Page 65 of 67 FirstFirst ... 15556364656667 LastLast
Results 641 to 650 of 666

Thread: Ponmanachemmal m.g.r. Filmography news & events

  1. #641
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனச்செம்மல் நடித்த 36வது காவியம் " மதுரை வீரன் " கதைச்சுருக்கம்
    ================================================== ===

    துளசி அய்யா : (நடிகர் ஆர். பாலசுப்ரமணி)

    வாரணவாசிப் பாளையாதிபதி நான். பிள்ளை இல்லா குறை தீர, என் மனைவி ஒரு ஆண் மகனை பெற்றெடுத்தாள் . கழுத்திலே மாலை இருக்கிறது. நாட்டுக்காகாது என்றார் சாஸ்த்ரீகர் காட்டிலே கொண்டு போய் விட்டு விட்டேன்.

    சின்னான் : (கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்)

    தொட்டியம்பாளயத்திலே நான் செருப்பு தைக்கிறவனுங்க. நானும், என் பொஞ்சாதி செல்வியுமா காட்டுக்கு போனோம்,. குழந்தையை கண்டெடுத்தோம். "வீரன்" னு பேரு வெச்சோம். நல்லா வளத்தோம். பயலுக்கு, இருபது வயசு ஆனபோது ..........

    பொம்மி : (நடிகை பானுமதி)

    ஆற்றிலே விழுந்த என்னை காப்பாற்றினார். தொட்டியம்பாளையத்து அரச குமாரி நான். கண்டேன் அவரை, காதலித்தேன், அப்பா பொம்மண்ண மகாராஜா தடுத்தார். நரசப்பன் எனது ..........

    நரசப்பன் : ( டி. எஸ். பாலையா)

    தாய் மாமன். உரிமை எனக்கு. நானும் தடுத்தேன் அரசரோடு சேர்ந்து. பொம்மியை அரண்மனையிலேயே காவல் வைத்தேன். திருமணத்துக்கு ஏற்பாடு செய்தேன். ஆனால், அந்த பயல் வீரன், அர்த்த ராத்திரியிலே கன்னி மாடத்தில் புகுந்து அவளை சிறை எடுத்துக்கொண்டு ஓடி விட்டான். விடுவேனா ? படை கொண்டு மோதினேன். உதை வாங்கி திரும்பினேன். இனி நமது படைகளால் காரியமாகாது என்று தெரிந்து, திருச்சி மன்னன் விஜயரங்க சொக்கனை நாடினேன். உதவி கோரினேன்.

    விஜயரங்க சொக்கன் (திருப்பதி சாமி) :

    கோரியதை கொடுத்தேன். வீரனைப் பிடித்து வர பணித்தேன். பிடித்து வந்தார்கள். பார்த்தேன். உண்மை வீரன் என்பதை உணர்ந்தேன். ஆகவே, பொம்மி அவனுக்கே என்று தீர்ப்பளித்தேன். அதோடு, மதுரை மன்னரும், எனது மைத்துனருமான திருமலை நாயக்கருக்குத் தளபதியாக அனுப்பி வைத்தேன்.

    திருமலை மன்னன் : (ஒ. ஏ. கே. தேவர்)

    வந்தான் வீரன். வரவேற்பு கொடுத்தேன். பழைய தளபதி குடிலனின் பதவியை குறைத்தேன். வீரனை முதல் தளபதியாக ஆக்கினேன். அழகர் மலை, சுருளி மலை, பிரான் மலைக் கள்ளர்களைப் பிடிக்க ஆணையிட்டேன். வீரன் ஊரடங்கு சட்டம் போட்டான். உற்சாகமாகவே பணி புரிந்தான். அப்போது .........

    வெள்ளையம்மாள் : ( நடிகை பத்மினி)

    அரண்மனை நாட்டியக்காரியான நான் அவரைக் கண்டேன். காதல் கொண்டேன். அவரும், என்னை விரும்பினார். பொம்மி அறிந்தாள். துடித்தாள். என்னிடம் வந்து கெஞ்சினாள் . தன் கணவரை பாராதே என்றாள். சம்மதித்தேன். அப்போதே வீரர் வந்தார். என் மீது ஆசை வைத்திருந்த திருமலை மன்னரும் தவறான பாதையில் இறங்கினார். அவருக்கு துணை புரிந்தது .....................

    குடிலன் : ( நடிகர் டி. கே. ராமசந்திரன்) .

    நானும், மாறு வேடத்தில் என்னோடு இருந்த நரசப்பனும், நரசப்பன் முறைப் பெண்ணை இழந்தான். நான் பதவி குறைக்கப்பட்டேன். ஆத்திரம் வராதா ?. குற்றங்களை அழகாக ஜோடித்தோம். மாறு கால், மாறு கை வாங்கும்படி ஆணையிட்டான் திருமலை மன்னன். கொலைக்களத்துக்கு அவனை இழுத்து சென்றோம். .................

    மதுரை ஜனங்கள் :

    செய்தி அறிந்தோம். பொம்மியும், வெள்ளையம்மாளும், ஆவேசத்துடன் கொலைக்களத்துக்கு ஓடிஇருக்கிறார்கள் எபதை அறிந்தோம். இதோ, அங்கே போய்க்கொண்டே இருக்கிறோம். நீங்களும் வாருங்கள், என்ன நடக்கிறதென்று பார்க்கலாம் .


    குறிப்பு : இந்த கதை சுருக்கம் சற்று புதுமையான முறையில், ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நடை மாறாமல், அதே எழுத்து வடிவத்தில் இங்கு பதிவிடப் பட்டுள்ளது.
    Last edited by makkal thilagam mgr; 4th March 2015 at 02:13 PM.

  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli, Russellbpw liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #642
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனச்செம்மல் நடித்த 36வது காவியம் " மதுரை வீரன் " - இடம் பெற்ற பாடல்கள் :
    ================================================== ==========

    பாடல் 1. (வாழ்த்துப்பாடல்) செந்தமிழா எழுந்து வாராயோ
    சிங்காரத் தாய் மொழியை பாராயோ (பல்லவி)

    பாடல் 2 (குழுப்பாடல்) சும்மாயிருந்தா சோத்துக்கு நஷ்டம்
    சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்

    பாடல் 3 (தனிப்பாடல்) வாங்க மச்சான் வாங்க ...... வந்த
    வழியை பாத்து போங்க

    பாடல் 4 (தனிப்பாடல்) முத்துப்போல் பல்லழகி (தொகையறா)
    தேடி வந்தேனே புள்ளி மானே (பாட்டு எடுப்பு)

    பாடல் 5 (தனிப்பாடல்) தெந்தினத் தின்னானே ... தின்னானே (பல்லவி)
    குன்றுதோ ராடிவரும் குமர வடிவேலன் (பாட்டு எடுப்பு)

    பாடல் 6 (தனிப்பாடல்) அவர்க்கும், எனக்கும் உறவு காட்டி, அருள் புரிந்தது கதையா ?

    பாடல் 7 (தனிப்பாடல்) வாங்க மச்சான் வாங்க ...... சொந்த வழியெப் பார்த்துட்டீங்க

    பாடல் 8 (தனிப்பாடல்) ஆடல் காணீரோ .. விளையாடல் காணீரோ
    (பல்லவி) திருவிளையாடல் காணீரோ

    பாடல் 9 (ஜோடிப் பாடல்) நாடகமெல்லாம் கண்டேன் ....... உந்தன் ஆடும் விழியிலே

    பாடல் 10 (ஜோடிப் பாடல்) ஏச்சிப் பிழைக்கும் தொழிலே - சரிதானா
    எண்ணிப்பாருங்க ... ஐயா எண்ணிப்பாருங்க .

    பாடல் 11 (தனிப்பாடல்) கடமையிலே உயிர் வாழ்ந்து கண்ணியமே
    கொள்கையென மடிந்த வீரா


  5. Thanks orodizli thanked for this post
    Likes orodizli, Russellbpw liked this post
  6. #643
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு சகோதரர் பேராசிரியர் அவர்களுக்கு
    நன்றிகள் பல. மதுரைவீரன் பாட்டுப் புத்தகத்தில் வித்தியாசமான முறையில் அமைந்திருந்த கதைச் சுருக்கம் வியக்க வைத்தது. அப்போதே மாறுபட்ட சிந்தனையுடன் அமைத்திருக்கிறார்கள். அருமை. இது வரை பார்த்ததில்லை. வாய்ப்புக்கு நன்றி. மேலும் தங்களிடம் பல நாட்களாக எனது வேண்டுகோள் ஒன்று. மக்கள் திலகத்தின் பாடல்களின் ஆசிரியர் விபரங்களுடன் பதிவிட வேண்டுகிறேன். இன்று பல ஊடகங்களிலும் தவறுகள் மலிந்து காணப்படுகின்றன. உதாரணமாக வாலி எழுதிய பாடலை கண்ணதாசன் எழுதியதென்றும், மருதகாசி எழுதிய பாடலை வாலி எழுதியதென்றும் குறிப்பிடுகிறார்கள். சரியான விபரங்களை தங்களால் மட்டுமே தெரிவிக்க முடியும். எனவேமுதல் படம் தொடங்கி எல்லா பாடல்களையும் குறிப்பிட்ட தாங்கள் அதனை எழுதிய ஆசிரியர்களின் விவரங்களையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.

  7. Likes orodizli liked this post
  8. #644
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனச்செம்மல் நடித்த 37வது காவியம் " தாய்க்குப்பின் தாரம் " பற்றிய தகவல் :

    1. படம் வெளியான தேதி : 21-09-1956

    2. படத்தை தயாரித்த நிறுவனம் : தேவர் பிலிம்ஸ்

    3. கதாநாயகன் : மக்கள் திலகம்

    4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : முத்தையன்

    5. கதாநாயகி :: பி.பானுமதி

    6. கதை, வசனம் : க. அய்யாபிள்ளை

    7. பாடல்கள் : தஞ்சை ராமையாதாஸ், கவி. லட்சுமணதாஸ், அ. மருதகாசி,
    வில்லன் டி.எஸ். நடராஜன், சாண்டோ சின்னப்பா தேவர்

    8. இசை அமைப்பு : கே. வி. மகாதேவன்

    9. இயக்குனர் : எம். ஏ. திருமுகம்

    9. பங்கு பெற்ற ஏனைய கலைஞர்கள் : டி எஸ். பாலையா, ஈ.ஆர். சகாதேவன், காக்கா ராதாகிருஷ்ணன், சாண்டோ சின்னப்பா தேவர், பி. கண்ணாம்பா, சுரபி பாலசரஸ்வதி, ஜி . சகுந்தலா, கே. ரத்னம், கே. ஆர். சாரதாம்பாள், மற்றும் பலர்.

    10. பின்னணி பாடியவர்கள் : டி எம். சவுந்தரராஜன், ஏ. எம். ராஜா, எஸ். சி. கிருஷ்ணன், எம். எல். வசந்தகுமாரி, ஜிக்கி, பி.பானுமதி

    ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++++++++

    படத்தின் சிறப்பம்சம் :

    1. தாய்குலத்தின் ஏகோபித்த ஆதரவினை பெற்று, 100 நாட்கள் கடந்த வெற்றிக்காவியம்.

    2. மக்கள் திலகத்தின் தொடர்ந்து வந்த சரித்திர காவியங்களிலிருந்து வேறுபட்டு, சமூக
    கதையமைப்பு கொண்ட சிறந்த காவியம்.

    3. நம் மக்கள் திலகத்தின் பலத்த ஆதரவுடன், சாண்டோ சின்னப்பா தேவரை தமிழ் திரையுலகில் ஒரு தயாரிப்பாளராக அறிமுகப்படுத்திய, தேவர் பிலிம்ஸாரின் முதல் படம்.

    4. இந்த காவியத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை வில்லன் நடிகர் நடராஜனுடன் இணைந்து சின்னப்பா தேவர் அவர்கள் ஒரு பாடலை இயற்றியுள்ளார்.


    ================================================== ============================

    இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.

    ================================================== ====================================
    Last edited by makkal thilagam mgr; 18th April 2015 at 08:46 AM.

  9. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  10. #645
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனச்செம்மல் நடித்த 37வது காவியம் " தாய்க்குப்பின் தாரம் " கதைச்சுருக்கம் :

    துரைசாமி பண்ணையார், துறையூர் கிராமத்திலே பெருஞ்செல்வந்தர். ஆனால், கிராம பொங்கல் விழா "முதல் மரியாதை" அவர் மைத்துனர் ரத்தினம் பிள்ளைக்கு இருந்து வந்தது. இதனால் பொறாமை கொண்ட அவர் தன் தங்கை புருஷன் குடும்பம் என்றும் பாராமல், அவரை பழிவாங்க திட்டமிட்டார்.

    ஒரு நாள் பண்ணையார், தாசி செல்வாவின் வீட்டுக்கு போய் கொண்டிருந்த போது, வழியில் தனக்கு மரியாதை செய்ய வில்லை என்று ரத்தினம் பிள்ளையின் வேலைக்காரன் கருப்பையாவை அடித்துக் காயப்படுத்துகிறார். இதையறிந்த, ரத்தினம் பிள்ளை மகன் முத்தையன், பண்ணையாரை தாசியின் வீட்டிற்கே சென்று பதிலுக்கு தாக்கி விட்டு வருகிறான்.

    முத்தையன் தன்னை அடித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ரத்தினம் பிள்ளையிடம் பண்ணையார் வற்புறுத்துகிறார். ஆனால், ரத்தினம் பிள்ளையோ, "தலை வணங்கும் வழக்கம் தலைமுறையிலேயே இல்லை" என்று சொல்லி விட்டார். அடிபட்ட வேதனை, அலட்சியமாக பேசி விட்டதனால் ஆத்திரம் எல்லாம் சேர்ந்து பண்ணையாரின் கோபத்தை கிளறுகின்றன. உடனடியாக, ரத்தினம் பிள்ளையின் தோட்டம், துறவு, நஞ்சை, புஞ்சை முதலியவற்றை, ஆட்களை ஏவி, நாசமாக்குகிறார்.

    பெரியவர்கள் பகை இப்படி இருக்கும்போது, முத்தையனுக்கும், பண்ணையார் மகள் சிவகாமிக்கும், காதல் ஏற்படுகிறது. இரு குடும்பங்களுக்கிடையே பகை வளரும் வேகத்தில், இவர்களின் காதலும் வளர்கிறது.

    ஒரு நாள் முத்தையன் தோட்டத்தில் காவல் இருக்கும் போது, பண்ணையார் ஆட்கள், செங்கோடன் என்ற கொலைகாரக்காளையை தோட்டதுக்குள்ளே .விரட்டுகிறார்கள். முத்தையன் காளையை கல்லால் அடிக்கிறான். அதை சாக்காக வைத்து, அவனை கட்டிப்பிடித்து தூக்கி கொண்டு சென்று ஒரு இருட்டறையில் அடைக்கின்றனர் பண்ணையார் ஆட்கள்.

    இந்த செய்தியறிந்த ரத்தினம் பிள்ளை, பண்ணையாரிடம் போய், தனது மகனை விடுதலை செய்யும்படி கேட்கிறார். பண்ணையார், தன் காளையை கல்லால் அடித்த காரணத்துக்காக முத்தையன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார். ரத்தினம் பிள்ளை, காளையை பற்றி இழிவாக பேசுகிறார். தனது காளையை இழிவாக பேசியதால், ரத்தினம் பிள்ளை அதை அடக்கி விட்டால், அவன் மகன் முத்தையனை விடுதலை செய்வதாக பண்ணையார் கூறுகிறார். சவால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

    களத்துக்கு காளை கொண்டு வரப்படுகிறது. ரத்தினம் பிள்ளை அதனுடன் போரிட்டு - குத்துண்டு கீழே சாய்கிறார். இந்த நிலையில், ரத்தினம் பிள்ளை மனைவி மீனாட்சி சேதியறிந்து ஓடி வருகிறாள். ஆனால், அவள் கணவனோ இறுதி மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறான். சாகும்போது, பிள்ளை தன் மனைவி மீனாட்சியிடம், பண்ணையாரை கொலை செய்யாமல், அவர் செய்த தவறுக்கெல்லாம், ரத்தக்கண்ணீர் வடித்து, காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும்படி செய்யச் சொல்லி உயிர் துறக்கிறார். அதன்படியே மீனாட்சியும் சபதம் எடுக்கிறாள்.

    இதற்கிடையில், சிவகாமி முத்தையனை தப்புவிக்க செய்கிறாள். ஆனால், முத்தையனுக்கு வழியிலேயே, தன் தந்தையின் பிணம் சுடுகாட்டுக்கு கொண்டு போகப்பட்ட செய்தி தெரிவிக்கப்படுகிறது. அலறியடித்து கொண்டு முத்தையன் சுடுகாட்டுக்கு ஓடுகிறான். ஆனால், அதற்குள், தந்தையின் சடலம் எரிந்து சாம்பலாகி விட்டிருந்தது. தாயிடம் ஓடி வந்தான் முத்தையன்.

    மீனாட்சி, முத்தையனிடம் அவன் தந்தையின் இறுதி ஆசையை சொல்கிறாள். அப்போது அவள் செய்த சபதத்தையும் வெளியிடுகிறாள். முத்தையன், தந்தையின் ஆசையையும், தாயின் சபதத்தையும் நிறைவேற்றுவதாக வாக்களிக்கிறான்.

    முத்தையன் தப்பியது சிவகாமியால்தான் என்று பண்ணையார் சந்தேகிக்கிறார். சிவகாமிக்கு, முன்பை விட அதிகப்படியான கட்டுக்காவல் வைக்கப்படுகிறது. என்றாலும், அதையும் மீறி அவள் தன் அத்தான் முத்தையனை சந்தித்து வருகிறாள்.

    பண்ணையாருக்கு "ஊர் வதந்தி" காதில் விழுகிறது. காணாததற்கு தாசி செல்வா வேறு எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறாள். சிவகாமிக்கு, சீக்கிரமே, திருமண ஏற்பாடு செய்யுமாறும், திருமண சமயத்தில் முத்தையன் ஏதாவது குழப்பம் செய்வான் என்றும், எனவே, அவனை தன் வீட்டில் கொண்டு வந்து அடைத்து விட்டு, மணம் முடித்த பின்பு வெளியில் அனுப்பி விடலாம் என்றும் அவள் யோசனை கூறுகிறாள். அதன்படி, பண்ணையார் சிவகாமிக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்.

    தந்தையின் மின்னல் வேக ஏற்பாட்டை சிவகாமி முத்தையனுக்கு எழுதி, ஆவன செய்யுமாறு வற்புறுத்துகிறாள். ஆனால், அவள் முயற்சி தோல்விடைகிறது.

    திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட தினத்துக்கு முன் இரவு, முத்தையன்
    பண்ணையார் ஆட்களால் தூக்கி வரப்பட்டு தாசி செல்வா வீ ட்டில் போடப்படுகிறான். தாசி, அவனை தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்துகிறாள். முத்தையன் மறுக்கிறான். இது சமயம் பண்ணையார் எதிர்பாராத விதமாக அங்கு வந்து விடுகிறார். செல்வா தன் தவறை மழுப்புகிறாள். ஆனால், பண்ணையார், அவளை வீட்டை விட்டு வெளியே தள்ளி, கதவை பூட்டுகிறார். அதே ஆத்திரத்தில், தன் வீட்டுக்கு வருகிறார்.

    பண்ணயாரின் "பாடி கார்டு' மாயாண்டி, பண்ணையார் வீ ட்டுக்குள் நுழைந்ததும், சிவகாமியீன் திருமணத்தின் போது, தனக்கு நிலம் தருவதாக சொன்னைதை நினைவூட்டுகிறான். பண்ணையார் தர முடியாது என்று கூறி அவனையும் தன் வீ ட்டை விட்டு துரத்துகிறார்.

    வெளியேற்றப்பட்ட மாயாண்டி தற்செயலாக தாசி செல்வாவை சந்திக்கிறான். இருவரும், பண்ணையாருக்கு எதிராக சதியாலோசனை நடத்துகின்றனர்.

    திருமணத்தன்று முத்தையன் மாறு வேடத்தில், கல்யாண கும்பலோடு கும்பலாக கலந்து கொண்டு சிவகாமியை அழைத்துக்கொண்டு ஒட சந்தர்ப்பம் பார்க்கிறான்.


    செல்வா - மாயாண்டி சதி நிறைவேறியதா ?
    முத்தையன் தந்திரம் பலித்ததா ?
    பண்ணையார் முன்னெச்சரிக்கை பலன் தந்ததா ?
    மீனாட்சியின் சபதம் என்னவாயிற்று ?
    ரத்தினம் பிள்ளையின் "ஆசைக்கனவு" பூர்த்தி செய்ய்யப்பட்டதா ?


    எல்லாவற்றுக்கும் பதில் ..... வெள்ளித்திரையில் காண்க !

    , . . .

  11. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  12. #646
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனச்செம்மல் நடித்த 37வது காவியம் " தாய்க்குப்பின் தாரத்தில் இடம் பெற்ற பாடல்கள் :
    ================================================== ============

    சகோதரர் திரு. ஜெய்சங்கர் அவர்கள் கேட்டு கொண்டதன்படி, பாடல்களை இயற்றியவர் பெயர் இனி பாடல்கள் பற்றி தெரிவிக்கும்போது இடம் பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். பாடல் எழுதியவர் பெயர் அடைப்புக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது

    பாடல் 1. (தனித்த ஆண் குரல் பாடல்) : மனுஷனை மனுஷன் சாபிடறாண்டா அருமைத்தம்பி, இது மாறுவதெப்போ ?
    வாழுவதெப்பொ எழைத்தம்பி ! (அ. மருதகாசி)

    பாடல் 2 (பெண் குரல் பாடல்) : காதல் வியாதி பொல்லாதது - அது கண்ணும் காதும் இல்லாதது.
    (தஞ்சை ராமையாதாஸ்)

    பாடல் 3 (பெண் குரல் பாடல்) அசைந்தாடும் தென்றலே .... தூது செல்லாயோ.. தேன் அமுதான கவிபாடி சேதி
    சொல்லாயோ (தஞ்சை ராமையாதாஸ்)

    பாடல் 4 (ஜோடிப்பாடல்) : விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோடே (தஞ்சை ராமையாதாஸ்)

    பாடல் 5 (ஜோடிப்பாடல்) : ஆஹா நம் ஆசை நிறைவேறுமா .... கடல் அலையைப்போல மறைந்து போக
    நேருமா (கவி. லட்சுமணதாஸ்)

    பாடல் 6 (தனித்த பெண் குரல் பாடல்) : நாடு செழித்திட நாளும் உழைத்திட நல்ல மனம் வேண்டும்
    (கவி. லட்சுமணதாஸ்)

    பாடல் 7 (தனித்த ஆண் குரல் பாடல்) தந்தையைப்போல் உலகிலே தெய்வமுண்டோ ... ஒரு மகனுக்கு
    (தஞ்சை ராமையாதாஸ்)

    பாடல் 8 (குழுப்பாடல்) கந்தா வரம் தந்தாளுவாய் ... திருசெந்தூரில் வாழ்வோனே வந்தாளுவாய் ... நீண்ட பாடல்
    (வில்லன் டி.எஸ். நடராஜன், சாண்டோ சின்னப்பா தேவர் இயற்றியது)

    பாடல் 9 (ஜோடிப்பாடல் - வருத்தமுடன்) ... என் காதல் இன்பம் இதுதானா ?
    (தஞ்சை ராமையாதாஸ்)

    Last edited by makkal thilagam mgr; 18th April 2015 at 08:57 AM.

  13. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  14. #647
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  15. Thanks orodizli thanked for this post
  16. #648
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    அன்புசகோதரர் பேராசிரியர் அவர்களுக்கு நன்றிகள் பல. எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டமைக்கு மட்டமல்ல. சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் அவர்கள் பாடல் எழுதியுள்ளார் என்ற அபூர்வ தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கும். இது வரை அறியாத ஒன்று. சாண்டோ சின்னப்பா தேவர் அவர்களின் திறமையை அறிந்து கொள்ள பலருக்கும் இது ஒரு வாய்ப்பாக இருக்கும் தொடரட்டும் தங்களது சேவை.

  17. Thanks orodizli thanked for this post
  18. #649
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    தாய்க்கு பின் தாரம் - மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றி சித்திரத்தின் கதை ,பாடல்கள் பற்றி விரிவாக எழதிய இனிய நண்பர் திரு செல்வகுமார் அவர்களுக்கு நன்றி .

  19. Thanks orodizli thanked for this post
  20. #650
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    "தாய்க்குப் பின் தாரம்" காவியத்திலிருந்து சில காட்சிகள் :


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •