே இதில் தகவல்களைத் தருவது முழுமையடைய உதவும். வரிசைக் கிரமமாக படங்களின் தகவல்களை பதிவு செய்வதே சரியாக இருக்குமாதலால் அனைவருமே இந்த வரிசைக் கிரமத்தை கடைப்பிடிக்க வேண்டுகிறேன். ஒவ்வொரு ஆண்டிற்கும் துவங்கும் போது அந்த ஆண்டு வெளிவந்த படங்களின் பட்டியலும் இங்கு தரப்படும். எங்கெங்கு முடியுமோ அங்கு தேதியும் தரப்படும்.


    முக்கிய குறிப்பு -
    சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் பட்டியல்களுக்குத் தனி இழைகள் உள்ளன. அவற்றிற்கான இணைப்பு இங்கே தரப் படுகிறது. எனவே அவற்றின் விவரம் இங்கும் மீண்டும் தர வேண்டியதில்லை. படங்களின் பெயர்கள் மட்டுமே இடம் பெறும். வேறு தகவல்கள் இங்கு இடம் பெறாது.

    சிவாஜி கணேசன் பட விவரங்களுக்கான இணைப்பு
    http://www.mayyam.com/talk/showthrea...ews-and-Events

    எம்.ஜி.ஆர். பட விவரங்களுக்கான இணைப்பு
    http://www.mayyam.com/talk/showthrea...ews-amp-events
    தங்கள் அனைவரின் ஒத்துழைப்பிற்கும் மற்றும் மய்யம் திரிக்கும் முன் கூட்டிய நன்றி.

    1931-1940 கால கட்டத்தில் ஒவ்வொர் ஆண்டின் துவக்கப் பதிவிற்கான இணைப்புகள்.

    1931
    1932
    1933
    1934
    1935
    1936
    1937
    1938
    1939
    1940
    குறிப்பு – ஒவ்வோர் ஆண்டின் பட்டியல் முடிந்த பின் இணைப்புகள் கொடுக்கப்படும்.


    ஆண்டு 1931

    வெளிவந்த படங்களின் எண்ணிக்கை - 1

    காளிதாஸ்



    இயக்குநர் - எச்.எம்.ரெட்டி
    தயாரிப்பு அர்தேஷிர் இரானி
    நடிக நடிகையர் - பி.ஜி. வெங்கடேசன், எல்.வி.பிரசாத், டி.பி.ராஜலக்ஷ்மி, தேவாரம் ராஜாம்பாள், ஜே.சுசீலா, சுசீலா தேவி, எம்.ஆர்.சந்தான லக்ஷ்மி
    வெளியான நாள் 31.10.1931

    இப்படத்தில் சுமார் 50 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பிடத் தக்கது, ராட்டினமாம் காந்தியின் கை பாணமாம், இந்தியர்கள் நம்மவர்க்குள் ஏன் வீண் சண்டை.

    இத்திரைப்படத்தைப் பற்றிய மேற்காணும் தகவல்கள் விக்கிபீடியா இணைய தளத்திலிருந்து தரப்பட்டுள்ளன. மேலும் தகவலறிய விக்கிபீடியா வலைப்பக்கத்திற்கான இணைப்பு
    http://en.wikipedia.org/wiki/Kalidas_%28film%29

    தமிழ்த் திரைப் பட உலகின் தகவல் பிதாமகன் பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களுக்கு இத்திரி சமர்ப்பிக்கப்படுகிறது.

    Last edited by RAGHAVENDRA; 21st February 2013 at 08:40 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆண்டு 1932

    வெளி வந்த தமிழ்த் திரைப்படங்கள் - 4


    1. காலவா
    2. பாரிஜாத புஷ்பஹாரம்
    3. ராமாயணம்
    4. ஹரிச்சந்திரா
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #3
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    காலவா



    தயாரிப்பு - சாகர் பிலிம் கம்பெனி
    இயக்கம் - பி.பி.ரங்காச்சாரி

    பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் காலவா ரிஷி என்ற நாடகமே காலவா என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப் பட்டது. புராண காலத்தில் இருந்த காலவா ரிஷி என்ற முனிவரைப் பற்றிய படம் காலவா.

    திரைப்படமாக எடுக்கப் பட்ட முதல் தமிழ் நாடகம் காலவா என்ற பெருமையைப் பெற்றது.

    நடிக நடிகையர் - வி.எஸ்.சுந்தரேச ஐயர், பி.பி.ரங்காச்சாரி, டி.ஆர். முத்துலக்ஷ்மி

    இப்படத்தைப் பற்றி மற்ற தகவல்கள் இருந்தால் நண்பர்கள் பகிர்ந்து கொள்க.
    Last edited by RAGHAVENDRA; 19th February 2013 at 06:21 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #4
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்

    உங்களின் புதுமையான இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் .

    60 ஆண்டுகள் சினிமா வரலாறு - இன்றைய இளைய தலைமுறையினரும்
    . வருங்கால தலை முறையினரும் அறிந்து கொள்ள இந்த திரி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை .
    நீங்கள் துவங்கியுள்ள இந்த பொக்கிஷம் - பாராட்டுக்குரியது .
    வாழ்த்துக்கள் சார்
    அன்புடன்
    வினோத்

  6. #5
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் வினோத் சார்,
    தங்கள் ஆதரவான மற்றும் அன்பான வார்த்தைகளுக்கு எனது உளமார்ந்த நன்றிகள். இது நிச்சயமாக ஒரு கூட்டு முயற்சி. அனைவரின் பங்களிப்பும் இருந்தால் தான் வெற்றி நடை போட முடியும். எனவே அனைவருக்குமே எனது நன்றிகள் உரித்தாகும். தங்களுடைய பங்களிப்பும் இதில் சேரும் போது இது மேலும் சிறப்படையும் என்பதில் ஐயமில்லை.
    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #6
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    அன்பு திரு ராகவேந்திரா அவர்களுக்கு

    உங்களின் இந்த முயற்சியும் முழுவெற்றி அடைய வாழ்த்துகள்..
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  8. #7
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  9. #8
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்!

    அற்புதமான முயற்சி. நூலைக் கட்டி மலையை இழுப்பது போன்ற மிகப் பெரிய முயற்சி. வெற்றி கிட்டப் போவது நூலைக் கட்டி இழுக்கும் தங்களுக்கே! தங்களோடு நாங்களும் சேர்ந்து கொள்கிறோம். பாராட்டுக்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #9
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பாண்டவர்களில் அர்ஜுனனை அடிப்படையாக வைத்து பின்னப்பட்ட கதையே காலவா. முதன் முதலில் முழுப்படமும் தமிழிலேயே பேசிய பெருமை கொண்ட படம். இயக்கம் பி.பி .ரங்காச்சாரி.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #10
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    காளிதாஸ்



    T.P.Rajalaxmi





    It was inevitable! In 1931, the talkies came to Tamil Nadu. The first Talkie with Tamil in it was Kalidas. It was directed by H.M.Reddy and produced by T. P. RajalakshmiArdeshar Irani's Imperial Movie Tone and released on 31st October. Kalidas was produced in a hurry, and was technically flawed. It was not a pure Tamil talkie, in the sense that the artistes spoke (mainly) both in Tamil and Telugu. It starred T.P.Rajalaxmi as its heroine. She was a stage artiste who gained immense popularity as a movie actress and went on to make movies herself. Though it was a puranic story - both Thyagaraja Kirtanas and the Indian National Congress publicity songs had a place in the picture. Its curiosity factor, if anything guaranteed its success at the box-office.

    Thanks to indolink.com
    Last edited by vasudevan31355; 13th February 2013 at 10:33 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

Page 1 of 6 123 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •