Page 11 of 67 FirstFirst ... 9101112132161 ... LastLast
Results 101 to 110 of 666

Thread: Ponmanachemmal m.g.r. Filmography news & events

  1. #101
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Prahalatha movie released in 12.12.1939, I think this is the first movie we have in our collection.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #102
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    From Randor Guy in The Hindu

    The story of the demon king Hiranyakasipu, and the antagonism between him and his young son Prahalada over the worship of Lord Vishnu which leads to the Narasimha avatar — Lord Vishnu emerging from a pillar and destroying Hiranyakasipu — is a popular Hindu mythological tale. It has been made into a movie since the Silent Era, and as a talkie in many languages more than 20 times! The languages include Hindi, Gujarati, Tamil, Telugu, Malayalam, Kannada, Bengali and Assamese.


    Indeed, it could be said without fear of contradiction that this is the one and only story which has been made so many times, often with success in the history of world cinema. A fact not many are aware…..


    H. M. Reddi, founding father of South Indian Cinema, created history by making ‘Bhaktha Prahalada', the first Telugu talkie in 1931. The earliest silent version was made in 1917, twice in the same year. One version was made as recently as 1983. One or two movies were made under the title ‘Narsimhavatar' during the1920s.
    Salem Shankar Films (producers of the box office bonanza, the M. K. Thyagaraja Bhagavathar and K. Aswathamma-starrer Chintamani -1937) launched in association with the Coimbatore-based Central Studios the tale of Prahalada. It was directed by noted filmmaker of the early decades of Tamil Cinema, B. N. Rao, assisted by T. C. Vadivelu Naicker who wrote the script and also worked on the sets.


    Young singing star T. R. Mahalingam, who was billed in the credits as ‘Master' Mahalingam, played Prahalada. Successful in Tamil theatre as a boy actor, he made a mark in movies with Nandakumar (1938) produced by AV. Meiyappan in association with Marathi filmmaker Keshav Rao Dhaibhar who directed the film. Later Mahalingam scaled great heights as a star. He also produced films and attempted direction. In later years, he played supporting roles such as Narada.
    Noted character actor R. Balasubramaniam played Hiranyakasipu, while well known actress of her day M. R. Santhanalakshmi played Prahalada's mother. The others in the cast were M. G. Ramachandran in a minor role, N. S. Krishnan, T. A. Mathuram and T.S. Durairaj. Nagercoil K Mahadevan, a trained Carnatic musician, played Narada, his usual role. He was popularly known as ‘Naradar' Mahadevan in film circles in those days. He surprised moviegoers and critics when he played a fashionable young man, the hero in the AVM hit, En Manaivi (1942).


    This was the sixth movie of MGR (debut in Ellis R.Dungan's 1936 movie Sathi Leelavathi), who played Lord Indra. One of the interesting features of this film was a sword fight sequence between MGR and Santhanalakshmi. The lyrics were by Papanasam Sivan and the music was by Sharma Brothers. The two were then working in All India Radio as music producers and were considered experts in orchestration. The music attracted attention. Mahalingam and Mahadevan sang many songs.


    The comedy track of NSK-Mathuram-T.S. Durairaj proved popular. Prahalada was only an average success.


    Remembered for being one of the early films of MGR who played a mythological role, and also the singing of the boy actor Mahalingam and ‘Naradar' Mahadevan.

  4. #103
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Fact: First Mythological film of MGR is Dakshayagnam followed by Prahalatha, Vedavathi (or) Seetha jananam, Tamil Ariyum Perumal (partly mythological) Harishchandra, Meera, Sri Murugan and Abhimanu.

  5. #104
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Fact: Roles in Mythological film

    Dakshayagnam - Lord Vishnu

    Prahalatha - Lord Indira

    Vedavathi (or) Seetha Jananam - Dasarathan? Indirajith

    Tamil Aryium Perumal - Guest Role

    Sri Murugan - Lord Shiva

    Abimanyu - Arjunan

  6. #105
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  7. #106
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    எம்.ஜி.ஆர். நடித்த பிரஹலாதா திரைப்படத்தின் சில நிழற்படங்களும் தகவல்களும்

    டைட்டில் கார்டு













    கலைஞர்கள் பட்டியல்

    சேலம் சங்கர் பிலிம்ஸ் லிட். அளிப்பு
    பிரஹ்லாதா
    கோவை சென்ட்ரல் ஸ்டூடியோஸ் லிட். தயாரிப்பு
    இயக்கம் – பி.என்.ராவ்
    ஒளிப்பதிவு மற்றும் பிராசஸிங் – போடோ குட்ஸ்வேகர்
    ஒலிப்பதிவு பொறியாளர் – லேட் பால் ஜூராஷெ
    கலை – எம்.எஸ்.ஜானகிராம்
    பாடலாசிரியர்கள் – பாபநாசம் சிவன் மற்றும் யானை வைத்தியநாத ஐயர்
    இசை – ஷர்மா பிரதர்ஸ்
    படத் தொகுப்பு – எஸ்.சூர்யா
    ஒப்பனை மற்றும் உடைகள் – ஷங்கர் ராவ், நிபாட்கர்
    நடிக நடிகையர்
    படத்தின் டைட்டில் கார்டில் உள்ளபடி
    டி.ஆர்.மஹாலிங்கம் – பிரஹலாதன்
    ஆர்.பாலசுப்ரமணியம் – ஹிரண்யன்
    பேபி ஸேதுராமன் – பால பிரஹலாதன்
    கே. மஹாதேவய்யர் – நாரதர்
    எம்.ஜி.ராமச்சந்திரன் – இந்திரன்
    என்.எஸ்.கிருஷ்ணன் – நிகும்பன்
    டி.எஸ்.துரைராஜ் – குடும்பன்
    நடிகையர்
    எம்.ஆர்.சந்தானலக்க்ஷ்மி – லீலாவதி
    டி.ஏ.மதுரம் – வகுளா
    பி.எஸ்.ஞானம் – குணவதி
    சாதி – பூதேவி
    மற்றும் பலர்
    ஆர்.சி.ஏ. முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது.
    thanks ragavendran sir

  8. #107
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் பிரஹலாதா படம் பற்றிய மேலும் ஆவணங்கள் கிடைப்பின் இந்த திரியில் பதிவிடும்படி நண்பர்களை கேட்டு கொள்கிறேன் .

  9. #108
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் செல்வகுமார் சார்

    பொன்மனசெம்மலின் திரைப்படங்களின் வரிசையில்

    1 சதிலீலாவதி 28-03-1936
    2 இரு சகோதரர்கள் 1936
    3 தட்சயக்ஞம் 31-03-1938
    4 வீர ஜெகதீஷ் 1938
    5 மாயா மச்சீந்திரா 22-04-1939
    6 பிரகலாதா 12-12-1939

    இதுவரை மேற்கண்ட 6 படங்களின் பற்றிய தொகுப்புகளை நமது நண்பர்கள் பல்வேறு பதிவுகளை பதிவிட்டிருந்தனர் .

    இன்று மேலும் பிரகலாதா படம் பற்றிய தகவல்கள் பதிவிட்டு பின்னர் மக்கள் திலகத்தின் அடுத்த படமான

    வேதவதி (அல்லது) சீத ஜனனம் 22-02-1941

    படத்தை பற்றி ஆய்வு செய்வோம் .

  10. #109
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் 6வது திரைப்படம் "பிரஹ்லாதன்" பற்றிய ஒரு சிறு தொகுப்பு :

    1. படம் வெளியான தேதி : 12-12-1939

    2. பொன்மனசெம்மலின் கதாபாத்திரம் : இந்திரன்

    3. படத்தில் இடம் பெற்ற மொத்த பாடல்கள் : 25

    5. தயாரிப்பு : கோவை சென்ட்ரல் ஸ்டுடியோஸ்

    6. இயக்குனர் : பி. என் ராவ்

    7. இசையமைப்பு : சர்மா பிரதர்ஸ்

    8. பாடல்கள் : பாபநாசம் சிவன், யானை வைத்தியநாதய்யர்

    9. புரட்சித் தலைவருடன் டி.ஆர். மகாலிங்கம் இணைந்த முதல் படம்.


    டி.ஆர். மகாலிங்கம் "பிரஹ்லாதன்" வேடத்திலும், ஆர். பலசுப்ரமணியன் ஹிரண்யனாகவும் கதாநாயகி லீலாவதியாக எம்.ஆர். சந்தனலக்ஷ்மியும், நாரதராக கே மகாதேவன் அவர்களும், சிறு வயது குழந்தை பிரஹ்லாதனாக பேபி சேதுராமன் அவர்களும் நடித்துள்ளனர். கலைவாணர் என். எஸ் கே. - டி. ஏ. மதுரம் ஜோடியும் இப்படத்தில், முறையே நிகும்பன் - வகுளா வேடங்கள் தாங்கி சிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் விவரம் அடுத்து தொடர்கிறது.


    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜி.ஆர்.
    எங்கள் இறைவன்

  11. #110
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் 6வது திரைப்படம் "பிரஹ்லாதன்" கதைச்சுருக்கம்
    -------------------------------------------------------------------------------------------------------------------

    மயாபுரிக் கதிபனாம் ஹிரண்யன் என்னும் அசுரன் தனது தம்பி ஹிரண்யாக்ஷனை கொன்ற ஸ்ரீ ஹரியின் மீது பழி வாங்க எண்ணி மந்த்ரமலைச் சாரலில் பிரம்மனை நோக்கித் தவம் செய்து சாகா வரம் பெற, கர்ப்பிணியாம் அவனது மனைவி லீலா வதியிடம் விடை பெற்று செல்கிறான். அவன் மந்த்ரமலையில் நெடுங்காலம் கோரமான தவத்திலமர்ந்திருந்ததின் பயனாய் அவன் சிரஸிலிருந்து (தலையிருந்து) தபோக்கினி வெளியாகிறது. அது தேவ சபையை தாக்கி தஹிக்க தேவர்கள் மன கலக்க்மடைகிரார்கள். ஹிரண்யனது தவத்தை கெடுக்க அனுப்பப்பட்ட மேனகை பிரவேசித்து, அவன் புற்று மண்ணால் மூடப்பட்டு புற்றெரும்புகள் அவனது உடலை அரித்து விட்டதால் அவன் உயிருடன் திரும்பி வருவது அசாத்தியம் எனத் தெரிவிக்கிறான்.

    ஒருக்கால் அவன் ஒழித்தாலும் அவனது மனைவி கர்ப்பத்திலிருந்து ஒரு ஆண் குழந்தை பிறக்குமாயின் அது அவனைப்பார்க்கிலும் கொடியவனாயிருக்க நேர்ந்தால் மீண்டும் துன்பத்திற் கிடமுன்டாகும் என அஞ்சி, லீலாவதியின் கர்ப்பத்தை சிதைக்கும் எண்ணத்துடன் இந்திரன் லீலாவதியை சிறைபடுத்திக்கொண்டு தேவ லோகத்துக்கு செல்கிறான்.. அத்தருணம் அவனை எதிர் நோக்கி வரும் நாரதர் அவனது அடாத செயலைக் கண்டித்து லீலாவதியை அவரது ஆஸ்ரமத்துக்கு அழைத்து செல்கிறார் ஹிரன்யன் பிரம்மனிடம் சாகா வரம் பெற்று மாயாபுரிக்கு திரும்புகிறான். இந்திரன் லீலாவதியை சிறைப்பிடித்த சேதியறிந்து கடுங்கோபம் கொண்டு இந்திராதி தேவர்களை பழிக்கு பழி வாங்க புறப்படுகிறான். நாரதர் லீலாவதிக்கு பத்தியோகத்தை உபதேசிக்கிறார். மற்றொரு நாள் உபதேசங்கேட்டுக்கொண்டிருந்த லீலாவதி அயர்ந்த நித்திரைக்குள்ளகிறாள். ஆனால் அவளது கர்ப்பத்திலுள்ள சிசு நாரதர் உபதேசத்தை ஆமோதித்து கேட்கிறது. இதை உணர்ந்த நாரதர் ஆனந்தமடைந்து ஆஸ்ரமத்துக்குள் செல்கிறார். நித்திரை தெளிந்து எழுந்த லீலாவதி தனது கணவனது பிரிவை நினைத்து வருந்துகிறாள். தேவ சபையை நாடி செல்லும் ஹிரன்யண் லீலாவதியின் குரலோசையைக் கேட்டு, இந்திரன் அந்த நந்த வனத்தில் தான் அவளை சிறைபடுத்தி இருக்க வேண்டும் என்று சந்தேகித்து அங்கு வருகிறான் லீலாவதியை சந்திக்கிறான். அவள் மூலமாய் இந்திரனது சதிகாரச் செயலின் விவரமும் நாரத முனிவரின் உதவி பெற்ற சந்தர்ப்பமும் தெரிந்து நாரத முனிவருக்கு அவனது நன்றியை தெரிவிக்கிறான்.

    அவரது துணைக் கொண்டு மாயபுரியை அடையும்படி லீலாவதிக்கு கூறி இந்திரனது சுதர்மையை (தர்பார் அல்லது அவை என்று எண்ணுகிறேன்). அச்சமயம் அங்கு நட னம் செய்து கொண்டிருந்த அப்ஸர தேவதைகளும், நடன மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்த தேவர்களும் மூலைக்கொருவராய் ஓடி ஒளிய முயல்கிறார்கள். ஹிரண்யன் இந்திரனது முடியை (கிரீடம் என்று பொருள் கொள்ளலாம்) அபகரித்துக்கொண்டு அவனது சிம்ம்மாசனத்திலமர்ந்து அன்று முதல் தேவலோகத்துக்கும் அவனே அதிபன் என்றும், தேவர்கள் யாவரும் அவனது அடிமைகளாயிருக்க வேண்டுமென்றும் உத்தரவிடுகிறான். அவனது ஆணையை மறுக்க, தைரியமில்லாத தேவர்கள் அவனது உத்தரவுக்குட்படுகிறார்கள். மாயாபுரி அரண்மனையடைந்ததும் தனக்கு புத்திரன் பிறந்த சேதி கேட்டு மகிழ்கிறான். புத்திர ஜனனோற்சவ வைபவம் (பிறந்த நாளினையொட்டி ஏற்பாடு செய்ப்பட்ட விழா) விமர்சையாக நடக்கிறது பிரஹ்லாதன் பால பருவமடைந்து பிறர் போதனையில்லாமல் பரந்தாமனது புகழ் பாடும் திறமை பெற்று விளங்குகிறான்.

    ஒரு நாள் அவன் தனது விளையாட்டு தோழர்களுடன் ஒரு விஷ்ணு பொம்மையை வைத்து விளையாடிக் கொநோடிருக்கிறான். அச்சமயம் அங்கு வந்த நாரதர் பால பருவத்தில் அவனுக்குள்ள ஹரி பக்தியை கண்டு மகிழ்ந்து அவனை ஆசிர்வதித்து செல்கிறார். உடனே, ஹிரன்யணைச் சந்தித்து அவனது ஜென்மத்வேஷியாகிய (பரம வைரி அல்லது எதிரி) மஹா விஷ்ணு பொம்மையை வைத்துக்கொண்டு அவனது மைந்தன் விளையாடும் செய்தியை அவனுக்கு தெரிவிக்கிறார். அவரது வழக்கமான கலக லீலையை ஆரம்பிக்கிறார். ஹிரண்யன் நாரதருடன் நந்தவனத்துக்கு சென்று பிரஹலாதனிடமிருந்த விஷ்ணு பொம்மையை பறித்து தரையில் வீசி எறிகிறான். அது பல துண்டுகளாய் உடைந்ததைக் கண்ட பிரஹலாதன் புலம்பி ரோதனம் செய்கிறான்.

    இளம்பிராயத்திலேயே இவ்வித பிடிவாத குணமுடைய இவன் பெரியவனானால் மிக மூர்க்கனாயிருப்பான் என ஹிரண்யன் மனகிலேசம் அடைகிறான். குருகுலவாசத்தால் அவனது பிடிவாத குணத்தை மாற்றலாம் என்று நாரதர் அவனுக்கு தேறுதல் கூறிச் செல்கிறார். சுக்ராச்சாரி பிரஹலாதனுக்கு வித்யாரம்பம் (கல்வி) செய்யும்முன் வழக்கம் போல் அவனது தந்தையின் நாமத்தை ஸ்தரிக்க (உச்சரிக்க) சொல்கிறார். இவன் (பிரஹலாதன்) ஹரி நாமத்தையன்றி வேறெதனையும் ஸ் தரிக்க மறுக்கிறான். பயமின்னதென அறிய முடியாத பருவம் நீங்கிய பிறகு வித்யாபியாசம் செய்தல் உசிதமென தெரிவித்து அவனை அரண்மனைக்கு திருப்பி அனுப்புகிறார் சுக்ராச்சாரி.

    வயது வளர வளர பிரஹலாதனது ஹரி பக்தி நாளுக்கு நாள் விருத்தியாவதைக் கண்ட ஹிரண்யன் மீண்டும் அவனை குருகுல வாசத்த்துக்கு அனுப்பி வைக்கிறார். அவன் குருகுலத்திலுள்ள மற்ற பிள்ளைகளையும் அவனது வழிக்கு திருப்பி ஹரிபஜனை செய்விக்கிறான். சுக்ராச்சாரி கோபம் கொண்டு அவனை ஒரு அறையில் தள்ளி அன்னாகாரமின்றி சிறைபடுத்தும்படி செய்கிறான். பிரஹலாதன் ஐந்து நாட்கள் பட்டினி கிடந்தும் சிறிதும் மனங் குன்றாது ஆனந்த பரவசனாயிருப்பதைக் கண்டு சுக்ராச்சாரி ஆச்சரியமும் ஆனந்தமும் கொண்டு அவனது பக்தியின் மேன்மையை புகழ்ந்து ஹிரண்யணது மூர்க்க குணத்தை இகழ்ந்தும் பேசுகிறான். அவனது மொழிகளை கேட்டுக் கொண்டே குருகுலத்துள் பிரவேசித்த ஹிரண்யண் சுக்ரனை கோபித்து பிரஹலாதனை அழைத்துச் செல்கிறான். ஹரி பக்தியை கைவிடும்படி சதுர்வித உபாயங்களை கொண்டு முயன்றும் பிரஹலாதன் பிடிவாதமாய் இருப்பதைக் கண்ட ஹிரண்யன் அவனுக்கு மரண தண்டனை விதிக்கிறான்.

    லீலாவதியின் பிரலாபம், கொலையாளிகள் பிரஹலாதனது சிரசை துண்டிக்கிறார்கள். உடலினின்று தலை கீழே விழுந்து மீண்டும் சேர்கிறது. பிரஹலாதன் ஏதோ சூது மார்க்கத்தால் மரண தண்டனையிலிருந்து தப்பினான் என்று எண்ணிய ஹிரண்யண் அவனை மலை உச்சியிலிருந்து வீசி எறி யும்படி உத்தரிவிடுகிறான். மலையடிவாரத்தில் பூமாதேவி பிராப்தமாகி அவனை காப்பாற்றுகிறார் அத்தண்டனையும் பயனற்றதால் ஹிரன்யண் லீலாவதியைக் கொண்டே அவனுக்கு விஷமூட்ட செய்கிறான். அதிலும் அவன் மரணம் அடையாததால் தன் பகைவனான விஷ்ணுவே அவனைக் காப்பாற்றுகிறான் என்று உணர்ந்து அவனிருக்கும் இடத்தைக் காட்டும்படி பிரஹலாதனைக் கேட்கிறான். பகவான் சர்வவியாபி எங்குமிருப்பான் என்கிறான் பிரஹலாதன். அப்படியாயின் அங்குள்ள தூணில் இருப்பானா எனக் கேட்டு அதை உதைக்கிறான். பகவான் நரசிம்மாவதாரனாய் வெளி வந்து ஹிரண்யனை சம்ஹாரம் செய்கிறார்.

    பிரஹலாதன் பிரார்த்தனைக் கிணங்கி ஸ்ரீமன் நாராயணன் சாந்த சொரூபியே ஸேவை ஸாதித்தருள்கிறார்.

    மங்களம்.

    இப்படத்தின் பாடல்கள் விவரம் அடுத்து தொடர்கிறது.

    ================================================== ================================================== ===============


    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜி.ஆர்.
    எங்கள் இறைவன்
    Last edited by makkal thilagam mgr; 29th January 2013 at 01:29 PM.

Page 11 of 67 FirstFirst ... 9101112132161 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •