Page 66 of 67 FirstFirst ... 165664656667 LastLast
Results 651 to 660 of 666

Thread: Ponmanachemmal m.g.r. Filmography news & events

  1. #651
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #652
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

  4. #653
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

  5. #654
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

  6. #655
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

  7. #656
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

  8. #657
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

  9. Thanks Russellrqe thanked for this post
  10. #658
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு சகோதரர் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு,

    தலைவர் நடித்த திரைக்காவியங்களின் கதை, மற்றும் திரைப்படத்தைப் பற்றிய அரிய தகவல்களையும் சிறப்புகளையும் பதிவிட்டு வருவதற்கு நன்றி. இந்தப் பதிவுகள் தலைவரின் திரையுலக சாதனைகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்லும் அழியாத கல்வெட்டுக்களாக காலமெல்லாம் திகழும்.

    தலைவரின் 37வது காவியமான தாய்க்குப் பின் தாரம் பற்றிய விவரங்கள் அருமை. அதிலும் இந்தப் படத்தில் ஒரு பாடலை சாண்டோ திரு.சின்னப்பா தேவர் அவர்கள் வில்லன் நடிகர் நடராஜனுடன் சேர்ந்து இயற்றியுள்ளார் என்பது பலருக்குத் தெரியாத செய்தி. வருங்காலத் தலைமுறைக்கு இது ஒரு ஆவணம்.

    தாய்க்குப் பின் தாரம் படத்துக்கு பல சிறப்புகள் உண்டு. 1957ம் ஆண்டு தேர்தலில்தான் பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக முதல் முறையாக போட்டியிட்டு 15 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது. பேரறிஞர் அண்ணா காஞ்சிபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் சின்னம் காளைமாடு. தாய்க்குப் பின் தாரம் படத்தில் காளை மாட்டை தலைவர் அடக்குவது போன்ற காட்சி உண்டு. அந்த தேர்தலில் காளை மாட்டை தலைவர் அடக்குவது போன்ற சுவரொட்டிகள் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டன. இது மக்களுக்கும் கழகத் தோழர்களுக்கும் எழுச்சியை ஏற்படுத்தியது. தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தப்பட்ட தலைவரின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது தாய்க்குப் பின் தாரம்.

    சகோதரர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் 2012 -ம் ஆண்டு கோவையில் தாய்க்குப் பின் தாரம் வெளியான விளம்பரத்தை பதிவிட்டுள்ளார். அதை வெளியிட்டவர் வசந்தம் மூவிஸ் ஷாஜகான். அவர் திமுகவைச் சேர்ந்தவர் என்பது அவர் வெளியிட்ட விளம்பரத்திலேயே தெரிகிறது. 1957-ல் மட்டுமல்ல, 2012-லும் கூட திமுகவினருக்கு தாய்க்குப் பின் தாரம் படம் உதவுகிறது என்பது இப்படத்தின் சிறப்பு.

    இப்படத்தின் மூலம்தான் ஸ்டண்ட் நடிகராக இருந்த சாண்டோ திரு.சின்னப்பா தேவர்கள் அவர்கள் தலைவரின் ஆதரவோடு பட முதலாளியாக உயர்ந்தார். தலைவரை வைத்து அதிக படமெடுத்த தயாரிப்பாளர் என்ற பெருமையையும் தமிழகத்தின் மிகப் பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவர் என்ற பெருமையையும் பெற்றார் திரு.தேவர் அவர்கள்.

    சாலிவாஹனன் என்ற திரைப்படத்தில் தலைவருக்கு சிறிய வேடம். அதில் நடித்த கதாநாயக நடிகருடன் தலைவருக்கு கத்தி சண்டை காட்சி. கதாநாயகனை விட தலைவர் சிறப்பாக கத்தி சண்டை காட்சியில் நடித்துள்ளார். இது குறித்து இயக்குநரிடம் கதாநாயக நடிகர் புகார் செய்துள்ளார். படத்தின் இயக்குநர் கதாநாயகனுக்கு ஆதரவாக இருந்துள்ளார். இதுபற்றி, உடன் நடிக்கும் ஸ்டண்ட் நடிகரிடம் தலைவர் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். அந்த ஸ்டண்ட் நடிகரும் தலைவருக்கு ஆறுதல் கூறியுள்ளார். ‘உங்களிடம் திறமை இருக்கிறது, கண்டிப்பாக முன்னுக்கு வருவீர்கள்’ என்று கூறியுள்ளார்.

    அதன்படியே, சில ஆண்டுகளில் தலைவர் கதாநாயகனாக உயர்ந்தார். அப்படி உயர்ந்தபோது தனக்கு ஆறுதல் கூறிய அந்த ஸ்டண்ட் நடிகரையும் படத் தயாரிப்பாளராக உயர்த்தி விட்டார். அந்த ஸ்டண்ட் நடிகர்தான் சாண்டோ திரு.சின்னப்பா தேவர். தலைவர் நடித்துக் கொடுக்க அவர் தயாரித்த முதல் படம்தான் தாய்க்குப் பின் தாரம். இந்த தகவலை சமீபத்தில் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ‘மன்னாதி மன்னன்’ நிகழ்ச்சியில் இயக்குநர் கரு.பழனியப்பனும் தெரிவித்தார்.

    தலைவரின் படங்களை தொடர்ந்து ஆவணப்படுத்துங்கள், அதன் மூலம் வருங்காலத் தலைமுறைக்கு தொண்டாற்றுங்கள் என்று தங்களை அன்போடு கோருகிறேன் பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களே. நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  11. Likes Russellrqe liked this post
  12. #659
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    செல்வகுமார் சார்
    தாய்க்கு பின் தாரம் -படத்தின் அனைத்து பகுதிகளையும் அழாகாக பதிவிட்டு உள்ளீர்கள் .மிக்க நன்றி சோக நடிப்பில் நம் மக்கள் திலகம் சிறப்பாக நடித்துள்ளது மூலம் தான் ஒரு மிக சிறந்த நடிகர் என்பதை நிருபித்து உள்ளார் .

  13. #660
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனச்செம்மல் நடித்த 38வது காவியம் " சக்கரவர்த்தி திருமகள் " பற்றிய தகவல் :

    1. படம் வெளியான தேதி : 18-01-1957

    2. படத்தை தயாரித்த நிறுவனம் : உமா பிக்சர்ஸ் - ஆர். எம். ராமநாதன் (ஏ. எல். எஸ். வெளியீடு)

    3. கதாநாயகன் : மக்கள் திலகம்

    4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : "உதயசூரியன்" (திராவிட முன்னேற்றக் கழக சின்னத்தை பிரபலப்படுத்தும் விதத்தில் வைக்கப்பட்ட பெயர்)

    5. கதாநாயகி :: அஞ்சலி தேவி

    6. கதை பி. ஏ. குமார்

    7. வசனம் : இளங்கோவன்

    8 . பாடல்கள் : மகாகவி . சுப்பிரமணிய பாரதி தஞ்சை ராமையாதாஸ், கே. டி. சந்தானம், கு. சா. கிருஷ்ணமூர்த்தி, கு. மா. பாலசுப்ரமணியம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். கிளவுன் சுந்தரம்

    9. . இசை அமைப்பு : ஜி. ராமநாதன்

    10. இயக்குனர் : ப. நீலகண்டன்

    9. பங்கு பெற்ற ஏனைய கலைஞர்கள் : கலைவாணர் என். எஸ். கே., பி. எஸ். வீரப்பா, ஈ.ஆர். சகாதேவன், கே. ஏ. தங்கவேலு, டி. பி. பொன்னுசாமி பிள்ளை, எஸ்.கே. கரிக்கோல்ராஜ், குண்டுமணி, கொட்டாபுளி ஜெயராமன், எஸ். வரலட்சுமி, டி ஏ. மதுரம், டி. பி. முத்துலட்சுமி, பி. சுசீலா, லட்சுமி பிரபா, மற்றும் பலர்.

    10. பின்னணி பாடியவர்கள் : கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், எஸ். சி. கிருஷ்ணன், எம். எல். வசந்தகுமாரி, பி. லீலா, ஜிக்கி. டி. வி. ரத்தினம், சீர்காழி கோவிந்தராஜன். எஸ். வரலட்சுமி,. ஏ. பி . கோமளா
    ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++++++++

    படத்தின் சிறப்பம்சம் :


    1. திராவிட முன்னேற்றக் கழக சின்னத்தை பிரபலப்படுத்தும் விதத்தில், கதாநாயகனுக்கு உதயசூரியன் என்ற பெயர் வைக்கப்பட்டது.

    2. திரைப்படம் முடிந்த பின்பு, காதல் பாடலை இடம் பெறச்செய்தது, ஒரு வித்தியாசமாக, புதுமையாக இருந்தது, என தமிழ் சினிமா ரசிகர்கள் பலராலும் பேசப்பட்டு பாராட்டப்பட்டது.

    3. ஒளிப்பதிவாளர் ராமமூர்த்தி அவர்களிடம் உதவியாளராக, ஒளிப்பப்திவாளர் கர்ணன் பணி புரிந்த மக்கள்திலகத்தின் படம்.

    4. வாஹினி, நெப்டியூன் (சத்யா) நியூட்டோன் ஆகிய ஸ்டுடியோக்கள் மட்டுமல்லாமல் ரேவதி ஸ்டுடியோவிலும் எடுக்கப்பட்ட திரைப்படம்.

    5. மகாகவி சுப்பிரமணிய பாரதி அவர்களின் ஒரு பாடல் இக்காவியத்தில் இடம் பெற்றுள்ளது.


    ================================================== ============================

    இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.

    ================================================== ============================

Page 66 of 67 FirstFirst ... 165664656667 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •